Thursday, August 27, 2009

போலித் தமிழ் தேசியவாத அரசியலும் ஒரு ஏகாதிபத்திய எடுபிடி அரசியலே!

”ஏடறிந்த வரலாறுகள் யாவும் வர்க்கப் போராட்ட வரலாறுகளே...” – என்று இந்த உலகத்து பாட்டாளி வர்க்கத்துக்கு ‘கம்யூனிஸ்டு அறிக்கை’ என்கிற அரிய பொக்கிஷத்தைப் படைத்துத் தந்த கார்ல் மார்க்ஸ் தொடங்குகிறார். மனித குலம் உருவாகிய காலந்தொட்டு இதோ இப்போதைய ஏகாதிபத்திய சமூகம் ஈறாக நாளை அமையவிருக்கும் சோஷலிச சமூகம் வரை அனைத்திற்கும் பொருந்துகின்ற அற்புதப் படைப்பு அது. இராக், பாலஸ்தீனம், கொசோவா என்று ஈழம் வரை நீளுகின்ற விடுதலைப் போராட்டங்கள் நம் சமகாலத்திய துயரங்களாக நம்முன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவையனைத்திலும் தெளிவாகத் துருத்திக் கொண்டு ஏகாதிபத்திய சுரண்டலில் கோரப்பற்கள் வெளித்தெறிகிறது. இந்த விடுதலைப் போராட்டங்கள் இனப் போராட்டங்களாகவோ ‘தீவிரவாத்த்திற்கு’ எதிரான போர் எனும் போலிச் சித்திரத்திற்குள் அடைத்து முதலாளித்துவ ஊடகங்கள் சித்தரித்துக் கொண்டிருந்தாலும் இதற்குள் உறைந்திருப்பது வர்க்கப் போராட்டங்கள்தான் என்பது அவ்வப்போது அம்பலப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஏகாதிபத்தியத்தைப் பொருத்தவரை தனது இருத்தலை பாதுகாத்துக்கொள்வதற்கு, நிலவுகின்ற சமூக முரண்பாடுகளில் வர்க்கம் என்கிற அடையாளத்தை வெளித்தெரியாமல் மூடி மறைக்க வேண்டிய நெருக்கடியிலிருக்கிறது. இந்த நிலையை அவர்களுக்கு ஏற்படுத்தியது சகல முனைகளிலிருந்தும் எதிர்த்துவரும் புரட்சிகர கம்யூனிச அணிகள்தான். அதற்காக இந்த சமூகத்தில் நிலவுகின்ற மதம், சாதி, இனம் போன்ற வேறுபாடுகளை, அடையாளங்களை மிகைப்படுத்தி ஒரு கலாச்சாரமாகப் பராமரிப்பதன் மூலமாக வர்க்க அடையாளத்தை இல்லாமல் செய்துவிடலாம் என்று ஏகாதிபத்தியம் நம்புகிறது; இவ்வழியில் பல இடங்களில் ஆதாயத்தையும் பெற்றுவருகிறது, சில இடங்களில் தனது கட்டுப்பாட்டை இழந்து வர்க்கப் போராக அம்பலப்படுத்தப்ப்ட்டு ஏகாதிபத்தியம் தோற்கடிக்கவும் படுகிறது. இதற்கு சமீபத்திய சரியான உதாரணம் நேபாளம்.

மதம், சாதி, இனம் போன்ற அடையாளங்களின் அடிப்படையில் முன்வைக்கப்படும் போராட்டங்கள் முழுமையான தொரு விடிவை, விடுதலையை உழைக்கும் மக்களுக்கு ஒருபோதும் ஏற்படுத்திக் கொடுக்காது. மாறாக அது ஏகாதிபத்தியச் சுரண்டலுக்குத்தான் வழியமைத்துக் கொடுக்கும், என்பது நிதர்சனமான உண்மை. ஏகாதிபத்திய ஸ்பான்சரோடு நட்த்தப்படுகின்ற போராட்டங்களில் கூட ஒடுக்கப்படுகின்ற இனத்திற்கோ, சாதிக்கோ சாதகமான விளைவுகளை ஏகாதிபத்தியம் ஏற்படுத்தித் தந்த்தே இல்லை. அது என்றும் எப்போதும் தனது சொந்த வர்க்கமான ஒடுக்குகின்ற அணியைச் சார்ந்தே நின்றுகொள்கிறது. இதற்கும் நாம் கண்முன் காணுகின்ற பல்வேறு உதாரணங்களைச் சொல்லமுடியும்.

எனவே, சாதி ரீதியாகவோ, மத ரீதியாகவோ, இன ரீதியாகவோ அடையாளப்படுத்தப்பட்டு ஒடுக்கப்படுகின்ற மக்கள்; தங்களின் இந்த அடையாளங்களைத் துறந்து வர்க்க ரீதியாகத் திரண்டு எதிரியைச் சந்தித்தாலொழிய வெற்றி பெற முடியாது, என்பதுதான் வரலாற்றுப் பூர்வமான படிப்பினை. இதைத்தான் நாம் இந்தியா என்கிற மோசடி தேசியம் முதலாக ஈழப் போராட்டம் வரையிலாகட்டும், இன்னபிற உலகில் வேறு எங்கெல்லாம் தேசிய-இனப்பிரச்சினைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறதோ அனைத்திற்கும் பொருத்தி போராடி வருகிறோம். ஈழப் போராட்டம் தோல்வியுற்றதற்கும் சிங்களப் பேரினவாதம் வெற்றியடைந்த்தற்கும் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் முதலாளித்துவ வர்க்கத்தின் பொருளாதார நலன் தான் காரணம் என்கிற எளிய உண்மையை, நம் கண்முன் தெளிவாக்க் காணக் கிடக்கும் உண்மையைக் கொண்டு அம்பலப்படுத்தி பேசிவருகிறோம். இந்திய ஆளும் வர்க்கமான தரகு முதலாளித்துவம்தான் இந்தியாவின் அளவு கடந்த ஆதரவை நிதியாகவும், ராணுவ ரீதியிலும் இன்னும் எப்படியெல்லாம் முடியுமோ அந்தந்த வழிகளிலெல்லாம் அப்போரை முட்டுக்கொடுத்து நட்த்தி லட்சக்கணக்கான தமிழர்களையும் அவர்களுக்கு தலைமைதாங்கி போராடிய புலிகளையும் கொன்றொழித்திருக்கிறது, என்பதுதான் நமது குற்றச்சாட்டும், உண்மையுமாகும்.

ஆனால், ஈழத் தமிழருக்கு ஆதரவாக இங்கேயுள்ள ‘தொப்புள் கொடி’ உறவினர்களான தமிழ் தேசியவாதிகள் இவற்றின் அடிப்படையைப் புரிந்து கொள்வதே கிடையாது. ஈழப் போரின் இந்தியத் தலையீடு மலையாள அதிகாரிகளின் சதி எனவும் அவர்கள்தான் மன்மோகனுக்கும் பிரனாப் முகர்ஜிக்கும் முன்வாயும் பின்வாயுமாக இருந்து பேசிவருவதாகவும் உருவகப்படுத்துகிறார்கள். ஈழத்தின் மீதான இந்திய ஆளும் வர்க்கத்தின் பொருளாதாயச் சுரண்டலை ஏதோ சில மலையாளிகளின் சதி என்பதாக கற்பனையாக உருவகப்படுத்திப் பேசிவருகிறார்கள். சிவசங்கர் மேன்னையும் பாதுகாப்பு ஆலோசகரான நாராயணனையும் இன்னபிற அதிகாரிகளையும் மையப்படுத்தி, அந்த அயோக்கியர்களை மலையாள சமூகத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக்கி, மலையாளிகளுக்கும் தமிழர்களுக்கு மிடையிலான பிரச்சினையாகச் சித்தரிக்கிறார்கள். நாம் இதனை மறுத்தால் உடனே நம்மை ஆரிய இந்தியாவின் பிரதிநிதியாக்கி பார்ப்பனியம் அது இதுவென்று வசைபாடுகிறார்கள். இப்படிப்பட்ட வசைகளுக்குக் கூட முக்கியத்துவம் கொடுத்து எண்ணற்ற முறைகள் பதில் சொல்லி அலுத்துவிட்ட்து. இன்னும் கிளிப்பிள்ளை கணக்காக சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள். அது ஏன்?

சரி நமக்கு பார்ப்பன பட்டம் கொடுக்கும் அளவுக்கு ’உயர்ந்துவிட்ட’ இவர்களின் பார்ப்பன எதிர்புணர்வு எப்படிப்பட்ட்து என்பதைக் கொஞ்சம் கூர்ந்து பார்த்தால் காணக் கண் கூசுகிறது. தில்லைக் கோயிலில் தமிழில் தேவாரம், திருவாசகம் பாடியதற்காக தீட்சிதப்பார்ப்பனர்களால் அடித்து வீசப்பட்ட ஆறுமுக சாமியை அழைத்துக்கொண்டு தில்லை நகரத்து வீதிகளில் நமது தோழர்கள் போராட்டங்கள் நட்த்திக் கொண்டிருந்த அதே நாட்களில், அந்த தீட்சிதக் கும்பலின் பிரதிநிதிகளை கொல்லைப்புறமாக அழைத்து மேடையில் வைத்து கவுரவித்த்து, மணியரசன் கும்பலின் தமிழ் காப்பணி. இந்த போலிதேசிய பார்ப்பன அடிவருடிக் கும்பல், தில்லையில் ‘சேக்கிழர் செந்தமிழ் விழா’ என்கிற பெயரில் தீட்சிதப் பார்ப்பனர்களை அழைத்து மேடையில் வைத்துக் கொண்டு கூத்தடித்த்து. இந்த இழிவான நடவடிக்கையைக் கண்டித்து 28.07.2006 அன்று அதே கூட்ட்த்தில் எமது தோழர்கள் துண்டறிக்கை வினியோகித்தனர். (நன்றி: புதிய ஜனநாயகம் – மே’08) இந்த பார்ப்பன சேவக்க் கூட்டம்தான் ம.க.இ.க.வுக்கு பார்ப்பன முத்திரை குத்த துடித்துக்கொண்டிருக்கிறது.

புலிகளின் தலைவர்களில் ஒருவரான சுப.தமிழ்ச் செல்வனின் மறைவை வெடிவெடித்து, இனிப்பு வழங்கிக் கொண்டாடிய சோ, ஜெயல்லிதா முதலான பார்ப்பனக் கூட்டம், அத்தோடு நிற்காமல் முரசொலியில் இரங்கல் கவிதை எழுதியதற்காக கருணாநிதியின் ஆட்சியைக் கலைத்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எகிறிக்குதித்த்து. இந்த பார்ப்பனக் கூட்டம்தான் ஈழம் பெற்றுத்தரப்போகிறது என்று வீதிவீதியாக, தேர்தல் பிரச்சாரம் செய்த்து இந்த போலிதேசிய பித்தலாட்ட கும்பல். ஆனால் தேர்தல் முடிந்த மறுநாள், ஈழம் பெற்றுத்தருவதாகச் சொன்ன ஜெயாமாமியிடமிருந்து முள்ளி வாய்க்காலில் சிக்கியிருந்த ஈழ மக்களுக்காக ஒரு துண்டறிக்கையைக் கூட பெறமுடியாமல் கூனிக் குறுகிக் கிடந்த்து வேறுவிஷயம்.

கருணாநிதியும் காங்கிரசும் ஏதோ உலகமகா யோக்கியர்கள் என்று நாம் சொல்லவில்லை. அவர்கள்தான் நடந்து முடிந்த ஈழப் போரின் விளைவுகளுக்குப் பொறுப்பு என்பதில் நமக்கு மாற்றுக்கருத்து இல்லை. இதற்காக கருணாநிதியும் காங்கிரசும் மக்களிடம் அம்பலப்படுத்தப்படவேண்டியவர்களா என்றால் நிச்சயம் அம்பலப்படுத்தப்பட வேண்டியவர்கள்தான் என்பதுதான் நமது நிலைப்பாடும். அதை மையப்படுத்தித்தான் ம.க.இ.க.வும் அதன் தோழமை அமைப்புகளும் களத்தில் போராடிக்கொண்டிருந்தன. (அதுகுறித்த செய்திகள் கட்டுரைகள் வினவு தளத்திலும் இன்னபிற தோழர்களின் தளத்திலும் காட்சிக்கு அப்படியே இருக்கின்றன பார்த்துக்கொள்ளலாம்.)

ஈழப் போரை சூத்திரதாரியாக நின்று நட்த்துகின்ற இந்திய ஆளும் வர்க்கத்தை வெளிப்படையாக அம்பலப்படுத்தி மக்களிடம் பிரச்சாரம் செய்வதற்கு வக்கற்ற இக்கூலிக்கும்பல், பா.ஜ.க.வுக்கும் ஜெயாவுக்கும் ஓட்டுப் பொறுக்கித் தந்து குறுக்கு வழியில் ஈழத்தை மீட்டுவிடலாம் என்று கணவு கண்ட்து. இந்தக் கணவை மெய்யாக்க இக்கும்பல் மிச்சமிருந்த மானம், மரியாதையைத்தான் விலையாக்க் கொடுக்க வேண்டியிருந்த்தேயொழிய விளைவு இவர்களுக்குச் சாதகமாக இருக்கவில்லை. தேர்தல் கமிஷனின் ஏகோபித்த ஆசியோடு நடைபெற்று வரும் நமது பணநாயகத் தேர்தலில் இவர்களது கோரிக்கை எடுபடாத்து போலித் தேசியவாதிகளுக்கு மட்டுமின்றி, மந்திரத்தில் ஈழம் பெற்றுத்தருவதாக சவடால் அடித்த ‘அம்மா’வுக்கும் கடும் அதிர்ச்சியைத் தந்த்து.

ஈழம் பெற்றுத்தருவார்கள் என்று இவர்கள் காட்டிய நபர்கள் உள்ளிட்ட எல்லோரும் இந்திய தேசியத்தின் காவலர்கள்தான் என்பதையும், காஷ்மீர், அஸ்ஸாம் மக்களைக் குதறிக்கிழிக்கும் இந்திய தேசிய ஒடுக்குமுறை எனும் இழிநிலையை நேரடியாக ஆதரிப்பவர்கள்தான் என்பதையும் பற்றி இந்த போலித் தேசியவாதிகளுக்கு எந்தக் கவலையும் இல்லை. பார்ப்பன-இந்துமத பயங்கரவாத நடவடிக்கைகளின் மூலமாக பிற சிறுபான்மை மத்த்தவரையும், அனைத்து சாதி/மத உழைக்கும் மக்களையும் கேட்பாரில்லாமல் ஒடுக்கிவரும் பார்ப்பனிய சக்திகள் இவர்களுக்கு எப்படி ஈழம் பெற்றுத்தருவார்கள் என்பது பற்றியும் இவர்கள் பொருட்படுத்தவில்லை. இவற்றை அம்பலப்படுத்தி, இந்தியாவில் கோலோச்சுகின்ற இந்த ஒடுக்குமுறை சக்திகள் ஈழத்தில் தலையிட அருகதையற்றவர்கள் என்று பேசினால் நாம் பார்ப்பனியவாதிகளாம்.

புலிகளை அரசியல் ரீதியாக விமர்சித்த்தால் நாம் பார்ப்பனியவாதிகள் என்றும் இக்கூலிக்கும்பல் பிதற்றுகிறது. இறுதிப் போரில் களத்தில் வீரமரணமடைந்த புலிப்படை அணிகளுக்கு நாங்கள் வீர வணக்கம் தெரிவித்த்தை இக்கும்பல் வேறு விதமாகத் திரிக்கிறது. புலிகள் மீதான எமது விமர்சனத்தை இவர்கள் ஏதோ துப்பறிந்து கண்டுபிடித்த்து போல பீற்றிக் கொள்கிறார்கள். எமது விமர்சன்ங்கள் யாவும் வெளிப்படையானதுதான். புலிகளை நாங்கள் விமர்சித்த்தை எங்கும் எப்போதும் மறுக்கவில்லை. ஆனால் அத்தகைய விமர்சனம் எந்தக் கோணத்தில் வைக்கப்பட்ட்து என்பதை பரிசீலிக்கத் தெரியாத இந்த பிழைப்புவாதக் கும்பல்தான் தர்க்க ரீதியாக அவ்விமர்சன்ங்களை எதிர்கொள்ள மறுக்கிறது.

ஈழத் துரோகக் குழுக்களை புலிகள் அழித்தொழித்த்தைத் தவிர்த்து, ஏனைய தோழமை சக்திகளை பாசிச முறையில் புலிகள் வேட்டையாடியதை பலமுறை நாம் கண்டித்திருக்கிறோம். ஆனால், ஏகாதிபத்தியங்களால் வளர்க்கப்பட்ட புலிகள், அதே ஏகாதிபத்திய சதியின் முன்னால் தோற்றுக்கொண்டிருப்பதை காணப் பொறுக்காத நிலையில், அவர்கள் வெற்றிபெற வேண்டும் என்றும் விரும்பினோம். அந்த அக்கறையில், செயல் தந்திர ரீதியிலான முரண்பாடுகளை மட்டும் அவர்களுக்காக நாம் முன்வைத்தோம். அவற்றைப் பரிசீலிக்கத் தயாராக இல்லாத புலிகள், இந்த போலித் தேசிய வாதிகளையும் இந்திய ஓட்டுப்பொறுக்கிகளையும் நம்பி சீரழிந்தார்கள். இந்திய நாடாளுமன்றத் தேர்தல் ஆட்சி மாற்றம் தமக்குச் சாதகமானதாக அமையும் என்று தப்புக்கணக்குப் போட்டார்கள். இந்திய தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன் இவர்களை முடித்துவிட்ட்து சிங்கள பேரினவதமும், இந்திய மேலாதிக்கமும்.

இது மாபெரும் தோல்வியைச் சந்தித்த துயரந்தோய்ந்த வரலாறுதான். ஆனால், அத்தோல்விக்கான காரணிகளைப் பரிசீலிப்பதுதான் இத்தோல்வியை வெற்றியை நோக்கி இட்டுச் செல்ல முடியுமே, ஒழிய ஆத்திரமும், உணர்ச்சிமயமான வார்த்தைஜாலங்களும் அல்ல. ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமை சாத்தியப்படவேண்டும் என்றால் இந்தியாவின் பார்ப்பன தேசிய ஒடுக்குமுறையும் அதற்குள் குளிர்காயும் ஏகாதிபத்திய-தரகுமுதலாளித்துவ சுரண்டல்களையும் சிறிதும் சமரசமின்றி மக்கள்முன் அம்பலப்படுத்தி இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் அதன் எடுபிடிகளான அனைத்து ஓட்டுப்பொறுக்கிகளுக்கும் எதிரான போராட்டங்களை களத்தில் உருவாக்க வேண்டும். மலையாள மக்களுக்கும், கன்னட மக்களுக்கும் எதிராக அல்ல. இப்படிப் பிற தேசிய இனங்களை தமிழனோடு மோதவிடுவது போல பேசுவதன் மூலமாக உலகைச் சூறையாடிவரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தையும், ஈழத்தைக் குதறியெறிந்த இந்திய மேலாதிக்கத்தையும் இவர்கள் மறைமுகமாக நியாயப்படுத்தியும் வருகிறார்கள், என்பதையும் இந்த போலித்தேசியவாதிகளின் கேளாச் செவிகளில் நாம் பலமுறை எடுத்துச் சொல்லியிருக்கிறோம்.

பார்ப்பன இந்து தேசியத்திற்கு எதிராகவும், ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும் குரல் கொடுக்கும் நம்மை நட்பு சக்தியாக்க் கூட கருத வாய்ப்பில்லை என்று சொல்லிக்கொள்ளும் இக்கூட்டம், எதிர்முகாமில் இருக்கும் சக்திகளோடு சிறிதும் கூசாமல் எப்படி உறவு கொள்ள முடிகிறது? பார்பனியத்துடனும் ஏகாதிபத்தியத்துடனும் சந்தர்ப்பவாத இனக்கம் காட்டும் இந்த போலித் தேசியக் கூட்டம் நம்மை விமர்சிப்பதுதான் நமக்கு இவர்கள் கொடுக்கும் அங்கீகாரம் என்பது ஒருபுறமிருக்கட்டும். இவர்களின் இந்த பிழைப்புவாத நடவடிக்கைகள் எதார்த்தமாக, ஏதோ வேறு வழியின்றி செயல்படுத்தப்படுபவை அல்ல. அது தேர்ந்து தெளிந்து திட்டமிட்டுத்தான் அவர்களால் மேற்கொள்ளப்படுகிறது. இதனை மணியரசனிலிருந்து பழ.நெடுமாறன் வரை அனைவரிடத்திலிருந்தும் நாம் எளிதில் புரிந்துகொள்ளமுடியும்.

