Thursday, January 29, 2009

பார்ப்பன-இந்து மதவெறியின் பிதாமகன் காந்தியின் நினைவுநாள் - மதவெறி எதிர்ப்பு நாளாம்......

நாளை ஜனவரி-30. வருணாசிரம-பார்ப்பன-இந்துமதவெறியின் பிதாமகனான காந்தியின் நினைவுநாள். இந்நாளை ’மதவெறி எதிர்ப்பு நாள்’ என்று சொல்லி தமிழ்நாடு முழுக்க தனது அமைப்புக்கே உரிய கேலிக்கூத்தை நடத்தவிருக்கிறது சிபிஎம் கட்சியின் மனமகிழ் மன்றமான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்.

மாவீரன் பகத்சிங்கையும் காந்தியையும் கொண்டாடுகிற மோசடியைக் கண்டிக்காமல் இருக்கமுடியுமா? மகத்தான தோழர் பகத்சிங்கின் சாவை எதிர்பார்த்து அரசியல் நடத்திய துரோகி காந்தியைக் கொண்டாடுவதன் மூலம் பகத்சிங்கை இந்த கேலிக்கூத்துக்கள் அவமதிப்பதாகத்தானே இருக்கிறது? இதுமட்டுமா.....

தான் பிறந்த மதத்தின் அடையாளமாக இருந்த தனது சீக்கியத் தலைப்பாகையினை பகத்சிங் பெருமிதத்தோடு தூக்கியெறிந்து அதற்கான காரணத்தையும் ஆணியறைந்ததுபோல சொல்லிய பிறகும் இன்றும் அவரது படங்கள் இந்த சிபிஎம் போலிக் கும்பலால் தலைப்பாகையுடன் பயன்படுத்தப்படுவது ஏன் தெரியுமா? சமீபத்தில் மறைந்த சிபிஎம் கட்சியின் சுர்ஜித்சிங், சாகும் வரை தனது மத அடையாளத்தை இறக்கிவைக்க மனமின்றி இருந்ததைச் சுட்டிக்காட்டி விமர்சனங்கள் எழுந்தபிறகு அவரது அம்மனத்தை மறைக்க மோசடியாக பகத்சிங்க்கும் தலைப்பாகையினை அணிவித்து அறிமுகப்படுத்துகிறது இப்போலிக் கும்பல்.தோழர் பகத்சிங் தலைப்பாகையுடன் இருக்கும் படங்களை தனது அமைப்புகளின் மாநில-மைய அளவிலான நிகழ்வுகளிலேயே, மேடையிலேயே வைத்து அந்த மகத்தான தியாகத் தோழனை அவமானப்படுத்துகிறார்கள்.

போலிகளிடமிருந்து கட்சியின் பெயரையும் கொடியையும் மீட்டெடுக்கவேண்டியதோடு இதுபோன்ற மகத்தான தோழர்களையும் சேர்த்தே மீட்டெடுக்க வேண்டியுள்ளது. துரோகி காந்தியினை பெருமிதத்தோடு உயர்த்திப்பிடிக்கும் இந்தக் கயவாளிகளின் கைகளில் மாவீரன் பகத்சிங் அவமதிக்கப்படுவதை முடிவுக்குக் கொண்டுவருவோம்.

தோழமையுடன்,
ஏகலைவன்.

------------------------------------------------------------------------------------


சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சேலம் வேலு காந்தி எனும் 82 வயது முதியவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்தார். அம்மனுவில், சாதி நம்பிக்கையற்றோர், "கலப்பு'த் திருமணம் செய்து கொண்டவர்கள், அனாதைக் குழந்தைகள், மதம் மாறியோர் ஆகிய நான்கு வகையினரைக் கொண்டு, "காந்தி சாதி' என்ற ஒரு புதிய சாதியை உருவாக்க உத்தரவு தருமாறு நீதிமன்றத்திடம் வேண்டுகோள் விடுத்தார். இதன் மூலம் சாதிகள் ஒழிய வழிபிறக்கும் என வாதிட்டார்.

அரசியல் சாசனத்தின் அடிப்படையில், ஒரு புதிய சாதியை உருவாக்க தமக்கு அதிகாரம் இல்லையெனக் கூறி, நீதிபதிகள் அம்மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

நாமகரணங்கள் நமக்கு புதியனவல்ல. ஹரியின் குழந்தைகள் எனப் பெயர் சூட்டினார் காந்தி. காந்தியின் குழந்தைகள் எனப் பெயர் சூட்ட வேண்டுமென ஆதங்கப்படுகிறார் காந்தியின் சீடர். பெயர் சூட்டுவதிருக்கட்டும். "பீ'யள்ளப் போவது யார் என்பதல்லவா கேள்வி. அன்றே காந்தியின் சாதி ஒழிப்பு சண்ட பிரசண்டங்களுக்கும், அவரது நடைமுறைக்குமான முரண்பாட்டை அம்பேத்கர் திரை கிழித்திருக்கிறார். ஆனால், காந்தி தனது வாழ்நாள் முழுவதும் அம்பேத்கர் எழுப்பிய கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை.

குறைந்தபட்சம் காங்கிரசில் உறுப்பினராக சேர தீண்டாமையைக் கடைப்பிடிக்கக் கூடாது என ஒரு விதியைக் கொண்டு வருவதற்குக் கூட காந்தி தயாராக இருந்ததில்லை. காந்தியால் சோசலிசத்திற்கு மாற்றாக வைக்கப்பட்ட தருமகர்த்தா முறையை நடைமுறைப்படுத்தக் கிளம்பிய வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்தின் தோல்வி காந்தியத்தின் தோல்வியல்ல என்பது போல மூடி மறைக்கப்பட்டு விட்டது. எனினும் காந்தி மீண்டும் மீண்டும் மக்கள் அரங்கில் முன்நிறுத்தப்படுவது மட்டும் இன்றளவும் நின்றபாடில்லை.

ஆனால், காந்தி சொன்ன கிராமப் பொருளாதார முறையை 1947லேயே காங்கிரசு கைக்கொள்ளவில்லை. காங்கிரசைக் கலைக்கச் சொன்ன காந்தியின் யோசனையை ஒரு பொருட்டாகக் கூட எவரும் கருதவில்லை. குடும்பக் கட்டுப்பாடு கூடாது, ஆலைத் தொழில்கள் கூடாது போன்ற "அற்புதமான' கருத்துக்களை மட்டுமல்ல; ஜனாதிபதி மாளிகையை இலவச மருத்துவமனையாக்க வேண்டுமென்ற தேசப்பிதாவின் "சின்ன சின்ன ஆசைகளை'க் கூட யாரும் கண்டு கொள்ளவில்லை.எனினும், ஐநூறு ரூபாய் நோட்டிலும், காந்தி ஆசிரமங்களிலும், நாடு முழுவதிலுமுள்ள சிலைகளிலும், அரசாங்க உரைகளிலும் காந்தி ஒரு மந்திரம் போல தொடர்ந்து நிலைநிறுத்தப்படுகிறார். காந்தி பிறந்த குஜராத்தில் திரையிட மறுக்கப்பட்ட "பர்சானியா' திரைப்படம், குஜராத் முசுலீம் இனப்படுகொலையால் மனம் உடைந்து போகிற ஒரு வெளிநாட்டு காந்திய மாணவனை கதாபாத்திரமாகக் கொண்டிருந்தது. சோனியா காந்தியோ சத்தியாக்கிரகத்தின் "மகிமையை', "உலகப் பொருளாதார மன்ற'த்தில் வியந்தோதுகிறார்.

