Sunday, March 30, 2008

காற்று அதனை விடுவதில்லை...!

காற்று வீசுகிறது...

கொடி அசைகிறது...

நீர்த்திவலைகள் தெறிக்க

அடித்து வருகிறது

மடை திறந்த

வெள்ளம்.

முரசங்கள் அதிர்கின்றன.

பறை முழங்குகிறது.

மகிழ்ச்சியில்

கசிகிறது சினம்.

சினத்தில்

கலக்கிறது மகிழ்ச்சி.

கல்லறைச் சுவரில்

மோதி எதிரொலிக்கிறது

அடங்க மறுக்கும் குரல்.

அதனடியில்

ஆயிரமாண்டாய்

சலனமற்று வெந்த உடல்

சடசடக்கிறது.

பரவும் அனலில்

சுவரின்

காரை பெயர்கிறது.

சிதறிக் கிடக்கிற

திரிசூலத் துண்டுகள்

மெல்லப் பொசுங்குகின்றன..

எரிகின்ற உடலின்

இதழ்க் கோடியில்

விரிகிறதொரு

புன்னகை.

மீளும் சுவாசத்தில்

அதிர்கிறது

நிலம்.

காற்று வீசுகிறது...

கொடி அசைகிறது...

கரம் இறுகுகிறது...

பேனா ஈட்டியாகிறது...

(29-03-08 அன்று சிதம்பரத்தில் நடைபெற்ற மனித உரிமைப் பாதுகாப்பு மையம், மக்கள் கலை இலக்கியக் கழகம் ஆகிய புரட்சிகர அமைப்புகள் நடத்திய 'தில்லைச் சமரில் வென்றது தமிழ்' பொதுக் கூட்டத்தில், காற்றின் வழியே கடந்து சென்ற சொற்கள்...)

நன்றி தோழர் அரசுபால்ராஜ்(http://arasubalraj.blogspot.com/)

திருக்கடையூர் புராணம் அல்லது 60 வது கண்டம்.

சித்தயோகம் அமிர்தயோகம் கூடிவர
ஜெட் விமானம் காத்திருக்க‌
வந்தேறியது மனிதக்கோளாறு.
பார்ப்பனக் கொழுப்பைச் சீரணிக்க முடியாமல் -
பாவம்
விமானத்திற்கு இயந்திரக் கோளாறு!


நல்லவேளை...
நடுவானில் எமனோடு போயிருக்க
வெண்டியவர்களை
மீட்டுக் காத்தருளி
விமானிக்கு ஆயுள் விருத்தியளித்த‌து
ஆயில் எஞ்ஜின்.
ஓ.பன்னீர்செல்வம் போல் உணர்ச்சியற்று
எந்திரமாய் இயங்கியதால்
அம்பாளின் சாபத்தீக்கு ஆளாகி
எரியாமல் தப்பித்தது ஏர் சர்வீஸ் விமானம்.


தமிழகத்தின் 'சகுனத்தடை' தரையிரக்கப்பட்டது
பத்திரமாய்.
வளிமண்டலத்திலேறிய தூசு துடைக்கப்பட்டதால் -
வழிமாறீ சாலை வழியே ஓடியது சாக்கடை.


ஒரே பரபரப்பு!
இரண்டு லோடு விசேடப் பொருட்கள்
ஒரு லோடு போயஸ் குண்டுடன்.....
திண்டிவனம் வழியே தீவிரவாதிகளின் ஊடுருவல்!
தமிழகத்தைக் கலக்கும் பார்ப்பனத் தீவிரவாதி
திருக்கடையூர் வருகை!


"பாதம் பணிந்தேன்....போதை தெளிந்தேன்...
பாவி, உனக்காகவே பட்டை அடித்தேன்....
கோயில் உனது! குடி உனது - என் ஆவியும் உனது!
ஆட்கொள்ள மாட்டாயோ!" - தருமை ஆதீனம்
உடுக்கெடுக்க.... பயந்து போன பிச்சைக்காரர்கள்
ஊரைவிட்டே ஓட்டம்!


பலத்த பாதுகாப்பு.......
துப்பாக்கிகளுடன் ஆயுதக் குழுக்கள் -
தர்ப்பைப் புல்லுடன் ஆரியக் குருக்கள்!
சேரப்போகும் மனித உணர்ச்சியற்ற தோள்கள் கண்டு
நடுங்கின பூக்கள்!
வேதபாஷையின் விளங்காத கலவரத்தால்
ஓடி ஒடுங்கின வவ்வால்கள்!
யாகக் குண்டம் புகை கிளப்ப.....
புற‌ப்பட்டது பூதம்.


கோ பூஜைக்கு வந்த ப‌சு குலை நடுங்கியது.
கறந்து விடுமோ கொள்ளைக்கரம் என்றஞ்சி
காம்புகள் ஒளித்து, மடிதனை மறைத்த‌து.


பார்ப்பன வெறி முகம்
பார்த்துத் தொலைத்தால்
மதம் பிடித்துவிடுமோ என்றஞ்சி
கலங்கி நின்றது கஜ பூஜைக்கு வந்த யானை!


பச்சைப் பட்டும் ஒட்டியாணமும் பூட்டி
இச்சை கொண்ட தேவியை
இழுத்துச் சென்று
இன்னுமொரு தோழியாக‌
மாலை மாற்றிவிட்டால்.....
என் செய்வேன் எனப் படாத பாடுபட்டு
அபிராமியை மீட்டார்
அமிர்தகடேஸ்வரர்.


அடித்த கொள்ளைக்கும்......
குடித்த இரத்தத்திற்கும்....
அறுபது வயசு பத்தாதாம்,
"ஆயுளைத்தா" என
ஆரிய பூதம் வருகிறது.


செத்துப் பிழைக்கும் தமிழகமே
அடுத்த குறி உனக்குத்தான்!துரை. சண்முகம்.
புதிய கலாச்சாரம் மார்ச்'08 இதழில் வெளியானது.

Thursday, March 27, 2008

தில்லைத் தீண்டாமைப் போராட்ட‌மும், சி.பி.எம். மின் புர‌ட்டுக்க‌ளும்.....

அன்பார்ந்த தோழ‌ர்க‌ளே!


சென்ற 22/03/2008 சனிக்கிழமையன்று நடப்பதாக இருந்த, 'சிதம்பரத்தில் நடந்துவரும் தீண்டாமைக்கெதிரான போராட்டங்களில் பங்கெடுத்து போலீசின் கடுமையான தாக்குதலுக்குள்ளான, மற்றும் சிறை சென்ற போராளிகளுக்கு பாராட்டுவிழா'ப் பொதுக்கூட்டம், தொடர்ச்சியான மழையால் வரும் 29/03/2008க்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.


இந்தப் பொதுக்கூட்டம் இதுவரை நடந்த இடைவிடாத போராட்டதை மக்கள்முன் தெளிவாக எடுத்துவைப்பதற்காக‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீட்சிதபார்ப்பன‌ர்கள் தமிழுக்கு எதிரியே அல்ல என்றும் கடவுள் நம்பிக்கையே இல்லாத நாத்திககம்யூனிஸ்டுகள் தான் (கம்யூனிஸ்டு என்றாலே நாத்திகத்தையும் உள்ள‌ட‌க்கிய‌துதானே, இதுல என்ன 'நாத்திககம்யூனிஸ்டு'ன்னு! என்று யாரும் குழம்பவேண்டாம், இது போலிகளை மனதில் வைத்து ஏற்படுத்தப்பட்ட சொல்லாடல்) இந்த விஷயத்தை பெரிதுபடுத்தி 'ஏதோ பிராமணர்கள் எல்லோரும் தமிழுக்கு எதிரிகள்' என்று தவறாக சித்தரிக்க முயலுகிறார்கள். இப்படிக் கூப்பாடு போடுகின்ற பார்ப்பனக்கும்பலின் முகத்திரையை கிழிக்கும் வகையிலும் இந்தக் கூட்டம் அமையப்போகிறது. எனவே, கம்யூனிச/நாத்திக ஆதரவாளர்களைவிட அக்கிரகாரத்து அம்பிகளையும், அம்பிகளின் எடுப்பு,தொடுப்புகளையும், இந்தக்கூட்டத்தில் பங்குபெற அழைக்கிறேன்.


இந்தப் போராட்டத்தை எமது தோழ்ர்கள் அரும்பாடுபட்டு வெற்றியின் முகட்டிற்கு தரதரவென இழுத்துவந்திருக்கிறார்கள். மனித உரிமை பாதுகாப்பு மையத்தை (HRPC) சார்ந்த வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களிலும், மக்கள் கலை இலக்கியக்கழகம், விவசாயிகள் விடுதலை முன்னனி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னனி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னனி போன்ற அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் சிதம்பரம் வீதிகளிலும் தொடர்ச்சியாக போராடியிருக்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசானை வந்தபிறகும் நடைபெற்ற போராட்டங்களில், சிவனடியாரைத் தவிர கைது செய்யப்பட்ட அனைவருமே மேற்கண்ட அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள்தான்.


எம‌து இய‌க்க‌ங்க‌ளின் பெருமை பேசுவ‌தற்காக‌ நான் இதையெல்லாம் இங்கே ப‌ட்டிய‌லிட‌வில்லை. மாறாக‌, இதுநாள்வ‌ரை தீட்சித‌பார்ப்ப‌ன‌ர்க‌ளின் செருப்புக‌ளுக்கு காவ‌ல்காத்துக்கிட‌ந்த‌ மான‌ங்கெட்ட‌ கும்ப‌ல் ஒன்று இப்போது த‌மிழ‌க‌மெங்கும் சென்று இத‌னைச்சாதித்த‌து நாங்க‌ள்தான் என்று ச‌ந்த‌டிச்சாக்கில் சிறிதும் கூச்ச‌மின்றி பித‌ற்றிவ‌ருகிற‌து. இது மேற்க‌ண்ட‌ பார்ப்ப‌ன‌க்கும்ப‌லின் ஓல‌த்தைவிட‌ சிறிது சுருதி குறைந்து இர‌க‌சிய‌மாக‌ (திருட்டுத்த‌ன‌மாக‌ ந‌ம் காதுக‌ளிலிருந்து த‌ப்பிக்கும் நோக்கில்) ஒலித்தாலும், அது பார்ப‌ன‌ஓல‌த்தைவிஞ்சும்‌ கேவ‌லமான‌தொரு தோற்ற‌த்தைத் த‌ழுவி அம்ம‌ன‌மாக‌ நிற்பது அம்பலமாகிற‌து.


சித‌ம்ப‌ர‌ம் ந‌க‌ர‌த்தில் தி.மு.க‌., அ.தி.மு.க‌.வுக்கு இணையான‌ செல்வாக்குட‌ன் (பொறுக்கித்திண்ப‌தில்) திக‌ழும் போலிக‌ம்யூனிஸ்டு என்று ம‌க்க‌ளால் அழைக்க‌ப்ப‌டுகிற‌ சி.பி.எம். க‌ட்சிதான் அது. கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட சிதம்பரம் தொகுதி சி.பி.எம். கட்சிக்கே ஒதுக்கப்பட்கது. தி.மு.க. கூட்டனி வேட்பாளராக பாலகிருஷ்ணன் என்பவர் நிறுத்தப்பட்டு மண்ணைக்கவ்வினார் என்பது வேறுவிஷயம். இப்போது விஷயத்திற்கு வருவோம்.


ம‌க்க‌ள் பிர‌ச்சினையைப் பேசுவ‌தைவிட‌ க‌ட்ட‌ப்ப‌ஞ்சாய‌த்து பேசி காசுபார்ப்ப‌த‌ற்காக‌வே க‌ட்சியின் முக்கிய‌ பொறுப்பிலிருக்கும் பொறுக்கிக‌ள் நிர‌ம்பிய‌ சித‌ம்ப‌ர‌ம் ந‌க‌ர‌ சி.பி.எம். க‌ட்சியின் 'முக்கிய‌' பிர‌முக‌ர்தான் சித‌ம்ப‌ர‌ம் ந‌க‌ர‌செய‌லாள‌ராக‌ இருக்கும் 'மூசா' என்ப‌வ‌ர்.தீட்சித‌பார்ப்ப‌ன‌ர்கள் கோவிலுக்குள்ளேயே செய்த‌ கொலைகளுக்காக‌ போலீசுக்கு முதலில் புகார் கொடுத்த‌‌வ‌ரும் இவ‌ரே. இவ்வ‌ள‌வு போர்க்குண‌ம் நிர‌ம்பிய‌(!) மாபெரும் த‌லைவ‌ர்(!!) பிற‌கு இந்த புகார் குறித்து என்ன‌ செய்தார் என்று தெரிந்துகொள்ள‌ அவ‌லாயிருக்கிறீர்க‌ள் தானே? இந்த‌ செய்தியைக் கேள்விப‌ட்ட‌தும், முஸ்லீம் குடும்ப‌த்தைச் சார்ந்த‌ 'மூசா'வை கோயிலுக்குள் அழைத்துச் சென்று ப‌ட்டுத்துண்டு போர்த்தி மாலைபோட்டு, கொஞ்ச‌ம் விபூதியை அவ‌ர் வாயில் (அதான் நெற்றியில் பூச‌மாட்டாரே, க‌ம்யூனிஸ்ட்ல்ல!!) திணித்து அனுப்பிவிட்ட‌ன‌ர் தீட்சித‌ர்க‌ள். இன்று வ‌ரை அதை விழுங்க‌வும் முடியாம‌ல் துப்ப‌வும் முடியாம‌ல் த‌ன்து பேச்சையே நிறுத்திவிட்டார். இதுதான் இவ‌ர்க‌ள் ப‌ங்குபெற்ற‌ சித‌ம்ப‌ர‌ம் போராட்ட‌த்தின் வீர‌காதை!.


