Saturday, June 28, 2008

சி.பி.எம். கட்சியின் 'தாரக மந்திரம்'...........





சிபிஎம் கட்சியைச் சார்ந்த ஒரு முதிய தோழரிடம் தற்செயலாக அக்கட்சியின் போலி அரசியல் குறித்து நாம் பேச நேரிட்டது. நந்திகிராமத்து அயோக்கியத்தனங்கள் முதலாக விழுப்புரம், காரப்பட்டு சம்பவம் வரை மற்றும் மத்திய காங்கிரசு கொள்ளைக் கும்பலுடன் சேர்ந்து அக்கட்சி செய்துவரும் மோசடிகளையும் அத்தனை கேவலங்களையும் கடுமையாக நாம் சாடியபோது, மறுபேச்சில்லாமல் ஆமோதித்தார். இடையிடையே "என்ன செய்வது தோழர்" என்றும் நொந்து கொண்டார்.

"இத்தனை கேவலங்களையும் சகித்துக் கொண்டு நீங்கள் ஏன் தோழரே அக்கட்சியில் உறுப்பினராகத் தொடருகிறீர்கள்?" என்று கேட்டோம். அதற்கு அவர் சாதாரணமாகச் சொன்ன பதில்தான் அக்கட்சியின் தாரக மந்திரமாக உள்ளதாக அவரே சொன்னார். அது......

"முட்டாள் தனமா வந்துட்டோம்!
புத்திசாலித்தனமா பொழைச்சிக்குவோம்!!" என்பதுதான்.

இதன்படி பார்த்தால் அக்கட்சியின் மாநிலத் தலைவர்கள் 'பெரிய புத்திசாலிகள்'தான்; அவர்களைவிட அப்போலிக் கும்பலின் 'பொலிட்பீரோ' என்ற அரசியல் தலைமைக் குழு தலைவர்களோ மாபெரும் புத்திசாலிகள்தான் போலும். இவர்களெல்லாம் கட்சிக்குள் வரும்போது முட்டாள்தனமாக வந்தவர்கள் போல் தெரியவில்லை, அவர்கள் புத்திசாலித்தனமாகவே வந்து புத்திசாலிகளாகவே பிழைத்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

இதைத்தான் 'அவங்க' பாரதி "நாயும் பிழைக்கும் இப்பிழைப்பு" என்று பாடினாரோ???!!!!

Sunday, June 22, 2008

"123 ஒப்பந்தம் நிறைவேறாமல் இருப்பது நாங்கள் ஓட்டுப் பொறுக்கியதன் சாதனையல்லவா?" - சிபிஎம் குரூப்ஸ் ஆப்பு கம்பெனீஸ் பிரைவேட் லிமிட்டெட் கேள்வி!!!!!

சிபிஎம் என்கிற போலி கம்யூனிச கட்சியின் இணைய பிரதிநிதியாக இருந்த கோமாளி சந்திப்பு என்கிற செல்வப் பெருமாளைத் தொடர்ந்து, இப்போதுதான் அக்கட்சியின் வேறு சிலரும் வெகுவாக வலையுலகில் காணக் கிடைக்கிறார்கள். அப்படி ஆர்குட் வாயிலாக நம்கண்ணில் பட்டது ஒரு வலைதளம். அத்தளத்திற்குச் சொந்தமானவர் 'தோலர்' கவின்மலர் அவர்கள்.

புதிய தோழராச்சே இவராவது சந்திப்புக்கு மாற்றாக விவாதகளத்தில் இருப்பாரா பார்க்கலாம் என்று முயலும் விதமாகப் பதிவிட்ட எனது பின்னூட்டங்கள் பலவற்றை, சந்திப்பை விஞ்சும் வகையில் இருட்டடிப்பு செய்து தானும் அதே போலி முகாமின் பிரதிநிதிதான் என்பதை வெளிப்படையாக நிரூபித்திருக்கிறார். (அவர் இருட்டடிப்பு செய்த ஒருசில பின்னூட்டங்களை எனது தளத்தில் முந்தைய பதிவுகளில் பதிவிட்டுள்ளேன்) எனவே, எத்தனையெத்தனை வலைதளங்கள் போலிகளின் சார்பாக நடத்தப்பட்டாலும், அவையனைத்தும் விவாதங்களை இருட்டடிப்பு செய்தல் என்கிற பழைய மொந்தையிலேயே வழங்கப் படும் புதிய கள்தான் என்பது திண்ணமாகிறது.

அவருடனான எனது விவாதத்தில் கீழ்கண்ட பதிலை அவர் தெரிவித்ததோடு "இதற்கு தெளிவான பதில் வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டார். அவரது கோரிக்கையினை ஏற்று, தோழர் கோபா அவர்களின் தளத்திலிருந்து கீழ்கண்ட பதிவினை மீள்பதிவிடுகிறேன்.

இதனைத் தொடர்ந்து அவரோ அவர் சார்பாக வேறு எவர் வேண்டுமானாலும் எம்முடன் விவாதிக்க வந்தால் அனைத்து பின்னூட்டங்களையும் பதிப்பித்து விவாதம் தொடர்ந்து நடத்தப்படும் என்கிற உத்திரவாதத்தை உறுதிப்படுத்திக் கொள்கிறேன்.

////ஆமாம்! நீங்கள் வோட்டு பொறுக்கிகளாக இல்லாமல் இருப்பதால் தான் அணு ஆயுத ஒப்பந்தத்தை எதிர்த்து உங்களால் போஸ்டர் ஒட்ட மட்டும், வாய் கிழிய பேச மட்டும், பக்கம் பக்கமாக திட்டி எழுதவும், ஆர்ப்பாட்டம் பண்ணவும் மட்டும் முடிந்தது. நாங்கள் வோட்டு பொறுக்கிகளாக இருப்பதால் தான் எங்கள் எம்.பி க்களை வைத்து கொண்டு ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க முடிந்தது. ////


123 ஒப்பந்தமும் போலி கம்யூனிஸ்டுகளின் நீலிக் கண்ணீரும் !


பிரணாப் முகர்ஜி போட்ட கள்ளத்தனமாக இராணுவ ஒப்பந்தம் 2005-இலேயே அம்பலமாகிவிட்டது. அமெரிக்காவின் ஆணைப்படிதான் ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது என்பதும் அடுத்து அம்பலமானது. எனினும் காங்கிரஸ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அப்போதெல்லாம் மார்க்சிஸ்டுகள் திரும்பப் பெறவில்லை. மாறாக, அமெரிக்க இராணுவமும் இந்திய இராணுவமும் மே.வங்களத்திலேயே கூட்டு போர் ஒத்திகை நடத்துவதற்கு போலீசு பாதுகாப்புக் கொடுத்தாரக்ள்...

"அணு ஆயுத ஒப்பந்தத்துக்கு எதிராகப் எதிராகப் பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்போவதாக" என்ற சென்ற ஆண்டு பூச்சாண்டி காட்டினார் பிரகாஷ் காரத். "அப்படி தீர்மானம் கொண்டு வந்தால் இந்த அரசே இருக்காது" என்று பிரணாப் முகர்ஜி மார்க்சிஸ்டுகளை மிரட்டினார். உடனே சரணடைந்தார்கள்.இன்றைக்கு சவடால் அடிக்கிறார்கள்.


"உலகமயமாக்கத்தை எதிர்க்கவில்லை, அது மனிதமுகத்துடன் இருக்கவேண்டும்", "சிறப்பு பொருளாதார மண்டலத்தை எதிர்க்கவில்லை, விவசாயிகளுக்கு போதுமான நட்ட ஈடு கொடுத்து நிலத்தைப் பறிமுதல் செய்ய வேண்டும்". "பொதுத்துறைகளைத் தனியார்மயமாக்குவதை எதிர்க்கவில்லை, தொழிலாளர்களின் வேலைக்கு உத்திரவாதம் தரவேண்டும்" - இதுதான் போலி கம்யூனிஸ்டுகளின் அரசியல். இப்போது , "அணுசக்தி ஒப்பந்தம் வேண்டாம் என்று சொல்லவில்லை, நாட்டின் இறையாண்மைக்கு பெரும் பாதிப்பு வந்துவிடக் கூடாது" என்று பசப்புகிறாரக்ள்.


"தனிப் பெரும்பான்மை இல்லாத ஒரு சிறுபான்மை அரசு துரோகத்தனமான ஒப்பந்தத்தைத் திருட்டுத்தனமாக இந்திய மக்கள் மேல் திணித்திருக்கிறது. இந்த அரசைக் கவிழ்ப்பதில் என்ன குற்றம்?" என்று நாடாளுமன்ற அரசியலின் வரம்புக்குட்பட்டு கேள்வி எழுப்பும் தைரியமும்கூட இவர்களுக்கு இல்லை...

"இந்த அரசு நிலைக்குமா என்பதை நாங்கள் ஏன் சொல்ல வேண்டும், அதை காங்கிரசு முடி செய்து கொள்ளட்டும்" என்று பேடித்தனமாக மழுப்புகிறார்கள்...இந்த பசப்பல்களுக்கும், மழுப்பல்களுக்கும் காரணம் இருக்கிறது. "பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தரகு முதலாளிகளுக்கும் சலுகைகளை வாரி வழங்குவதன் மூலம் தான் நாட்டைத் தொழில்மயமாக்கி முன்னேற்ற முடியும்" என்ற கருத்தில் மன்மோகனுக்கும் மார்க்சிஸ்டுகளுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை.அதனால்தான் சிங்கூரிலும் நந்திக்கிராமிலும் எத்தகைய அட்டூழியங்கள் நடந்தாலும் மார்க்சிஸ்டுகளுக்குக் கொள்கை பூர்வமாக ஆதரவுக் கரம் நீட்டுகிறார் மன்மோகன் சிங், " அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்குமாறு புத்ததேவைத் தொலைபேசியில் கூப்பிட்டு உரிமையோடு கோரிக்கை வைக்கிறார்.கட்சித் தலைமை கூடி முடிவெடுப்பதற்கு முன்னதாகவே "காங்கிரசு அரசை கவிழ்க்க மாட்டோம்" என்று முந்திக் கொண்டு அறிக்கை விடுகிறார் ஜோதிபாசு.