காந்தியால் மீண்டும் மீண்டும் குழப்பப்பட்ட சத்தியாக்கிரகம், இன்றும் கூட மக்கள் எதிர்ப்பை மழுங்கடிப்பதில், வன்முறை குறித்த நியாயத்திற்கு அப்பாற்பட்ட தார்மீக அச்சத்தை உருவாக்குவதில் முன் நிற்கிறது. மணிப்பூரில், இந்திய இராணுவத்தின் அட்டூழியங்களுக்கு எதிராக, இந்திய அரசின் கொடூரச் சட்டமான "ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தை' திரும்பப்பெறக் கோரி, கடந்த ஏழு ஆண்டுகளாக உண்ணாவிரதமிருந்து வரும் ஐரோம் சர்மிளா இதற்கு ஒரு உதாரணம். சர்மிளா செத்துப் பிணமானால் கூட இந்திய அரசு அச்சட்டத்தை திரும்பப் பெறப் போவதில்லை.

காந்தியின் தெளிவற்ற, மூடு மந்திரமான மதச்சார்பின்மை 1947 பிரிவினையின்போதே படுதோல்வியடைந்த போதிலும், இன்றும் காங்கிரசாலும், போலி கம்யூனிஸ்டுகளாலும் உதாரணமாக முன்வைக்கப் படுகிறது. ஷாபானு வழக்கிலும், ராம ஜென்ம பூமி விவகாரத்திலும், குஜராத் படுகொலையிலும் காந்திய மதச்சார்பின்மை வெங்காயம் மொத்தமாய் உரிந்து போனது. காவிப் படையின் கொலை வெறியாட்டத்திற்கு சொல்லில் மௌன சாட்சியாகவும், செயலில் நம்பகமான கூட்டாளியாகவும் காங்கிரசு துணை போனது. ஆனால், இன்னமும் மதச்சார்பின்மைக்கு போலித்தனமான நடுநிலைமையே விளக்கமாக அளிக்கப்படுகிறது.

உண்மையில், காந்தி வாழ்ந்த காலத்திலேயே காந்தியம் தோற்றுப் போய் விட்டது. ஆனால் அந்த உண்மைகள் மூடி மறைக்கப்படுகிறது. அரை உண்மைகள் ஊதிப்பெருக்கப்படுகின்றன. பொய்கள் அதிகாரப்பூர்வ வரலாறாகிறது. அப்படித்தான் நாம் காந்தியை ஏற்றுக் கொள்ளச் செய்யப்பட்டிருக்கிறோம். அவ்வாறு மூடி மறைக்கப்பட்ட சில வரலாற்று உண்மைகளின் ஒளியில், இப்பொய்களை அடையாளம் காண்போம்.
****
காந்தி அவரது காலத்திலேயே தமது முரண்பாடுகளுக்காக மிகப் பலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். ஒரு விவாதத்தில், ""எனது முரண்பட்ட நிலைகளைக் குறித்த நிறைய குற்றச்சாட்டுக்களை நான் படித்திருக்கிறேன். கேட்டிருக்கிறேன். ஆனால், அவற்றிற்கு நான் பதில் கூறுவதில்லை. ஏனெனில், அவை வேறு யாரையும் பாதிப்பதில்லை. என்னை மட்டுமே பாதிக்கின்றன'' என காந்தி எழுதினார். ஆனால், இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தரும் "பொறுப்பை' ஏற்றிருந்த காந்தியின் முரண்பட்ட நிலைகள் எவ்வாறு இந்த நாட்டின் ஒட்டுமொத்த எதிர்காலத்தையே பாதித்தது என்பதைத்தான் வரலாறு காட்டுகிறது.

அகிம்சைதான் காந்தியத்தின் அடிப்படைக் கொள்கையாகச் சொல்லப்படுகிறது. உலகிலேயே முதன்முறையாக காந்தி கண்ட அறவழிப் போராட்ட முறையாக சத்தியாக்கிரகம் முன் வைக்கப்படுகிறது. ஆனால், உலக வரலாற்றில், நியாயமான கோரிக்கைகளுக்காக, எதிர்த்துத் தாக்காமல், துன்பங்களை தாமே முன்வந்து ஏற்றுக் கொள்ளும் சாத்வீகப் போராட்ட முறை இயேசு, துவக் கால கிறிஸ்தவர்களிலிருந்து ரசியாவின் டியூகோபார்கள் எனப்படும் பிரிவினர் வரை பலரால் ஏற்கெனவே கைக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், காந்தி தனது சத்தியாக்கிரக முறை சாத்வீக போராட்ட முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டதென விடாப்பிடியாக சாதித்தார்.

"காந்தியும் அவரது காலங்களும்' என்ற நூலில் காந்தியம் எனும் கருத்தாக்கம் உருவான முறையை சாரமாக எழுத்தாளர் மன்மத்நாத் குப்தா இவ்வாறு குறிப்பிடுகிறார். ""புத்திசாலித்தனமாக கணக்கற்ற தார்மீக, தத்துவார்த்த, ஆன்மீகச் சரடுகளை சுற்றிக் காட்டியதன் மூலம், முந்தைய சாத்வீக இயக்கங்களிலிருந்து சத்தியாக்கிரகம் மாறுபட்டதென காட்ட முயன்றார். நூற்றாண்டுகளைக் கடந்த இந்துக் கலாச்சாரத்தின் மீதேறி சுலபமாகப் பயணிக்க முயன்றார். அவரே ஒத்துக் கொண்டதைப் போல, இதற்கு தேவையான தயாரிப்புகள் இல்லாத போதும், வறட்டுப் பிடிவாதத்தின் மூலமாக மட்டுமே அவரால் தனக்கென ஒரு கருத்தாக்கத்தை உருவாக்க முடிந்தது.''

தமது ஆன்மீகச் சொல்லாடல்களின் மூலம் எக்கருத்தையும் தனக்கேற்ற முறையில் காந்தியால் வளைக்க முடிந்தது. சிறையிலிருக்கும் புரட்சியாளனின் உண்ணாவிரதத்தைக் கூட காந்தி "வன்முறை' என்றார். ஏனெனில் அவனது உள்ளத்தில் வன்முறை இருக்கிறதாம். நிலப்பிரபுக்களுக்கு விவசாயிகள் வரி கொடுக்க மறுத்து, சாத்வீக முறையிலேயே போராடிய போதும் கூட, அது வன்முறை என்றார்.

இவ்வாறு வன்முறைக்கும், அகிம்சைக்கும் கணக்கற்ற விளக்கங்கள் அளித்த காந்திதான், தென்னாப்பிரிக்காவில், முற்றிலும் அநீதியான வகையில் ஜூலூ கலகப் போரிலும், போயர் யுத்தத்திலும், முதல் உலகப் போரிலும், பிரிட்டிஷ் சிப்பாய்களுக்கு ஆம்புலன்ஸ் சேவை செய்தார். இதனைக் கேள்வி கேட்டவர்களுக்கெல்லாம், ""இதன் மூலம் பிரிட்டிஷ் பிரஜை என்ற முறையில் தமது கடமையை ஆற்றினால்தான், உரிமைகளைப் பெற முடியும்'' என விளக்கமளித்தார்.