இத‌ற்கிடையில் இந்த‌ப் போலிக்க‌ம்யூனிஸ்ட் க‌ட்சிக்குட்ப‌ட்ட‌ அல்ல‌க்கை அமைப்புகளான த‌மிழ்நாடு முற்போக்கு(!) எழுத்தாள‌ர் ச‌ங்க‌ம், இந்திய‌ ஜ‌ன‌நாய‌க‌ வாலிப‌ர் ச‌ங்க‌ம் போன்ற‌ அமைப்புக‌ள் சித‌ம்ப‌ர‌ம் போராட்டத்தை ந‌ட‌த்திய‌து நாங்க‌ள் தான் என்று கூவிவ‌ருகின்ற‌ன‌ர்.


ஆறுமுக‌சாமிக்கும் த‌மிழுக்கும் எதிரான‌ நீதிம‌ன்ற‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ளை ம‌ற்ற‌ ப‌த்திரிக்கைக‌ள் வெளியிட்ட‌ அள‌விற்குக்கூட‌ அல்லாம‌ல் துண்டுசெய்தியாக‌க் கூட‌ வெளியிடாத‌ இவ‌ர்க‌ள‌து ப‌த்திரிக்கை, அர‌சாணை வ‌ந்த‌பிற‌கு ஆறுமுக‌சாமி சென்று பாடிய‌பிறகு, "இந்த‌ப்போராட்ட‌த்தின் வெற்றிக்குக் கார‌ண‌மான‌ இ.ஜ‌.வா.ச‌ங்க‌த்திற்கு பாராட்டுக்க‌ளை"த் தெரிவித்து ஈன‌த்த‌ன‌மாக‌ செய்தி வெளியிட்ட‌து.வேறுவ‌ழியில்லாமல், எம‌து அமைப்பின் பெய‌ர்க‌ளைக்கூட‌ வெளியிட்டுவிடாம‌ல் மிகுந்த‌ க‌வ‌ன‌த்தோடு எம்மையும் பாராட்டிய‌து.


இத‌ன் தொட‌ர்ச்சியாக‌ சென்ற‌ 21/03/2008 அன்று திருச்சியில் த‌.மு.எ.ச‌.சார்பில்,'சித‌ம்ப‌ர‌ம் கோயில் - சில‌ உண்மைக‌ள்' என்று நூல் வெளியிட்டு அத‌ன்மூல‌ம் ஆறுமுக‌சாமியின் வெற்றிக்கு வ‌ழிவ‌குத்த‌தாகச்(?!) சொல்லி த‌ம்முடைய‌ க‌ட்சியைச் சார்ந்த‌ ச. செந்தில்நாத‌ன் என்ப‌வ‌ரை அல்ப‌த்த‌ன‌மாக‌ப் பாராட்டிக்கொண்ட‌து.ஆறுமுக‌சாமிக்கு ஆத‌ர‌வாக‌ ஒரு பிட் நோட்டீசைக்கூட‌ போட‌முடியாத‌ இந்த‌ மான‌ங்கெட்ட‌ கூட்ட‌ம் சிறிதும் வெட்க‌மின்றி இந்நிகழ்ச்சிக்காக‌ திருச்சி ந‌க‌ர‌ சுவ‌ர்க‌ளை த‌ன‌து போஸ்ட‌ர்க‌ளால் நிர‌ப்பிய‌து.


இப்போது ப‌திவ‌ர் ப‌க‌த்(bagathh.blogspot.com) அவ‌ர்க‌ளுடைய‌ வ‌லைத‌ள‌த்தில் இந்த‌க்கூட்ட‌த்தைச் சார்ந்த‌‌ ர‌மேஷ் என்ற‌ அல்பை கீழ்க‌ண்ட‌வாறு சொல்லியுள்ள‌து கூடுத‌லாக இங்கே உங்களது பார்வைக்கு வைக்க‌ப்ப‌டுகிற‌து.


///// NATPUTAN RAMESH said... "புத்தக புரட்சியாளர்களிண் கூடாரம்" த நா.மா.லெ.க யோக்கியர்களே! சிதம்பரம் கோயில் பிரச்சினையில் 2000 பேருடன் இந்திய ஜனனாயக வாலிபர் சங்க தோழர்கள் போராடியதை, 500 பேர் கைது செய்யப்பட்டதை மூடி மறைப்பது தான் உங்கள் யோகிதையா. ஒரு போராட்டத்தில் யார் இணைந்தாலும் மறைப்பதுதான் உங்கள் கேவலமாண புத்தி என்பதை மீண்டும் மீண்டும் நிருபணம் செய்கின்றீர்.
March 22, 2008 2:35 AM //////


க‌ள‌த்தில் போராடிய‌வ‌ர்க‌ள் யார் என்ப‌து சித‌ம்ப‌ர‌ம் ம‌க்க‌ளுக்குத் தெரியும். ம‌றைக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர் யார் என்பதும் அவர்களுக்குத் தெரியும். ஆனால் இது அந்த‌ ம‌டைய‌னுக்குத் தெரியாது. இந்த‌ வெற்றியின் இர‌க‌சிய‌ம் அவ‌ன் சார்ந்திருக்கிற‌ க‌ட்சிக்கும் தெரியாது.

வெறும் பிழைப்புவாத‌ அர‌சிய‌ல் ந‌ட‌த்தி, சாதார‌ண‌ உழைக்கும் ம‌க்க‌ளிட‌ம் பொறுக்கித்தின்ப‌த‌ற்காக‌ மாநாடு, பேர‌ணி என்று அடையாள‌ நிக‌ழ்ச்சிக‌ளை ம‌ட்டும் ந‌ட‌த்தும் இந்த‌க் கோழைக‌ள் கொல்லைபுற‌மாக‌ வ‌ந்து, எதிர‌னியின் ப‌க்க‌ம் நின்றுகொண்டு லாவ‌னிபாடுவ‌து இவ‌ர்க‌ளுடைய‌ போலித்த‌ன‌த்தை இன்னும் கூடுத‌லாக‌த்தான் காட்டுகிற‌து.


இது உங்க‌ளுக்கு விய‌ப்பையும் கேலியையும் உண்டாக்க‌லாம். இது உங்க‌ளைப் பொறுத்த‌வ‌ரை ஒரு செய்தி. ஆனால் இது தான் அவ‌ர்க‌ளின் வ‌ர‌லாறு. பா.ஜ‌.க‌.கும்ப‌லின் காவித்துணி அத‌ன் கொலைமுக‌த்தை மூடியிருப்ப‌தைப்போல், சி.பி.எம். க‌ட்சியின் சிவ‌ப்புத்துணி இத்தகைய‌ கேவலங்களை முற்றிலும் மூடியிருக்கிற‌து. இந்த‌ போலி முக‌த்திரை தொட‌ர்ச்சியான எம‌து க‌ள‌ப்போராட்ட‌ங்களில் கிழியும் அல்ல‌து கிழிக்க‌ப்ப‌டும்.

ஆயிர‌மாண்டுக‌ளுக்கும் மேலாக‌ தீண்டாமையை இந்த‌ ம‌ண்ணில் நிலைநாட்டி வ‌ரும் பார்ப்ப‌னிய‌ம், இந்த‌ சிறு ச‌றுக்க‌லைக்கூட‌ பொறுக்க‌முடியாம‌ல் அர‌ற்றுகிற‌து. இத்த‌னைக்கால‌ம் அத‌ன் கால‌டியில் ப‌ம்மிக்கிட‌ந்த‌ இந்த‌ப் போலிக்க‌ய‌வ‌ர் கூட்ட‌ம் வெற்றுக் கூச்சலிடுகிறது. கிண‌று தோண்ட‌ப்போய் பூத‌ம் கிடைத்த‌து. நாம் பூதத்தின் ப‌ல்லைப்பிடுங்கியாகிவிட்ட‌து, பார்ப்ப‌ன‌ பூத‌ம் செய‌லிழ‌ந்துகொண்டிருக்கிற‌து. இப்போது அத‌ன் புழுக்கைக‌ளின் ஓல‌ம் ம‌ட்டும் கேட்கிற‌து வேறுவித‌மாக‌.......


ந‌ன்றி!
தொட‌ர்ந்து பேசுவோம்!


தோழ‌மையுட‌ன்,
ஏக‌லைவ‌ன்.

Thursday, March 20, 2008

சி.பி.எம்.மின் 'கண்ணியத்துக்கு' ஒரு அள‌வே இல்லையா????

சென்ற 19/03/2008 அன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.எல்.ஏ. அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆதவன் தீட்சண்யாவின் 'நான் ஒரு மநு விரோதன்' எனும் நூல் வெளியீட்டுவிழா நடைபெற்றது.


நாம் உள்ளே நுழைந்தபோது தலித் முரசு ஆசிரியர் புனிதப்பாண்டியன் பேசிக்கொண்டிருந்தார். அரங்கில் சி.பி.எம். கட்சியைச் சார்ந்தவர்கள் திரளாகக் கூடியிருந்தார்கள். சி.பி.எம். மீது புனிதபாண்டியன் சில விமர்சனங்களை முன்வைத்தார்.

"நான் எந்த உள்நோக்கத்தோடும் இதனைச் சொல்லவில்லை" என்று அறிவித்துக் கொண்டே முன்வைத்தார்.


சி.பி.எம்.ன் சாதி எதிர்ப்பு போராட்டம் எனும் பித்தலாட்டங்களையும், அதன் பார்ப்பனச் சார்புத் தன்மையையும் விமர்சணமாக எடுத்துவைத்தார். "அம்பேத்கர் இந்து மதத்தை கடுமையாக எதிர்க்கும் பொருட்டே புத்தமதத்தைத் தழுவினார். எனவே சி.பி.எம். தோழர்களும் ஏன் புத்தமதததிற்கு மாறக்கூடாது?" என்றும் கேள்வி எழுப்பினார். சி.பி.எம். கட்சியினர் பார்ப்பனர்களை பெரும்பாலும் பிராமனர்கள் என்றே குறிப்பிடுகிறாகள். பார்பனர் என்றால் ஒரு தீய சொல்லைப் போல கருதுகிறார்கள் என்றும் இப்படிப்பட்ட போக்கை மாற்றிக் கொண்டு பார்ப்பனர்கள் என்று குறிப்பிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


மேற்கூறிய விமர்சண‌ங்களின் தொடர்ச்சியாகவும், சொரனையற்ற போலிகளுக்கு சொரனையை ஏற்படுத்தும் விதமாகவும், அரங்கில் யாருமே சற்றும் எதிர்பார்த்திராத வகையிலும், ஏகதிபத்திய எதிர்ப்பு சிங்கம் தியாகத் தோழர் பகத்சிங்கை மிகவும் இழிவான முறையில் விமர்சித்தார். "சும்மா ரெண்டு குண்ட வீசிட்டா அவன் பெரிய ஆளா?" என்றார்.

ஏகாதிபத்தியத்திற்கெதிராக தனது உயிரை துச்சமாக மதித்து இந்த நாட்டு மக்களுக்க்காக மடிந்த மாவீரன் பகத்சிங்கை கீழ்த்தரமாக இழிவுபடுத்தினார். இருந்தும் போலிகளுக்கு சுரனைவராதது துரதிருஷ்டவசமானது தான்.


ப‌க‌த்சிங்கின் ப‌ல‌வித‌மான‌ போராட்ட‌ங்க‌ளை பெரியார் விய‌ந்து பாராட்டிய‌தோடு அத‌ற்கெதிராக‌, ந‌ய‌வ‌ஞ்ச‌க‌மாக‌, கீழ்த்த‌ர‌மாக‌ அர‌சிய‌ல் ந‌ட‌த்திய‌ காந்தியை த‌ன‌து 'குடிய‌ர‌சு' ப‌த்திரிக்கையில் க‌டுமையாக‌ச் சாடி ப‌ல‌முறை எழுதியிருக்கிறார். ஆனால் சிறிதும் கூசாம‌ல், ஒருகையில் துரோகி காந்தியையும் ம‌றுகையில் தியாகி ப‌க‌த்சிங்கையும் உய‌ர்த்திக்காட்டும் சி.பி.எம்.ன் கேவ‌ல‌த்தைக் க‌ண்டிப்ப‌த‌ற்கு ப‌திலாக‌ ப‌க‌த்சிங்கை இழிவுப‌டுத்துவ‌து உள்நோக்க‌முடைய‌து.

இவர்கள் மட்டுமா? மார்க்சிய அறிஞர்கள் என்று தம்மைத்தாமே அழைத்துக் கொள்ளும் சில பிழைப்புவாதிகளும் இங்கே காந்தியைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு உலாவருகிறார்கள். பிர்லா மாளிகையில் இருந்து கொண்டு இந்திய முதலாளிகளின் கைப்பாவையாக, அரை நிர்வாணமாகத் திரிந்த காந்தியை, சமூக போராட்டத்தில் அம்பேத்கரின் பார்வையோடும், ஏகாதிபத்தியத்திற்கெதிரான போராட்டத்தில் பகத்சிங்கின் பார்வையோடும், அனுகியிருந்தால் அவரின் முழுநிர்வானமும் அம்பலமாகியிருக்கும். தனது விமர்சணப் பார்வையைத் தவிர்த்து, வெறும் விசுவாசப்பார்வை பார்பவர்களுக்கு காந்தியின் சுயரூபம் புரிய வாய்ப்பில்லைதான்.