ஏகாதிபத்தியத்தின் இருத்தல் என்பது எப்படி சாதி, மத, இன வேறுபாட்டு அடையாளங்களுக்குள் தந்திரமாக தம்மை நிலைநிறுத்திக் கொள்கிறதோ, அப்படித்தான் இந்த இனவாத அரசியலும் இப்படிப்பட்ட குறுக்கு வழிகளில் தமது இருத்தலை நிலைநிறுத்திக்கொள்கிறது. அதனால்தான் இவர்களது நடவடிக்கைகள் மறைமுகமாகவும் நேரடியாகவும் ஏகாதிபத்தியத்தைப் பாதுகாக்கும் அரும்பணியைச் செய்வதாக அமைந்துவிடுகிறது. நமது புரட்சிகர கருத்தாக்கங்கள் ஏகாதிபத்தியத்தின் குடுமியைப் பிடித்து இழுத்துவந்து வர்க்க முரண்பாட்டுக்குள் வெளிப்படையாக நிறுத்திவிடுவதைப் போல, தவிர்க்க இயலாமல் இந்த போலித் தேசிய பிழைப்புவாத அரசியலும் நம்மால் அம்பலப்படுத்தப்படுகிறது. தமது இருத்தல் பறிபோகும் நிலையில் இப்போலித் தமிழ்த்தேசியக் கும்பல் நம்மீது அடிப்படையற்ற அவதூறுகளுடன் கூடிய வசைகளை பொழிகிறது. எப்படியாகிலும் நாம் கற்றுக் கொண்ட புரட்சிகர-மார்க்சிய-லெனினிய அரசியல் அவற்றைச் சந்திக்கும் துணிவை நமக்கு இயல்பாகவே வழங்கிவிடுகிறது. சந்திபோம் திரைகிழிப்போம்!தோழமையுடன்,
ஏகலைவன்.

Tuesday, March 3, 2009

பாரதி பக்தர்களும், வி.பி.சிங்கின் ரசிகர்களும் இணைந்த கள்ளக் கூட்டணிதான் பெ.தி.க. மற்றும் சி.பி.எம். கூட்டணி!....

அன்பார்ந்த தோழர்களே!

ஈழம் கொலைக்களமாகி தகிக்கிறது. நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கான பிணங்களைக் கொன்று சிங்கள பேரினவாத பாசிஸ்டுகளும் - இந்திய மேலாதிக்க பார்ப்பனக் கும்பலும் களிப்பில் இருக்கின்றனர். மறுபுறம் இந்தக் கேடுகளுக்கு எதிராக, தமிழகத்தில் வழக்கறிஞர்களின் போராட்டங்கள் நாளுக்கொரு வடிவமாக வீரியத்துடன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போராட்டங்கள் ஏற்படுத்திய தகிப்புகள் உயர்நீதிமன்ற, காக்கிச்சட்டை ரவுடிகளின் தாக்குதலுக்குப் பிறகு இன்னும் வேகமாகப் பற்றிப் படர்ந்து தமிழகம் முழுவதும் நீதித்துறை முடக்கப்பட்டு கிடக்கிறது. நம்முடைய களமும் அங்குதான் இருக்கின்றது என்று எண்ணி, செயல்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில்; இணையத்தில் சண்டமாருதம் செய்யச் சொல்லி நம்முடைய சக்தியை, நேரத்தைக் களவாடத் துடிக்கிறது ஒரு கூட்டம்.

தமது அமைப்பின் பெயரில் மட்டும் பெரியாரை வைத்துப் பாதுகாக்கும் தமிழினவாத பொய்யர்கள், தம்மோடு கருத்துமோதல் கொள்வோருக்கெல்லாம் பார்ப்பன பட்டம் சூட்டி காலத்தைத் தள்ளிக்கொண்டிருக்கின்றன. வருண-சாதி இழிநிலைகளின் குறியீடுதான் பார்ப்பன பண்பாடு என்று பெரியாரியமும் அம்பேத்கரியமும் அறுதியிட்டுச் சொன்ன பிறகும், அவர்களது வாரிசுகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் அவற்றுக்கு புதிய வியாக்கியானத்தை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆம், இப்போது பார்ப்பனியவாதி என்று ஒருவரை வரையறுப்பதற்கு வேறு பல இழிவான அளவுகோல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த அளவுகோல்களே இவர்களின் பார்ப்பன ஆதரவுத் தன்மையினை அப்பட்டமாக அம்பலப்படுத்துகின்றன. அதைப்பற்றி பார்ப்போம்.....

ஒரு சமூக சீர்திருத்தக் கொள்கை என்று கூட ஒப்புக்கொள்ள முடியாத அளவுக்கு, அடித்தட்டு உழைப்பாளி மக்களுக்கு எந்தப் பயனையும் விளைவிக்காத கொள்கையும், ‘சமூகநீதி பேசுகின்ற ஓட்டுப்பொறுக்கிகளின்’ அரசியல் வாழ்வையும் ஆதிக்க சாதி இந்துக்களின் குடிகளையும் மட்டும் செழிப்புறச் செய்யும் வகையில் வடிவமைத்துப் பாதுகாக்கப்படும் கொள்கையுமான ‘இடஒதுக்கீடு...’ என்கிற வெற்றுக்காகிதத்தைப் பற்றி கேள்வி கேட்டால், நாம் பார்ப்பனவாதிகளாம். அல்லது....

பார்ப்பன ஆதிக்கவெறி இந்துமதக் கும்பலுக்கு ஆதரவாக வாழ்ந்து, ராஜீவின் பீரெங்கி பேர ஊழல்களின்போது துணைநின்று, புதிய பொருளாதாரக்கொள்கையின் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு நாட்டை எழுதிக்கொடுத்த துரோகிகளில் ஒருவராக அங்கம்வகித்து; தமது அரசியலின் அந்திமக்காலத்தில், பிரதமர் பதவிநாற்காலி கனவில், ஓட்டுப்பொறுக்கி பிழைப்பதற்கு ‘சமூகநீதி’ வேடம்போட்ட வி.பி.சிங் என்கிற ஒரு அற்பமனிதனின் மீது முற்போக்காளர்களால் போர்த்தப்பட்டிருக்கும் புனிதபிம்பத்தை அம்பலப்படுத்தி விமர்சித்தால் நாம் பார்ப்பனவாதிகளாம். அல்லது.....

அமைப்பின் பொறுப்பில் இருக்கும் ஒரு நபர், பிறப்பால் மட்டும் பார்ப்பனராக இருக்கும் பட்சத்திலும் நாம் பார்ப்பனவாதிகளாம். இவையெல்லாம் பெரியாரியத்தின் குத்தகைதாரர்கள் பார்ப்பனியத்திற்குச் சொல்லும் நவீன வரையறை. நம்மால் முன்வைக்கப்பட்டிருக்கும் விமர்சனத்தைப் பரிசீலிக்க பம்மிக்கொண்டு இருப்பவர்கள், விமர்சித்தவரின் பிறப்பை ஆராய்ந்து பதில் தேடுகின்ற கேவலமான பிழைப்புவாதிகளாக மாறிப்போனது இவ்வாறுதான்.

அதாவது இதுதான் பச்சையான பார்ப்பனப் பார்வை. பிறப்பைச் சொல்லி ஒருவரை இழிவுபடுத்தும் பார்ப்பனியக் கொடுங்கோன்மையின் அச்சுஅசலான வாரிசுகளாக பெரியாரின் வாரிசுகள் என்று சொல்லிக்கொள்பவர்கள், பகுத்தறிவு பேசுபவர்கள் சீரழிந்திருக்கிறார்கள். பெரியாரியத்தை பிழைப்புக்காக பேசாமல், உணர்வுரீதியாகப் பேசுபவர்களாக இவர்கள் இருப்பார்களேயானால், நாம் முன்வைத்த கருத்துக்களின் அடிப்படையில் இவர்களால் பேசியிருக்க முடியும். என்ன செய்வது, வீரமணியினால் புகட்டப்பட்ட ‘மானமிகு’ அம்சங்கள் இவர்களிடத்தில் மிச்சமிருந்த பகுத்தறிவை உறிஞ்சி காழ்ப்புணர்வை விதைத்திருக்கிறது. இதில் கேவலமான விசயம் என்னவென்றால், இவர்கள் பார்ப்பனியத்திற்குச் சொல்லும் புதிய வரையறையை ஆதரித்து நிற்பவன், “பார்ப்பனன்” என்கிற வார்த்தையை ’கன்னியக் குறைவான சொல்’, “ஒரு குறிப்பிட்ட சமூகத்தவரை இழிவுபடுத்தும் சொல்...” என்றெல்லாம் சொல்லிக்கொண்டு, அச்சொல்லை கனவில் கூட உச்சரிக்கவிரும்பாத போலி கம்யூனிச சி.பி.எம்.

ம.க.இ.க.வின் சமரசமற்ற செயல்பாடுகளும், அதன்பொருட்டு தெரிந்த எதிரிகளான சுரண்டல்வாதிகளையும், அவர்களுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் வெட்கமற்று சேவையாற்றும் துரோகிகளான திரிபுவாதிகளையும் கேள்விக்குட்படுத்துவதால், தமக்குள் இருக்கும் சிறு சிறு சச்சரவுகளை மறந்து துரோகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து, தமது பதிலுரைக்கமுடியாத, கையாளாகாத தனத்தை கூட்டாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்ற நேரம் இதுதான். பார்ப்பனிய ஆதரவு போலி கம்யூனிஸ்டுகளும் பெரியாரியத்தின் குத்தகைதாரர்களும் ஒன்றிணைந்து நிற்கும் புள்ளியும் இதுதான்.

தான் வாழும் காலம் முழுதும் தான்சார்ந்த பார்ப்பன சமூகத்துக்கு கண்ணும், கருத்துமாகச் சேவையாற்றிய பாரதி முற்போக்காளர்களால் “பெண்ணடிமையை எதிர்த்துப் பாடியவன், சாதி ஒழிப்புக்காகக் குரல் கொடுத்தவன், மதவெறி எதிர்ப்பின் முன்னோடி,....” என்றெல்லாம் கொண்டாடப்பட்டதை எதிர்த்து, பாரதியின் பால் கட்டியெழுப்பிய போலி முற்போக்கு பிம்பத்தை உடைத்து சுக்குநூறாக்குவதற்கு பாடுபட்டவர்கள்தான், பிழைப்புவாதத்தை அரசியலாகக் கொண்டிருந்த வி.பி.சிங்கை பாரதி அளவுக்கு உயர்த்திப்பிடிக்க முயல்கிறார்கள். ”வி.பி.சிங்கை விமர்சிப்பது பெரியாரையும் அம்பேத்கரையும் விமர்சிப்பது போன்றது” என்று சொல்லி நம்மை ‘தெய்வகுற்றம் செய்துவிட்டவர்கள்’ என்பதைப் போல மிரட்டுகிறார்கள். ”தவறென்றால் என்னையும் விமர்சனத்துக்குட்படுத்துங்கள்...” என்று தைரியமாகச் சொன்ன பெரியாரின் வழிவந்தவர்கள், நமது விமர்சனங்களைக் கண்டு ஆற்றமாட்டாமல் தன்நிலை மறந்து பிதற்றுகிறார்கள். வி.பி.சிங்கைக் காப்பாற்ற பெரியாரையும் அம்பேத்கரையும் கேடயமாகப் பயன்படுத்தி அவ்விருதலைவர்களையும் இழிவுபடுத்துவதும் இவர்கள்தான்.

பாரதிக்கு போலிகம்யூனிஸ்டுகள் கட்டிவிட்ட புனித பிம்பத்தை இவர்கள் வி.பி.சிங்கின் மீது கட்டுகிறார்கள். இதன் விளைவாக பாரதி விடயத்தில் எதிரும் புதிருமாக இருந்த இவ்விரு முகாமும் இப்போது ஒத்தகருத்துடையவர்களாகக் கைகுலுக்கிறார்கள். இவர்களுக்குள் மோசடியாகப் பொதிந்திருக்கும் எந்தவிதமான அரசியல் அடிப்படையுமில்லாத ’ரசிக மனோபாவம்’தான் இவர்களை இணைத்திருக்கிறது. இந்த கருத்தொற்றுமை வி.பி.சிங்கில் தொடங்கி நம்மை பார்ப்பனவாதி என்று முத்திரை குத்துவதுவரை நீளுகிறது.

பார்ப்பனியத்தை ஆதரித்து வாழ்ந்த பாரதி சாதிஎதிர்ப்பு நாடகம் நடத்தியது போலதான், மக்கள் விரோத ஆளும்வர்க்கத்தில் அங்கம் வகித்த வி.பி.சிங் சமூகநீதி நாடகம் நடத்தினார். இன்று பாரதியும் இல்லை வி.பி.சிங்கும் இல்லை. இவ்விருவரது உண்மையான வாரிசுகள் தாங்கள்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் இந்தக் கோமாளிகள்தான் முற்போக்கு முகமூடியுடன் அவர்களை உயர்த்திப்பிடித்தவாறு திரிகிறார்கள். ஆனால், பாரதியின் உண்மையான வாரிசுகள் ஆர்.எஸ்.எஸ்.ஆகவும் வி.பி.சிங்கின் உண்மையான வாரிசுகள் ஆதிக்கசாதிவெறியர்களாகவும் ஒன்றுபட்டு தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் கொழுக்கிறார்கள். இந்தக் கேவலத்தை எதிர்க்கத் தொடைநடுங்கும் இந்த யோக்கியர்கள், எதிர்த்து நிற்கும் புரட்சியாளர்களை இழிவாக விமர்சிக்கிறார்கள். பார்ப்பன எதிர்ப்பை மட்டும் ஒரு ‘அடையாள அரசியலாக’ நிகழ்த்திக் கொண்டிருப்பவர்கள், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்று வரும்பட்சத்தில் கவனமாக மவுனம் காக்கிறார்கள்.

இதற்கிடையில், பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணியைக் காட்டிக் கொடுக்கும் முயற்சியில் இறங்கியிருப்பதாக பார்ப்பன ஆதரவு ஞாநியை விமர்சித்து ஒரு பதிவினை தோழர் மதிமாறன் பதிந்துள்ளார். அப்பதிவில், ”தோழமையானவராக இருக்கிறார்” என்பதனாலேயே விடுதலை ராசேந்திரனும் கொளத்தூர் மணியும் ’பெருந்தன்மையோடு’ பார்ப்பன பயங்கரவாதி ஞாநியை விமர்சிப்பதைத் தவிர்த்தார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், ஞாநியைக் கண்டித்து இதுவரை பெ.தி.க.வின் பத்திரிக்கையான ’பெரியார் முழக்கம்’ எதையும் எழுதவில்லை என்றும் எழுதியிருந்தார்.

இடஒதுக்கீடு குறித்தும் வி.பி.சிங் குறித்தும் தனது மாற்றுப் பார்வைகளைப் பதிவு செய்ததற்காக புதிய ஜனநாயகத்துக்கு பார்ப்பன பட்டம் கொடுத்து மோசடியாக எழுதி தனது காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்திய விடுதலை ராசேந்திரன், பார்ப்பன ஆதரவை ஒரு தொழிலாகவே செய்துவரும் ஞாநியை ‘தோழமை கருதி’ விமர்சிக்காமல் விட்டதனைக் கண்டித்து எழுதத்தூண்டியது; தோழர் மதிமாறனின் அப்பதிவு. எமது தோழர்கள் பலரும் மதிமாறனின் அப்பதிவில் தமது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். இதுவரை பெ.தி.க.வின் ஆதரவாளராக இருக்கும் தோழர் மதிமாறனிடத்திலிருந்துகூட அவற்றுக்கு எந்தப் பதிலும் பதியப்படவில்லை.

எதற்கெடுத்தாலும் ம.க.இ.க.வின் பொதுச்செயலாளர் தோழர் மருதையனை அவரது பிறப்பைக் கொண்டு வசைபாடுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறது, இக்கூட்டணி. ஆனால், இந்த யோக்கியர்கள், பகுத்தறிவுப் புலிகள், பார்ப்பன பயங்கரவாதத்திற்கு எதிராகப் பேசியதை, எழுதியைக் காட்டிலும், போராடியதைக் காட்டிலும் ம.க.இ.க.வின் தோழர்களும் தோழர் மருதையனும் களத்தில் அதிகமாக இயங்கியிருக்கிறார்கள். தில்லைப் போராட்டத்தில் தீட்சிதப் பார்ப்பன ரவுடிகளுடன் கொல்லைப்புறமாக உறவு வைத்திருந்த யோக்கியர்களெல்லாம், இந்த கூட்டத்தோடு கோவிந்தா போட்டுக்கொண்டு “பார்ப்பன தலைமை...” புராணம் பாடிவருவது கேவலத்திலும் கேவலமாக இருக்கிறது.

இறுதியாக, ம.க.இ.க.விற்கு பார்ப்பன பட்டம் சூட்டுவதற்கு இவர்கள் கற்பனையால் உருவாக்கிவைத்திருக்கும் முகாந்திரங்களையும் அவற்றை அடித்து நொறுக்கும் வகையிலான எமது தோழர்களின் எதிர்வினைகளையும், இவர்களில் எவராவது ஒருவராவது யோக்கியவானாக இருந்தால், நேர்மையாகப் பரிசீலித்து விவாதிக்க முன்வரட்டும். குறைந்த பட்சமாக இடஒதுக்கீடு: ஒரு மார்க்சிய-லெனினியப் பார்வை, என்கிற புதிய ஜனநாயகத்தின் வெளியீட்டையும், காக்கை குயிலாகாது -என்கிற வி.பி.சிங் மீதான விமர்சனக் கட்டுரைக்கும் தெளிவான மறுப்புகளை முன்வைக்கட்டும். விடுதலைராசேந்திரனின் புரட்டுக்களை மறுக்கும் எனது முந்தைய பதிவு குறித்தும் ஏதாவது மறுப்பு தெரிவிக்கட்டும். இவற்றுக்குப் பிறகு எங்களை எவ்வளவு கீழாக வேண்டுமானாலும் விமர்சித்துக்கொள்ளட்டும். நமது பதில்களை ஏறெடுத்தும் பார்காமல், முற்றாகப் புறந்தள்ளிவிட்டு மீண்டும் இதுபோன்ற அவதூறு புராணம் பாடவந்தால் சரியான பாடம் புகட்ட நாமும் தயாராவோம்.

தோழமையுடன்,
ஏகலைவன்.

குறிப்பு:

பெரியார் திராவிடர் கழகம், பார்ப்பன எதிர்ப்பு எனும் பம்மாத்து நாடகத்தில் சி.பி.எம். என்கிற போலிகம்யூனிஸ்டுகளோடு சிந்தைரீதியாக சோரம்போனது அம்பலமாகிவிட்டபடியால், அவர்களிடத்திலிருந்து இனி யோக்கியமான எதிர்வினைகளை நாம் எதிர்பார்க்க முடியாது. எனவே, பெ.தி.க.வை நாம் விமர்சிக்கும்போது கடைபிடிக்கும் ‘அவைநாகரீகத்தை’த் தவிர்த்து கடுமையாகவே சந்திக்கலாம்; என்பது எனது கருத்து. இதற்கு தோழர்களும் தங்களது கருத்துக்களைப் பதியலாம்.தொடர்புடைய பதிவுகள்:

1. இடஒதுக்கீடு: ஒரு மார்க்சிய-லெனினிய பார்வை - புதிய ஜனநாயகம் வெளியீடு

2. விசுவநாத் பிரதாப்சிங்: காக்கை குயிலாகாது - புதிய ஜனநாயகம் கட்டுரை

3. விடுதலை ராசேந்திரனிடமிருந்து இன்னும் ‘விடுதலை’யாகாத காழ்ப்புணர்ச்சி!...

4. இடஒதுக்கீடு: சாதி இந்துக்கள்-இனவாதிகளின் அவதூறும் நமது நிலைப்பாடும்...

5. உள் ஒதுக்கீட்டு கோரிக்கையும், தலித் பார்ப்பனியத்தின் எதிர்ப்பும்

Tuesday, February 24, 2009

விடுதலை ராசேந்திரனிடமிருந்து இன்னும் ‘விடுதலை’யாகாத காழ்ப்புணர்ச்சி!.....

/////‘காக்கை குயிலாகாது; பதவியைக் காப்பாற்றிக் கொள்ள இந்து மதவெறியர்களுக்கு அனுசரணையாக நடந்து கொண்டவர்தான் வி.பி.சிங்' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள அக்கட்டுரை, வி.பி.சிங்கைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தியுள்ளது. குஜராத் மோடி அளவில் வி.பி.சிங்கைக் கொண்டு வந்து நிறுத்தி, "குற்ற"ப் பட்டியல்களை அடுக்கியிருக்கிறது. பச்சைப் பார்ப்பனியப் பார்வையில் வெளிவந்திருக்கும் அக்கட்டுரை 'துக்ளக் சோ', 'சு.சாமி' கும்பலை நிச்சயமாக மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கும். 'பொதுவுடைமை கட்சிகளில் மீண்டும் தமது குரல் ஒலிக்கத் தொடங்கிவிட்டது' என்று "அவாள்"கள் கருதினால், அதில் தவறு இல்லை என்பதே நமது கருத்து./////

மேற்கண்ட வரிகளை மீண்டும் ஒருமுறை நிதானமாக வாசித்துப் பாருங்களேன். இது பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன், புதிய ஜனநாயகத்துக்கு எதிராக கட்டியெழுப்பியுள்ள மணற்கோபுரம்!

“பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இந்து மதவெறியர்களுக்கு அனுசரனையாக நடந்து கொண்டவர்தான் வி.பி.சிங்” என்கிற குற்றச்சாட்டை முன்னிறுத்தி எழுதப்பட்டிருக்கும் விமர்சனம், எப்படி பார்ப்பனியத்தைக் குளிர்விக்கும்? பார்ப்பன-இந்துவெறியர்களை ஆதரித்தவன் என்று ஒருவனைக் குற்றம் சாட்டினால், பார்ப்பனியவாதிகளுக்கு நம்மீது ஆத்திரம் வருமா, வராதா; என்பதை நீங்களே (வேறாருமல்ல இதைப் படித்துக் கொண்டிருக்கும் நீங்கள்தான்) சொல்லுங்கள். ஆனால், இப்போது ஆத்திரம் விடுதலை ராசேந்திரனுக்கு வருகிறதே, அது ஏன்? இதனை அடிப்படையாகக் கொண்டு, பார்ப்பன-இந்துவெறியர்களை எதிர்த்து எழுதப்பட்டிருப்பதை அவதூறு செய்வதனால், விடுதலை ராசேந்திரனுக்கு பார்ப்பன ஆதரவு கண்ணோட்டம் இருப்பதாக நாமும் சொல்லலாமா? இல்லையா? ஆனால், அப்படியெல்லாம் நாம் சொல்லவில்லை. அது சரியான மதிப்பீடும் அல்ல என்பது விடுதலை ராசேந்திரனுக்குத் தெரியாது; நமக்குத்தான் தெரியும்.

பிறகு ஏன், பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் ‘புடம்போடப்பட்ட(!)’ விடுதலை ராசேந்திரன் இவ்வாறு எழுத வேண்டும், என்பதை இப்பதிவில் பார்ப்போம்.

’சமூக நீதி’க் காவலராக திராவிடக் கட்சிகளாலும் போலி கம்யூனிஸ்டுகளாலும் ’தலித்’ அரசியல் பேசுபவர்களாலும் போற்றப்படும் வி.பி.சிங்கின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தி புதிய ஜனநாயகம் “காக்கை குயிலாகாது...” என்கிற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தது. அக்கட்டுரை வி.பி.சிங்கிற்கு எதிராக வைத்திருக்கும் கேள்விகளில் சிலவற்றை இங்கே (தேவை கருதி) பட்டியலிடுகிறேன்.

1. சுமார் நாற்பதாண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருந்த வி.பி.சிங்கை இடஒதுக்கீட்டுக்காக மட்டும் தூக்கி வைத்துக் கொண்டாடுவதன் நோக்கம் என்ன? ஜெயலலிதா, பார்ப்பன பயங்கரவாதி சங்கராச்சாரியைத் துணிவோடு கைது செய்ததை வைத்து அவரைப் "பார்ப்பனிய எதிர்ப்புப் போராளி' என்று கொண்டாட முடியுமா?

2. காங்கிரசில் இருந்தபோது அவசரநிலை பாசிச ஆட்சியை அவர் தீவிரமாக ஆதரித்ததையோ, அவருடைய குருநாதர் சஞ்சய்காந்தி காட்டுமிராண்டித்தனமாக முசுலிம்கள் மீது பாய்ந்து குதறியபோது அதனை அவர் கண்டும் காணாமல் இருந்ததையோ, மனித உரிமை பேச காஷ்மீர் வரை போகும் அ.மார்க்ஸ் ஏன் கண்டுகொள்வதில்லை?

3. அவசரநிலைப் பாசிச ஆட்சிக் காலத்தில் தி.மு.க. பிரமுகர்கள் சிறையில் அடைக்கப்பட்டு அடித்து நொறுக்கப்பட்ட போதிலும், வி.பி.சிங்கின் அவசரநிலை ஆதரவை தி.மு.க. ஏன் விமர்சிப்பதில்லை?

4. 1980இல் இவர் உ.பி. முதல்வராக இருந்தபோதுதான், உ.பி. அரசின் ஆயுதப்படை போலீசு மொராதாபாத் முசுலிம்களை இனப்படுகொலை செய்து, இந்தியாவின் மதக்கலவர வரலாற்றில் புதுப்பரிணாமத்தை உருவாக்கியது. இவரின் ஆட்சியில்தான் ஆதிக்க சாதிப் பண்ணையார்களின் சட்டவிரோத ஆயுதப்படைகள் தாழ்த்தப்பட்டோர் மீது தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடுத்து நூற்றுக்கும் மேற்பட்டவர்களைக் கொன்று குவித்தன. ஒவ்வொரு தாக்குதலுக்குப் பிறகும் "நிலைமை விரைவில் சரிசெய்யப்படும்' என்ற வெற்று அறிக்கையைத் தவிர, இவர் செய்தது எதுவுமில்லை. கான்பூருக்கு அருகேயுள்ள தஸ்தம்பூர் தாழ்த்தப்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, 1982இல் இவர் பதவி விலகவேண்டி வந்தது. 1984 சீக்கியப் படுகொலைக்காக 1989இல் மன்னிப்புக் கேட்ட வி.பி.சிங், தனது ஆட்சியில் கொலையுண்ட முஸ்லிம்களுக்காகவோ, தாழ்த்தப்பட்டோருக்காகவோ மன்னிப்பு எதையும் கேட்டதில்லை என்பது தொல்.திருமாவுக்கோ, தமிழக முசுலீம் முன்னேற்றக் கழகத்திற்கோ தெரியாதா?

இன்னும் ஏராளமான, உறுதியான தருக்கங்களுடன் புதிய ஜனநாயகத்தின் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. (நேரமிருப்பவர்கள் மேற்கண்ட சுட்டியை அழுத்தி படித்துக் கொள்ளலாம்) இக்கட்டுரைக்கு மறுப்பு என்கிற பெயரில் ”வி.பி.சிங்கை இழிவுபடுத்தும் புதிய ஜனநாயகம்” என்கிற தலைப்பில் ‘பார்ப்பனவாதி’ என்று எமது தோழர்களை வசைபாடியிருக்கிறார், விடுதலை ராசேந்திரன். ஆனால், அவருடைய அந்த நீண்ட பதிவினூடாக மேற்கண்ட கேள்விகளுக்கு நேரடியான பதில்கள் ஏதேனும் எழுதப்பட்டிருக்கிறதா என்று ஆராய்ந்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

மேற்கண்ட பு.ஜ. கேள்விகளுக்கு [வி.பி.சிங்கின் பொது வாழ்க்கை காங்கிரஸ் அரசியலில் முடங்கிக் கிடந்தபோது, காங்கிரஸ் இழைத்த தவறுகளையெல்லாம் பட்டியலிட்டு அதை வி.பி.சிங் மீது சுமத்தி, அவற்றையெல்லாம் எதிர்த்தாரா என்று 'புதிய ஜனநாயகம்' கேள்வி எழுப்புவது - அதன் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறதே தவிர, நேர்மையான சமூகப் பார்வையை அல்ல. காங்கிரஸ் அரசியலில் மூழ்கிக் கொண்டிருக்காமல், அதன் சுயரூபத்தை அறிந்து வெளியேறி - காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலை தொடங்கியதுதான் வி.பி.சிங்கின் சிறப்பு.] என்கிற வரிகளைத்தான் தனது அதிகபட்ச பதிலாகத் தந்திருக்கிறார்.

இடஒதுக்கீட்டையும், அதனைச் சாதித்தார் என்று வி.பி.சிங்கையும், ‘காந்தி சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார் அதனால் அவர்தான் தேசத் தந்தை’ என்று சொல்வதைப் போல உருவகப்படுத்தி முட்டுக்கொடுத்து நிறுத்தப் படாதபாடுபட்டிருக்கிறார். அதன் பொருட்டு தான் பு.ஜ.வுக்கு பார்ப்பன பட்டம் சூட்டி, அகமகிழ்ச்சி கொள்ள முயன்றிருக்கிறார் பாவம்!

பார்ப்பன-வருணாசிரம படிநிலைகளில், பார்ப்பனன், சத்திரியன், வைசியன் ஆகிய வருணத்தாருக்கு சேவை செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்தனர் சூத்திர, பஞ்சம, சண்டாள வருணங்களைச் சார்ந்த உழைக்கும் மக்கள். அந்த உழைக்கும் மக்களை சட்ட நிருவாகத்தின் மூலம் மிரட்டிப் பணியவைத்து, உழைப்பையும் உடமைகளையும் சுரண்டிக் கொடுத்து பார்ப்பன சேவையாற்றியதைத் தவிர வேறொன்றும் செய்யாத பிறவருணத்தவர்களை இடஒதுக்கீட்டின் மூலம் சூத்திரர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பெற்றுத்தந்ததுதான் இவர்கள் வழிபடும் நீதிகட்சி முதல் வி.பி.சிங் வரையிலான ‘சமூக நீதி’ அரசுகளின் சாதனையாக இருக்கிறது. அதேநேரத்தில் வெகுசில பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்கள் இதன்மூலமாக சலுகைகளைப்(உரிமைகளை) பெற்றிருந்தாலும், இதனைச் சாதனையாக ஏற்கமுடியாது, இவை வெறும் சீர்திருத்தம் மட்டுமே. இந்த சீர்திருத்தத்தால் சமூகத்தில் ஒடுக்கப்பட்டுள்ள பெரும்பான்மையான மக்களுக்கு எந்த விடிவும் ஏற்படவில்லை. இதனாலேயே இவர்கள் முன்னிறுத்தும் இடஒதுக்கீட்டுக் கொள்கை ஏற்கத்தக்கதாக இல்லை என்பது பு.ஜ.வின் அழுத்தமான நிலைப்பாடு. இதனை, இடஒதுக்கீடு – ஒரு மார்க்சிய லெனினியப் பார்வை என்கிற சிறு வெளியீட்டின் மூலம் ஏற்கெனவே நேரடியாகப் பதிவு செய்திருக்கிறது புதிய ஜனநாயகம்.

ஆயிரமாண்டுகளாக நமது சமூகத்தை, உழைக்கும் மக்களை இழிவுபடுத்திய பார்பன கும்பலுக்கும், அவர்களின் எடுபிடிகளாக, அடியாளாக இருந்து கொண்டு நம்மக்களை அடிமை படுத்திவந்த ஆதிக்கசாதிக் கூட்டத்திற்கும் இடையில் நடைபெற்றுவரும் இந்த ‘இட ஒதுக்கீடு’ குறித்த குழாயடி சண்டையில் புரட்சிகர அமைப்புகளுக்கு என்ன வேலை இருக்க முடியும்? ஆளூம் வர்க்கச் சேவையாற்றுவதற்கு நடக்கின்ற போட்டா போட்டியில், இந்த மோசடியான ஆளும்வர்க்கத்தை துடைத்தெறிவதற்கு போராடும் புரட்சிகர அரசியல் இவ்விருகூட்டத்தையும் முற்றாக அழிப்பதைத்தான் முன்னிறுத்த முடியும். முன்னிறுத்துவோம்; இதில் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை.

இடஒதுக்கீட்டையும் அதனூடாக வி.பி.சிங்கையும் மேன்மை படுத்தி எழுதியிருக்கும் விடுதலை ராசேந்திரன், புரட்சிகர அமைப்புகளின், இடஒதுக்கீடு குறித்த மேற்கண்ட நிலைப்பாடுகளை குறைந்த பட்ச அறிவு நாணயத்தோடு பரிசீலித்திருக்கிறாரா என்கிற ஐயத்தையே அவரது பதிவு ஏற்படுத்துகிறது. இடஒதுக்கீட்டை எதிர்ப்பது நமது நோக்கமல்ல என்று தெளிவாக, அழுத்தமாக புதிய ஜனநாயகம் தெரிவித்திருக்கிறது. அதனை ஆதரிப்பதில் உள்ள பிரச்சினைகளையும் தொகுத்தளித்திருக்கிறது. அதன் மீதான விடுதலை ராசேந்திரனின் கருத்துக்கள் எதையும் நான் படித்ததில்லை. அவ்வாறு எதேனும் அவர் இதற்கு முன்னதாக எழுதியிருப்பாரேயானல் எனக்கு யாராவது அறியத்தாருங்கள்.


இந்த மோசடியான ஆளும்வர்க்கத்தை சுக்கு நூறாகப் பிளப்பதன் பொருட்டு வேலை செய்துவரும் புரட்சியாளர்கள், அதே ஆளும் வர்க்கத்தின் ஆகப்பெரும்பான்மையான கேடுகளுக்கும் துணை நின்ற, ஆளுவர்க்கப் பிரதிநிதியாகவே வாழ்ந்து மறைந்த வி.பி.சிங்கை மண்டல் பரிந்துரை என்கிற ஒன்றைக் கொண்டு ஒருபோதும் புனிதப்படுத்த முடியாது. போபர்ஸ் பீரங்கி ஊழல் என்றும் மண்டல் கமிசனென்றும் வி.பி.சிங் கூச்சலிட்டது ஓட்டுப் பொறுக்குவதற்காக மட்டும்தான். இதனால் பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு சிறு துரும்பளவேனும் பலனில்லை என்பது தெளிவாகத் தெரியும் போது அதற்காதரவாக குரல் கொடுப்பது முற்றிலும் பலனற்றது.

////////ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் - வி.பி.சிங் - புரட்சிகர மார்க்சிய லெனினியக் கட்சியின் உறுப்பினர்கள் அல்ல. ம.க.இ.க.வின் தத்துவார்த்தப் பார்வையில் கூற வேண்டுமானால், தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசியலில் இருந்த ஒருவரே, அந்த அரசியலுக்குள் அதிர்வுகளை நிகழ்த்தியவர் என்பதுதான். அந்த அதிர்வுகளின் தாக்கத்தைக் கவனத்தில் கொள்ளாமல் ஏற்கனவே இருந்த 'சமூக நிலையைக் குலைத்து விட்டாரே' என்று புலம்பும் பார்ப்பனியக் குரலோடு தன்னையும் சேர்த்துக் கொண்டு அதன் மூலம் தன் பங்கிற்கான 'சேற்றை' பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு வி.பி.சிங் மீது வீசுவது பார்ப்பனிய சார்புப் பார்வை அல்லவா? //////////

இங்கே நான் குறிப்பிட்டுள்ள புதியஜனநாயகத்தின் இடஒதுக்கீடு மீதான மதிப்பீடுகளை அறவே புறக்கனித்து, திருவாளர் ராசேந்திரன் ‘’ஏற்கெனவே இருந்த சமூக நிலையைக் குலைத்துவிட்டாரே...” என்று புதிய ஜனநாயகம் புலம்புவதாக எழுதியிருக்கிறார். ஏற்கெனவே இருந்த, இப்போது இருக்கின்ற சமூக நிலைமைகளை அடியோடு புரட்டிப் போடுவதுதான் புதிய ஜனநாயகத்தின் அரசியல் என்பது விடுதலையாருக்குத் தெரியாது போலும்! சொல்வது அவதூறாக இருந்தாலும் கொஞ்சமாவது பொருந்தச் சொல்ல வேண்டாமா?

அடுத்து, ம.க.இ.க.வின் திட்டத்தில் பார்ப்பன எதிர்ப்பு கைவிடப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளதுதான் இது அவதூறுப் பதிவு என்பதற்கான ஒரு சோற்றுப் பதம். ”இந்து எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு போன்ற பல்வேறு சூழல்களில் களப்பணிகளில் இணைந்திருக்கிறோம்....” என்பதாக இக்கட்டுரையினைத் தொடங்கியுள்ள விடுதலையார்தான், ம.க.இ.க. பார்ப்பன எதிர்ப்பைக் கைவிட்டுவிட்டதாகவும் திரிக்கிறார். இதில் எது உண்மை அய்யா?!

இவர் குறிப்பிட்டுள்ள 1998ஆம் ஆண்டிற்குப் பிறகு மட்டும் ம.க.இ.க. மேற்கொண்ட பார்ப்பன எதிர்ப்பு போராட்டங்களை மொத்தமாக இருட்டடிப்பு செய்வதாக இருக்கிறது இவரது இந்த கருத்து. 2003 –ல் தான் ”பார்ப்பனிய, மறுகாலணிய பண்பாட்டுப் படையெடுப்பிற்கு எதிரான போராட்டமாக”, பார்ப்பனிய பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு மிகப் பிரமாண்டமாக நடத்தப்பட்டது.

இவர் மேற்குறிப்பிட்டுள்ள காலகட்டத்திற்குப் பிறகுதான் தில்லைப் போராட்டத்தினை ஆறுமுக சாமியைக் கொண்டு தொடங்கி இன்றுவரை அதே வேகத்தோடும் வீச்சோடும் நடத்திக் கொண்டிருக்கிறது. பார்ப்பன எதிர்ப்பு போராட்டங்களில் ம.க.இ.க.வின் செயல்பாடுகள் குறித்து தமிழக மக்களுக்குத் தெரியும், உங்கள் கட்சியிலுள்ள கீழ்மட்ட அணிகளுக்கும் நன்றாகவே தெரியும், பாவம் உங்களுக்குத்தான் தகவல் ஏதும் வரவில்லை போலும்!

///////"இன்றைய நிலையில் இந்திய மக்கள் மீது மூன்று மலைகள் - அமெரிக்கத் தலைமையிலான மேல்நிலை வல்லரசுகள், தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவம், நிலப் பிரவுத்துவம் ஆகியவை அழுந்திக் கொண்டிருக்கின்றன. இம் மூன்றும் தான் முக்கியமாக இந்திய மக்களின் எதிரிகளாகும்" - (ம.க.இ.க.வின் கட்சித் திட்டம்-1998). - என்று 1998 இல் திட்டத்தை வகுத்துவிட்டார்கள். //////

ம.க.இ.க. குறிப்பிட்டுள்ள அந்த மூன்று மலைகள், பொருளாதார ரீதியில் தேசத்தைச் அடிமைப்படுத்தி, அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரங்களையும் சுரண்டிக் கொழுத்துக் கொண்டிருக்கிறது. அந்த சுரண்டல் வாத ஆளும் வர்க்கத்துக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் சேவை செய்யும் அமைப்பாகத்தான் பார்ப்பன பயங்கரவாதம் திகழ்கிறது, என்பதையும் பார்ப்பன பயங்கரவாதத்திற்கு எதிராகவும், மறுகாலணியத்துக்கு எதிராகவும் போராட்டங்கள் கூர்மை படுத்தப்படவேண்டும் என்ற ம.க.இ.க.வின் அறைகூவலெல்லாம் விடுதலையாரின் செவிகளை எட்டவில்லை போலும்!

ம.க.இ.க.வின் திட்டத்தை சுருக்கி, வெட்டி ‘தேவைக்கேற்ற வகையில்’ பயன்படுத்துகின்ற விடுதலையாரின் பார்வையில் நிறைந்திருக்கும் காழ்புணர்ச்சிக்கு என்ன பெயர் சூட்டியழைக்கலாம்? இவரது பார்ப்பன எதிர்ப்பை, ம.க.இ.க., பு.ஜ., மீதான அவதூறுகளை பாராட்டுபவனைக் கொண்டு பார்த்தாலே இவரது கருத்துக்களின் தரம் எளிதாகப் புரியும். இவரது கட்டுரையினை அட்சரம் பிசகாமல் தனது தளத்தில் பதிவிட்டு, நன்றியையும் பொங்கி வழியவிட்டிருக்கிறான், சிபிஎம் கட்சியின் செல்வப்பெருமாள்.

வி.பி.சிங்கை பு.ஜ. விமர்சித்திருப்பது பார்ப்பனர்களைக் குளிர்வித்திருக்கிறது, என்று உருவகப்படுத்தும் விடுதலை ராசேந்திரனுக்கு ஒரேயொரு கேள்வி. உங்களுடைய இந்த கூற்று, பார்ப்பனியத்தில் கேவலம் பூநூலைக் கூட இழக்க மனமின்றி உழலும் சி.பி.எம். யோக்கியர்களைக் குளிர்வித்திருக்கிறதே, இதற்குப் பெயர்தான் பார்ப்பன எதிர்ப்பா? உங்களின் கட்டுரை பு.ஜ.வை சிறுமைபடுத்தவில்லை, மாறாக அதனை சி.பி.எம். ஆதரிப்பதுதான் உங்களைக் கடுமையாகச் சிறுமை படுத்தியிருக்கிறது. உங்களை நோக்கி வரும் பாராட்டுக்களே உங்களுக்கு எதிர்வினையாக மாறியிருக்கிறது. இதையாவது கொஞ்சம் பகுத்தறிவு கண் கொண்டு பாருங்களேன்!

தோழமையுடன்,

ஏகலைவன்.

தொடர்புடைய பதிவுகளையும் கீழ்கண்ட சுட்டியைப் பயன்படுத்தி அவசியம் படியுங்கள் தோழர்களே!

1. ஆண்ட சாதிகளும், இடஒதுக்கீட்டின் உள் அரசியலும்...
2.புரளி பேசும் போலி தமிழ்தேசியவாதிகள்
3. இடஒதுக்கீடு: சாதி இந்துக்களுக்கு வக்காலத்து தான் சமூகநீதியா?
4. பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு: மீண்டும் தலைதூக்கும் பார்ப்பனத் திமிர்! சமூகநீதிக் கட்சிகளின் சமரசம்!!
5. குஜ்ஜார் போராட்டமும், சாதிக் கொழுப்பெடுத்த பார்ப்பனவெறி டைம்ஸ் ஆப்பு இந்தியாவும்!!

Friday, February 20, 2009

"சுப்பிரமணியசாமி மேலயா கைய வச்சீங்க...” போலீசு என்கிற பார்ப்பனக் கூலிப்படை ஏவிய கொலைவெறித் தாக்குதல்.....

அன்பார்ந்த தோழர்களே!