முதல் உலகப் போரில் ஆங்கிலப் படைகளுக்கு சேவை செய்த பொழுது, அவரது நெருங்கிய நண்பர்களே அவரை விமர்சித்ததற்கு, ""போரில் பங்கேற்பது என்பது அகிம்சையோடு ஒருக்காலும் பொருந்தாது என்பதை நானறிவேன். ஆனால் ஒருவருக்கு அவரது கடமைகள் குறித்து, எல்லாச் சமயங்களிலும் தெளிவான பார்வை பெற வாய்ப்புகள் இருப்பதில்லை. சத்தியத்தின் பாதையில் பயணிப்பவன் பல சமயங்களில் இருட்டில்தான் செல்ல வேண்டியிருக்கிறது'' என நியாயம் கற்பித்தார்.

பின்னர், 1921இல் தமது கண்கள் திறந்து விட்டதாகவும், அவ்வாறு கருதியது தவறு என்றும், பிரிட்டிஷ் அரசு தம்மை பிரஜையாகவே கருதவில்லையென்றும், எந்த உரிமைகளும் அற்ற ஒரு தாழ்த்தப்பட்ட பராரியாகவே இந்த அரசின்கீழ் தான் உணர்வதாகவும் "யங் இந்தியா'வில் குறிப்பிட்டார். ஆனால், அக்கண்கள் நீண்டநாள் திறந்திருக்கவில்லை. மீண்டும் 1928இல் முதல் உலகப் போரின் பங்கேற்பு குறித்த நிருபர்களின் கேள்விக்கு, ""போருக்கு எதிராக என்னுள் இப்பொழுது இருக்கும் அதே அளவிலான எதிர்ப்புணர்வு அப்பொழுதும் இருந்தது. ஆனால், இந்த உலகத்தில் நாம் விரும்பாத பல விசயங்களை நாம் செய்ய வேண்டியிருக்கிறது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.'' பச்சை அயோக்கியத்தனத்தை இயலாமையாகக் காட்டித் தப்பிக்க முயலும், அறிவு நாணயமற்ற மனிதனால் மட்டுமே இவ்வாறு விளக்கம் அளிக்க முடியும்.

""சுதந்திரம் என ஒன்று வருமானால், அது மாபெரும் பிரிட்டிஷ் அரசுடன் ஒரு கண்ணியமான ஒப்பந்தத்தின் மூலமே வரவேண்டும்'' என 1929இல் காந்தி எழுதினார். காந்திய சுதந்திரப் போராட்டத்தின் சாராம்சத்தை, அதன் திசைவழியை, இந்த ஒற்றை வரியை விட வேறெதுவும் விளக்கிவிட முடியாது. காந்தி முரண்பாடற்று, கடைபிடித்த ஒரே கொள்கை இதுதான். ஏனெனில், சுதந்திரம் மக்களால் சமரசமற்று வென்றெடுக்கப்படுமாயின், அது பிரிட்டிஷ் ஆட்சியை மட்டுமல்ல, முதலாளிகளையும், நிலப்பிரபுக்களையும் மட்டுமல்ல, தன்னையும் சேர்த்தே தூக்கி எறிந்து விடும் என்பதை காந்தி தெளிவாக அறிந்திருந்தார். அதனால்தான், நடைமுறையில் மக்கள் சக்தியின் இயல்பான கோபாவேசத்தின் சிறுபொறி எழும்பினால் கூட, உடனடியாக அப்போராட்டத்தையே கைவிட்டு மக்களை திகைத்துப் பின்வாங்கச் செய்தார்.

இதனை 1921 ஒத்துழையாமை இயக்கம் முதல் 1942 தனிநபர் சத்தியாக்கிரகம் அல்லது வெள்ளையனே வெளியேறு இயக்கம் வரை, நாம் காண முடிகிறது. காந்தி நடத்திய மூன்று இயக்கங்களிலும், போராட்டத்தின் போக்கில் மக்கள் போலீசு மீது எதிர்த்தாக்குதல் தொடுப்பதும், அவர்களைச் சிறை பிடிப்பதும், அரசுச் சொத்துக்களை நாசப்படுத்துவதும் தன்னியல்பாக நிகழ்ந்தது.

1921இல் சௌரி சௌரான் விவசாயிகள் காவல் நிலையத்திற்கு தீ வைத்ததையொட்டி, ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தியதாக இருக்கட்டும்; 1930இல் மக்களின் போராட்டத் தீ பற்றி எரிந்த வேளையில் வைஸ்ராய் இர்வினோடு ஒருதலைப்பட்சமான ஒப்பந்தத்திற்கு முன்வந்து, போராட்டத்தை கைவிட்டதாக இருக்கட்டும்; 1942இல் "தான் எந்தப் போராட்டத்தையும் அறிவிக்கவில்லை. மக்களது வன்முறைக்கு தாம் பொறுப்பல்ல' என ஆகஸ்டு போராட்டத்தை கைகழுவியதாக இருக்கட்டும், காந்தியின் வன்முறைக்கெதிரான பரிசுத்த வேடத்திற்குள், போராட்டம் தனது கைகளிலிருந்து நழுவ விடக்கூடாதென்ற இடையறாத அச்சம் ஒளித்து கொண்டிருந்தது.

காந்தியப் போராட்டத்தினுடைய வர்க்கச் சார்பு முதலாளிகளையும், வணிகர்களையும் சார்ந்திருந்தது தற்செயலானதல்ல. அகமதாபாத் ஆலைத் தொழிலாளர் போராட்டத்தின் அனுபவத்திலிருந்தும், பர்தோலி விவசாயிகளின் வரிகொடா இயக்க போராட்டத்திலிருந்தும், தொழிலாளர், விவசாயிகளின் வர்க்க கோரிக்கைகளுக்காக போராடுவதும், அவர்களை விடுதலைப் போராட்டத்தில் களமிறங்கச் செய்வதும் அபாயகரமானது எனத் தான் உணர்வதாக காந்தி வெளியிட்ட அறிக்கைகளை, அன்றே தமது "இளம் அரசியல் தொண்டர்களுக்கு' எனும் கட்டுரையில் மாபெரும் புரட்சியாளர் தோழர் பகத்சிங் சுட்டிக் காட்டினார். சுருக்கமாகச் சொன்னால், காந்தியப் போராட்டத்தின் வர்க்க உள்ளடக்கம்தான் அப்போராட்டத்தின் வடிவத்தையும் வரம்புகளையும் தீர்மானித்தது. அகிம்சை, சத்தியாக்கிரகம் என்பதெல்லாம் வெறுமனே வார்த்தைப் பூச்சுக்கள் மட்டுமே.