அது மட்டுமல்லல் டாடா, அம்பானி போன்ற தரகு முதலாளிகள் முகம் சுளித்து வருத்தப்படும் படியான காரியம் எதையும் மார்க்சிஸ்டுகள் ஒருக்காலும் செய்ய மாட்டார்கள்.மேலும், அமெரிக்காவின் வால் மார்ட்டையும் கொலைகார யூனியன் கார்பைடையும் மேற்கு வங்கத்தில் தொழில் தொடங்க பாக்கு வைத்து அழைக்கும் மார்க்சிஸ்டு கட்சி, அமெரிககாவுக்கு எதிராக அத்து மீறிப் பேச முடியுமா? அதனால்தான் அடக்கி வாசிக்கிறார்கள்.


"முழுவதும் நனைந்த பின் முக்காடு எதற்கு?" என்கிறார் மன்மோகன் சிங். "முக்காட்டை எடுப்பதற்கு மட்டும் நாங்கள் அனும்திக்கவே மாட்டோம்" என்று முழங்குகிறார்கள் மார்க்சிஸ்டுகள் இதுதான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருவருக்கும் உள்ள 'கொள்கை' வேறுபாடு.இன்றைக்கு 'பாஸ்' பொத்தானைத்தான் அமுக்கினோம் என்கிறார் யெச்சூரி.நெருக்கடி எப்ப வந்தது என்று கேட்கிறார்.


இவர்களுடைய வலைப்பதிவர் சந்திப்பு சொல்கிறார்...இந்த ஒப்பந்தமே நாங்கள் எதிர்த்தது (?) காரணமாகத்தான் மக்களுக்கு தெரியவந்துருக்கிறது என்கிறார்.


இது குறித்து தோழர் சந்திப்புக்கு சின்ன கட்டபொம்மன் அவர்கள் போட்ட பதில் பின்னூட்டத்தை கருத்து சுதந்திரம் மிக்க சந்திப்பு அவர்கள் பிரசுரிக்காமல் விட்டதால் அதனை இங்கு இணைத்துள்ளோம்.


தோழர் சந்திப்பு அவர்களே!

அணு சக்தி ஒப்பந்தத்தை மக்களிடம் அம்பலப்படுத்தியதில் இடதுசாரிகள் எனக் கருதிக்கொள்பவர்களின் பங்களிப்பை ஒத்துக்கொள்ளும் முன் ஒரு விசயம்.. இது ஏதோ தனியானதோர் ஒப்பந்தம் போலவும் இதற்கும் அமெரிக்க ராணுவ உடன்பாட்டுக்கும் சம்பந்தமில்லாதது போலவும் தோற்றத்தை உருவாக்குவது ஏன்? 2005இலேயே அமெரிக்காவுடன் உடன்பாடு எட்டப்பட்டு விட்டது..அதன் தொடர்ச்சியாகத்தானே 123?

இதெல்லாம் ஏதோ இன்றைக்குதான் தெரிந்தது போல பாராளுமன்றத்தில் சவடால் அடித்தது தவிர போலிகள் சாதித்தது என்ன?

கடந்த 2 ஆண்டுகளாக இதனை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லாமல் இருந்தது ஏன்?

நாட்டை அடிமையாக்குகிறது இந்த அரசு என்பது தெளிவான பின்னும் ஆதரவை திரும்பப்பெறுவதில் என்ன தயக்கம்? தேர்தலை சந்திக்கத் தயங்குவதுதானே? வங்காள விவசாயிகள் சிந்திய ரத்தம் வரும் தேர்தலில் காவு கேட்டு விடும் எனும் பயமா? காரத்தும், யெச்சூரியும் மாத்தி மாத்தி அடித்த சவடால்கள் கடைசியில் "வாபஸ் பெறுவதைப் பற்றி காங்கிரசு முடிவெடுக்கட்டும்" என்று பிளேட்டையே மாத்திப் போட்டதைப் பார்க்கும்போது, தப்பித்தவறி யெச்சூரியோ, காரத்தோ கோடம்பாக்கம் பக்கம் வந்தார்களென்றால் வடிவேலுவின் மார்க்கெட் சரிந்து விடும் என்பது நிச்சயம்!


10 Comments:
சந்திப்பு said...கம்யூனிச எதிர்ப்பு அமெரிக்க ஏஜன்டுகளே... இதோ கீழே இருக்கும் அறிக்கையை படியுங்கள்.... இடதுசாரிகள் 2005ஆம் ஆண்டு வெளியிட்ட கூட்டறிக்கை. இந்திய - அமெரிக்க இராணுவ உடன்பாட்டிற்கு எதிரானது. கண்ணை மூடிக் கொண்டு கம்யூனிச அவதூறை பரப்புவதன் மூலம் நீங்கள் உண்மையான கம்யூனிஸ்ட்டுகளாகி விடமுடியாது. காட்டுக்குள்ளே இருப்பவர்களக்கு நாட்டுக்குள் நடப்பது என்ன வென்று புரியாது. அதனால்தான் கல்லை கண்ணாடி வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு எரிகிறீர்கள்.
LEFT PARTIES PROTEST INDO-US AGREEMENT Reject This Framework Of Indo-US Relations: Karat Characterising the new framework for India-US defence relationships as against the security and ...........................................
3:57 PM


சின்ன கட்டபொம்மன் said...
..சந்திப்பு வலைதளத்தில் அணுசக்தி ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட பதிவிற்கு நான் மறுப்பெழுதி,சந்திப்பு பிரசுரிக்க மறுத்த பின்னூட்டத்தை இங்கே வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
################################
தோழர் சந்திப்பு அவர்களே!
..
அணு சக்தி ஒப்பந்தத்தை மக்களிடம் அம்பலப்படுத்தியதில் இடதுசாரிகள் எனக் கருதிக்கொள்பவர்களின் பங்களிப்பை ஒத்துக்கொள்ளும் முன் ஒரு விசயம்.. இது ஏதோ தனியானதோர் ஒப்பந்தம் போலவும் இதற்கும் அமெரிக்க ராணுவ உடன்பாட்டுக்கும் சம்பந்தமில்லாதது போலவும் தோற்றத்தை உருவாக்குவது ஏன்? 2005இலேயே அமெரிக்காவுடன் உடன்பாடு எட்டப்பட்டு விட்டது..அதன் தொடர்ச்சியாகத்தானே 123?இதெல்லாம் ஏதோ இன்றைக்குதான் தெரிந்தது போல பாராளுமன்றத்தில் சவடால் அடித்தது தவிர போலிகள் சாதித்தது என்ன?கடந்த 2 ஆண்டுகளாக இதனை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லாமல் இருந்தது ஏன்?நாட்டை அடிமையாக்குகிறது இந்த அரசு என்பது தெளிவான பின்னும் ஆதரவை திரும்பப்பெறுவதில் என்ன தயக்கம்? தேர்தலை சந்திக்கத் தயங்குவதுதானே? வங்காள விவசாயிகள் சிந்திய ரத்தம் வரும் தேர்தலில் காவு கேட்டு விடும் எனும் பயமா? காரத்தும், யெச்சூரியும் மாத்தி மாத்தி அடித்த சவடால்கள் கடைசியில் "வாபஸ் பெறுவதைப் பற்றி காங்கிரசு முடிவெடுக்கட்டும்" என்று பிளேட்டையே மாத்திப் போட்டதைப் பார்க்கும்போது, தப்பித்தவறி யெச்சூரியோ, காரத்தோ கோடம்பாக்கம் பக்கம் வந்தார்களென்றால் வடிவேலுவின் மார்க்கெட் சரிந்து விடும் என்பது நிச்சயம்!###################################


..4:29 PM கோபா said...
சந்திப்பு...மே.வங்காளத்துல 15 பேரை சுட்டுக் கொன்றதை நியாயப்படுத்தி சென்னை பகுதியில் பலத் தெருமுனை கூட்டங்கள் போட்டு பேசத் தெரியுது.ஆனா நாட்டை அடமானம் வைக்கிற ஒப்பந்தத்தை எதிர்க்குறோம் என்று அறிக்கை மட்டும் விட்டுட்டு பாருங்க என்கிறீர்களே...மக்களிடம் இந்த ஒப்பந்தத்தை அம்பலப்படுத்த விடாமல் தடுத்த சக்தி எது?

4:59 PM
..கோபா said...மக்களிடம் இந்த ஒப்பந்தத்தை அம்பலப்படுத்த விடாமல் உங்களை தடுத்த சக்தி எது ?

5:05 PM சந்திப்பு said...
..கோபா இந்திய நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை இந்த விசயத்திற்காக நாடு முழுவதும் தெருமுனைக் கூட்டம் - பிரச்சார இயக்கங்களை நடத்தி வருகிறோம். மேலும் நாளைய தினம் தமிழகத்தில் நடைபெறும் மறியல் இயக்கத்தின் பிரதான கோரிக்கைகளில் ஒன்று இந்த உடன்பாடு. எங்களைப் பொறுத்தவரை தத்துவமும் - நடைமுறையும் இணைந்தே இருக்கும்.