ஏகாதிப‌த்திய‌ம் வீசும் எலும்புத்துண்டுக‌ளுக்காக‌ நாக்கைத் தொங்க‌விட்டுக்கொண்டு அலைப‌வ‌ர்க‌ளை மேடைக்கு அழைத்தால் இப்ப‌டித்தான் க‌டிப‌ட‌ வேண்டியிருக்கும். ஆனால் அரங்கில் கடிபட்ட சத்தமல்ல, ஒரு முனகல் கூட கேட்கவில்லை. போலிக‌ளுக்கு இதுபோன்ற‌ அனுபவ‌ங்க‌ள் நிறைய‌ இருக்கிற‌து. ஆனால் போலிக‌ளை விம‌ர்சிப்ப‌த‌ன் ஊடாக‌ ம‌க்க‌ளுக்காக‌ ம‌டிந்த‌ தியாகிளையும் இழிவுப‌டுத்துவ‌து தான் க‌டைந்தெடுத்த‌ அயோக்கிய‌த்த‌ன‌மான‌ யுக்தி.

இப்படிப்பட்ட கைக்கூலிகள், ஏகாதிபத்தியத்தை சந்தோஷப்படுத்த இவ்வாறு செயல்படுவது ஒன்றும் ஆச்சர்யமான செயல் அல்ல. ஏகாதிபத்திய எதிர்ப்புப் போரில் தம்மை மாய்த்துக்கொண்ட போராளிகள் மட்டும் தான் இவர்களின் இலக்கு, அவர்களை இப்படி இழிவுபடுத்துவதற்காகத்தானே ஏகாதிபத்தியம் இவர்களுக்கு பிச்சைபோடுகிறது.


த‌லித் ம‌க்க‌ள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராக‌ குர‌ல் கொடுப்ப‌தாக‌வும், எழுதுவ‌தாக‌வும், ப‌த்திரிக்கை ந‌ட‌த்துவ‌தாக‌வும் கூறும் புனித‌ப்பாண்டிய‌னின் 'த‌லித் முர‌சு'க்கு எங்கேயிருந்து ப‌ண‌ம் வ‌ருகிற‌து?

உல‌க‌ம் முழுவ‌தும் கோடிக்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ளை ஒடுக்கி, கொண்றொழித்து, அவ‌ர்க‌ளின் இர‌த்த‌த்தைக் குடித்து, சுர‌ண்டிக் கொழுத்த‌ ஏகாதிப‌த்திய‌த்தின் எச்சில் காசுதான் அது. ஏகாதிப‌த்திய‌ம் க‌ழிந்த‌தை கையில் வைத்துக் கொண்டு த‌லித் விடுத‌லை பேசும் இந்த‌ பிழைப்புவாதி, ஏக‌திப‌த்திய‌த்திற்கு எதிராக‌ப் போராடி த‌ன‌து 23 வ‌ய‌தில் ம‌ர‌ண‌த்தை எதிர்கொண்ட‌ ஒரு மாவீர‌னை என்றைக்குமே புரிந்து கொள்ள‌ முடியாதுதான்.


அத‌ன் பிற‌கு த‌.மு.எ.ச. பொதுச் செய‌லாள‌ர் ச‌. த‌மிழ்ச்செல்வ‌ன் பேச‌வ‌ந்தார். "நாங்க‌ள் பார்ப்ப‌ன‌ன் என்ற‌ வார்த்தையைப் ப‌ய‌ன் ப‌டுத்துவ‌தில்லை என்று புனித‌ப்பாண்டிய‌ன் இங்கே குறிப்பிட்டார். க‌ட‌ந்த‌ த‌.மு.எ.ச. மாநில‌ மாநாட்டுத் தீர்ம‌ண‌ங்க‌ளை வாங்கிப் ப‌டித்து பாருங்கள், அதில் ப‌த்து இட‌ங்க‌ளுக்கும் மேலாக‌ 'பார்ப்பான்' என்று குறிப்பிட்டுள்ளோம்" என்று மிக‌ அருமையான‌தொரு ப‌திலை புனித‌ப்பாண்டிய‌ன் மீது அள்ளித் தெளித்தார். அத‌ன் பிற‌கு "'நான் ஒரு ம‌நு விரோத‌ன்' என்ற‌ புத்த‌க‌த்தை வெளியிட்ட‌ பிற‌கும் ஆத‌வ‌ன் தீட்ச‌ண்யா மீது நாங்க‌ள் (அதான் ந‌ம்ம‌ காம்ரேடுக‌ள்!) எந்த‌ ந‌ட‌வ‌டிக்கையும் எடுக்காம‌ல் இருக்கிறோமே" அதிலிருந்தே எங்க‌ள‌து சாதி சார்ப‌ற்ற‌ த‌ண்மையை விள‌ங்கிக் கொள்ளுமாறு புனித‌ப்பாண்டிய‌னைக் கேட்டுக் கொள்கிறேன்" என்றார். "இப்ப‌டிப்ப‌ட்ட‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளைச் சும‌த்துவ‌து நாம் வில‌கும் புள்ளியையே உறுதிப்ப‌டுத்துகிற‌து. மாறாக‌ நாம் இணையும் புள்ளி என்று ஒன்று இருக்கிற‌து(!) நாம் அதிலிருந்து தொட‌ங்குவோம்" என்று சொல்லி விவாத‌ங்க‌ளைத் த‌விர்த்துவிட்டு, அதிலிருந்து த‌ப்பித்துக்கொண்டார். புனித‌ப்பாண்டிய‌னின் ப‌க‌த்சிங் மீதான‌ கீழ்த்த‌ர‌மான‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளை அவ‌ர் க‌ண்டுகொள்ள‌வுமில்லை, அத‌ற்காக‌ ப‌தில‌ளிக்க‌வுமில்லை.


பிற‌கு போலிக‌ம்யூனிஸ்ட் க‌ட்சியின் செய‌ற்குழு த‌லைவ‌ர்க‌ளில் ஒருவ‌ரான‌ ச‌ம்ப‌த் பேச‌வ‌ந்தார். அவ‌ரும் த‌ம‌து க‌ட்சி மேடையிலேயே ப‌க‌த்சிங் இழிவுப‌டுத்த‌ப்ப‌ட்ட‌தை சிறிதும் ச‌ட்டை செய்ய‌வில்லை. பிற‌கு பேசிய‌ பிர‌ள‌ய‌னும் ச‌ரி, ஏற்புரையாற்றிய‌ ஆத‌வ‌ன் தீட்ச‌ண்யாவும் ச‌ரி, அ‌தைத் த‌விர‌ ம‌ற்ற அணைத்து வியாக்கியான‌ங்க‌ளையும் பேசின‌ர்.

இறுதியாக பிரகதீஸ்வரன் என்பவர் தனது நன்றியுரையில் "புனிதப்பாண்டியன் இதைப் போன்று சுதந்திரமாக‌ வேறு எந்த மேடையிலும் பேசமுடியாது என்பது எங்களது கண்ணியத்தை எடுத்துக் காட்டுகிறது" என்று கூறினார்.


இத‌னைக் கடுமையாக‌க் க‌ண்டித்து பேசுவார்க‌ள் என்று க‌டைசிவ‌ரைக் காத்திருந்து நொந்து போய்த் திரும்பினோம். அங்கே இழிவு ப‌டுத்த‌ப்ப‌ட்ட‌து தோழ‌ர் ப‌க‌த்சிங் ம‌ட்டும‌ல்ல‌, இதைக்கூட‌வா எதிர்க்க‌ மாட்டார்க‌ள் என்று எதிர்பார்த்து‌ ஏமார்ந்துபோன‌ என்னைப் போன்ற‌ சில‌ரும்தான் என்ப‌தை உண‌ர்ந்துகொண்டேன்.இவர்கள் சொரனையோடு பதிலலிக்காதது ஏதோ தற்செயலாக நடைபெற்றது அல்ல. அது தான் போலிகளின் நிஜமுகம். இவர்களுக்குள்ளும் வேர்விட்டிருக்கிற ஏகாதிபத்திய அடிமைப் புத்திதான் இவர்களை பேசவிடாமல் தடுக்கிறது என்பதற்கு இதைவிடச் சிறப்பாக இனி எந்த நிக‌ழ்வையும் எடுத்துக்காட்ட‌முடியாது.

ஏகலைவன்.

Sunday, March 16, 2008

ஆன்மீகத்துக்கு எதிரான சவால் இல்ல‌டா, தீண்டாமைக்கு எதிரான சவால்:

'ஒரு பொய்யை மறைக்க முயன்று ஒன்பதாயிரம் பொய்சொன்னானாம்....' என்பது நமது முன்னோர்கள் உண்மையாக இருக்க வலியுறுத்தி நமக்கு சொல்லுகிற முதுமொழியாகும்.

இந்து மதம் என்கிற 'பொய்களின் வார்ப்பை' காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று கிளம்பி வருகிற, இந்த பார்ப்பன பயங்கரவாதிகள் அனைவருமே சிறிதும் கூச்சமில்லாமல் பகிரங்கமாக உரக்கச் சொல்லிவருகிற பொய்கள் ஏராளம். "ராம ஜென்ம பூமி, ராமர் பாலம், தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு" என்பது முதல் தற்போதைய சித‌ம்ப‌ர‌ம் போராட்ட‌ம் வரை இதன் புரட்டுக்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன.

இவர்களின் இத்தகைய பிதற்றல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பிக்கும் மாபெரும் பொறுப்பை ஏற்று செயல்படும் பத்திரிக்கை பட்டியலும் மிகவும் நீளமானது 'தினமலர்,தினமணி,இந்து(ஆங்கிலம்) முதற்கொண்டு, பார்ப்பன பயங்கரவாதத்தின் தமிழகத் தலைவர் 'சோ' நடத்தும் துக்ளக், இன்னும் இதன் நீட்சி தொடர்கிறது. மேலும் பார்ப்பன சங்கத்தின் மாநில பொறுபாளர்களும், 'பிரமிட்'நடராசன் என்கிற ஆர்.எஸ்.எஸ்.ன் புரவலரும், பங்குதாரராகவும் நிர்வாகிகளாகவும் இருந்து பார்ப்பனிய புரட்டுக்களை சினிமாமூலம் பரப்புவதற்கு 'பிரமிட் சாய்மிரா' என்ற பகாசூர சினிமா நிறுவனத்தையும் நடத்திவருகிறார்கள். அதேபோல 'ஜெயா மாமி'யின் ஜெயா டி.வி. உள்பட, பெருவாரியான எழுத்து மற்றும் காட்சி ஊடகங்கள் தமது கையிலிருப்பதானால் எதையும் செய்யலாம், சொல்லலாம் என்று அன்றாடம் பார்ப்பன பயங்கரவாதிகள் கொக்கரிப்பது ஒன்றும் ஆச்சர்யமான விசயமல்ல.

ஆனால் இவற்றிலிருந்தெல்லாம் நமது தமிழ் மக்களை மீட்டெடுக்கும் வகையில் ம.க.இ.க., மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் பிரச்சாரங்கள் மக்களை சென்றடைகிறது என்றால் அது மிகவும் அசாத்தியமானது. தோழர்களின் கடும் உழைப்பால் அது சாத்தியப்பட்டிருக்கிறது.

அதேவரிசையில் தற்போதைய, சிதம்பரதில் பார்பனியத்திற்கெதிரான நமது போராட்டம், ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக மாறியிருக்கிறது. மேற்கண்ட, நம்முடைய தமிழகத்தின் சாபக்கேடாக நீடித்துவருகிற பார்ப்பனக் கூட்டம் இந்நிகழ்வை பொறுக்க முடியாமல் 'குய்யோ முறையோ'வென கூப்பாடு போட்டு வருகின்றன. ஊட‌க‌ வெளியில் எங்கு நோக்கிலும் அவர்களுடைய ஓலம் தான் எதிரொலித்த வண்ணமிருக்கின்றன.


"தீட்சிதர்கள் எல்லோரும் தமிழர்களின் 'ஆன்மீக அடையாளங்கள்', அவர்கள் ஒருபோதும் தமிழுக்கு எதிரான‌வ‌ர்க‌ள் அல்ல‌, இது பார்ப‌ன‌ர்க‌ளை ச‌மூக‌த்திலிருந்து பிரித்துவைக்கும் சூழ்ச்சி, இத‌னை ஆன்மீக‌வாதிக‌ள் முறிய‌டிக்க‌வேண்டும்" இது 'பார்ப்ப‌ன‌ பொறுக்கி 'அர்ஜுன் ச‌ம்ப‌த் என்கிற‌ இந்து ம‌க்க‌ள் க‌ட்சிக் கார‌ன் தின‌ம‌ணியில் எழுதிய‌து.


"புனித‌மான‌ சித‌ம்ப‌ர‌ம் ந‌ட‌ராச‌ர் கோயில் 'சிவ‌ப்பு ச‌ட்டை'க‌ளால் க‌றைப‌டுத்த‌ப்ப‌ட்டிருக்கிற‌து, தினந்தோறும் த‌மிழ் வ‌ழிபாடு நட‌ந்துதான் வ‌ருகிற‌து அத‌னை நாத்திக‌வாதிக‌ளான‌ க‌ம்யூனிஸ்டுக‌ள் தான் த‌வ‌றாக‌ திரித்துக் கூறுகிறார்க‌ள். அர‌சாங்க‌மும் க‌ம்யூனிஸ்டுக‌ளும் உட‌ன‌டியாக‌ கோயிலைவிட்டு வெளியேறாவிட்டால் எங்க‌ளுடைய‌ பார‌திய‌ ஜ‌ன‌தாக‌ட்சி போராட்ட‌த்தில் குதிக்கும்" இது 'எல‌ க‌ணேச‌ன்', வின் தொலைக்காட்சியின் 'நீதியின் குர‌ல்' நிக‌ழ்ச்சிக்காக‌ தொலைபேசிவாயிலாக‌ அளித்த‌ பேட்டி.