நேற்றைய தினம் சென்னை - உயர்நீதி மன்ற வளாகத்தில், கருணாநிதி-பார்ப்பன அதிகார வர்க்கத்தின் கைக்கூலிப் படையான போலீஸ் கும்பல், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், பெண் வழக்கறிஞர்கள், தத்தமது வழக்குகளுக்காக வந்திருந்த பொதுமக்கள் என ஒவ்வொருவரையும் திட்டமிட்டு காட்டுமிராண்டித்தனமாக தாக்கியிருக்கிறார்கள். ”சுப்பிரமணியசாமி மேலயா கைய வச்சீங்க...” என்று சொல்லிச் சொல்லியே காக்கியுடைதரித்த கூலிப்படையின் ஒவ்வொருவனும் எதிர்நின்றவர்களைத் தாக்கியிருக்கிறார்கள். இதிலிருந்து நேற்றையதினம் ஏவிவிடப்பட்ட இந்த பொறுக்கி - போலீசு கும்பல் ‘தெளிவாக’ திட்டமிட்டு பார்ப்பன அதிகார மையத்தால் சுப்பிரமணிய சாமிக்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்தது தெளிவாகியுள்ளது.

சுப்பிரமணிய சாமி என்கிற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உளவுத்துறைக் கைக்கூலியும், ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிரிமினல், தில்லை ‘பொது’தீட்சித கிரிமினல்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் பஜனைபாட வந்த போது, அழுகிய முட்டையால் நம்முடைய வழக்கறிஞர்களால் அர்ச்சனை செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே. தமிழ் மக்களை தொடர்ந்து அவதூறாகப் பேசிவந்ததாலும், சேதுசமுத்திர திட்டத்தினை ராமன் பாலம் என்கிற டுபாக்கூறு காரணத்தைக் காட்டி நிறுத்திவந்ததாலும், இந்துமத வெறி பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து இயங்கிவந்ததாலும் நமது மக்கள் அவனுக்கு வழங்க நினைத்த தண்டனையின் தன்மையை சுப்பிரமணியசாமிக்கு உணர்த்துவதற்காகவும், இனியாவது கொஞ்சம் நாவடக்கம் செய்து கொள்வான் என்கிற எதிர்பார்ப்போடும் ஒரு எச்சரிக்கைத் தாக்குதல் மட்டும்தான் (நீதிபதிகள் சாட்சியாக....) அவன் மீது நமது வழக்கறிஞர்கள் நடத்தினார்கள்.

அதன் தொடர்ச்சியாக, சம்பந்தப் பட்ட வழக்கறிஞர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது, அதே நேரத்தில் நீதிமன்றத்திற்குள் சு.சாமி நமது வழக்கறிஞர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதற்காகவும் ஒரு புகார் அளிக்கப்பட்டிருந்தும் அவன் மீது நடவடிக்கை எடுக்கப்படாததைச் சுட்டிக்காட்டிய வழக்கறிஞர்கள், ”சு.சாமியை போயி மொதல்ல கைது செய்யுங்க... பிறகு எங்ககிட்ட வாங்க...” என்று சொல்லியிருக்கிறார்கள். அதுதான் தாமதம், இதற்கு முன்னதாகவே பார்ப்பன அதிகார மையத்தால் திட்டமிட்டு வரவழைக்கப்பட்டிருந்த கைக்கூலி காவல்பட்டாளம் கடுமையான வன்முறையை வழக்கறிஞர்களின் மீது ஏவியிருக்கிறது.சுமார் மூன்றரை மணிக்குத் தொடங்கிய இந்த போலீசு வன்முறையாட்டம் இரவு எட்டு மணிவரை தொடர்ந்து நடந்திருக்கிறது. இதற்கிடையில், உடனடியாக போலீஸ் கும்பல் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேற வேண்டும் என்கிற ‘மேலிட’ உத்தரவையும் காற்றில் பறக்கவிட்டு தமது வெறியாட்டத்தைத் தொடர்ந்திருக்கிறது. வீரப்பனைப் பிடிக்கக் கையாளாகாத நிலையில் கேட்பாரற்ற அப்பாவி உழைக்கும் மக்களை, பெண்களை மேய்ந்த அந்த ‘அதிரடிப் படை’யைப் போல இங்கு குவிக்கப் பட்டிருந்த போலீசு கும்பலும் வழக்கறிஞர்களைச் சந்திக்க மாட்டாமல் அஃறினையாக அங்கு நின்ற வாகனங்களின் மீது தமது ‘வீரத்தை’க் காட்டியதையும் நாம் தொலைக்காட்சிகளில் பார்த்தோம்.

கலவரத்தை அடக்குவதாகச் சொல்லிக் கொண்ட போலீசு கும்பல்தான் நேற்று நடைபெற்ற வன்முறையின் காரணகர்த்தா என்பதற்கான ஆதாரங்கள் நேற்றைய தொலைக்காட்சிகளின் பதிவுகளில் நிறைந்திருந்த போதிலும், வன்முறையில் ஈடுபட்ட வழக்கறிஞர்களை காவல்துறை அடக்க முற்பட்டதாகத்தான் இன்றைய நாளேடுகள் தமது ‘பத்திரிக்கா தர்மத்தை’ வெளிப்படுத்தியிருக்கின்றன. “நடைபெற்ற போலீசு வன்முறையின் தொடக்கமாக, போலீசு உயரதிகாரி ஒருவருடன் நெருக்கமாகப் பேசிக்கொண்டிருந்த சீருடையணியாத, பொதுமக்களில் ஒருவரைப் போன்ற தோற்றத்துடன் இருந்த ஒரு மர்ம நபர்தான் ஒரு கல்லை எடுத்து போலீசு மீது எறிந்து கலவரத்தைத் தொடங்கிவைத்தார்” என்று வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர்களில் ஒருவரான பிரபாகரன் தெளிவாக அறிவித்த பிறகும், நமது போலிகம்யூனிஸ்டுகள் நடத்துகின்ற ‘நடுவுநிலை’ நாளேடுகள் உள்பட அனைத்திலும், செய்திகள் நேர்மையாக வெளியிடப்படவில்லை.

சுப்பிரமணியசாமியின் குரல் பார்ப்பன-இந்து பயங்கரவாதிகளின் ஒட்டுமொத்த குரலாக ஒலித்துவந்த வேளையில், அவன் மீது விழுந்த அடியும் அழுகல் முட்டையும் ஒட்டுமொத்த பார்ப்பன சமூகத்தின் மீது விழுந்ததைப் போல் பார்ப்பன அதிகார வர்க்கம் துடித்திருக்கிறது. அதனால்தான், ராமனைக் கடுமையாக விமர்சித்துப் பேசிய ’சூத்திர’கருணாநிதியின் போலீசைக் கொண்டே மேற்கண்ட அவமானத்திற்கான எதிர்வினையை நிறைவேற்றிக் கொள்ள திட்டமிட்டிருக்கிறது. கருணாநிதிக்கும் ’ராமன் அலை’யால் பாதிக்கப்பட்டதாக எண்ணிக்கொண்டிருந்த வாக்கு எண்ணிக்கையினைக் கொஞ்சம் சமன் செய்துகொள்ளலாம் என்கிற நப்பாசை துளிர்விட, போலீசு வன்முறை வெளிப்படையாக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. அதுதான் நேற்றைய பயங்கரத்தின் முக்கியக் காரணியாக இருந்துள்ளது.

‘சூத்திர’கருணாநிதியின் போலீஸே, நியாயமாக தண்டிக்கப்பட்ட ஒற்றைப் பார்ப்பனன் சு.சாமிக்கு ஆதரவாக இப்படி கண்மூடித்தனமான தாக்குதலை நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் மீதே ஏவிவிட முடிகிறதென்றால், நரேந்திரமோடியின் போலீசு இதைவிட எத்தனை மடங்கு கேவல்மாக நடந்திருக்கும் என்பதனையும் இப்பிரச்சினையைக் கொண்டே அளவிட்டு புரிந்து கொள்ளலாம்.

சாராயம் விற்பவனிடமும் சகல சமூகவிரோத செயல்களுக் செய்துவருபவர்களிடத்திலெல்லாம் நக்கிப் பிழைத்துவரும் காவல்நாய்கள், பொதுமக்களின் மீது, சமூக நலன் குறித்த விசயத்திற்காக போராடிக்கொண்டிருப்பவர்களின் மீது, தாக்க்குதல் நடத்தும்போதுதான் தனது எஜமான விசுவாசத்தை அப்பட்டமாகப் பிரதிபலிக்கின்றன. மக்களின் சுரனையற்ற தன்மையினை மட்டுமே மையமாக வைத்து பயன்படுத்திக் கொண்டு இத்தனை அட்டூழியங்களையும் செய்துவருகின்றன. இது கருணாநிதி-ஜெயலலிதா-பார்ப்பன அதிகார வர்க்கத்திற்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையில் நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. எது நடந்தாலும் கொஞ்சமும் சுரணையற்ற அஃறினைப் பொருளாக நடமாடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு சாமானியனுக்கு எதிராக மட்டுமே நடத்தப்படுகின்ற தாக்குதல்கள்தான். நாம் உடனடியாக வீழ்த்தியழிக்க வேண்டிய எதிரி நம்முடைய இந்த அற்ப வாழ்முறைதான். இந்த ‘சகஜ நிலை’யை நம்மிடமிருந்து இல்லாதொழிக்கத் தவறும் வரை இப்படிப்பட்ட ஆளும்வர்க்க கேடுகளை நேரடியாக ஆதரித்துக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் பொருள்.

கிளர்ந்தெழுவோம். ”அவர்களோ சிலர், நாமோ பலர்.....” என்கிற நமது முன்னோடிகளின் உச்சரித்த உணர்ச்சிகளை பிரயோகிக்கின்ற களத்தில் இணைவோம். பார்ப்பன-அதிகார வர்க்கத்தினை வேரறுப்போம்!

தோழமையுடன்,
ஏகலைவன்.

Saturday, February 14, 2009

’ஹிந்து’ராமின் கழிவுகளைப் பரிமாறும் சி.பி.எம்.மின் பத்திரிக்கைகள்...

//////////வள்ளுவப் பெருமகனார் பாடிய குறள். வெளிவரும் செய்திகளையும், கேட்கிற, படிக்கிற செய்தி களையும், ஆழமாகத் தெரிந்து அதற்குத் தீர்வு காணும் பாதையில் பயணிக்க வேண்டும். இளைஞர்களுக்கு அத்தகைய அறிவுத் தெளிவைக் கொடுப்பது சமூகத்தின் கடமை. சமூகம் தனது கடமையில் இருந்து தவறியமைக்கு உதாரணம் முத்துக்குமார். 28 வயது இளைஞன், பத்திரிகையாளன். ஆனால் சாஸ்திரி பவனுக்கு முன்னாள், ஆயிரக்கணக்கான மக்கள் நட மாட்டம் கொண்ட சென்னை மாநகரின் பொதுச்சாலையில் நெருப்புத் தனலுக்கு இரையாக்கிக் கொண்டது கொடுமை.////////////

அன்பார்ந்த தோழர்களே,

மேலே குறிப்பிடப்பட்டுள்ள வரிகள் போலிகம்யூனிச சி.பி.எம். கட்சியின் அல்லக்கை அமைப்பான DYFI நடத்துகின்ற ஒரு பத்திரிக்கையின் தலையங்கத்தின் தொடக்க வரிகள். அந்த இதழின், கிட்டத்தட்ட அனைத்து பக்கங்களிலும் முத்துக்குமாரின் வீரமரணத்தை விமர்சிக்கும் வரிகளை நாம் பார்க்க முடியும். முத்துக்குமார் ஏதோ தீக்குளிக்கும் கலாச்சாரத்தை இளைஞர்கள் மனதில் ஏற்படுத்திவிட்டதாகக் கதறுகிறது இக்கூட்டம்.

‘ஹிந்து’ராமின் கழிவுகளை ‘தேவாமிருதமாக’ உட்கொள்ளும் இக்கும்பலிடம் இருந்து வரும் கழிவுகள் எப்படி இருக்கும் என்பதற்கு இவர்களின் எழுத்துக்கள் ஒரு பேருண்மையாக இருக்கிறது.

கீற்று இணையதளத்தில் வெளியாகியுள்ள இந்த போலிகம்யூனிச பத்திரிக்கையின் தலையங்கத்தை எதிர்த்து அப்பக்கத்திலேயே கருத்து பதிந்துள்ள வசந்தி என்பவரது எதிர்விணையை நான் இங்கே தோழர்களின் பார்வைக்கு வைக்கிறேன். இந்த எதிர்வினை பதிவாகி இரண்டு நாட்களாகியும் நேர்மையான எந்த பதிலும் அதில் பதியப்படவில்லை. விமர்சனங்களை இருட்டடிப்பு செய்யும் போலிகளின் கலாச்சாரம் கீற்று தளத்தில் எடுபடாமல் போயிருக்கிறது.

தோழமையுடன்,
ஏகலைவன்.

---------------------------------------------------------------------------------------

முட்டாள்தனமான தலையங்கம் இது. வேலையில்லை சுகாதர வசதியில்லை என்பதற்காக நடப்பதல்ல ஈழ மக்களின் போராட்டம். உங்களுக்கு ஆயுத்ம்தான் பிரச்சினை என்றால் அதனை நேரடியாக சொல்லலாமே..ஏன் ஒளிவு மறைவு..


தேசிய இனங்கள் எந்த சூழலில் பிரிந்து செல்லலாம் என தோழர் லெனின் சொன்னது இது. ''எந்த ஒரு தேசத்துக்கோ அல்லது மொழிக்கோ சிறப்பு சலுகை எதுவும் கிடையாது; ஒரு தேசிய சிறுபான்மையினரைப் பொறுத்தவரை மிகச் சிறு அளவுகூட ஒடுக்குமுறையோ அநீதியோ இருக்கக்கூடாது. இவைதாம் உழைக்கும் வர்க்க ஜனநாயகத்தின் கோட்பாடுகள் ஆகும். (லெ.தொ.நூ. 19.91, ஒப்: 243).


வரப்போகிற உலகப் புரட்சியின் தீர்மானமான போர்களில் தேசிய விடுதலை என்பதை முதல் குறிக்கோளாகக் கொண்டுள்ள உலக மக்களில் பெரும்பான்மையோரது இயக்கம், முதலாளியத்துக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் எதிரானதாகத் திரும்பும் என்பதும், நாம் எதிர்பார்ப்பதைக் காட்டிலும் மிகக் கூடுதலான புரட்சிகரப் பங்கை வகிக்கக் கூடும் என்பதும் தெளிவாகிவிட்டது. (லெ.தொ.நூ. 32. 482).


தேசிய ஒடுக்குமுறையைத் துடைத்தெறிய, தன்னாட்சிப்பகுதிகளை உருவாக்குவது மிகவும் முக்கியம், அவை எவ்வளவு சிறியதாகவும் இருக்கலாம். இவை முற்றிலும் ஓரின மக்கள் தொகையினரைக் கொண்டவையாக இருக்க வேண்டும். நாடு முழுவதிலும் - ஏன் - உலகம் முழுவதிலுமே சிதறிக் கிடக்கின்ற அந்தந்த தேசிய இன மக்களை ஈர்க்கக்கூடிய பகுதிகளாக இருக்க வேண்டும். அவர்கள் எல்லாவகை உறவுகளையும் சுதந்திரமான இணைப்புகளையும் ஏற்படுத்தி கொள்ளக்கூடிய தன்னாட்சிப் பகுதிகளாக இருக்க வேண்டும். (லெ.தொ.நூ. 20.50).


ஐடியலான முரணற்ற முழுமையான ஜனநாயக குடியரசு பற்றிய லெனின் (லெ.தொ.நூ. 19.427) சொன்னது '' இவ் அடிப்படை சட்டம், எல்லா தேசங்களுக்கும் மொழிகளுக்கும் முழுச் சமத்துவத்தை உத்திரவாதம் செய்ய வேண்டும்; எந்த ஒரு கட்டாய ஆட்சி மொழியையும் ஏற்காததாக இருக்க வேண்டும். சொந்த மொழிகள் அனைத்திலும் கல்விபுகட்டுகிற பள்ளிகளை மக்களுக்கு வழங்குகிற ஒன்றாக இருக்க வேண்டும். எந்த ஒரு தேசத்துகக்கும் தனிச்சலுகை வழங்குவதையும், தேசிய சிறுபான்மையினரின் உரிமைக்ள் மீது கை வைப்பதையும் தடை செய்கின்ற சட்டமாக இருக்க வேண்டும்.''


So லெனின் முட்டாள்தனமாக பேசி உள்ளாரா ? அல்லது நீங்களா ? என்பதை தெளிவு படுத்துங்கள்.


தொன்மை சமூகம் நாடாள வேண்டும என்ற ஆவலில் தோன்றியதா ஈழமக்களின் போராட்டம்? வரலாறு பாமர மக்களுக்கு தெரிந்த அளவு கூடவா தங்களை மார்க்சியவாதிகள் என்ச் சொல்லிக் கொள்பவர்களுக்கு தெரியாது. அதிகாரத்தின் மீதான பற்று என நீங்கள் சொல்லியிருப்பது சுதந்திரத்திற்கான தாகத்தை. மேலே கண்ட லெனின் வாசகங்களை மீண்டும் படியுங்கள். நீங்கள் ஈழத்தை கேவலப்படுத்தவில்லை. மாறாக லெனினைக் கேவலப்படுத்தி உள்ளீர்கள்.


/“இதற்கும் மேலே சென்று’’ இந்திய அரசு இலங்கையை வலியுறுத்துவது என்ற எதிர்பார்ப்பு ஒரு வித மேலாதிக்க உணர்வை வெளிப்படுத்துகிறது” என்பதை நாம் புரிந்து கொள்ள மறுக்கிறோம்./


இது உண்மையான கூற்று நீங்கள் எதனையும் புரிந்து கொள்ள மறுப்பது என்ற ஜனநாயப்பண்பை எப்போதே பெற்று உள்ளீர்கள். பிராந்திய வல்லரசாக, அமெரிக்காவின் தெற்காசியப் பேட்டை ரவுடியாக இந்தியா உள்ளது என அறிவுஜீவிகள் விமர்சித்தால் பாஜக வைவிட உங்களுக்குதான் கோபம் வரும்போல தெரிகின்றது. என்ன செய்ய உங்களது கொள்கையை விட சொம்நாத் சட்டர்ஜி காட்டிய நாடாளுமன்ற விசுவாசம் அதற்கு வவாய்ப்பு கிடைக்காத தங்களைப் போன்றோருக்கு தேசாபிமானமாக வெளிப்படுகின்றது, தேச ஆளும் வர்க்கம் ஒரு பேட்டை ரவுடியாக இருந்தால் கூட.


/ தமிழகத்தில் நீண்ட காலமாக இருக்கிற சமூகக் கொடுமைகளில் ஒன்றாக தீக்குளிப்பும் நீடிக்கிறது. போராடி வெல்வது, வெல்வதற்காகப் போராடுவது, தமிழ் இலக்கிய சான்றாக இருக்கிறபோது, தன்னைத் தானே அழித்துக் கொல்வதும், அதை அரசியலாக்க முயற்சிப்பதும், இரைஞ்சுவதற்கு ஒப்பாகும்/

தீக்குளிப்பது சமூகக் கொடுமைதான் அது சதி என்ற வடிவில் வந்தால். சக மனிதர்கள் மீது இன ஒழிப்பு நடக்கும்போது வாளாவிருக்கும் உங்களைப் போன்ற இளைஞர் இயக்கங்கள் இருக்கும் தேசத்தில் தீக்குளித்துதான் ஒரு இளைஞன் உங்களது கள்ள மவுனத்தை உடைக்க முடிகின்றதென்றால் அதற்காக முத்துக்குமரன் வெட்கப்பட வேண்டிய அவசியமே இல்லை. முத்துக்குமரன் இந்திய அரசுட்ன போராடவில்லை, கள்ள மவுனம் இன்றளவும் சாதிக்கும் போலி ஜனநாயக, கம்யூனிச வாதிகளின் மன்ச்சாட்சிக்கு எதிராகத்தான் போராடி உள்ளான். வரலாறு தெரிந்தால் வியத்நாம் புத்தபிக்குகள் அமெரிக்க ஏகாதிபத்திய போர்வெறிக்கு எதிராக அறுபதுகளில் நிகழ்த்திய தீக்குளிப்பு வடிவத்தை என்னவென்று சொல்வீர்கள்.


அதெல்லாம் இருக்கட்டும். தமிழக இளைஞர்களை வாயைக் கட்டி போராட்டம், நாமம் போட்டு போராடுவது, கழுதையிடம் மனுக் கொடுத்து அதிகார வர்க்கத்தை எதிர்த்து போராடுவது, திருவோடு எடுத்து போராடுவது, கோவணம் கட்டிப் போராடுவது, ....இப்படி இரைஞ்சுகினற் வடிவங்களையெல்லாம் போராட்டம் என அழைத்துக் கொண்ட ஒரு இயக்கத்தை சேர்ந்தவர்கள்தான் தாங்கள் என்பது மறந்துவிட்டதா?


