Monday, December 29, 2008

”கழிசடையைவிட கூவம் எவ்வளவோ மேல்”, “சிபிஎம் கட்சியைவிட சரத்குமாரின் ‘சமத்துவ...’கட்சியும் எவ்வளவோ மேல்” - ‘தோலர்’ கனகசாமி

அன்பார்ந்த தோழர்களே!

ஏகாதிபத்தியமாக வளர்ந்து கொக்கரிக்கும், சர்வ வல்லமையும் பொருந்திய சர்வதேச பயங்கரவாத முதலாளித்துவம், மோசடியையும் சூதாட்டத்தையும் ‘வளர்ச்சி’ என்று சொல்லி உலகை வளைத்த முதலாளித்துவம், அதன் அகில உலகத் தலைமையகமான அமெரிக்க தெருக்களில் இன்று ஊதி அனைத்து வீசப்பட்ட துண்டு பீடியைப் போன்று நைந்து கிடக்கிறது. இதனைக் கொண்டாடும் பொருட்டும், முதலாளித்துவ பயங்கரவாதத்தை மேன்மேலும் எதிர்த்து வீழ்த்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் விதமாகவும் ”முதலாளித்துவம் கொல்லும்! கம்யூனிசமே வெல்லும்!!” என்கிற முழக்கத்தோடு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னனி, வருகிற ஜனவரி’25/2009 அன்று சென்னை-அம்பத்தூரில் “முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு” நடத்தவிருக்கிறது.

இதற்கான வேலைகளில் வீச்சாக ஈடுபட்டிருக்கும் எமது தோழர்களை வழிமறித்து தாக்குவதும், துண்டுப்பிரசுரங்களைப் பிடுங்கிக் கொளுத்துவதையும் “நக்சலைட்டுகள்....” பீதியூட்டியும் கேவலமாகக் கூப்பாடு போட்டு ஆட்காட்டி வேலை செய்து கொண்டிருக்கிறது போலிகம்யூனிச சி.பி.எம்.மும் அதன் பத்திரிக்கையுமான தீக்கதிரும்.

இந்த யோக்கியவான்களின் அரசியலை யாரும் கேள்விக்குள்ளாக்கக் கூடாதாம். ஜெயலலிதாவின் முந்தானைக்குள் புகுந்து கொண்டு வரும் நாடாளுமன்றத்தேர்தலில் ‘புரட்சி’ செய்யவிருக்கும் கேவலத்தை அவர்களது கட்சிக்குள் இருக்கும் நேர்மையானவர்கள் கேட்டாலே பாய்ந்து பிடுங்குவது போன்ற ‘ஜனநாயக’த்தைக் கடைபிடித்துவரும் அக்கும்பல் எமது தோழர்களை கொலைவெறியோடு தாக்குவதும், “ஆயுதப்பயிற்சி செய்கிறார்கள்....” என்று பிதற்றுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளது, ஒன்றும் ஆச்சர்யமானதல்ல.இந்தியாவின் போலிஜனநாயகத்தையே உச்சிமுகர்ந்து பாராட்டிப் போற்றி வழிபடும் ‘காமரேடுகள்’ அவர்களது கட்சிக்குள் மட்டும் என்ன உண்மையான ஜனநாயகத்தையா வைத்திருக்க முடியும்?