"அர‌சு த‌ர‌ப்பிலும் ம‌ற்ற‌ பிற‌ அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளும் கேட்ப‌து 'த‌மிழில் பாட‌த் த‌டையா? த‌மிழ்நாட்டிலா?' என்ப‌து தான். தீக்ஷித‌ர்க‌ள் தேவார‌ம் பாடிவழிப‌டுகிறார்க‌ளே? அது த‌மிழ் இல்லையா? சொல்ல‌ப்போனால், போராட்ட‌ம் ந‌ட‌த்திய‌ கோஷ்டியில் சில‌ர்தான் ச‌ரியாக‌த் தேவார‌ம் பாட‌ முடியாம‌ல், திண‌றியிருக்கிறார்க‌ள். இந்த‌த் திண‌ற‌ல்தான், த‌மிழா?". "ஆட்சிமாறிய‌த‌ன் விளைவோ என்ன‌வோ 2004ல் அனும‌தி ம‌றுத்த‌ அதே அற‌நிலைய‌த் துறை, இந்த‌முறை ஆறுமுக‌சாமிக்கு ஆத‌ர‌வாக‌ ஆணைவ‌ழ‌ங்கியிருக்கிற‌து. அர‌சிய‌ல்வாதிக‌ளும் ச‌ரி, மீடியாவும் ச‌ரி, ஏதோ தீக்ஷித‌ர்க‌ள் எல்லாம் த்மிழுக்கு எதிராக‌ இருப்ப‌வ‌ர்க‌ள் போன்ற‌ ஒரு தோற்ற‌த்தை திட்ட‌மிட்டோ அல்ல‌து விவ‌ர‌ம் தெரியாம‌லோ ப‌ர‌ப்பிவ‌ருகிறார்க‌ள்" இது பார்ப‌ன‌ ச‌குனி 'சோ' துக்ள‌க்கில் வாந்தியெடுத்திருப்ப‌து.

இப்ப‌டியாக இவர்களது கூப்பாடு அன்றாடம் தொடர்கிற‌து.

தீட்சித‌ர்க‌ளோ, நாங்க‌ளோ த‌மிழுக்கு எதிரிய‌ல்ல‌, மேலும் நாங்க‌ளும் கூட‌ த‌மிழ‌ர்க‌ள் தான் என்று கூறும் இந்த‌ பூணூல் அம்பிக‌ள் ஆறுமுக‌சாமிக்கு ஆத‌ர‌வாக‌ (அதாவ‌து த‌மிழுக்கு ஆத‌ர‌வாக‌) தீர்ப்பு சொன்ன‌ அற‌நிலைய‌த்துறையையும் அர‌சையும் க‌டுமையாக‌ விம‌ர்சிக்கிறார்க‌ள். இவ‌ர்க‌ள் த‌மிழுக்கு எதிரிய‌ல்ல‌ என்றால் அதை ஆத‌ரித்து சொல்ல‌ப்ப‌ட்ட‌ தீர்ப்பைக்க‌ண்டு குமுறுவ‌து ஏன்?

போலீசு அதிகாரிக‌ள் இந்த‌ தீட்சித‌ ர‌வுடிக‌ளிட‌ம் அடியும் உதையும் வாங்கி க‌ட‌ந்த‌ 2 ஆம் தேதி ஆறுமுக‌சாமியை மேடையேற்றிய‌தும், 'க‌ட‌வுளுக்கு த‌ம்முடைய‌ நாராச‌மான‌ ஊளைச்ச‌த்த‌ம் கேட்டாலும் கேட்க‌லாம் த‌மிழ் கேட்டுவிட‌க்கூடாது' என்ற‌ கேவ‌ல‌த்தை, இந்த‌ உல‌க‌த்திலுள்ள (இந்துமத‌) ஆன்மீக‌வாதிக‌ளுக்கெல்லாம் செய்து காட்டினார்க‌ளே அது ஏன்? இத‌ற்கு அந்த‌ 'சோ' ப‌தில் சொல்வானா?

இந்த‌ 'த‌மிழ‌ர்க‌ளின் ஆன்மீக‌ அடையாள‌மாக‌' விள‌ங்கும் தீட்சித‌ப் பொறுக்கிக‌ள் அந்த‌ த‌ள்ளாத‌ பெரிய‌வ‌ரைத் தாக்கி க‌ண்ணாடியையும் உடைத்தார்க‌ளே இது தான் அவ‌ர்க‌ளின் நிஜ‌ அடையாள‌மா? மேற்ப‌டி களேப‌ர‌ங்க‌ளின் முடிவில், எல்லோரும் கலைந்து சென்ற‌தும் ஆக‌ம‌முறைப்ப‌டி தீட்டுக‌ழிக்க‌ப்ப‌ட்ட‌தே அது ஏன்? இது 'நாத்திகவாதிகளின் பார்ப‌ன‌ர்க‌ளை த‌மிழ‌ர்க‌ளிட‌ம் பிரித்தாளும் சூழ்ச்சி'யின் வெளிப்பாடா? அல்ல‌து த‌மிழ‌ர்க‌ளைத் தீண்ட‌க்கூடாத‌வ‌ர்க‌ளாகக் காட்டும் பார்ப்பன கொழுப்பா? இத‌ற்கு அந்த‌ பார்ப‌ன‌ அடிமை அர்ஜுன் ச‌ம்ப‌த் ப‌தில் சொல்வானா?

ஒருபோதும் ந‌ம‌க்கு ப‌தில‌லிக்க‌மாட்டார்க‌ள். நமகென்ன அவர்களைப்போல ஊடகபலமா இருக்கிறது.
இப்போது அவ‌ர்க‌ளுடைய இலக்கெல்லாம் த‌ங்க‌ளுடைய‌ இருத்த‌லை இந்த‌ ஏமாளி ஆன்மீக‌வாதிக‌ளிட‌ம் த‌க்க‌வைத்துக் கொள்வ‌துதான். அத‌ன் மூல‌ம் இந்து ம‌த‌ம் என்ற‌ போர்வைக்குள்ளே அவ‌ர்க‌ளை அடைத்து வைப்ப‌து தான். அவ‌ர்க‌ள‌து பார்ப்ப‌ன‌க் குடுமி அத‌ன‌டியிலேதான் ம‌றைத்துவைக்க‌ப் ப‌ட்டிருக்கிற‌து, அதையும்தான் நமது தோழர்கள் இழுத்துவ‌ந்து முச்ச‌ந்தியில் நிறுத்திவிட்டார்கள். அது தீட்சித‌க்குடுமியாக‌ ம‌ட்டுமிருந்தால் கூட‌ விட்டிருப்பார்க‌ள், ஆர்.எஸ்.எஸ்., பா.ச‌.க‌.,கும்ப‌லின் குடுமியும் அது தான் என்ப‌தால் தான் இவ்வள‌வு கூப்பாடும். அது மக்கள் எழுச்சியில் மங்கிப் போகும்.

பெரியாருடைய‌ கால‌ம் இன்று ந‌க்ச‌ல்பாரிக‌ளால் மீட்டெடுக்க‌ப் ப‌ட்டிருக்கிற‌து. பார்ப்ப‌னிய‌ அடையாள‌ம் இங்கே ம‌ண்ணோடு ம‌ண்ணாக‌ புதைக்க‌ப்ப‌டும் வ‌ரை, தீண்டாமையின் சுவ‌டு அழிக்க‌ப்ப‌டும் வ‌ரை, இது தொட‌ரும்.


இந்துத்துவ‌ ஒழிப்புக்கான‌ சோத‌னைச் சாலை இது! புர‌ட்சி ஓங்க‌ட்டும்!!.


ஏக‌லைவ‌ன்.
(ஆறுமுகசாமி சிற்றம்பல மேடையில் பாடியதைக் கண்டித்தும் எமது தோழர்கள் அவருக்கு பாதுகாப்பாக சென்றதைக் கண்டித்தும் 'அர்ஜுன் சம்பத்'(தலைவர். இந்து மக்கள் கட்சி) என்ற இந்து வெறி பாசிஸ்ட் தினமணி நாளேட்டில் எழுதிய 'ஆன்மீகத்துக்கு எதிரான சவால்' என்ற கட்டுரைக்கும் அதனைத் தொடர்ந்து பல பார்ப்பன பத்திரிக்கைகளின் அவதூறுகளுக்கும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் எனது சிறு முயற்சி.)

Saturday, March 15, 2008

தில்லைச் சிற்றம்பலம் ஏறியது தமிழ்! ஆலயத் தீண்டாமை அகலும் வரை ஓயாது எமது சமர்!


அன்பார்ந்த உழைக்கும் மக்களே!


தில்லை நடராசன் கோயிலின் திருச்சிற்றம்பல மேடையில் மார்ச் 2ஆம் நாள் காலையில் தமிழ் ஒலித்தது. 'சிற்றம்பல மேடையில் நின்று தமிழ் பாடக்கூடாது, தமிழன் பாடக்கூடாது' என்று தீட்சிதப் பார்ப்பனர்கள் அந்தக் கோயிலில் நிலைநாட்டி வந்த மொழித் தீண்டாமை வீழ்ந்தது.

இது ஒரு வரலாற்றுச் சாதனை! நந்தனையும் பெற்றான் சாம்பானையும் பலி கொண்ட தீட்சிதர்கள், வள்ளலாரையும் முத்துத்தாண்டவரையும் 'ஜோதி'யில் கலக்க வைத்த தீட்சிதர்கள், தேவாரத்தை முடக்கிவைத்து, மன்னன் இராசராசனுக்கே சவால் விட்ட தீட்சிதர்கள், பிரதமர்கள் முதல் நீதிபதிகள் வரை அனைவரையும் தமது குடுமியில் முடிந்து வைத்துக்கொண்டு, அக்கோயிலையே தமது பூர்வீகச் சொத்தென்று உரிமை கொண்டாடும் தீட்சிதர்கள், சிற்றம்பல மேடையை சீட்டிக்கட்டு மேடையாகவும், ஆயிரங்கால் மண்டபத்தை மதுபான விடுதியாகவும், கோயில் திருக்குளத்தைப் பிணம் மறைக்கும் கொலைக்ககளமாகவும், ராஜ கோபுரத்தை காமக்களியாட்ட மன்றமாகவும் மாற்றிவிட்டு, மயிரளவும் அச்சமின்றி மதர்ப்புடன் திரிந்து வந்த தீட்சிதர்கள்...


மார்ச் 2ஆம் நாளன்று முதன் முறையாக வீழ்த்தப்பட்டார்கள்.
தேவாரம் பாடிய 'குற்றத்துக்காக' 8 ஆண்டுகளுக்கு முன் இதே சிற்றம்பல மேடையிலிருந்து சிவனடியார் ஆறுமுகசாமியின் கையை உடைத்துத் தூக்கி வீசினார்கள் தீட்சிதர்கள். இன்று தனது 79 வயதில் கண்கள் மங்கி கால்கள் தள்ளாடிய போதிலும், மனதில் சுயமரியாதை உணர்வு குன்றாத அந்தச் சிவனடியாரை, யானை மீதேற்றி அதே சிற்றம்பல மேடையில் கொண்டு வந்து இறக்கினார்கள், செஞ்சட்டையனிந்த எமது தோழர்கள்.


'சிற்றம்பல மேடையில் பக்தர்கள் அனைவரும் தேவாரம் பாடலாம்' என்று பிப்.29 ஆம் தேதியன்று ஆணை பிறப்பித்துவிட்டது அரசு. எனினும், தீண்டாமை வெறி பிடித்த‌ தீட்சித‌ர்க‌ள் அத‌னை ம‌திக்க‌வில்லை. ஆறுமுக‌சாமி பாட‌த் தொட‌ங்கிய‌வுட‌ன் க‌ருவ‌றையை மூடினார்க‌ள்; ந‌ட‌ராச‌னுக்குக் குற்க்கே ந‌ந்தியாய் ம‌றைத்து நின்றார்க‌ள். சூதிர‌ன் வாயிலிருந்து வ‌ரும் நீச‌ பாஷையான‌ த‌மிழ், இறைவ‌னின் காதில் நுழைந்து விட‌க்கூடாது என்ப‌தற்காக‌ ஊளையிட்டார்க‌ள் ஆறுமுக‌சாமியை அடித்தார்க‌ள்: அர‌சு ஆணையை அம‌ல் ப‌டுத்த‌ வந்த‌ போலீசு அதிகாரிக‌ளையும் தாக்கினார்க‌ள். ஆயிர‌மாண்டுக‌ளாய் இந்த‌ ம‌ண்ணைப்பிடித்தாட்டி வ‌ரும் சாதிப்பேய் ம‌லையேற‌ ம‌றுத்து 'ஊழிக்கூத்து' ஆடிய‌தை அன்று நாடே க‌ண்ட‌து; ந‌ட‌ராச‌னும் க‌ண்டான். இந்த‌ப் பார்ப்ப‌ன‌ வெறிக்கூத்தை வென்ற‌ட‌க்கிய‌ பின்ன‌ர்தான் அம்ப‌ல‌த்தில் ஏறிய‌து....த‌மிழ்!