5:33 PM
..கோபா said...
சந்திப்பு,2 ஆண்டுகளாக 123 ஒப்ப்ந்தத்தை மக்களிடம் அம்பலப்படுத்த என்ன செய்தீர்கள் என்று கேட்டால்; போன வாரம் நாடு முழுவதும் தெருமுனைக் கூட்டம் போட்டோம் என்கிறீர்கள்.அதுதான் தெரிந்ததுதானுங்க, இப்பத்தான் எதிர்க்கிறீரக்ள் அதுகூட சும்மாதான் என்று தானுங்க நாங்க சொல்கிறோம்.
..
நேற்று நிலவரம் தெரியுமா !!
..
காங்கிரசுடன் இடதுசாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை முடிவில் 'கருத்து வேறுபாட்டை போக்க கூட்டுகுழு' அமைக்க முடிவு என்று அறிவித்து உள்ளனர்.அடிமைச் சாசனம் என்று ஒத்துகொள்கிறீர்கள், அதுல திருத்தம் பண்ண 'மண்'மோகனும் சரி அவருடைய பாஸ் புஷ்-ம் சரி ஏத்துக்கிற மாட்டோம் என்று தெளிவுபட சொல்லிட்டாங்க.
..
அதுனால கூட்டுக்குழு- வின் நோக்கம் என்ன?
..
பி.ஜே.பி நேற்றே சொல்லிட்டார்கள் 'நாங்க 123 யை எதிர்க்க மாட்டோம்' என்று.
..
உங்களால் அப்படி நேரடியாக சொல்ல முடியாது என்பதால் கூட்டுகுழு, அது, இது என்று பசப்புகிறீர்கள்.

9:14 AM
பாவெல் said...தோழர் கட்டபொம்மன்எதுக்கு இந்த 'சந்திப்பு' கோமாளிக்கு 'தோழர்'என்ற மதிப்புக்குறிய வார்த்தைகளையெல்லாம்பயன் படுத்துகிறீர்கள்?
சந்திப்பு ஒரு கூலிக்குமாரடிக்கும் "அப்பாவி"அவருக்கு டாடாஸ்டுகளின்நிலைபாடுகளை கூட சரியாகவிளக்கி பேசத் தெரியாது,கேட்டு தான் சொல்வார்.CPM கட்சியில் உள்ள உண்மையானதொன்டனுடைய உணர்வை,அந்த தலமையின் துரோகத்தனத்தைஅறியாத 'தோழர்களின்' உணர்வை நாம்சந்திப்பிடம் எதிர்பார்க்க கூடாது.ஏனெனில் சந்திப்பு CPM என்கிற தனியார்நிறுவனத்தில் "தொழிலாளி"யாக பணிபுரிகிறார்.எனவே அவருக்கு தெரிந்த "அமெரிக்க ஏஜென்ட், காடு,துப்பாக்கி, நக்சலைட்" போன்ற வார்த்தகளை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருப்பார் அப்ப தானே அவருக்கு"கூலி" கிடைக்கும்.எனவே நான் சொல்ல வருவது என்ன என்றால்,அண்ணன் சந்திப்புக்கு நாம் புரிய வைப்பதற்குஒன்றுமே இல்லை என்பது தான் !
..
ஏம்பா சந்திப்பு நீம் பாட்டுக்கு ஏன் தத்துவம், நடைமுறைன்னெல்லாம்பேசிக்கிட்டிருக்க,இதெல்லாம் உனக்கே ரொம்ப ஓவரா தெரியல ?

Saturday, June 21, 2008

நந்திகிராமத்திலிருந்து விழுப்புரம் வரை சிபிஎம் ரவுடிக் கும்பலின் கொலைவெறித் தாண்டவம்....



"இந்தியாவுக்கான புரட்சிப் பாதை ஆயுதம் தாங்கியதாக ஒருபோதும் இருக்க முடியாது. சுதந்திர இந்தியாவில், மக்களுக்கான ஜனநாயகம் தழைத்தோங்குகின்ற நமது தேசத்தில் சமாதான முறையிலேயே அரசியலை வழிநடத்தி புரட்சியை வென்றெடுக்க முடியும்" என்று அடிப்படையான மார்க்சிய லெனினியத்துக்கே கொள்ளிவைத்தனர் சிபிஐ/சிபிஎம் போலி கம்யூனிஸ்டுகள்.

ஆயுதமேந்திய புரட்சியை வலியுறுத்துவதாலேயே நக்சல்பாரிகளை இழிவுபடுத்திப் பேசுவதோடு; அவ்வப்போது நக்சல்பாரிகளுக்கு எதிராக ஆளும்வர்க்கத்துக்கு அன்னிய/இந்திய முதலாளிகளுக்கு கைக்கூலிகளாகவும் செயல்பட்டு வருகின்றனர். சட்டீஸ்கர் மாநில அரசால் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக திட்டமிட்டே உருவாக்கப் பட்டுள்ள 'சல்வாஜூடும்' போன்ற கூலிப்படை அமைப்புகளுக்கு ஆதரவாகவும் இப்போலிகள் நடந்து வருகின்றனர்.

இவற்றையெல்லாம் நாம் கேள்வி கேட்டால், "ஆயுத கலாச்சாரம்" இருவருக்குமே ஆபத்தானது" என்கிற உபதேசம் வேறு. இப்படிப்பட்ட 'சைவ பூணைகள்' இப்போது ஆயுதமில்லாமல் அரசியலே நடத்துவது கிடையாது. இதுபற்றிகூட நாம் விரிவாக எதையும் எழுதவேண்டிய அவசியமில்லை என்றே தோன்றுகிறது. அனைத்துமே உலக அளவில் சந்தி சிரித்த விசயம்தான் ஏற்கெனவே.

மேற்குவங்கத்தில் இவர்களது அரசும் கட்சியும், தரகு முதலாளியான டாடாவுக்கும், இந்தோநேசியாவில் சுமார் பதினைந்து இலட்சம் கம்யூனிஸ்டு தோழர்களை நரவேட்டையாடிய சுகர்தோ வுடைய 'சலீம் குழும'த்துக்கும் அடியாளாக மாறி சேவை செய்துவருவது அனைவருக்கும் தெரிந்த விசயம்தான். இப்படிப்பட்ட ஒரு குண்டர் அமைப்பு முதலாளிகளுக்கு எதிராக சாதாரண உழைக்கும் மக்கள் மீது ஏவிய அக்கிரமங்களை இந்த ஒரு பதிவுக்குள் பட்டியலிட்டுவிட முடியாது. குறிப்பாக நந்திகிராம போராட்டங்களின் போது இக்கட்சியைச் சார்ந்த குண்டர்களால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்கள் ஏராளம். இக்குண்டர்படை செய்த அட்டூழியங்களில் காணாமல்போன குழைந்தைகள் முதியவர்கள் நூற்றுக் கணக்கான பேர்.

இப்படி சாதாரண உழைக்கும் மக்களுக்கு எதிராக, குழந்தைகள், பெண்கள் என்று அனைவரின் மீதும் தனது வக்கிரங்களைக் கட்டவிழ்த்துள்ள அக்கட்சி கையில் உயர்த்திப் பிடித்திருப்பது ஆயுதங்களைத்தான், வேறெதையுமில்லை.

சமூக மாற்றத்திற்கான போராட்டங்களில் ஆயுதமேந்திய போராட்டத்தை மறுதளிக்கும் இப்போலிக் கூட்டம்; முதலாளிகளிடம் பெறும் சில தனிப்பட்ட ஆதாயங்களுக்காக கூலிப்படையாக மாறி ஆயுதங்களோடு கொக்கரிக்கிறது. இவ்வாறு இவர்கள் ஆளுகின்ற மாநிலங்களிலெல்லாம் ஆயுதங்களோடு பொறுக்கித்தனம் செய்து வரும் இக்கும்பல், நமது தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை.

மகஇக, மற்றும் அதன் தோழமை அமைப்புகள் எதுவும் ஆயுதங்களோடு களத்தில் இல்லை. நாங்களும் மக்கள் மத்தியில்தான் இயங்கிவருகிறோம் என்பதை பல்லாயிரம் முறை தெளிவாக நாம் சொல்லியாகிவிட்டது. ஆனால், இன்று வரை நமது தோழமை அமைப்புகளை 'ஆயுதமேந்திய நக்சல் பயங்கரவாதிகள்' என்று அவதூறு செய்வதை அவர்கள் நிறுத்தியதாகத் தெரியவில்லை. இணையத்திலும் இதற்கெதிரான விவாதங்களை நமது தோழர்கள் விரிவாக நடத்தியிருக்கின்றனர். ஒரே பொய்யைத் திரும்பத்திரும்ப அழுத்திச் சொல்வதனால் அது உண்மையாக மாறிவிடாதா என்று முயன்று கொண்டிருக்கின்றார்கள் போலிகள்.

இப்போது தமிழகத்திலும் இவர்கள் ஆயுதமேந்திச் சுற்றத் தொடங்கிவிட்டனர். இவர்கள் இங்கே உயர்த்திப் பிடித்திருக்கும் ஆயுதம் யாருக்கு எதிராக என்றால்; நமக்கு எதிராகத்தான். விழுப்புரம் அருகில் உள்ள காரப்பட்டு கிராமத்தில் ஏற்பட்ட அரசியல் மோதலில் எமது தோழர்களை சித்தாந்த ரீதியில் எதிர்கொள்ளத் திராணியற்ற சிபிஎம் ரவுடிக் கும்பல், சென்றவாரம் ஒரு பொதுக்கூட்டத்திலேயே எமது தோழர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு "வெட்டி வீசுவோம்" என்று கொக்கரித்திருக்கிறார்கள் அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள்.