1929இல் சுதந்திரம் கிடைக்காமலேயே சுதந்திரக் கொடியேற்றும் கோமாளித்தனத்தை அரங்கேற்றினார், காந்தி. வீரதீரமாக "முழுச் சுதந்திரமே இலட்சியம்' என்று அறிவித்த கையோடு வைஸ்ராய்க்கு எழுதிய நீண்ட கடிதத்தில், ""என்னால் இயன்ற வரை, தங்களுக்கு எத்தகைய அனாவசியமான தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தும் எண்ணம் எனக்கில்லை'' எனக் குழைந்தார். வைஸ்ராய், ஒரு அலட்சியமான பதிலை வீசியெறிந்தார். ""நான் மண்டியிட்டு உணவு கேட்டேன். ஆனால், எனக்கு கல்தான் கிடைத்திருக்கிறது'' எனப் புலம்பினார் காந்தி. வைஸ்ராய்க்கு "தர்மசங்கடத்தை' ஏற்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை காந்திக்கு ஏற்பட்டுவிட்டது. அந்த தர்மசங்கடத்திற்கு பெயர்தான் "தண்டி யாத்திரை'.

ஆனால், ஆங்கில அரசு குயுக்தியாக காந்தியின் சகாக்களை கைது செய்தது; காந்தியை மட்டும் கைது செய்யாமல் விட்டு, அவரைச் சிறுமைப்படுத்தியது. உடனே அகிம்சாமூர்த்தி ஒரு அழகான தந்திரம் செய்தார். உப்புக் கிடங்குகளைச் சோதனையிட்டு, உப்பைப் பறிமுதல் செய்ய முடிவு செய்தார். வேறு வழியின்றி, அவரை அரசு கைது செய்ய நேர்ந்தது. பறிமுதல் செய்வது சத்தியாக்கிரகம் என்றால், வங்கியை கொள்ளையடிப்பது கூட சத்தியாக்கிரகம் தானே? "தனது தலைமையை காப்பாற்றிக் கொள்வது' என்ற ஒரே நோக்கத்துக்காகத்தான், சத்தியாக்கிரக வடிவத்தைக் கைவிட்டு, "பறிமுதல்' என்ற போராட்ட வடிவத்துக்கு மாறினார் காந்தி. அதே நேரத்தில், ""உப்பை மட்டுமல்ல, மொத்த சுதந்திரத்தையுமே பறித்தெடுக்க வேண்டும்'' என்று கூறிய பகத்சிங் முதலான புரட்சியாளர்களை, "தீவிரவாதிகள், வன்முறையாளர்கள்' என்றார் காந்தி.

சட்ட மறுப்பு இயக்கத்தை "இரகசியம்' சூழ்ந்து விட்டதாகக் கூறி, காந்தி அதனைக் கைவிட்டு, இர்வினிடம் பேச்சுவார்த்தை என்ற பெயரில் சரணாகதி அடைந்த பொழுது, ""ஒரு அரசியல் தலைவர் என்ற முறையில் காந்தி தோல்வி அடைந்து விட்டதாக நாங்கள் ஐயமின்றிக் கருதுகிறோம். தனது வாழ்நாள் கொள்கைகளுக்கே முரணின்றி நடக்க இயலாத காந்தி மேலும் தலைவராக நீடிப்பது நியாயமற்றது'' என சுபாஷ் சந்திர போஸும், வித்தல்பாய் படேலும் வியன்னாவிலிருந்து பகிரங்கமாக அறிக்கை விடுத்தனர். இருப்பினும் பார்ப்பனபனியாக் கட்சியான காங்கிரசுக்கு, மக்களை ஏய்க்க காந்தியின் "முகமூடி' தேவைப்பட்டது. ஆங்கில அரசுக்கோ, இத்தகைய விசுவாசமான "எதிரி' கிடைத்ததை விட வேறென்ன மகிழ்ச்சி இருக்க முடியும்?

இவ்வாறு முப்பதாண்டுகளுக்கும் மேலாக, ஆளும் வர்க்கத்தின் மனம் நோகாமல், காந்தி நடத்திய "அரசியல் பரிசோதனை'களுக்கு "சோதனைப் பிராணி'களாக இந்திய மக்கள் அடிபட்டார்கள். உதைபட்டார்கள். இரத்தம் சிந்தினார்கள். சொத்துக்களை இழந்தார்கள். சிறையில் வாடினார்கள். ஒவ்வொரு போராட்டத்தின் கழுத்தறுப்பிற்கு பிறகும் விரக்திக்கும், வேதனைக்கும் தள்ளப்பட்டார்கள். இதைவிடக் கொடூரம், ""போராட்டத்தின் தோல்விக்கான காரணம், மக்களின் ஆத்ம சுத்தி போதவில்லை'' என காந்தி சொன்ன குற்றச்சாட்டையும் மௌனமாக ஏற்றுக் கொண்டார்கள்.

1942இல் யுத்தத்தில் ஜெர்மனிஜப்பான் முகாம் வெற்றி பெறலாம் என்ற கணிப்பில், அரை மனதோடு, காந்தி "வெள்ளையனே வெளியேறு' முழக்கத்தை முன்வைத்த மறுகணமே, காங்கிரசின் அனைத்து முக்கியத் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். இம்முறை மக்களின் போர்க்குணம் முழுமையாக வெளிப்பட்டது. தந்திக்கம்பிகள் அறுக்கப்பட்டன. ரயில் தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டன. போலீசும், இராணுவமும் தாக்கப்பட்டனர். ஷோலாப்பூர் போன்ற பல இடங்களில் இராணுவமோ, போலீசோ பல நாள்களாக உள்ளே நுழையக் கூட முடியவில்லை. கொடூர அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

"காங்கிரசு சோசலிஸ்டுகள்'தான் வன்முறைக்கு காரணமென்று, காங்கிரசுத் தலைவர்கள் ஆள்காட்டி வேலையில் ஈடுபட்டார்கள். எதற்கும் உதவாத அகிம்சையை, மக்கள் நடைமுறையில் வீசியெறிந்தனர். சிறையிலிருந்து விடுதலையான காந்தி, போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தார். 1921இல் ஒத்துழையாமை இயக்கத்தின் பொழுது, சாதி, மத வேறுபாடுகளற்று நாடே கிளர்ந்தெழுந்த பொழுது, சுதந்திரம் வாயிற்படி வரை வந்ததென்றால், 1942இல் சுதந்திரம் வீட்டிற்குள்ளேயே கால் வைத்தது. ஆனால் இந்த முறையும் காந்தி அதன் காலை வாரிவிட்டார்.