இது நெடிய‌தொரு போராட்ட‌ம், சிற்ற‌ம்ப‌ல‌ மேடையேறித் தேவார‌ம் பாட‌ப் ப‌ல‌முறை முய‌ன்றிருக்கிறார் ஆறுமுக‌சாமி. ஒவ்வொரு முறையும் அவ‌ரைத் துர‌த்தியிருக்கிறார்க‌ள் தீட்சித‌ர்க‌ள். "தேவார‌ம் பாட‌த் த‌டையா, இந்த‌ அநீதியைக் கேட்பாரில்லையா?" என்று துண்ட‌றிக்கைக‌ளை அச்சிட்டுத் த‌னியொரு ம‌னித‌னாக‌ நின்று சித‌ம்ப‌ர‌ம் கோயிலுக்கு வ‌ருகின்ற‌ ப‌க்த‌ர்க‌ளிட‌மெல்லாம் விநியோகித்திருக்கிறார். ப‌ய‌ன் ஏதும் விளைய‌வில்லை.

8.5.2000 அன்று த‌ன்ன‌ந்த‌னியனாக‌ச் சிற்ற‌ம்ப‌ல‌ மேடை ஏறிப் பாட‌த் தொட‌ங்கினார் ஆறுமுக‌சாமி. வாய் திற‌ந்து அடியெடுத்த‌ மறுக‌ண‌மே அவ‌ரை அடித்து வீசினார்க‌ள் தீட்சித‌க் காலிக‌ள். ஆட‌ல்வ‌ல்லான் சாட்சியாக‌ ந‌ட‌ந்தது இந்த‌ அட்டூழிய‌ம். ஆனால் கேட்பார் யாருமில்லை. முறிந்த‌ கையுட‌ன் காவ‌ல் நிலைய‌ம் சென்று புகார் கொடுத்தார் ஆறுமுக‌சாமி, ஒப்புக்கு ஒரு வ‌ழ‌க்கு ப‌திவு செய்த‌து போலீசு. 'சாட்சியில்லை' என்று தீட்சித‌ர்க‌ளை விடுவித்த‌து நீதிம‌ன்ற‌ம். வ‌ழ‌க்காட‌க் காசில்லாம‌ல், இல‌வ‌ச‌மாய் வாதாட‌ ஒரு வ‌க்கீலைத் தேடி ம‌னித‌ உரிமைப் பாதுகாப்பு மைய‌த்தின் வ‌ழ்க்குரைஞ‌ர் ராஜுவிட‌ம் வ‌ந்து சேர்ந்தார் ஆறுமுக‌சாமி. " இது வெறும் ம‌னித‌ உரிமைவ‌ழ‌க்க‌ல்ல‌; ம‌க்க‌ளை ந‌சுக்கிக் கொண்டிருக்கும் பார்ப்ப‌னிய‌ச் ச‌ழ‌க்கு" என்ப‌தால், ஆறுமுக‌சாமியை ம‌.க‌.இ.க‌.வின் த‌மிழ் ம‌க்க‌ள் இசைவிழா மேடைக்கு அழைத்து வ‌ந்தார் வ‌ழ‌க்குரைஞ‌ர் ராஜு. "தீட்சித‌ர்க‌ளின் கொட்ட‌த்தை ஒடுக்குவோம்! தில்லைச் சிற்ற‌ம்ப‌ல‌ மேடையில் த‌மிழை அர‌ங்கேற்றுவோம்!" என‌ ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ள்முன் அன்று அறிவித்தோம்.

கடந்த 4 ஆண்டுகளில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம், ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய அமைப்புகளின் முன்முயற்சியில், சிதம்பரம் நகரின் விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க., தி.க. போன்ற அமைப்புகளின் பங்களிப்புடன் சிதம்பரத்தில் எண்ணற்ற பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் வி.வி.சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகண் போன்றோர் இம்முயற்சிக்கு துணை நின்றிருக்கின்றனர். நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் வழியாக இப்பிரச்சினையை நாடே அறிந்திருக்கிறது. எமது தோழர்களும் மனித உரிமைப் பாதுகாப்புய் மையத்தின் இளம் வழக்குரைஞர்களும் இரவு பகலாக இதற்குப் பாடுபட்டிருக்கிறார்கள். எல்லா முயற்சிகளையும் நீதிமன்றத்தின் துணை கொண்டும், அதிகாரத் தாழ்வாரங்களில் அவர்கள் பெற்றிருக்கும் செல்வாக்கைக் கொண்டும் முடக்கி வந்திருக்கிறார்கள் தீட்சிதர்கள்.


'சிற்றம்பலத்தில் தேவாடம் பாடலாம்' என்ற இந்த அரசாணை தானாக வந்துவிடவில்லை; பல்வேறு சதிகளையும் மீறி அரசாங்கத்தின் வாயிலிருந்து இந்த அரசாணையை நாங்கள் வரவழைத்திருக்கிறோம். அரசாணை வந்த மிறகும் தமிழை அம்பலத்தில் ஏற்றுவதற்காக அக்கோயில் வாசலிலே அன்று தடியடி பட்டு இரத்தம் சிந்தியிருக்கிறார்கள் எமது தோழர்கள். மார்ச் 2ஆம் நாள் மாலை ஆறுமுகசாமியும் எமது தோழர்களும் சிறைப்படுத்தப்பட்டனர். அடுத்தநாள் 'சிற்றம்பல மேடையேறித் தமிழ் பாட யாரேனும் ஒரு சிவனடியார் வருவார்' என்று நாங்கள் காத்திருந்தோம். அடியார்கள் இல்லை, ஓதுவார்கள் இல்லை, தமிழ் ஆர்வலர்கள் இல்லை, ஒருவரும் வரவில்லை. இந்த அடிமைத்தனத்தையும் கோழைத்தனத்தையும் கண்டு மனம் நொந்து எமது தோழர்களே சிற்றம்பலம் ஏறிப்பாடினார்கள். அங்கே நாங்கள் நடத்தியது வழிபாடு அல்ல; இழி மொழி என்று தமிழையும், சூத்திரர்‍...பஞ்சமர் என்று உழைக்கும் மக்களையும் இழிவுபடுத்தும் பார்ப்பனக் கொடுங்கோன்மைக்கு எதிரான போராட்டம்!"அப்பாவி சிவனடியாரைப் பயன்படுத்டிக்கொண்டு, ஆத்திகர்களின் பிரச்சினையில் நாத்திகர்களான நக்சலைட்டுகள் புகுந்து ஆதாயம் தேடுகிறார்கள்" என்று அலறுகிறது ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பல். மணல் திட்டை இடித்தால் இந்துக்களின் மனம் புண்படும் என்று கூறும் பா.ஜனதா, சு.சாமி, ஜெயலலிதா கும்பல் தேவாரத்துக்காகக் குரல் கொடுப்பதை நாங்களா தடுத்தோம்? சிற்றம்பல மேடையில் தமிழ் ஏறுவதையும், கருவறைக்குள் பார்ப்பனரல்லாதார் நுழைவதையும் சகிக்கவொண்ணாத இந்தச் சாதிவெறியர்கள், இதை ஆத்திகர்...நாத்திகர் பிரச்சினையென்று திசைதிருப்புகிறார்கள்.அன்று அப்பாவி சிவ‌ன‌டியாரை அடித்து வீழ்த்திய‌ தீட்சித‌ர்க‌ள் ஆத்திக‌ர்கள்தான். தில்லையைச் சுற்றியிருக்கும் திருவாவ‌டுதுறை, திருப்ப‌ன‌ந்தாள், த‌ரும‌புர‌ம் போன்ற‌ ஆதீன‌ங்க‌ள் அனைவ‌ரும் ஆத்திக‌ர்க‌ள்தான். சைவ‌மும் த‌மிழும் பிசைந்து வ‌யிறு வ‌ள‌ர்ந்த்த‌ இந்த‌த் துற‌விக‌ளோ, ப‌ட்ட‌ங்க‌ளும் விருதுக‌ளும் சூடிய‌ சைவ‌ அறிஞ‌ர்க‌ளோ திருச்சிற்ற‌ம்ப‌ல‌ மேடையேறுவ‌தை நாங்க‌ளா த‌டுத்தோம்? ஆதீன‌ங்க‌ளாலும் ஆன்மீக‌வாதிக‌ளாலும் ஏள‌ன‌ம் செய்து புற‌க்க‌ணிக்க‌ப்ப‌ட்ட‌ பிற‌குதான், ஆண்ட‌வ‌னை ம‌றுக்கும் க‌ம்யூனிஸ்டுட‌ளான‌ எங்க‌ளைத் தேடி வ‌ந்தார் ஆறுமுக‌சாமி.
சைவ‌ மெய்ய‌ன்ப‌ர்க‌ளெல்லாம் ப‌த‌வியும் ப‌விசும் பெறுவ‌த‌ற்காக‌ பார்ப்ப‌ன‌க் கும்ப‌லுட‌ன் க‌ள்ள‌ உற‌வு வைத்திருப்ப‌த‌னால்தான் சிற்ற‌ம்ப‌ல‌ மேடையில் த‌மிழ‌ன் ஏற‌ முடிய‌வில்லை. த‌மிழைத் த‌ம் பிழைப்புக்கான‌ க‌ருவியாக‌ மாற்றிக் கொண்ட‌ கட்சிக‌ளும் அமைப்புக‌ளும் செய்துவ‌ரும் துரோக‌த்தினால்தான் ஏழைத் த‌மிழ் அம்ப‌ல‌மேற‌ முடிய‌வில்லை. இல்லையென்றால் தேவார‌த்தை மீட்டெடுத்த‌ தில்லைக் கோயிலிலேயே அத‌னைப் புதைப்ப‌த‌ற்கு தீட்சித‌ர்க‌ளால் இய‌ன்றிருக்குமா?
சிற்ற‌ம்ப‌ல‌த்தில் த‌மிழை ஏற்ற‌, தாய்மொழியில் இறைவ‌னைப் போற்ற‌ ப‌க்த‌னுக்கு அர‌சாணையின் துணை எத‌ற்கு? போலீசின் துணைஎத‌ற்கு?ச‌ட்ட‌ம் உரிமையை வ‌ழ‌ங்க‌த்தான் முடியும். அந்த‌ உரிமையைப் ப‌ய‌ன்ப‌டுத்தும் உண‌ர்வை வ‌ழ‌ங்க‌ முடியாது. அந்த‌ உண‌ர்வென்ப‌து ப‌க்தி உண‌ர்வ‌ல்ல‌. பார்ப்ப‌ன‌ ஆதிக்க‌த்திற்கு எதிரான‌ சுய‌ம‌ரியாதை உண‌ர்வு. சாதி ஏற்ற‌த்தாழ்வுக்கு எதிரான‌ ச‌ம‌த்துவ‌ உண‌ர்வு. ச‌ம‌ஸ்கிருத‌ ஆதிக்க‌த்துக்கு எதிரான‌ த‌மிழ் உண‌ர்வு.தில்லையில் நாம் பெற்றிருக்கும் இந்த‌ வெற்றி ஒரு துவ‌க்க‌ப்புள்ளி. தீட்சித‌ர்க‌ள் ச‌ர‌ண‌டைய‌வுமில்லை, சாதி ஆதிக்க‌த்தை விட‌வுமில்லை. ந‌ந்த‌ன் நுழைந்த‌ தெற்கு வாயிலை அடைத்து தீட்சித‌ர்க‌ள் எழுப்பியுள்ள‌ தீண்டாமைச் சுவ‌ர் ஒரு அவ‌மான‌ச் சின்ன‌மாக‌ இன்னும் நின்று கொண்டிருக்கிற‌து. அது த‌க‌ர்க்க‌ப்ப‌ட‌ வேண்டும். தீட்சித‌ர்க‌ள் திருடிக்கொண்ட‌ தில்லைக் கோயிலை அற‌நிலைய‌ ஆட்சித்துறை கைப்ப‌ற்ற‌ வேண்டும்.
ச‌ம‌ஸ்கிருத‌ வ‌ழிபாட்டை அக‌ற்றுத‌ல், த‌மிழ் வ‌ழிபாடு, அனைத்து சாதியின‌ரும் அர்ச்ச‌க‌ராத‌ல்... என‌ நீண்ட‌தொரு போராட்ட‌த்தை நாம் ந‌ட‌த்த‌ வேண்டியிருக்கிற‌து. ந‌ட‌த்துவோம்!வ‌ர்க்க‌ம், சாதி, இன‌ம், மொழி, பாலின‌ம் போன்ற‌ ஒவ்வொரு துறையிலும் நில‌வும் ஆதிக்க‌த்தை எதிர்த்து க‌ம்யூனிஸ்டுக‌ளாகிய‌ நாங்க‌ள் போராடுவோம்! அன்று, பார்ப்ப‌ன‌ ஆதிக்க‌த்தையும் தீண்டாமையையும் எதிர்த்து திருவ‌ர‌ங்க‌ம் க‌ருவ‌றைக்குள் நுழைந்து அர‌ங்க‌நாத‌னைத் தீண்டினோம்! இன்று, சிற்ற‌ம்ப‌ல‌த்தைத் தீண்டியிருக்கிற‌து த‌மிழ்! எல்லாவ‌கைத் தீண்டாமைக‌ளையும் ஆதிக்க‌ங்க‌ளையும் எதிர்த்துப் போராடுவோம்!


உங்க‌ள் துணையுட‌ன் வெற்றியும் பெறுவோம்!இவ‌ன்
ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ம்
விவ‌சாயிக‌ள் விடுத‌லை முன்ன‌னி
புர‌ட்சிக‌ர‌ மாண‌வ‌ர்...இளைஞ‌ர் முன்ன‌னி
புதிய‌ ஜ‌ன‌நாய‌க‌த் தொழிலாள‌ர் முன்ன‌னி

தொட‌ர்புக்கு:
இரா. சீனிவாச‌ன்,
#16, முல்லைந‌க‌ர் வ‌ணிக‌ வ‌ளாக‌ம்,
2 ஆவ‌து நிழ‌ற்சாலை,
அசோக்ந‌க‌ர்,
சென்னை ‍ 600083.
தொலைபேசி: 23718706
கைபேசி: 9941175876.