எமது தோழர்களோ, இதனைக் கண்டுகொள்ளவில்லை. பொதுவாக சிபிஎம் கட்சியின் இதுபோன்ற வெற்று சவடால்கள் விடுவது ஒன்றும் புதிதல்ல. எனவே, எமது தோழர்களும் சற்று கவனக் குறைவாக தத்தமது பணிகளில் இருந்துவிட்டனர். இதனையறிந்து கொண்ட இந்த போலிகம்யூனிச பாசிசக் கும்பல், முறையாகத் திட்டமிட்டு, நேற்று இரவு எமது தோழர்களின் மீது கொலைவெறி ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியிருக்கிறது.

அதில் தோழர் இராசேந்திரன் என்ற எமது தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னனி (வி.வி.மு) ஆதரவாளர் கொடூரமான தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளார். மேலும் மூன்று தோழர்கள் கடுமையான காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமணையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.

பாஜக பயங்கரவாதிகள் தமது தில்லி தலைமை அலுவலகத்தைத் தாக்கியதை எதிர்த்து அதற்கு பதிலாக, சிபிஐ, சிபிஎம் கட்சிகளின் மாநில அலுவலகங்கலால் சூழப்பட்டிருக்கின்ற, பாஜக வின் சென்னை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒரு அடையாள ஆர்ப்பாட்டம் கூட நடத்த முடியாத அந்த சொரனையற்ற சிபிஎம் தொடைநடுங்கிக் கும்பல், நிராயுதபானிகளாகக் களத்தில் பணியாற்றும் எமது பாட்டாளி வர்க்கத் தோழர்களை தனது வர்க்க எதிரியாகக் கொண்டு இப்படிப்பட்ட பேடித்தனமான தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள்.

இத்தாக்குதலுக்கு தக்க எதிர்விணையாற்றுவதோ பதிலடி கொடுப்பதோ நமக்கொன்றும் கடினமான காரியம் இல்லை. ஆனால், இந்த நிமிடம் வரை சிபிஎம் என்ற கடைந்தெடுத்த போலிக்கும்பலை கம்யூனிஸ்டுகளாகப் பார்க்கிற அக்கட்சியின் உண்மையான தோழர்கள், இப்படிப்பட்ட ஒரு இழிவான செயல் அம்பலமான பிறகும் அக்கட்சியை ஒரு கம்யூனிஸ்டு கட்சி என்று நம்புவார்களா? ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகளாக எம்மைத் தொடர்ந்து சித்தரித்துவரும் சிபிஎம் தலைமையின் கோரமான கொலைமுகத்தை இனியேனும் அறிவார்களா??


(குறிப்பு: இக்கொலை சம்பவம் தொடர்பாக சிபிஎம் குண்டர்களில் சிலர் கைது செய்யப் பட்டிருப்பதாக அறிகிறோம். முழுமையான தகவல் கிடைக்கப் பெற்றதும் இப்பதிவின் தொடர்ச்சியினை வெளியிடுவோம்.)



Thursday, June 19, 2008

நம்ம 'நீதி'நிறுவனமும் 'ஜனநாயக'மும்????????

அடித்துத் துவைத்து, பிய்ந்து போன வெளக்குமாறு போல ஆகிவிட்ட நம்ம போலி ஜனநாயகத்தை, சற்றே துலக்கி, அதற்கு 'ஜனநாயகம்' என்ற பட்டுக் குஞ்சலங்களை அணிவித்து மக்களை ஏமாற்றி வளையவருகிறது, காங்கிரஸ் முதல் நம்ம 'காமரேடு'கம்பெனிவரை.

அப்பேர்ப்பட்ட 'ஜனநாயக'த்த போற்றிப் பாதுகாக்கிற நிறுவனங்களில் தலையாய நிறுவனம்தான் நம்ம நீதித்துறை. இது யாருக்கான ஜனநாயகம் என்பதும், இந்த உச்சநீதிமன்றத்தின் தலைமையில் உள்ள நீதிநிறுவனம் யாருடைய பிரதிநிதி என்பதையும் நாம் புதிதாக எதுவும் விளக்கிச் சொல்லத் தேவையில்லை.

இப்படி ஆளும் வர்க்க சுரண்டல் வாதிகளுக்கு அடியாள் வேலைகளை மட்டும் செவ்வனே செய்துவரும் இந்நிறுவனத்தால் கவனிக்கப் படாமல் நிலுவையில் கிடக்கும் வழக்குகள் மட்டும் சுமார் மூன்று கோடிகளுக்கும் மேலான வழக்குகளாம்! சரி இதனை என்ன செய்வது, எவ்வளவு விரைவாக இவ்வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவருவது என்பது குறித்து அறிய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜெகந்நாத்ராவ் தலைமையிலான ஒரு குழு அமைக்கப்பட்டது.

அக்குழு அனைத்து நீதிமன்றங்களுக்கும் நேரில் சென்று ஆராய்ந்து ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்திருக்கிறதாம். அவ்வறிக்கையில், புதிதாக அமைக்கப் படவேண்டிய நீதிமன்றங்கள் குறித்து அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றனவாம். அதேபோல நீதிபதிகளைத் தேர்தெடுத்து நிரப்பும் பொறுப்பை அரசு செய்வதைவிட இப்போது இருக்கிற உயர்/உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கே கொடுக்க வேண்டும். அரசின் தலையீடு அதில் இருக்கக் கூடாது என்று பரிந்துரைத்திருக்கிறதாம்.

அதாவது திருடனின் கையிலேயே சாவியையும் கொடுத்துவைக்கச் சொல்லி அரசையும் அதன் மூலமாக மக்களையும் நிர்பந்திக்கிறது ஜெகந்நாதராவ் கமிட்டி.

வெறும் நாற்பதாயிரம் ரூபாயை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு, யாருக்கு வாரண்ட் கையெழுத்திடுகிறோம் என்ற சுயநினைவே இல்லாமல், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுக்கே வாரண்ட் கொடுத்தார், அஹமதாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவர். இச்செய்தி அப்போது அனைத்து பத்திரிக்கைகளிலும் வந்து சந்தி சிரித்திருக்கிறது. ஏற்கெனவே 'நீதி'யரசர்கள், 'நிதி'யரசர்களின் கைப்பாவையாக அம்பலப்பட்டு விசாரனைகள் ஏதுமின்றி கவுரவமாக சுற்றி வருகிறார்கள்.

போதாக் குறைக்கு இப்போது நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் வேறு இவர்களுக்கு வேண்டுமாம். என்ன செய்யப் போகிறார்கள் நமது மதிப்பிற்குரிய ஓட்டுப் பொறுக்கிகள் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

சென்ற மாதம் மத்திய அரசின் நீதித்துறை அமைச்சகம் ஒரு பெருமை மிக்க!! தகவல் ஒன்றை வெளியிட்டது. அது என்ன வென்றால், 'தகவல் அறியும் உரிமைச் சட்டம்' (Right to Information Act) மூலமாக சென்ற ஆண்டு சுமார் ஐம்பதாயிரம் வழக்குகளுக்குப் பதிலளிக்கப்பட்டிருக்கிறதாம். அதுதான் அப்பெருமை மிக்க அறிவிப்பு.

இதனைப் பார்த்துக் கொண்டிருந்த நம்மைப் போன்ற யாரோ ஒருவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக நீதிபதிகள் சிலரின் சொத்துக்கள் பற்றி தகவல் கோரினாராம். த.அ.உ.சட்டம் குறித்து புளகாங்கிதமடைந்திருந்த நீதி அமைச்சகத்துக்கு இது சோதனையையும் வேதனையையும் அளித்தது போலும். உடனே, "நீதிபதிகள் சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பில் இருப்பவர்கள், எனவே, யாரொருவர் 'இந்திய அரசியல் சாசன சட்டத்தினை நிறைவேற்றும் பொறுப்பில்' இருக்கிறார்களோ அவர்களைப் பற்றி எந்தத் தகவலும் மேற்கண்ட சட்டத்தின் மூலமாகப் பெறமுடியாது" என்று கூறி தள்ளுபடி செய்யப்பட்டதாம்.

எப்படியிருக்குது நம்ம 'நீதிநிறுவன'மும் 'ஜனநாயக'மும்????????


தோழமையுடன்,
ஏகலைவன்.

Sunday, June 15, 2008

எண்ணெய் விலை உயர்வுக்கு எதிராக ஓட்டுப் பொறுக்கிகள் நடத்தும் போராட்டம் அனைத்தும் நாடகமே - புரட்சிகர அமைப்புகள் நடத்தும் தெருமுனைக் கூட்டங்கள்

எண்ணெய் விலை உயர்வுக்கு எதிராக ஓட்டுப் பொறுக்கிகள் நடத்தும் போராட்டம் அனைத்தும் நாடகமே - புரட்சிகர அமைப்புகள் நடத்தும் தெருமுனைக் கூட்டங்கள்
























'கெடக்கெறதெல்லாம் கெடக்கட்டும் கெழவனைத் தூக்கி மடியில வச்சிக்க'ன்னு ஒரு பேச்சு உண்டு நம்மூர்களில.

