கடைசியில் கோவிந்சாமி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். யார் இந்த கோவிந்சாமி? திருப்பூர் சி பி எம் கட்சியின் எம் எல் ஏதான் இந்த கோவிந்சாமி. பின்னலாடை நிறுவனத்தின் முதலாளி என்பது உபதொழில்.
எதற்கு கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்? இதுக்கு முன்ன திருப்பூர் முதலாளிகளுக்கு தொழிலாளர் நலச் சட்டக் கெடுபிடிகளிலிருந்து சலுகை வாங்கித் தருவதாக சொல்லி அவர்களிடம் வசூல் வேட்டை நடத்தி மாட்டிக்கொண்டதால் அவர் நீக்கப்பட்டாரா? இல்லை. திமுகவிற்கு பாராட்டு விழா நடத்த முற்பட்ட குற்றத்திற்காகவே நீக்கப்பட்டுள்ளார்.
அப்போ இதுவரை அவர் திருப்பூர் முதலாளிகளுக்கு கோவணம் கட்டியதற்கு? தோழரே சி பி எம் ஒரு கம்யூனிஸ்டு கட்சியல்ல என்று சி பி எம்முக்கே தெரியும் என்பதால் முதலாளிகளுக்கு கோவணம் கட்டிய குற்றத்திற்கெல்லாம் கட்சியிலிருந்து நீக்க மாட்டோம். அப்படி நீக்குவதாயிருந்தால் செத்துப் போன ஜோதிபாசுவிலிருந்து இன்றைய காரத் வரைக்கும் மொத்த கட்சியையும் நீக்க வேண்டியிருக்கும். எனவே, எங்களது எதிர்கட்சிக்கு கோவணம் கட்டினால் மட்டுமே நீக்குவோம் என்று ஒரு மனசாட்சியின் குரல் கேட்கிறது….. எங்கேயோ கேட்ட குரல்….
தோழர்களே!
மேற்குறிப்பிட்டுள்ள வரிகள் தோழர் அசுரனின் தளத்தில் அவர் பதிந்திருக்கும் சமீபத்திய பதிவின் மிகப் பொருத்தமான வரிகள். போலிகம்யூனிச கட்சியின் எஞ்சியுள்ள ஒரே அடையாளமான செங்கோவனமானது அவ்வப்போது கிழிந்து தொங்குவதும், அதனை ஏதாவது ஒரு நொண்டிச் சாக்குகளைக் கூறி மீண்டும் ஒட்டவைத்துக் கொள்ள போலிகள் போராடுவதையும் நாம் வழக்கமாகப் பார்த்துத்தான் வருகிறோம். என்னதான் நாமாக முன்வந்து அரசியல்-சித்தாந்த ரீதியில் அவர்களை அம்பலப்படுத்தினாலும், அவர்கள் தங்களைத் தாங்களே அம்பலப்படுத்திக் கொண்டு சந்தி சிரிக்கின்ற அளவுக்கு நம்மால் அவர்களைச் சிக்க வைக்க முடியாதுதான் போலிருக்கிறது.
உ.ரா.வரதராசனின் கொலையை தற்கொலை என்று கண்ணீரும் கம்பலையுமாக நிரூபிக்க அழுதார்கள் போலிகள். மத்திய கால திரைப்படம் ஒன்றில், கவுண்டமணியும் சத்தியராஜும் வாடகைக்கு வீடு தேடி அலைவார்கள். கவுண்டமணி மட்டும் இசுலாமியப் பெண்கள் அணியக்கூடிய பர்தாவை அணிந்து பெண்வேடத்தில் செல்வார். அந்த வீட்டு ஓனர் சற்று சந்தேகப்பட்டு கவுண்டமணியின் பர்தாவைக் கொஞ்சம் விலக்கிப் பார்க்க முயலுவார். அதற்குள்ளாக கவுண்டமணி “அய்ய்யோ பாத்துட்டானே, பாத்துட்டானே....” என்று கூச்சலிட்டு ஊரைக்கூட்டுவார். அதேபோல போலிகளின் அயோக்கியத்தனம் ஊரறிந்த ரகசியமாக இருக்கையில், ஏதோ மக்கள் தொலைக்காட்சி தான் தங்களது நேர்மையைக் கொச்சைப்படுத்திவிட்டதாக கவுண்டமணியின் பாணியில் கூச்சலிட்டுக் கொண்டு அத்தொலைக்காட்சியின் அலுவலகத்திற்கு முன்பாகத் திரண்டு அவர்கள் போட்ட ஆட்டத்தை நாம் அறிவோம். அந்த ஓலம் அடங்கிய சில மாதங்களிலேயே இதோ இன்னொரு ஓலம். திருப்பூர் ’மார்க்சிஸ்டு’ எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, அக்கட்சியின் அரசியல் கழிசடைத்தனத்தின் ஒரு அங்கமாகத் திகழ்ந்து கட்சிக்கு ’கோவிந்தாசாமி’யாகி தண்ணி காட்டிக்கொண்டிருக்கிறார். இதற்கு மேலும் பொறுமையாயிருந்தால் மிச்சமிருக்கும் அடையாளங்களும் பறிபோய்விடும் என்பதால், வேறு வழியின்றி இப்போது அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டிருக்கிறார்.
உ.ரா.வரதராசனின் நடவடிக்கைக்கும் நம்ம ‘கோவிந்தா’சாமியின் நடவடிக்கைக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. உ.ரா.வரதராசன் மரணத்திற்கு முந்தைய தனது இறுதிக் கடித்த்தில் (பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத்துக்கு உ.ரா.வ. எழுதிய அக்கடிதம்) “பல பெண்களுடன் இழிவான முறையில் உடல்ரீதியிலான உறவு வைத்துக் கொண்டிருப்பவர்கள், கட்சியின் (சி.பி.எம். கட்சியின்) பொலிட்பீரோவிலும், ஏனைய மாநில அளவிலான தலைமைப் பொறுப்புகளிலும் இருக்கும் போது; அவர்கள் நிறைய புகார்களுக்கும் விசாரனைக்கும் உட்படுத்தப்பட்ட பிறகும் கூட அவர்கள் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்க விரும்பாத கட்சியின் தலைமை, என்மீது ஒரு தலைப்பட்சமாக நடவடிக்கை எடுத்திருப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். அக்கடிதம் எல்லாத் தமிழ் வார ஏடுகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகி நாறியது. அதற்கு போலிகள் எந்த பதிலும் சொல்லாமல், மக்களின் மறதியை மலைபோல நம்பிக் காத்திருந்தனர்.
அதேபோல, நேற்று திருப்பூர் கோவிந்தசாமி வெளியிட்ட அறிக்கையில், உ.ரா.வ.வின் நிலைதான் தனக்கும் நேர்ந்திருக்கும் என்று நொந்துகொண்டு அனுதாபம் தேட முற்பட்டார். அதனைத் தொடர்ந்து, தன்னைவிடக் கூடுதலான தவறுகளை அல்லது தான் செய்யத்துணியாத கட்சி விரோத செயல்களை வெளிப்படையாகச் செய்து வரும் ஏனைய சட்டமன்ற உறுப்பினர்கள் இன்னும் கட்சிக்குள் சகல செல்வாக்குடன் நட்த்தப்படும்போது தன்மீது மட்டும் ஒருதலைப்பட்சமாக அக்கட்சி நடந்து கொள்வதாகவும் நொந்து கொண்டார்.
அதாவது தாம் மட்டுமல்ல, தமது கட்சியின் தலைமை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளின் கழிசடைத்தனம் இப்படியிருக்க தாம் மட்டும் ஒருதலைப்பட்சமாகப் பழிவாங்கப்படுகிறோம், என்கிற உண்மை நிலையை இருவரும் ஒத்த குரலில், அடுத்தடுத்து தெரிவித்திருக்கின்றனர். உ.ரா.வ.வின் மரணம் கொலையா-தற்கொலையா என்கிற வெட்டி வாத்த்திற்குள்ளாக அவர் கடிதம் மூலம் சுட்டிக்காட்டிய, தலைவர்களின் அயோக்கியத்தனம் இருட்ட்டிப்பு செய்யப்பட்டதுபோல, திருப்பூர் கோவிந்தசாமி தி.மு.க.விசுவாசியானதால் மார்க்சிஸ்ட் விரோதியாகிவிட்டார் என்பன போன்ற சில்லரைத்தனமான ஓட்டுப்பொறுக்கிக் கருத்துக்களுக்குள், அவர் உள்ளிட்ட ஏனைய சி.பி.எம். எம்.எல்.ஏ.க்களின் மோசடிகள் மூழ்கடிக்கப்படுகின்றன போலும்!
நமது கிரிக்கெட் அணியின் இந்திய தேசப்பற்றை பத்திரமாக உள்ளாடைக்குள் மறைத்து வைத்துக் கொண்டு தமது பெப்சி, கோக்கின் மீதான பற்றுதலை உலகுக்கு எடுத்துக்கூறும் வகையில் மேலாடைகளிலும், மட்டை, தொப்பி உள்ளிட்ட தனது அங்கத்தின் மீதான அனைத்து பாகங்களிலும் வெளிப்படுத்தும் கிரிக்கெட் கழிசடை ‘வீரர்’களைப்போல, போலிக்கம்யூனிச தலைமையானது தமது கம்யூனிச அடையாளங்களை உள்ளாடைகளில் மட்டும் மூடி இரகசியமாக வைத்துக்கொண்டு, தி.மு.க., காங்கிரசு, அ.தி.மு.க. உள்ளிட்ட ஏனைய ஓட்டுப் பொறுக்கிகளின் அடையாளங்களையே மேலங்கியாக ஒவ்வொரு தேர்தலிலும் உவப்போடு சுமந்து திரிகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் கோக், பெப்சி திணிப்புக்கு இரையாகி நமது இளைஞர்கள் அந்நிய குளிர்பான்ங்களுக்கு அடிமையாகிவிடுவதைப் போலவே, போலிக்கம்யூனிசத் தலைமையின் ஓட்டுப்பொறுக்கி அரசியல் திணிப்புக்கு ஆட்பட்டு அக்கட்சியினர் ஏனைய ஓட்டுக்கட்சிகளுக்கு சாரை சாரையாக படையெடுத்து, ஐக்கியமடைந்து விடுகின்றனர்.
விஜயகாந்த கட்சிக்கு கே.கே.நகர், எம்.ஜி.ஆர்.நகரைச் சார்ந்த ஆயிரக்கணக்கான சி.பி.எம். கட்சியினர் ஒரு கட்டைப்பஞ்சாயத்து ரவுடியும், சி.பி.எம். கட்சியின் முன்னாள் மாவட்ட பொறுப்பாளருமான காமராஜ் என்பவரது தலைமையில் சென்று ஐக்கியமடைந்தனர். நாகையைச் சார்ந்த சி.பி.எம். கட்சியின் ஒரு பகுதியினர் பா.ஜ.க.வுக்கும் தி.மு.க.விற்கும் தாவிச் சென்றனர். மதுரை மாவட்டங்களில் அண்ணன் அழகிரியின் சாம்ராஜ்யத்திற்குள் தம்மை இணைத்துக் கொண்டு, அண்ணனின் அரசியல் சாக்கடையில் சங்கமித்தவர்கள் ஆயிரக்கணக்கானோர். மதுரை, வில்லாபுரத்தில் கொலை செய்யப்பட்ட தோழர் லீலாவதியின் மகள் கலாவதியும், கலாவதியின் கணவர் ராமசுப்புவும் சில நூறு பேர்களுடன் சென்று அ.தி.மு.க.வில் தஞ்சமைடந்தனர். திருநெல்வேலி சி.பி.எம்.மின் நகர செயலாளர் கனகசாமி என்பவர் கட்சிக்குள் கருமலையான் என்கிற தேவர் சாதிவெறி - கட்டைப்பஞ்சாயத்துக்காரனின் தாக்குதலைச் சமாளிக்க முடியவில்லை என்று சொல்லி சரத்குமார் தொடங்கியுள்ள நாடார் கட்சியில் இணைந்து கொண்டுவிட்டார். ’எழில்மிகு சிங்கார சென்னை’யின் மாநகர மேயரான மா.சுப்பிரமணியம் கூட சி.பி.எம்.மிலிருந்து கணிசமான நபர்களுடன் தி.மு.க.வுக்கு வந்தவர்தான். இப்படியாக இன்றைய திருப்பூர் கோவிந்தசாமியின் முன்னோடிகளின் பட்டியலை அடுக்கிக்கொண்டே போகலாம். புள்ளிவிபரங்களுக்குப் பஞ்சமில்லை.
இவ்வளவு வெளிப்படையாக்க் கட்சி மாறி வலம் வரும் அவர்கள், எடுத்து வைப்பது ஒரே நியாயம்தான். அது, தேர்தலுக்குத் தேர்தல் எந்த்த் தயக்கமுமின்றி அணிமாற்றிக் கொண்டு ஆபாச அரசியல் நடத்தும் தலைமையை விட, ஓரிருமுறை கட்சித்தாவுகின்ற தமது நடவடிக்கை இழிவானதல்ல என்பதுதான், அவர்கள் அழுத்தமாகச் சொல்லவருகின்ற நியாயம்.
திருப்பூர் கோவிந்தசாமியின் மீது நடவடிக்கை எடுத்து கடமையாற்றிய கட்சியின் பெருமையை எடுத்தியம்பியுள்ள தீக்கதிரைச் சுட்டிக்காட்டி, அக்கட்சியினைச் சார்ந்த நேர்மையான தோழர் ஒருவர் அவமானத்தோடு சொன்ன கருத்தை நிச்சயமாக இப்பதிவில் சுட்டிக்காட்ட வேண்டும் என்று கருதுகிறேன். “கல்விக் கட்டணக்கொள்ளைக்கு எதிராகப் போராடுவதாக சி.பி.எம்.-மாணவர் சங்கத்தின் செய்திகளையும் சவடால்களையும் அரைப்பக்கத்திற்கு பதிப்பித்திருக்கும் தீக்கதிர், அதற்கடுத்த பக்கத்திலேயே ஒரு முழுபக்க அளவிற்கு தனியார் பள்ளியின் வண்ண விளம்பரத்தை வெளியிடுகிறதே, இது மோசடியில்லையா?”, “தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களும், தேனீர் கடை நடத்துபவர்களும் படும் துயரங்களுக்காக தீக்கதிர் வெளியிட்ட சிறப்பிதழுக்கான ஸ்பான்சர்ர் யார் தெரியுமா? அதே இலட்சக்கணக்கான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை வீதியில் வீசியெறிந்த ’ப்ரூக்பாண்ட்-இந்தியா’ என்கிற நிறுவனம்தான். அந்நிறுவனத்தின் வண்ண விளம்பரங்களை பக்கத்திற்கு பக்கம் வெளியிட்டு மிச்சமிருக்கின்ற இடத்தில் தேயிலைத் தொழிலாளர்களின் உரிமை என்று எதையோ எழுதுவது அயோக்கியத்தனமில்லையா?” கட்சியின் தலைமை நடத்துகின்ற பத்திரிக்கை தான் கோவிந்தசாமிகளுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளது. அ.தி.மு.க.வின் கூட்டணியிலிருக்கும் நிலையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவர் தி.மு.க.வுக்கு பாராட்டுவிழா நடத்துவது என்பது தீக்கதிர் சொல்லிக்கொடுத்த பாடமல்லவா? என்பதுதான் அத்தோழரின் கேள்வி.
செம்மொழி மாநாடு, கருணாநிதியின் குடும்பவிழா அல்ல, அது ஒரு பொதுநிகழ்வு என்பதுதான் சி.பி.எம். – தமுஎகச வின் குருட்டுத்தனமான நிலைப்பாடு. ஆகவே அத்தகைய ‘பொது நிகழ்வில்’ கட்சி பேதங்களுக்கும், ’கூட்டணி தர்மங்களுக்கும்’ அப்பாற்பட்டு தமிழ் என்ற பொதுவான அம்சத்தில் சங்கமித்ததாக சீத்தாராம் எச்சூரியின் செம்மொழி மாநாட்டுப் பங்களிப்பையும், அவர் செம்மொழி மாநாட்டு மேடையில் சற்றும் கூசாமல் கருணாநிதிக்கு துதிபாடியதையும் நியாயப்படுத்துகிறது, அக்கட்சியும் அதன் ஏடுகளும். அதேபோலத்தான் மு.க.ஸ்டாலினுக்கும், அ.ராசாவுக்கும் துதிபாடுவதை திருப்பூர் கோவிந்தசாமி, தொகுதியின் சார்பாக நடத்தப் படும் பொதுவான நிகழ்ச்சி என்கிற தோற்றத்தோடு நிகழ்த்தவிருக்கிறார். தலைவர் யெச்சூரி சென்ற மாதம் காட்டிய வழியில், தொண்டர் கோவிந்தசாமி இந்தமாதம் நடைபோடுவது குற்றமா?
செம்மொழி மாநாட்டைப் பாராட்டி, தி.மு.கழக உடன்பிறப்புக்கள் ஊர்த்தாலியை அறுத்துக் கொடுத்த காசை உவப்போடு பெற்றுக் கொண்டு, அவர்கள் ஏதோ தங்கள் பகுதியில் நிறைய சாதித்ததாக விளம்பரப்படுத்தியது தீக்கதிரின் செம்மொழி மாநாட்டுச் சிறப்பு மலர். கிருஷ்ணகிரி மாவட்ட தி.மு.க.வும் சேலம் மாவட்ட தி.மு.க.வும் இன்னும் ஏனைய சில மாவட்ட, வட்ட கழகமும் திக்கதிரில் ஒரே விளம்பர மழையாகப் பொழிந்த வண்ணமிருந்தார்களே; அவர்கள் தொகுதியை வளர்த்துவிட்டதாகக் கதையளந்து பட்டியலிட்டு ஒரு எதிர்க்கட்சியின் பத்திரிக்கையிலேயே விளம்பரப்படுத்தியிருந்தார்களே, இவையெல்லாம் கட்சித்தாவலாகவோ, கொள்கைத்தாவலாகவோ எடுத்துக்கொள்ள முடியாதா?!
இது அப்படியல்ல. பத்திரிக்கை என்பது தொழில். அதற்கும் கட்சியின் அரசியலுக்கும் சம்பந்தமில்லை என்பதுதான் தீக்கதிரின் விளம்பர மேலாளர் நீதிராஜனின்(!) வாதம். விளம்பரங்களால் கிடைக்கும் பணம்தான் பத்திரிக்கை தொடர்ந்து வெளிவருவதற்கான அடிப்படை என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார் அவர். கட்சியின் மாநிலக்குழுவால் நடத்தப்படும் ’அரசியல்’ பத்திரிக்கைக்கே காசுதான் கோவணம் என்றால், கட்சிக்கும் அது பொருந்தும்தானே. அதனால்தான் சாராய ரவுடியும், கல்விக் கொள்ளையனுமான ஜேப்பியார்களின் காசுதான் கட்சிக்கு கோவணமாக இருந்துவருகிறது. திருப்பூர் கோவிந்தசாமி தமது கோவணத்தை (தி.மு.க. ஆதரவோடு) வேட்டியாக விரித்துக் கட்ட முயலுகிறார். தமது அயோக்கியத்தன்ங்களைக் கேள்விக்குட்படுத்தவோ, நடவடிக்கை எடுக்கவோ தமது கட்சிக்கு எந்தத் தகுதியும் திராணியும் கிடையாது என்பதுதான், கோவிந்தசாமிக்களின் மலைபோன்ற நம்பிக்கையாகும்.
தோழர் அசுரன் மேலே குறிப்பிட்டுள்ளதைப் போல, இது திமுக-வுடனான பிரச்சினை என்பதாக உருவகப்படுத்துகின்ற சி.பி.எம். கட்சியின் நடவடிக்கைகளுக்குள், முதலாளித்துவத்தை நத்திப் பிழைக்கும் இழிநிலையும், பாட்டாளிவர்க்கத்துக்கு துரோகமிழைக்கும் கொடுமையும் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது. கட்சியின் எம்.எல்.ஏ. பதவியையும் சட்டமன்றக் கட்சித்தலைவர் என்ற பதவியையும் பயன்படுத்தி இலட்சக்கணக்கான ரூபாய் பணத்தை பனியன் கம்பெனி முதலாளிகளிடம் வசூலித்து; மாதசம்பளமாக ஆயிரத்திற்கும், இரண்டாயிரத்திற்கும் நாள் முழுக்க சுரண்டப்படுகின்ற அப்பாவி தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து முதலாளித்துவ ஒடுக்குமுறைக்குள் அவர்களைத் தள்ளியிருக்கிறார், இந்த ‘மார்க்சிஸ்ட்’ எம்.எல்.ஏ.
இருப்பினும் அந்த இழிசெயலுக்காக, அவருடைய தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்காக அல்லாமல், வெறும் கட்சித்தாவல் நடவடிக்கைகாக மட்டும் சும்மா பெயரளவுக்குத் தண்டித்திருக்கிறது, அக்கட்சியின் தலைமை. முதலாளிவர்க்க சேவகத்திற்காகவும், அவர்களை நத்திப் பிழைப்பதற்காகவும் தொழிலாளிவர்க்கத்தின் உரிமைகளைப் பலியிடக் கோருகின்ற அக்கட்சியின் நடவடிக்கைகளைத்தான் போலிகம்யூனிசத் தன்மை என்கிறோம். உண்மையான சமூகமாற்றத்தை விரும்பும் சி.பி.எம்.மின் நேர்மையான அணிகளே விழித்துக்கொள்ளுங்கள்! ஓட்டுப்பொறுக்கி அரசியல் சாக்கடையிலிருந்து விடுபட்டு புரட்சிகர அரசிலில் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்!!
புரட்சிகர வாழ்த்துக்களுடன்,
ஏகலைவன்.
yekalaivan@gmail.com
Wednesday, July 14, 2010
ரகசியமாத் தப்பு பண்ணத் தெரியல்ல – திருப்பூர் ’கோவிந்தா’சாமி நீக்கம்!
Wednesday, April 7, 2010
தொழிற்சங்கம் என்கிற முகமூடியணிந்து முதலாளிகளுக்கு கன்சல்டன்சி வேலை செய்யும் சி.ஐ.டி.யூ.வின் கைக்கூலித்தனம்!
அன்பார்ந்த தோழர்களே!
மேநாள் – 2010 நெருங்கிவிட்டது. போலிகம்யூனிஸ்டுகள் மற்றும் காங்கிரசு, பா.ஜ.க., தி.மு.க., உள்ளிட்ட ஏனைய ஓட்டுப்பொறுக்கிக் கட்சிகளின் தலைமையிலான முதலாளித்துவ ஆதரவு - பிழைப்புவாத தொழிற்சங்கங்கள் மேநாள் கொண்டாட்டத்தை வழக்கம்போல ஒரு சடங்காக, சம்பிரதாயமாக, தொழிலாளர்களுக்கு வர்க்க உணர்வு ஏற்பட்டுவிடாதவாறு பாதுகாப்புடன், குடியும் கூத்துமாக கொண்டாடவிருக்கின்றன. தொழிலாளி வர்க்கமாக உணர்வுபெற்று களம் கண்ட சிகாகோ தொழிலாளர்கள், உலகத் தொழிலாளி வர்க்கத்துக்கு, தங்கள் இரத்தம் சிந்தி பெற்றளித்த கொடையான எட்டுமணிநேர உழைப்பு, எட்டுமணிநேர ஓய்வு, எட்டுமணி நேர உறக்கம் போன்ற அடிப்படையான உரிமைகள் பறிக்கப்பட்டு, இன்றையதினம் பத்துமணிநேரம், பனிரெண்டு மணிநேரம், பதினாறு மணிநேரம் என்று வேலை வாங்கப்பட்டு, கடுமையாக வதைபட்டுக் கொண்டிருக்கிறார்கள், நமது தொழிலாளிகள்.