நன்றி: வெண்மணி, பகத்.
இது சிதம்பரம் போராட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன கும்பல் கட்டவிழ்த்துள்ள‌ பொய்பிரச்சாரங்களை முறியடிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள மேற்கண்ட நமது புரட்சிகர இயக்கங்களின் பிரச்சார செய்தியாகும்.

Thursday, March 13, 2008

தில்லைச் சிற்றப்பலத்தில் தமிழ்:வீழ்ந்தது பார்ப்பன ஆதிக்கம்! ஒழிந்தது ஆயிரமாண்டுத் தீண்டாமை!!

மார்ச் 2 -ஆம் நாளன்று காலை தில்லைச் சிற்றப்பல மேடையில் தமிழ் ஒலித்தது. கண்கள் மங்கி, கால்கள் தள்ளாடி, நடக்கும் ஆற்றலைக் கூட இழந்து விட்ட முதியவரான சிவனடியார் ஆறுமுகசாமி, சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம் பாடினார். "திலைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்" என்று பார்ப்பன அடிமைத் தொழில் செய்வதற்கு அந்த சிவபெருமானே அடியெடுத்துக் கொடுத்தாகக் கூறப்படும் சிற்றம்பல மேடையில் நின்றபடி தேவாரத்தின் எந்த வரிகளை ஆறுமுகசாமி பாடினார் என்று யாருக்கும் கேட்கவில்லை. கலவரத்துக்கும் தீட்சிடப் பார்ப்பனர்களின் ஊளைச்சத்ததுக்கும் இடையில் அவர் அருகிலேயே நின்றிருந்த எமது தோழர்கள் கூட ஆறுமுகசாமியின் உதடு அசைந்த்தை மட்டும்தான் பார்க்கமுடிந்த்து.ஆனால் அவர் பாடினார். தில்லையிலிருந்து சிலநூறு கல் தொலைவில் இருந்த எமக்கு மட்டும் ஆறுமுகசாமியின் குரல் தெளிவாகக் கேட்டது. "தில்லைவாழ் அந்தணர்க்கு நான் அடியார் இல்லை... இல்லை... இல்லவே இல்லை..." என்று சிற்றம்பல மேடையில் நின்றபடி அந்த தில்லை நடராசனுக்கு அறிவித்திருக்கிறார் ஆறுமுகசாமி. அவர் உதடுகளிலிருந்து வெளிப்பட்ட சொற்கள் எவையாக இருந்த போதிலும் அவை உணர்த்தும் பொருளும் உணர்வும் இதுதான். இது மட்டும் தான்.
அவர் மனம் உருகிப் பாடவில்லை, பாடியிருக்கவும் முடியாது என்பதை தொலைக்காட்சியில் அந்த நிடழ்வைப்பார்ட்த அறிவிலிகளும் கூடப் புரிந்து கொண்டுருக்க முடியும். அவர் மனம் குமுறிக் குரல் கொடுத்தார் என்பதுதான் உண்மை. அங்கேநடந்தது 'வழிபாடு' அல்ல, போராட்டம்!
'சைவ மெய்யன்பர்கள் மனமுருகித் தமிழில் பாடி இறைவனை வழிபடுவதற்கான உரிமையை வழங்குகதாக' கூறும் அந்த அரசாணையின்படி சிவனடியார் ஆறுமுகசாமி தில்லை நடராசனை 'வழிபடவில்லை'. வழிபட முடியவும் இச்லை அங்கே நடந்தது போராட்டம். போராட்டம் மட்டும் தான். அங்கே ஒலித்தது தமிழே அன்றித் தேவாரம் அல்ல. அங்கே நின்ற ஆறுமுகசாமி போராளியே அன்றி பக்தர் அல்ல.
நேர்ப்பொருளிலும் இது தான் உண்மை. ஆறுமுகசாமி வாய்திறந்த்வுடனே கருவறையை இழுத்து மூடிவிட்டு நந்தியாய் நடராசனை மறைத்து நின்று கொண்டார்கள் தீட்சிகர்கள். அன்று நடராசனைக் காணவிடாமல் நந்தனை மறைத்தது கூட உயிரற்ற கல்லான நந்தியல்ல, உயிருள்ள தீட்சிதப் பார்ப்பனர்கள் தான் என்ற உண்மையை, பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்த அந்தக் காட்சியை, நம் கண்முன்னே கொண்டுவந்ததன் மூலம், வரலாற்றை இன்னொரு முறை நம் கண் முன்னே நிகழ்த்திக் காட்டினார்கள் தீட்சிதர்கள்.


.............................................................................


ஆம்! இது ஒரு வரலாற்றுச் சாதனை. நந்தனையும், பெற்றான் சாம்பானையும் பலி கொண்ட தீட்சிதர்கள், வள்ளலாரையும் முத்துத்தாண்டவரையும் ஜோதியில் கலக்க வைத்த தீட்சிதர்கள், தேவாரத்தை முடக்கி வைத்து, மன்னன் இராசராசனுக்கே சவால் விட்ட தீட்சிதர்கள் "அந்தத் தில்லைக் கூத்தனே மூவாயிரமாவது தீட்சிதந்தான்" என்று இறுமாப்போடு பிரகடனம் செய்து அதை இன்றுவரை நிலைநாட்டிவரும் தீட்சிதர்கள், எந்த வித பட்டாவோ பாத்தியதையோ இல்லாமல் பல்லாயிரம் கோடி மதிப்புள்ள ஆலயத்தின் சொத்துக்களூக்கு பாத்தியதை கொண்டாடிவரும் தீட்சிதர்கள், சிற்றம்பல மேடையை சீட்டுக்கட்டு மேடையாகவும், ஆயிரங்கால் மண்டபத்தை மதுபான விடுதியாகவும், கோயில் திருக்குளத்தை பிணம் மறைக்கும் கொளைக்களமாகவும், ராஜகோபுரத்தை காமக்களியாட்ட மன்றமாகவும் மாற்றிவிட்டு, மயிரளவும் அச்சமின்றி மதர்ப்புடன் திரிந்து வந்த தீட்சிகர்கள்,


பிரதமர்கள், முதல்வர்கள் முதல் நீதிபதிகள் வரை அனைவரையும் இன்றளவும் தம் சிண்டின் நுனியிலே முடிந்து வைத்திருக்கும் தீட்சிதர்கள், கொலை - கொள்ளை முதலான எந்தக் குற்றங்களுக்காகவும் இதுவரை விசாரணைக்குக் கூட உட்படுத்தப்படாத தீட்சிதர்கள் - இன்று கடலூர் சிறையில் களி தின்று கொண்டிருக்கிறார்கள்.
எந்தச் சிற்றம்பல மேடையில் தமிழ் ஒலிக்கவிடாமல் தீட்சிதர்கள் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தார்களோ அதே மேடையில், அவர்களால் அடித்து வீழ்த்தப்பட்ட அதே ஆறுமுகசாமி யானை மீதேறி சிற்றம்பல மேடையில் வந்து இறங்கினார். தீட்சிதர்களோ, அதே இடத்தில் தூக்கி வீசப்பட்டார்கள்.
இது இறுதி வெற்றியல்ல, முதல் அடி மட்டுமே என்பதின்னவோ உண்மைதான். ஆனால் முத்ல் அடி என்றாலும் அவர்கள் முகத்தில் விழுந்த அடி. முன் எப்போதும் விழுந்திராத அடி. ஆனானப்பட்ட மாமன்னன் இராசராசனையே ஆட்டிப்படைத்த தீட்சிதர்கள், ஆறுமுகசாமி எனும் ஏதுமில்லாப் பரதேசியால் அடித்து வீழ்த்தப்பட்டிருக்கிறார்களே, எப்படி? இது ஆண்டவனின் அனுக்கிரகமல்ல என்பது அனைவருக்கும் தெரியும். எனில் இது இன்ன அரசாங்கத்தின் அனுக்கிரகமா? அரசாங்க முட்டைதான் அம்மியை உடைத்திருக்கிறதா? அப்படித்தான் கூறுகின்றன இதுவரை ஊடகங்களில் வந்துள்ள செய்திகள்.

சிற்றம்பல மேடையில் தமிழ் பாடலாம் என்று திமுக அரசு ஆனையிட்டதாம். தடுத்து நின்ற தீட்சிதர்களைத்தூக்கி வீசிவிட்டு அரசாணையை அமல்படுத்திவிட்டதாம் போலீசு. "தீட்சிதர்கள் - போலீசு கைகலப்பு" பிறகு "ஆறுமுகசாமியின் ஆதரவாளர்கள் - போலீசு கைகலப்பு", "தீட்சிதர்கள் 11பேர், ஆறுமுகசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 35பேர் - ஆக மொத்தம் 46பேருக்கு சிறை!" இறுதியில் போலீசு வென்றது. சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டது! - இது தான் தில்லைப் போராட்டம் பற்றி ஊடகங்கள் அளித்துள்ள சித்திரம்.
நிலைநாட்டப்பட்டது தமிழ் உரிமையா, சட்டமா? வென்றது போலீசா அல்லது ஆறுமுகசாமிக்குத் துணை நின்ற மனித உரிமைப்பாதுகாப்பு மையம், மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னனி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னனி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்களா? இவைதான் நம் முன் உள்ள கேள்விகள்.
இவற்றுக்கு விடை கூற வேண்டுமெனில் கடந்த பல ஆண்டுகளாக மேற்கூறிய எமது அமைப்புகள் தில்லையில் நடத்திவரும் போராட்டத்தைப் பற்றி இங்கே விளக்கமாகக் கூற வேண்டும். ஏனென்றால் எமது அமைப்புகளின் பெயர்களை மறைத்து யாரோ அடையாளம் தெரியாத சில ஆதரவாளர்கள் தான் ஆறுமுகசாமிக்குத் துணை நின்றதைப் போன்ற தோற்றத்தை ஊடகங்களில் வெளிவந்த செய்திகள் ஏற்படுத்தியுள்ளன. எனினும் எமது போராட்டத்தின் வரலாற்றை விவரிப்பதற்கு இது இடமன்று. மார்ச்2 அன்று நடைபெற்ற சம்பவங்களை ஆராய்வதன் மூலமாகவே இந்தக் கேள்விகளுக்கு விடைகண்டுவிடமுடியும்.
நீண்ட நெடிய போராட்டம் நடத்தி அதன் இறுதியில் அரசாங்கத்தின் வாயிலிருந்து நாங்கள் வரவழைத்ததுதான் இந்த அரசாணை. மார்ச் 1-ஆம் தேதி அரசாணையின் நகல் கையில் கிடைத்தவுடனே "மார்ச் 2-ஆம் தேதி ஆறுமுகசாமி பாடுவார்" என்று அறிவித்தோம். சுமார் 300 தோழர்கள் திரண்டு வந்திருந்தனர். ஆனால், வெறும் 30 பேரை மட்டுமே கோயிலுக்குள் அனுமதித்து மற்றவர்களைத் தடுத்து நிறுத்தியது போலீசு. சுற்றுவட்டாரத்து மக்களும் பிற அமைப்பினரும் பல நூறு பேர் திரண்டு வர விரும்பினர். ஆனால் அவர்களை அச்சுறுத்தி அப்புறப்படுத்தும் வண்ணம் நகரத்தையே வெள்ளை வாகனங்களால் போலீசு நிரப்பியது.
கோயிலுக்குள்ளே நூற்றுக்கணக்கான போலீசார், வெறும் 30 தோழர்கள்! இந்த ஏற்பாடுகள் எல்லாம் யாரைப்பாதுகாக்க? தமிழுக்குப் போராடச் சென்ற தோழர்களைப் பாதுகாக்கவா, அல்லது தமிழ் விரோதிகளான தீட்சிதர்களைப் பாதுகாக்கவா?
சூழ்ச்சிகரமான இந்த போலீசு நடவடிக்கைகளின் விளைவாகத்தான் செஞ்சட்டைகளால் சூழப்பட்டிருக்க வேண்டிய சிற்றப்பல மேடை, காக்கிச்சட்டைகளால் நிரம்பியிருந்தது. பார்ப்பன எதிர்ப்பாளர்களுக்கும் தீட்சிதப் பார்ப்பனர்களுக்கும் நடந்திருக்க வேண்டிய போராட்டம், போலீசுக்கும் தீட்சிதர்களுக்குமான கைகலப்பாக மாற்றப்பட்டது. 'பார்ப்பானையும் பாதுகாப்பது, தமிழையும் பாதுகாப்பது' என்ற கேலிக்குரிய கொள்கையின் கோமாளித்தனமான காட்சி வடிவம் தான் அன்று சிற்றம்பல மேடையிலிருந்து உலகதுக்கே ஒளிபரப்பப்பட்டது.
காக்கிச் சட்டைகளின் இடத்தில் செஞ்சட்டைகள் சூழ்ந்து நிற்கும் காட்சியை மனக்கண்ணில் கொண்டு வந்து பாருங்கள்! அது மட்டும் நிகழ்ந்திருந்தால் வேறு சில அதிசயங்களும் நிகழ்ந்திருக்கும். ஆறுமுகசாமி வெறும் அரை நிமிடம் பாடியிருக்க மாட்டார். அந்தத் தில்லைக் கூத்தனே தன் ஆட்டத்தை நிறுத்தி விட்டு, ஆறுமுகசாமியின் முன் பிரசன்னமாகி, 'போதும் பக்த‌னே போதும்' என்று கதறும் வரையில் ஆறுமுகசாமியை நாங்கள் பாடவைத்திருப்போம். சிற்றம்பல மேடையில் கொஞ்சம் இரத்தமும் சிந்தியிருக்கக் கூடும். அதனாலென்ன, நூற்றாண்டுகளாய் அங்கே சிந்திய இரத்தத்தின் கறையைக் கழுவுவதற்கு அது பயன்பட்டிருக்கும்.
சிற்றம்பல மேடையில் தீட்சிதர்களுடன் போலீசு மல்லுக்கட்டுவதைப் போன்ற காட்சி ஒளிபரப்பானதே, அந்தக் காட்சிதான் 'கண்ணால் காண்பது பொய்'என்ற முதுமொழிக்கு மிகப் பெரும் சான்று. தீட்சிதர்களிடமிருந்து தமிழைப் பாதுகாப்பதற்கு அல்ல, எமது தோழர்களிடமிருந்து தீட்சிதர்களைப் பாதுகாப்பதற்குத்தான் ஆயிரக்கணக்கில் அங்கே போலீசு குவிக்கப்பட்டிருந்தது.