தலைமையை விஞ்சி எழும்பும் மக்களின் போர்க்குணத்தை அதன் திரண்ட வடிவத்தில் 1942இல் காந்தி கண்டார். அதனால்தான் பின்னர் பிரிவினைக் கோரிக்கை எழுந்த பொழுது, பிரிவினைக் கோரிக்கையை ஆதரிப்பதைத் தவிர காந்திக்கு வேறு வழி இருக்கவில்லை. ஏனெனில் இன்னொரு "மக்கள்திரள் அரசியல் போராட்டம்' என்பது ஒட்டுமொத்த நிறுவனத்தையும் பெயர்த்தெடுக்காமல் அடங்காது என்பதைக் காந்தி புரிந்து கொண்டார். பிரிவினைக் கோரிக்கையை ஏற்பதற்கான காங்கிரசுத் தீர்மானத்தின் முன்மொழிவில், இதனைக் குறிப்பிடவும் செய்தார்.பிரிவினைக் காலத்தில், கலவரம் நடந்த ஒவ்வொரு இடத்திற்கும் காந்தி சென்றார். ஆனால், அவரது சமரச முயற்சிகளும், போதனைகளும் இந்துமகா சபா வெறியர்களிடமும், முசுலீம் லீக் வெறியர்களிடமும் எடுபடவில்லை. காந்தியின் ஆத்மார்த்த சீடர் ஆச்சார்ய கிருபாளனியே, காந்தியினுடைய முயற்சிகளின் பலனைக் கீழ்க்காணும் முறையில் விவரிக்கிறார். ""அவர் நவகாளிக்கு சென்றார். அவரது முயற்சிகளால் நிலைமை சற்றே முன்னேறியது. இப்பொழுது பீகாரில் இருக்கிறார். நிலைமை சற்று மேம்பட்டுள்ளது. ஆனால் பஞ்சாபில் கொழுந்து விட்டெரியும் வன்முறையில் எந்த மாற்றமும் இல்லை. மொத்த இந்தியாவிற்கான இந்துமுசுலீம் ஒற்றுமைப் பிரச்சினையை பீகாரில் தீர்க்கப் போவதாகக் கூறுகிறார். ஒருவேளை அவ்வாறு நடக்கலாம். ஆனால் அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவார் என்பது சிக்கலாகவே தோன்றுகிறது. சாத்வீகமாக நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தைப் போல, இலக்கை அடைவதற்கான எத்தகைய தீர்க்கமான வழிமுறைகளும் இதில் இல்லை.'' பின்னர், ""பீகாரில் தங்களது அகிம்சை எவ்வாறு வேலை செய்தது?'' எனக் கேட்டபொழுது ""அது வேலையே செய்யவில்லை. மோசமாகத் தோல்வியடைந்தது'' என்றார் காந்தி.

காந்தியின் ஆசிரமம் தாக்கப்பட்டது. தில்லியில் நடத்திய கடைசி உண்ணாவிரதத்தின் இறுதியில் காந்தி ""நான் எனது ஓட்டாண்டித்தனத்தை ஒத்துக் கொள்கிறேன்'' என தனது இயலாமையை வெளியிட்டார். அகிம்சையின் தந்தை காஷ்மீருக்கு படைகள் அனுப்ப ஆதரவளித்தார். தான் சர்வாதிகாரியாக இருந்தால், மதத்தையும் அரசியலையும் பிரிப்பேன் என்றார். அடுத்த கணமே, ""மதம்தான் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். வார இறுதி விசயமாக அல்லாமல், ஒவ்வொரு நொடியும் மதத்திற்காகச் செலவிடப்பட வேண்டும்'' என்றார். காந்தியால் தனது அரசியல் வாரிசாக அறிவிக்கப்பட்ட நேரு, "காந்தியின் பொருளாதாரக் கொள்கைகள் காலங்கடந்தவை' என அவருக்கே கடிதம் எழுதினார். ""காந்தி தனது இறுதி நாள்களில் இருளில் தடுமாறிக் கொண்டிருந்தார்'' எனத் தெரிவிக்கிறார் கிருபாளனி.

இதே காலகட்டத்தில் இந்திய தேசிய இராணுவம் தொடுத்த தாக்குதல்களும், 1945 கப்பற்படை எழுச்சியும், தொழிலாளர் போராட்டங்களும் காந்தியின் அரசியல் முடிவை முன்னறிவித்தன. இரண்டாம் உலகப் போரில் பலவீனமடைந்த ஆங்கில அரசு, நேரடியாகத் தனது காலனிகளை இனிமேலும் அடக்கியாள முடியாது என்ற நிலையில், இந்தியா, இலங்கை மற்றும் பிற காலனிகளின் தரகு முதலாளிகளுக்கு ஆட்சிப் பொறுப்பைக் கைமாற்றிக் கொடுக்க முன்வந்தது.

அரசியல் அரங்கத்தால் புறந்தள்ளப்பட்ட காந்தியின் பிம்பம், இன்றளவும் பாதுகாக்கப்படுகிறதென்றால், அதற்கு கோட்சேயின் நடவடிக்கைதான் உதவி செய்தது என்று சொல்ல வேண்டும். காந்தியம் வெளுத்து, அதன் பூச்சுக்கள் உதிர்ந்த நிலையில், காந்தி ஒருவேளை தொடர்ந்து வாழ்ந்திருப்பாரேயானால், காந்தியம் தவிர்க்கவியலாமல் செத்துப் போயிருக்கும். கத்தியின்றி, இரத்தமின்றி, சுதந்திரத்தின் கழுத்தறத்ததுதான், "காந்தி' எனும் ஊதிப் பெருக்கப்படும் "சோளக்காட்டுப் பொம்மை'யின் சுருக்கமான அரசியல் வரலாறு.

""என்னதான் இருந்தாலும், காந்தியிடமிருந்து பின்பற்றுவதற்கு எதுவுமே இல்லையா?'' என அரசியல் பொழுதுபோக்காளர்கள் கேட்கக் கூடும். காந்தியிடமிருந்து நாம் பின்பற்ற எதுவுமில்லை. ஆனால், "வாடிக்கையாளரே நமது எசமானர்' என்ற அவரது பொன்மொழியை மட்டும், கட்சிப் பாகுபாடின்றி சகல இந்திய ஓட்டுச் சீட்டு அரசியல்வாதிகளும் இம்மி பிசகாமல் பின்பற்றுகிறார்கள். அவர்கள் மக்களைத் தமது எசமானர்களாகக் கருதுவதில்லை. பன்னாட்டு முதலாளிகள் என்ற தமது வாடிக்கையாளர்களைத்தான் எசமானர்களாகக் கருதுகிறார்கள். இந்த விசயத்தில் குருவை மிஞ்சிய சீடர்களாகவும் நடந்து கொள்கிறார்கள். அந்த வகையில் காந்தியம் இன்னமும் உயிரோடிருக்கிறது என்பது உண்மைதான்.

கட்டுரையாசிரியர்: வாணன்.
புதிய கலாச்சாரம் ஜனவரி’2008 இதழிலிருந்து இங்கு பதியப்படுகிறது.

நன்றி: தமிழரங்கம் இணையதளம்

Wednesday, January 28, 2009

’ஈழ மக்களின் படுகொலைகளுக்கு ‘ஆருடம்’ சொல்வதில் யாருக்கு முதலிடம்? தமிழ் தேசிய வாதிகளுக்கா! இந்திய தேசியவாதிகளுக்கா!’ - என்கிற குழாயடி சண்டை...


(மேலே ஈழ மக்களின் தாலியறுப்பதைப் பற்றி ஆலோசித்துக் கொண்டிருக்கும் பாசிஸ்டுகள் மன்மோகனும் ராஜபக்சேவும்)


தோழர்களே!