/ “தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழிப்போம்” என்றான் பாரதி. இதற்கு முரணாக ஒருவன் அழிந்து தமிழனை காக்கலாம் என்பது, பகுத்தறிவு அற்றது./


சுய அறிவில்லாமல் அல்லது லாஜிக் இல்லாமல் எழுதப்பட்ட ஒரு வாக்கியம் பகுத்தறிவு பற்றிப் பேசுவது முரண்நகை. கடைசியாக பேச்சுவார்த்தை அதாங்க அரசியல் தீர்வுன்னு நீங்க சொல்ற கட்டப்பஞ்சாயத்துதான் வேண்டும் என்கிறீர்கள். நீங்கள் சமத்துவவாதிகள். இப்போரை ராஜபக்ஷ நிறுத்தவும் கோருவீர்கள் எனக் கருதுகிறேன். அது சரி... அதுக்கு யாரிடம் வலியுறுத்து போராடுவீர்கள். இந்தியாவிடமா? ஒரு நிமிசம். இந்தியாவும் டாங்கிகள், ரேடார்களோடு தனது ராணுவத்தையும் அனுப்பியுள்ளது. என்ன சொல்லி தப்பிக்க போறீங்க.

------------------------------------------------------------------------------------

Sunday, February 8, 2009

சி.பி.எம்.(மோடியிஸ்ட்) கும்பலின் கழிப்பறைக் காகிதம் - தீக்கதிர்!.... மற்றும் ’கோயபல்ஸ்’ செல்வப்பெருமாள்!!...

அன்பார்ந்த தோழர்களே!

ஈழப் போராட்டங்கள் குறித்தும், அங்கு சிங்கள பேரினவாத ராணுவத்துடன் கூட்டு சேர்ந்து இந்திய மேலாதிக்க அரசு நடத்திவரும் மாபெரும் தமிழின அழிப்பு பாசிச நடவடிக்கைகள் குறித்தும், விடுதலைப் போராட்டத்தில் மக்களுடன் ஒன்றுபடாமல், சிங்கள இனவெறி இராணுவத்தையொத்த பாசிச முகத்தோடு மக்களைப் பராமரித்து வரும் புலிகள் குறித்தும் தொடர்ந்து எதிர்த்துப் பேசவேண்டிய எழுதவேண்டிய, போராட வேண்டிய சூழ்நிலையில் நாம் இருந்து வருகிறேம். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டை எட்டப் போகும் இந்த இனவிடுதலைப் போரினை மார்க்சிய-லெனினியக் கண்ணோட்டத்தில், சரியான நிலைப்பாட்டில் அனுகுவதன் கடமையை உணர்ந்தே எமது தோழர்கள் இயங்கி வருகின்றனர்.

இந்நிலையில், போலி கம்யூனிச கட்சியாக இருந்து, டாடாயிஸ்ட், ரவுடியிஸ்ட், என்கிற படிநிலைகளில் ‘முன்னேறி’, குஜராத் இந்து பாசிஸ்டுகள் மக்கள் மீது ஏவிய பாலியல் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல் முறைகளைக் கையாண்டு, கடந்த 30 ஆண்டுகளாக ஓட்டுப்போட்டு ஆதரித்துவந்த மேற்குவங்கது மக்கள் மீது பிரயோகித்ததன் மூலம் சி.பி.எம்.(மோடியிஸ்ட்)ஆக பரினமித்த போலிகள், இப்போது, போலித்தனமேயல்லாத, கலப்பில்லாத, ’அக்மார்க்’ பாசிஸ்ட்டாக ‘உயர்ந்திருக்கிறார்கள்’.

ஈழப் போராட்டம் குறித்த தமது கட்சியின் நிலைப்பாடு(!) ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்த நிலைப்பாட்டைவிடக் கேவலமாக நாறிக்கொண்டிருக்கிறது; தமது கட்சியின் அணிகள் மத்தியில். கட்சியின் நேர்மையான அணிகள் பலர் சந்தடியில்லாமல் ஒதுங்கிக் கொண்டுள்ளதோடு, கட்சியில் செயல்படும் அணிகளும் கடுமையான அதிருப்தியோடு இருப்பதை எதிர்கொள்ளமுடியாத தலைமை, அவர்களுக்கு ‘வகுப்பு’கள் நடத்தி புரியவைக்கக் கோரியிருக்கிறதாம். ஜெயாமாமியுடன் இவர்கள் கொண்டுள்ள ‘மதச்சார்பற்ற’ கூட்டணி குறித்து பிறகு பேசலாம். ஈழ போராட்டம் பற்றி இவர்கள் பிதற்றி வருவது குறித்து இப்பதிவில் எனது கருத்துக்கள் சிலவற்றைப் பதியலாம் என்றிருக்கிறேன்.

சி.பி.எம். கட்சியின் தீக்கதிர் என்கிற கழிவறைக் காகிதத்தையும், கூலிக்கு அவதூறு பரப்பும் கோயபல்சு செல்வப்பெருமாளின் சில பதிவுகளையும் எடுத்துக் கொண்டு சுருக்கமாக இவ்விடயத்தை அனுகலாம் என்று நினைக்கிறேன்.

ஈழப் போராட்டத்தில் அப்பாவி மக்கள் யாரும் சாகடிக்கப்படவேயில்லை, இங்குள்ள புலிகளின் ஆதரவாளர்கள் சிலர்தான் மக்கள் சாகடிக்கப்படுவதாக பேசிவருகின்றனர், என்கிற ’ஹிந்து’ராமின் கருத்துக்களின் தமிழாக்கத்தைத்தான் தீக்கதிரின் பக்கங்களில் நாம் காணமுடிகிறது. ஈழ மக்கள் கேட்பாரில்லாமல் அழிந்து கொண்டிருக்கும்போது, இலங்கையில் நடக்கும் கிரிக்கெட் போட்டி குறித்து சிலாகித்து எழுதுகிறான் தீக்கதிரில். அதுவும் முதல் பக்கத்திலேயே “யுவராஜ் சிங் அபார சதம்....” என்று படத்துடன் செய்தி வெளியிடுகிறான். அதனைப் பார்க்கும்போதே வயிறு பற்றியெறிகிறது. அங்குள்ள அப்பாவித் தமிழ்மக்களின் மரணஓலம் இவன் காதுக்கு கேட்கவில்லையாம், ’கிரிக்கெட் ரசிகர்களின்’ விசில் சத்தத்தைச் சிலாகிக்கிறான்.கேட்டால், “கிரிக்கெட் ரசிகர்களும் கட்சிக்குள் வந்து கம்யூனிஸ்டாகலாம் அல்லவா?.. அதற்காகத்தான் கிரிக்கெட் செய்திகள்” என்று சொல்கிறான். கிரிக்கெட் ரசிகர்கள் கம்யூனிஸ்டாகலாம், தமிழர்கள் கம்யூனிஸ்டாவதற்கு அருகதையற்றவர்களா? இங்குள்ள உணர்வுள்ள மக்களின் மீது மலம் கழிப்பதைப் போல்தான் அவன் வெளியிடும் கிரிக்கெட், சினிமாச் செய்திகள் இருக்கின்றன. அதனால்தான் அப்பத்திரிக்கையினை கழிப்பறைக் காகிதம் என்று சொல்கிறேன்.

அதேபோல சி.பி.எம்.மின் இணையக் கோமாளி ‘சந்திப்பு’ என்கிற கே.செல்வப்பெருமாள் வேறு, இப்போது எங்கெங்கேயோ சுற்றி மேய்ந்து லெனினிடத்தில் சரணடைந்து ’இலங்கைப் பிரச்சனை பாட்டாளி வர்க்கத் தீர்வு’ என்கிற தலைப்பில் ஒரு பதிவினைப் பதிந்துள்ளான். அப்பதிவில் அவன் மேற்கோள் காட்டியுள்ள தோழர் லெனினின் வரிகளைத் தவிர மற்றவையத்தனையும் வடிகட்டிய பொய்களாகவும், பிதற்றலாகவுமே இருக்கின்றன. அவன் மேற்கோள் காட்டியுள்ள வரிகளிலிருந்தே தோழர் லெனின் சி.பி.எம்.மின் போலித் தேசிய நிலைப்பாட்டைத் துவைத்து வெளுக்கிறார்.

///////தேசங்களுக்குத் தன்னாட்சி உரிமை என்பதை எச்சூழ்நிலையிலும் ஒரு குறிப்பிட்ட தேசத்துக்கு பிரிந்து செல்வதற்கான தகுதி உண்டு என்பதுடன் சேர்த்துக் குழப்பக் கூடாது. பிரிவினைப் பிரச்சனை ஒவ்வொன்றையும் சமூக வளர்ச்சி முழுவதன் நலன்கள், சோசலிசத்துக்கான பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் நலன்கள் ஆகியவற்றுடன் அது பொருந்துகிறதா என்ற தகுதியை மட்டுமே கொண்டு சமூக ஜனநாயகக் கட்சி தீர்மானிக்க வேண்டும்.(லெ.தொ.நூ.19.429)
பக்கம் 80-மார்க்ஸ் முதல் மா சேதுங் வரை//// - இது அவன் குறிப்பிட்டுள்ள தோழர் லெனினின் மேற்கோள்களில் ஒன்று.

‘சோசலிசத்திற்கான பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் நலன்கள்...’ என்பதைப் பற்றிப் பேசுவதற்கு இவர்களுக்குத் தகுதியிருக்கிறதா? அப்படியே ஏற்றுக் கொண்டாலும் ஈழப் போராட்டத்தில் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் நலன்கள், சிங்கள பேரினவாத அரசிடம் பொங்கி வழிவதாக இவர்கள் உருவகப்படுத்துகின்ற கேவலமான நிலையில், லெனினின் மேற்கோள்கள் இவர்களது தேசிய நிலைப்பாட்டின் மீது காறி உமிழ்வதாகத்தானே இருக்கிறது!

’மாநில சுயாட்சி...’ என்கிற இவர்களது பசப்பல்வாதம் இந்தியாபோன்ற ‘ஜனநாயகம் பூத்துக்குலுங்கும்’ நாட்டிலேயே சாத்தியப்படவில்லை என்பதை நாங்கள் சொல்வது ஒருபுறமிருக்கட்டும், அதை இவர்களது கட்சியே சொல்லிவருகிறதே! மே.வங்கத்தில் இவர்கள் கோட்டைவிட்ட துறைகளின் முன்னேற்றமில்லாத நிலை குறித்து கேள்வி கேட்டால், நேரடியாக மத்திய அரசைக் காட்டுகிறார்களே, அது ஏன்? இவர்கள் போதிக்கும் ‘மாநிலத்திற்கான சுயாட்சி...’ அங்கே அம்மனமாக நிற்கிறது. இதே நிலைதான் இந்திய தேசியம் என்கிற பார்ப்பன-இந்துதேசியத்தில் சிறைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து மாநிலத்தின் அவலநிலைகளாகக் காட்சியளிக்கின்றன. இவன் என்னடான்னா இலங்கை அரசிடமிருந்து மாநில சுயாட்சி பெற்றுக் கொள்ள பரிந்துரை செய்கிறான், இதனால்தான் இவனைக் கோமாளி என்று சொல்ல வேண்டியுள்ளது.

தனி ஈழம் அல்லது ஒன்றுபட்ட இலங்கை என்கிற இருவேறு கருத்துக்களுக்கும் மத்தியில், தீர்வினை ஒடுக்கப்படுகின்ற மக்களின் சுயநிர்ணய உரிமையின் மூலமாகத்தான் எட்டமுடியும் என்று சொல்பவர்களெல்லோரும் திரிபுவாதிகளாம். சுயநிர்ணய உரிமை என்பது என்ன? ஒடுக்கப்படுகின்ற தமிழ் இனமக்கள், இத்தனையாண்டுகாலம் தம்மை ஒடுக்கியழித்த சிங்கள பேரினவாதத்தோடு இணைவதையோ அல்லது விலகுவதையோ தமது சொந்த அனுபவத்தின் மூலமாக முடிவு செய்வதுதான் சுயநிர்ணய உரிமையாகும். அது தனி ஈழக் கோரிக்கையினை ஆதரிக்கலாம், அல்லது எதிர்க்கலாம். அதேபோல் ஐக்கியத்தையும் ஆதரிக்கலாம் அல்லது எதிர்க்கலாம். சுய நிர்ணய உரிமை என்பது தனி ஈழத்தை மட்டுமே கோரிக்கையாகக் கொண்டது அல்லவேஅல்ல. இதில் நாம் தெளிவாக இருக்கிறோம்.

சி.பி.எம்.செல்வப்பெருமாளோ, சுயநிர்ணய உரிமையை தனி ஈழக் கோரிக்கையோடு மட்டும் பொருத்தி தனது பிழைப்புவாத அரசியலுக்கு சுதிசேர்க்கத் துடிக்கிறான். மார்க்சிய ஆசான் லெனினது மேற்கோள்களை தமக்கேற்றவாறு சுருக்கி, வெட்டி எடுத்து மோசடியாக ஒட்டவைத்துக் கொள்கிறான். இவனைப் பொட்டிலறைவது போல தோழர் லெனின் தமது ‘தேசிய இனப்பிரச்சினை குறித்த விமர்சனக் குறிப்புகள்...’ எனும் நூலில் கீழ்கண்டவாறு சொல்கிறார்.

ஒடுக்கும் நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களைச் சர்வதேசியவாத உணர்வில் பயிற்றுவிக்கும் பொழுது ஒடுக்கப்படும் நாடுகளுக்குப் பிரிந்து போகும் சுதந்திரமளிக்க வேண்டும் என்பதை அவர்கள் ஆதரித்து, அதற்காகப் போராடவேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். இது இல்லாமல் சர்வதேசியவாதம் என்பது இருக்க முடியாது. ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த சமூக-ஜனநாயகவாதி அத்தகைய பிரச்சாரத்தைச் செய்யத் தவறினால் அவ்வாறு தவறியவர் ஒவ்வொருவரையும் ஏகாதிபத்தியவாதி என்றும் கயவர் என்றூம் கருதுவது நமது உரிமையும், கடமையுமாகும்.” - லெனின். (தே.வி.பா.ச. - பக்கம்’ 245)

ஒடுக்கும் இனத்திலிருக்கும் தொழிலாளர்களின் சர்வதேசிய உணர்வினை வளர்த்து ஒடுக்கப்படுகின்ற இனத்திற்காகப் போராடச் செய்கின்ற வகையிலா இவர்கள் வழிபடும் ஜே.வி.பி. இருந்துவருகிறது? எனவேதான், ஜே.வி.பி.யின் அடியொற்றி நடக்கும் இப்போலிகளை ஏகாதிபத்தியவாதிகள் என்றும் கயவர்கள் என்றும் போலிகள் என்றும் நாம் உறுதியாகக் கூறுகிறோம். தோழர் லெனின் தான் நம்மை அவ்வாறு கருதச் சொல்கிறார்.

(பதிவின் நீளம் கருதி தோழர் இரயாகரன் அவர்களின் ‘தேசியம் எப்பொழுதும், எங்கும் முதலாளித்துவ கோரிக்கைய ஒழிய, பாட்டாளி வர்க்க கோரிக்கையல்ல...’ என்கிற நூலிலிருந்து எடுக்கப்பட்ட பல்வேறு குறிப்புகளை இங்கே பதிவதைத் தவிர்க்கிறேன். அதேபோல தோழர் லெனின் சி.பி.எம். என்கிற திரிபுவாத கும்பலை அம்பலப்படுத்துவதற்காகவே எழுதிய குறிப்புகள் பலவற்றையும் தவிர்க்கிறேன்.)

பொதுவாக இனப்போராட்டங்கள் குறித்து இந்த போலிக்கும்பல் எடுக்கும் நிலைப்பாடுகள் பாட்டாளிவர்க்க நிலைப்பாடுகளாக இல்லாது பார்ப்பனவாத நிலைப்பாடுகளாக வெளிப்பட்டு அம்பலமாகிவிடுகிறது. பார்ப்பன-இந்து தேசியத்தினை இந்திய தேசமென்றும் தேசத்தின் புனிதமென்றும் ஏனைய பார்ப்பனிய-முதலாளித்துவ ’தேசிய’க் கட்சிகளான காங்கிரசு, பாஜக வோடு ஒத்த குரலெழுப்புவதில் போலிகளின் பங்கு கனிசமானது. காஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் இப்போலிக் கும்பல் கொண்டிருக்கும் நிலைப்பாடு பார்ப்பன-இந்துவெறி பாசிஸ்டுகளின் நிலைப்பாட்டோடு ஒன்றிப்போவதுதான் இதற்கான நேரடி சாட்சியாக இருக்கிறது. போதாக்குறைக்கு, விடுதலைக்காகப் போராடும் காஷ்மீர் மக்களை “பிரிவினைவாதிகள்...” என்று முத்திரைகுத்தி செய்திவெளியிடுகின்றன, இவர்களின் ஏடுகள்.

எனவே, ஈழப் போராட்டமும் இவர்களது பார்ப்பன-இந்து தேசியக் கண்ணோட்டத்தில்தான் விமர்சிக்கப்படுகிறதேயொழிய அதிலொன்றும் மார்க்சியக் கண்ணோட்டமுமில்லை, வேறெந்த மண்ணாங்கட்டியுமில்லை. இந்த பார்ப்பன அரிப்புதான் இலங்கையின் ஜே.வி.பி.யோடு கொஞ்சிக் குலாவிக் கொண்டே இல்லையென்று மோசடியாக மறுத்தும் வருகிறது. இதனை அம்பலப்படுத்தி போலிகளை நேர்மையானவர்கள் என்று நம்பிக்கொண்டிருக்கும் அணிகளின் மத்தியில் கேள்வியெழுப்ப வேண்டும்.

கடைசியாக, முத்துக்குமாரின் மரணம் குறித்த இவர்களது மதிப்பீடுகள், அவரது தீக்குளிப்பை சாதாரண தற்கொலையாக்கி அவரது தியாகத்தைக் கொச்சைப்படுத்துகிறது. தீக்குளிப்பதற்கு முன் அவர் வெளியிட்ட அந்த அற்புதமான மரணசாசனத்தை பெயரளவுக்கேனும் பரிசீலிக்கத் தயங்கி, அதனை மொத்தமாக புறக்கனிக்கிறது, இக்கும்பல். முத்துக்குமார் தன்னுடலை எரிப்பதற்கு வைத்த தீ, கண்டும் காணாதமாதிரியிருக்கும் இச்சமூகத்தின் அமைதியின் மேல் வைக்கப்பட்ட தீயாக இருப்பதால் பதறுகிறது இப்பாசிசக் கூட்டம். அவர் தன் மரணத்தின் மூலமாக சொல்கின்ற செய்தியினை உயர்த்திப்பிடிப்பவர்களை ‘பிணவாத அரசியல்’ நடத்துபவர்கள் என்று தூற்றுகிறது.

யார் பிணவாத அரசியல் நடத்துபவர்கள்? ஒரு இளைஞன், எந்தவிதமான தனிப்பட்ட காரணங்களுக்காகவும் அல்லாமல், சமூகத்தின் இழிநிலையைப் போக்க தன் உடலைக் கொளுத்திக் கொண்ட தீயை எடுத்து, அவனது புரட்சிகர விருப்பத்தினை ஏற்று, அத்தீயினை சமூக அற்பத்தனத்தின் மீது வைப்பது பிணவாத அரசியல் என்றால்; 44பேரை குழந்தைகள், பெண்கள் என்று தீயிலிட்டுப் பொசுக்கிய வெண்மணியினை வைத்து நீங்கள் நடத்துவது என்ன புரட்சிகர அரசியலா? இல்லை, அதுதான் பிணவாத அரசியல். வெண்மணியின் தாக்கத்தை நீங்கள் ஓட்டுகளாக்கிப் பொறுக்கியது அன்றி, அதனைக் கொண்டு வேறு ஏதேனும் சிறு துரும்பையேனும் இதுவரை அசைத்திருக்கிறீர்களா?

கூலி உயர்வுக்காக நிலப்பிரபுவுடன் களம் கண்ட வெண்மணியில் நீங்கள் கொண்டிருந்த நிலைப்பாட்டை, கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில், அப்போராட்டத்தினையொத்த போராட்டமாக வெடித்த நக்சல்பரியில் உமது கட்சி ஏன் மாறுபட்டு நின்றது? ஜோதிபாசு தன்னுடைய போலிசு துறையினைக் கொண்டு தமது சொந்த அணிகளையே சுட்டுத்தள்ள உத்தரவிட்டது எப்படி நேர்ந்தது? அதனால்தான் சொல்கிறேன், வெண்மணியில் நீங்கள் செய்தது பிணவாத அரசியல். அதனால்தான், வெண்மணிக் குற்றவாளியான கோபாலகிருஷ்ண நாயுடுவை போற்றிப் பாதுகாத்த தி.மு.க.வோடு அடுத்த தேர்தலிலேயே கூட்டணி வைத்து சோரம்போக முடிந்தது உங்களால்.

44 பேரை பலிகொடுத்த உழைக்கும் மக்கள், கருக்கறிவாள், வேல்கம்புகளுடன் லட்சக்கணக்கில் திரண்டு நின்றபோது, சட்டப்போராட்டத்தின் மூலமாகப் பார்த்துக்கொள்ளலாம் என்று பசப்பல்வாதம் பேசி அவர்களின் உணர்வுகளை மழுங்கடித்தீர்கள். ஆனால், நக்சல்பரியில் விதைக்கப்பட்ட தியாகிகளின் உடல்களிலிருந்து எழுந்த புரட்சித்தீ இன்றுவரை, (உங்கள் மொழியில் சொல்வதானால்) சுக்குநூறாகப் பிளவுண்டிருந்தாலும் ஆளூம்வர்க்கத்தை குலைநடுங்கச் செய்துகொண்டிருக்கிறது. எதிர்கால சமூகமாற்றத்திற்கும் நம்பிக்கையூட்டக்கூடியவர்களாக நக்சல்பரிகளே இருந்துவருகின்றனர்.