...................................................இதை நம்ப மறுப்பவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்காகவே இரண்டாவது காட்சி தில்லைக் கோயிலின் வாசலில் அன்று மாலையே அரங்கேறியது. "சிற்றம்பல மேடையில் 2 வரிகள் கூடத் தேவாரம் பாட இயலவில்லை. எனவே, அரசு ஆணையின்படி சிற்றம்பல மேடையில் அமைதியாக தேவாரம் பாடி வழிபட காவல்துறை வழி செய்யவேண்டும். தாக்குதலில் ஈடுபட்ட தீட்சிதர்கள் 30 பேர்மீது கொலைமுயற்சி மற்றும் தீண்டாமைக் குற்ற வழக்குகள் பதிவு செய்ய வேண்டும்" என்று கோரினார் ஆறுமுகசாமி. அவரது தலைமையில் எமது தோழர்கள் தெற்கு வாயிலின் முன் மறியல் நடத்தினர்.
"நீங்கள் கலைந்து செல்லாத வரை தீட்சிதர்கள் மீது நீங்கள் கொடுத்துள்ள புகாரை வாங்கமுடியாது" என்றனர் போலீசு அதிகாரிகள். "ஆறுமுகசாமி பாடுவதற்கு உத்திரவாதம் அளித்தால் கலைந்து செல்கிறோம்" என்று மனித உரிமைப்பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்.ராஜு கூறினார். ஆனால் "அதற்கெல்லாம் எந்த உத்திரவாதமும் தரமுடியாது, கலைந்து செல்லுங்கள்" என்றார் ஆர்.டி.ஓ. "மீண்டும் பாட அனுமதிக்கும் வரையில் அமைதியாக ஆலயத்தின் வாயிலிலேயே அமர்ந்திருப்போம் கலைந்து செல்ல முடியாது" என்று ஆறுமுகசாமியும் அனைத்து தோழர்களும் ஒரே குரலில் கூறினர்.
உடனே, பின்புறத்திலிருந்து மர்மமான முறையில் ஒரு கல் வந்து விழுந்தது. இதற்காகவே காத்திருந்தவர்கள் போல அடுத்த கணமே கூட்டத்தினர் மீது போலீசார் தடியடித் தாக்குதல் நடத்தத் தொடங்கிவிட்டனர். சிவப்புச் சட்டை அணிந்த எங்களது தோழர்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டனர். மண்டை உடைந்து ரத்தம் கொட்டிய நிலையில் சிதறிக் கலைந்தவர்களையும் தெருத்தெருவாக விரட்டி விரட்டித் தாக்கியது போலீசு. இது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படாத காட்சி. இதற்கு சிதம்பரம் நகர மக்கள்தான் சாட்சி.
சிற்றம்பல மேடையில் மாவட்ட போலீசு கண்காணிப்பாளரைப் பிடித்துத் தள்ளுகிறான் ஒரு தீட்சிதன். பத்திரிக்கைகளில் புகைப்படங்களே வெளிவந்திருக்கிற்றன. "போலீசு அதிகாரிகளை தீட்சிதர்கள் தண்ணீர் பாக்கெட்டால் அடித்தார்கள், கடித்துக் குதறினார்கள், தாக்கினார்கள்" என்று கண்ணால் கண்ட பத்திரிகையாளர்கள் எழுதியிருக்கிறார்கள். இருந்தாலும் சாந்த சொரூபிகளாக, சட்டையைக் கழற்றிவிட்டு நோகாமல் அணைத்து தீட்சிதர்களையும் வெளியேற்றுகிறார்கள் போலீசுக்காரர்கள்.
அதே போலீசு அன்று மாலை தோழ‌ர்கள் மீது தடியடி நடத்தும் காட்சியும் தொலைக்காட்சிகளில் சிறிதளவு ஒளிபரப்பானது. ஒரு தோழரை 4 போலீசார் சுற்றிக்கொண்டு மண்டையில் அடிக்கின்றனர். வயிற்றில் லத்தியால் குத்தி அவரைக் கூழாக்குகின்றனர். இது மாலையில் போலீசின் நடத்தை!'ச‌ம‌ஸ்கிருத‌த்துக்கு ஒரு நீதி த‌மிழுக்கு ஒரு நீதி' என்ப‌தைக் க‌ளைவ‌த‌ற்காக‌ப் போட‌ப்ப‌ட்ட‌ ஒரு அர‌சாணை! அத‌னை அம‌ல் ப‌டுத்த‌க் கோரினால் 'சூத்திர‌னுக்கு ஒரு நீதி, பார்ப்பானுக்கு ஒரு நீதி' என்ற‌ அதைவிட‌ப் பெரிய‌ அர‌சாணை அம்லாகிற‌து! "த‌மிழ் பாட‌லாம்" என்று ஆணையிடுகிற‌து அர‌சி. "அதை அம‌ல் ப‌டுத்த‌ உத்திர‌வாத‌ம் த‌ர‌முடியாது" என்று அந்த‌க் கோயிலின் வாச‌லிலேயே நின்று பிர‌க‌ட‌ன‌ம் செய்கிறார் ஆர்.டி.ஓ. "அம‌ல்ப‌டுத்து" என்று கேட்ட‌ எம‌து தோழ‌ர்க‌ள் போலீசு வேனுக்குள் இர‌வு முழுவ‌தும் வைத்துப் பூட்ட‌ப்ப‌டுகிறார்க‌ள்.
மார்ச் 2-ஆம் தேதி காலையில் யானை மீது ஏறி தில்லை ந‌க‌ர‌ வீதிக‌ளில் நாய‌கனாக‌ப் ப‌வ‌னிவ‌ந்த‌ ஆறுமுக‌சாமி அன்று மாலையே 'அவ‌ருக்கு உரிய‌' இட‌த்துக்கு த‌ள்ள‌ப்ப‌ட்டு வுடுகிறார். "என‌க்காக‌ப் போராடிய‌ பிள்ளைக‌ளை அடித்துக் கைது செய்தாயே, என்னையும் கைது செய்!" என்று த‌ன்ன‌ந்த‌னிய‌னாக‌ போலீசு நிலையத்தின் முன் ம‌றிய‌ல் செய்கிறார். காலையில் சிற்ற‌ம்ப‌ல‌ மேடையில் போராட்ட‌ம்! மாலையில் போலீசு நிலைய‌த்தின் முன் போராட்ட‌ம்!
பார்ப்ப‌ன‌த் திமிரையோ, போலீசின் அராஜ‌க‌த்தையோ, இந்த‌ அர‌சின் இர‌ட்டை வேட‌த்தையோ அம்ப‌ல‌ப் ப‌டுத்துவ‌த‌ற்காக‌ ம‌ட்டும் இவ‌ற்றையெல்லாம் விவ‌ரிக்க‌வில்லை. இதுவரை விவ‌ரிக்க‌ப் ப‌டாத‌ ஒரு கொடுமையை, பல‌‌ர் ஒப்புக்கொள்ள‌ ம‌றுக்கும் ஒரு எதார்த்த‌த்தை, ந‌ந்த‌னின் உள்ள‌த்தை எரித்திருக்க‌க் கூடிய‌ அந்த‌ உண்மையை வாச‌க‌ர்க‌ள் உண‌ர‌ச் செய்வ‌த‌ற்காக‌த்தான் இவ‌ற்றை விவ‌ரித்தோம்.


.....................................................‌ல‌ நூற்றாண்டுக‌ளுக்கு முன்ன‌ர் நுழைய‌க்கூடாத‌ கோயிலுக்குள் நுழைய‌க் க‌ன‌வு க‌ண்ட‌ ந‌ந்த‌னை 'கிறுக்க‌ன்' என்று அவ‌னுடைய‌ சொந்த‌ சாதிகார‌ர்க‌ளே ஏள‌ன‌ம் செய்திருக்க‌க் கூடும். 'திமிர் பிடித்த‌ மூட‌ன்' என்று பார்ப்ப‌ன‌ உய‌ர்சாதிக்கார‌ர்க‌ளே ஏள‌ன‌ம் செய்திருக்க‌க் கூடும். கேட்பாரில்லாத‌ அநாதையாய் அவ‌ன் அந்த‌ ஆலைய‌த்தின் வாயிலில் எரிந்திருக்க‌க் கூடும்.
நூற்றாண்டுக‌ள் க‌ட‌ந்துவிட்ட‌ன‌. கால‌ம் மாறிவிட்ட‌து. அர‌சும் ஆணையிட்டு விட்ட‌து. ஆனால் மார்ச் 2-ஆம் தேதி மாலை தில்லைக் கோயிலின் தெற்கு வாயிலில், எம‌து தோழ‌ர்கள் ர‌த்த‌ம் சொட்ட‌ச் சொட்ட‌த் தாக்கிக் கைது செய்ய‌ப்ப‌ட்ட‌ பிற‌கு, அந்த‌ ந‌ந்த‌னைப் போல‌வே, கேட்பார‌ற்ற‌ அநாதையாக‌, ந‌ந்த‌ன் எரிந்த‌ அதே வாயிலில் ஆறுமுக‌சாமியும் அம‌ர்ந்திருந்தார். 'என்னை எரித்துக் கொல்' என்று ந‌ந்த‌ன் பார்ப்ப‌ன‌ர்க‌ளிட‌ம் ம‌ன்றாட‌வில்லை. ஆறுமுக‌சாமியோ 'என்னைக் கைது செய்' என்று போலீசிட‌ம் போராடினார். நீதிம‌ன்ற‌த்தில் ம‌ன்றாடினார். ஏனென்றால் நாங்க‌ள் அக‌ற்ற‌ப்ப‌ட்ட‌பின் அவ‌ருக்குத் துணை நிற்க‌ அங்கே யாரும் இச்லை. த‌மிழுக்குத் துணை நிற்க‌ ஒரு த‌மிழ‌னுமில்லை. ப‌க்த‌னுக்குத் துணை நிற்க‌ ஒரு ப‌க்த‌னுமில்லை.
ஆறுமுக‌சாமி என்ற எஃகுறுதி மிக்க ஒரு கிழவனை முன்னிறுத்திப் போராடித் தமிழ் பாடும் உரிமையை நாங்கள் பெற்றோம். அரசாணை வந்ததை உலகறியும். அன்று காலை ஆறுமுகசாமி பாடப் போகிறார் என்பதை அந்த மாவட்டமே அறியும். தில்லைக் கோயிலைச் சுற்றியிருக்கும் ஆதீனங்கள் எத்தனை? தருமபுரம், திருவாவடுதுறை, திருப்பனந்தாள்...! எல்லாம் ஏக்கர் கணக்கில் தமிழ் வளர்த்த ஆதீனங்கள்! தமிழ் நெய்யால் தொந்தி வளர்த்த ஆதீனங்கள்! ஆறுமுகசாமியோ நெய்யைக் கண்ணாலும் கண்டறியாத ஒரு பரதேசி.
தில்லையைச் சுற்றித்தான் எத்தனை ஓதுவாமூர்த்திகள்! சைவத் திருமறை வளர்க்கத்தான் எத்தனை மன்றங்கள்! எத்தனை புலவர்கள், அறிஞர்கள், விழாக்கள், பட்டங்கள், விருதுகள்! வாய்க்கு வாய் 'திருச்சிற்றம்பலத்தை' மென்று துப்பும் உதடுகள்! ஆனால் உதைபட்டவர்களோ நெற்றி நிறைய நீரணிந்த பக்கர்கள் அல்ல. திருமறையில் ஒருவரியைக் கூட ஓதியறியாத செஞ்சட்டை அணிந்த எமது தோழர்கள்!எங்கள் பெருமையை எடுத்தியம்புவதற்காக இவற்றைக் கூறவில்லை. தமிழ‌கத்தின் சிறுமையை எண்ணி மனம் நொந்ததனால் கூறுகிறோம். நாம் மானமும் சொரணையும் உள்ள மக்களாயின் தமிழ் என்றைக்கோ சிற்றம்பல மேடை ஏறியிருக்கும். அதற்கு அரசாணையின் துணை தேவையில்லை. மானத்தையும் சொரணையையும் அரசாணையால் உருவாக்கமுடியாது. சட்டத்தால் உரிமையை வழங்கத்தான் முடியும். அந்த உரிமையைப் பயன்படுத்தும் உணர்வை வழங்கமுடியாது.கருணாநிதி அரசின் இடத்தில் ஜெயலலிதாவின் அரசு இருந்திருக்குமானால் இப்படியொரு அரசாணையே வந்திருக்காது. உண்மைதான். ஆளும் இந்த அரசாங்கங்களிடையே வேறுபாடு இருக்கிறது. ஆனால் ஆளப்படும் மக்கள்? ஒருவேளை இப்படியொரு அரசாணை வந்திருக்கவில்லையென்றாலும், தமிழகம் குமுறிக் கொந்தளித்து எழும்பியிருக்கப் போவதில்லை. க‌சப்பானதுதான், எனினும் இதுதான் உண்மை.
இந்த உண்மையைத்தான் வேறுவார்த்தைகளில் கூறுகிறார்கள் தீட்சிதப் பார்ப்பனர்கள். "யாருக்கும் பிரச்சினை இல்லை, இவர்கள் மட்டும்தான் பிரச்சினை செய்கிறார்கள்" என்று குற்றம் சாட்டுகிறார்கள். தீட்ச்சிதன் வாயிலிருந்து வந்தாலும் உண்மை உண்மைதானே!
இந்த‌ உண்மையின் கார‌ண‌மாக‌த்தான் ந‌ந்த‌ன் நுழைந்த‌ தெற்கு வாயிலை அடைத்து தீட்சித‌ர்க‌ள் எழுப்பிய‌ தீண்டாமைச் சுவ‌ர் இன்னும் நின்று கொண்டிருக்கிற‌து.சிற்ற‌ம்ப‌ல‌ மேடையில் த‌மிழ் ஏற‌லாமென்ற‌ அர‌சாணை வ‌ந்த‌பிற‌கும், த‌மிழ‌ர்க‌ள் கிடைக்காம‌ல் அந்த‌ மேடை த‌வித்துக் கொண்டிருக்கிற‌து.