அவர்களின் கேவலமான பிழைப்புவாத அரசியலைக் கேள்விக்குள்ளாக்கும் நபர் யாராக இருந்தாலும் ‘நக்சலைட்’ பட்டம் வழங்கி கவுரவிக்கும் காமரேடுகள், நம்மை விடக் கூர்மையாக, நம்மைவிட நேரடியாக அப்பிழைப்புவாத முகாமைப் பார்த்து “கம்யூனிஸ்ட் கட்சியல்ல அது(சி.பி.எம்.) கந்துவட்டிக் கூடாரம் மட்டுமே” என்று அக்கட்சியிலிருந்து சமீபத்தில் வெளியேறிய, திருநெல்வேலி மாநகரக் கட்சியின் செயலாளராக இருந்த கனகசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார். அவரையும் ’நக்சலைட்’ என்று தமது வழக்கமான முத்திரையைக் குத்தமுடியாது? ஏனென்றால் அவர் சிபிஎம் என்கிற கழிசடையின் மீது மேற்கண்டபடி விமர்சனம் வைத்துவிட்டு சரத்குமார் என்கிற கூவத்தோடு சங்கமித்திருக்கிறார்.திருநெல்வேலி கனகசாமி முதல் சென்னை கே.கே.நகர் கட்டைப்பஞ்சாயத்து புகழ் காமராசு வரை சரத்குமாரிடமும் விஜய்காந்திடமும் சென்றடைவதற்கான காரணத்தை நாம் ஆராயவேண்டிய அவசியமில்லை, போலிகம்யூனிசக் கட்சியின் அடிப்படை எதார்த்தமே அதில்தான் இருக்கிறது. ஆனால், கனகசாமி அக்கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஒருவரின் மீது வைத்திருக்கின்ற குற்றச்சாட்டுக்கள் இப்போது குமுதம் ரிப்போர்ட்டர் 1.1.2009 இதழில் வெளியாகியுள்ளதை நாம் கண்டிப்பாக ஆராய வேண்டியுள்ளது. சிபிஎம் என்கிற ‘புனிதமான’ சாக்கடையின் குமட்டலெடுக்கும் கேவலங்களை இதனைப் படிக்கின்ற தோழர்கள் சகித்துக் கொண்டு தொடரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.திருநெல்வேலி கனகசாமி வைக்கின்ற குற்றச்சாடு பலவாக இருந்தாலும் அதில் மையமான, சாரமான, கவனிக்க வேண்டிய குற்றச்சாட்டு மூன்று. அக்கட்சியின் முக்கியப் பொறுப்பிலிருக்கும் நபர்கள் பலர் வெளிப்படையாகவே கந்துவட்டி, மீட்டர்வட்டி போன்ற ரத்தம்குடிக்கும் தொழிலைச் செய்துவருவதையும் அதன் பொருட்டு நடைபெறும் கட்டைப் பஞ்சாயத்துகளுக்கு மையமாக அக்கட்சியின் அலுவலகங்கள் பயன்படுத்தப்படுவதையும் முதலாவதாகக் கொள்வோம். இரண்டாவதாக, அக்கட்சியில் சாதிப் பாகுபாடு, தேவர் ஆதிக்க சாதிவெறியும் வெளிப்படையாக இருப்பதாகவும் சொல்கிறார். மூன்றாவது குற்றச் சாட்டுதான் மேற்கண்ட இரண்டையும் விட அதிகம் குமட்டலெடுக்கும் வகையில் இருக்கிறது. அது, மாநில அளவிலான தலைவர்கள் அதே கட்சியினைச் சேர்ந்த மாதர் சங்கத்தைச் சார்ந்த பெண்களுடன் கட்சி அலுவலகத்தையே லாட்ஜாக மாற்றிக் கொண்டு பாலியல் உறவுகொள்வதாகவும் சொல்லியிருப்பது.

இதனை அவரது வார்த்தையிலேயே கேட்போம். “பொதுவாக சமூக விரோதிகள், பெருநிலக் கிழார்கள், குடிகாரர்கள், கந்துவட்டிக் காரர்களை கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்க்கக் கூடாது என்பது விதி. ‘நாளை எண்ணி வட்டி சேர்க்கும் நாய்களுக்கு இங்கு இடமில்லை’ என்று நாங்கள் பாட்டுப்பாடியே கட்சி வளர்த்தோம். ஆனால், நெல்லையிலோ நிலைமை தலைகீழ். கட்சியின் உயர்பதவியான மாநிலக் குழு உறுப்பினர் கருமலையான் தலைமையில் ஒரு கந்துவட்டிக் குழுவே இருக்கிறது. இவர்களுக்கென உள்ள ஓர் ஏஜெண்ட் இவர்களது பணத்தை பத்து சதவிகிதத்திற்கு வட்டிக்கு விட்டு ஐந்து சதவிகிதத்தை இவர்களுக்குக் கொடுக்கிறார். குழந்தைவேலு என்கிற தீக்கதிர் ஏஜெண்ட், பல லட்ச ரூபாயை வட்டிக்கு விட்டுவிட்டு அந்தப் பணத்தைக் காப்பாற்றவே கட்சிக்கு வந்தவர். இதெல்லாம் பற்றி மாவட்டச் செயலாளர் பழநியிடம் சொன்னால் ‘அது மாற்றுப் பொருளாதார ஏற்பாடுதானே?’ என்று அவர் அலட்சியமாகச் சொல்லி வந்தார்....”