முதலாளித்துவ கொடுமையிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்வதற்கு அடிப்படையான தேவையான சங்கம் வைத்துக்கொள்ளும் உரிமைகூட இன்றைய மறுகாலனிய சூழலில் முற்றாக மறுக்கப்படுகின்ற அவலநிலையில்தான் நமது தொழிலாளி வர்க்கம் சிக்கியிருக்கிறது. குறிப்பாக, இந்தியாவின் உள்நாட்டு முதலாளிகளை, சிறுதொழில்களை மொத்தமாக விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டு, நூறு கோடி மக்களின் சந்தையைக் குறிவைத்து தினம் ஒரு கம்பெனியாக படையெடுத்துவருகின்ற பன்னாட்டு பகாசூர நிறுவன்ங்கள் ஒருபுறம்; மேலும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஒவ்வொன்றும் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் நிலங்களைப் பறித்து, இந்தியாவின் வேலையற்ற கோடிக்கணக்கான இளைஞர்களின் உழைப்பை அற்ப கூலிக்கு சுரண்டுவதோடு, இந்திய மக்களின் வரிப்பணத்தில் ஆயிரக்கணக்கான கோடி சலுகைகளும் பெற்று நமது தேசத்தை மொட்டையடித்துச் செல்லும் ஏகாதிபத்திய நிறுவனங்களும் இந்திய தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் மறுபுறமும், நமது மைய-மாநில போலி ஜனநாயக அரசுகளிடம் தொழிற்சங்கங்களுக்கு எதிரான சட்டப் ‘பாதுகாப்பையே’ முதன்மையான தேவையாகக் கோருகின்றன. ஏகாதிபத்தியங்கள் வீசுகின்ற எலும்புத்துண்டுகளுக்கு நாக்கைச் சுழற்றிக்கொண்டு, தாராளமயத்தை ஆதரிக்கும் நமது கைக்கூலி ஆட்சியாளர்கள் இதுபோன்ற ஒத்துழைப்புகளையும் தாராளமாக செய்துகொடுப்பதாகத்தான் ஒப்புக்கொண்டிருப்பார்கள். சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக கைக்கூலி ஆட்சியாளர்களுக்கும் பன்னாட்டு பகாசூர நிறுவனங்களுக்கும் இடையில் மோசடியாகப் போடப்படும் ‘புரிந்துணர்வு’ ஒப்பந்தங்களின் இரகசியப் பக்கங்களுக்குகிடையே சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது இந்தியத் தொழிலாளிகளின் வாழ்வுரிமை.
சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள ஹூண்டாய் கார் தொழிற்சாலையின் வாயிலில் இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய மேநாளில் ஏற்றப்பட்ட (போலிகம்யூனிச சி.பி.எம். கட்சியின்னைச் சார்ந்த) தொழிற்சங்கக் கொடியை அடியோடு பெயர்த்து உடைத்தெறிந்தனர் அக்கம்பெனியின் நிர்வாகிகள். கனிசமான எண்ணிக்கையிலான தொழிலாளிகளை வேலை நீக்கம் செய்ததோடு வெகுமூர்க்கமாக நடந்துகொண்டது ஹுண்டாய் நிர்வாகம். அந்நிர்வாகத்திற்கு சகலவிதமான ‘ஒத்துழைப்பை’யும் தந்து தொழிலாளிகளை ஒடுக்குவதற்கு தோள்கொடுத்து நின்றது கருணாநிதியின் போலீசு. இதுபோன்ற அடாவடியான நடவடிக்கைகளைச் செய்து முடித்தபிறகு அதற்கான காரணமாக அவன் சொன்னது, தொழிலாளிகளுக்கு சங்கம் வைத்துக்கொள்ளுகின்ற உரிமையெல்லாம் எமது நிறுவனத்திற்குள் கிடையாது, என்பதைத்தான். போலி கம்யூனிச சி.பி.எம். கட்சியின் தலைமை, ஹூண்டாயின் இப்படிப்பட்ட காட்டுத்தனமான நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன் பேர்வழியென்று கிளம்பி, கருணாநிதி ஆட்சி மட்டும்தான் இவற்றுக்கெல்லாம் காரணம் என்று பிரச்சினையை திசைமாற்றி ஓட்டுக்களாக்கவே முயற்சிதத்து. சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் நலன்களுக்காக தொழிலாளிகளின் உரிமைகள் சட்ட ரீதியாக பலியிடப்பட்டிருப்பது குறித்து இன்றுவரை வாய்திறக்க மறுக்கிறது அதன் கைக்கூலி தொழிற்சங்கமான சி.ஐ.டி.யூ. ஏனெனில் போலிகம்யூனிச சி.பி.எம். கட்சி தான் ஆளுகின்ற மாநிலங்களில் இதே மாதிரியான அல்லது இதைவிடக் கொடிய வகையில் முதலாளிகளுடன் ஒப்பந்தங்கள் போட்டுக்கொண்டிருக்கிற இக்கட்சியை, இப்படிப்பட்ட மோசடிகளை இருட்டடிப்பு செய்யவேண்டிய ஆளும்வர்க்க கடமையுணர்ச்சிதான் பேசவிடாமல் தடுக்கிறது போலும்!
அதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சென்னையை அடுத்த நோக்கியா நிறுவனத்தில் கூட நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளிகள் முறையான முன்னறிவிப்பின்றி, நியாயமான காரணமுமின்றி வேலையில்லை என்று சொல்லி திடீரென நடுவீதியில் தூக்கி வீசப்பட்டார்கள். தொழிலாளர்களின் தன்னிச்சையான போராட்டங்கள் கடுமையாக்கப்பட்டும் தமிழக அரசின் தொழில்துறை அமைச்சர் நோக்கியா நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியும் கூட நிர்வாகம் மசியவில்லை. மூவாயிரம் சம்பளம் பெற்றுக் கொண்டு கால நேரம் பாராமல் உழைப்பதற்காக ஆயிரக்கணக்கில் ஆள் கிடைப்பதால், ஐயாயிரம் சம்பளம் பெற்றுக் கொண்டு இத்தனையாண்டுகள் தமக்கு உழைத்தவனை சிறிதும் இரக்கமின்றி, ஏதேனும் ஒரு காரணம் சொல்லி தூக்கி வீசுகிறது (நண்பர் அதியமானின் ஆதரவு பெற்ற...) முதலாளித்துவம். இவையெல்லாம் நமது மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குவதைத் தவிர வேறெந்த நோக்கமும் இல்லாத பன்னாட்டு முதலாளிகள், அவர்களிடம் அற்ப சம்பளத்திற்கு உழைப்பை விற்று உயிர்வாழும் தமது தொழிலாளிகளுக்கு எதிராகச் செய்துவரும் ஒரு சில ‘சேவை’களுக்கான உதாரணங்கள்.
இவை தவிர, பெரும்பான்மையான (அரசு நிறுவன்ங்கள் உள்ளிட்ட) முதலாளித்துவ நிறுவனங்களில் கடந்த பத்து, இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தற்காலிகத் தொழிலாளர்களாகவே வைத்து சுரண்டப்படுகின்ற, பணி நிரந்தரமின்றிக் கொத்தடிமைகளாகத் தவித்துவரும் இலட்சக்கணக்கான, தொழிலாளிகளும் நமது நாட்டில்தான் இருந்துவருகின்றனர். நெய்வேலி நிலக்கரி நிறுவனம் முதல் ரயில்வே, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் உற்பத்தி நிறுவனங்கள் என்று நீண்ட பட்டியலாக அணிவகுத்து நிற்கும் அரசு நிறுவனங்கள் தமது உற்பத்திக்கு பல பத்தாண்டுகளாக அத்துக்கூலிகளாக, தற்காலிகப் பணியாளர்களாக சுரண்டப்பட்டுவரும் பெரும்பான்மையான தொழிலாளர்களை நம்பித்தான் இருக்கின்றன. மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமல்படுத்தப்படுவதற்கு முன்னமேயே, தமது சொந்த நிறுவன்ங்களிலேயே தொழிலாளிகளை ஒடுக்கியும் சுரண்டியும் வருகின்ற நமது அரசுகள், பன்னாட்டு நிறுவன்ங்கள் வீசுகின்ற சில எலும்புத்துண்டுகளுக்காக நமது தொழிலாளர் உரிமைகளை பலியிட ஒருபோதும் தயங்கியிருக்காது, என்பதன் நேரடியான விளைவுகளைத்தான் இன்றையதினம் (பெயரளவுக்கான) அனைத்து உரிமைகளையும் இழந்து தவிக்கும் தொழிலாளர்களின் அவல நிலையில் காண்கிறோம்.
இருப்பினும், இவையெல்லாம் எங்கோ ஒரு நிறுவனத்தில், உலகின் எங்கோ ஒரு மூலையில் அல்லது நமது ஏழை தேசமான இந்தியாவில் மட்டும் நடைபெறுகிற நிகழ்வுகளல்ல. உலக முதலாளித்துவமோ அல்லது ஏகாதிபத்தியத்தியமோ தொழிலாளர்களின் மீதான இத்தகைய கொடூரமான சுரண்டலில்தான் தம்மைத் தக்கவைத்துக் கொள்கிறது. முதலாளியத்தின் முதன்மையான, பெரும்பான்மையான மூலதனமே உழைப்புச் சுரண்டலில்தான் இருக்கிறது என்பதுவும், முதலாளி வர்க்கம் என்ற ஒன்று இருக்கும் வரை தொழிலாளி வர்க்கம் விடிவும் விடுதலையும் பெறமுடியாது என்பதுவும்தான் மார்க்சியத்தின் அரிச்சுவடி. இந்தியாவின் பெரும்பான்மையான நிறுவனங்களில் சுரண்டப்படும் தொழிலாளிகள், தம்மீதான முதலாளித்துவ சுரண்டலை முறியடிக்க முடியாமல் சிக்கியிருப்பதற்குக் காரணம் அவர்கள் போலி கம்யூனிச சங்கங்களால் வர்க்க உணர்வற்று பராமரிக்கப்படுவதுதான். கொடியிலும் பெயரளவிலும் மட்டும் சிவப்பு நிறத்தை வைத்துக்கொண்டு தொழிலாளர் விரோதமாகவும், வெளிப்படையான முதலாளித்துவ ஆதரவோடும் சங்கம் நடத்திவரும் போலிகள் தமது செந்நிறத்தைத் தக்கவைத்துக் கொவதற்காக மட்டும் கூலியுயர்வு, போனஸ், சீருடைகள், மருத்துவக் காப்பீடு போன்ற ஒரு சில பொருளாதாரக் கோரிக்கைகளை முன்வைத்து பெயரளவுக்கான போராட்டங்களை ‘புரட்சிகரமாக’ நடத்திவருகின்றனர். மேற்கண்ட பொருளாதார கோரிக்கைகள் ஒரு சில நிறுவன்ங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வழங்கப்பட்டுவிட்ட போதிலும்கூட அந் நிறுவன்ங்களின் தொழிலாளிகளின் மீதான சுரண்டலிலோ, தொழிலாளிகளின் வாழ்நிலையிலோ எந்த மாற்றமும் ஏற்பட்டதில்லை.
ஏனெனில், போலி கம்யூனிசக் கட்சியின் ஊதாரித் தலைவர்களுக்கு இப்படிப்பட்ட தொழிற்சங்கங்கள்தான் தங்கச் சுரங்கங்களாகக் காட்சியளிக்கின்றன. ஒரு தொழிற்சாலையில் சங்கம் தொடங்குவதற்கு முன்பே ஒரு பேரம், அப்பேரத்தில் சங்கம் தொடங்காமலிருக்க கைக்கூலிகளைப் பெற்றுக் கொண்டு ‘நா நயமாக’த் திரும்பிவிடுவது. ஒருவேளை பேரம் படியாவிட்டால் உடனே ஆலை வாயிலில் ‘புரட்சி’ தொடங்கிவிடும். போலிகள் அள்ளி வீசும், தொழிலாளிகளுக்கு ஆதரவான வார்த்தைச் சவடால்களை நம்பி சங்கமாகத் திரண்ட அப்பாவித் தொழிலாளிகள்தான் அடுத்த பலிகெடா. அப்படியே பேரம் படியும் வரை, அந்த முதலாளி எலும்புத்துண்டுகளின் எண்ணிக்கையைக் கூட்டும் வரை ‘புரட்சி’ பல்வேறு வடிவங்களில் (மொட்டையடித்துக்க்கொள்ளும் போராட்டம், கோவணம் கட்டும் போராட்டம், பாடை கட்டும் போராட்டம் என்று....) தொடரும். ஒருவழியாக முதலாளியே, இது கடிக்கின்ற நாய் அல்ல, குரைக்கின்ற நாய்தான் என்று புரிந்து கொண்டு, ”நமது செல்லப்பிராணியாக இருந்துவிட்டுப் போகட்டுமே...” என்று இறங்கி வந்து பேரத்தை நிறைவு செய்வான். உடனே சி.ஐ.டி.யூ.வின் ‘புரட்சி’ அம்முதலாளியின் காலடியில் சமர்ப்பிக்கப்படும். இவர்களை நம்பி வந்த தொழிலாளிகளுக்கு “இருக்கவேயிருக்கு செங்கொடி, அதையே ஈரத்துணியாக்கி வயிற்றில் சுற்றிக் கொண்டு வாழப் பழகிக் கொள்ளுங்கள்...” என்கிற ‘புரட்சிகர’ யோசனைகள் வழங்கப்பட்டுவிடும்.
தோழர்களே! நகைப்பதற்காக நான் இவற்றை இங்கே குறிப்பிடவில்லை. இதுதான் நடைமுறையிலிருக்கும் உண்மையும்கூட. குந்தக்குடிசைகூட இல்லாமல் கட்சிக்குள் வந்து ஒரு சில ஆண்டுகளுக்குள் அடுக்குமாடிகள் கட்டி காரில் வலம் வரும் ‘காம்ரேடு’களின் திடீர் வளர்ச்சிக்குப் பின்னே ஆயிரக்கணக்கான தொழிலாளிகளின் வாழ்க்கை பலியிடப்பட்டிருக்கிறது. ஏனைய ஓட்டுப்பொறுக்கி கட்சிகளைச் சார்ந்த திடீர் பணக்கார அரசியல் ரவுடிகள் கூட இப்படிப்பட்ட கொலைபாதக வழிமுறையை கற்பனையும் செய்துபார்த்திருக்க மாட்டார்கள். வாட்டர் டேங்க், சாலைகள், கட்டிடங்கள், போன்ற காண்ட்ராக்ட்கள் மூலமாகவும் ரியல் எஸ்டேட் மாஃபியா தொழிலின் மூலமாகவும், கட்டைப்பஞ்சாயத்து – கந்துவட்டி மூலமாகவும் காசு பார்க்கும் இதர ஓட்டுப்பொறுக்கி கட்சிகளின் பிரதிநிதிகளின் நடவடிக்கைகளைவிட, தம்மை நம்பி வந்த ஆயிரக்கணக்கான தொழிலாளிகளின் ஈரக்குலையை அறுத்து காசுபார்க்கும் இந்த முதலாலிய கைக்கூலிகளின் நடவடிக்கைகள் ஆகக் கேவலமானவையாகக் கருதி அம்பலப்படுத்தப்பட்டு ஒழித்துக்கட்டப்பட வேண்டும்.
இந்நிலையில் தொழிலாளர்களுக்கு வர்க்க உணர்வூட்டி, தத்தமது சொந்த பிரச்சினைகளுக்காக மட்டும் போராடுவதை விடுத்து, தொழிலாளர்கள் மீதான சுரண்டலில் பொதிந்துள்ள சமூக அடித்தளத்தை உணர்த்தி, வர்க்கப் போராட்ட்த்திற்கு அணிதிரட்டப்படுகிற வகையில் செயல்படும் புரட்சிகர தொழிற்சங்கத்திற்கான தேவையை இன்றைய தினம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்கிற எமது அமைப்பு நிறைவேற்றி வருகிறது. பு.ஜ.தொ.மு.வில் இணையும் பெரும்பான்மையான தொழிலாளிகள் ஏற்கெனவே ஏதேனும் ஒரு துரோக சங்கத்தினால் பழிவாங்கப்பட்ட்தை உணர்ந்து, தமது பிரச்சினைகளுக்கு வெறும் பொருளாதார – கவர்ச்சிகர கோரிக்கைகளைத் தவிர்த்து சமூகரீதியிலான கோரிக்கைகளையும் முன்வைத்து போராட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்ற, அத்தகைய புரட்சிகர போராட்டங்களினூடாகத்தான் நிரந்தரத் தீர்வை எட்ட முடியும் என்று அணிதிரட்டப்படுகின்ற காரணத்தினால்தான் இந்த மாற்றத்தைத் தேர்வு செய்கிறார்கள். தொடக்க நிலையிலிருந்தே மா-லெ முறைப்படி பயிற்றுவித்து வளர்க்கப்படும் அத்தொழிலாளிகள் வர்க்க உணர்வுடன் அணிதிரட்டப்படுவதோடு, இன்றைய மறுகாலணியச் சூழலையும் முதலாளித்துவ பயங்கரவாத்த்தையும் தமது சொந்த அனுபவத்தினூடாகப் புரிந்துகொள்கிறார்கள்.
பல்லாண்டுகளாக காண்ட்ராக்ட் தொழிலாளர்களாகவும், தற்காலிகப் பணியாளர்களாகவும் சுரண்டப்பட்டு நலிந்த தொழிலாளிகள், புது உற்சாகம் பெற்று பு.ஜ.தொ.மு.வின் தலைமையில் பணி நிரந்தரத்திற்கான போராட்டத்தைத் தொடங்கி, இத்தனையாண்டுகாலம் நீடித்த தம் மீதான உழைப்புச் சுரண்டலை எடுத்துச் சொல்லி நியாயம் கோருகிறார்கள். தமது வியர்வையையும் இரத்த்த்தையும் உறிஞ்சிக் கொழுத்த முதலாளியை வெளியே தலைகாட்ட முடியாத அளவிற்கு துணிந்து அம்பலப்படுத்தி வெட்கித் தலைகுணியச் செய்கிறார்கள். அப்பாவி மக்கள் மத்தியில் கோடீசுவர்ர்கள் என்றும் கொடை வள்ளல்கள் என்றும் உருவேற்றி செயற்கையாக மதிப்பை உயர்த்திக் கொண்ட முதலாளிகளின் கபட வேடங்கள் கலைக்கப்பட்டு, அவர்கள் இதுநாள்வரை செய்த அயோக்கியத்தனங்கள் நமது புரட்சிகரத் தொழிலாளிகளின் தொடர் போராட்டங்களின் மூலமாக அடுத்தடுத்து அம்பலப்படுத்தப்படுவதால் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இத்தகைய போராட்டங்களை மூர்க்கமாக எதிர்கொள்ளும் முதலாளிகளுக்கு, தேவையேற்பட்டால் உழைத்துக் காய்த்த கரங்களின் வலிமையையும் கொஞ்சம் லேசாக உணர்த்துகிறார்கள்.
சுரண்டிக் கொழுக்கும் முதலாளிக்கு எதிராக நீறு பூத்த நெருப்பாகத் தொடர்ந்த தொழிலாளி வர்க்கத்தின் பகையுணர்வின் புரட்சிகரப் பரினாமம் இத்தகைய போராட்டங்களில்தான் வெளிப்படத் தொடங்குகிறது. தமது நியாயமான, அடிப்படையான கோரிக்கைகளை முன்வைத்து போராடத் துவங்கும் தொழிலாளிகள் தொடர்ந்து தொய்வின்றி முன்னேறுகிறார்கள். இது முதலாளிகளை ஏகமாக அச்சுறுத்துவதோடு, இதுநாள்வரை தான் பார்த்த பிழைப்புவாத சங்கங்களின் நடவடிக்கைகளுக்கு நேரெதிராக பு.ஜ.தொ.மு. நடந்துகொள்வதால் அதனை வீழ்த்த, திரும்பவும் சி.ஐ.டி.யூ. போன்ற சங்கங்களையே நாடுகிறார்கள். எமது புரட்சிகர அமைப்புகளால் ஏற்கெனவே மக்கள் மத்தியில் அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்படும் போலி கம்யூனிச முகாமும் இத்தகைய சுரண்டல்வாத முதலாளிகளோடு உவப்புடன் இணைந்துகொண்டு, தொழிலாளி வர்க்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் சிறிதும் கூச்சமின்றி ஈடுபட்டுவருகிறார்கள். பு.ஜ.தொ.மு.வின் தலைமையிலான தொழிலாளர்களின் போராட்டத்தை முடக்குவதற்கு சட்டரீதியிலான தொழிற்சங்க நுனுக்கங்களை முதலாளிகளுக்கு சொல்லித்தருகின்ற அரும்பணியை போலிகம்யூனிச சி.பி.எம்.மின் தலைவர்களே செய்கிறார்கள். பு.ஜ.தொ.மு. வீச்சாக செயல்படுகின்ற தொழிற்சாலைகளில் முதலாளிவர்க்கத்தின் எடுபிடிகளாகவும் கன்சல்டண்டுகளாகவும் புரோக்கர்களாகவும் (Consultants or Broker) மேல்நிலையாக்கமடைந்து சந்திசிரிக்கிறது சி.பி.எம்.மின் தலைமை.
முதலாளித்துவ வர்க்க எதிரிகளோடு கரம் கோர்த்துக் கொண்டு நமக்கெதிராக்க் களமிறங்கியிருக்கும் போலிகம்யூனிச துரோகிகளின் செயல்பாடுகள், எமது தொழிலாளத் தோழர்களின் உறுதியான போராட்டங்களுக்கு முன்னால் அம்மனமாக நிற்கின்றன. இவர்களை மேன்மேலும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவேண்டிய நமது வேலையைக்கூட குறைத்து தம்மைத்தாமே அம்பலப்படுத்திக் கொள்கிறார்கள் எதிரிகளும் துரோகிகளும். ’சி.ஐ.டி.யூ. கண்சல்டன்சி’ கம்பெனியின் அடுத்த கட்ட ‘பரினாமத்தை’ நம்ம ‘காம்ரேடு’களுக்கு காட்டியிருக்கிறது. விரைவில் தமது கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து சங்கங்களையும் கலைத்துவிட்டு, அந்தந்த முதலாளிகளுக்கு கண்சல்டன்சிகளாக மாற்றி, அத்தொழிலாளிகள் இனிமேலாவது வர்க்க உணர்வு பெறுவதற்கு உதவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ‘சி.ஐ.டி.யூ. கன்சல்டன்சி’யின் மூலமாக நம்ம ‘காம்ரேடுகள்’ வெகு விரைவில் தமது கனவுலகத்தை எட்டிவிடலாம் என்று மேநாள்-2010ன் மூலமாக வாழ்த்துகிறேன்.
இதுகுறித்து ஒரு தோழருடன் விவாதித்துக் கொண்டிருந்தபோது “அட போங்க தோழர், போலி கம்யூனிஸ்டுகள் நமது பகுதிகளில், தமது கட்சியின் சின்னத்திலுள்ள அரிவாளுக்கும் சுத்தியலுக்கும் இடையிலேயே சுரண்டலைத் துவக்கி வைத்து அதிலும் ஒரு ’புரட்சி’ செய்துவருகிறார்களே உங்களுக்கு அது தெரியாதா...” என்று கேட்டு, கேட்க்க் கூசுகின்ற மேலும் சில அயோக்கியத்தன்ங்களை விவரித்தார். அதுகுறித்து மேலும் சில வரிகள் (இந்தப் பதிவோடு தொடர்புடையதாக இருப்பதால்) குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும் என்று எண்ணுகிறேன்.
இப்போது நெல் அறுவடைக்காலம். அனைத்து மாவட்டங்களிலும் அரசு கொள்முதல் என்பது பெயரளவுக்கே இருப்பதால், புரோக்கர்களின் கையிலேயே, அவன் கொடுக்கும் குறைவான காசை வாங்கிக் கொண்டு நெல்லை விற்கும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள், பெரும்பான்மையான சிறு, குறு விவசாயிகள். இந்த சிறு, குறு விவசாயிகள் போலி கம்யூனிச கட்சியின் செங்கொடியின் கீழ் விவசாயிகள் சங்கமாகவோ அல்லது விவசாயத் தொழிலாளிகள் சங்கமாகவோ இருக்கிறார்கள். இவர்களிடம், நெல்லைக் கொள்முதல் செய்வதற்காக படையெடுக்கும் புரோக்கர்களோடு செல்லும் லோடுமேன் எனப்படும் சுமை தூக்கும் தொழிலாளிகள் அதே செங்கொடியின் கீழ் சுமைதூக்கும் தொழிலாளிகளாக அணி திரட்டப்பட்டவர்கள். ஆனால், புரோக்கரோடு இணைந்து கொண்டு, அவன் கொடுக்கும் நூறு, இருநூறு பிச்சைக் காசுக்காக, எடைத்திருட்டு செய்து விவசாயியின் வயிற்றிலடித்துவருகிறார்கள். இம்மோசடியைக் கொஞ்சமும் கூசாமல் நியாயப்படுத்தி அந்த சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகிகளே நேரடியாக இத்திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
விவசாயத் தொழிலாளர்களும் ஆலைத்தொழிலாளர்களும், வயிற்றுப்பாட்டுக்காக அறிவாள் பிடித்த கரங்களும் இரும்பைப் பிடித்த கரங்களும் ஒன்றினைந்துதான் புரட்சியைச் சாதிக்க் வேண்டும் என்பதை வலியுறுத்தித் தான் அறிவாள் சுத்தியலைத் தமது சின்னமாக உலக பாட்டாளி வர்க்கம் உயர்த்திப் பிடித்துவந்திருக்கிறது. அத்தகைய உன்னதமான உலகப்பாட்டாளி வர்க்க சின்னத்தை இரண்டு, மூன்று சீட்டுகளுக்காகவும் ஓட்டுப் பொறுக்கிப் பிழைப்பதற்காகவும் புரட்சித் தலைவியின் பொற்பாதங்களில் சமர்ப்பித்து “அம்மாவின் ஆசிபெற்று....” இழிவுபடுத்தும் இப்போலிக் கம்யூனிசக் கயவாளிக் கும்பல் கிராமப்புறங்களில் செய்யும் அயோக்கியத்தனங்களைப் பாருங்கள். அறிவாள் பிடித்தவனின் குரல்வளையை நெறிக்க இரும்பைப் பிடித்த கரங்களை ஏவுகின்ற அயோக்கியத்தனத்தைக் கேளுங்கள். இத்தகைய எடைத்திருட்டு நடவடிக்கைகளில் மாட்டிக் கொண்டால், சொந்த கட்சித் தோழர்களாலேயே தாம் ஏமாற்றப்பட்டதை எண்ணி விவசாயிகளால் காறி உமிழப்படும் போது போலிகம்யூனிசக் கட்சியோடு சேர்த்து செங்கொடியும் அவர்கள் மத்தியிலிருந்து வெறுத்து ஒதுக்கப்படுகின்றது.