இத்த‌னைக்குப் பிற‌கும் ஆறுமுக‌சாமியின் போராட்ட‌த்தைத் தொட‌ர்வ‌த‌ற்கு அடுத்தொரு 'சாமி' வ‌ர‌வில்லையென்றால், எந்த‌ச் சாமியின் மீதும் பூத‌தின் மீதும் ந‌ம்பிக்கையில்லாத‌ க‌ம்யூனிஸ்ருக‌ளாகிய‌ நாங்க‌ள் அந்த‌ மேடைமீது ஏறிநின்று "உல‌கெலாம் உண‌ர்ந்தோத‌ற்க‌ரிய‌வ‌ன்" என்று பாட‌ வேண்டியிருக்கும். அது இன்னொரு வ‌ர‌லாற்றுச் சாத‌னையாக‌ அமைய‌ நேரிடும்.

அத்த‌கைய‌தொரு 'சாத‌னை' த‌மிழ‌க‌த்துக்கு நிச்ச‌ய‌ம் பெருமை சேர்க்காது. எங்க‌ளுக்குச் சிறுமையும் சேர்க்காது.


'புதிய‌க‌லாச்சார‌ம்' மார்ச்/08 இத‌ழில் வெளியான‌ த‌லைய‌ங்க‌க் க‌ட்டுரை...

'திருவரங்கத்தில் விடையாற்றியும்....திருவையாற்றில் அசுரவியூகமும்....

யுகமாய்த் தொடரும் தேவாசுரப் போரின்

புதிய அத்தியாயம் எழுதப்பட்டது திருவரங்கத்தில்


தேவாசுரப்போரில் அசுரர் பங்கையும்

தேவருக்குத் தாரை வார்த்த அசதியில்

பள்ளி கொண்டிருந்த

அரங்க நாதன் அறிதுயில் கலைய‌

அரங்கேறியது திருப்பள்ளி எழுச்சி


மூலவர் கருவறை வழிமறைக்கும்

நந்தீஸ்வர இந்து முன்னணி

ஊர்வலத்திற்கு மட்டுமில்லை

சீரங்கத்தில் அவாளின்

உத்திரை வீதியும் சித்திரை வீதியும் தாண்டி

உற்சவ மூர்த்திகளையே

உலா விட மறுத்தன சூத்திர வீதிகள்


அன்றுதான் முதன் முதலாக அங்கே

பார்ப்பானும் பகவானும் சண்டாளன் ஆயினர்

பஞ்சமனும் சூத்திரனும் பெண்டுகளும்

பள்ளிகொண்டானைத் தொட்டுத் துயிலெழுப்பி

பள்ளி எழுச்சி பாடினர்

பிறவிப் பயனை எய்தியே விட்டனன்

'பிறவா யாக்கை'ப் பெம்மான் தானும்.


பட்டாசு கொளுத்தி மிட்டாய் கொடுத்து

பூசுர அகம்பாவ துவம்சம் செய்த‌

அசுர தீபாவளி ஆரம்ப மானது.


காலகால நூல்வேலி கிழித்தே

கருவறை நுழைந்தது செம்பதாகை

அம்பேத்காரும் பெரியாரும்

ஆங்கெழுந் தருளினர்


ராமஜென்ம பூமியென அனுமார்கள்

கொடியேற்றிய கரசேவைக்கு

அம்பேத்கர் பிறந்த மண்ணின்

பெரியார் பூமியின்

விடையாற்றி இது.

.............


அடுத்த அத்தியாயம் அசுர கானமாய்

ஆரம்ப மானது தஞ்சை மண்ணில்....


மூப்பனார்கள் தோப்பனார்

முப்பாட்டனார் காலந்தொட்டே வழிவழியாய்க்

"கோத்திரஞ்சொல்லு - உன்

கோத்திரத்தின் சூத்திரம் சொல்"லெனச்

சொல்லச் சொல்லியே சூத்திரர் நுழையாமல்

அவாளை மாத்திரமே அனுமதித்த‌

உஞ்சி விருத்திப் பரம்பரை ஆதிக்கப்

பஞ்ச நதீஸ்வர பரிபாலன ஐயாற்றில்

அரங்கேறியது ஓர் அசுர வியூகம்


தியாகப் பிரம்ம ஆராதனையில்

பஞ்சரத்தினக் கீர்த்தனை

மங்களம் பாடுமுன்

திக்குகளெல்லாம் திக்குமுக்காட‌

ஊடறுத் தொலித்தது ஒயிலாட்ட விசில் விசில்...அபயகரமருளும் உபயதாரர்

மூப்பனர்ஜீயின் முகமெலாம் வேர்க்க‌

'தூரதர்சனி'ன் கேமரா அங்கிள்கள்

தாறுமாறாய்ப் புறம்புறம் திரிய‌

அரங்கத்தில் விரிந்தன செம்பதாகைகள்


சங்கு சக்கரங் கதிகலங்கிடச்

சனாதனத்தின் குலைநடுங்கிட‌

கங்கைவார்குழல் 'திங்குதிங்'கெனச்

சைவாதீனம் பதைபதைத்திட‌

அசுரகானம் முழங்குகின்றது

அசுர வித்துகள் முளைவிட்டெழுந்தன.


"அப‌ச்சார‌ம் அப‌ச்சார‌ம்

அப‌ஸ்வ‌ர‌ம் அப‌ஸ்வ‌ர‌ம்

ஆப‌த்து ஆப‌த்"தென‌ப்

ப‌றைகேட் ட‌திர்ந்த‌

பூசுர‌ அசுண‌ங்க‌ள் புல‌ப்ப‌லாயின‌


ஆர்ப்பாட்ட‌த்தின் போர்ப்ப‌ர‌ணியை

ஐயாற்றின் வீதிக‌ளில் ம‌ட்டுமில்லை

ஐயாற‌ப்ப‌ன் செவிப்ப‌றையினிலும்

அறைந்த‌றைந்த‌திர்ந்த‌து ப‌றை


அவ‌னுக்கு ம‌ட்டும் இல்லையா ஆசை?

ஏழிசையாய் இசிப்ப‌ய‌னாய்

நிற‌வ‌ன‌ன்றோ அவ்வீச‌ன்!

எந்நாட்ட‌வ‌ர்க்கும் இறைவ‌னே எனினும்

எத்த‌னை நாளாய் அதையே கேட்க‌

'இராம‌ நீ ச‌மான‌ம் எவ‌'ரென‌ ம‌ட்டும்?

த‌ஞ்சையில் கேட்ட‌ த‌மிழிசை அமுதை,

'ப‌ண்ணாய்ந்த சுந்தரேசன்'

பண்தோய்ந்த செந்த‌மிழை

மீண்டும் மீண்டும்

ஐயாற்றிலும் கேட்க‌ அவ‌னுக்கும் ஆசை


த‌ண்ட‌பாணித்தேசிக‌ர் பாடிய‌

த‌மிழிசை மேடையை

அசுர‌கான‌ம் புகுந்த‌ மாசென‌

சீர‌ங்க‌க் க‌ருவ‌ரையைத்

தீட்டுக்க‌ழித்த‌ திமிர்த்த‌ன‌மும்

தேவாதிதேவ‌ப் ப‌ழியுந் துடைத்தே

மீட்டுக் கொடுத்த‌து அசுர‌கான‌மே


ஐயாற‌ப்ப‌னும் அர‌ங்க‌நாத‌னும்

க‌ட்டுண்டு கிட‌ந்த‌ன‌ர்

ஏழிசைச் சூழ‌லில்....


அல‌ம‌ந்து சில‌ம‌ந்தி

ம‌திலேறி முக‌ம் பார்க்கும் திருவை யாறே!...


"நெடுமை நெடுங்கால‌மெலாம் ஆரிய‌த்தின் கையால்

நெஞ்சொடிக்க‌ப்ப‌ட்ட‌ க‌தை மாறி ந‌ட‌ந்தேறும்...

புற‌த்தெழுந்த‌ புதுப்பாட்டாய்ப் பொய்ய‌ழிந்த‌ செய்தி

புதுப்ப‌ண்ணின் இசையோடு யாழ்ந‌ர‌ம்பில் ஓடும்".


*பொதிகைச் சித்த‌ர்.

'புதிய‌ க‌லாச்சார‌ம்' மே'1997 இத‌ழில் வெளியான‌க‌விதை இது...

பால‌ஸ்தீனிய‌ன் நான், என்னில் வாழ்கிற‌து என் தேச‌ம்....

யாரும் பறித்துவிடமுடியாது என்னிடமிருந்து

என் அடையாளத்தை.

ஏனெனில் அது என்னுடையது.


நான் பாலஸ்தீனியன்.

என் மண்ணில் பெருகும் ஆறு நான்.

குழப்பங்களிலிருந்தும் அழிவுகளிலிருந்தும்

திமிறி நிமிர்ந்து நிற்கும் கம்பீரமான மலை நான்.


என் வளமை சூழ் பள்ளத்தாக்குகளில் ஒளிர்ந்து

என் வறண்ட பாலைகளை வாட்டும்

காலை சூரியனை எதிர்கொண்டு

அழைக்கிறேன் நான்.


இரத்தக்கறை படிந்த் என் மலைகளில்

முகிழ்க்கும்

செந்நிறக் கஞ்சாப்பூவும் மஞ்சள் மலரும் நான்.

என் தாழ்வாரங்களில் எதிரொளித்து

என் இருப்பின் ஒவ்வோர் இழையிலும் அதிரும்

சுதந்திரப் போர் முழக்கம் நான்.


பாலஸ்தீனியன் நான்.
ஆரஞ்சுத் தோட்டங்கள் எசுமிச்சை மலர்கள்

சுதந்திரத்தை ரீங்கரிக்கும் காட்டுத்தேனீக்கள்

இவற்றின் பெருமைமிகு உரிமையாளன் நான்.


நான் தான் அந்த பாலஸ்தீனியன்.

இஸ்ரேல் எனும் கோலியாத்தை எதிர்கொண்டு

கல் ஏந்தி நிற்கும் டேவிட் நான்.

உண்மை என் பக்கம் கடவுள் என் பக்கம்

அச்சமில்லாதவன் நான்.


இறப்பேனாகில்,

தேவதைகளின் கீத‌ம் என்னைக் கவுரவிக்கும்

பிறிதொரு நாள்
நீண்டு காத்திருக்கும் என் க‌ர‌ங்க‌ளைப் ப‌ற்றி

என்னுட‌ன் சொர்க்க‌த்தில் இணைவ‌ர்

என் பெற்றோர்.


க‌ண்ணீர் நான்.

ப‌றிகொடுத்த‌ பிள்ளைகளை எண்ணி

விசும்பும் தாய்மார்க‌ளின் க‌ண்ணீர் நான்.

எம்மைத் துன்புறுத்தி ந‌சுக்குவோர்

காண‌விருக்கும் பேர‌ழிவை

முன்ன‌றிந்து சொன்ன‌ தீர்க்க‌த‌ரிசிக‌ளின்

கால‌டித்த‌ன‌ம் நான்.


என் க‌ட‌ற்ப‌ர‌ப்பின் மீது சுத‌ந்திர‌மாய் நீந்தும்

புறாக்க‌ளும் இசைப்ப‌ற‌வைக‌ளும்

க‌ட‌ல்நாரைக‌ளும் என் சோத‌ர‌ர்க‌ள்.

நான் பால‌ஸ்தீனிய‌ன்,

என‌வே நான்.


இழிவுசெய்து என்னைக் கொல்ல‌வ‌ரும்

டாங்கிக‌ள், துப்பாக்கிக‌ள், குண்டுக‌ள்

எதுவும் யாரும்,

என் அடையாள‌த்தைப் ப‌றிக்க‌வே முடியாது.

என்னில் வாழ்கிற‌து என் தேச‌ம்.


சுத‌ந்திர‌த்தின் முழ‌க்க‌ம் நான்.

எதைவேண்டுமானாலும்

அவ‌ர்க‌ள் ப‌றித்துக் கொள்ள‌ட்டும்,

என் அடையாள‌த்தைப் ப‌றிக்க‌வே முடியாது.

என் க‌வுர‌வ‌த்தை ப‌றிக்க‌முடியாது.

பால‌ஸ்தீனிய‌ன் நான்.


இ. யாகி
ந‌ன்றி 'புதிய‌ க‌லாச்சார‌ம்'