”இந்த கனகசாமி, சிபிஎம் கட்சியை விட்டு வெளியேறியதை நியாயப்படுத்துவதற்காகவே இப்படி இட்டுக்கட்டி சொல்லியிருக்கிறார்”, என்று கூட இப்பதிவினைப் படித்தபிறகு வெட்கம் சிறிதுமின்றி அவர்களது தீக்கதிர் எழுத வாய்ப்பிருக்கிறது. ஆனால், கருணாநிதியிடமிருந்து வெளியேறி ஜெயாமாமியின் முந்தானைக்குள் தமது அரசியலை முடிந்து வைப்பதற்காக இவர்கள் பேசியும், எழுதியும் வரும் காரணங்களில் இருக்கின்ற வெளிப்படையான போலித்தனம் எதுவும் திருநெல்வேலி கனகசாமியின் வார்த்தைகளில் இல்லை. இதனை நான் சொல்ல வில்லை, கனகசாமி யார்மீது குற்றச்சாட்டு வைத்தாரோ அந்த கருமலையானின் பதிலைப் படித்தாலே அந்த குற்றச்சாட்டுக்களில் உள்ள உண்மை தெரிகிறது.

“கனகசாமி ஒரு அப்பாவி. சூதுவாது தெரியாதவர். பொருளாதாரச் சிக்கல் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம். ஆனால், கட்சியிலுள்ள பெண்களைப்பற்றி அவர் தவறான சில கருத்துக்களைச் சொல்லியிருப்பதுதான் நெருடுகிறது. சில தோழர்கள் சில பெண்களைக் காதலிப்பது எங்களுக்கும் தெரியும். வரம்பு மீறக் கூடாது என்று அவர்களை எச்சரித்து அவர்கள் வீடுகளில் பேசி திருமண ஏற்பாடுகளைச் செய்தும் வருகிறோம். அதைத்தான் கனகசாமி தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார் என்று எண்ணுகிறேன்.கந்து வட்டியைப் பொறுத்தவரை அது மாவட்ட மாநாடுகளில் எழுப்பப்பட்ட பிரச்சினைதான். என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தக்கம். பணத்தை வட்டிக்கு விடுவதை எப்படி மறைக்க முடியும்? பூனைக்குட்டி வெளியே வந்துவிடாதா? கட்சியில் சாதியிசம் இருப்பதாகச் சொல்வது மிகவும் தவறு. கட்சியின் உயர் பொறுப்பில் உள்ள நாடார் மற்றும் தலித்துகளின் பட்டியலை உங்களுக்கு நான் தரத் தயார். தோழர் கனகசாமி ஏன் இப்படியெல்லாம் சேற்றை வாரி இறைக்கிறார் என்பது எனக்குப் புரியவே இல்லை” என்று கருமலையான் சோகமே உருவாகச் சொல்லி முடித்திருக்கிறார். இந்த மானங்கெட்ட பதில்கள் மேற்கண்ட கனகசாமியின் குற்றச்சாட்டுக்களை மறுப்பதாக இல்லாமல் அதனை மேன்மேலும் வலுப்படுத்துவதாகத்தானே இருக்கிறது?

பிழைப்புவாதத்திலிருந்து பாசிசத்திற்கு சீரழிந்து கொண்டிருக்கும் சி.பி.எம். கட்சியில் இன்னும் கொள்கை என்று ஏதாவது மிச்சமிருக்கமுடியுமா? சக ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளைவிடக் கேவலமாக மக்கள் மத்தியில் அவமானப்பட்டு வரும் அக்கட்சியினை ”உட்கட்சி போராட்டம் நடத்தி மீட்டெடுத்து விடுவேன்” என்று உறுதியாக நம்பும் தோழர்கள், தாம் இவ்வாறு நம்புவதற்கான நேர்மையான காரணங்களில் ஏதாவது ஒன்றைக் காட்டுங்கள் பார்க்கலாம். இவ்வளவு அம்பலப்பட்ட பிறகும் அக்கட்சியில் உங்களை ஒட்டிக் கொண்டிருக்க வைத்திருக்கும் அவலம் என்னவாக இருக்கலாம், அது வேறொன்றுமில்லை தமது கட்சியின் நேர்மையான அணிகளை அரசியல் படுத்தாமல் ‘பாதுகாப்பாக’ வைத்திருப்பதில்தான் சிபிஎம் கட்சியின் உயிர் இன்னும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது என்பது மட்டுமே நிதர்சனமாக இருக்கிறது.


தோழமையுடன்,
ஏகலைவன்.
yekalaivan@gmail.com

படங்கள் குமுதம் ரிப்போர்ட்டர் 01.01.2009 இதழிலிருந்து பதியப்பட்டது.