எனவே, ஓட்டுப்பொறுக்கி பிழைப்பதற்காக நீங்கள் நடத்திக் கொண்டிருக்கும் பிணவாத அரசியலை ஒருபோதும் மற்றவ்ர்கள்மீது நீங்கள் சுமத்த முடியாது. நீங்கள் மற்றவர்களின் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கள், உங்களையே மீண்டும் மீண்டும் கேள்விக்குட்படுத்தி அம்பலப்படுத்துகின்றன.

ஈழப் போராட்டத்தில் ஹிந்து ராம் என்பவனோடு நீங்கள் வைத்திருக்கும் கருத்தொற்றுமையும், பார்ப்பன-இந்து தேசியப் பார்வையும் உங்கள் கட்சியின் சீரழிவிற்கு பெரும் பங்காற்றியிருக்கிறது. இதே சமகாலத்தில், ஜெயாவுடன் நீங்கள் கொண்டிருக்கும் கூட்டணியும் அதற்கு கூடுதல் பங்குவகிப்பதன் மூலமாக உங்களின் இருத்தலைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. இன்னும் மிச்சமிருப்பது கொடியும் கோவணமும்தான். அதனை உருவி எறிகிற வேலைகளை எஞ்சியிருக்கும் நேர்மையான அணிகள் செய்வார்கள்.

புரட்சிகர வணக்கங்களுடன்!


ஏகலைவன்.

தொடர்புடைய பதிவுகள்.....

1. சி.பி.எம். கோயபல்ஸ் பீரோவின் பித்தலாட்ட நிலைப்பாடும், டவுசர் கழன்ற சந்திப்பும்

2. இந்திய அரசே தலையிடாதே! சிபிஎம் பாசிஸ்ட்டே கோயபல்ஸ் தனத்தை நிறுத்து!!

3. ஈழ மக்கள் மீது மலம் கழிக்கும் சந்திப்பு: இந்திய மேலாதிக்கத்துக்கு கம்பளம் விரிக்கும் போலி கம்யூனிஸ்டுகள்...

4. ஈழம்: இந்தியா முதுகில் குத்துவது ஏன்?

5. ஈழம்: உலக மக்களே இந்தியாவைக் கண்டியுங்கள்!

6. மனித அவலத்தை நிறுத்த, யுத்த நிறுத்தம் ஒரு தீர்வா!? அல்லது மக்களை வெளியேற்றுவது ஒரு தீர்வா?

Sunday, February 1, 2009

மாவீரன் முத்துக்குமாரின் தியாகம் - உணர்வாளர்களின் எழுச்சியும், துரோகிகளின் இகழ்ச்சியும்!...

”வாழ்க்கையில், எல்லா ஆசைகளும், நம்பிக்கைகளும் உடையவன் தான் நானும். ஆனால், தேவையான நேரத்தில், அவைகளை என்னால் உதறிவிட முடியும்; அதுதான் உண்மையான தியாகமாகும். மனிதனின் வாழ்க்கைப் பாதையில் அந்த விஷயங்களெல்லாம், ஒரு நாளும் குறுக்கே நிற்க முடியாது - அவன் நிஜமாகவே மனிதனாக இருக்கும் பட்சத்தில்....” - இது 1929’ஏப்ரலில், டெல்லி சட்டசபையில் குண்டுவீசிக் கைதாகி தூக்குத்தண்டனை கிடைத்தாலும் துணிவோடு சந்திக்கவேண்டும் என்கிற முடிவெடுத்த பிறகு மாவீரன் பகத்சிங் சொன்னது.

தேசத்திற்காக உயிரைக்கொடுப்பதை அரிய வாய்ப்பாகக் கருதி பெருமிதத்தோடு ஏற்று நிற்கிற பக்குவம், வெறும் 23வயதான பகத்சிங்க்கு எப்படி வந்தது? தான் தூக்கிலிடப்படப்போகிறோம் என்பதனை அறிந்தும், அன்றைய பார்ப்பன-சனாதான-போலி அகிம்சைகளின் இருளில் சொக்கிக்கிடந்த இந்திய மக்களின் ‘கேளாத செவிகள் கேட்கட்டும்’ என்று முழக்கமிட்டு (யாரையும் கொல்லாத வெற்று குண்டை வீசி) அனைவரது கவனத்தையும் ஈர்த்து, கைதாகி தூக்குக் கயிறைத் தொட்டுத்தழுவினான் அந்த வீரன்.

நம்முடைய சமகாலத்தில், சிங்களப் பேரினவாதத்தாலும் இந்திய மேலாதிக்கத்தாலும் மிகக் கொடூரமாக ஈழத்தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டுவரும் இன அழிப்பு நடவடிக்கைகள் பற்றி சொல்லிமாளாத நிலை. 1983 ஜூலைப் படுகொலைகளுக்குப் பிறகு வீறு கொண்டெழுந்த தமிழ் விடுதலை இயக்கங்களை,போராளிக்குழுவாக இருந்த விடுதலைப் புலிகளை வெறும் கூலிப்படைகளாகச் சீரழித்தது பாசிச இந்திரா - எம்.ஜி.ஆர். கூட்டணி. அதிலிருந்து இன்று வரை, ஈழத் தமிழ்க் குழந்தைகள் முதல் பெண்கள், முதியவர்கள், வாலிபர்கள் என பல்வேறு அப்பாவித் தமிழர்கள் கொன்று வீசப்படுவதும். குண்டடிபட்டு செத்து விழுந்த பிறகும் அந்த பெண்ணுடல்களைப் புணரும் சிங்கள ராணுவத்தின் வக்கிற வெறியினையும் சிறிதும் பொருட்படுத்தாமல், கிரிக்கெட்டிலும், சினிமாவிலும், இன்னபிற கேளிக்கைகளிலும் மூழ்கிக் கிடக்கும் மக்கள் கூட்டத்தின் கேளாத செவிகளைக் கேட்கச் செய்வதற்காகவே தனது உயிரைத் தீக்கிரையாக்கிக் கொள்ளத் திட்டமிட்டான் ஒரு சாதாரண தமிழ் இளைஞன் முத்துக்குமார்.

“என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்...” என்பதாக தனது மரண சாசனத்தில் சொல்லியிருக்கிறார் முத்துக்குமார். தனது மரணத்தின் மூலம் அற்ப அனுதாபத்தையோ வெற்றுக் கதறல்களையோ, சித்தாந்த வியாக்கியானங்களையோ மறுத்து நம்மிடமிருந்து போராட்டத்தை வேண்டுகிறார் முத்துக்குமார்.

பகத்சிங்கின் கடிதங்களையும், மருது சகோதரர்களின் திருச்சி பிரகடனத்தையும் ஏடுகளில் மட்டும் நாம் படித்திருக்கிறோம். அவர்களின் போராட்டங்களை, தியாகங்களை நேரில் பார்த்திருக்கும் வாய்ப்புகள் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால், இதோ நம் சமகாலத்தில், அகிம்சையும் அடிமைத்தனமும் பன்பாடாகத் திணிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் இக்காலத்தில், அதன் விளைவாக போராட்டங்களும் ஆயுதங்களும் செயலற்றிருப்பதை உணர்ந்த காரணத்தால் தனது உடலை ”உயிராயுதமாய்.....” ஏந்துங்கள் என்று சொல்லிச் சென்ற அந்த சாதாரண இளைஞனின் தியாகம் மகத்தானது. அது சாதாரண நிகழ்வு அல்ல.

அறிவாயுதம் ஏந்திப் போராடுபவர்களுக்கு மத்தியில் தன்னால் முடிந்த உயிராயுதம் ஏந்தியிருப்பதாக முத்துக்குமார் குற்ப்பிட்டுள்ளது, அவரது முடிவினை விமர்சிப்பவர்களுக்கு அவர் முன்னறிந்து சொல்லிச் சென்ற பதிலாக இருக்கிறது. சாகும் தருவாயில் அவர் இச்சமூகத்துக்கு கொடுத்துச் சென்ற உயில் மட்டுமல்ல அது; சாதாரண ‘தற்கொலை’யாக அவரது முடிவை எடுத்துக்கொள்ள முடியாமல் இலட்சக்கணக்கான மக்களைக் கதறியழச் செய்த அற்புதப் படைப்பு அது. கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன், அங்கு திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய சொற்ப எண்ணிக்கையிலான நபர்களே அவரை முன்னறிந்தவர்களாக இருந்திருப்பார்கள், இது உறுதி. மற்ற யாவரையும் அங்கே இழுத்துவந்தது அவரது அந்த இறுதிக் கடிதம் மட்டும்தான்.

கேளிக்கையில் மூழ்கிக் கிடக்கும் மக்கள் கூட்டத்தைத் தட்டி எழுப்புவதற்காக தனது உயிரையே கொடுக்கவேண்டியுள்ளதே என்று தனது கோபத்தை ஒட்டுமொத்தமாக மக்கள் மீது காட்டாமல், அவர்களுக்காக அனுதாபப்படுவதோடு, போலிப் பிரச்சினைகளோடு பிரிந்திருக்கும் எதிரிகளான இந்திய-தமிழக ஓட்டுப் பொறுக்கிகள் ஈழமக்களின் இன அழிப்பு நடவடிக்கையில் இணைந்திருப்பதை ஆழமாகச் சுட்டிக்காடி மக்களிடமிருந்து தனிமைப்படுத்திச் சாடியிருக்கிறார்; அவர்.

அவரது, அந்த சாடல்களை மெய்ப்பிக்கும் வகையில்தான் ஓட்டுப் பொறுக்கிகள் அனைவரும் நடந்து கொண்டனர். புலியாதரவு வேடம் போடும் வைக்கோ, திருமா, ராமதாசு போன்றோரும், புலியாதரவோடு பார்ப்பன பாசிசத்தைக் கலந்து ’போராடும்’ நெடுமாறன், (சசிகலா)நடராசன் போன்றோரும், எதற்காக இந்திய தேசியத்தை ஏற்றுக் கொண்டுள்ளோம் என்பதையும் எதற்காக முத்துக்குமாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்கிறோம் என்பதையும் அறிந்திருக்காத சிபிஐ போலிகம்யூனிச தலைவர்களும் அங்கே ஆஜராகி, ‘எப்படியாவது இன்றைக்குள் முத்துக்குமாரை அடக்கம் செய்துவிட வேண்டும்...’ என்கிற ஆர்வத்தோடு தமது கைக்கூலித்தனத்தை வெளிக்காட்டி, அங்கு திரண்டிருந்த உணர்வாளர்களிடம் முறையாக வாங்கிக்கட்டிக் கொண்டார்கள்.

அங்கு வராமல், ஏது நடக்குமோ என்கிற உளைச்சலில் வயிற்றைப் பிசைந்து கொண்டு கிடந்த சத்தியமூர்த்தி பவனில் உள்ள பன்றிகளைப்பற்றி நாம் எதுவும் பேசத்தேவையில்லை. அவன் தெரிந்த எதிரி. தெரியாத துரோகிகளை என் செய்வது? “முத்துக்குமாரின் தியாகத்தை அரசியல் ஆக்காதீர்கள். அது நமது பன்பாடு அல்ல” என்று புலம்பிய கருணாநிதியைத்தான் தனது மரணசாசனத்தில் குற்றவாளிக் கூண்டில் முதன்மையானவராக நிறுத்திச் சென்றிருக்கிறான் முத்துக்குமார்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, மற்றொரு போலி கம்யூனிச கூடாரமான சி.பி.எம். இவ்விடயத்தை எப்படிப் பார்த்தது என்பதை நாம் சொல்லியே ஆகவேண்டும். எங்கோ ஒரு சாலையோரத்தில் வாகனங்களில் அடிபட்டு செத்துக்கிடக்கும் சொறிநாயின் அளவுக்குக் கூட முக்கியத்துவம் கொடுக்கமுடியாத நாகேஷின் மரணத்தை பிரதானப்படுத்தி, இரண்டாவது நாளாக இன்றைக்கும் (01.02.09) படத்துடன் செய்திகள் வெளியிட்டு வரும் தீக்கதிர் நாளேடு மேற்படி போலிகள் நடத்துகின்ற ‘மக்கள்’ பத்திரிக்கை.

முத்துக்குமார் தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்ட மறுநாள் இந்த போலிக்கயவர் கூட்டம் தி.நகரில் நாடகவிழா நடத்திக் கொண்டிருந்தது. இரண்டு மாதத்திற்கு முன் திட்டமிடப்பட்ட அந்த நாடகவிழா மழையின் காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டதாம். சாதாரண மழைக்கு ஒத்திவைக்கப்பட்ட அந்த கேலிக்கூத்தை, முத்துக்குமார் தமிழக மக்களிடத்தில் எற்படுத்திய உணர்ச்சிகரமான சூழலைப் பொருட்படுத்தாமல் நடத்திக் கொண்டிருந்தது. தமது அன்றாட அரசியல் பிழைப்புவாதத்தையே நாடகமாக நடத்திக்கொண்டுள்ளதால் மக்களால் காறி உமிழப்பட்டுக் கிடக்கும் இந்த கயவர்கள் கூட்டம் தனியாக நாடகவிழா நடத்திக் கொண்டிருந்தது வெறும் கேலிக்கூத்தன்றி வேறென்ன?

அந்நிகழ்வில் கலந்து கொண்டு ‘வாழ்த்துக்களை’ வழங்கிச் சென்ற யோக்கியர்கள் பட்டியலில் முதலிடம் யாருக்குத் தெரியுமா? ஈழ மக்களின் போராட்டங்களையும் படுகொலைகளையும் கேலி செய்து செய்தி வெளியிடும் பார்பன-இந்துவெறியன் ‘ஹிந்து’ என்.ராம்.இவையனைத்தையும் தொகுத்து இத்தருணத்தில் நாம் பார்க்கவேண்டியது அவசியமாவதால்தான் இத்தனை விரிவாக இந்த கேவலங்களை நான் இங்கே பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறேன்.

போதாக்குறைக்கு, இணையத்தில் அவதூறூகளை எழுதுவதற்காகவே தீணிபோட்டு போலிகளால் வளக்கப்படும் கே. செல்வப்பெருமாள் என்கிற சந்திப்பு, தோழர் முத்துக்குமாரின்
தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக, “அது உணர்ச்சிவயப்பட்ட முடிவு....” என்றும் “இது ஒரு மூடப்பழக்கத்தின் ஒரு வடிவம்...” என்றும் தனது இழிவான கருத்துக்களை வலைதளத்தில் வெளியிட்டு வருகிறான்.

//////இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக தனது உயிரை மாய்த்துக் கொண்ட முத்துக்குரனின் செயல் கடும் வருத்தத்தை உண்டாக்கக்கூடிய ஒன்றே. எனினும், தனிநபரின் இத்தகைய உணர்ச்சிவயப்பட்ட முடிவு... மேலும் சில உணர்வுகளை கிளறிவிடப் பயன்படலாம்! முற்போக்கு விதை தூவப்பட்ட மண் என்று பெருமையடித்துக் கொள்ளும் தமிழகத்தில் இவ்வாறான அரசியல் தற்கொலைகளும் மூடப்பழக்கத்தின் ஒரு வடிவமாகவே கருதுகிறேன். அரசியல் ரீதியாக - தனது கருத்துக்கு ஆதரவாக மக்கள் எழாதபோது ஏற்படும் விரக்தி கலந்த - உணர்ச்சி இதனை நோக்கி தள்ளியதோ என்றே சிந்திக்கத் தோன்றுகிறது. கொள்கை ரீதியாகவும் - அரசியல் ரீதியாகவும் - தத்துவார்த்த ரீதியாகவும் விவாதங்கள் இல்லாதபோது வெறும் இனவாத உணர்ச்சி மட்டுமே மேலிடும். இத்துடன் தனிநபர் வழிபாடும் மேலோங்கியிருப்பதைதான் அவ்வப்போது நடைபெறும் இதுபோன்ற நிகழ்வுகள் காட்டுகின்றது./////

மேலும் ஈழப் பிரச்சினையில் இந்திய அரசின் துரோகத்தை விமர்சிப்பது இலங்கைச் சுதந்திரத்தைக் கொச்சைப்படுத்தும் செயல் என்றும் எழுதியிருக்கிறான். அதனை அவனுடைய வார்த்தைகளிலேயே படியுங்கள்...

///இந்திய அரசு வல்லாதிக்க மனப்பான்மையுடன் செயல்படுவதாக குற்றம் சுமத்துவது இலங்கையின் சுதந்திரத்தையும் - மக்களையும்
கொச்சைப்படுத்துவதாகவே முடியும்.///


இந்த அசிங்கங்களைக் கண்டிக்கலாம் என்று அவனது வலைதளத்தில் பதியப்படும் மறுமொழிகளை அவன் யோக்கியமாக பதிப்பிப்பதில்லை. கூலிக்கு மாரடிக்கும் இந்த நாய் எழுதுவதை வானுயரப் புகழ்ந்து தள்ளும் ஒரு சில மண்டைவீங்கிகள், முத்துக்குமாரின் மரண சாசனத்தை ஏளனம் செய்கின்றது. மரணத்தினை முன்கூட்டியே முடிவு செய்துகொண்டு இப்படிப்பட்ட அற்புதமான இலக்கியத்தை எழுத சாதாரண ஒருவனால் முடியுமா? என்பதைக் கூட கொஞ்சமும் சிந்திக்க இந்தப் பிழைப்புக்காக எழுதும் ‘யோக்கியர்களுக்கு’த் தெரியவில்லை. இதனை நாம் கண்டும் காணாமல் விட்டுவிட முடியாது. முத்துக்குமார் குறிப்பிட்டுக் காட்டியுள்ள பாசிசக் கும்பலின் பிரதிநிதிகள்தான் இவர்கள். செங்கொடிக்குள் தனது பாசிசத்தை மறைத்துக் கொண்டு பிழைத்துவரும் ஈனர்கள்தான் இவர்கள். இந்த போலிக் கும்பலை மேன்மேலும் அம்பலப்படுத்தித் திரைகிழிப்போம்.

முத்துக்குமாரின் தியாகத்தைக் கூறுபோட்டு ஓட்டுப் பொறுக்க நினைக்கும் அனைத்து அரசியல் வியாபாரிகளையும் முறியடிப்போம்.

தோழமையுடன்,
ஏகலைவன்.

Thursday, January 29, 2009

பார்ப்பன-இந்து மதவெறியின் பிதாமகன் காந்தியின் நினைவுநாள் - மதவெறி எதிர்ப்பு நாளாம்......

நாளை ஜனவரி-30. வருணாசிரம-பார்ப்பன-இந்துமதவெறியின் பிதாமகனான காந்தியின் நினைவுநாள். இந்நாளை ’மதவெறி எதிர்ப்பு நாள்’ என்று சொல்லி தமிழ்நாடு முழுக்க தனது அமைப்புக்கே உரிய கேலிக்கூத்தை நடத்தவிருக்கிறது சிபிஎம் கட்சியின் மனமகிழ் மன்றமான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்.

மாவீரன் பகத்சிங்கையும் காந்தியையும் கொண்டாடுகிற மோசடியைக் கண்டிக்காமல் இருக்கமுடியுமா? மகத்தான தோழர் பகத்சிங்கின் சாவை எதிர்பார்த்து அரசியல் நடத்திய துரோகி காந்தியைக் கொண்டாடுவதன் மூலம் பகத்சிங்கை இந்த கேலிக்கூத்துக்கள் அவமதிப்பதாகத்தானே இருக்கிறது? இதுமட்டுமா.....

தான் பிறந்த மதத்தின் அடையாளமாக இருந்த தனது சீக்கியத் தலைப்பாகையினை பகத்சிங் பெருமிதத்தோடு தூக்கியெறிந்து அதற்கான காரணத்தையும் ஆணியறைந்ததுபோல சொல்லிய பிறகும் இன்றும் அவரது படங்கள் இந்த சிபிஎம் போலிக் கும்பலால் தலைப்பாகையுடன் பயன்படுத்தப்படுவது ஏன் தெரியுமா? சமீபத்தில் மறைந்த சிபிஎம் கட்சியின் சுர்ஜித்சிங், சாகும் வரை தனது மத அடையாளத்தை இறக்கிவைக்க மனமின்றி இருந்ததைச் சுட்டிக்காட்டி விமர்சனங்கள் எழுந்தபிறகு அவரது அம்மனத்தை மறைக்க மோசடியாக பகத்சிங்க்கும் தலைப்பாகையினை அணிவித்து அறிமுகப்படுத்துகிறது இப்போலிக் கும்பல்.தோழர் பகத்சிங் தலைப்பாகையுடன் இருக்கும் படங்களை தனது அமைப்புகளின் மாநில-மைய அளவிலான நிகழ்வுகளிலேயே, மேடையிலேயே வைத்து அந்த மகத்தான தியாகத் தோழனை அவமானப்படுத்துகிறார்கள்.

போலிகளிடமிருந்து கட்சியின் பெயரையும் கொடியையும் மீட்டெடுக்கவேண்டியதோடு இதுபோன்ற மகத்தான தோழர்களையும் சேர்த்தே மீட்டெடுக்க வேண்டியுள்ளது. துரோகி காந்தியினை பெருமிதத்தோடு உயர்த்திப்பிடிக்கும் இந்தக் கயவாளிகளின் கைகளில் மாவீரன் பகத்சிங் அவமதிக்கப்படுவதை முடிவுக்குக் கொண்டுவருவோம்.