ஈழப் பிரச்சினையில் சி.பி.எம். கட்சியின் நிலைப்பாடு சரியா? தவறா? என்பதற்கான கருத்துக் கணிப்பு பெட்டகத்தை கீற்று இணைய தளம் வைத்துள்ளது. அதில் வாக்களிப்பவர்கள் தஙகள் கருத்தைப் பதியலாம் என்றிருந்ததனால் எனது கருத்தையும் அதில் பதிவிட்டேன். அதனை இங்கே பதிகிறேன். தோழர்களும் நண்பர்களும் தமது கருத்துக்களைப் பதிய கேட்டுக்கொள்கிறேன்.

********************************************************************

"தனி ஈழம் சாத்தியமல்ல, பேச்சுவார்த்தையின் மூலமாக சுமூகமாக முடிவெடுத்து தனித் தனி மாகானங்களாக இயங்குவதே இலங்கைக்கு நல்லது." என்றும் "இலங்கை என்கிற தேசத்தைத் துண்டாட நாங்கள் ஒருபோதும் விரும்பவில்லை. இந்தியா என்கிற தேசத்தை நாம் எப்படி பிரிவினைவாதிகளிடமிருந்து காப்பாற்றப் பாடுபடுகிறோமோ அதே அடிப்படைதான் எமது இலங்கை குறித்தான கண்ணோட்டமும்" என்பது சி.பி.எம். கட்சியின் நிலைப்பாடு.

ஈழத்தில் மட்டுமல்ல, உலகின் எந்த தேசிய இனப் பிரச்சினையானாலும் அவர்களின் நிலைப்பாடு என்பது இதுதான். காஷ்மீரிலும் அதே நிலைதான். சிபிஎம் கட்சியினரிடமிருந்து ஒரேயொரு உதவியை நாடுகின்றேன்.

இதுபோன்ற தேசிய இனப்பிரச்சினையில் உங்கள் கட்சியின் 'நிலைப்பாட்டிற்கும்' காங்கிரசு, பாஜக உள்ளிட்ட பிற ஓட்டுக் கட்சிகளின் நிலைப்பாட்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதைக் கொஞ்சம், தயவு செய்து அறிவித்துவிடுங்கள். உங்களுக்கு புன்னியமாப் போகும்.

இந்த கேலிக்கூத்து ஒருபுறமிருக்க, ஈழ மக்களின் (பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய) சுயநிர்ணய உரிமைக்குக் குரல் கொடுக்க வேண்டுமென்றால், நான் கட்டாயம் விடுதலைப் புலிகளையும் ஆதரித்தே தீரவேண்டும். விடுதலைப் புலிகளை அரசியல் ரீதியில் எதிர்த்தாலோ அல்லது விமர்சித்தாலோ ஈழ மக்களுக்கு எதிராகப் பேசுவதாக ஒரு பொதுக்கருத்தை இங்கிருக்கக் கூடிய தமிழ் தேசியவாதிகளும், ராமதாசு, திருமா போன்ற 'தொப்புள் கொடி' உறவினர்கள் உருவாக்கி வைத்திருக்கின்றனர்.

தமது அக்கம் பக்கத்தில் வசிக்கின்ற அல்லது தமது கட்சியில் உறுப்பினராக இருக்கின்ற அப்பாவிகளுடன் இவர்களது தொப்புள் கொடி உறவு எப்படியிருக்கிறது? அதைத்தான் முருகேசன் - கண்ணகி படுகொலைச் சம்பவத்திலிருந்து இப்போது நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி சம்பவம் வரை அண்ண திருமாவின் தொப்புள் கொடி பாசத்தைப் பார்த்தோமே.

தேவர் குருபூசையில் திருமாவின் தொப்புள் கொடி உறவு அறுந்து சிரித்தை அனைவரும் அறிவர். போகட்டும். டாக்டர் அய்யாவைப் பற்றி எதுவும் தனியாகக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. ஈழ மக்களின் ஈரக் குலையை அறுப்பதற்கு ஏற்பாடு செய்து தரும் மன்மோகன் அரசாங்கத்தில் அங்கம் வகித்துக் கொண்டு தமது 'தொப்புள் கொடி' உறவைப் பராமரித்துவருகிற பித்தலாட்ட நாயகரல்லவா நம்ம டாக்டர் அய்யா.

எனவே, இந்திய ஓட்டுப் பொறுக்கிகள்தான் ஈழ மக்களின் படுகொலைகளுக்கு காரணகர்த்தாவாக இருந்துகொண்டு சிங்கள பேரினவாத பாசிச வெறியன் ராஜபக்சேவுக்கு மறைமுகமாகவும் நேர்முகமாகவும் சேவையாற்றி வருகிறார்கள். இந்திய ஆளும் வர்க்கத்தை அம்பலப்படுத்தி மக்களைத் திரட்டி இயங்குவது. அதன் மூலம் இந்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து ஈழப் போரில் அதன் தலையீட்டை நிறுத்துவது போன்ற நடவடிக்கைகள்தான் இப்போது முக்கியத் தேவையாக இருக்கிறது.

நாம் இதைச் சாதித்துவிட்டாலே போதும். தங்களுக்கான அரசியல் தீர்வை ஈழ மக்கள் தங்கள் சொந்த கைகளால் போராடிப் பெற்றுக் கொள்வார்கள். ஈழ மக்களுக்கு அரசியல் - பேச்சுவார்த்தை பொருத்தமானதா, தனி ஈழம் பொருத்தமானதா என்பதை நாம் இங்கிருந்து ஆருடம் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அதனை அவர்கள் முடிவு செய்துகொள்வார்கள்.

சி.பி.எம். மட்டுமல்ல இதில் அனைத்து ஓட்டுப் பொறுக்கிகளும் இனைத்தே விமர்சிக்கப் படவேண்டியவர்கள் என்பது எனது தாழ்மையான - அழுத்தமான கருத்தாக இருக்கிறது.

தோழமையுடன்,
ஏகலைவன்.
--

Tuesday, January 27, 2009

புரட்சிகர அமைப்புகளின் மாபெரும் ஆர்ப்பாட்டம்!ஈழத்தமிழ் மக்கள் மீதான இனவெறிப் போரில்

சிங்களப் பாசிச அரசுடன் கைகோர்த்து நிற்கும்

இந்திய அரசைக் கண்டித்து சென்னையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் !!


ஜனவரி 26 இந்தியக் குடிரயரசு தினத்தில் அதிகார வர்க்க அமைப்புக்கள் குடியரசு மகாமித்யத்தை ஓதிக்கொண்டிருப்பது வழக்கம். இந்நாளில் ஈழத்திற்காக இந்திய அரசு செய்யும் துரோகத்தை அம்பலப்படுத்த எமது புரட்சிகர அமைப்புக்கள் முடிவு செய்தன. நேற்று மாநாடு முடிந்த கையோடு வெளியூரிலிருந்து மற்றும் உள்ளூர் தோழர்கள் ஆங்காங்கே தங்கி இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தயாராக இருந்தனர். இன்று காலையில் சென்னை நகர் முழுவதும் ஆர்ப்பாட்டத்தை விளக்கி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. சென்னை, சைதாப்பேட்டை, பனகல் மாளிகையின் முன் காலை பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் என்பதை சுவரொட்டிகள் விளம்பரம் செய்தன. இந்த ஆர்ப்பாட்டம் போலீசிடம் அனுமதி வாங்கி நடத்த முடியாது என்பதால் ‘சட்ட விரோதமாகவே ‘ நடத்தத் திட்டமிடப்பட்டது.