இதுபோன்ற சமூகத்தின் கடைமட்டத்தில் இருக்கும் உழைப்பாளிகளான சுமைதூக்கும் தொழிலாளர்களது வர்க்க உணர்வு, தன்னுடைய சொந்த வர்க்கமான விவசாயத் தொழிலாளர்களது வலியைக் கூட உணரமுடியாத அளவிற்கு சீரழிந்திருக்கிறது. போலி கம்யூனிச கட்சியின் அரசு ஊழியர் சங்கத்தில் இணைந்து கொண்டு லஞ்சம் வாங்கிப் பிழைக்கும் அதிகாரிகள், தாம் லஞ்ச-ஊழல் வழக்கில் சிக்கிக் கொண்டால் காப்பாற்றிவிடுவதற்கு சங்கம் இருக்கிறது என்ற ஒரே காரணத்தினால்தான் அச்சங்கத்தைத் தேர்வு செய்கிறார்கள். மக்கள் மத்தியில் லஞ்சம் வாங்குவதற்காக சாதாரணமாகவே காறி உமிழப்படும் அரசு ஊழியர்களில் எண்ணிக்கையில் அதிகமானவர்களைக் கொண்ட பெரிய சங்கமே சி.பி.எம். கட்சியின் சங்கம்தான். இப்படியே பட்டியல் போட்டுக் கொண்டு சென்றால் பக்கங்கள் பல கடந்து செல்லுமேயொழிய போலிகளின் இழிநிலைப் பட்டியல் முடிவுக்கு வராது போலும்.
பிழைப்புக்காக எதையும் செய்யும் இத்தகைய கயமைக் கூட்ட்த்தை இனியும் நம்பிக் கொண்டிருப்பதற்கு ஏதேனும் ஒரு முகாந்திரத்தை நேர்மையான சி.பி.எம். கட்சியின் அணிகள் நமக்குக் காட்ட வேண்டும். இத்தகைய இழிநிலையைக் கண்டு மனம் பொறுக்க மாட்டாமல் தவிக்கும் சி.பி.எம். கட்சியின் நேர்மையான தோழர்களை புரட்சிகர அமைப்புகளின் இணைந்து செயலாற்ற மேநாள் – 2010ல் அறைகூவி அழைக்கிறோம்!
புரட்சிகர வணக்கங்களுடன்,
ஏகலைவன்.
Wednesday, March 24, 2010
மறுகாலனிய எதிர்ப்புப் போரில் நமது வரலாற்றுக் கடமையை உணர்வோம்! வரலாற்று எதிரிகளை எதிர்கொள்வோம்!!
23/03/2010 - ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய தோழர்கள் தூக்கிலிடப்பட்ட 79வது நினைவு தினம். காந்தி தன்னுடைய போலியான அகிம்சை முகத்தை, ஏகாதிபத்திய - முதலாளித்துவ அடிவருடித்தனத்தைத் தக்க வைத்து கொள்வதற்காக, மாவீரன் பகத்சிங் உள்ளிட்ட தோழர்களை "இவர்கள் சாக விரும்புகிறார்கள்" என்று சொல்லி வஞ்சம் தீர்த்து கொண்ட நாள்.
நமது விடுதலைப் போராட்ட மரபில், கட்டபொம்மன், திப்பு, மருது சகோதரர்கள் என்று நீளும் வீரத்திற்கான நீண்ட பட்டியலில் பகத்சிங் வரை, தியாகத்தையும் வீரத்தையும் நினைவு கூறும் போது அந்தந்த காலகட்டத்தின் துரோகிகளையும் நினைவு கூற் வேண்டியது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. எட்டப்பனை இகழாமல் கட்டபொம்மனை மட்டும் தனியே புகழ முடியாது. ஏனெனில் துரோகத்தால் தான் தியாகத்தின் இன்றியமையாத தன்மை வெளிப்படுத்தப்படுகிறது. காந்தியின் துரோக அரசியலிலிருந்து புரட்சிகர தோழர்களின் போராட்டங்களை, தியாகங்களைத் தனியே பிரிக்கமுடியாது. மாவீரன் பகத்சிங்கின் வாரிசுகளாக களம் காணவிருக்கும் நமக்கு எதிராக எட்டப்பன் முதல் காந்தி வரையிலான துரோகிகளின் வாரிசுகளும் அணிவகுத்து நிற்கிறார்கள். குறிப்பாக காங்கிரசு - பா.ஜ.க - போலி கம்யூனிஸ்டுகள் துரோகத்தின் வாரிசுகளாக, நமக்குச் சவாலாக களத்தில் நிற்கின்றனர். தியாகத்தையும் துரோகத்தையும் "இரண்டும் ஒன்று தான்" என்பதாக உருவகப்படுத்துகிறார்கள். பகத்சிங்கும் காந்தியும் வெவ்வேறு வழியில் நம் தேச விடுதலைக்காக போராடியவர்கள் தான் என்று மோசடியான சித்திரத்தை உருவாக்கத் துடிக்கிறார்கள் போலி கம்யூனிஸ்டுகள்.
தியாகத்தையும் துரோகத்தையும் சமமாக மதிப்பிடுவதன் மூலம் உண்மையான தியாகிகளை கீழ்மைப்படுத்தியும் துரோகிகளை மேன்மைப்படுத்தியும் பேசுவதன் மூலம் வரலாற்றைத்
திருத்திவிடலாம் என்று துடிக்கிறார்கள். கம்யூனிசத் திருத்தல்வாதிகளான போலி கம்யூனிஸ்டுகள் தான் நம்முடைய வாலாற்றில் துரோகிகளின் பங்களிப்பையும் திருத்திவிடத் தவிக்கிறார்கள். இதன் மூலம் பெயரில் மட்டும் 'கம்யூனிசத்தை'க் கொண்டிருக்கும் அவர்கள் துரோகத்தின் வாரிசுகளாகத் தம்மை வெளிப்படையாக அடையாளப்படுத்து கொள்கிறார்கள்.
சேகுவேராவையும் பகத்சிங்கையும் காட்சிப்படுத்துவது இளைஞர்களை தக்கவைத்துக் கொள்வதற்காக மட்டும்தான். தக்கவைக்கப்பட்ட அணிகள் காந்தியின் வாரிசாக வார்த்தெடுக்கப்படுகிறார்கள். பகத்சிங்கின் மீது நேசம் கொண்டவர்கள், புரட்சியை நேசிப்பவர்கள் போலிக்கம்யூனிச அரசியலிலிருந்து விலகி புரட்சிகர அணிகளுடன் கரம் கோர்த்துக்கொள்ள வேண்டும். சமூக மாற்றத்தை படைப்பதாகச் சொல்லிக்கொண்டிருந்த போலிகள், இப்போதைய இழிந்த சமூக நிலைமைகளை மாற்ற வேண்டிய அவசியமே இல்லை, தேவை ஆட்சிமாற்றம் மட்டும் தான் என்று அதுதான் தமது இறுதி இலக்கு என்றும் சொல்லிவருகின்றனர்.
போலிச் சுதந்திரத்திற்கு முந்தைய காலனிய இந்தியாவில், தேவை சமூகப் பொருளாதார மாற்றம், அரசியல் அதிகாரம் மட்டும் போதாது என்றும் சொல்லி புரட்சிக்கான அவசியத்தை
வலியுறுத்துகிறார் பகத்சிங். ஆனால், காந்தி புரட்சியெல்லாம் தேவையில்லை ஆட்சி மாற்றம் நமது தேசத்தை மறுகாலனிய நாடாக்குவதற்குத்தான் வழி செய்திருக்கிறது. போலி சுதந்திரத்துக்கு முந்தைய காந்தியின் "ஆட்சி மாற்றம் போதும்" என்கிற கோரிக்கை இன்றைய மறுகாலனிய சூழலில் போலி கம்யூனிஸ்டுகளின் கோரிக்கையாக மாறியிருக்கிறாது. காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கு மாற்றாக தமது தலைமையிலான ஆட்சி மட்டும் தான் இலக்கு. தமது தலைமையில் ஆட்சியமைவதே "மக்கள் ஜனநாயகப் புரட்சி"யாகும் என்றும் பிதற்றிவருகிறார்கள்.
1920-ல் கம்யூனிசத்தின் பெயரால் கட்சி தொடங்கி காந்தி காங்கிரசுக்கு வால்பிடித்துக் கொண்டிருந்தனர் போலி கம்யூனிசத்தின் முன்னோடிகள். ஆனால், தோழர் பகத்சிங், தனது சொந்த புரிதலின் மூலம் மார்க்சிய - லெனினியத்தை உள்வாங்கி கொண்டு கம்யூனிசப் பண்புகளில் படிப்படியாக வளர்ந்து, சோஷலிசம் குறித்தும், சமூக முழுமைக்குமான விடுதலை குறித்தும், சமதர்மம் தழைக்க வேண்டும் என்றும் பேசுகிறார். அப்படிப்பட்ட சமூகத்தைப் படைக்க ரஷ்யாவைப் போன்ற புரட்சி ஒன்றை விடுதலை போராட்டத்தினுடாக நமது நாட்டிலும் நடத்த வேண்டும் என்றும் அழுத்தமாக வலியுறுத்திகிறார். 'புரட்சி ஓங்குக!' என்ற விண்ணதிரும் முழக்கத்தை விடுதலைப் போர்க்களத்தில் ஒலிக்கச் செய்த பெருமைக்குரியவராக பகத்சிங் திகழ்ந்தார்.
சீக்கிய மதப் பழமைவாத குடும்ப பின்னணியிலிருந்து வந்த பகத்சிங், ஒரு கம்யூனிச புரட்சியாளனாக வளர்ந்து கொண்டிருந்த அதே நாட்களில், நம்ம 'காம்ரேடுகள்' கம்யூனிசத்தின் பெயரால் கட்சி தொடங்கி காந்தி - காங்கிரசின் ஏகாதிபத்திய எடுபிடி அரசியலுக்கு துணைபோயினர். காந்தியின் பார்ப்பனிய பிற்போக்கு வாதங்களில் கிறங்கிப் போய்க்கிடந்தது அன்றைய போலிக்கம்யூனிசத்தலைமை. அதற்கு இப்போதைய போலிகம்யூனிஸ்டுகள் சொல்லும் அருமையான விளக்கத்தையும் கொஞ்சம் கேளுங்கள். பெரும்பான்மையான இந்திய மக்களால் நேசிக்கப்பட்ட மாபெரும் தலைவர் காந்தியை விமர்சித்தால், தமது கட்சி மக்களிடமிருந்து தனிமைபட்டுவிடும் என்று அஞ்சியே வேறு வழியின்றி காந்திக்கு வால்பிடித்தார்களாம். இது போன்ற மொன்னைத்தனமான காரணங்களைச் சிறிதும் கூசாமல் சொல்வதற்கு போலிகள் தயங்குவதேயில்லை.
'பெரும்பான்மையான இந்திய மக்களால் நேசிக்கப்பட்ட' காந்தியை, தீண்டாமைச் சவடால்களையும் போலியான மதச்சார்பின்மையையும் பேசித் திரிந்த காந்தியை, ஒரு வருணாசிரம வெறியன் தான் காந்தி என்று பண்பாட்டுத்தளத்தில் திரைகிழித்து அம்பலப்படுத்தினாரே அண்ணல் அம்பேத்கர், அவர் என்ன தனிமைப்பட்டுவிட்டாரா?
பண்பாட்டுத்தளத்தில் அம்பேத்கர் காந்தியை அம்பலப்படுத்தியதைப்போல, விடுதலை போராட்ட அரசியல் களத்தில் பகத்சிங் உள்ளிட்ட தோழர்கள் 'மகாத்மா'வின் போலி அகிம்சையை, ஏகாதிப்பத்திய எடுபிடித்தனத்தை, பிர்லாவின் மாளிகையில் படுத்துக்கொண்டு எளிமையை போதிப்பதை அடுக்கடுக்காக அம்பலப்படுத்தினார்கள். காந்தியை துணிந்து அம்பலப்படுத்தியதற்காக பகத்சிங் உள்ளிட்ட தோழர்கள் யாரும் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்படவில்லை. மாறாக காந்தியின் போலிபிம்பம் தான் மக்கள் மத்தியில் அம்பலமானது. அதனால் தான் காந்தி பகத்சிங் உள்ளிட்ட தோழர்களின் மரண தண்டனைக்கு துணை போனதோடு, "அவர்கள் சாக விரும்புகிறார்கள்" என்றும் சொன்னார்.
இவ்வாறாக புரட்சிகர தோழர்களால் அம்பலப்படுத்தப்பட்ட காந்திக்கு முன்வாயும் பின்வாயுமாக இருந்துகொண்டு சப்பைக்கட்டு கட்டிக்கொண்டிருந்தார்கள் போலிகள். இந்தியாவின் போலி கம்யூனிச வரலாறு தொடக்க காலம் முதல் இன்றைய மறுகாலனியச் சூழல் வரை காந்தி - காங்கிரசோடு கூட்டணி கட்டிக்கொண்டு தொடர்ந்து துரோகமிழைத்து வருகிறது. தேர்தலுக்குத் தேர்தல் நடைபெறும் அணிமாற்ற நாடகமெல்லாம், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் இல்லாமல் ஒரே அணியாக, துரோக அணியாக காங்கிரசோடு தம்மை போலிகள் நிலைப்படுத்தி வருகிறார்கள்.
துரோகி காந்தியையும் தியாகத்தோழன் பகத்சிங்கையும் தேச விடுதலைப் போராளிகள் என்று சமமாக மதிப்பிடும் போலிகள், அகிம்சையா? ஆயுதமா? என்ற ஒன்றில் மட்டும்தான் இவர்கள் வேறுபடுவதாகச் சித்தரிக்கிறார்கள். இதே முறையைத்தான் தமது போலி கம்யூனிச அரசியலுக்கும் புரட்சிகர அரசியலுக்கும் இடையிலுள்ள வேறுபாடாகவும் சித்தரிக்க முயலுகிறார்கள். இந்தியாவின் 'அக்மார்க்' இடதுசாரிகளான தமக்கும் மார்க்சிய - லெனினிய புரட்சியாளர்களுக்கும் இடையிலான முரண்பாடும் ஆயுதப்பாதையா? அமைதிப்பாதையா? என்பது மட்டும் தான் என்பதாகச் சொல்லி, போலி கம்யூனிஸ்டு கட்சியின் பெரும்பாலான அணிகள் நம்பவைக்கப்பட்டிருக்கின்றனர்.
ஏகாதிபத்திய எதிர்ப்பும் சமூக முழுமைக்கான விடுதலையையும் வலியுறுத்துகிற புரட்சிகர அரசியலுக்கும், வெறும் ஆட்சிமாற்றம் மட்டும் போதுமானது என்ற காந்திய - காங்கிரசு அரசியலுக்கும் இருந்த பாரதூரமான வேறுபாடுதான் இன்றைய புரட்சிகர சக்திகளுக்கும் போலிகளுக்குமான வேறுபாடாக இருக்கிறது. ஏகாதிபத்தியத்துடன் கரம் கோர்த்துக் கொண்டு செயல்படும் இந்திய ஆளும் வர்க்கத்தின் அங்கமான போலி கம்யூனிஸ்டு கட்சிக்கும், ஏகாதிபத்தியத்தை இந்த மண்ணை விட்டு துரத்தியடிக்கும் மறுகாலனிய எதிர்ப்புப் போராளிகளுக்கும் அடிப்படையிலேயே எதிரெதிரான கருத்துக்கள் இருப்பதை போலி கம்யூனிச அணிகளுக்கு நாம் புரியவைக்க வேண்டியிருக்கிறது.
சிபிஎம் கட்சியின் ஈ.எம்.எஸ். என்கிற சங்கரன் நம்பூதிரி முதற்கொண்டு பி. ராமமூர்த்தி வரையிலான தலைவர்களின் பார்ப்பனிய - காந்திய - காங்கிரசு பாணியில் தமது கட்சியை வழி நடத்தியிருப்பது தத்துவார்த்த ரீதியில் 'புதிய ஜனநாயகம்' இதழால் பலமுறை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இன்றைய மறுகாலனிய சூழலில், மறுகாலனிய திட்டங்களை நிறைவேற்றுவதில் ஏனைய ஓட்டுக்கட்சிகளுக்கு சற்றும் சளையாதவர்களாக களத்தில் நிற்கிறார்கள் போலிகள். ப. சிதம்பரம் ஏகாதிபத்திய நிறுவனங்கள் நமது நாட்டைக் கொள்ளையடிப்பதற்காக உள்நாட்டு மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ள "காட்டு வேட்டை" எனும் உள்நாட்டுப் போரில் போலி கம்யூனிஸ்டுகள் காங்கிரசு அரசுக்கும், ஏகாதிபத்திய முதலாளிகளுக்கும் தோளோடு தோள் நின்று, அந்த பன்னாட்டு பகாசூர நிறுவனங்கள் நமது நாட்டைக் கொள்ளையிட வழிவகை செய்துகொடுக்கிறார்கள்.
இன்றைய மறுகாலனியத்திற்கு எதிரான சமர்க் களத்தில் பகத்சிங்கின் உண்மையான அரசியல் வாரிசுகளான புரட்சிகர சக்திகள் இதர ஓட்டுப்பொறுக்கி கும்பலை நேரதிராகச் சந்திக்க வேண்டிய சூழலை வரலாற்று ரீதியான தொடர் நிகழ்வுகள் நமக்கு வழங்கியுள்ளன. எதிரிகளையும் துரோகிகளையும் சந்திக்கின்ற வாய்ப்பை நமக்கு வரலாறு வழங்கியிருக்கிறாது. பகத்சிங்கின் வாரிசுகளான நமக்கு வரலாற்றுக் கடமை குறித்து சொல்லியா கொடுக்க வேண்டும்!
தோழமையுடன்,
ஏகலைவன்.
Friday, March 12, 2010
சாருநிவேதிதா என்கிற கழிசடையை ‘பெரியாரிஸ்ட்’ என்கிற அடைமொழியிட்டு அறிமுகப்படுத்தும் ஜூனியர் விகடனுக்கு எனது கண்டனம்!
அன்பார்ந்த தோழர்களே!
சென்ற வாரம் ஒரு தோழருடன் பேசிக்கொண்டிருந்த போது, நித்தியானந்தம் குறித்தும் பேச்சு வந்த்து. அவரும் ஒரு முக்கியமான எழுத்தாளர் என்பதால், தவிர்க்கமுடியாமல் சாருநிவேதிதா பற்றியும் பேசவேண்டியதாகிப்போனது. “சாருவையெல்லாம் நாம முக்கியத்துவம் கொடுத்து விமர்சிக்கத் தேவையில்லை தோழர்; அவன் அதையே ஒரு சுயவிளம்பரமா மாத்திக்கிட்டு, தன்னைப் பிரபலப்படுத்திக்கொள்ற ஆளு தான், அவன்” என்று வெறுப்பில் சொன்னார். உண்மைதான்.
செருப்புகளோடு எங்கேயாவது பெண்கள் இவனைத் துரத்தினால்கூட, “மேடம்ஸ், எல்லோரும் ஆளுக்கு ரெண்டு செருப்புகள் கொண்டு என்னை ஆசைதீர அடியுங்கள், ஆனால் ஸ்பென்சருக்குள் வைத்து அடிப்பதைவிட அப்படிக் கொஞ்சம் வெளியே மவுண்ட் ரோட்டில் வைத்து அடித்தீர்களானால் உங்களுக்குப் புண்ணியமாய்ப் போகும், அப்படியே அடிக்கும்போது உமனைசர்-சாரு, ஸ்கவுண்ட்ரல்-சாரு, பொறுக்கி ராஸ்கல்-சாருநிவேதிதா என்கிற வார்த்தைகளால் திட்டிக்கொண்டே அடித்தீர்களானால், பார்வையாளர்களுக்கு நான் கொஞ்சம் அறிமுகம் ஆகிவிடுவேன். அதைவைத்து நான் எப்படியாவது கொஞ்சம் பேர் சம்பாதித்துக் கொள்வேன்!
பேரும் பப்ளிசிட்டியும்தான் டப்பு பண்ண ஒரே வழி! நான் ஒரு பொறுக்கி மேடம்! தயவுசெய்து என்னை எல்லோருக்கும் தெரியறதுபோல அடிங்க மேடம்ஸ்! நான் தனியாள் இல்லை என்னை நம்பி மனுஷ்யபத்தரன்னு ஒரு ஹேண்டிகேப்டு ஜீவன் இருக்கு; கொஞ்சம் இரக்கம் காட்டுங்க மேடம்ஸ் ....” என்கிற அளவிலானதுதான் அவன் தன்மீதான விமர்சன்ங்களுக்குக் கொடுக்கும் மரியாதை. அவனை ஊதாரி என்று அடையாளப்படுத்தினால், முந்திக்கொண்டு வந்து என்னைப்பற்றிய மற்ற எல்லா அயோக்கியத்தனங்களையும் தயவு செய்து சேத்துக்கோங்கண்ணா என்பான். அவனுடைய சொரணை மட்டம் என்பது இதுதான்.
(மேற்கண்ட ஸ்பென்ஸர் பெண்களின் செருப்படி நமது கற்பனைதான். இது உண்மையாவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் (அதாவது பொது இடங்களில் பெண்கள் கையால் செருப்படி வாங்குகின்ற வாய்ப்புகளை...) சாரு உருவாக்கிக்கொண்டேதான் இருக்கிறார்...) அவனை விமர்சிப்பதில் ஒரு பயனும் கிடையாது; இருப்பினும் அவனுக்கும் ’கொள்கை’கூஜா தூக்க சிலபேர் இருக்கிறார்களே; அவர்கள் மத்தியில் அம்பலப்படுத்த அவன் மீதான விமர்சனம் தேவைப்படுகிறது. இலக்கியவாதி என்கிற போர்வையில் உழன்று கொண்டிருக்கும் இதுபோன்ற பொறுக்கிகளை நம்மைத்தவிர யாரும் அடையாளம் காட்டமாட்டார்கள்.
இந்த சாருநிவேதிதாவைப் பற்றி படிக்கும்போதே நமக்கு எரிச்சல் ஏற்படுகிறது. உயிர்மை என்கிற கழிப்பறையில் அவன் இறக்கிவைக்கும் கழிவுகளைப் படிக்கும் போது நமக்கு ஆத்திரம்தான் மிஞ்சுகிறது. எதற்கெடுத்தாலும் “நான் அந்த பாரில் விஸ்கி அடித்துக்கொண்டிருந்தபோது......” என்றும் “கடற்கரையோரம் நண்பர்களுடன் சரக்குக்கு பெப்சி கலக்கிக்கொண்டிருந்தபோது.....” என்றும் “நான் ஒரு உமனைசர்...” (அதாவது பொம்பளை பொறுக்கி) என்றும் “பொண்ணுங்கன்னாலே நமக்கு சபலம் தட்ட ஆரம்பிச்சிடும்ல்ல... எப்புடி...” என்பதாகவும் தான் வெட்கமின்றி எழுதிவருகிறான். குறிப்பாக அவனது சுயபுராணம் குறித்து எழுத எங்காவது வாய்ப்பு கிடைத்துவிட்டால், கிட்டத்தட்ட அவனது கட்டுரை முழுக்கவுமே இப்படிப்பட்ட கழிசடைக் கதைகள் நிறைந்திருக்கும். அவன் எதை எழுதினாலும் மாபெரும் இலக்கியம் என்று சொல்வதற்கு சில கூஜாக்கள் இருப்பதுதான் இவையெல்லாவற்றிற்கும் காரணம்.
நக்கீரன், ஜூ.வி., ரிப்போர்ட்டர் உள்ளிட்ட பத்திரிக்கைகள் இன்னும் நித்தியானந்தனைக் காட்சிப்படுத்திக் கடைவிரித்து வருகிற விசயம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ”இதுவரை யாரும் பார்க்காத ‘அதிர்ச்சியூட்டும்’ புகைப்படங்கள்!” என்று சொல்லி கிளுகிளுப்புச் செய்திகளுடன் நக்கீரன் செய்திவெளியிட்டு வருகிறது. ஜெயேந்திரனாயிருந்தாலும் நித்தியானந்தனாயிருந்தாலும், இதில் கிடைக்கும் ஆபாச படங்களையும் வக்கிர செய்திகளையும் மேலும் பலமடங்கு மெருகேற்றி செய்திவெளியிட்டு காசுபார்ப்பதுதான் நக்கீரனின் ஒரே நோக்கம். அதற்குமேல் அவனுக்கு ஒரு வெங்காயமும் கிடையாது.