இப்ப பெட்ரோலியப் பொருட்கள் முதல் உணவுதானியங்கள் வரை விலையேற்றம். ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருந்த பல கோடி மக்களை, அந்த ஒருவேளைச் சோற்றையும் மறுத்து நெறிக்கிறது இந்த உலகமயமும் அதன் பழைய ப்ராடக்ட்டான விலைவாசி உயர்வும். சாதாரண உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கை இப்படி சீரழிந்து நிற்கிறது.

ஆனால், பாஜக, போலி கம்யூனிஸ்டுகள் முதலான அத்தனை ஓட்டுப் பொறுக்கிகளும் "நாங்க வந்தாத் திருந்திடும்"ன்னு தெருவுக்குத் தெரு கொடியப் புடிச்சிக்கிட்டு கூவிக்கிட்டு நிற்கிறார்கள்.

விலை வாசி உயர்வு பற்றி மற்ற கட்சிக்காரன் பேசுவதெல்லாம் கெடக்கட்டும். நம்ம காமரேடு கம்பெனி இருக்குதே, அதான் நம்ம சிபிஎம் இருக்குதே அவியளக் கேட்டா என்ன சொல்றாங்க தெரியுமா? "இடது சாரிகளின் அறிவுரைகளை மன்மோகன்சிங்கும் சிதம்பரமும் காதில் போட்டுக் கொள்ள வில்லை. அதனால் தான் இவ்வளவு பிரச்சினையும்" என்று அலுத்துக் கொள்கிறார்கள்.

ம்க்ம், இவனுகளப் பத்தி எழுதினா பதில் சொல்ல ஒருத்தனும் வரப் போவதில்ல. இவனுக நம்மளப்பத்தி எழுதினா, நம்மள பதில் சொல்ல அனுமதிக்கறதில்ல. இப்படிப்பட்ட 'ஜனநாயக'த்த தனக்குள் கொண்டிருக்கும் இவர்களைப் பற்றி எழுதிக் கிழித்தது போதும் என்றுதான் இருந்தேன். ஆனா திரும்புற பக்கமெல்லாம் இவனுக ஓலம் தான் பெரும் ஓலமா இருக்குது. தொலைக்காட்சியைத் தொறந்தா டி.ராஜாவும் யெச்சூரி அய்யாவும் கொந்தளிக்கிறாங்க.

விலைவாசி உயர்வப் பத்தி இவங்க என்ன சொல்றாங்கன்னு கவனிச்சாத்தான் தெரியுது மேற்சொன்ன காம்ரேடுகளின் வசனத்த அப்படியே ஆங்கிலத்தில் சொல்லிக்கிட்டு இருக்கிறாங்க இந்த மாபெரும்!!! கம்யூனிச!!!த் தலைவர்கள்.

இது என்னாடா இது ஐபிஎல் சூதாட்டத்த விட கேவலமா இருக்குதேன்னு தோனுச்சி. அந்தக் கோவத்துலேயே இணையத்துல வந்து அமர்ந்தேன். தோழர் ஸ்பார்ட்டகஸ் அவர்கள் சில அறிவிப்புகளை போஸ்டருடன் வெளியிட்டிருந்தார். அதுதான் மேற்கண்ட இரண்டு போஸ்டர்களும்.

இதனைக் குறித்துக் கொண்டு நண்பர்கள் அனைவரும் அவரவர் பகுதிக்கு அருகில் நடக்கவிருக்கும் தெருமுனைக் கூட்டங்களுக்குச் செல்லவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தோழமையுடன்,

ஏகலைவன்.




Saturday, June 14, 2008

இந்துமதத்திலிருந்து ஒருவர் வேற்று மதத்திற்கு மாறினாலும் நமது எதிரிகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடியிருக்கிறது என்றுதான் அர்த்தம் - எல. கணேசன் பேச்சு!!!!

"இந்து மதத்திற்கெதிராக ஒரேயொருவர் வேற்று மதத்திற்கு மாறினாலும்; நமது எதிரிகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடுவதாகவே அர்த்தமாகிறது" என்றான் ஒரு ஆர்.எஸ்.எஸ்., பார்ப்பன பயங்கரவாதி எல. கணேசன்.

இன்று (14/06/2008) மதியம் தமிழன் தொலைக்காட்சியில் தான் மேற்கண்ட நேர்கானல் ஒளிபரப்பப்பட்டது.

மேற்கண்ட இவ்வரிகள் வேறொருவர் சொன்ன புகழ்மிக்க வாசகத்தினை அப்படியே ஒத்திருப்பது இதனைப் படிக்கின்ற அனைவருக்குமே தெரிந்துவிடும். இருப்பினும் நான் சொல்கிறேன்....

"நீ எங்களுக்கு ஆதரவாக இல்லையென்றால் எதிரிகளுக்கு ஆதரவாக இருப்பதாகத்தான் அர்த்தம்" என்கிற இந்த வாசகம் நமது அமெரிக்க பாசிச பயங்கரவாதி ஜார்ஜ்.W. புஷ்ஷினுடையது.

தனது ஆசானாக ஹிட்லரையும் தனது சின்னமாக ஹிட்லரின் 'ஸ்வஸ்திக்' சின்னத்தையும் பயன்படுத்தும் ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பு, ஒரு மக்கள் விரோத பயங்கரவாத அமைப்பு என்பதற்கு இதுவே முழுமையான உதாரணமாக இருக்கிறது. எல. கணேசனின் மேற்கண்ட பேச்சிலிருந்து நமக்குத் தெரிவது என்னவென்றால், கடந்தகால ஹிட்லரைவிட மிகமிகப் பயங்கரமான நிகழ்கால சர்வதேச, விரோதி ஜார்ஜ் புஷ் ஐ தமது குருவாக அவர்கள் வரித்திருக்கிறார்கள் என்பதுதான்.

இந்த நேர்காணலினூடாக மேலும் பல்வேறு சமூக விரோத பேச்சுக்களையும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவுக் கருத்துக்களையும் அள்ளிவிடத் தவறவில்லை அந்தப் பார்ப்பன பயங்கரவாதி.

"ஆர்.எஸ்.எஸ். என்றால் கலவரக்காரர்கள் என்று சித்தரிக்கப்படுகிறது. ஆனால் சமூகத்தில் நடக்கும் ஒழுக்கங்கெட்ட செயல்களைத் தட்டிக் கேட்க ஆர்.எஸ்.எஸ்.ஐத்தவிர வேறொருவரும் இல்லை. அப்படிப்பட்ட ஒரு அமைப்பு வரும்போது தொடக்கத்தில் சற்று வன்முறையினையும் கையிலெடுக்கத்தான் வேண்டியுள்ளது. ஆனால் அதன் பிறகு ஒரு நிரந்தரமான அமைதியினை அது அப்பகுதிக்குத் தருகிறது என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.சின் தனிச்சிறப்பு" என்று சிலாகித்தார்.

அவருக்கு எதிரில் ஒரு எருமைச் சாணியைப் போன்று ஒருத்தன் உட்கார்ந்து கொண்டு பேந்த பேந்த விழித்துக் கொண்டு இந்நேர்கானலை நடத்திக் கொண்டிருந்தான். எதிர்கேள்விக்கான பல்வேறு விசயங்களை எல. கணேசனே அடியெடுத்துக் கொடுத்தபோதும், எந்த சொரனையுமற்று 'நம்ம கோமாளி சந்திப்பு' போன்று உட்கார்ந்திருந்தது அந்த எருமைச்சாணி.

உங்க ஆர்.எஸ்.எஸ். தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக என்னத்தைக் கிழித்தது என்று கேட்டிருக்கலாம்.

அல்லது

ஆர்.எஸ்.எஸ். அந்த பகுதிக்கு நிரந்தரமான அமைதியினை வழங்குவதாக அவன் குறிப்பிட்டதற்கு, "நிரந்தர அமைதியென்றால் குஜராத்தைப் போன்றதொரு அமைதியா" என்றுகூட கேட்டிருக்கலாம்.

இப்படி அவனைக் கேள்விமேல் கேள்வியெழுப்பி வேட்டியைக் கிழித்து அனுப்பியிருக்கலாம். அவன் நம் கையில் சிக்கியிருந்தால். ம்... என்ன செய்வது.

Monday, June 9, 2008

"மொள்ளமாறித்தனம், முடிச்சவிக்கித்தனம் என்பது சிபிஎம் கும்பல் பேசும் கம்யூனிசம்தான்"

மன்னிக்கவும் மேற்கண்ட தலைப்பு சற்று கடுமையாகத் தோன்றினால் அதற்கு நான் பொறுப்பல்ல; சம்பந்தப்பட்ட துரோக சிபிஎம் கும்பல்தான் பொறுப்பு.


நந்திகிராமில் மம்தா, பாஜக கும்பலுடன் SUCI என்ற அமைப்பு சேர்ந்து செயல்படுவதை, ஏதோ அனைத்து நக்சல் குழுக்களும் இவர்களோடு ஒருங்கிணைந்து செயல்படுவதாக மிகைப்படுத்திக் காட்டுகிறது சிபிஎம் போலிக் கும்பல். இதன் மூலம் களத்தில் மக்களோடு நின்றுகொண்டிருக்கும் பல புரட்சிகர அணிகளை இருட்டடிப்பு செய்கிறது இக்கும்பல்.

ஆயுதமேந்தி களத்தில் நிற்கும் அனைத்து நக்சல் குழுக்களோடும், அவர்களுடைய செயல் தந்திர ரீதியில் நமக்கு பல்வேறு முரண்பாடுகள் இருப்பது ஒருபுறமிருக்கட்டும். இப்பதிவு சிபிஎம் துரோக கும்பலுக்கு எதிராக எழுதவேண்டியிருப்பதால், அவர்களுடனான நமது முரன்பாடுகளைச் சற்று ஒதுக்கி வைத்து விட்டு எழுதவேண்டியுள்ளது. இதையும் வழக்கம் போலவே மிகைப்படுத்தி அவதூறு பரப்ப நம்ம காம்ரேடு கோமாளிக் கும்பல் முயல வாய்ப்பிருப்பதனால் இதனை தொடக்கத்திலேயே உறுதிப்படுத்திக் கொள்கிறேன்.