தோழமையுடன்,
ஏகலைவன்.

------------------------------------------------------------------------------------


சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சேலம் வேலு காந்தி எனும் 82 வயது முதியவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார். அம்மனுவில், சாதி நம்பிக்கையற்றோர், "கலப்பு'த் திருமணம் செய்து கொண்டவர்கள், அனாதைக் குழந்தைகள், மதம் மாறியோர் ஆகிய நான்கு வகையினரைக் கொண்டு, "காந்தி சாதி' என்ற ஒரு புதிய சாதியை உருவாக்க உத்தரவு தருமாறு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்தார். இதன் மூலம் சாதிகள் ஒழிய வழிபிறக்கும் என வாதிட்டார்.

அரசியல் சாசனத்தின் அடிப்படையில், ஒரு புதிய சாதியை உருவாக்க தமக்கு அதிகாரம் இல்லையெனக் கூறி, நீதிபதிகள் அம்மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

நாமகரணங்கள் நமக்கு புதியனவல்ல. ஹரியின் குழந்தைகள் எனப் பெயர் சூட்டினார் காந்தி. காந்தியின் குழந்தைகள் எனப் பெயர் சூட்ட வேண்டுமென ஆதங்கப்படுகிறார் காந்தியின் சீடர். பெயர் சூட்டுவதிருக்கட்டும். "பீ'யள்ளப் போவது யார் என்பதல்லவா கேள்வி. அன்றே காந்தியின் சாதி ஒழிப்பு சண்ட பிரசண்டங்களுக்கும், அவரது நடைமுறைக்குமான முரண்பாட்டை அம்பேத்கர் திரை கிழித்திருக்கிறார். ஆனால், காந்தி தனது வாழ்நாள் முழுவதும் அம்பேத்கர் எழுப்பிய கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை.

குறைந்தபட்சம் காங்கிரசில் உறுப்பினராக சேர தீண்டாமையைக் கடைப்பிடிக்கக் கூடாது என ஒரு விதியைக் கொண்டு வருவதற்குக் கூட காந்தி தயாராக இருந்ததில்லை. காந்தியால் சோசலிசத்திற்கு மாற்றாக வைக்கப்பட்ட தருமகர்த்தா முறையை நடைமுறைப்படுத்தக் கிளம்பிய வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்தின் தோல்வி காந்தியத்தின் தோல்வியல்ல என்பது போல மூடி மறைக்கப்பட்டு விட்டது. எனினும் காந்தி மீண்டும் மீண்டும் மக்கள் அரங்கில் முன்நிறுத்தப்படுவது மட்டும் இன்றளவும் நின்றபாடில்லை.

ஆனால், காந்தி சொன்ன கிராமப் பொருளாதார முறையை 1947லேயே காங்கிரசு கைக்கொள்ளவில்லை. காங்கிரசைக் கலைக்கச் சொன்ன காந்தியின் யோசனையை ஒரு பொருட்டாகக் கூட எவரும் கருதவில்லை. குடும்பக் கட்டுப்பாடு கூடாது, ஆலைத் தொழில்கள் கூடாது போன்ற "அற்புதமான' கருத்துக்களை மட்டுமல்ல; ஜனாதிபதி மாளிகையை இலவச மருத்துவமனையாக்க வேண்டுமென்ற தேசப்பிதாவின் "சின்ன சின்ன ஆசைகளை'க் கூட யாரும் கண்டு கொள்ளவில்லை.எனினும், ஐநூறு ரூபாய் நோட்டிலும், காந்தி ஆசிரமங்களிலும், நாடு முழுவதிலுமுள்ள சிலைகளிலும், அரசாங்க உரைகளிலும் காந்தி ஒரு மந்திரம் போல தொடர்ந்து நிலைநிறுத்தப்படுகிறார். காந்தி பிறந்த குஜராத்தில் திரையிட மறுக்கப்பட்ட "பர்சானியா' திரைப்படம், குஜராத் முசுலீம் இனப்படுகொலையால் மனம் உடைந்து போகிற ஒரு வெளிநாட்டு காந்திய மாணவனை கதாபாத்திரமாகக் கொண்டிருந்தது. சோனியா காந்தியோ சத்தியாக்கிரகத்தின் "மகிமையை', "உலகப் பொருளாதார மன்ற'த்தில் வியந்தோதுகிறார்.

காந்தியால் மீண்டும் மீண்டும் குழப்பப்பட்ட சத்தியாக்கிரகம், இன்றும் கூட மக்கள் எதிர்ப்பை மழுங்கடிப்பதில், வன்முறை குறித்த நியாயத்திற்கு அப்பாற்பட்ட தார்மீக அச்சத்தை உருவாக்குவதில் முன் நிற்கிறது. மணிப்பூரில், இந்திய இராணுவத்தின் அட்டூழியங்களுக்கு எதிராக, இந்திய அரசின் கொடூரச் சட்டமான "ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தை' திரும்பப்பெறக் கோரி, கடந்த ஏழு ஆண்டுகளாக உண்ணாவிரதமிருந்து வரும் ஐரோம் சர்மிளா இதற்கு ஒரு உதாரணம். சர்மிளா செத்துப் பிணமானால் கூட இந்திய அரசு அச்சட்டத்தை திரும்பப் பெறப் போவதில்லை.

காந்தியின் தெளிவற்ற, மூடு மந்திரமான மதச்சார்பின்மை 1947 பிரிவினையின்போதே படுதோல்வியடைந்த போதிலும், இன்றும் காங்கிரசாலும், போலி கம்யூனிஸ்டுகளாலும் உதாரணமாக முன்வைக்கப் படுகிறது. ஷாபானு வழக்கிலும், ராம ஜென்ம பூமி விவகாரத்திலும், குஜராத் படுகொலையிலும் காந்திய மதச்சார்பின்மை வெங்காயம் மொத்தமாய் உரிந்து போனது. காவிப் படையின் கொலை வெறியாட்டத்திற்கு சொல்லில் மௌன சாட்சியாகவும், செயலில் நம்பகமான கூட்டாளியாகவும் காங்கிரசு துணை போனது. ஆனால், இன்னமும் மதச்சார்பின்மைக்கு போலித்தனமான நடுநிலைமையே விளக்கமாக அளிக்கப்படுகிறது.

உண்மையில், காந்தி வாழ்ந்த காலத்திலேயே காந்தியம் தோற்றுப் போய் விட்டது. ஆனால் அந்த உண்மைகள் மூடி மறைக்கப்படுகிறது. அரை உண்மைகள் ஊதிப்பெருக்கப்படுகின்றன. பொய்கள் அதிகாரப்பூர்வ வரலாறாகிறது. அப்படித்தான் நாம் காந்தியை ஏற்றுக் கொள்ளச் செய்யப்பட்டிருக்கிறோம். அவ்வாறு மூடி மறைக்கப்பட்ட சில வரலாற்று உண்மைகளின் ஒளியில், இப்பொய்களை அடையாளம் காண்போம்.
****
காந்தி அவரது காலத்திலேயே தமது முரண்பாடுகளுக்காக மிகப் பலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஒரு விவாதத்தில், ""எனது முரண்பட்ட நிலைகளைக் குறித்த நிறைய குற்றச்சாட்டுக்களை நான் படித்திருக்கிறேன். கேட்டிருக்கிறேன். ஆனால், அவற்றிற்கு நான் பதில் கூறுவதில்லை. ஏனெனில், அவை வேறு யாரையும் பாதிப்பதில்லை. என்னை மட்டுமே பாதிக்கின்றன'' என காந்தி எழுதினார். ஆனால், இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தரும் "பொறுப்பை' ஏற்றிருந்த காந்தியின் முரண்பட்ட நிலைகள் எவ்வாறு இந்த நாட்டின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையே பாதித்தது என்பதைத்தான் வரலாறு காட்டுகிறது.

அகிம்சைதான் காந்தியத்தின் அடிப்படைக் கொள்கையாகச் சொல்லப்படுகிறது. உலகிலேயே முதன்முறையாக காந்தி கண்ட அறவழிப் போராட்ட முறையாக சத்தியாக்கிரகம் முன் வைக்கப்படுகிறது. ஆனால், உலக வரலாற்றில், நியாயமான கோரிக்கைகளுக்காக, எதிர்த்துத் தாக்காமல், துன்பங்களை தாமே முன்வந்து ஏற்றுக் கொள்ளும் சாத்வீகப் போராட்ட முறை இயேசு, துவக் கால கிறிஸ்தவர்களிலிருந்து ரசியாவின் டியூகோபார்கள் எனப்படும் பிரிவினர் வரை பலரால் ஏற்கெனவே கைக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், காந்தி தனது சத்தியாக்கிரக முறை சாத்வீக போராட்ட முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதென விடாப்பிடியாக சாதித்தார்.

"காந்தியும் அவரது காலங்களும்' என்ற நூலில் காந்தியம் எனும் கருத்தாக்கம் உருவான முறையை சாரமாக எழுத்தாளர் மன்மத்நாத் குப்தா இவ்வாறு குறிப்பிடுகிறார். ""புத்திசாலித்தனமாக கணக்கற்ற தார்மீக, தத்துவார்த்த, ஆன்மீகச் சரடுகளை சுற்றிக் காட்டியதன் மூலம், முந்தைய சாத்வீக இயக்கங்களிலிருந்து சத்தியாக்கிரகம் மாறுபட்டதென காட்ட முயன்றார். நூற்றாண்டுகளைக் கடந்த இந்துக் கலாச்சாரத்தின் மீதேறி சுலபமாகப் பயணிக்க முயன்றார். அவரே ஒத்துக் கொண்டதைப் போல, இதற்கு தேவையான தயாரிப்புகள் இல்லாத போதும், வறட்டுப் பிடிவாதத்தின் மூலமாக மட்டுமே அவரால் தனக்கென ஒரு கருத்தாக்கத்தை உருவாக்க முடிந்தது.''

தமது ஆன்மீகச் சொல்லாடல்களின் மூலம் எக்கருத்தையும் தனக்கேற்ற முறையில் காந்தியால் வளைக்க முடிந்தது. சிறையிலிருக்கும் புரட்சியாளனின் உண்ணாவிரதத்தைக் கூட காந்தி "வன்முறை' என்றார். ஏனெனில் அவனது உள்ளத்தில் வன்முறை இருக்கிறதாம். நிலப்பிரபுக்களுக்கு விவசாயிகள் வரி கொடுக்க மறுத்து, சாத்வீக முறையிலேயே போராடிய போதும் கூட, அது வன்முறை என்றார்.

இவ்வாறு வன்முறைக்கும், அகிம்சைக்கும் கணக்கற்ற விளக்கங்கள் அளித்த காந்திதான், தென்னாப்பிரிக்காவில், முற்றிலும் அநீதியான வகையில் ஜூலூ கலகப் போரிலும், போயர் யுத்தத்திலும், முதல் உலகப் போரிலும், பிரிட்டிஷ் சிப்பாய்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை செய்தார். இதனைக் கேள்வி கேட்டவர்களுக்கெல்லாம், ""இதன் மூலம் பிரிட்டிஷ் பிரஜை என்ற முறையில் தமது கடமையை ஆற்றினால்தான், உரிமைகளைப் பெற முடியும்'' என விளக்கமளித்தார்.

முதல் உலகப் போரில் ஆங்கிலப் படைகளுக்கு சேவை செய்த பொழுது, அவரது நெருங்கிய நண்பர்களே அவரை விமர்சித்ததற்கு, ""போரில் பங்கேற்பது என்பது அகிம்சையோடு ஒருக்காலும் பொருந்தாது என்பதை நானறிவேன். ஆனால் ஒருவருக்கு அவரது கடமைகள் குறித்து, எல்லாச் சமயங்களிலும் தெளிவான பார்வை பெற வாய்ப்புகள் இருப்பதில்லை. சத்தியத்தின் பாதையில் பயணிப்பவன் பல சமயங்களில் இருட்டில்தான் செல்ல வேண்டியிருக்கிறது'' என நியாயம் கற்பித்தார்.

பின்னர், 1921இல் தமது கண்கள் திறந்து விட்டதாகவும், அவ்வாறு கருதியது தவறு என்றும், பிரிட்டிஷ் அரசு தம்மை பிரஜையாகவே கருதவில்லையென்றும், எந்த உரிமைகளும் அற்ற ஒரு தாழ்த்தப்பட்ட பராரியாகவே இந்த அரசின்கீழ் தான் உணர்வதாகவும் "யங் இந்தியா'வில் குறிப்பிட்டார். ஆனால், அக்கண்கள் நீண்டநாள் திறந்திருக்கவில்லை. மீண்டும் 1928இல் முதல் உலகப் போரின் பங்கேற்பு குறித்த நிருபர்களின் கேள்விக்கு, ""போருக்கு எதிராக என்னுள் இப்பொழுது இருக்கும் அதே அளவிலான எதிர்ப்புணர்வு அப்பொழுதும் இருந்தது. ஆனால், இந்த உலகத்தில் நாம் விரும்பாத பல விசயங்களை நாம் செய்ய வேண்டியிருக்கிறது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.'' பச்சை அயோக்கியத்தனத்தை இயலாமையாகக் காட்டித் தப்பிக்க முயலும், அறிவு நாணயமற்ற மனிதனால் மட்டுமே இவ்வாறு விளக்கம் அளிக்க முடியும்.

""சுதந்திரம் என ஒன்று வருமானால், அது மாபெரும் பிரிட்டிஷ் அரசுடன் ஒரு கண்ணியமான ஒப்பந்தத்தின் மூலமே வரவேண்டும்'' என 1929இல் காந்தி எழுதினார். காந்திய சுதந்திரப் போராட்டத்தின் சாராம்சத்தை, அதன் திசைவழியை, இந்த ஒற்றை வரியை விட வேறெதுவும் விளக்கிவிட முடியாது. காந்தி முரண்பாடற்று, கடைபிடித்த ஒரே கொள்கை இதுதான். ஏனெனில், சுதந்திரம் மக்களால் சமரசமற்று வென்றெடுக்கப்படுமாயின், அது பிரிட்டிஷ் ஆட்சியை மட்டுமல்ல, முதலாளிகளையும், நிலப்பிரபுக்களையும் மட்டுமல்ல, தன்னையும் சேர்த்தே தூக்கி எறிந்து விடும் என்பதை காந்தி தெளிவாக அறிந்திருந்தார். அதனால்தான், நடைமுறையில் மக்கள் சக்தியின் இயல்பான கோபாவேசத்தின் சிறுபொறி எழும்பினால் கூட, உடனடியாக அப்போராட்டத்தையே கைவிட்டு மக்களை திகைத்துப் பின்வாங்கச் செய்தார்.

இதனை 1921 ஒத்துழையாமை இயக்கம் முதல் 1942 தனிநபர் சத்தியாக்கிரகம் அல்லது வெள்ளையனே வெளியேறு இயக்கம் வரை, நாம் காண முடிகிறது. காந்தி நடத்திய மூன்று இயக்கங்களிலும், போராட்டத்தின் போக்கில் மக்கள் போலீசு மீது எதிர்த்தாக்குதல் தொடுப்பதும், அவர்களைச் சிறை பிடிப்பதும், அரசுச் சொத்துக்களை நாசப்படுத்துவதும் தன்னியல்பாக நிகழ்ந்தது.

1921இல் சௌரி சௌரான் விவசாயிகள் காவல் நிலையத்திற்கு தீ வைத்ததையொட்டி, ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியதாக இருக்கட்டும்; 1930இல் மக்களின் போராட்டத் தீ பற்றி எரிந்த வேளையில் வைஸ்ராய் இர்வினோடு ஒருதலைப்பட்சமான ஒப்பந்தத்திற்கு முன்வந்து, போராட்டத்தை கைவிட்டதாக இருக்கட்டும்; 1942இல் "தான் எந்தப் போராட்டத்தையும் அறிவிக்கவில்லை. மக்களது வன்முறைக்கு தாம் பொறுப்பல்ல' என ஆகஸ்டு போராட்டத்தை கைகழுவியதாக இருக்கட்டும், காந்தியின் வன்முறைக்கெதிரான பரிசுத்த வேடத்திற்குள், போராட்டம் தனது கைகளிலிருந்து நழுவ விடக்கூடாதென்ற இடையறாத அச்சம் ஒளித்து கொண்டிருந்தது.

காந்தியப் போராட்டத்தினுடைய வர்க்கச் சார்பு முதலாளிகளையும், வணிகர்களையும் சார்ந்திருந்தது தற்செயலானதல்ல. அகமதாபாத் ஆலைத் தொழிலாளர் போராட்டத்தின் அனுபவத்திலிருந்தும், பர்தோலி விவசாயிகளின் வரிகொடா இயக்க போராட்டத்திலிருந்தும், தொழிலாளர், விவசாயிகளின் வர்க்க கோரிக்கைகளுக்காக போராடுவதும், அவர்களை விடுதலைப் போராட்டத்தில் களமிறங்கச் செய்வதும் அபாயகரமானது எனத் தான் உணர்வதாக காந்தி வெளியிட்ட அறிக்கைகளை, அன்றே தமது "இளம் அரசியல் தொண்டர்களுக்கு' எனும் கட்டுரையில் மாபெரும் புரட்சியாளர் தோழர் பகத்சிங் சுட்டிக் காட்டினார். சுருக்கமாகச் சொன்னால், காந்தியப் போராட்டத்தின் வர்க்க உள்ளடக்கம்தான் அப்போராட்டத்தின் வடிவத்தையும் வரம்புகளையும் தீர்மானித்தது. அகிம்சை, சத்தியாக்கிரகம் என்பதெல்லாம் வெறுமனே வார்த்தைப் பூச்சுக்கள் மட்டுமே.

1929இல் சுதந்திரம் கிடைக்காமலேயே சுதந்திரக் கொடியேற்றும் கோமாளித்தனத்தை அரங்கேற்றினார், காந்தி. வீரதீரமாக "முழுச் சுதந்திரமே இலட்சியம்' என்று அறிவித்த கையோடு வைஸ்ராய்க்கு எழுதிய நீண்ட கடிதத்தில், ""என்னால் இயன்ற வரை, தங்களுக்கு எத்தகைய அனாவசியமான தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தும் எண்ணம் எனக்கில்லை'' எனக் குழைந்தார். வைஸ்ராய், ஒரு அலட்சியமான பதிலை வீசியெறிந்தார். ""நான் மண்டியிட்டு உணவு கேட்டேன். ஆனால், எனக்கு கல்தான் கிடைத்திருக்கிறது'' எனப் புலம்பினார் காந்தி. வைஸ்ராய்க்கு "தர்மசங்கடத்தை' ஏற்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை காந்திக்கு ஏற்பட்டுவிட்டது. அந்த தர்மசங்கடத்திற்கு பெயர்தான் "தண்டி யாத்திரை'.

ஆனால், ஆங்கில அரசு குயுக்தியாக காந்தியின் சகாக்களை கைது செய்தது; காந்தியை மட்டும் கைது செய்யாமல் விட்டு, அவரைச் சிறுமைப்படுத்தியது. உடனே அகிம்சாமூர்த்தி ஒரு அழகான தந்திரம் செய்தார். உப்புக் கிடங்குகளைச் சோதனையிட்டு, உப்பைப் பறிமுதல் செய்ய முடிவு செய்தார். வேறு வழியின்றி, அவரை அரசு கைது செய்ய நேர்ந்தது. பறிமுதல் செய்வது சத்தியாக்கிரகம் என்றால், வங்கியை கொள்ளையடிப்பது கூட சத்தியாக்கிரகம் தானே? "தனது தலைமையை காப்பாற்றிக் கொள்வது' என்ற ஒரே நோக்கத்துக்காகத்தான், சத்தியாக்கிரக வடிவத்தைக் கைவிட்டு, "பறிமுதல்' என்ற போராட்ட வடிவத்துக்கு மாறினார் காந்தி. அதே நேரத்தில், ""உப்பை மட்டுமல்ல, மொத்த சுதந்திரத்தையுமே பறித்தெடுக்க வேண்டும்'' என்று கூறிய பகத்சிங் முதலான புரட்சியாளர்களை, "தீவிரவாதிகள், வன்முறையாளர்கள்' என்றார் காந்தி.

சட்ட மறுப்பு இயக்கத்தை "இரகசியம்' சூழ்ந்து விட்டதாகக் கூறி, காந்தி அதனைக் கைவிட்டு, இர்வினிடம் பேச்சுவார்த்தை என்ற பெயரில் சரணாகதி அடைந்த பொழுது, ""ஒரு அரசியல் தலைவர் என்ற முறையில் காந்தி தோல்வி அடைந்து விட்டதாக நாங்கள் ஐயமின்றிக் கருதுகிறோம். தனது வாழ்நாள் கொள்கைகளுக்கே முரணின்றி நடக்க இயலாத காந்தி மேலும் தலைவராக நீடிப்பது நியாயமற்றது'' என சுபாஷ் சந்திர போஸும், வித்தல்பாய் படேலும் வியன்னாவிலிருந்து பகிரங்கமாக அறிக்கை விடுத்தனர். இருப்பினும் பார்ப்பனபனியாக் கட்சியான காங்கிரசுக்கு, மக்களை ஏய்க்க காந்தியின் "முகமூடி' தேவைப்பட்டது. ஆங்கில அரசுக்கோ, இத்தகைய விசுவாசமான "எதிரி' கிடைத்ததை விட வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்?