மேலும் குடியரசு தினத்தில் இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என்பதை போலீசும் அரசும் மிகக் கடுமையாகவே எடுத்துக் கொள்ளும் என்பதால் கைது இருக்கலாம் என்பதை எதிர்பார்த்தும் தயாரிப்பு செய்யப்பட்டது. திட்டமிட்டபடி இன்று காலை பத்து மணிக்கு ஆயிரக்கணக்கான தோழர்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணிநேரம் எழுச்சியுடன் நடந்த்து. தலைவர்கள் இந்திய அரசின் துரோகத்தைக் கண்டித்து எழுச்சியுரை ஆற்றினர். சுவரொட்டியைக் கண்டு போலிசும் சுமார் பத்து வண்டிகளைக் கொண்டு வந்து தயாராக இருந்த்து. இருப்பினும் போலீசின் கெடுபிடிகளைத் தாண்டி ஆர்ப்பாட்டம் வீச்சுடன் நடந்த்து.


பின்னர் தோழர்கள் போலீசால் கைது செய்யப்பட்டனர். அருகிலிருக்கும் மைதானத்திற்கு வண்டிகளில் கொண்டு செல்லப்பட்டனர். தற்போது வந்துள்ள கடைசிச் செய்தியின்படி தோழர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். குடியரசு நாளில் இந்திய அரசு ஈழமக்களுக்கு செய்யும் துரோகம் மக்களிடையே அம்பலப்படுத்தும் பணி வெற்றிகரமாக நடைபெற்றது. இதன் புகைப்படங்களை சில மணிநேரத்தில் வலையேற்றம் செய்கிறோம். இந்த எழுச்சியான ஆர்ப்பாட்டத்தின் வீடியோக் காட்சியை நாளை வெளியிடுகிறோம். இந்த ஆர்ப்பாட்டத்தில் முழங்கப்பட்ட முழக்கங்களை கீழே இணைக்கப்பட்டுள்ளன.


ஈழத்தமிழ் மக்கள் மீதான
சிங்கள இனவெறி அரசின்
இன ஒடுக்குமுறைப் போரை
தடுத்து நிறுத்துவோம்!
ம.க.இ.க - வி.வி.மு - பு.மா.இ.மு - பு.ஜ.தொ.மு
……………………………………………………………………………..
ஈழத் தமிழ் மக்களின்
பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய
சுய நிர்ணய உரிமைக்குக்
குரல் கொடுப்போம்!
ம.க.இ.க - வி.வி.மு - பு.மா.இ.மு - பு.ஜ.தொ.மு

……………………………………………………………………………..

டாடா அம்பானி
தரகு முதலாளிகள் நலனுக்காக
சிங்கள இனவெறிப் போருக்குத்
துணை நிற்கும் இந்திய அரசின்
பிராந்திய மேலாதிக்கத்தை
முறியடிப்போம்!
ம.க.இ.க - வி.வி.மு - பு.மா.இ.மு - பு.ஜ.தொ.மு

……………………………………………………………………………..

இந்திய அரசே,
சிங்கள இராணுவத்துக்கு
ஆயுதம், நிதி, பயிற்சி
அளிப்பதை நிறுத்து!
இலங்கை அரசுடன்
தூதரக உறவுகளை முறி!
ம.க.இ.க - வி.வி.மு - பு.மா.இ.மு - பு.ஜ.தொ.மு

………………………………………………………………………………..

உழைக்கும் மக்களே,
சிங்கள இனவெறி அரசின்
ஏஜெண்டுகளாகச் செயல்படும்
ஜெ., சு.சாமி, சோ, இந்து ராம்
பார்ப்பனக் கும்பலுக்கும்
காங்கிரசுக்கும்
தக்க பாடம் புகட்டுவோம்!
ம.க.இ.க - வி.வி.மு - பு.மா.இ.மு - பு.ஜ.தொ.மு
…………………………………………………………………………………..

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
விவசாயிகள் விடுதலை முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி


தொடர்புடைய பதிவு :
ஈழம்: தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் போராட்டம் !

நன்றி: தோழர் மதிமாறன் (படங்கள்), வினவு வலைதளம் (செய்தி)

Friday, January 23, 2009

வர்க்கமாய்த் திரள்வோம்! வலிமையைக் காட்டுவோம்!! - புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.....


முதலாளித்துவம் கொல்லும்!
கம்யூனிசமே வெல்லும்!!
- எனும் முழக்கத்தின் கீழ் நடைபெறவிருக்கும் முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டு நிகழ்வுகளின் நிகழ்ச்சி நிரல்......

முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு – நிகழ்ச்சி நிரல்

இடம் :
டாக்டர் அம்பேத்கர் கால்பந்து மைதானம்,
எஸ்.வி. நகர், ஓரகடம், அம்பத்தூர்

நிகழ்ச்சி நிரல்
தியாகிகளுக்கு வீரவணக்கம்

கருத்தரங்கம்
காலை அமர்வு – காலை முதல் 1 மணி வரை

தலைமை :
தோழர் அ. முகுந்தன்,
தலைவர் பு.ஜ.தொ.மு

சிறப்புரை :

கிள்ளுக்கீரைகள் அல்ல தொழிலாளி வர்க்கம்...
கிளர்ந்தெழுந்தால் நாட்டின் இயக்க்மே நிற்கும்!
தொழிலாளத் தோழனே,
வர்க்கமாய் ஒன்றுசேர்!
வலிமையை நிலைநாட்டு!

தோழர் துரை. சண்முகம்,
ம.க.இ.க.
***

வேலை நேரத்திற்கு வரம்பில்லை...
குறைந்தபட்ச ஊதியமில்லை...
தொழிற்சங்க உரிமையுமில்லை...
உரிமைகளை ஒழிக்கும் உலகமயம்!
வழக்குரைஞர் சி. பாலன்,
கர்நாடகா உயர்நீதி மன்றம், பெங்களூர்
***

மாலை அமர்வு

பிற்பகல் 2 முதல் மாலை 5 மணி வரை

பணி நிரந்தரமில்லை....
மருத்துவ வசதியில்லை....
தினக்கூலி, ஒப்பந்தக் கூலி,
அவுட்சோர்சிங் அக்கிரமங்கள்!

தனியார்மயம் – தாராளமயம் – கொத்தடிமைமயம்!

தோழர் சுப. தங்கராசு,
பொதுச்செயலாளர், பு.ஜ.தொ.மு.

***

ஆட்குறைப்பு, வேலை மறுப்பு,
ஆலை மூடல், விலைவாசி ஏற்றம்...

மூலகாரணம் முதலாளி வர்க்கத்தின்
ஊக வணிகச் சூதாட்டம்!

முதலாளித்துவம் கொல்லும்!
கம்யூனிசமே வெல்லும்!

தோழர் பா. விஜயகுமார்,
பொருளாளர், பு.ஜ.தொ.மு.

***

நேருரைகள் :

சங்கம் துவங்கினோம்!
அடக்குமுறைகளை எதிர்கொண்டோம்!
வர்க்க ஒற்றுமையால் வென்றோம்!