சாதாரணமாக நக்சல் குழுக்களைப் பற்றி சிபிஎம் துரோகிகள் பேசத் துவங்கும் போதே, "இவர்கள் சுக்கு நூறாக சிதறுண்டு விட்டார்கள் ஆஹாஹாஹா!!!" என்று எகத்தாளமாகத்தான் பேச்சைத் துவக்குவார்கள். ஆனால் SUCI போன்ற பிழைப்புவாத என்.ஜி.ஓ.க்களை விமர்சிக்கும் போது மட்டும் அனைத்து நக்சல் குழுக்களையும் ஓரணியாக இணைத்துப் பேசுவார்கள்.

அதேபோன்று நம்மைப் பற்றிய அவர்களது தலையாய விமர்சனமே, நாம் தமிழகத்தில் மட்டுமே இருக்கிறோம் என்பதுதான். ஆனால், நந்திகிராம விசயத்தில் SUCIயிடம் கேட்க வேண்டிய கேள்விகளை நம்மிடம் கேட்பார்கள். "இதுல மட்டும் நாங்க எப்படிடா மே.வ வரை வளர்ந்தோம்"ன்னு நமது மதிப்பிற்குரிய துரோகிக் கும்பலை பலமுறை நாம் கேட்டாகிவிட்டது. இன்னும் பதிலில்லை.

இதுகுறித்து நமது தோழர்கள் இணையத்தில் பல விவாதங்களை நடத்தியுள்ளனர். எண்ணற்ற பல கட்டுரைகளையும் எழுதிக் குவித்துள்ளனர். இவை எதிலும் தலைகாட்டாத, சிபிஎம்மின் இணைய முகமான கோமாளி சந்திப்பு, தோழர் அரசுபால்ராஜ் அவர்களின் கீழ்கண்ட கேள்விகளுக்குக் கூட இதுவரை எந்தப் பதிலும் சொல்லவில்லை.

/////arasubalraj said...
சில கேள்விகள்:

1. வரலாற்றாசிரியர் சுமித் சர்க்காரும், இதர சி.பி.எம் ஆதரவு அறிவுஜீவிகளும் நந்திகிராம் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் மேற்கு வங்க அரசு விருதுகளை திருப்பி அளித்திருக்கிறார்களே(The Hindu - 17-03-07)? ஒரு வேளை அவர்களும் நக்சலைட்டுகளோ?

**மேற்குவங்கத்தில் ஏதாவது ஒரு திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டால், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்கு அனைத்துவிதமான உத்திரவாதத்தையும் மேற்குவங்கம் அளிக்கிறது.**

2. இந்த உத்திரவாத லட்சணத்தை எதிர்த்துதான் மேதா பட்கர் சிங்கூரில் போராட்டம் நடத்திய பொழுது உள்ளே நுழைய அனுமதிக்கப்படாமல் கைது செய்யப்பட்டார்.தங்களுடைய பதிவுத்தளத்தில் நக்சல்களுக்கும்,மேதா பட்கருக்கும் ஒப்பீடு செய்திருந்தீர்களே, அதே மேதா பட்கர் இப்பொழுது "Don't call them as Special Economic Zones, but as Special Exploitation Zones"என்று சொல்லி போராடுகிறாரே, அவரும் நக்சலைட்டாக மாறி விட்டாரோ? சர்தார் சரோவர் அணை அரசியல் எடுபடாததால், மேற்கு வங்கத்தில் காலூன்ற முயல்கிறாரோ?

**நந்திகிராமத்தில் சட்டத்தின் ஆட்சியை நடத்தவிடாமல் முடங்கச் செய்ததும், அங்குள்ள சாலைகள், பாலங்களை தகர்த்தும், போலீசோ, அரசு அதிகாரிகளோ அந்த கிராமத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து செயல்பட விடாமல் முடக்கியது எந்த வகையான ஜனநாயகம்**

3. சட்டம்? யாருடைய சட்டம்? அது என்ன வர்க்க நியாயங்களுக்கு அப்பாற்ப்பட்ட சட்டம், ஜனநாயகம்? பாராளுமன்றத்தை அம்பலப்படுத்துவதற்காகவும், புரட்சிகர அலையின் ஏற்ற் இறக்கத்தையொட்டியும், முதலாளித்துவ நாட்டில் பாராளுமன்ற பங்கேற்பை லெனின் வலியுறுத்தினார்.ஆனால், இங்கே நிலைமை தலைகீழாக இருக்கிறது. தன்னை அம்பலப்படுத்திக் கொள்வதற்காக மார்க்சிஸ்ட் கட்சி பாராளுமன்றத்தில் பங்கேற்கிறது. பாராளுமன்றம் கேலிக் கூத்தாவது பற்றி சோம்நாத் சாட்டர்ஜி கண்ணீர் வடிக்கிறார். பன்னாடுக் கம்பெனிகளுக்கு எதிராக சட்டம், ஒழுங்கு குலைந்தால் புத்ததேவ் பொறுமையிழக்கிறார்.இதில நல்லாட்சி தம்பட்டம் வேறு, 'முதலாளித்துவ ஜனநாயகம் எத்துணை உயர்ந்ததாக இருந்தாலும், அதிலும் மக்கள் கூலியடிமையில்தான் உழன்று கொண்டிருக்கிறார்கள் என்பதை மறக்க நமக்கு உரிமை இல்லை' என ஏங்கெல்ஸ் கூறுகிறாரே, அதன் பொருள் என்ன? அது சரி, சித்தாந்தத்திற்கும், மார்க்சிஸ்டுகளுக்கும் என்ன சம்பந்தம்? சமகால விசயத்திற்கு வருவோம்.நீங்கள் சர்வதேச அளவில் உச்சிமோந்து வியந்தோதுகிறீர்களே,சாவேஸ், அவரும் 'இதே கைகள் கட்டப்பட்ட, தொழில் வளர்ச்சியின் அவசியம் உணர்ந்த' காலகட்டத்தில்தான் தமது நாட்டு எண்ணெய் வயல்களை தேசியமயமாக்கி, பன்னாட்டுக் கம்பெனிகளை விரட்டியடிக்கிறார். ஒருவேளை அவரும் சர்வதேச நக்சலைட்டாகி விட்டாரோ?

**இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகிற்கே ஒரு முதலாளித்துவ ஆட்சியமைப்பிற்குள் தொடர்ந்து 30 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பது பெரும் சாதனையான ஒன்று. இது கம்யூனிச வரலாற்றில் மிக புதுமையானது. இந்த ஆட்சியை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என்று சர்வதேச அளவில் துடித்துக் கொண்டிருக்கும் ஏகாதிபத்தியவாதிகளின் கனவுகளையல்லவா இந்த நக்சல்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.**

4. அட அய்யா, சர்வதேச அளவில் ஏகாதிபத்தியவாதிகள் மேற்கு வங்க ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்களா? வேடிக்கைதான். உலக வங்கி அதிகாரிகளும், சலீம் குழுமமும், பன்னாட்டு கம்பெனி அதிகாரிகளும் அன்றாடம் பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார்களே, அது என்ன? ஒரே தமாசா இருக்குப்பா!

தயை கூர்ந்து இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டுகிறேன் சந்திப்பு அய்யா!

Sat Mar 17, 01:41:00 PM IST ///////

இதுபோல் இன்னும் பல்வேறு கேள்விகள் முறையாக பதிப்பிக்கப்படாமல் தோலர் சந்திப்பு அவர்களால் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது.

இதுதான் இவர்களது விவாத இலட்சனம். இப்போது வெளியாகியிருக்கும் நந்திகிராம கொடுமைகளுக்கான மக்கள் தீர்ப்பாயத்தின்(People's Tribunal) விசாரனை அறிக்கை சிபிஎம் அரசின் மீது காறி உமிழ்கிறது. அறிக்கையின் ஒவ்வொரு வரியும், குஜராத் குறித்த தெகல்காவின் கட்டுரைகளை நமக்கு நினைவு படுத்துகின்றன. நந்திகிராமில் நடந்துள்ள சம்பவங்கள், குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் வக்கிரங்கள், அவற்றை சிறிதும் இரக்கமின்றி நிகழ்த்திய சிபிஎம் கும்பலை ஒவ்வொருவனின் பெயராக
பகிரங்கமாக பாதிக்கப்பட்ட மக்கள், தீர்ப்பாயத்தின் முன் தெளிவாக எடுத்து வைத்திருக்கின்றனர். அவ்வறிக்கை விடியல் பதிப்பகத்தால் தமிழ் மொழியாக்கம் பெற்று வெளியாகியிருக்கிறது. (கீழைக்காற்று வெளியீட்டகத்தில் கிடைக்கிறது.)

இவ்வளவு இழிவான செயல்களையும் சிறிதும் வெட்கமின்றி, குஜராத்தின் 'எழுச்சியுற்ற இந்துக்களை'ப்போல மே.வங்கத்தின் எழுச்சியுற்ற காம்ரேடுகள் நிகழ்த்திவிட்டு, எப்படி இவர்களால் துணிச்சலாக வெளியே நக்சல்குழுக்களை அவற்றோடு இணைத்து அவதூறு செய்ய முடிகிறது என்று தெரியவில்லை.