இவ்வாறு முப்பதாண்டுகளுக்கும் மேலாக, ஆளும் வர்க்கத்தின் மனம் நோகாமல், காந்தி நடத்திய "அரசியல் பரிசோதனை'களுக்கு "சோதனைப் பிராணி'களாக இந்திய மக்கள் அடிபட்டார்கள். உதைபட்டார்கள். இரத்தம் சிந்தினார்கள். சொத்துக்களை இழந்தார்கள். சிறையில் வாடினார்கள். ஒவ்வொரு போராட்டத்தின் கழுத்தறுப்பிற்கு பிறகும் விரக்திக்கும், வேதனைக்கும் தள்ளப்பட்டார்கள். இதைவிடக் கொடூரம், ""போராட்டத்தின் தோல்விக்கான காரணம், மக்களின் ஆத்ம சுத்தி போதவில்லை'' என காந்தி சொன்ன குற்றச்சாட்டையும் மௌனமாக ஏற்றுக் கொண்டார்கள்.

1942இல் யுத்தத்தில் ஜெர்மனிஜப்பான் முகாம் வெற்றி பெறலாம் என்ற கணிப்பில், அரை மனதோடு, காந்தி "வெள்ளையனே வெளியேறு' முழக்கத்தை முன்வைத்த மறுகணமே, காங்கிரசின் அனைத்து முக்கியத் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். இம்முறை மக்களின் போர்க்குணம் முழுமையாக வெளிப்பட்டது. தந்திக்கம்பிகள் அறுக்கப்பட்டன. ரயில் தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டன. போலீசும், இராணுவமும் தாக்கப்பட்டனர். ஷோலாப்பூர் போன்ற பல இடங்களில் இராணுவமோ, போலீசோ பல நாள்களாக உள்ளே நுழையக் கூட முடியவில்லை. கொடூர அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

"காங்கிரசு சோசலிஸ்டுகள்'தான் வன்முறைக்கு காரணமென்று, காங்கிரசுத் தலைவர்கள் ஆள்காட்டி வேலையில் ஈடுபட்டார்கள். எதற்கும் உதவாத அகிம்சையை, மக்கள் நடைமுறையில் வீசியெறிந்தனர். சிறையிலிருந்து விடுதலையான காந்தி, போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தார். 1921இல் ஒத்துழையாமை இயக்கத்தின் பொழுது, சாதி, மத வேறுபாடுகளற்று நாடே கிளர்ந்தெழுந்த பொழுது, சுதந்திரம் வாயிற்படி வரை வந்ததென்றால், 1942இல் சுதந்திரம் வீட்டிற்குள்ளேயே கால் வைத்தது. ஆனால் இந்த முறையும் காந்தி அதன் காலை வாரிவிட்டார்.

தலைமையை விஞ்சி எழும்பும் மக்களின் போர்க்குணத்தை அதன் திரண்ட வடிவத்தில் 1942இல் காந்தி கண்டார். அதனால்தான் பின்னர் பிரிவினைக் கோரிக்கை எழுந்த பொழுது, பிரிவினைக் கோரிக்கையை ஆதரிப்பதைத் தவிர காந்திக்கு வேறு வழி இருக்கவில்லை. ஏனெனில் இன்னொரு "மக்கள்திரள் அரசியல் போராட்டம்' என்பது ஒட்டுமொத்த நிறுவனத்தையும் பெயர்த்தெடுக்காமல் அடங்காது என்பதைக் காந்தி புரிந்து கொண்டார். பிரிவினைக் கோரிக்கையை ஏற்பதற்கான காங்கிரசுத் தீர்மானத்தின் முன்மொழிவில், இதனைக் குறிப்பிடவும் செய்தார்.பிரிவினைக் காலத்தில், கலவரம் நடந்த ஒவ்வொரு இடத்திற்கும் காந்தி சென்றார். ஆனால், அவரது சமரச முயற்சிகளும், போதனைகளும் இந்துமகா சபா வெறியர்களிடமும், முசுலீம் லீக் வெறியர்களிடமும் எடுபடவில்லை. காந்தியின் ஆத்மார்த்த சீடர் ஆச்சார்ய கிருபாளனியே, காந்தியினுடைய முயற்சிகளின் பலனைக் கீழ்க்காணும் முறையில் விவரிக்கிறார். ""அவர் நவகாளிக்கு சென்றார். அவரது முயற்சிகளால் நிலைமை சற்றே முன்னேறியது. இப்பொழுது பீகாரில் இருக்கிறார். நிலைமை சற்று மேம்பட்டுள்ளது. ஆனால் பஞ்சாபில் கொழுந்து விட்டெரியும் வன்முறையில் எந்த மாற்றமும் இல்லை. மொத்த இந்தியாவிற்கான இந்துமுசுலீம் ஒற்றுமைப் பிரச்சினையை பீகாரில் தீர்க்கப் போவதாகக் கூறுகிறார். ஒருவேளை அவ்வாறு நடக்கலாம். ஆனால் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவார் என்பது சிக்கலாகவே தோன்றுகிறது. சாத்வீகமாக நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தைப் போல, இலக்கை அடைவதற்கான எத்தகைய தீர்க்கமான வழிமுறைகளும் இதில் இல்லை.'' பின்னர், ""பீகாரில் தங்களது அகிம்சை எவ்வாறு வேலை செய்தது?'' எனக் கேட்டபொழுது ""அது வேலையே செய்யவில்லை. மோசமாகத் தோல்வியடைந்தது'' என்றார் காந்தி.

காந்தியின் ஆசிரமம் தாக்கப்பட்டது. தில்லியில் நடத்திய கடைசி உண்ணாவிரதத்தின் இறுதியில் காந்தி ""நான் எனது ஓட்டாண்டித்தனத்தை ஒத்துக் கொள்கிறேன்'' என தனது இயலாமையை வெளியிட்டார். அகிம்சையின் தந்தை காஷ்மீருக்கு படைகள் அனுப்ப ஆதரவளித்தார். தான் சர்வாதிகாரியாக இருந்தால், மதத்தையும் அரசியலையும் பிரிப்பேன் என்றார். அடுத்த கணமே, ""மதம்தான் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். வார இறுதி விசயமாக அல்லாமல், ஒவ்வொரு நொடியும் மதத்திற்காகச் செலவிடப்பட வேண்டும்'' என்றார். காந்தியால் தனது அரசியல் வாரிசாக அறிவிக்கப்பட்ட நேரு, "காந்தியின் பொருளாதாரக் கொள்கைகள் காலங்கடந்தவை' என அவருக்கே கடிதம் எழுதினார். ""காந்தி தனது இறுதி நாள்களில் இருளில் தடுமாறிக் கொண்டிருந்தார்'' எனத் தெரிவிக்கிறார் கிருபாளனி.

இதே காலகட்டத்தில் இந்திய தேசிய இராணுவம் தொடுத்த தாக்குதல்களும், 1945 கப்பற்படை எழுச்சியும், தொழிலாளர் போராட்டங்களும் காந்தியின் அரசியல் முடிவை முன்னறிவித்தன. இரண்டாம் உலகப் போரில் பலவீனமடைந்த ஆங்கில அரசு, நேரடியாகத் தனது காலனிகளை இனிமேலும் அடக்கியாள முடியாது என்ற நிலையில், இந்தியா, இலங்கை மற்றும் பிற காலனிகளின் தரகு முதலாளிகளுக்கு ஆட்சிப் பொறுப்பைக் கைமாற்றிக் கொடுக்க முன்வந்தது.

அரசியல் அரங்கத்தால் புறந்தள்ளப்பட்ட காந்தியின் பிம்பம், இன்றளவும் பாதுகாக்கப்படுகிறதென்றால், அதற்கு கோட்சேயின் நடவடிக்கைதான் உதவி செய்தது என்று சொல்ல வேண்டும். காந்தியம் வெளுத்து, அதன் பூச்சுக்கள் உதிர்ந்த நிலையில், காந்தி ஒருவேளை தொடர்ந்து வாழ்ந்திருப்பாரேயானால், காந்தியம் தவிர்க்கவியலாமல் செத்துப் போயிருக்கும். கத்தியின்றி, இரத்தமின்றி, சுதந்திரத்தின் கழுத்தறத்ததுதான், "காந்தி' எனும் ஊதிப் பெருக்கப்படும் "சோளக்காட்டுப் பொம்மை'யின் சுருக்கமான அரசியல் வரலாறு.

""என்னதான் இருந்தாலும், காந்தியிடமிருந்து பின்பற்றுவதற்கு எதுவுமே இல்லையா?'' என அரசியல் பொழுதுபோக்காளர்கள் கேட்கக் கூடும். காந்தியிடமிருந்து நாம் பின்பற்ற எதுவுமில்லை. ஆனால், "வாடிக்கையாளரே நமது எசமானர்' என்ற அவரது பொன்மொழியை மட்டும், கட்சிப் பாகுபாடின்றி சகல இந்திய ஓட்டுச் சீட்டு அரசியல்வாதிகளும் இம்மி பிசகாமல் பின்பற்றுகிறார்கள். அவர்கள் மக்களைத் தமது எசமானர்களாகக் கருதுவதில்லை. பன்னாட்டு முதலாளிகள் என்ற தமது வாடிக்கையாளர்களைத்தான் எசமானர்களாகக் கருதுகிறார்கள். இந்த விசயத்தில் குருவை மிஞ்சிய சீடர்களாகவும் நடந்து கொள்கிறார்கள். அந்த வகையில் காந்தியம் இன்னமும் உயிரோடிருக்கிறது என்பது உண்மைதான்.

கட்டுரையாசிரியர்: வாணன்.
புதிய கலாச்சாரம் ஜனவரி’2008 இதழிலிருந்து இங்கு பதியப்படுகிறது.

நன்றி: தமிழரங்கம் இணையதளம்

Wednesday, January 28, 2009

’ஈழ மக்களின் படுகொலைகளுக்கு ‘ஆருடம்’ சொல்வதில் யாருக்கு முதலிடம்? தமிழ் தேசிய வாதிகளுக்கா! இந்திய தேசியவாதிகளுக்கா!’ - என்கிற குழாயடி சண்டை...


(மேலே ஈழ மக்களின் தாலியறுப்பதைப் பற்றி ஆலோசித்துக் கொண்டிருக்கும் பாசிஸ்டுகள் மன்மோகனும் ராஜபக்சேவும்)


தோழர்களே!

ஈழப் பிரச்சினையில் சி.பி.எம். கட்சியின் நிலைப்பாடு சரியா? தவறா? என்பதற்கான கருத்துக் கணிப்பு பெட்டகத்தை கீற்று இணைய தளம் வைத்துள்ளது. அதில் வாக்களிப்பவர்கள் தஙகள் கருத்தைப் பதியலாம் என்றிருந்ததனால் எனது கருத்தையும் அதில் பதிவிட்டேன். அதனை இங்கே பதிகிறேன். தோழர்களும் நண்பர்களும் தமது கருத்துக்களைப் பதிய கேட்டுக்கொள்கிறேன்.

********************************************************************

"தனி ஈழம் சாத்தியமல்ல, பேச்சுவார்த்தையின் மூலமாக சுமூகமாக முடிவெடுத்து தனித் தனி மாகானங்களாக இயங்குவதே இலங்கைக்கு நல்லது." என்றும் "இலங்கை என்கிற தேசத்தைத் துண்டாட நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை. இந்தியா என்கிற தேசத்தை நாம் எப்படி பிரிவினைவாதிகளிடமிருந்து காப்பாற்றப் பாடுபடுகிறோமோ அதே அடிப்படைதான் எமது இலங்கை குறித்தான கண்ணோட்டமும்" என்பது சி.பி.எம். கட்சியின் நிலைப்பாடு.

ஈழத்தில் மட்டுமல்ல, உலகின் எந்த தேசிய இனப் பிரச்சினையானாலும் அவர்களின் நிலைப்பாடு என்பது இதுதான். காஷ்மீரிலும் அதே நிலைதான். சிபிஎம் கட்சியினரிடமிருந்து ஒரேயொரு உதவியை நாடுகின்றேன்.

இதுபோன்ற தேசிய இனப்பிரச்சினையில் உங்கள் கட்சியின் 'நிலைப்பாட்டிற்கும்' காங்கிரசு, பாஜக உள்ளிட்ட பிற ஓட்டுக் கட்சிகளின் நிலைப்பாட்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதைக் கொஞ்சம், தயவு செய்து அறிவித்துவிடுங்கள். உங்களுக்கு புன்னியமாப் போகும்.

இந்த கேலிக்கூத்து ஒருபுறமிருக்க, ஈழ மக்களின் (பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய) சுயநிர்ணய உரிமைக்குக் குரல் கொடுக்க வேண்டுமென்றால், நான் கட்டாயம் விடுதலைப் புலிகளையும் ஆதரித்தே தீரவேண்டும். விடுதலைப் புலிகளை அரசியல் ரீதியில் எதிர்த்தாலோ அல்லது விமர்சித்தாலோ ஈழ மக்களுக்கு எதிராகப் பேசுவதாக ஒரு பொதுக்கருத்தை இங்கிருக்கக் கூடிய தமிழ் தேசியவாதிகளும், ராமதாசு, திருமா போன்ற 'தொப்புள் கொடி' உறவினர்கள் உருவாக்கி வைத்திருக்கின்றனர்.

தமது அக்கம் பக்கத்தில் வசிக்கின்ற அல்லது தமது கட்சியில் உறுப்பினராக இருக்கின்ற அப்பாவிகளுடன் இவர்களது தொப்புள் கொடி உறவு எப்படியிருக்கிறது? அதைத்தான் முருகேசன் - கண்ணகி படுகொலைச் சம்பவத்திலிருந்து இப்போது நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி சம்பவம் வரை அண்ண திருமாவின் தொப்புள் கொடி பாசத்தைப் பார்த்தோமே.

தேவர் குருபூசையில் திருமாவின் தொப்புள் கொடி உறவு அறுந்து சிரித்தை அனைவரும் அறிவர். போகட்டும். டாக்டர் அய்யாவைப் பற்றி எதுவும் தனியாகக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. ஈழ மக்களின் ஈரக் குலையை அறுப்பதற்கு ஏற்பாடு செய்து தரும் மன்மோகன் அரசாங்கத்தில் அங்கம் வகித்துக் கொண்டு தமது 'தொப்புள் கொடி' உறவைப் பராமரித்துவருகிற பித்தலாட்ட நாயகரல்லவா நம்ம டாக்டர் அய்யா.

எனவே, இந்திய ஓட்டுப் பொறுக்கிகள்தான் ஈழ மக்களின் படுகொலைகளுக்கு காரணகர்த்தாவாக இருந்துகொண்டு சிங்கள பேரினவாத பாசிச வெறியன் ராஜபக்சேவுக்கு மறைமுகமாகவும் நேர்முகமாகவும் சேவையாற்றி வருகிறார்கள். இந்திய ஆளும் வர்க்கத்தை அம்பலப்படுத்தி மக்களைத் திரட்டி இயங்குவது. அதன் மூலம் இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து ஈழப் போரில் அதன் தலையீட்டை நிறுத்துவது போன்ற நடவடிக்கைகள்தான் இப்போது முக்கியத் தேவையாக இருக்கிறது.

நாம் இதைச் சாதித்துவிட்டாலே போதும். தங்களுக்கான அரசியல் தீர்வை ஈழ மக்கள் தங்கள் சொந்த கைகளால் போராடிப் பெற்றுக் கொள்வார்கள். ஈழ மக்களுக்கு அரசியல் - பேச்சுவார்த்தை பொருத்தமானதா, தனி ஈழம் பொருத்தமானதா என்பதை நாம் இங்கிருந்து ஆருடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அதனை அவர்கள் முடிவு செய்துகொள்வார்கள்.

சி.பி.எம். மட்டுமல்ல இதில் அனைத்து ஓட்டுப் பொறுக்கிகளும் இனைத்தே விமர்சிக்கப் படவேண்டியவர்கள் என்பது எனது தாழ்மையான - அழுத்தமான கருத்தாக இருக்கிறது.

தோழமையுடன்,
ஏகலைவன்.
--

Tuesday, January 27, 2009

புரட்சிகர அமைப்புகளின் மாபெரும் ஆர்ப்பாட்டம்!ஈழத்தமிழ் மக்கள் மீதான இனவெறிப் போரில்

சிங்களப் பாசிச அரசுடன் கைகோர்த்து நிற்கும்

இந்திய அரசைக் கண்டித்து சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் !!


ஜனவரி 26 இந்தியக் குடிரயரசு தினத்தில் அதிகார வர்க்க அமைப்புக்கள் குடியரசு மகாமித்யத்தை ஓதிக்கொண்டிருப்பது வழக்கம். இந்நாளில் ஈழத்திற்காக இந்திய அரசு செய்யும் துரோகத்தை அம்பலப்படுத்த எமது புரட்சிகர அமைப்புக்கள் முடிவு செய்தன. நேற்று மாநாடு முடிந்த கையோடு வெளியூரிலிருந்து மற்றும் உள்ளூர் தோழர்கள் ஆங்காங்கே தங்கி இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தயாராக இருந்தனர். இன்று காலையில் சென்னை நகர் முழுவதும் ஆர்ப்பாட்டத்தை விளக்கி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகையின் முன் காலை பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் என்பதை சுவரொட்டிகள் விளம்பரம் செய்தன. இந்த ஆர்ப்பாட்டம் போலீசிடம் அனுமதி வாங்கி நடத்த முடியாது என்பதால் ‘சட்ட விரோதமாகவே ‘ நடத்தத் திட்டமிடப்பட்டது.


மேலும் குடியரசு தினத்தில் இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என்பதை போலீசும் அரசும் மிகக் கடுமையாகவே எடுத்துக் கொள்ளும் என்பதால் கைது இருக்கலாம் என்பதை எதிர்பார்த்தும் தயாரிப்பு செய்யப்பட்டது. திட்டமிட்டபடி இன்று காலை பத்து மணிக்கு ஆயிரக்கணக்கான தோழர்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணிநேரம் எழுச்சியுடன் நடந்த்து. தலைவர்கள் இந்திய அரசின் துரோகத்தைக் கண்டித்து எழுச்சியுரை ஆற்றினர். சுவரொட்டியைக் கண்டு போலிசும் சுமார் பத்து வண்டிகளைக் கொண்டு வந்து தயாராக இருந்த்து. இருப்பினும் போலீசின் கெடுபிடிகளைத் தாண்டி ஆர்ப்பாட்டம் வீச்சுடன் நடந்த்து.


பின்னர் தோழர்கள் போலீசால் கைது செய்யப்பட்டனர். அருகிலிருக்கும் மைதானத்திற்கு வண்டிகளில் கொண்டு செல்லப்பட்டனர். தற்போது வந்துள்ள கடைசிச் செய்தியின்படி தோழர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். குடியரசு நாளில் இந்திய அரசு ஈழமக்களுக்கு செய்யும் துரோகம் மக்களிடையே அம்பலப்படுத்தும் பணி வெற்றிகரமாக நடைபெற்றது. இதன் புகைப்படங்களை சில மணிநேரத்தில் வலையேற்றம் செய்கிறோம். இந்த எழுச்சியான ஆர்ப்பாட்டத்தின் வீடியோக் காட்சியை நாளை வெளியிடுகிறோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் முழங்கப்பட்ட முழக்கங்களை கீழே இணைக்கப்பட்டுள்ளன.


ஈழத்தமிழ் மக்கள் மீதான
சிங்கள இனவெறி அரசின்
இன ஒடுக்குமுறைப் போரை
தடுத்து நிறுத்துவோம்!
ம.க.இ.க - வி.வி.மு - பு.மா.இ.மு - பு.ஜ.தொ.மு
……………………………………………………………………………..
ஈழத் தமிழ் மக்களின்
பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய
சுய நிர்ணய உரிமைக்குக்
குரல் கொடுப்போம்!
ம.க.இ.க - வி.வி.மு - பு.மா.இ.மு - பு.ஜ.தொ.மு

……………………………………………………………………………..

டாடா அம்பானி
தரகு முதலாளிகள் நலனுக்காக
சிங்கள இனவெறிப் போருக்குத்
துணை நிற்கும் இந்திய அரசின்
பிராந்திய மேலாதிக்கத்தை
முறியடிப்போம்!
ம.க.இ.க - வி.வி.மு - பு.மா.இ.மு - பு.ஜ.தொ.மு

……………………………………………………………………………..

இந்திய அரசே,
சிங்கள இராணுவத்துக்கு
ஆயுதம், நிதி, பயிற்சி
அளிப்பதை நிறுத்து!
இலங்கை அரசுடன்
தூதரக உறவுகளை முறி!
ம.க.இ.க - வி.வி.மு - பு.மா.இ.மு - பு.ஜ.தொ.மு

………………………………………………………………………………..

உழைக்கும் மக்களே,
சிங்கள இனவெறி அரசின்
ஏஜெண்டுகளாகச் செயல்படும்
ஜெ., சு.சாமி, சோ, இந்து ராம்
பார்ப்பனக் கும்பலுக்கும்
காங்கிரசுக்கும்
தக்க பாடம் புகட்டுவோம்!
ம.க.இ.க - வி.வி.மு - பு.மா.இ.மு - பு.ஜ.தொ.மு
…………………………………………………………………………………..

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
விவசாயிகள் விடுதலை முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி


தொடர்புடைய பதிவு :
ஈழம்: தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் போராட்டம் !

நன்றி: தோழர் மதிமாறன் (படங்கள்), வினவு வலைதளம் (செய்தி)