Saturday, December 27, 2008

சி.பி.எம். அம்பிகளின் தீக்கதிரும், பத்திரிக்கா தர்மமும்......

சி.பி.எம். கட்சியின் கேவலமான அரசியல் செயல்பாடுகள் குறித்து அக்கட்சியிலிருந்து சமீபத்தில் வெளியேறிய தோழர் ஒருவர் என்னுடன் பேசிக் கொண்டிருக்கும்போது, “மீண் கெட்டு அழுகும்போது அதன் தலைப்பகுதியிலிருந்துதான் அழுகத் தொடங்கும் அதேபோல இந்த போலிகம்யூனிஸ்டுகளை அழிவுக்கு இட்டுச்செல்லும் அழுகுனி அரசியலும் அதன் ’தலை’மையிலிருந்தே அழுகத் தொடங்கியிருக்கிறது தோழர்....” என்று அற்புதமாகச் சொன்னார். இத்தனையாண்டுகாலம் அக்கட்சியின் அரசியல் பாதை நேர்மையாக இருக்கும் என்று நம்பி ஏமார்ந்த விரக்தியில் அவர் ஆத்திரத்துடன் வெளிப்படுத்திய கருத்து இது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு பார்ப்பன-இந்துவெறி செய்திகளை விதைக்கும் இந்து நாளேட்டில் அப்பத்திரிக்கையின் ஆசிரியர்குழுவைச் சேர்ந்த மாலினி பார்த்தசாரதி என்பவர் ஈழ அரசியல் போராட்டம் குறித்து சில அவதூறு கருத்துக்களை எழுதியிருந்தார். ஈழ மக்களின் துயருக்காக குரல் கொடுக்கும் அமைப்புகளை தனது பார்ப்பனக் கண்ணோட்டத்தால் கேவலாமகச் சாடியிருந்தார். இதனைக் கண்டித்து பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் கோவையில் அப்பத்திரிக்கையின் அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஈரோடு நகரில் அதே அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் அப்பத்திரிக்கைக்கு தீவைத்து கொள்ளுத்தும் போராட்டத்தையும் நடத்தினார்கள்.

உடனே பார்ப்பன அம்பிகள் கையில் முழுமையாக அடைக்கப்பட்டிருக்கும் தமிழக ஒட்டுமொத்த பத்திரிக்கையாளர்கள் அமைப்பும் பெ.தி.க. தோழர்களின் போராட்டத்தை வன்மையாகக் கண்டித்தன. கோவையில் பத்திரிக்கையாளர் கூட்டமைப்பு ஒன்று சேர்ந்து அத்தோழர்கள் ‘பத்திரிக்கா தர்மத்து’க்குத் தடையாக இருப்பதாகவும் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றினார்கள். அவ்வளவுதான். ஆனால், ஈழ அரசியலில் புரட்டுக்களை எழுதி ஈழ மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் போலிகள் என்றும் சாடி எழுதியிருந்த அப்பத்திர்க்கையினைக் கண்டிக்கத்திராணியற்றுக் கிடந்த போலிகம்யூனிச கழிப்பறையான தீக்கதிர், பெ.தி.க. தோழர்களைக் கண்டித்து இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக தலையங்கமே எழுதியது.

அதே இந்து நாளேட்டில் பார்ப்பன-இந்து பயங்கரவாத கண்ணோட்டத்தோடு எழுதப்பட்ட போது அது குறித்து எந்த கருத்தையும் எதிர்ப்பையும் வெளிக்காட்டாத இந்த போலிகம்யூனிச அம்பிகள் கூடாரம், ஈழ மக்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்புகளை நோக்கி வசைபாடுவதற்கு அந்த பார்ப்பன-இந்துவெறிப் பத்திரிக்கையோடு தோளோடு தோள்நின்றது கடுமையாகக் கண்டிக்கத்த்க்கது. அதே இந்து நாளேட்டின் என்.ராம் அக்கட்சியின் பொலிட்பீரோவைவை விட அதிக அதிகாரம் படைத்தவர்; என்கிற நிலையில் தீக்கதிர் இரண்டு நாளோடு தனது அவதூறுகளை நிறுத்திக் கொண்டதே ஆச்சர்யமான விசயம்தான்.