இந்நிலையில் நமது அமைப்பின் செயல்பாடுகள் குறித்த தோழர் அருள் எழிலனின் கட்டுரையைக் கண்டு வெம்பி, வெடித்த நம்ம காம்ரேடுகள், அதற்கு எதிர்விணை என்கிற பெயரில், அவர்களுடைய தீக்கதிர் நாளேட்டில், 'புரட்சியாளர்களா, சீர்குலைவாளர்களா' என்ற தலைப்பில் ஒரு கட்டுரையினை அன்வர் உசேன் என்பவர் மூலமாக எழுதி வெளியிட்டுள்ளனர். அக்கட்டுரையினுள், மகஇகவை எப்படியாவது பயங்கரவாத / தீவிரவாத அமைப்பாக சித்தரிக்கவேண்டும் என்கிற அரிப்பு ஒவ்வொரு எழுத்திலும் தெளிவாகத் தெரிகிறது.

அக்கட்டுரையின் மீது நமக்குள்ள பல கேள்விகளை தீக்கதிர் அலுவலகத்திற்கோ அல்லது சிபிஎம் கம்பெனிக்கோ சென்று நாம் கேட்டால் அவ்வளவு நன்றாக இருக்காது என்பதால் காத்திருந்தேன். நான் எதிர்பார்த்தது போலவே சிபிஎம்மின் 'இணையக் கோமாளி' சந்திப்பு என்கிற செல்வப் பெருமாள், அக்கட்டுரையினை தனது வலைதளத்தில் பதிப்பித்தார்.

நம்மைப்பற்றிய விசயமாக இருப்பதனால், இக்கட்டுரையின் மீதான நமது பதில்களையும் விமர்சனங்களையும் பின்னுட்டமாக அனுப்பலாம் என்று நானும் இதுவரை 4 பின்னூட்டங்களை அனுப்பியிருக்கிறேன். அவற்றில் ஒன்றைக் கூட இதுவரை பதிப்பிக்காத துரோகி சந்திப்பு, அனானிகளின் பின்னூட்டங்களையெல்லாம் திறந்த மனதோடு பதிப்பித்து பதிலும் சொல்லி சிலாகிக்கிறார். (நம்மிடம் வைக்கப்படுகின்ற கேள்விக்கு எதிரான நமது பதில்களைக்கூட பதிப்பிக்காமல் இருட்டடிப்பு செய்துவரும் இவன், கம்யூனிசத்தையும் அதன் ஆசான்களையும் தொடர்ந்து அவதூறு செய்துவரும் 'தமிழ்மணி' என்கிற பார்ப்பன மணியின் தளத்திற்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.)

எனது பின்னூட்டங்களை ஏன் பதிவிட வில்லை என்று கேள்வியெழுப்பியதற்கு சிறிதும் வெட்கமில்லாமல் கீழ்கண்ட தமது பதிலை அதே பதிவின் கீழ் பதிப்பித்திருக்கிறான்.

////At 4:04 PM, சந்திப்பு said...
ஏகலைவனின் பதிலை வெளியிடவில்லை என்பது உண்மையே வெளியிடும் உத்தேசமும் இல்லை. அவர் இதனை தனிப்பதிவாக அவருடைய தளத்திலேயே வெளியிடலாம்... வாழ்த்துக்கள்!////




SUCI கும்பலை நக்சல்பாரிகள் என்று புரிந்து கொண்டிருக்கும் அல்லது திரித்து கொண்டிருக்கும் இந்த சிபிஎம் துரோகிகள், மேற்கண்ட அக்கட்டுரையில் சல்வாஜூடும் அமைப்பைக் காட்டி புரட்சிகர அமைப்புகளை விமர்சித்திருக்கின்றனர்.

நக்சல் அமைப்புகளுக்கு அறிவுரையோ அல்லது அவ்வமைப்புகளுக்கு எதிராக அவதூறுகளையோ அள்ளிவிட்டுவரும் இத்துரோகக் கும்பல், இதுவரை சல்வாஜூடும், ரன்வீர்சேனா போன்ற கூலிப்படை குண்டர்களுக்கு எதிராக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போட்டது கிடையாது. அப்படியிருக்க புரட்சிகர குழுக்களை மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு இவர்கள் விமர்சிக்கும் நோக்கம் எப்படிப்பட்டது? இத்தகைய தொடர்ச்சியான துரோகத்தனம் எவ்வளவு கேவலமானது என்பதை சிபிஎம் சகதிக்குள் சிக்கித் திணறும் நடுநிலையாளர்களிடம் இப்பதிவின் மூலமாக கேட்கவேண்டியுள்ளது. அதனால் தான் இப்பதிவையே எழுதியிருக்கிறேன்.

இத்துடன் பின்வரும் இணைப்பினைப் பயன்படுத்தி புதிய ஜனநாயகம் ஜூன்'2008 இதழில் வெளியாகியுள்ள கட்டுரையினைப் அவசியம் படிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். தோழர் அசுரன் தனது தளத்தில் அக்கட்டுரையினை பதிப்பித்திருக்கிறார்.





தோழமையுடன்,
ஏகலைவன்.

Tuesday, June 3, 2008

ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யின் புதிய கொள்கை பர்ர்ர்ரப்ப்ப்புச் செயலாளர் - ஞாநி






ராமன் கோயில் முதல் ராமர் பாலம் வரை தனது எல்லா அஸ்திரங்களும் தேர்தல் களத்தில் புஸ்வானமாகிப் போனதால், அந்தந்த மாநிலங்களுக்குள் இருக்கும் ஏதோ ஒரு பிரச்சினையை கையிலெடுத்துக் கொண்டு கூப்பாடு போடுவதன் மூலமாகமட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை பாஜக மதவெறிக்கும்பல் ஒரு திட்டமாக வகுத்து, அதனை செயலாற்றி, வெற்றியும் பெற்று வருகிறது. அதன் சமீபத்திய உதாரணம் கர்நாடகத் தேர்தல் முடிவுகள்.


இராஜஸ்தானில் தமது கட்சி வெற்றி பெற்றால் குஜ்ஜார்களுக்கு பழங்குடியினர் பட்டியலில் இடமளிப்போம் என்று வாக்குறுதியளித்து, அவர்களின் பெருவாரியான வாக்குகளைப் பொறுக்கி வாயில் போட்டுக் கொண்டு ராஜஸ்தானில் ஆட்சியைப் பிடித்தது இக்கும்பல். குஜராத்தில் தனது அடிப்படையான இந்துத்துவ வெறியின் மூலம் வெற்றி பெற்றது. இப்போது கர்நாடம்.

கர்நாடகத் தேர்தல் முடிவுகள் தண்ணீர்களின் அரசியலால் விளைந்த விளைவே என்பது அனைவருக்கும் தெரியும். "அது என்ன தண்ணீர்கள்!" என்று யாரும் ஆச்சர்யப்படவேண்டாம். இத்தேர்தல் வெற்றிக்கு உதவியது இருவேறு மாதிரியான தண்ணீர் என்பதால் தான் இவ்வாறு குறிப்பிடுகிறேன்.

ஒன்று தேர்தல் அறிவிப்பு தொடங்குவதற்கு சற்று முன்பு பயன்பட்ட ஒகேனேக்கல் 'குடிநீர்', மற்றொன்று தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு சற்று முன் பயன்படுத்தப்பட்ட 'குடி(யைக் கெடுக்கும்) நீர்'. முதல் நீரின் பலன் தேர்தலில் வாக்குகளாகக் குவிந்தது, மற்றொன்று அவ்வாக்குகளை அள்ளித்தந்துவிட்டு பிணங்களாகச் சரிந்தது.


தேர்தல் நடந்த மறுநாள், "எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாகத் தேர்தல் முடிந்தது" என்று அறிவித்தார் அம்மாநிலத் தேர்தல் ஆணையர். ஆனாலும் 200 உடல்கள் சவங்களாக ஆக்கப்பட்ட அக்கிரமம் எவ்வாறு நிகழ்ந்தது?! அதை நிகழ்த்தியது ஆயுதங்களோ கலவரங்களோ அல்ல, மேற்சொன்ன குடி(யைக் கெடுக்கும்) நீர் தான்.

ஓட்டுக்காக வாங்கி ஊற்றப்பட்ட சாராயம் மிச்சமின்றித் தீர்ந்து போனதால், விஷச்சாராயத்தை விற்று காசாக்கியது கள்ளச் சாராயக் கும்பல், அதையும் ஓட்டாக்கியது மேற்கண்ட பதவி வெறிபிடித்த கும்பல்.

முடிவு தமிழகக் கர்நாடகத்தைச் சார்ந்த இருநூறு பேர் ஒரே இரவில் பிணமானார்கள். மேலும் பலநூறு பேர் கண் பார்வை இழந்துவிட்டார்கள். இதுதான் இந்த வெற்றியின் இரகசியம்.

ஓட்டுப் பொறுக்க, தமிழ்மக்கள் தங்கள் (ஒகேனேக்கல்) சொந்த மண்ணிலிருந்து எடுத்துக் கொள்ளவிருந்த குடிநீரைக் கூட பறிக்க நினைக்கும் இக்கும்பல், கர்நாடக வெற்றியைத் தங்களது 'தென்னிந்தியாவுக்கான நுழைவுவாயில்' என்று சொல்லிப் புளகாங்கிதமடைகின்றன. ஒருவேளை இவர்களது தென்னிந்தியாவில் தமிழகம் இருக்கிறதா, இல்லையா தெரியவில்லை. தமிழகமும் இருக்குமானால் இந்த பயங்கரவாதக் கும்பல், தமிழகத்தில் ஓட்டுப் பொறுக்க வேறெந்த சதிவேலையில் ஈடுபடுமோ தெரியவில்லை.