ஆனா, மாட்டிக்கிட்ட சாமியாரு நம்மவாளா இல்ல அசலாரா என்று பதைபதைப்புடன் ஆராய்ந்து, நம்மவாளாக இருந்தால் மூடி மறைத்துவிடுவது அல்லது வேற்று சாதிக்கார சாமியாராக இருந்தால் சும்மா புகுந்து விளாசுவது என்கிற கொள்கைமுடிவோடு பார்ப்பன பத்திரிக்கைகள் நடந்து கொள்ளுகின்ற அயோக்கியத்தனங்கள் நாம் அறிந்ததுதான். மாட்டிக்கிட்ட சாமி எந்த சாதிக்காரனாயிருந்தாலும், மக்கள் முன் அம்பலப்படுவது இந்துமதமும் ஆன்மீகமும்தான் என்பது வேறுவிசயம். இந்துமத ஆன்மீகம் அம்மனமானால், பார்ப்பன சமூகம்தான் கோவனமின்றி வீதியில் அலைய நேரிடும். நித்தியானந்தன் ஒரு முதலியார் சமூகத்துக்காரன் அதனால்தான் பார்ப்பன பத்திரிக்கைகள் உவப்புடன் செய்தி வெளியிடுகின்றன, என்பது உண்மைதான். ஆனால், நித்தியானந்தன் என்கிற ஒரு ஆபாசப் பொறுக்கி சாமியாரின் சமூக அடையாளம் என்பது அவன் சாதி சார்ந்ததாக இல்லாமல், இந்துமதம் சார்ந்ததாகத்தான் வெளிப்பட்டு சந்தி சிரிக்கிறது. ஆனால், நித்தியானந்தனுக்கும் இந்துமதத்துக்கும் ஏதோ காததூரம் இருப்பதாகத் திரித்து, மடைமாற்றி செய்தி வெளியிடுவதை மட்டுமே பிரதான நோக்கமாகக் கொண்டு மட்டும் செயல்படுகின்றன பார்ப்பன ஊடகங்கள். நித்தியானந்தனுக்கும் இந்துமதத்துக்கும் தொடர்பில்லை என்பதாகச் சித்தரிப்பதற்குத்தான் இந்துமக்கள் கட்சி, இந்துமுன்னணி உள்ளிட்ட இந்துப்பயங்கரவாத அமைப்புகள் போராட்ட நாடகங்கள் நடத்தினார்கள் என்பதும் உலகறிந்ததுதான்.
இன்றைய நித்தியானந்தனைப் போல நேற்றைய ஜெயேந்திரன் சிக்கிக்கிடந்தபோது, அதுகுறித்து நேர்மையாகச் செய்திவெளியிடாத, அதேநேரத்தில் ஜெயேந்திரன் நிரபராதி என்றும் திரித்து செய்தி வெளியிட்ட பார்ப்பன பத்திரிக்கைகள் இன்னும்கூட சந்தையில் நீடித்திருப்பது தமிழர்களின் உணர்வுமட்டத்தினால் நிகழ்ந்த விபத்து. இப்படியிருக்க இந்த வார ஜூ.வி.யில் ‘முற்போக்கு எண்ணம் கொண்ட பெரியாரிஸ்ட்’ என்கிற அடைமொழியை ஜூவியிடம் அன்பளிப்பாகப் பெற்றுக் கொண்ட சாரு நிவேதிதாவின் நேர்கானல் வந்திருக்கிறது.
”ஆதிசங்கர்ர் மாதிரி அபூர்வ வித்தைகளைக் கொண்டவர் நித்யானந்தர்னு எனக்கு வெளங்கிடிச்சு. அதுக்கப்புறம் முதல் வேலையா அவரைப் போய்ப் பார்த்தேன். அவர்கிட்ட பெரிய மேஜிக் பவர் இருக்குறதை அப்பவே உணர்ந்தேன்.” என்று சாருநிவேதிதா சொன்ன பதிலை ஒட்டிய அடுத்த கேள்வியிலேயே, அவனை ஒரு பெரியாரிஸ்டான நீங்கள் எப்படி நம்பினீர்கள்? என்று ஜூ.வி. கேட்கிறான். சாருவின் மனைவிக்கு இருந்த கால்வலியை நித்யானந்தர் கையால் தொட்டவுடன் வியாதி மாயமாகிவிட்ட்து; அதனால் அப்படியே சுவாமிஜியை நம்பிவிட்டாராம். “செக்ஸுக்கும் ஆண்மீகத்திற்கும் சம்பந்தம் இருக்குன்னு பகிரங்கமா சொல்லிட்டு இவனுங்க ஆசிரம்ம் தொடங்கினா யாரும் வெட்டவாபோறாங்க?” என்கிற பொன்மொழிகளெல்லாம் ஜூ.வி.க்கு சாரு அருளியவை. தான் ஒரு உமனைசர் என்று பகிரங்கமாகவே சொல்லியிருப்பதாகவும் அப்பேட்டியில் தொடர்ந்து பெருமையடித்துக் கொண்டிருக்கிறார் சாருநிவேதிதா.
இப்போது விஷயம் என்னவென்றால், சாரு என்றால் யாரு என்று தெரியும். குடிகாரன், ஊதாரி, பொம்பளை பொறுக்கி என்று தன்னைப்பற்றி அவர் பலமுறை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளார். அவருக்கு சூடு, சொரனை, வெட்கம், மானம் போன்ற, மனிதர்களுக்கெல்லாம் பொதுவாக இருக்கும் அடிப்படையான உணர்ச்சிகள் எதுவும் இல்லாத, வெறும் பாலியல் உணர்ச்சி ஒன்றை மட்டும் கொண்டிருக்கும் ஒரு நவநாகரீக விலங்கு தான் சாரு என்பது அவர் தன்னைப்பற்றி ‘பெருமைபொங்க’ வெளிப்படுத்திக்கொண்ட செய்திகளிலிருந்து நாம் புரிந்துகொள்ள முடிகிறது. இந்த அளவிற்கு ஒழுக்கம் கெட்ட ஒரு கேவலமான கழிசடையை, தன்னை ஆதிசங்கரனின் பக்தன் என்றும் சொல்லிக்கொள்பவனை, முற்போக்காளன் என்றும் பெரியாரிஸ்டு என்றும் உருவகப்படுத்தி செய்தி வெளியிட்டிருக்கும் ஜூ.வி.யின் பூணூல் கொழுப்பை எதைக்கொண்டு அடிப்பது?
ஊதாரி, பொம்பளைப் பொறுக்கி போன்ற அடைமொழிகளைச் சூடிக்கொண்ட சாரு நிவேதிதா தன்னை ஒரு ஆதிசங்கரனிஸ்ட் என்று அறிவித்துக் கொண்டிருப்பதுதான் சரியானபொருத்தம். ஆதிசங்கரனது ‘தத்துவ’ங்களுக்குள் விழுந்து கரைகண்டு நுரைதள்ளிய ‘சுவாமி’,‘பெரியவா’, ஜெயேந்திரனின் கதைதான் உலகறிந்த இரகசியமாயிற்றே!
கொலை
கொள்ளை
கற்பழிப்பு
கஞ்சா மற்றும் எல்லா போதை வஸ்துக்கள்
மற்றும்
ஜெயேந்திரன் / விஜயேந்திரன் = ”ஆதிசங்கரனிசம்!”
ஊதாரித்தனம்
நிரந்தர போதை
காற்றிலாடும் கலர் துணியைக்கூடத் துரத்தும்
பொம்பளைப் பொறுக்கித்தனம்
மற்றும்
’அண்ணன்’ சாருநிவேதிதா = “ஆதிசங்கரனிசம்!”
ஆம்....
இதுதான் ஆதிசங்கரனிசம்!
இதுதான் ஆன்மீகம்!
இதுதான் இந்துமதம்!
இதுமட்டும்தான் இந்துமதம்!
இப்படியிருக்க, ஆதிசங்கரனுக்கும் நித்தியானந்தனுக்கும் தான் அடிமையாயிருக்கிற உண்மையை புளகாங்கிதப்பெருமையோடு பதிவு செய்திருக்கும் சாருவை; அந்த நேர்காணலில் எந்த இடத்திலும் பெரியாருக்கு ஆதரவாகவோ அல்லது தன்னை ஒரு பெரியாரிஸ்டு என்றோ சொல்லிக்கொள்ளாத சாருவை; பொம்பளைப் பொறுக்கி, குடிகார ஊதாரி என்று தன்னைத்தானே விளித்துக்கொள்கிற சாருவை யாருடன் அல்லது எந்த சித்தாந்தத்துடன் தொடர்புபடுத்தியிருக்க வேண்டும்? பார்ப்பன இந்துமத பொறுக்கிக் கலாச்சாரத்தோடு அச்சு அசலாகப் பொருந்திப் போகிற அந்தக் கழிசடையை, பெரியாரியத்தோடு இழுத்து வந்து கோர்ப்பது, ’சிண்டு’முடிவதில் பல்லாயிரமாண்டு அனுபவம் வாய்ந்த பரம்பரையில் வந்த ஜுவி, தமது தலைமுறைகளின் அனுபவத்தினூடாக மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் இடையே போட்டிருக்கும் சிண்டுதான் இது.
பார்ப்பன ஜுவி, சாருவை பெரியாரிஸ்ட் என்று மேன்மைபடுத்த முயற்சிப்பதன் மூலம் பகுத்தறிவாளர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள் எல்லோரையும் இழிவுபடுத்திவிடலாம் என்பது பாப்பார ஊடகங்களின் நுட்பமான தொடர்ச்சியான அனுகுமுறையாகும். ஜெயேந்திரனின் வழிவந்த நித்தியானந்தனை, ஜெயேந்திரனோடு பொருத்திப் பார்க்காமல் பெரியாருடன் ஒப்புமைப்படுத்தி இணையங்களில் எழுதிவருகிறார்கள், டோண்டூ ராகவன் உள்ளிட்ட பாப்பார பயங்கரவாதிகள். இந்த பார்ப்பனக் குசும்பு, நம்மைக்காட்டிலும் ஒவ்வொரு இடத்திலும் பெரியாரையும் சிறுமைப்படுத்த முயல்வதையும் நாம் உணர்ந்து மிகக்கடுமையாக எதிர்வினையாற்ற வேண்டும்.
இதனை வாசிக்கின்ற தோழர்கள் தத்தமது தளங்களது இதுகுறித்து ஒரு பதிவையாவது பதிய வேண்டும். உழைக்கும் மக்களின் வாழ்க்கையைப் பறிக்கிற மறுகாலணியாக்கத் திட்டங்களை வானுயரப் புகழ்ந்து எழுதுவதும், அம்மக்களுக்கு ஏற்படும் துன்ப-துயரங்களை சிறிதும் இரக்கமின்றி மொத்தமாக இருட்டடிப்பு செய்வதில் முன்நிற்கும் இந்தியாவின் அனைத்து பார்ப்பன ஊடகங்களையும் தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டே இருக்கவேண்டும். இதே பாப்பார ஊடகங்கள்தான் ஈழ மக்களின் போராட்டத்தை இழிவுபடுத்தி செய்தி வெளியிட்டது என்பதை நாம் மறக்கமுடியுமா?
இப்படிப்பட்ட சமூகக் கேடுகளை அனைத்துத் துறைகளிலிருந்தும் நடத்திக்கொண்டு பல்வேறு வேடங்களோடு அலைந்து கொண்டிருக்கும் சமூகவிரோதிகளை, இந்துமதவெறிக் காலிகளை களத்தில் வீழ்த்தியழிக்கச் சபதமேற்போம்!
தோழமையுடன்,
ஏகலைவன்
Saturday, March 6, 2010
உ.ரா.வரதராசனின் மரணம்: சி.பி.எம்.மின் கோஷ்டி பூசல்களுக்கும், பதவிச் சண்டைகளுக்கும் சமர்ப்பனம்!! - பாகம் இரண்டு.
சி.பி.எம். என்கிற போலி மார்க்சிஸ்ட் கட்சியின் மேல்நிலைத் தலைவர்களில் ஒருவரான உ.ரா.வரதராசனின் மரணம் குறித்த செய்திகள் பலவற்றை நாம் கடந்த சில நாட்களாக அறிந்தும் பேசியும் வருகிறோம். அவரது மரணம் கொலையா தற்கொலையா என்கிற ஐயப்பாடு அவருக்கு மிகவும் நெருக்கமான தோழர்கள் மற்றும் உ.ரா.வ.வின் சகோதரி மூலமாகவும் சில வார ஏடுகளில் முன்வைக்கப்பட்ட்து. அவரது மரணத்திற்குக் காரணமாகச் சொல்லப்படும் சி.பி.எம். கட்சியோ அல்லது அவரது மனைவியோ, அவரது மரணம் குறித்து விசாரணை எதுவும் இதுவரை கோரவில்லை. குறைந்தபட்சம் அவரத் மரணத்திற்கு தாங்கள் காரணமில்லை என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்துவதற்காகவேனும் அவர்கள் நியாயமான விசாரணை கோரியிருக்கலாம், அத்தகைய நேர்மையெல்லாம் பிழைப்புக்காக கட்சி நட்த்தும் அந்த்த் தலைமையிடம் இருக்க வாய்ப்பில்லை போலும்!
மாறாக அவரது மரணம் தற்கொலைதான் என்பதையும் உறுதியாக வெளிப்படுத்தியே வருகிறார்கள். ”வேண்டுமானால் அது தற்கொலைதான் என்று கற்பூரம் அனைத்து சத்தியம் செய்யட்டுமா...” என்று கேட்காத குறைதான். அட போலீசு இதுகுறித்து விசாரிப்பதில் நம்ம காம்ரேடுகளுக்கு என்னய்யா நட்டம் என்று சாதாரண ஆள் கூட கேட்பானா மாட்டானா?! அட, அவரது மரணம் தற்கொலையா கொலையா என்பது தெரிந்தால்தான் உடலை அடக்கம் செய்ய விடுவோம் என்று அன்றைக்கே (இன்றைக்கு வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்ளும் அவரது தோழர்கள்...) கோரியிருந்தால், எண்ணி ஒருமணி நேரத்தில் கொலையாளி அனைவருக்கும் முன்பாக வந்திருப்பான். என்ன செய்வது, ஏரியில் கண்டெடுக்கப்பட்ட உடல் அவருடையதுதானா என்பதுகுறித்து உறுதி செய்துகொள்வதற்காக டி.என்.ஏ. டெஸ்ட் வேண்டும் என்று ‘வெவரமாக’ கேட்கமுடிந்த சி.பி.எம். கட்சியினருக்கு, அவருடைய மரணம் கொலையா, தற்கொலையா என்பது குறித்து அறிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்ட்து ஏனோ?! இது ஏதோ தற்செயலாக நடந்த்து அல்ல என்பதும் அவரது மரணம் இன்னும் பல்வேறு வண்டவாளங்களை வெளிக்கொண்டுவரவிருக்கிறது என்பதும் இன்று சி.பி.எம். கட்சியினராலேயே உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
பல பெண்களுடன் உடல்ரீதியாகத் தொடர்பு வைத்திருக்கும் பொறுக்கிகளாயிருந்தாலும் (ஆதாரம் உ.ரா.வ.வின் கடிதம்), கேட்கக் கூசுகின்ற அனைத்து வகை மோசடியையும் செய்பவனாயிருந்தாலும் நடவடிக்கை எடுத்திராத அக்கட்சி, இந்த வரதராசனுக்கு எதிராக கடமையாற்றியிருக்கிறது என்றால், இதன் பின்னணி குறித்து கேள்வியெழுவது இயல்புதானே? மாநிலச் செயலாளருக்கான போட்டிதான் அந்த கடமையின் பின்னணியாக இருந்திருக்கிறது. மாநிலச் செயலாளர் பதவியைக் குறிவைத்துவிட்ட உ.ரா.வ.வை அமைப்பு ரீதியாக ஓரம்கட்டாமல் ஒன்றும் செய்ய முடியாது என்று கருதியதால்தான், அவருக்கு எதிராக ‘ஒழுங்கு நடவடிக்கை’ எடுக்கப்பட்டு அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்ட பிறகு போட்டியற்ற சூழலை உருவாக்கிக்கொண்டு இங்கு புதிய மாநிலச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார், போலும்!
வழக்கமாக, காங்கிரசு கட்சியின் கோஷ்டிகள் வெறும் வேஷ்டிகளைக் கிழித்துக் கொள்வதுடன் தங்களது பதவிச் சண்டையை முடித்துக் கொள்கிறார்கள். ஆனால் இதுபோல ஈரக்குலையறுக்கும் செயலை கோஷ்டி மோதலுக்கு பெயர்போன காங்கிரசார்கூட கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள். இது ஜெயேந்திரன் பாணியிலான செயல்பாடு. இதுதான் பார்ப்பனிய பாணியிலான ‘ஒழுங்கு நடவடிக்கை’யாகும். உ.ரா.வ.வின் மனைவியைச் சமாதானப்படுத்துவதற்காக அக்கட்சி அமைத்த கமிட்டி முறையாக நடந்து கொள்ளாத்துதான் தன் மீதான ஒருதலைப் பட்சமான நடவடிக்கைக்குக் காரணம் என்று அவர் தனது கடித்த்தில் குறிப்பிட்டுள்ளது, ஏற்புடையதாக இல்லை.
இச்சம்பவத்தின் பின்னணியில் நேற்றையதினம் (04.03.2010 – வியாழக்கிழமை) அவருடைய போஸ்ட்மார்ட்டம் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் அவரது மரணம் கொலையாக இருப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது என்றும் அவரது கழுத்து நெறிக்கப்பட்ட அடையாளமும் அதன் மூலம் மூச்சு தினறல் ஏற்பட்டு அவர் மரணமடைந்து விட்ட்தாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த்தாக தகவல். இந்த அறிக்கையினை மையப்படுத்தி மக்கள் தொலைக்காட்சியின் செய்தியில், உ.ரா.வரதராசன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், மரணத்திற்கு முன் உ.ரா.வ. சி.பி.எம். கட்சியின் கோஷ்டி சண்டையில் பழிவாங்கப்பட்ட வித்த்தையும் ஒப்பிட்டு செய்தி வெளியிட்டிருக்கிறது. அவ்வளவுதான் சி.பி.எம். கட்சியின் குண்டர்கள் சிலர், அக்கட்சியின் மாவட்ட செயலாளர் டி.கே.சண்முகம் தலைமையில், இன்று (05.03.2010) காலை மக்கள் தொலைக்காட்சி அலுவலகத்தையும் அதன் ஊழியர்களின் மீதும், மேற்குவங்கத்தை (சிங்கூர், ந்ந்திகிராம், லால்கார்) நினைவூட்டும் வகையிலான ஒரு கொடூர தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். மேலும் போஸ்ட் மார்ட்டம் அறிக்கையும் மக்கள் தொலைக்காட்சியும் சுட்டிக்காட்டியுள்ள சந்தேகங்களை உறுதிப்படுத்தும் வகையில், “நாங்கள்தான் கொண்றோம் இப்ப என்னான்ற?!...” என்பதுபோன்ற செய்தியை சூசகமாக இந்த கொடூரத் தாக்குதலின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்கள், நம்ம காம்ரேடுகள்!
இவ்விடயத்தைக் கேள்விபட்டபிறகு நேர்மையான தோழர்கள் எவரேனும் இன்னும் சி.பி.எம். கட்சியில் நீடித்திருப்பார்களேயானால், அவர்களிடம் கேட்பதற்கு சில கேள்விகள் எனக்கு இருக்கிறது.
சி.பி.எம். கட்சியின் மாநிலத் தலைமை யோக்கியமானதாகவோ குற்றமற்றதாகவோ இருந்திருந்தால், உ.ரா.வரதராசனின் மரணம் குறித்த போஸ்ட்மார்ட்டம் அறிக்கை வெளியான பிறகாவது, அது எழுப்பியுள்ள சந்தேகங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி உண்மையை அறிவிக்க வேண்டும் என்று கேட்டிருக்க வேண்டுமா இல்லையா? மரணத்திற்கு முன் கடைசியாக உ.ரா.வ. தனது கட்சித் தலைமைக்கு எழுதிய கடித்த்தில், அவர் குற்றம் சாட்டியுள்ள உ.வாசுகி, பி.சம்பத், ஜான்சிராணி போன்ற அக்கட்சியின் முன்னணித் தலைவர்கள் (அதாவது உ.ரா.வ.வைப் பொறுத்தவரை, அவரது துரோகிகள்...) புடைசூழ, அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன், ”உ.ரா.வ. தற்கொலை செய்து கொண்ட்தற்கான ஆதாரமாக அவர் எழுதிய கடிதங்கள் இருக்கும் போது, அவரது மரணம் குறித்து விசாரிக்க வேண்டிய அவசியமே இல்லை...” என்று இன்று மாலை (05.03.2010) உறுதியாக அறிவிக்கிறார்.
நீச்சல் தெரிந்த தங்களுடைய தோழர், ஒரு சிறு ஏரி நீரில் எவ்வாறு விழுந்து தற்கொலை செய்து கொண்டிருக்க முடியும் என்கிற கேள்வியோ, ஏரி நீரில் மீட்கப்பட்ட பிணம் உள்ளாடையுடன் எடுக்கப்பட்டிருப்பது குறித்த (தற்கொலை செய்துகொள்பவர் இவ்வளவு தூரம் வெறும் உள்ளாடைகளுடன் வந்தா தற்கொலை செய்துகொண்டிருப்பார்...) கேள்வியோ, அந்த செய்தியைக் கேள்விப்பட்ட யாரோ ஒருவருக்குக் கூட ஏற்பட வாய்ப்பிருக்கும் போது, அவரது சக தோழர்களான சி.பி.எம். தலைமைக்கு மட்டும் (போஸ்ட்மார்ட்டம் அறிக்கை வெளியான இந்த தருணம் உள்பட...) இதுவரை தோன்றாத்தன் காரணம்தான் என்ன? இதுகுறித்து அக்கட்சியின் நேர்மையான தோழர்கள் யாராவது இருந்தால் யோசித்து விடைதேட வேண்டும்.
மாறாக தனது கட்சியைச் சார்ந்த தோழர் ஒருவரின் மரணம் குறித்து சில கேள்விகளை எழுப்பிய ஒரு ஊடகத்தின் மீது கொலைவெறித்தாக்குதல் நட்த்துவதென்பது நேர்மையான செயலா? பொதுவாக இந்த ஊடகங்களை ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றாக நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. மக்கள் தொலைக்காட்சி தாக்கப்பட்ட்தை நான் இப்பதிவினூடாக கண்டிக்க முயலவில்லை. மக்களின் வாழ்வுரிமையை பாதிக்கும் எந்த விசயங்களையும் வெளியிடாமல் மோசடியாக இருட்ட்டிப்பு செய்வதோடு, அரச பயங்கரவாத்த்துக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கும் ஊடகத்துறை பொறுக்கிகள் தாக்கப்படுவது குறித்து எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
ஆனால், இந்த தாக்குதல்கள், ‘மார்க்சிஸ்ட்’ கட்சியின் பதவிச் சண்டையினால் நடைபெற்றிருப்பதும், அவர்களுக்குள் வேர்விட்டிருக்கும் பதவி வெறியானது கொலைவெறியாக ‘மேல்நிலையாக்கம்’ அடைந்திருப்பதுவும், பின்னணியாக அமைந்திருப்பதுதான் இதில் மையப்படுத்தி விவாதிக்க வேண்டிய, அம்பலப்படுத்த வேண்டிய விசயமாக நான் கருதுகிறேன். அதேவேளையில், ஊடக ஜனநாயகத்தையும், ’பத்திரிக்கா தர்மத்தை’யும் பாதுகாக்கப் பிறந்தவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் போலிமார்க்சிஸ்டுகள், தங்களை பாதிக்கும் விசயம் எவ்வளவு நேர்மையான, உண்மையான விசயமாக இருந்தாலும் இப்படித்தான் நடந்து கொள்கிறார்கள். இதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. அதில் முத்தாய்ப்பாக இருப்பதுதான் நமக்கருகாமையில் நடந்திருக்கும் இக்கொலைவெறி தாக்குதல்.