ஈழ அரசியல் குறித்து இந்து பத்திரிக்கையின் நிலைப்பாடு எப்படியாவது இருந்துவிட்டுப் போகட்டும் அதனை எதிரிகளோடு ஒன்று சேர்த்து ஒதுக்கித்தள்ளிவிடலாம். ஆனால், அந்த பார்ப்பன-இந்துதேசியக் கொழுப்பெடுத்த அவதூறுகளைத் தன் தலையில் சுமந்து கொண்டு இங்கு விஷத்தை விதைக்கத் துணைநிற்கும் துரோகிகளான போலிகளை என்ன செய்வது? போலிகளை இப்படி அரசியல் ரீதியாக ஏதாவது நாம் விமர்சித்து எழுதிவிட்டால் அல்லது பேசிவிட்டால், “மறைமுகத் தலைமை.....” என்று பிதற்றுவது, ஆயுதங்களுடன் வந்து சாமியாடுவது என்று தங்களது இயலாமையைக் கடைவிரிக்கின்றனர்.

இப்போது எமது அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வருகிற 25 ஜனவரி-2009 அன்று நடத்தவிருக்கும் ‘முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்’டிற்காக பிரச்சாரம் செய்து நிதி வசூலித்துக் கொண்டிருந்த தோழர்கள் மீது பேடித்தனமாக கொலைவெறித்தாக்குதல் நடத்திவிட்டு, எமது தோழர்களின் அரசியல் ரீதியிலான எதிர்வினையைத் தாக்குபிடிக்க முடியாமல் பார்ப்பன-இந்துவெறிப் பாசிசப் பத்திர்க்கைகளான தினமலர், தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ்..... போன்ற பயங்கரவாதப் பத்திரிக்கைகளைவிடக் கேவலமாக முழுக்க முழுக்க அவதூறூகளாலான செய்தியை நேற்றைய தீக்கதிரில் வெளியிட்டுள்ளது.தீக்கதிரில் இப்படி எழுதி கூப்பாடு போடுவதற்கான நெருக்கடியை அவர்களுக்கு உருவாக்கியது நமது வினவு வலைதளம்தான் என்பது தீக்கதிரில் வெளியாகியுள்ள அந்த நாலு கால செய்தியே வெளிப்படுத்துகிறது. “பல்லாவரம் பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம்....” என்று தினமலரிடம் கடன் பெற்ற வார்த்தைகளைக் கொண்டு தனது புனைவைத் தொடங்கியிருக்கிறது அப்பத்திரிக்கை. அதன் தொடர்ச்சியாக ”தனி ஈழத்திற்காக குரல் கொடுத்தார்கள் எனவே நாங்கள் தட்டிக்கேட்டோம். இது குறித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் எழுதியிருக்கிறது.

அங்கு சிபிஎம் குண்டர்களால் தாக்கப்பட்ட எமது தோழர்கள் அருகாமையில் உள்ள திருநீர்மலை, பல்லாவரம் மலை, திரிசூலம் மலை..., இன்னும் ஏரி குளங்களிலெல்லாம் ஆயுதப்பயிற்சி எடுப்பதாகவும் அதனை தீக்கதிரின் ஆசிரியர்குழு ‘லைட்’ அடித்து பார்த்ததாகவும் விவரமாக, இட்டுக்கட்டி கழிந்திருக்கிறது. இதனைப் பார்த்து வெட்கப்பட்டு, சில வருடங்களாக அக்கட்சியில் உறுப்பினராகச் செயல்பட்டதை நினைத்து தலைகுணிந்தவாறு நான் மேற்குறிப்பிட்ட தோழர் என்னிடத்தில் அப்பத்திரிக்கையினைக் கொடுத்தார்.

கருணாநிதி, ஜெயலலிதாவின் மூத்திரத்தைக் குடித்து திளைப்பதற்காக அந்த சந்தர்ப்பவாத பன்றிகள், அக்கட்சியின் நேர்மையான அணிகள் பெரிதும் மதிக்கும் அப்பத்திரிக்கையையே இவ்வளவு கேவல்மாகப் பயன்படுத்துகிற செய்தியை நாம் இன்னும் வீச்சாக அக்கட்சியின் உறுப்பினர்களிடையே கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. அவர்களைக் கடுமையாக அச்சுறுத்தும் புரட்சிகர அரசியலை அக்கட்சியின் நேர்மையான அணிகளிடம் நேரடியாக விரைவாகக் கொண்டு சேர்க்க வேண்டியிருக்கிறது. சேர்ப்போம் அப்போலிகம்யூனிஸ்டுகளின் பிழைப்புவாத அரசியலின் அடித்தளத்தைத் தகர்ப்போம்.

நட்புடன்,
ஏகலைவன்.