"ஒகேனேக்கல் திட்டம் நிறைவேறக் கூடாது என்பது எமது கர்நாடக பாஜகவின் நிலைப்பாடு, அதேபோல், இப்பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையினை விட்டுக் கொடுக்கக்கூடாது என்பது தமிழக பாஜகவின் நிலைப்பாடு" என்று குடிபோதையில் உளறிவிட்டுப் போயிருக்கிறார் நம்ம 'வெங்காய'நாயுடு.

கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிக்கத் தமிழ் மக்களுக்கு குடிநீரைக் கூட மறுக்கும் இக்கும்பல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுடைய மென்னியைப் பிடிக்கும் இந்த கேடுகெட்ட கூட்டம், நாங்கள் தென்னிந்தியாவில் நுழைந்துவிட்டோம் என்று மார்தட்டிக் கொள்கிறது என்றால், இது தென்னிந்தியாவின் ஒரு அங்கமான தமிழக மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்.

இதே கருத்தைத்தான் இங்குள்ள 'எச்ச'ராஜா முதல் 'எல'கணேசன் வரை, இன்னும் 'சோ'மாறி போன்றவர்களும் இங்கே தொடர்ந்து வாந்தியெடுக்க இருக்கின்றார்கள்.


இவர்களின் கூப்பாடெல்லாம் ஒருபுறமிருக்க, புதியதாக ஒரு கொ.ப.சே. கிளம்பியிருக்கிறார். அவர்தான் நம்ம 'தீம்தரிகிட'ஞாநி.


"கருனாநிதிக்கு வயசாகிவிட்டது அவருக்கு ஏன் இந்த வீன் வேலை" என்ற தனது ராமர்பால ஆதரவுக் கருத்தின் மூலமாக, நீண்ட நாட்களாக தமது முற்போக்கு முகமூடிக்குள் மறைத்து வைத்திருந்த பூநூலை சற்று வெளிக்காட்டியவர்தான் இந்த ஞாநி. அதற்கு எதிர்விணையாகப் போகிற வருகிற இடங்களிலெல்லாம் எமது மகஇக தோழர்களிடம் செருப்படியும் பட்டார்.


இப்படித்தான் சென்ற ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் தென்பட்ட ஞாநியை வளைத்துக் கொண்ட எமது தோழர்கள் மூன்று பேர் கேட்ட கேள்வியில் மூத்திரம் முட்ட விலகி ஓடினார். "கருனாநிதியைப் பற்றியெல்லாம் எழுத முடிகிற உன்னால், குஜாராத்தில் இந்துவெறிக் கும்பல் நடத்திய அக்கிரமங்களைப் பற்றி ஏன் எழுதமுடியவில்லை" என்று கேள்வி கேட்டனர் எமது அந்த தோழர்கள். கருனாநிதியைப் பற்றிய எமது விமர்சனங்களெல்லாம் ஒருபுறம் இருக்க, இந்து வெறியை தனது முற்போக்குத் திரைக்குள் மூடிமறைத்து வைத்துக் கொண்டு திரியும் இவனுக்கு கருனாநிதியை விமர்சிக்க என்ன யோக்கியதை இருக்கிறது என்பதுதான் எமது எதிர்விணைக்குக் காரணம்.

தான் எதை எழுதினாலும் அதை அப்படியே ஒரு எழுத்து மாறாமல் பிரசுரிக்க குமுதம், ஆனந்தவிகடன் போன்ற கழிசடைப் பத்திரிக்கைகள் இருப்பதால் எதையும் எழுதலாம், யாரும் நம்மை நெருங்கிக் கேள்வி கேட்க முடியாது என்கிற மிதப்பில் இருந்த இந்த பேடிக்கு எமது தோழர்களின் கேள்விகளும் கண்டனங்களும் புதுவிதமான அதிர்ச்சியைத்தான் தோற்றுவித்தன.


இது ஒருபுறம் இருக்கட்டும். சென்ற ஞாயிறு அன்று (01/06/08) இரவு 09:30 மணியளவில் ஜெயா டிவியில் (ஜெயாவின் பிய்ந்துபோன செருப்புகளுக்கு பூமாலை போட்டு ஆராதிக்கும் பூசாரி) ரபி பெர்னாட் உடன் நேர்கானல் நிகழ்ச்சியில் உட்கார்ந்திருந்தார் நம்ம ஞாநி. சரி என்னதான் பேசுகிறார் பார்ப்போமே என்று கவனிக்கத் தொடங்கினேன்.


"கருநாடகத் தேர்தல் முடிவு குறித்து உங்களது கருத்து என்ன?" என்பதுதான் கேள்வி.

"கருநாடக மக்கள், குஜராத் மக்களைப் போல் புத்திக் கூர்மையுள்ளவர்கள் என்பதை இத்தேர்தல் முடிவுகளின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள். தமிழகத்தில் சென்ற சட்ட மன்ற தேர்தலில் வலுவான அ.இ.அ.தி.மு.க.வைத் தோற்கடிக்க கருனாநிதி அறிவித்த கலர் டி.வி., ரூபாய்க்கு 2கிலோ அரிசி போன்ற கவர்ச்சிகர சலுகை அறிவிப்புக்கள், சமீபத்தில் நடைபெற்ற குஜராத், கர்நாடக சட்டமன்றத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியால் முன் வைக்கப்பட்டது. ஆனால், இந்த இரு மாநில மக்களும் இச்சலுகை அறிவிப்புகளைப் புறக்கணித்து பாஜகவுக்கு பெருவாரியான வெற்றியினை வழங்கியிருக்கிறார்கள். இது நிச்சயமாகப் பாராட்டத்தக்கது."

"மேலும் கர்நாடகாவில் போட்டியிட்ட சினிமா நடிகர்கள் அனைவரும் தோல்வியுற்றுள்ளனர். எனவே, கர்நாடக மக்கள் சினிமாக் கவர்ச்சி அரசிலையும் புறக்கனித்துள்ளார்கள் என்பதுவும் கூட கூடுதலான சிறப்புதான்."

"இவை எல்லாவற்றையும் விட சிறப்பான விசயம் என்ன வென்றால், கன்னட வெறிபிடித்த வாட்டாள் நாகராஜை டெபாசிட் கூட வாங்கமுடியாமல் மக்கள் புறக்கனித்ததற்குக் காரணம், பாஜகவின் மொழிவெறி எதிர்ப்பு அரசியலுக்குக் கிடைத்த வெற்றிதான் இத் தேர்தல் முடிவுகள்". "இந்த வெற்றியின் எதிரொலி வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் நிச்சயமாக பாஜகவுக்கு ஆதரவாக இருக்கும். இதில் சந்தேகமே இல்லை". என்று புகழாரம் செய்தார்.

உன்மையில் நிகழ்ந்தது என்னவென்று அனைவருக்கும் தெரியும். இந்த முறை வாட்டாள் நாகராஜின் வழக்கமான வேலையை எடியூரப்பாதான் செய்தான். வாட்டாள் நாகராஜ் தேர்தலில் தோற்கடிக்கப் படுவதற்கு முன்பே, கன்னட வெறியினைத் தூண்டுகிற அரசியலில் எடியூரப்பாவினால் தோற்கடிக்கப்பட்டான்.

காலம் காலமாக மதவெறி அரசியல் நடத்திவரும் பாஜக பயங்கரவாதிகளின் அன்றாட அரசியலே இத்தகைய மலிவான வெறிதூண்டும் நடவடிக்கைகள்தான். வாட்டாள் நாகராஜோ தேர்தலுக்காக வெறியினைப் பரப்புபவன். அதனால்தான் தொழில்முறைப் பயங்கரவாதிகளிடம் அவன் தோல்வியுற்றான்.



ஒகேனேக்கல் பிரச்சினையில் வாட்டாள் நாகராஜை முந்திக் கொண்டு தமிழக எல்லையில் அத்துமீறி நுழைந்தவந்தான் எடியூரப்பா. அந்த அக்கிரமத்தில் சம்பாதித்ததுதான் இப்போதைய முதல்வர் பதவி என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் ஞாநியால் மட்டும் எப்படி வெட்கமின்றி இவ்வாறு பேச முடிகிறது? எல்லாம் பூநூல் பாசம்ந்தான், வேறென்ன!


அப்ப இந்த 'முற்போக்கு' வேசம்?!, அதவிட முடியுமா? அதுதானே இவனுங்களோட பரம்பரைக் கவசம். பாரதி முதல் ஞாநிவரை எல்லாப்பயலும் இப்படித்தான் பிழைக்கிறான்.


'நண்டு கொழுத்தால் வலைக்குள்ள தங்காது' என்பது பழமொழி. குஜராத், கர்நாடகத் தேர்தல் வெற்றியில் கொழுப்பேறிய இந்த பார்ப்பன நண்டு இப்பத்தான் முற்போக்கு வலைக் குள்ளயிருந்து வெறியே தலைகாட்டத் தொடங்கியிருக்கிறது.


'எல'கணேசனைவிட 'சோ'வைவிட கொடிய நச்சுப் பாம்பு இது. அதனை உடனே நாம் நசுக்கியாக வேண்டும். ஏனென்றால் இது பதுங்கியிருப்பது நமக்கு வெகு அருகாமையில் உள்ள முற்போக்கு முகாமில்.



தோழமையுடன்,

ஏகலைவன்.