ஈழப் போராட்ட்த்தைக் கொச்சைப்படுத்தி, பார்ப்பனத் திமிருடன் கட்டுரை எழுதிய மாலினி மாமியையும் அதனை வெளியிட்ட இந்து பத்திரிக்கையையும் கண்டித்து கோவையிலும் ஈரோட்டிலும் அப்பத்திரிக்கையினை எரித்து, போராட்டம் நடத்திய பெரியார் திராவிடர் கழகத் தோழர்களை வன்மையாகக் கண்டிப்பதாக இரண்டு நாட்கள் தமது தீக்கதிர் என்ற பத்திரிக்கையில் தலையங்கம் எழுதிய சி.பி.எம். கட்சி; இதனால் பத்திரிக்கை சுதந்திரமே பாதிக்கப்பட்டுவிட்ட்தாக்க் கூப்பாடு போட்ட இந்த போலிக்கும்பல்; தமது சொந்த தோழரின் மரணம் குறித்து எழுப்ப்ப்படும் நியாயமான கேள்விகளுக்கு எதிராகப் பொங்கி எழுகிறார்கள் என்றால், இவர்களது கபடவேட்த்தைப் புரிந்து கொள்வதற்கு இது ஒரு சான்று.
ஏன், சுப்பிரமணிய சாமி என்கிற அமெரிக்க மாமா, சென்னை உயர்நீதிமன்றத்தில் முட்டையாலடிக்கப்பட்டபோது ஏனைய ஓட்டுப் பொறுக்கிகள் எல்லோரையும் முந்திக்கொண்டு, அவசர அவசரமாக மாநிலக் குழுவைக் கூட்டி, நமது வழக்கறிஞர்களுக்கு எதிராக, “தனிமனித சுதந்திரம் பாதிக்கப்பட்டுவிட்ட்து...” என்று சிறிதும் கூசாமல் அறிக்கை விட்ட இந்த சி.பி.எம். தலைமை, உ.ரா.வ. குறித்து உண்மைச் செய்தியை வெளியிட்ட ஊடகத்தை பாய்ந்து பிடுங்குகிறது என்றால், இதன் பின்னணியில் உள்ள விசயங்கள் வேறு என்னவாக இருக்கமுடியும். ஆம், அது கொலைதான் என்பதுவும் அந்த கொலைக்கு தாங்கள்தான் காரணம் என்பதையும் இந்த தாக்குதலின் மூலாமாகவும் நிரூபித்திருக்கிறார்கள், போலிகள்.
ரெண்டு மூனு எம்.பி. சீட்டுக்காக ஜெயல்லிதாவிடமும் கருணாநிதியிடமும் மன்றாடிக்கொண்டிருக்கும் பரிதாபமான நிலையில் இருக்கும் தமிழகத்திலேயே இவர்களது நடவடிக்கைகள் இப்படியிருக்கிறதென்றால், முப்பது வருடங்களுக்கும் மேலாக ஆட்சி செய்துவரும் மேற்குவங்கத்தில் இவர்களது நடவடிக்கை எப்படியிருந்திருக்கும், கொஞ்சம் யூகித்துத்தான் பாருங்களேன்!, டாட்டாவுக்கு ஆதரவாக சிங்கூரிலும், சலீம் என்ற பன்னாட்டு முதலாளிகளுக்கு ஆதரவாக ந்ந்திகிராமத்திலும் இன்னும் லால்கார் உள்ளிட்ட மே.வங்கத்தின் பல பகுதிகளிலும் சாதாரண, எளிய, உழைக்கும் மக்களின் மீது கொடூரமான ஆயுதங்களுடன் கொலைவெறித்தாக்குதல் நடத்திவரும் இந்த போலி மார்க்சிஸ்டுகள்; இவர்களது செயலை அம்பலப்படுத்தி கண்டித்த மேதா பட்கர் போன்றவர்களின் மீது, கொலைவெறித்தாக்குதல் நடத்தினார்கள். மேதா பட்கர் சென்ற வாகனம் மே.வங்கத்து சிபிஎம் குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்டது. இதுகுறித்து அக்கட்சி நண்பர்களிடம் கேட்டபோது தமது கட்சி எந்த நிலையிலும் தவறு செய்திருக்காது, என்று ஆழமாக நம்புவதாகத்தான் தெரிவித்தார்களேயொழிய, நியாயமான பரிசீலனைக்கு அவர்கள் வரவில்லை. உ.ரா.வ. விசயத்திலும், பெரும்பாலான சி.பி.எம். அணிகளுடைய மவுனம் கூட அவர்களது அடிமை மனோபாவத்தையும் அப்பாவித்தனத்தையும்தான் வெளிப்படுத்துவதாக இருக்கிறது.
காஞ்சிக்கிரிமினல் ஜெயேந்திரன், சங்கரராம் அய்யரைக் கொலை செய்துவிட்டு மாட்டிக்கொண்டபோது, ஜெயேந்திரன் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்த பலர் வெட்கித் தலைகுணிந்தனர். ஆனால், பெரும்பாலான பார்ப்பனர்கள் ஜெயேந்திரனுக்கு ஆதரவாகத்தான் தம்மைக் காட்டிக் கொண்டார்களே தவிர, அதே பார்ப்பன சமூமத்தைச் சார்ந்த, கொல்லப்பட்ட சங்கர்ராமனுக்கு ஆதரவாக இல்லை. இதற்கான நோக்கத்தை நாம் எளிதில் புரிந்து கொள்ளமுடியும். ஆனால், சி.பி.எம். கட்சியின் தலைவர்களில் ஒருவரான உ.ரா.வரதராசனின் மரணம் குறித்து கவலைப்படாத அக்கட்சியினர் பலர், கொலையானாலும் தற்கொலையானாலும் அதனுடன் நேரடியான தொடர்புடைய அக்கட்சியின் தலைமை குற்றமற்றது என்று அட்டியின்றி ஏற்றுக் கொள்கின்றனர் என்றால் இதனை நாம் எப்படிப் புரிந்து கொள்வது.
உ.ரா.வரதராசன், சி.பி.எம். கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத்துக்கு கடைசியாக எழுதிய கடிதத்தை கிட்டதட்ட எல்லா வாரப்பத்திரிக்கைகளும் வெளியிட்டிருக்கின்றன. அதில், “ஒரு பெண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன் என்பதுதான் எனக்கெதிரான குற்றச்சாட்டு. ஆனால், பல பெண்களுடன் உடல்ரீதியாக தொடர்பு வைத்துக் கொண்ட மாநிலத் தலைவர்களுக்கும், மத்தியக் குழு உறுப்பினர்களுக்கும் எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத கட்சி, என்னை மட்டும் தண்டித்திருப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த கேள்விக்கு அக்கட்சியின் தலைமை வெட்கித் தலைகுணிந்த்தாகவோ பதில் சொன்னதாகவோ தகவலில்லை.
இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால், அக்கட்சியின் அணிகளால் பெரிதும் மதிக்கப்படுகின்ற மாநில அளவிலான தலைவர்களில் சிலர் பெண்பித்தர்களாகவும் பொறுக்கிகளாகவும் நடந்து கொண்டிருப்பது மீண்டுமொருமுறை அக்கட்சியின் உயர்மட்ட தலைவர்களில் ஒருவரின் மூலமாகவே அம்பலப்படுத்தப்பட்டிருப்பதைத்தான். கட்சியின் தலைமை இப்படி அழுகி நாறிக்கொண்டிருக்கும் போது கீழ்மட்ட அணிகளில் நேர்மையானவர்களின் நிலைமை பரிதாபகரமானது. இத்தகைய அயோக்கியர்களால் நிர்வகிக்கப்படும், சீரழிந்த தலைமைதான் கட்சிக்குள் ஒழுங்கு நடவடிக்கையையும், நெறிப்படுத்தும் இயக்கத்தையும் நட்த்த்தவிருப்பதாக்க் கதையளக்கிறார், த.மு.எ.க.ச. தமிழ்ச்செலவன். யார், யாரை நெறிப்படுத்துவது?!
கேவலம் மாநிலச் செயலாளர் பதவிக்காக ஏற்பட்ட கோஷ்டி சண்டையின் பின்புலத்தில் உ.ரா.வரதராசன் ’நெறிப்படுத்த’ப்பட்ட்தைப் போல, (அதே நேரத்தில் அப்பதவிக்கு போட்டியிடாத ஏனைய தலைவர்களின் அயோக்கியத்தன்ங்களைப் பொறுத்துக்கொண்ட்தையும் போல...) ஆங்காங்கு மாவட்ட செயலாளர் பதவிக்கும், இன்னும் வட்ட, ஒன்றிய அளவிலான பதவிகளுக்குமான கோஷ்டிகள் இல்லாமலா இருப்பார்கள்? அத்தகைய கோஷ்டிகளைக் கொண்டுதான் தமது கட்சி நெறிப்படுத்தப்ப்ட விருப்பதாக ச.தமிழ்ச்செல்வன் வெட்கமின்றி சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட ’ஒழுங்கு நடவடிக்கை’யின் மூலம்தான் ஏராளமான நேர்மையான அணிகள் ஏற்கெனவே வெளியேற்றப்பட்டுவிட்டனர். எஞ்சியிருப்பவர்கள் கட்சியின் மானம் இப்படி காற்றில் பறப்பது குறித்த கையறுநிலையில், தருணம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் பதவி நாற்காலியை மையப்படுத்தி வெளிப்படையாக மோதிக்கொள்ளும் இந்த எச்சில் இலை நாய்களின் ஓலத்தைவிட, பெரும்பாலான உழைக்கும் மக்களின் அன்றாட அவலக்குரல்தான் நம்மை பிடித்தாட்டுகிறது. அவர்களை இந்த மோசடியான சமூக கட்டமைப்புக்குள்ளிருந்து மீட்டெடுப்பதற்கான போராட்டம்தான் நமக்கு முன் நிற்கும் முக்கியக் கடமையாக இருக்கிறது. இருப்பினும், இந்த போலி ஜனநாயக சமூகத்தை முற்றாகத் தூக்கியெறிந்துவிட்டு, உண்மையான ஜனநாயகத்தை ஒரு புரட்சியின்மூலம் நிறுவுகின்ற நமது நெடிய போராட்ட்த்தில், நம்மை முன்னேற விடாமலும், எதிரிகளின் இலக்குகளை நெருங்க விடாமலும் இடையூறாக இருந்துவரும் எதிர்ப்புரட்சி-சீர்குலைவுக் கும்பலான போலிகளை அம்பலப்படுத்தி வீழ்த்த வேண்டியதும் அவசியமல்லவா? நிச்சயமாக வீழ்த்துவோம்!
பதவிக்காக கொலையும் செய்யத் தயங்காத பிழைப்புவாத-பினந்தின்னிக் கூட்டத்துடன் இருக்கும் அனைத்து வகையான தொடர்புகளையும் உடனடியாகத் துண்டித்துவிட்டு, உண்மையான விடியலுக்காக, நியாயமான போராட்ட்த்தை நோக்கி புரட்சிகர அணிகளுடன் கரம் கோர்த்துப் போராட வாருங்கள் என்று, எஞ்சியிருக்கும் சி.பி.எம். கட்சியின் நேர்மையான தோழர்களை அழைக்கிறேன்!
புரட்சிகர வணக்கங்களுடன்,
ஏகலைவன்.
Friday, February 26, 2010
உ.ரா.வரதராசனின் மரணம்: சி.பி.எம்.மின் கோஷ்டி பூசல்களுக்கும், பதவிச் சண்டைகளுக்கும் சமர்ப்பனம்!! - பாகம் ஒன்று.
சி.பி.எம். கட்சியின் உயர்மட்ட்த் தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும் முன்னாள் ரிசர்வ் வங்கி அதிகாரியுமான உ.ரா.வரதராசன் மாயமாகி பின் மரணமடைந்த செய்திகள் கடந்த பத்துநாட்களுக்கும்மேலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. அவர் இரண்டு கடிதங்களை எழுதிவைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார் என்று அறிவிக்கப்பட்டு, தேடுதல் நிலையில் இருந்தபோதே, கட்சியின் உயர்மட்ட பதவிகள் முதல் அடிப்படை உறுப்பினர் பதவி வரை அனைத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டுவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. அதனைத் தொடர்ந்து போரூர் ஏரியிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட உடல் உ.ரா.வரதராசனுடையதுதான் என்று அவரது மனைவி மற்றும் கட்சி சகாக்களால் அடையாளம் காட்டப்பட்ட்து. இதனை மேலும் ஊர்ஜிதப்படுத்தும்வகையில் அறிவியல் பூர்வமான ஆதாரம் தேவை, அதாவது கைரேகை ஆய்வு, டி.என்.ஏ.ஆய்வு போன்றவற்றின் மூலம் உறுதிப்படுதவேண்டும் என்று அக்கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்ட்து. உ.ரா.வரதராசன் மாயமானதற்கும் மரணமடைந்ததாக அறியப்பட்ட்தற்கும் இடைப்பட்ட காலத்தில், அக்கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக அறிவிக்கப்பட்ட ஜி.ராமகிருஷ்ணன் தான் மேற்கண்ட வேண்டுகோளை போலீசுக்கு வைத்தார்.
அதற்கு மறுநாளே, அமெரிக்க தூதரகத்தில் முன்னரே பதிவு செய்யப்பட்டு வைக்கைப்பட்டிருந்த உ.ரா.வரதராசனின் கைரேகையினைப் பெற்று, போலீசு அவரது மரணத்தை உறுதிப்படுத்தியது. ஒருவழியாக எல்லாம் முடிவுக்கு வந்தாகிவிட்டது. சுமார் 35ஆண்டுகாலம் அக்கட்சியின் முழுநேர ஊழியராக வேலைபார்த்து, உயரிய பல பதவிகளிலும் இருந்த அவரது மரணம், வெறும் தற்கொலைதான் என்று அறுதியிட்டு அறிவிக்கப்படாத குறையாக, ஃபைலை மூடியாகிவிட்டது. இனி ‘செவ்வணக்கம்’ செலுத்தி அடக்கம் செய்யப்படும் வேலைதான் மிச்சமிருக்கிறது என்கிற நிலை. கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த வேளையில், கீழ்மட்ட்டத் தோழர்கள் மத்தியில், இது தற்கொலையா கொலையா என்கிற விவாதமும், அதனை அறியவேண்டிய கட்டாயமும் இருப்பதாகச் சற்றே சலசலப்பு நிகழ்ந்து கொண்டிருந்தது. ஏரியில் விழுந்து தற்கொலை செய்துகொள்ளுமளவிற்கு அவர் பலவீனமானவரும் அல்ல, ஒரு ஆள் விழுந்தவுடன் செத்துவிடுவதற்கு போரூர் ஏரியும், மற்ற நீர்த்தேக்கங்களைப் போல் அபாயமானதுமல்ல, என்பது தோழர்களின் கருத்து.
மூன்றுமாத்த்திற்கு ஒருமுறை கன்னியாக்குமரி கடலில் சென்று, விவேகானந்தர் பாறைக்கு நீந்தியே சென்று திரும்புவதை வழக்கமாக்க் கொண்டவர் அவர், இந்த சிறு ஏரி நீரில் மூழ்கி தற்கொலை செய்துகொண்டார் என்பதை ஏற்கமுடியவில்லை என்று நக்கீரன் பத்திரிக்கையாளரிடம் தெரிவித்திருக்கிறார், உ.ரா.வரதராசனின் சகோதரி பவானி. அவர் வசித்துவந்த அண்ணாநகர் பகுதியை ஒட்டிய ஷெனாய்நகர் கார்ப்பரேஷன் நீச்சல் குளத்தில் அன்றாடம் 1000 மீட்டர் நீந்துகின்ற பயிற்சியுடையவர் உ.ரா.வரதராசன் என்று அவருக்கு நெருக்கமான தோழர்கள், அதே நக்கீரன் செய்தியாளரிடம் தெரிவித்திருக்கிறார்கள். இதுபோன்ற கருத்துக்கள், அதாவது அவரது மரணம் அவரது குடும்பத்தினரும், கட்சித் தலைமையும் அறிவித்த்தைப் போன்ற தற்கொலையால் நேர்ந்ததா, அல்லது அவரைக் கொலைசெய்து ஏரியில் வீசியிருக்க வாய்ப்பிருக்கிறதா, என்கிற அடிப்படையில்தான் பெரும்பான்மையான தோழர்கள் மத்தியில் பேச்சு நடைபெற்றுவருகிறது. அவர் மாயமான ஒரு வாரத்திற்குள்ளாகவே உயிரற்ற உடலாக்க் கண்டெடுக்கப்பட்ட்துபோல், இதன் பின்னணியில் ஏராளமான திரைமறைவு செய்திகள் அடுத்தடுத்து வெளிவந்தாலும் ஆச்சரியப்ப்டுவதற்கில்லை.
நம்மைப் பொருத்தவரை அவரது மரணம் குறித்த ஆய்வு கொலையா தற்கொலையா என்கிற கோணத்தில் நட்த்தப்படுவதைவிட, அது எதுவாகிலும் அதற்கான பொறுப்பு கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் முழுநேரமாகப் பணியாற்றிய கட்சிக்கு உண்டு என்கிற கோணத்தில் ஆய்வு செய்தல் அவசியம் என்று கருதுகிறேன். ஒருவேளை இது தற்கொலைதான் என்று ஏற்கும் பட்சத்தில், சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தின் அகில இந்திய செயலாளராக இருந்து, லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு தலைமைப் பீடத்தில் இருந்த ஒருவர், குடும்பத்தில் நிகழும் சிறுசிறு அற்ப சச்சரவுகளுக்காக தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு பலவீனமானவராக இருக்கமுடியுமா? உயர்மட்டத் தலைவரே இப்படியென்றால் அவருக்குக் கீழுள்ளவர்களின் நிலைமை?! என்கிற கேள்வி ஒருபுறம் எழுகிறது. மேலும், அவரது மனைவி சரஸ்வதி சுட்டிக்காட்டியதைப் போல, கட்சியில் அவரை நடத்தியவிதத்தையோ அல்லது அவருக்கு எதிரான கோஷ்டி அரசியல் நடைமுறைகளோ, பதவிச்சண்டைகளோதான் அவரது தற்கொலைக்குக் காரணமா, என்கிற கேள்வி மறுபுறமும் இயல்பாகவே எழுகிறது.
ஈழப்போராட்டம் உச்சத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கைக்கூலி ஊடகங்களால் தமிழகம் ‘அமைதிப்பூங்கா’வாக இருக்கவைக்கப்பட்டிருந்த்து. அந்த ‘அமைதி’யைக் குலைக்கவேண்டும் என்கிற முடிவோடு மாவீரன் முத்துக்குமார் தீக்குளித்து, எரிந்து தீக்கிரையாகிப்போன தனது உடலை ஒரு துருப்புச்சீட்டாக மாற்றி போராட்ட்த்தைத் தொடரச் சொல்லி அறைகூவல் விடுத்து மாண்டுபோனார். அந்த முடிவு தான் விரும்பி ஏற்றுக்கொண்டதல்ல, தமிழக மக்களின் அமைதிதான் தன்னை இப்படி ஒருமுடிவெடுக்க்க் காரணமாக அமைந்த்து என்று தனது மரணசாசனத்தில் அறிவித்திருந்தார், முத்துக்குமார். அவரது இறுதி ஊர்வலம் லட்சக்கணக்கான மக்கள் திரளுடன் நடைபெற்றது. அந்த லட்சக்கணக்கானோரையும் அங்கே திரட்டியது வேறு யாருமல்ல அவர் தன்மீது தீவைத்துக் கொள்வதற்கு முன் வீசியெறிந்த துண்டறிக்கைதான் திரட்டியது. அந்த லட்சக்கணக்கானோரில் யாரும் முத்துக்குமாரின் முடிவை, அவர் தன்னைத் தீவைத்துக்கொண்டு மாண்டுபோனதை ஏற்றுக்கொண்டு அங்கு வந்து திரளவில்லை, அவர் தனது மரணத்தின்மூலம் அறிவித்த செய்திகளையும் போராட வேண்டிய அவசியத்தையும் உணர்ந்தவர்களாகத்தான் அங்கு திரண்டிருந்தனர். மாவீரன் முத்துக்குமாருடைய அந்த அளப்பரிய தியாகத்தை, வெறும் தற்கொலை என்று கொச்சைப்படுத்தியதோடு, அவரது மரணம் ஏற்படுத்திய எழுச்சியை இருட்ட்டிப்பு செய்து, “இளைஞர் தற்கொலை” என்கிற அடைமொழியுடன் சிறுபெட்டி செய்தியாக, செய்தி வெளியிட்ட்து சி.பி.எம். கட்சியின் தீக்கதிர் நாளேடு. அவரது தியாகம் குறித்து பேசுபவர்கள் எல்லோரும் இளைஞர்களை தவறாக வழிநட்த்துவதாகவும் ஊளையிட்டது சி.பி.எம்.மின் வலைதளமான சந்திப்பு.
முத்துக்குமாரின் தியாகத்தை, சாதாரண தற்கொலையாக உருவகப்படுத்தி சிறுமைபடுத்திய சி.பி.எம். கட்சி, தனது கட்சியின் உயர்மட்ட்த் தலைவர்களில் ஒருவரான உ.ரா.வரதராசனின் மரணத்தை ஏதோ பெரிய வர்க்கப்போராட்டத்தில் நேர்ந்த்தைப் போன்று ஜோடிக்கிறது. அற்பகாரணங்களாலும், கோஷ்டி மோதல்களாலும் நேர்ந்த அவரது மரணத்துக்கு “செங்கொடி தாழ்த்தி, செவ்வணக்கம்” செலுத்துவதாகப் பிதற்றுகிறது. டாட்டாவுக்கும், சலீமுக்கும், ஜிண்டாலுக்கும் கால் மிதியடியாக செங்கொடியை விரித்துவைத்த காம்ரேடுகள், திடீரென்று சென்னையில் ‘தற்கொலை’ செய்துகொண்ட வரதராசனுக்காகச் சற்றுத் தாழ்த்துவதாகச் சொல்வதை ஏளனம் செய்யாமல் தவிர்க்கமுடியவில்லை.
அவரது இறுதி அஞ்சலிக்கூட்ட்த்தில் பேசிய, அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு (பொலிட்பீரோ) உறுப்பினரான இன்னொரு வரதராஜன் (கே.வரதராஜன்), “உ.ரா.வரதராஜன் மரணத்திலிருந்து நமக்கு எதிராக எது கிடைக்கும் என்று அலையும் நபர்களை நாம் அரசியல் உறுதியுடன் எதிர்கொள்ளவேண்டும்” என்று அறிவித்ததன்மூலம் ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதுபோல எதையோ சொல்லிவைத்தார். அவரது மரணத்திற்கு யாராவது பொறுப்பேற்கவேண்டும் என்கிற மன உளைச்சலில், கட்சி அவரது குடும்ப்ப் பிரச்சினையையும் அவரது மனைவியையும் பொறுப்பாளியாக்கி தான் ஒதுங்கிக்கொள்ளப்பார்க்கிறது. பதிலுக்கு, நீண்டகால கட்சி உறுப்பினரும், அக்கட்சியின் மாதர் சங்கத்தின் மாநில நிர்வாகிகளில் ஒருவருமான அவரது மனைவியோ, அவரது மரணத்திற்கு முழுபொறுப்பு கட்சிதான், என்று அறிவிக்கிறார். எந்தவிதமான சுயவிமர்சனத்திற்கும் இடமின்றி, இந்த போட்டா போட்டி சிறிதும் நேர்மையற்ற முறையில் நடந்துகொண்டிருக்கிறது.
சி.பி.எம். கட்சியின் தமிழ்மாநில மாநாடு சென்றமுறை கோவையில் நடைபெற்றபோது, மாநிலச் செயலாளராக நான் போட்டியிடுவேன், என்று பல்வேறு தடைகளுக்கு மத்தியில் உ.ரா.வரதராசன் அறிவித்திருக்கிறார். அவரது அந்த அறிவிப்பை அதிர்ச்சியாக உள்வாங்கிய எதிர்கோஷ்டியைச் சார்ந்த பிற தலைவர்கள், அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி, பழைய மாநிலச் செயலாளரே மீண்டும் பொறுப்பில் தொடருவார் என்று அறிவித்து, அந்த கோஷ்டி சண்டையை தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவந்தனர். அம்மோதலைத் தொடர்ந்து மத்தியக் குழுவில் அவருக்கு எதிராக பல்வேறு விஷயங்கள் கிளப்ப்ப்பட்டு துளைத்தெடுக்கப்பட்டார். பிரமிளா என்கிற பெண்ணுடன் அவருக்கிருந்த தவறான தொடர்பு புகாராக மத்தியக்குழுவால் விசாரிக்கப்பட்டு, சென்ற நவம்பர் மாதம் உ.ரா.வரதராசனிடம் விளக்கம் கோரப்பட்ட்து. எதிர்கோஷ்டி யோக்கியவான்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தன்னை வசமாகச் சிக்கவைத்த நிலையில் பின்வாங்கவும் முன்னேறவும் முடியாத வரதராசன், குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க முடியாத நிலையில் தனது விளக்கக் கடித்தைக் கொடுத்தார். அதனையடுத்து கடந்த 6-பிப்’2010 –ல் நடந்த மத்தியக்குழு கூட்டத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு பொறுப்புகளிலிருந்து மெல்ல விடுவிக்கப்பட்டார்.
இந்த அளவிற்கு கட்டுப்பாடும் கண்ணியமும் நிறைந்த கட்சியா சி.பி.எம். என்கிற கேள்வி எழலாம். முப்பதுவருஷங்களுக்கும் மேலாக கூடவே இருந்த ஒருவர், ஏதோ முந்தாநேத்துதான் கெட்டுவிட்டார் என்பதைப்போல, மத்தியக்குழு தனது சின்சியாரிட்டியைக் காட்டிக்கொண்டது. ஒழுக்க சீலர்கள் மட்டுமே நிரம்பிய கட்சியில் உ.ரா.வரதராசன் தான் தவறான மனிதராக இருந்து, கட்சிக்கு அவப்பெயரைத் தேடித்தருகிறார், என்பாத ஜோடிக்கப்பட்டது. ஆனால், அது அப்படியில்லை என்பதை உணர்த்தும் வகையில், வேறு சில தோழர்களின் தவறான நடவடிக்கையும் அவர்களிடத்தில் கட்சி நடந்துகொண்ட விதத்தையும் தேவைகருதி இங்கே குறிப்பிடுகிறேன்.
ஒன்று :
கடலூர் மாவட்ட்த்தைச் சேர்ந்த சித்ரா என்கிற மாதர்சங்கத்தைச் சார்ந்த தோழருக்கும் அவரது முறைப்பையனும் டைஃபி (dyfi) என்கிற சி.பி.எம்.மின் இளைஞர் அமைப்பின் மாவட்ட பொறுப்பாளருமான கார்த்தி என்கிற நபருக்கும், புரோகிதப்பார்ப்பான் முன்னிலையில் தாலிகட்டியும், பிறகு கட்சியின் தலைமைப் புரோகிதர்கள் புடைசூழவும் ‘புரட்சி’த் திருமணம் செய்துவைக்கப்பட்ட்து. அத்திருமணம் நடைபெற்று சரியாக ஓராண்டு நிறைவுபெற்ற நிலையில் அதே மாவட்ட்த்தைச் சேர்ந்த சிதம்பரத்தில் அதே கார்த்திக்குக்கு வேறொரு பெண்ணுடன் இரண்டாவது திருமணமும் கட்சித் தலைவர்களின் முன்னிலையில் நட்த்திவைக்கப்பட்டது. தான் பெரிதும் மதிப்பு வைத்திருந்த தனது கட்சியின் தலைவர்களாலேயே தனது கணவனுக்கு இரண்டாவது திருமணம் நட்த்திவைக்கப்பட்ட செய்தியறிந்து கொதிப்படைந்த சித்ரா, மாதர் சங்கத்தில் முறையிட்டார். ஏமாற்றுக்காரனான சித்ராவின் கணவனுக்கு எதிராக விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகமட்டும் உறுதியளித்து, அந்த அக்கிரமத்தில் பங்கெடுத்த தலைவர்களைக் கண்டுகொள்ளாமல் நடந்துகொண்ட்து அக்கட்சியின் மாநிலத்தலைமை. இருப்பினும் தனக்காதரவான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் அந்தப் பெண் சமாதானப்படுத்தப்பட்டதுதான் மிச்சம்.
இரண்டு :
சென்னையில் உள்ள சி.ஐ.டி.யூ. மத்திய அரசு ஊழியர் சம்மேளனத்தின் மாநிலப் பொதுச்செயலாளராக இருந்த நபர் (கிட்ட்தட்ட 50 வயதுகளைக் கடந்த நிலையில்) வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானார். அக்கட்சியின் உறுப்பினரும், ரிசர்வ் பேங்க் ஊழியருமான அவரது மனைவிதான் கட்சித் தலைமையிடம் இந்தப் புகாரைக் கொடுத்தார். காம்ரேடுகள் உடனடியாகப் பொங்கியெழுந்து, தமது கட்சியின் கடமையையும்! கண்ணியத்தையும்!! கட்டுப்பாட்டையும்!!! அவருக்கு உணர்த்துவதற்காகச் சென்றார்கள் தலைவர்கள், “நான் கட்சியில் இருக்கவேண்டுமா, வேண்டாமா...” என்று ஒரேயொரு எதிர்க்கேள்வி எழுப்பினார் சம்பந்தப்பட்ட அந்த நபர். இந்த ‘சாதாரண’ குடும்ப்ப் பிரச்சினைக்காக லட்சக்கணக்கில் கட்சிக்கு நிதிதிரட்டித் தரும், அந்த பொண்முடையிடும் வாத்தை அறுப்பதற்கு மனமின்றி, கடமையையும் கண்ணியத்தையும் அவர் காலடியில் சமர்ப்பித்துவிட்டு கட்டுப்பாட்டுடன் திரும்பினார்கள், தலைவர்கள்.
இதுதான் இவர்களது ஒழுக்கமுறைகளின் லட்சனம். இவர்களது போலியான கட்டுப்பாட்டுக் கோவன்ங்கள் அறுந்து தொங்கும் பல்வேறு சம்பவங்களைச் சுட்டிக்காட்ட முடியும், பதிவின் நீளம் கருதி சுருக்கவேண்டியுள்ளது. புரட்சி பேசி கட்சி வளர்த்த சி.பி.எம். இதுபோன்ற சீரழிவுக்குச் சென்றதற்கு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டும் காரணமல்ல, அக்கட்சியின் அரசியலற்ற பிழைப்புவாத நடைமுறைகள்தான் முதன்மையான காரணமாக இருக்கிறது.
தேர்தலுக்குத் தேர்தல் அணிமாறும் அரசியல் ஆபாசங்களைக் கொண்டிருக்கும் கட்சியின் தலைவர்கள் குடும்பவாழ்க்கையிலும் ஆபாசமாக நடந்துகொள்வதுவும், அதனை ஏதோ சம்பந்தப்பட்ட தனிநபர்களின் பிரச்சினைபோல வெட்கமின்றிச் சித்தரித்துவிட்டு விலகிச்செல்வதுவும், அக்கட்சியின் மோசடியான நடைமுறையின் நிதர்சனமான அடையாளங்கள். ஆனால், ஒழுக்கத்திலும் நேர்மையிலும் அக்கட்சியின் தலைவர்களுக்கே வழிகாட்டும் அளவிற்கு நேர்மையான அணிகள் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் உட்கட்சி போராட்டத்தின் மூலம் எல்லாவற்றையும் சரிசெய்துவிடலாம் என்று நம்பும் அளவுக்கு அப்பாவிகளாகவும், ஏமாளிகளாகவும் இருக்கிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க என்று தேர்தலுக்குத் தேர்தல் அணிமாற்றமும், அதற்கான தலைமையின் வியாக்கியான்ங்களும் அறிவிக்கப்படும்போது, அதனை எதிர்த்து நிற்கும் அணிகள், தலைமையின் இப்படிப்பட்ட இழிவான அரசியல் நடைமுறைகளில் சிறு துறும்பைக்கூட அசைக்கமுடியாமல் ஒவ்வொருமுறையும் தோற்கிறார்கள்.
சமூக நெருக்கடியிலும் சாதிய ஒடுக்குமுறையிலும் பாதிக்கப்பட்டு, அக்கட்சி சமூக விடுதலைக்காக போராடக்கூடிய கட்சி என்கிற எதிர்ப்பர்ப்போடு, கட்சிக்குள் வருகின்ற நபர்களின் சமூக உணர்ச்சிகள் மழுங்கடிக்கப்பட்டு, வெறும் மந்தைகளாகப் பராமரிக்கப்படுகிறார்கள். கந்துவட்டி, கட்டைப்பஞ்சாயத்து கும்பலும் ரியல் எஸ்டேட் மாஃபியாக்களும் கட்சிக்குள் ’கௌரவமாக’ நுழைந்து ஏனைய சாதாரன ஊழியர்களைப் பின்தள்ளுகிறார்கள். பல்வேறு இடங்களில், அரசு மற்றும் வங்கி ஊழியர் சங்கங்களில் இடம்பெற்றுள்ள ‘மேன் மக்களுக்கு’ சேவையாற்றுவதற்கு ஆட்டோ ஊழியர்கள், சுமைப்பணி ஊழியர்கள் பணிக்கப்படுகிறார்கள். இவற்றிலிருந்து, பொதுவாக சமூகத்தில் நிலவும் வர்க்க முரண்பாடு கட்சிக்குள்ளேயே நிறைந்திருப்பது அம்பலமாகிறது. பாட்டாளி வர்க்கத்தினரை அணிதிரட்டி வர்க்கமற்ற சமூகத்தைப் படைக்கவேண்டிய கம்யூனிஸ்டு கட்சி, தனது கட்சிக்குள்ளேயே வர்க்கபேதங்களைப் பராமரிப்பது அதன் போலித்தனத்துக்கு சான்றாக அமைகிறது.
எனவே, கட்டுப்பாடு, ஒழுக்கநெறி பற்றியெல்லாம் வாய்கிழிய பேசுவது, எஞ்சியிருக்கும் நேர்மையான அணிகளை ஏமாற்றித் தக்கவைப்பதற்கான முயற்சிதானேயொழிய வேறொன்றுமில்லை. உண்மையில், அ.தி.மு.க.வில் ஜெ விதிக்கும் பெயரளவுக்கான கட்டுப்பாடுகூட சி.பி.எம்.மில் கிடையாது. உ.ரா.வரதராஜன் விஷயத்தில், அக்கட்சியின் தலைமை கடமை தவறாமல் நடந்துகொண்டது, அவர்கள் மத்தியில் நிலவிய பதவிப் பூசலின் விளைவுதானேயொழிய வேறொரு வெங்காயமுமில்லை. உண்மையில் உ.ரா.வரதராஜனின் நெறிதவறிய செயல் அவரது எதிர்கோஷ்டிக்குத்தான் ஆகப் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது.
பொதுவாக கட்சியின் பொலிட்பீரோ, அதற்கடுத்த நிலையிலுள்ள மத்தியக் குழு போன்ற உயர்மட்டங்களில், சமூகப் பிரச்சினைகள்தான் அலசி ஆராயப்படுவதாக நம்பவைக்கப்பட்டிருந்த கீழ்மட்ட அணிகளுக்கு, அங்கே இதுபோன்ற கட்டைப் பஞ்சாயத்துகளும், பதவிக்கான குழாயடி சண்டைகளும்தான் நடைபெறுகிறது என்கிற இச்செய்தி ஆச்சர்யமூட்டுபவையாகவும் அதிர்ச்சியளிப்பதாவதும் இருக்கும். இருப்பினும் அச்சுதானந்தனுக்கும் பினராயி விஜயனுக்கும் கடந்த பல ஆண்டுகளாக நடந்துவரும் சக்களத்தி சண்டைகள் குறித்த செய்திகளை மீண்டுமொருமுறை படித்துப்பார்த்தால் சற்று தெளிவு கிடைக்கும்.
பல்லாயிரம் ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டுக்கிடக்கும் உழைப்பாளி மக்களின் விடுதலைக்காகப் போராடவேண்டிய ஒரு கட்சியில் கோஷ்டி சண்டைகள், பதவிச் சண்டைகள் நிகழ்ந்தால் அக்கட்சி உருப்படுமா? அக்கட்சியினை அட்டியின்றி ஏற்றுக்கொண்டு நாம் பாட்டாளிவர்க்க விடியலைச் சாதிக்கமுடியுமா?
பொய்யும் பித்தலாட்டமும் போலித்தனமும் நிறைந்துள்ள அக்கட்சியை, ஏனைய ஓட்டுக்கட்சிகளையே விஞ்சுமளவிற்கு மோசடிகள் நிறைந்த சமூக பாசிஸ்ட் கட்சியாக சீரழிந்துவிட்ட சி.பி.எம்.ஐ, மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி நிர்மூலமாக்காமல், சமூக மாற்றத்தையோ புரட்சியையோ சாதிக்கமுடியாது என்பதை அக்கட்சியில் எஞ்சியிருக்கும் நேர்மையான தோழர்கள் உணரவேண்டும்! விரைவில் உணருவார்கள்!!
தோழமையுடன்,
ஏகலைவன்.
yekalaivan@gmail.com
Thursday, August 27, 2009
போலித் தமிழ் தேசியவாத அரசியலும் ஒரு ஏகாதிபத்திய எடுபிடி அரசியலே!
”ஏடறிந்த வரலாறுகள் யாவும் வர்க்கப் போராட்ட வரலாறுகளே...” – என்று இந்த உலகத்து பாட்டாளி வர்க்கத்துக்கு ‘கம்யூனிஸ்டு அறிக்கை’ என்கிற அரிய பொக்கிஷத்தைப் படைத்துத் தந்த கார்ல் மார்க்ஸ் தொடங்குகிறார். மனித குலம் உருவாகிய காலந்தொட்டு இதோ இப்போதைய ஏகாதிபத்திய சமூகம் ஈறாக நாளை அமையவிருக்கும் சோஷலிச சமூகம் வரை அனைத்திற்கும் பொருந்துகின்ற அற்புதப் படைப்பு அது. இராக், பாலஸ்தீனம், கொசோவா என்று ஈழம் வரை நீளுகின்ற விடுதலைப் போராட்டங்கள் நம் சமகாலத்திய துயரங்களாக நம்முன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவையனைத்திலும் தெளிவாகத் துருத்திக் கொண்டு ஏகாதிபத்திய சுரண்டலில் கோரப்பற்கள் வெளித்தெறிகிறது. இந்த விடுதலைப் போராட்டங்கள் இனப் போராட்டங்களாகவோ ‘தீவிரவாத்த்திற்கு’ எதிரான போர் எனும் போலிச் சித்திரத்திற்குள் அடைத்து முதலாளித்துவ ஊடகங்கள் சித்தரித்துக் கொண்டிருந்தாலும் இதற்குள் உறைந்திருப்பது வர்க்கப் போராட்டங்கள்தான் என்பது அவ்வப்போது அம்பலப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஏகாதிபத்தியத்தைப் பொருத்தவரை தனது இருத்தலை பாதுகாத்துக்கொள்வதற்கு, நிலவுகின்ற சமூக முரண்பாடுகளில் வர்க்கம் என்கிற அடையாளத்தை வெளித்தெரியாமல் மூடி மறைக்க வேண்டிய நெருக்கடியிலிருக்கிறது. இந்த நிலையை அவர்களுக்கு ஏற்படுத்தியது சகல முனைகளிலிருந்தும் எதிர்த்துவரும் புரட்சிகர கம்யூனிச அணிகள்தான். அதற்காக இந்த சமூகத்தில் நிலவுகின்ற மதம், சாதி, இனம் போன்ற வேறுபாடுகளை, அடையாளங்களை மிகைப்படுத்தி ஒரு கலாச்சாரமாகப் பராமரிப்பதன் மூலமாக வர்க்க அடையாளத்தை இல்லாமல் செய்துவிடலாம் என்று ஏகாதிபத்தியம் நம்புகிறது; இவ்வழியில் பல இடங்களில் ஆதாயத்தையும் பெற்றுவருகிறது, சில இடங்களில் தனது கட்டுப்பாட்டை இழந்து வர்க்கப் போராக அம்பலப்படுத்தப்ப்ட்டு ஏகாதிபத்தியம் தோற்கடிக்கவும் படுகிறது. இதற்கு சமீபத்திய சரியான உதாரணம் நேபாளம்.
மதம், சாதி, இனம் போன்ற அடையாளங்களின் அடிப்படையில் முன்வைக்கப்படும் போராட்டங்கள் முழுமையான தொரு விடிவை, விடுதலையை உழைக்கும் மக்களுக்கு ஒருபோதும் ஏற்படுத்திக் கொடுக்காது. மாறாக அது ஏகாதிபத்தியச் சுரண்டலுக்குத்தான் வழியமைத்துக் கொடுக்கும், என்பது நிதர்சனமான உண்மை. ஏகாதிபத்திய ஸ்பான்சரோடு நட்த்தப்படுகின்ற போராட்டங்களில் கூட ஒடுக்கப்படுகின்ற இனத்திற்கோ, சாதிக்கோ சாதகமான விளைவுகளை ஏகாதிபத்தியம் ஏற்படுத்தித் தந்த்தே இல்லை. அது என்றும் எப்போதும் தனது சொந்த வர்க்கமான ஒடுக்குகின்ற அணியைச் சார்ந்தே நின்றுகொள்கிறது. இதற்கும் நாம் கண்முன் காணுகின்ற பல்வேறு உதாரணங்களைச் சொல்லமுடியும்.
எனவே, சாதி ரீதியாகவோ, மத ரீதியாகவோ, இன ரீதியாகவோ அடையாளப்படுத்தப்பட்டு ஒடுக்கப்படுகின்ற மக்கள்; தங்களின் இந்த அடையாளங்களைத் துறந்து வர்க்க ரீதியாகத் திரண்டு எதிரியைச் சந்தித்தாலொழிய வெற்றி பெற முடியாது, என்பதுதான் வரலாற்றுப் பூர்வமான படிப்பினை. இதைத்தான் நாம் இந்தியா என்கிற மோசடி தேசியம் முதலாக ஈழப் போராட்டம் வரையிலாகட்டும், இன்னபிற உலகில் வேறு எங்கெல்லாம் தேசிய-இனப்பிரச்சினைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதோ அனைத்திற்கும் பொருத்தி போராடி வருகிறோம். ஈழப் போராட்டம் தோல்வியுற்றதற்கும் சிங்களப் பேரினவாதம் வெற்றியடைந்த்தற்கும் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார நலன் தான் காரணம் என்கிற எளிய உண்மையை, நம் கண்முன் தெளிவாக்க் காணக் கிடக்கும் உண்மையைக் கொண்டு அம்பலப்படுத்தி பேசிவருகிறோம். இந்திய ஆளும் வர்க்கமான தரகு முதலாளித்துவம்தான் இந்தியாவின் அளவு கடந்த ஆதரவை நிதியாகவும், ராணுவ ரீதியிலும் இன்னும் எப்படியெல்லாம் முடியுமோ அந்தந்த வழிகளிலெல்லாம் அப்போரை முட்டுக்கொடுத்து நட்த்தி லட்சக்கணக்கான தமிழர்களையும் அவர்களுக்கு தலைமைதாங்கி போராடிய புலிகளையும் கொன்றொழித்திருக்கிறது, என்பதுதான் நமது குற்றச்சாட்டும், உண்மையுமாகும்.
ஆனால், ஈழத் தமிழருக்கு ஆதரவாக இங்கேயுள்ள ‘தொப்புள் கொடி’ உறவினர்களான தமிழ் தேசியவாதிகள் இவற்றின் அடிப்படையைப் புரிந்து கொள்வதே கிடையாது. ஈழப் போரின் இந்தியத் தலையீடு மலையாள அதிகாரிகளின் சதி எனவும் அவர்கள்தான் மன்மோகனுக்கும் பிரனாப் முகர்ஜிக்கும் முன்வாயும் பின்வாயுமாக இருந்து பேசிவருவதாகவும் உருவகப்படுத்துகிறார்கள். ஈழத்தின் மீதான இந்திய ஆளும் வர்க்கத்தின் பொருளாதாயச் சுரண்டலை ஏதோ சில மலையாளிகளின் சதி என்பதாக கற்பனையாக உருவகப்படுத்திப் பேசிவருகிறார்கள். சிவசங்கர் மேன்னையும் பாதுகாப்பு ஆலோசகரான நாராயணனையும் இன்னபிற அதிகாரிகளையும் மையப்படுத்தி, அந்த அயோக்கியர்களை மலையாள சமூகத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக்கி, மலையாளிகளுக்கும் தமிழர்களுக்கு மிடையிலான பிரச்சினையாகச் சித்தரிக்கிறார்கள். நாம் இதனை மறுத்தால் உடனே நம்மை ஆரிய இந்தியாவின் பிரதிநிதியாக்கி பார்ப்பனியம் அது இதுவென்று வசைபாடுகிறார்கள். இப்படிப்பட்ட வசைகளுக்குக் கூட முக்கியத்துவம் கொடுத்து எண்ணற்ற முறைகள் பதில் சொல்லி அலுத்துவிட்ட்து. இன்னும் கிளிப்பிள்ளை கணக்காக சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள். அது ஏன்?
சரி நமக்கு பார்ப்பன பட்டம் கொடுக்கும் அளவுக்கு ’உயர்ந்துவிட்ட’ இவர்களின் பார்ப்பன எதிர்புணர்வு எப்படிப்பட்ட்து என்பதைக் கொஞ்சம் கூர்ந்து பார்த்தால் காணக் கண் கூசுகிறது. தில்லைக் கோயிலில் தமிழில் தேவாரம், திருவாசகம் பாடியதற்காக தீட்சிதப்பார்ப்பனர்களால் அடித்து வீசப்பட்ட ஆறுமுக சாமியை அழைத்துக்கொண்டு தில்லை நகரத்து வீதிகளில் நமது தோழர்கள் போராட்டங்கள் நட்த்திக் கொண்டிருந்த அதே நாட்களில், அந்த தீட்சிதக் கும்பலின் பிரதிநிதிகளை கொல்லைப்புறமாக அழைத்து மேடையில் வைத்து கவுரவித்த்து, மணியரசன் கும்பலின் தமிழ் காப்பணி. இந்த போலிதேசிய பார்ப்பன அடிவருடிக் கும்பல், தில்லையில் ‘சேக்கிழர் செந்தமிழ் விழா’ என்கிற பெயரில் தீட்சிதப் பார்ப்பனர்களை அழைத்து மேடையில் வைத்துக் கொண்டு கூத்தடித்த்து. இந்த இழிவான நடவடிக்கையைக் கண்டித்து 28.07.2006 அன்று அதே கூட்ட்த்தில் எமது தோழர்கள் துண்டறிக்கை வினியோகித்தனர். (நன்றி: புதிய ஜனநாயகம் – மே’08) இந்த பார்ப்பன சேவக்க் கூட்டம்தான் ம.க.இ.க.வுக்கு பார்ப்பன முத்திரை குத்த துடித்துக்கொண்டிருக்கிறது.
புலிகளின் தலைவர்களில் ஒருவரான சுப.தமிழ்ச் செல்வனின் மறைவை வெடிவெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடிய சோ, ஜெயல்லிதா முதலான பார்ப்பனக் கூட்டம், அத்தோடு நிற்காமல் முரசொலியில் இரங்கல் கவிதை எழுதியதற்காக கருணாநிதியின் ஆட்சியைக் கலைத்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எகிறிக்குதித்த்து. இந்த பார்ப்பனக் கூட்டம்தான் ஈழம் பெற்றுத்தரப்போகிறது என்று வீதிவீதியாக, தேர்தல் பிரச்சாரம் செய்த்து இந்த போலிதேசிய பித்தலாட்ட கும்பல். ஆனால் தேர்தல் முடிந்த மறுநாள், ஈழம் பெற்றுத்தருவதாகச் சொன்ன ஜெயாமாமியிடமிருந்து முள்ளி வாய்க்காலில் சிக்கியிருந்த ஈழ மக்களுக்காக ஒரு துண்டறிக்கையைக் கூட பெறமுடியாமல் கூனிக் குறுகிக் கிடந்த்து வேறுவிஷயம்.
கருணாநிதியும் காங்கிரசும் ஏதோ உலகமகா யோக்கியர்கள் என்று நாம் சொல்லவில்லை. அவர்கள்தான் நடந்து முடிந்த ஈழப் போரின் விளைவுகளுக்குப் பொறுப்பு என்பதில் நமக்கு மாற்றுக்கருத்து இல்லை. இதற்காக கருணாநிதியும் காங்கிரசும் மக்களிடம் அம்பலப்படுத்தப்படவேண்டியவர்களா என்றால் நிச்சயம் அம்பலப்படுத்தப்பட வேண்டியவர்கள்தான் என்பதுதான் நமது நிலைப்பாடும். அதை மையப்படுத்தித்தான் ம.க.இ.க.வும் அதன் தோழமை அமைப்புகளும் களத்தில் போராடிக்கொண்டிருந்தன. (அதுகுறித்த செய்திகள் கட்டுரைகள் வினவு தளத்திலும் இன்னபிற தோழர்களின் தளத்திலும் காட்சிக்கு அப்படியே இருக்கின்றன பார்த்துக்கொள்ளலாம்.)
ஈழப் போரை சூத்திரதாரியாக நின்று நட்த்துகின்ற இந்திய ஆளும் வர்க்கத்தை வெளிப்படையாக அம்பலப்படுத்தி மக்களிடம் பிரச்சாரம் செய்வதற்கு வக்கற்ற இக்கூலிக்கும்பல், பா.ஜ.க.வுக்கும் ஜெயாவுக்கும் ஓட்டுப் பொறுக்கித் தந்து குறுக்கு வழியில் ஈழத்தை மீட்டுவிடலாம் என்று கணவு கண்ட்து. இந்தக் கணவை மெய்யாக்க இக்கும்பல் மிச்சமிருந்த மானம், மரியாதையைத்தான் விலையாக்க் கொடுக்க வேண்டியிருந்த்தேயொழிய விளைவு இவர்களுக்குச் சாதகமாக இருக்கவில்லை. தேர்தல் கமிஷனின் ஏகோபித்த ஆசியோடு நடைபெற்று வரும் நமது பணநாயகத் தேர்தலில் இவர்களது கோரிக்கை எடுபடாத்து போலித் தேசியவாதிகளுக்கு மட்டுமின்றி, மந்திரத்தில் ஈழம் பெற்றுத்தருவதாக சவடால் அடித்த ‘அம்மா’வுக்கும் கடும் அதிர்ச்சியைத் தந்த்து.
ஈழம் பெற்றுத்தருவார்கள் என்று இவர்கள் காட்டிய நபர்கள் உள்ளிட்ட எல்லோரும் இந்திய தேசியத்தின் காவலர்கள்தான் என்பதையும், காஷ்மீர், அஸ்ஸாம் மக்களைக் குதறிக்கிழிக்கும் இந்திய தேசிய ஒடுக்குமுறை எனும் இழிநிலையை நேரடியாக ஆதரிப்பவர்கள்தான் என்பதையும் பற்றி இந்த போலித் தேசியவாதிகளுக்கு எந்தக் கவலையும் இல்லை. பார்ப்பன-இந்துமத பயங்கரவாத நடவடிக்கைகளின் மூலமாக பிற சிறுபான்மை மத்த்தவரையும், அனைத்து சாதி/மத உழைக்கும் மக்களையும் கேட்பாரில்லாமல் ஒடுக்கிவரும் பார்ப்பனிய சக்திகள் இவர்களுக்கு எப்படி ஈழம் பெற்றுத்தருவார்கள் என்பது பற்றியும் இவர்கள் பொருட்படுத்தவில்லை. இவற்றை அம்பலப்படுத்தி, இந்தியாவில் கோலோச்சுகின்ற இந்த ஒடுக்குமுறை சக்திகள் ஈழத்தில் தலையிட அருகதையற்றவர்கள் என்று பேசினால் நாம் பார்ப்பனியவாதிகளாம்.
புலிகளை அரசியல் ரீதியாக விமர்சித்த்தால் நாம் பார்ப்பனியவாதிகள் என்றும் இக்கூலிக்கும்பல் பிதற்றுகிறது. இறுதிப் போரில் களத்தில் வீரமரணமடைந்த புலிப்படை அணிகளுக்கு நாங்கள் வீர வணக்கம் தெரிவித்த்தை இக்கும்பல் வேறு விதமாகத் திரிக்கிறது. புலிகள் மீதான எமது விமர்சனத்தை இவர்கள் ஏதோ துப்பறிந்து கண்டுபிடித்த்து போல பீற்றிக் கொள்கிறார்கள். எமது விமர்சன்ங்கள் யாவும் வெளிப்படையானதுதான். புலிகளை நாங்கள் விமர்சித்த்தை எங்கும் எப்போதும் மறுக்கவில்லை. ஆனால் அத்தகைய விமர்சனம் எந்தக் கோணத்தில் வைக்கப்பட்ட்து என்பதை பரிசீலிக்கத் தெரியாத இந்த பிழைப்புவாதக் கும்பல்தான் தர்க்க ரீதியாக அவ்விமர்சன்ங்களை எதிர்கொள்ள மறுக்கிறது.
ஈழத் துரோகக் குழுக்களை புலிகள் அழித்தொழித்த்தைத் தவிர்த்து, ஏனைய தோழமை சக்திகளை பாசிச முறையில் புலிகள் வேட்டையாடியதை பலமுறை நாம் கண்டித்திருக்கிறோம். ஆனால், ஏகாதிபத்தியங்களால் வளர்க்கப்பட்ட புலிகள், அதே ஏகாதிபத்திய சதியின் முன்னால் தோற்றுக்கொண்டிருப்பதை காணப் பொறுக்காத நிலையில், அவர்கள் வெற்றிபெற வேண்டும் என்றும் விரும்பினோம். அந்த அக்கறையில், செயல் தந்திர ரீதியிலான முரண்பாடுகளை மட்டும் அவர்களுக்காக நாம் முன்வைத்தோம். அவற்றைப் பரிசீலிக்கத் தயாராக இல்லாத புலிகள், இந்த போலித் தேசிய வாதிகளையும் இந்திய ஓட்டுப்பொறுக்கிகளையும் நம்பி சீரழிந்தார்கள். இந்திய நாடாளுமன்றத் தேர்தல் ஆட்சி மாற்றம் தமக்குச் சாதகமானதாக அமையும் என்று தப்புக்கணக்குப் போட்டார்கள். இந்திய தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன் இவர்களை முடித்துவிட்ட்து சிங்கள பேரினவதமும், இந்திய மேலாதிக்கமும்.
இது மாபெரும் தோல்வியைச் சந்தித்த துயரந்தோய்ந்த வரலாறுதான். ஆனால், அத்தோல்விக்கான காரணிகளைப் பரிசீலிப்பதுதான் இத்தோல்வியை வெற்றியை நோக்கி இட்டுச் செல்ல முடியுமே, ஒழிய ஆத்திரமும், உணர்ச்சிமயமான வார்த்தைஜாலங்களும் அல்ல. ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமை சாத்தியப்படவேண்டும் என்றால் இந்தியாவின் பார்ப்பன தேசிய ஒடுக்குமுறையும் அதற்குள் குளிர்காயும் ஏகாதிபத்திய-தரகுமுதலாளித்துவ சுரண்டல்களையும் சிறிதும் சமரசமின்றி மக்கள்முன் அம்பலப்படுத்தி இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் அதன் எடுபிடிகளான அனைத்து ஓட்டுப்பொறுக்கிகளுக்கும் எதிரான போராட்டங்களை களத்தில் உருவாக்க வேண்டும். மலையாள மக்களுக்கும், கன்னட மக்களுக்கும் எதிராக அல்ல. இப்படிப் பிற தேசிய இனங்களை தமிழனோடு மோதவிடுவது போல பேசுவதன் மூலமாக உலகைச் சூறையாடிவரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், ஈழத்தைக் குதறியெறிந்த இந்திய மேலாதிக்கத்தையும் இவர்கள் மறைமுகமாக நியாயப்படுத்தியும் வருகிறார்கள், என்பதையும் இந்த போலித்தேசியவாதிகளின் கேளாச் செவிகளில் நாம் பலமுறை எடுத்துச் சொல்லியிருக்கிறோம்.
பார்ப்பன இந்து தேசியத்திற்கு எதிராகவும், ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் குரல் கொடுக்கும் நம்மை நட்பு சக்தியாக்க் கூட கருத வாய்ப்பில்லை என்று சொல்லிக்கொள்ளும் இக்கூட்டம், எதிர்முகாமில் இருக்கும் சக்திகளோடு சிறிதும் கூசாமல் எப்படி உறவு கொள்ள முடிகிறது? பார்பனியத்துடனும் ஏகாதிபத்தியத்துடனும் சந்தர்ப்பவாத இனக்கம் காட்டும் இந்த போலித் தேசியக் கூட்டம் நம்மை விமர்சிப்பதுதான் நமக்கு இவர்கள் கொடுக்கும் அங்கீகாரம் என்பது ஒருபுறமிருக்கட்டும். இவர்களின் இந்த பிழைப்புவாத நடவடிக்கைகள் எதார்த்தமாக, ஏதோ வேறு வழியின்றி செயல்படுத்தப்படுபவை அல்ல. அது தேர்ந்து தெளிந்து திட்டமிட்டுத்தான் அவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. இதனை மணியரசனிலிருந்து பழ.நெடுமாறன் வரை அனைவரிடத்திலிருந்தும் நாம் எளிதில் புரிந்துகொள்ளமுடியும்.
ஏகாதிபத்தியத்தின் இருத்தல் என்பது எப்படி சாதி, மத, இன வேறுபாட்டு அடையாளங்களுக்குள் தந்திரமாக தம்மை நிலைநிறுத்திக் கொள்கிறதோ, அப்படித்தான் இந்த இனவாத அரசியலும் இப்படிப்பட்ட குறுக்கு வழிகளில் தமது இருத்தலை நிலைநிறுத்திக்கொள்கிறது. அதனால்தான் இவர்களது நடவடிக்கைகள் மறைமுகமாகவும் நேரடியாகவும் ஏகாதிபத்தியத்தைப் பாதுகாக்கும் அரும்பணியைச் செய்வதாக அமைந்துவிடுகிறது. நமது புரட்சிகர கருத்தாக்கங்கள் ஏகாதிபத்தியத்தின் குடுமியைப் பிடித்து இழுத்துவந்து வர்க்க முரண்பாட்டுக்குள் வெளிப்படையாக நிறுத்திவிடுவதைப் போல, தவிர்க்க இயலாமல் இந்த போலித் தேசிய பிழைப்புவாத அரசியலும் நம்மால் அம்பலப்படுத்தப்படுகிறது. தமது இருத்தல் பறிபோகும் நிலையில் இப்போலித் தமிழ்த்தேசியக் கும்பல் நம்மீது அடிப்படையற்ற அவதூறுகளுடன் கூடிய வசைகளை பொழிகிறது. எப்படியாகிலும் நாம் கற்றுக் கொண்ட புரட்சிகர-மார்க்சிய-லெனினிய அரசியல் அவற்றைச் சந்திக்கும் துணிவை நமக்கு இயல்பாகவே வழங்கிவிடுகிறது. சந்திபோம் திரைகிழிப்போம்!
தோழமையுடன்,
ஏகலைவன்.
Tuesday, March 3, 2009
பாரதி பக்தர்களும், வி.பி.சிங்கின் ரசிகர்களும் இணைந்த கள்ளக் கூட்டணிதான் பெ.தி.க. மற்றும் சி.பி.எம். கூட்டணி!....
அன்பார்ந்த தோழர்களே!
ஈழம் கொலைக்களமாகி தகிக்கிறது. நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான பிணங்களைக் கொன்று சிங்கள பேரினவாத பாசிஸ்டுகளும் - இந்திய மேலாதிக்க பார்ப்பனக் கும்பலும் களிப்பில் இருக்கின்றனர். மறுபுறம் இந்தக் கேடுகளுக்கு எதிராக, தமிழகத்தில் வழக்கறிஞர்களின் போராட்டங்கள் நாளுக்கொரு வடிவமாக வீரியத்துடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போராட்டங்கள் ஏற்படுத்திய தகிப்புகள் உயர்நீதிமன்ற, காக்கிச்சட்டை ரவுடிகளின் தாக்குதலுக்குப் பிறகு இன்னும் வேகமாகப் பற்றிப் படர்ந்து தமிழகம் முழுவதும் நீதித்துறை முடக்கப்பட்டு கிடக்கிறது. நம்முடைய களமும் அங்குதான் இருக்கின்றது என்று எண்ணி, செயல்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில்; இணையத்தில் சண்டமாருதம் செய்யச் சொல்லி நம்முடைய சக்தியை, நேரத்தைக் களவாடத் துடிக்கிறது ஒரு கூட்டம்.
தமது அமைப்பின் பெயரில் மட்டும் பெரியாரை வைத்துப் பாதுகாக்கும் தமிழினவாத பொய்யர்கள், தம்மோடு கருத்துமோதல் கொள்வோருக்கெல்லாம் பார்ப்பன பட்டம் சூட்டி காலத்தைத் தள்ளிக்கொண்டிருக்கின்றன. வருண-சாதி இழிநிலைகளின் குறியீடுதான் பார்ப்பன பண்பாடு என்று பெரியாரியமும் அம்பேத்கரியமும் அறுதியிட்டுச் சொன்ன பிறகும், அவர்களது வாரிசுகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் அவற்றுக்கு புதிய வியாக்கியானத்தை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆம், இப்போது பார்ப்பனியவாதி என்று ஒருவரை வரையறுப்பதற்கு வேறு பல இழிவான அளவுகோல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த அளவுகோல்களே இவர்களின் பார்ப்பன ஆதரவுத் தன்மையினை அப்பட்டமாக அம்பலப்படுத்துகின்றன. அதைப்பற்றி பார்ப்போம்.....
ஒரு சமூக சீர்திருத்தக் கொள்கை என்று கூட ஒப்புக்கொள்ள முடியாத அளவுக்கு, அடித்தட்டு உழைப்பாளி மக்களுக்கு எந்தப் பயனையும் விளைவிக்காத கொள்கையும், ‘சமூகநீதி பேசுகின்ற ஓட்டுப்பொறுக்கிகளின்’ அரசியல் வாழ்வையும் ஆதிக்க சாதி இந்துக்களின் குடிகளையும் மட்டும் செழிப்புறச் செய்யும் வகையில் வடிவமைத்துப் பாதுகாக்கப்படும் கொள்கையுமான ‘இடஒதுக்கீடு...’ என்கிற வெற்றுக்காகிதத்தைப் பற்றி கேள்வி கேட்டால், நாம் பார்ப்பனவாதிகளாம். அல்லது....
பார்ப்பன ஆதிக்கவெறி இந்துமதக் கும்பலுக்கு ஆதரவாக வாழ்ந்து, ராஜீவின் பீரெங்கி பேர ஊழல்களின்போது துணைநின்று, புதிய பொருளாதாரக்கொள்கையின் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு நாட்டை எழுதிக்கொடுத்த துரோகிகளில் ஒருவராக அங்கம்வகித்து; தமது அரசியலின் அந்திமக்காலத்தில், பிரதமர் பதவிநாற்காலி கனவில், ஓட்டுப்பொறுக்கி பிழைப்பதற்கு ‘சமூகநீதி’ வேடம்போட்ட வி.பி.சிங் என்கிற ஒரு அற்பமனிதனின் மீது முற்போக்காளர்களால் போர்த்தப்பட்டிருக்கும் புனிதபிம்பத்தை அம்பலப்படுத்தி விமர்சித்தால் நாம் பார்ப்பனவாதிகளாம். அல்லது.....
அமைப்பின் பொறுப்பில் இருக்கும் ஒரு நபர், பிறப்பால் மட்டும் பார்ப்பனராக இருக்கும் பட்சத்திலும் நாம் பார்ப்பனவாதிகளாம். இவையெல்லாம் பெரியாரியத்தின் குத்தகைதாரர்கள் பார்ப்பனியத்திற்குச் சொல்லும் நவீன வரையறை. நம்மால் முன்வைக்கப்பட்டிருக்கும் விமர்சனத்தைப் பரிசீலிக்க பம்மிக்கொண்டு இருப்பவர்கள், விமர்சித்தவரின் பிறப்பை ஆராய்ந்து பதில் தேடுகின்ற கேவலமான பிழைப்புவாதிகளாக மாறிப்போனது இவ்வாறுதான்.
அதாவது இதுதான் பச்சையான பார்ப்பனப் பார்வை. பிறப்பைச் சொல்லி ஒருவரை இழிவுபடுத்தும் பார்ப்பனியக் கொடுங்கோன்மையின் அச்சுஅசலான வாரிசுகளாக பெரியாரின் வாரிசுகள் என்று சொல்லிக்கொள்பவர்கள், பகுத்தறிவு பேசுபவர்கள் சீரழிந்திருக்கிறார்கள். பெரியாரியத்தை பிழைப்புக்காக பேசாமல், உணர்வுரீதியாகப் பேசுபவர்களாக இவர்கள் இருப்பார்களேயானால், நாம் முன்வைத்த கருத்துக்களின் அடிப்படையில் இவர்களால் பேசியிருக்க முடியும். என்ன செய்வது, வீரமணியினால் புகட்டப்பட்ட ‘மானமிகு’ அம்சங்கள் இவர்களிடத்தில் மிச்சமிருந்த பகுத்தறிவை உறிஞ்சி காழ்ப்புணர்வை விதைத்திருக்கிறது. இதில் கேவலமான விசயம் என்னவென்றால், இவர்கள் பார்ப்பனியத்திற்குச் சொல்லும் புதிய வரையறையை ஆதரித்து நிற்பவன், “பார்ப்பனன்” என்கிற வார்த்தையை ’கன்னியக் குறைவான சொல்’, “ஒரு குறிப்பிட்ட சமூகத்தவரை இழிவுபடுத்தும் சொல்...” என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, அச்சொல்லை கனவில் கூட உச்சரிக்கவிரும்பாத போலி கம்யூனிச சி.பி.எம்.
ம.க.இ.க.வின் சமரசமற்ற செயல்பாடுகளும், அதன்பொருட்டு தெரிந்த எதிரிகளான சுரண்டல்வாதிகளையும், அவர்களுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் வெட்கமற்று சேவையாற்றும் துரோகிகளான திரிபுவாதிகளையும் கேள்விக்குட்படுத்துவதால், தமக்குள் இருக்கும் சிறு சிறு சச்சரவுகளை மறந்து துரோகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து, தமது பதிலுரைக்கமுடியாத, கையாளாகாத தனத்தை கூட்டாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்ற நேரம் இதுதான். பார்ப்பனிய ஆதரவு போலி கம்யூனிஸ்டுகளும் பெரியாரியத்தின் குத்தகைதாரர்களும் ஒன்றிணைந்து நிற்கும் புள்ளியும் இதுதான்.
தான் வாழும் காலம் முழுதும் தான்சார்ந்த பார்ப்பன சமூகத்துக்கு கண்ணும், கருத்துமாகச் சேவையாற்றிய பாரதி முற்போக்காளர்களால் “பெண்ணடிமையை எதிர்த்துப் பாடியவன், சாதி ஒழிப்புக்காகக் குரல் கொடுத்தவன், மதவெறி எதிர்ப்பின் முன்னோடி,....” என்றெல்லாம் கொண்டாடப்பட்டதை எதிர்த்து, பாரதியின் பால் கட்டியெழுப்பிய போலி முற்போக்கு பிம்பத்தை உடைத்து சுக்குநூறாக்குவதற்கு பாடுபட்டவர்கள்தான், பிழைப்புவாதத்தை அரசியலாகக் கொண்டிருந்த வி.பி.சிங்கை பாரதி அளவுக்கு உயர்த்திப்பிடிக்க முயல்கிறார்கள். ”வி.பி.சிங்கை விமர்சிப்பது பெரியாரையும் அம்பேத்கரையும் விமர்சிப்பது போன்றது” என்று சொல்லி நம்மை ‘தெய்வகுற்றம் செய்துவிட்டவர்கள்’ என்பதைப் போல மிரட்டுகிறார்கள். ”தவறென்றால் என்னையும் விமர்சனத்துக்குட்படுத்துங்கள்...” என்று தைரியமாகச் சொன்ன பெரியாரின் வழிவந்தவர்கள், நமது விமர்சனங்களைக் கண்டு ஆற்றமாட்டாமல் தன்நிலை மறந்து பிதற்றுகிறார்கள். வி.பி.சிங்கைக் காப்பாற்ற பெரியாரையும் அம்பேத்கரையும் கேடயமாகப் பயன்படுத்தி அவ்விருதலைவர்களையும் இழிவுபடுத்துவதும் இவர்கள்தான்.
பாரதிக்கு போலிகம்யூனிஸ்டுகள் கட்டிவிட்ட புனித பிம்பத்தை இவர்கள் வி.பி.சிங்கின் மீது கட்டுகிறார்கள். இதன் விளைவாக பாரதி விடயத்தில் எதிரும் புதிருமாக இருந்த இவ்விரு முகாமும் இப்போது ஒத்தகருத்துடையவர்களாகக் கைகுலுக்கிறார்கள். இவர்களுக்குள் மோசடியாகப் பொதிந்திருக்கும் எந்தவிதமான அரசியல் அடிப்படையுமில்லாத ’ரசிக மனோபாவம்’தான் இவர்களை இணைத்திருக்கிறது. இந்த கருத்தொற்றுமை வி.பி.சிங்கில் தொடங்கி நம்மை பார்ப்பனவாதி என்று முத்திரை குத்துவதுவரை நீளுகிறது.
பார்ப்பனியத்தை ஆதரித்து வாழ்ந்த பாரதி சாதிஎதிர்ப்பு நாடகம் நடத்தியது போலதான், மக்கள் விரோத ஆளும்வர்க்கத்தில் அங்கம் வகித்த வி.பி.சிங் சமூகநீதி நாடகம் நடத்தினார். இன்று பாரதியும் இல்லை வி.பி.சிங்கும் இல்லை. இவ்விருவரது உண்மையான வாரிசுகள் தாங்கள்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் இந்தக் கோமாளிகள்தான் முற்போக்கு முகமூடியுடன் அவர்களை உயர்த்திப்பிடித்தவாறு திரிகிறார்கள். ஆனால், பாரதியின் உண்மையான வாரிசுகள் ஆர்.எஸ்.எஸ்.ஆகவும் வி.பி.சிங்கின் உண்மையான வாரிசுகள் ஆதிக்கசாதிவெறியர்களாகவும் ஒன்றுபட்டு தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் கொழுக்கிறார்கள். இந்தக் கேவலத்தை எதிர்க்கத் தொடைநடுங்கும் இந்த யோக்கியர்கள், எதிர்த்து நிற்கும் புரட்சியாளர்களை இழிவாக விமர்சிக்கிறார்கள். பார்ப்பன எதிர்ப்பை மட்டும் ஒரு ‘அடையாள அரசியலாக’ நிகழ்த்திக் கொண்டிருப்பவர்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்று வரும்பட்சத்தில் கவனமாக மவுனம் காக்கிறார்கள்.
இதற்கிடையில், பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியைக் காட்டிக் கொடுக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதாக பார்ப்பன ஆதரவு ஞாநியை விமர்சித்து ஒரு பதிவினை தோழர் மதிமாறன் பதிந்துள்ளார். அப்பதிவில், ”தோழமையானவராக இருக்கிறார்” என்பதனாலேயே விடுதலை ராசேந்திரனும் கொளத்தூர் மணியும் ’பெருந்தன்மையோடு’ பார்ப்பன பயங்கரவாதி ஞாநியை விமர்சிப்பதைத் தவிர்த்தார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், ஞாநியைக் கண்டித்து இதுவரை பெ.தி.க.வின் பத்திரிக்கையான ’பெரியார் முழக்கம்’ எதையும் எழுதவில்லை என்றும் எழுதியிருந்தார்.
இடஒதுக்கீடு குறித்தும் வி.பி.சிங் குறித்தும் தனது மாற்றுப் பார்வைகளைப் பதிவு செய்ததற்காக புதிய ஜனநாயகத்துக்கு பார்ப்பன பட்டம் கொடுத்து மோசடியாக எழுதி தனது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்திய விடுதலை ராசேந்திரன், பார்ப்பன ஆதரவை ஒரு தொழிலாகவே செய்துவரும் ஞாநியை ‘தோழமை கருதி’ விமர்சிக்காமல் விட்டதனைக் கண்டித்து எழுதத்தூண்டியது; தோழர் மதிமாறனின் அப்பதிவு. எமது தோழர்கள் பலரும் மதிமாறனின் அப்பதிவில் தமது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். இதுவரை பெ.தி.க.வின் ஆதரவாளராக இருக்கும் தோழர் மதிமாறனிடத்திலிருந்துகூட அவற்றுக்கு எந்தப் பதிலும் பதியப்படவில்லை.
எதற்கெடுத்தாலும் ம.க.இ.க.வின் பொதுச்செயலாளர் தோழர் மருதையனை அவரது பிறப்பைக் கொண்டு வசைபாடுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறது, இக்கூட்டணி. ஆனால், இந்த யோக்கியர்கள், பகுத்தறிவுப் புலிகள், பார்ப்பன பயங்கரவாதத்திற்கு எதிராகப் பேசியதை, எழுதியைக் காட்டிலும், போராடியதைக் காட்டிலும் ம.க.இ.க.வின் தோழர்களும் தோழர் மருதையனும் களத்தில் அதிகமாக இயங்கியிருக்கிறார்கள். தில்லைப் போராட்டத்தில் தீட்சிதப் பார்ப்பன ரவுடிகளுடன் கொல்லைப்புறமாக உறவு வைத்திருந்த யோக்கியர்களெல்லாம், இந்த கூட்டத்தோடு கோவிந்தா போட்டுக்கொண்டு “பார்ப்பன தலைமை...” புராணம் பாடிவருவது கேவலத்திலும் கேவலமாக இருக்கிறது.
இறுதியாக, ம.க.இ.க.விற்கு பார்ப்பன பட்டம் சூட்டுவதற்கு இவர்கள் கற்பனையால் உருவாக்கிவைத்திருக்கும் முகாந்திரங்களையும் அவற்றை அடித்து நொறுக்கும் வகையிலான எமது தோழர்களின் எதிர்வினைகளையும், இவர்களில் எவராவது ஒருவராவது யோக்கியவானாக இருந்தால், நேர்மையாகப் பரிசீலித்து விவாதிக்க முன்வரட்டும். குறைந்த பட்சமாக இடஒதுக்கீடு: ஒரு மார்க்சிய-லெனினியப் பார்வை, என்கிற புதிய ஜனநாயகத்தின் வெளியீட்டையும், காக்கை குயிலாகாது -என்கிற வி.பி.சிங் மீதான விமர்சனக் கட்டுரைக்கும் தெளிவான மறுப்புகளை முன்வைக்கட்டும். விடுதலைராசேந்திரனின் புரட்டுக்களை மறுக்கும் எனது முந்தைய பதிவு குறித்தும் ஏதாவது மறுப்பு தெரிவிக்கட்டும். இவற்றுக்குப் பிறகு எங்களை எவ்வளவு கீழாக வேண்டுமானாலும் விமர்சித்துக்கொள்ளட்டும். நமது பதில்களை ஏறெடுத்தும் பார்காமல், முற்றாகப் புறந்தள்ளிவிட்டு மீண்டும் இதுபோன்ற அவதூறு புராணம் பாடவந்தால் சரியான பாடம் புகட்ட நாமும் தயாராவோம்.
தோழமையுடன்,
ஏகலைவன்.
குறிப்பு:
பெரியார் திராவிடர் கழகம், பார்ப்பன எதிர்ப்பு எனும் பம்மாத்து நாடகத்தில் சி.பி.எம். என்கிற போலிகம்யூனிஸ்டுகளோடு சிந்தைரீதியாக சோரம்போனது அம்பலமாகிவிட்டபடியால், அவர்களிடத்திலிருந்து இனி யோக்கியமான எதிர்வினைகளை நாம் எதிர்பார்க்க முடியாது. எனவே, பெ.தி.க.வை நாம் விமர்சிக்கும்போது கடைபிடிக்கும் ‘அவைநாகரீகத்தை’த் தவிர்த்து கடுமையாகவே சந்திக்கலாம்; என்பது எனது கருத்து. இதற்கு தோழர்களும் தங்களது கருத்துக்களைப் பதியலாம்.
தொடர்புடைய பதிவுகள்:
1. இடஒதுக்கீடு: ஒரு மார்க்சிய-லெனினிய பார்வை - புதிய ஜனநாயகம் வெளியீடு
2. விசுவநாத் பிரதாப்சிங்: காக்கை குயிலாகாது - புதிய ஜனநாயகம் கட்டுரை
3. விடுதலை ராசேந்திரனிடமிருந்து இன்னும் ‘விடுதலை’யாகாத காழ்ப்புணர்ச்சி!...
4. இடஒதுக்கீடு: சாதி இந்துக்கள்-இனவாதிகளின் அவதூறும் நமது நிலைப்பாடும்...
5. உள் ஒதுக்கீட்டு கோரிக்கையும், தலித் பார்ப்பனியத்தின் எதிர்ப்பும்
Tuesday, February 24, 2009
விடுதலை ராசேந்திரனிடமிருந்து இன்னும் ‘விடுதலை’யாகாத காழ்ப்புணர்ச்சி!.....
/////‘காக்கை குயிலாகாது; பதவியைக் காப்பாற்றிக் கொள்ள இந்து மதவெறியர்களுக்கு அனுசரணையாக நடந்து கொண்டவர்தான் வி.பி.சிங்' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள அக்கட்டுரை, வி.பி.சிங்கைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தியுள்ளது. குஜராத் மோடி அளவில் வி.பி.சிங்கைக் கொண்டு வந்து நிறுத்தி, "குற்ற"ப் பட்டியல்களை அடுக்கியிருக்கிறது. பச்சைப் பார்ப்பனியப் பார்வையில் வெளிவந்திருக்கும் அக்கட்டுரை 'துக்ளக் சோ', 'சு.சாமி' கும்பலை நிச்சயமாக மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கும். 'பொதுவுடைமை கட்சிகளில் மீண்டும் தமது குரல் ஒலிக்கத் தொடங்கிவிட்டது' என்று "அவாள்"கள் கருதினால், அதில் தவறு இல்லை என்பதே நமது கருத்து./////
மேற்கண்ட வரிகளை மீண்டும் ஒருமுறை நிதானமாக வாசித்துப் பாருங்களேன். இது பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன், புதிய ஜனநாயகத்துக்கு எதிராக கட்டியெழுப்பியுள்ள மணற்கோபுரம்!
“பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இந்து மதவெறியர்களுக்கு அனுசரனையாக நடந்து கொண்டவர்தான் வி.பி.சிங்” என்கிற குற்றச்சாட்டை முன்னிறுத்தி எழுதப்பட்டிருக்கும் விமர்சனம், எப்படி பார்ப்பனியத்தைக் குளிர்விக்கும்? பார்ப்பன-இந்துவெறியர்களை ஆதரித்தவன் என்று ஒருவனைக் குற்றம் சாட்டினால், பார்ப்பனியவாதிகளுக்கு நம்மீது ஆத்திரம் வருமா, வராதா; என்பதை நீங்களே (வேறாருமல்ல இதைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள்தான்) சொல்லுங்கள். ஆனால், இப்போது ஆத்திரம் விடுதலை ராசேந்திரனுக்கு வருகிறதே, அது ஏன்? இதனை அடிப்படையாகக் கொண்டு, பார்ப்பன-இந்துவெறியர்களை எதிர்த்து எழுதப்பட்டிருப்பதை அவதூறு செய்வதனால், விடுதலை ராசேந்திரனுக்கு பார்ப்பன ஆதரவு கண்ணோட்டம் இருப்பதாக நாமும் சொல்லலாமா? இல்லையா? ஆனால், அப்படியெல்லாம் நாம் சொல்லவில்லை. அது சரியான மதிப்பீடும் அல்ல என்பது விடுதலை ராசேந்திரனுக்குத் தெரியாது; நமக்குத்தான் தெரியும்.
பிறகு ஏன், பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் ‘புடம்போடப்பட்ட(!)’ விடுதலை ராசேந்திரன் இவ்வாறு எழுத வேண்டும், என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
’சமூக நீதி’க் காவலராக திராவிடக் கட்சிகளாலும் போலி கம்யூனிஸ்டுகளாலும் ’தலித்’ அரசியல் பேசுபவர்களாலும் போற்றப்படும் வி.பி.சிங்கின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தி புதிய ஜனநாயகம் “காக்கை குயிலாகாது...” என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தது. அக்கட்டுரை வி.பி.சிங்கிற்கு எதிராக வைத்திருக்கும் கேள்விகளில் சிலவற்றை இங்கே (தேவை கருதி) பட்டியலிடுகிறேன்.
1. சுமார் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருந்த வி.பி.சிங்கை இடஒதுக்கீட்டுக்காக மட்டும் தூக்கி வைத்துக் கொண்டாடுவதன் நோக்கம் என்ன? ஜெயலலிதா, பார்ப்பன பயங்கரவாதி சங்கராச்சாரியைத் துணிவோடு கைது செய்ததை வைத்து அவரைப் "பார்ப்பனிய எதிர்ப்புப் போராளி' என்று கொண்டாட முடியுமா?
2. காங்கிரசில் இருந்தபோது அவசரநிலை பாசிச ஆட்சியை அவர் தீவிரமாக ஆதரித்ததையோ, அவருடைய குருநாதர் சஞ்சய்காந்தி காட்டுமிராண்டித்தனமாக முசுலிம்கள் மீது பாய்ந்து குதறியபோது அதனை அவர் கண்டும் காணாமல் இருந்ததையோ, மனித உரிமை பேச காஷ்மீர் வரை போகும் அ.மார்க்ஸ் ஏன் கண்டுகொள்வதில்லை?
3. அவசரநிலைப் பாசிச ஆட்சிக் காலத்தில் தி.மு.க. பிரமுகர்கள் சிறையில் அடைக்கப்பட்டு அடித்து நொறுக்கப்பட்ட போதிலும், வி.பி.சிங்கின் அவசரநிலை ஆதரவை தி.மு.க. ஏன் விமர்சிப்பதில்லை?
4. 1980இல் இவர் உ.பி. முதல்வராக இருந்தபோதுதான், உ.பி. அரசின் ஆயுதப்படை போலீசு மொராதாபாத் முசுலிம்களை இனப்படுகொலை செய்து, இந்தியாவின் மதக்கலவர வரலாற்றில் புதுப்பரிணாமத்தை உருவாக்கியது. இவரின் ஆட்சியில்தான் ஆதிக்க சாதிப் பண்ணையார்களின் சட்டவிரோத ஆயுதப்படைகள் தாழ்த்தப்பட்டோர் மீது தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடுத்து நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்று குவித்தன. ஒவ்வொரு தாக்குதலுக்குப் பிறகும் "நிலைமை விரைவில் சரிசெய்யப்படும்' என்ற வெற்று அறிக்கையைத் தவிர, இவர் செய்தது எதுவுமில்லை. கான்பூருக்கு அருகேயுள்ள தஸ்தம்பூர் தாழ்த்தப்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, 1982இல் இவர் பதவி விலகவேண்டி வந்தது. 1984 சீக்கியப் படுகொலைக்காக 1989இல் மன்னிப்புக் கேட்ட வி.பி.சிங், தனது ஆட்சியில் கொலையுண்ட முஸ்லிம்களுக்காகவோ, தாழ்த்தப்பட்டோருக்காகவோ மன்னிப்பு எதையும் கேட்டதில்லை என்பது தொல்.திருமாவுக்கோ, தமிழக முசுலீம் முன்னேற்றக் கழகத்திற்கோ தெரியாதா?
இன்னும் ஏராளமான, உறுதியான தருக்கங்களுடன் புதிய ஜனநாயகத்தின் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. (நேரமிருப்பவர்கள் மேற்கண்ட சுட்டியை அழுத்தி படித்துக் கொள்ளலாம்) இக்கட்டுரைக்கு மறுப்பு என்கிற பெயரில் ”வி.பி.சிங்கை இழிவுபடுத்தும் புதிய ஜனநாயகம்” என்கிற தலைப்பில் ‘பார்ப்பனவாதி’ என்று எமது தோழர்களை வசைபாடியிருக்கிறார், விடுதலை ராசேந்திரன். ஆனால், அவருடைய அந்த நீண்ட பதிவினூடாக மேற்கண்ட கேள்விகளுக்கு நேரடியான பதில்கள் ஏதேனும் எழுதப்பட்டிருக்கிறதா என்று ஆராய்ந்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.
மேற்கண்ட பு.ஜ. கேள்விகளுக்கு [வி.பி.சிங்கின் பொது வாழ்க்கை காங்கிரஸ் அரசியலில் முடங்கிக் கிடந்தபோது, காங்கிரஸ் இழைத்த தவறுகளையெல்லாம் பட்டியலிட்டு அதை வி.பி.சிங் மீது சுமத்தி, அவற்றையெல்லாம் எதிர்த்தாரா என்று 'புதிய ஜனநாயகம்' கேள்வி எழுப்புவது - அதன் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறதே தவிர, நேர்மையான சமூகப் பார்வையை அல்ல. காங்கிரஸ் அரசியலில் மூழ்கிக் கொண்டிருக்காமல், அதன் சுயரூபத்தை அறிந்து வெளியேறி - காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலை தொடங்கியதுதான் வி.பி.சிங்கின் சிறப்பு.] என்கிற வரிகளைத்தான் தனது அதிகபட்ச பதிலாகத் தந்திருக்கிறார்.
இடஒதுக்கீட்டையும், அதனைச் சாதித்தார் என்று வி.பி.சிங்கையும், ‘காந்தி சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார் அதனால் அவர்தான் தேசத் தந்தை’ என்று சொல்வதைப் போல உருவகப்படுத்தி முட்டுக்கொடுத்து நிறுத்தப் படாதபாடுபட்டிருக்கிறார். அதன் பொருட்டு தான் பு.ஜ.வுக்கு பார்ப்பன பட்டம் சூட்டி, அகமகிழ்ச்சி கொள்ள முயன்றிருக்கிறார் பாவம்!
பார்ப்பன-வருணாசிரம படிநிலைகளில், பார்ப்பனன், சத்திரியன், வைசியன் ஆகிய வருணத்தாருக்கு சேவை செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்தனர் சூத்திர, பஞ்சம, சண்டாள வருணங்களைச் சார்ந்த உழைக்கும் மக்கள். அந்த உழைக்கும் மக்களை சட்ட நிருவாகத்தின் மூலம் மிரட்டிப் பணியவைத்து, உழைப்பையும் உடமைகளையும் சுரண்டிக் கொடுத்து பார்ப்பன சேவையாற்றியதைத் தவிர வேறொன்றும் செய்யாத பிறவருணத்தவர்களை இடஒதுக்கீட்டின் மூலம் சூத்திரர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பெற்றுத்தந்ததுதான் இவர்கள் வழிபடும் நீதிகட்சி முதல் வி.பி.சிங் வரையிலான ‘சமூக நீதி’ அரசுகளின் சாதனையாக இருக்கிறது. அதேநேரத்தில் வெகுசில பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்கள் இதன்மூலமாக சலுகைகளைப்(உரிமைகளை) பெற்றிருந்தாலும், இதனைச் சாதனையாக ஏற்கமுடியாது, இவை வெறும் சீர்திருத்தம் மட்டுமே. இந்த சீர்திருத்தத்தால் சமூகத்தில் ஒடுக்கப்பட்டுள்ள பெரும்பான்மையான மக்களுக்கு எந்த விடிவும் ஏற்படவில்லை. இதனாலேயே இவர்கள் முன்னிறுத்தும் இடஒதுக்கீட்டுக் கொள்கை ஏற்கத்தக்கதாக இல்லை என்பது பு.ஜ.வின் அழுத்தமான நிலைப்பாடு. இதனை, இடஒதுக்கீடு – ஒரு மார்க்சிய லெனினியப் பார்வை என்கிற சிறு வெளியீட்டின் மூலம் ஏற்கெனவே நேரடியாகப் பதிவு செய்திருக்கிறது புதிய ஜனநாயகம்.
ஆயிரமாண்டுகளாக நமது சமூகத்தை, உழைக்கும் மக்களை இழிவுபடுத்திய பார்பன கும்பலுக்கும், அவர்களின் எடுபிடிகளாக, அடியாளாக இருந்து கொண்டு நம்மக்களை அடிமை படுத்திவந்த ஆதிக்கசாதிக் கூட்டத்திற்கும் இடையில் நடைபெற்றுவரும் இந்த ‘இட ஒதுக்கீடு’ குறித்த குழாயடி சண்டையில் புரட்சிகர அமைப்புகளுக்கு என்ன வேலை இருக்க முடியும்? ஆளூம் வர்க்கச் சேவையாற்றுவதற்கு நடக்கின்ற போட்டா போட்டியில், இந்த மோசடியான ஆளும்வர்க்கத்தை துடைத்தெறிவதற்கு போராடும் புரட்சிகர அரசியல் இவ்விருகூட்டத்தையும் முற்றாக அழிப்பதைத்தான் முன்னிறுத்த முடியும். முன்னிறுத்துவோம்; இதில் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை.
இடஒதுக்கீட்டையும் அதனூடாக வி.பி.சிங்கையும் மேன்மை படுத்தி எழுதியிருக்கும் விடுதலை ராசேந்திரன், புரட்சிகர அமைப்புகளின், இடஒதுக்கீடு குறித்த மேற்கண்ட நிலைப்பாடுகளை குறைந்த பட்ச அறிவு நாணயத்தோடு பரிசீலித்திருக்கிறாரா என்கிற ஐயத்தையே அவரது பதிவு ஏற்படுத்துகிறது. இடஒதுக்கீட்டை எதிர்ப்பது நமது நோக்கமல்ல என்று தெளிவாக, அழுத்தமாக புதிய ஜனநாயகம் தெரிவித்திருக்கிறது. அதனை ஆதரிப்பதில் உள்ள பிரச்சினைகளையும் தொகுத்தளித்திருக்கிறது. அதன் மீதான விடுதலை ராசேந்திரனின் கருத்துக்கள் எதையும் நான் படித்ததில்லை. அவ்வாறு எதேனும் அவர் இதற்கு முன்னதாக எழுதியிருப்பாரேயானல் எனக்கு யாராவது அறியத்தாருங்கள்.
இந்த மோசடியான ஆளும்வர்க்கத்தை சுக்கு நூறாகப் பிளப்பதன் பொருட்டு வேலை செய்துவரும் புரட்சியாளர்கள், அதே ஆளும் வர்க்கத்தின் ஆகப்பெரும்பான்மையான கேடுகளுக்கும் துணை நின்ற, ஆளுவர்க்கப் பிரதிநிதியாகவே வாழ்ந்து மறைந்த வி.பி.சிங்கை மண்டல் பரிந்துரை என்கிற ஒன்றைக் கொண்டு ஒருபோதும் புனிதப்படுத்த முடியாது. போபர்ஸ் பீரங்கி ஊழல் என்றும் மண்டல் கமிசனென்றும் வி.பி.சிங் கூச்சலிட்டது ஓட்டுப் பொறுக்குவதற்காக மட்டும்தான். இதனால் பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு சிறு துரும்பளவேனும் பலனில்லை என்பது தெளிவாகத் தெரியும் போது அதற்காதரவாக குரல் கொடுப்பது முற்றிலும் பலனற்றது.
////////ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் - வி.பி.சிங் - புரட்சிகர மார்க்சிய லெனினியக் கட்சியின் உறுப்பினர்கள் அல்ல. ம.க.இ.க.வின் தத்துவார்த்தப் பார்வையில் கூற வேண்டுமானால், தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசியலில் இருந்த ஒருவரே, அந்த அரசியலுக்குள் அதிர்வுகளை நிகழ்த்தியவர் என்பதுதான். அந்த அதிர்வுகளின் தாக்கத்தைக் கவனத்தில் கொள்ளாமல் ஏற்கனவே இருந்த 'சமூக நிலையைக் குலைத்து விட்டாரே' என்று புலம்பும் பார்ப்பனியக் குரலோடு தன்னையும் சேர்த்துக் கொண்டு அதன் மூலம் தன் பங்கிற்கான 'சேற்றை' பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு வி.பி.சிங் மீது வீசுவது பார்ப்பனிய சார்புப் பார்வை அல்லவா? //////////
இங்கே நான் குறிப்பிட்டுள்ள புதியஜனநாயகத்தின் இடஒதுக்கீடு மீதான மதிப்பீடுகளை அறவே புறக்கனித்து, திருவாளர் ராசேந்திரன் ‘’ஏற்கெனவே இருந்த சமூக நிலையைக் குலைத்துவிட்டாரே...” என்று புதிய ஜனநாயகம் புலம்புவதாக எழுதியிருக்கிறார். ஏற்கெனவே இருந்த, இப்போது இருக்கின்ற சமூக நிலைமைகளை அடியோடு புரட்டிப் போடுவதுதான் புதிய ஜனநாயகத்தின் அரசியல் என்பது விடுதலையாருக்குத் தெரியாது போலும்! சொல்வது அவதூறாக இருந்தாலும் கொஞ்சமாவது பொருந்தச் சொல்ல வேண்டாமா?
அடுத்து, ம.க.இ.க.வின் திட்டத்தில் பார்ப்பன எதிர்ப்பு கைவிடப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளதுதான் இது அவதூறுப் பதிவு என்பதற்கான ஒரு சோற்றுப் பதம். ”இந்து எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு போன்ற பல்வேறு சூழல்களில் களப்பணிகளில் இணைந்திருக்கிறோம்....” என்பதாக இக்கட்டுரையினைத் தொடங்கியுள்ள விடுதலையார்தான், ம.க.இ.க. பார்ப்பன எதிர்ப்பைக் கைவிட்டுவிட்டதாகவும் திரிக்கிறார். இதில் எது உண்மை அய்யா?!
இவர் குறிப்பிட்டுள்ள 1998ஆம் ஆண்டிற்குப் பிறகு மட்டும் ம.க.இ.க. மேற்கொண்ட பார்ப்பன எதிர்ப்பு போராட்டங்களை மொத்தமாக இருட்டடிப்பு செய்வதாக இருக்கிறது இவரது இந்த கருத்து. 2003 –ல் தான் ”பார்ப்பனிய, மறுகாலணிய பண்பாட்டுப் படையெடுப்பிற்கு எதிரான போராட்டமாக”, பார்ப்பனிய பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.
இவர் மேற்குறிப்பிட்டுள்ள காலகட்டத்திற்குப் பிறகுதான் தில்லைப் போராட்டத்தினை ஆறுமுக சாமியைக் கொண்டு தொடங்கி இன்றுவரை அதே வேகத்தோடும் வீச்சோடும் நடத்திக் கொண்டிருக்கிறது. பார்ப்பன எதிர்ப்பு போராட்டங்களில் ம.க.இ.க.வின் செயல்பாடுகள் குறித்து தமிழக மக்களுக்குத் தெரியும், உங்கள் கட்சியிலுள்ள கீழ்மட்ட அணிகளுக்கும் நன்றாகவே தெரியும், பாவம் உங்களுக்குத்தான் தகவல் ஏதும் வரவில்லை போலும்!
///////"இன்றைய நிலையில் இந்திய மக்கள் மீது மூன்று மலைகள் - அமெரிக்கத் தலைமையிலான மேல்நிலை வல்லரசுகள், தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவம், நிலப் பிரவுத்துவம் ஆகியவை அழுந்திக் கொண்டிருக்கின்றன. இம் மூன்றும் தான் முக்கியமாக இந்திய மக்களின் எதிரிகளாகும்" - (ம.க.இ.க.வின் கட்சித் திட்டம்-1998). - என்று 1998 இல் திட்டத்தை வகுத்துவிட்டார்கள். //////
ம.க.இ.க. குறிப்பிட்டுள்ள அந்த மூன்று மலைகள், பொருளாதார ரீதியில் தேசத்தைச் அடிமைப்படுத்தி, அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரங்களையும் சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கிறது. அந்த சுரண்டல் வாத ஆளும் வர்க்கத்துக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் சேவை செய்யும் அமைப்பாகத்தான் பார்ப்பன பயங்கரவாதம் திகழ்கிறது, என்பதையும் பார்ப்பன பயங்கரவாதத்திற்கு எதிராகவும், மறுகாலணியத்துக்கு எதிராகவும் போராட்டங்கள் கூர்மை படுத்தப்படவேண்டும் என்ற ம.க.இ.க.வின் அறைகூவலெல்லாம் விடுதலையாரின் செவிகளை எட்டவில்லை போலும்!
ம.க.இ.க.வின் திட்டத்தை சுருக்கி, வெட்டி ‘தேவைக்கேற்ற வகையில்’ பயன்படுத்துகின்ற விடுதலையாரின் பார்வையில் நிறைந்திருக்கும் காழ்புணர்ச்சிக்கு என்ன பெயர் சூட்டியழைக்கலாம்? இவரது பார்ப்பன எதிர்ப்பை, ம.க.இ.க., பு.ஜ., மீதான அவதூறுகளை பாராட்டுபவனைக் கொண்டு பார்த்தாலே இவரது கருத்துக்களின் தரம் எளிதாகப் புரியும். இவரது கட்டுரையினை அட்சரம் பிசகாமல் தனது தளத்தில் பதிவிட்டு, நன்றியையும் பொங்கி வழியவிட்டிருக்கிறான், சிபிஎம் கட்சியின் செல்வப்பெருமாள்.
வி.பி.சிங்கை பு.ஜ. விமர்சித்திருப்பது பார்ப்பனர்களைக் குளிர்வித்திருக்கிறது, என்று உருவகப்படுத்தும் விடுதலை ராசேந்திரனுக்கு ஒரேயொரு கேள்வி. உங்களுடைய இந்த கூற்று, பார்ப்பனியத்தில் கேவலம் பூநூலைக் கூட இழக்க மனமின்றி உழலும் சி.பி.எம். யோக்கியர்களைக் குளிர்வித்திருக்கிறதே, இதற்குப் பெயர்தான் பார்ப்பன எதிர்ப்பா? உங்களின் கட்டுரை பு.ஜ.வை சிறுமைபடுத்தவில்லை, மாறாக அதனை சி.பி.எம். ஆதரிப்பதுதான் உங்களைக் கடுமையாகச் சிறுமை படுத்தியிருக்கிறது. உங்களை நோக்கி வரும் பாராட்டுக்களே உங்களுக்கு எதிர்வினையாக மாறியிருக்கிறது. இதையாவது கொஞ்சம் பகுத்தறிவு கண் கொண்டு பாருங்களேன்!
தோழமையுடன்,
ஏகலைவன்.
தொடர்புடைய பதிவுகளையும் கீழ்கண்ட சுட்டியைப் பயன்படுத்தி அவசியம் படியுங்கள் தோழர்களே!
1. ஆண்ட சாதிகளும், இடஒதுக்கீட்டின் உள் அரசியலும்...
2.புரளி பேசும் போலி தமிழ்தேசியவாதிகள்
3. இடஒதுக்கீடு: சாதி இந்துக்களுக்கு வக்காலத்து தான் சமூகநீதியா?
4. பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு: மீண்டும் தலைதூக்கும் பார்ப்பனத் திமிர்! சமூகநீதிக் கட்சிகளின் சமரசம்!!
5. குஜ்ஜார் போராட்டமும், சாதிக் கொழுப்பெடுத்த பார்ப்பனவெறி டைம்ஸ் ஆப்பு இந்தியாவும்!!