போராட்டத்திற்கு தலைமையேற்ற
பல்வேறு தொழிலாளர்களின் அனுபவங்கள்

நன்றியுரை :

தோழர் இல. பழனி,
துணைத்தலைவர் பு.ஜ.தொ.மு.

***

பொதுக்கூட்டம்

மாலை 6 மணி – அம்பத்தூர் O.T. மார்க்கெட்

தலைமை :

தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
பு.ஜ.தொ.மு.

மாநாட்டுத் தீர்மான விளக்கவுரை :
தோழர் சுப. தங்கராசு,
பொதுச் செயலாளர், பு.ஜ.தொ.மு.

சிறப்புரை :

தோழர் மருதையன்,
பொதுச் செயலாளர், ம.க.இ.க. தமிழ்நாடு.
***
புரட்சிகர கலைநிகழ்ச்சி


மையக் கலைக்குழு,


மக்கள் கலை இலக்கிய கழகம்,


இந்த மாநாட்டை வெற்றி பெறச் செய்வதற்காக பதிவர்களும் கலந்து கொள்ளுங்கள். நண்பர்களிடம் தெரியப்படுத்துங்கள். நிதி உதவியும் அளியுங்கள்.

தொடர்புக்கு :

தோழர் அ. முகுந்தன், தலைவர் பு.ஜ. தொ.மு.: 94448 34519, 94444 42374
தோழர் பாண்டியன்: 99411 75876

Sunday, January 18, 2009

பாசிச ஹிட்லரின் கோயபல்ஸும்.... சிபிஎம் கட்சியின் செல்வப்பெருமாளும்......

பாசிச ஹிட்லரின் அமைச்சரவையில் செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறையில் கம்யூனிச எதிர்ப்பையும் சோஷலிச ரஷ்யா குறித்த அவதூறுகளையும் பரப்பிவிடுவதற்காக கோயபல்ஸ் என்பவனை நியமித்தான் ஹிட்லர். கோயபல்சும் ஹிட்லரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்துகொண்டு, தனது பொய்களையும் புரட்டுக்களையும் கடைவிரித்துவந்தான். கம்யூனிச ஆசான்களான தோழர்கள் லெனின், ஸ்டாலின் போன்றவர்களின் மீது கொலைகாரர்கள் என்று முத்திரை குத்தி முதலாளித்துவ சேவையாற்றியதில் டிராட்ஸ்கி போன்றவர்கள் போல கோயபல்சுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. பொய்கள், புரட்டுக்கள் என்றாலே கோயபல்ஸ்தான் என்பது வரலாறு.

அதேபோன்று....
பாசிச பொறுக்கிக் கும்பலாகச் சீரழிந்த போலி கம்யூனிச கம்பேனியான சிபிஎம், தம்மை நோக்கி வருகின்ற அரசியல் ரீதியிலான விமர்சனங்களுக்கு பதிலளிக்க கையாலாகாத நிலையில், இணையத்தில் தமது புரட்டுக்களைப் பதிவதற்கு ஒரு கோயபல்சை சம்பளத்திற்கு நியமித்து, தமது மாநில தலைமை அலுவலமான சென்னை, தி.நகர், வைத்தியராமன் தெருவிலுள்ள (பஜக அலுவலகத்திற்கு அடுத்த கட்டிடத்தில்...) நிரந்தரமாக இடம் அமைத்துக் கொடுத்திருக்கிறது. அந்த நவீன கோயபல்ஸின் பெயர் செல்வப் பெருமாள். அவர் தமது அவதூறுகளைப் பதிந்துவரும் தளம் சந்திப்பு.

பொதுவாக கோமாளித்தனமாகவும் தமது கட்சிக்காரர்களே காறி உமிழும் வண்ணமும் எதையாவது பிதற்றலாக எழுதிவரும் அந்த மாபெரும் ‘ஞாநி’ செல்வப்பெருமாள், மகஇகவை விமர்சித்து எழுதுவதற்கு என்று ஒரு திட்டம் வைத்திருக்கிறார். அது, மாதக் கடைசியில் (ஒழுங்காச் சம்பளம் கிடைக்க வேண்டாமா??)”பார்ப்பனத் தலைமை...”, “தொடைநடுங்கி நக்சலிசம்...”, “மறைமுகத் தலைமை....” என்கிற தலைப்பில் நாற்பது வருடங்களாக தமது கட்சியின் முந்தைய கோயபல்ஸுகள் கழிந்துவைத்தவற்றை அப்படியே உல்டா செய்து பதிவது வழக்கம்.

அப்படி எந்த விதமான அலைக்கழிப்புமில்லாமல் ஒழுங்காக சம்பளம் கிடைத்துவிட்டால், வேறு எதையாவது (சுஜாதா... ஜெயமோகன்...பற்றி) எழுத ஆரம்பித்துவிடுவார். சம்பளம் கிடைக்க வில்லையென்றால் பாவம், மீண்டும் மகஇகவைப் பற்றி எழுதி தமது ஆண்டைகளுக்கு நினைவுபடுத்தியாக வேண்டிய நிலைமை வேறு. அவருக்காக நாம் பரிதாப்படலாம்.

புரட்சிகர அரசியலுக்குத் தடையாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் எந்த விதமான சமரசமுமின்றி விமர்சித்து அம்பலப்படுத்த வேண்டிய கடமை நமக்கிருப்பதைப் போல செல்வப் பெருமாளுக்கு எந்த விதமான சமூக நோக்கும் அரசியல் அடிப்படையும் தேவைப்படுவதில்லை.மாறாக தமது கட்சிக்கேயுரிய இழிவான அறிவு நாணயத்தோடு தமது சுய தேவைக்காக இயங்கிவருகிறார். அவரது கட்சியின் தலைமைக்கும் அதே நிலைதான். தமது மானத்தை மறைக்கின்ற சிறிய கோவனமாகவாவது செல்வப் பெருமாள் பயன்படுவாரா என்பது அவர்களின் நோக்கமாக இருக்கிறது.

எதிரிகளையும் துரோகிகளையும் விமர்சிப்பதனைக் காட்டிலும் எமது அமைப்பின் மீது பதியப்படுகின்ற விமர்சனங்களுக்கு நோர்மையாக பதிலளிப்பதையே முக்கியக் கடமையாக நினைத்து இயங்கி வருகிறார்கள் எமது தோழர்கள். இதே கோயபல்ஸ் செல்வப்பெருமாள் பதிகின்ற பதிவுகளை அவதூறுகள் என்று நிறுவும் வண்ணம் அரசியல் ரீதியிலான எதிர்விணைகளை எமது தோழர்கள் பதிந்து வருகிறார்கள். அவற்றை நேர்மையாகப் பதிப்பித்துவிடாமல் இருட்டடிப்பு செய்துகொண்டு, தமது கோயபல்ஸ் வாதங்களையே மீண்டும் மீண்டும் பதிந்துவருகிறார் செல்வப்பெருமாள். தாம் வைக்கின்ற குற்றச்சாட்டுக்களுக்கு மறுப்பு சொல்ல வாய்ப்பளிக்காமல் மிகவும் ‘கவனமாக’ இருட்டடிப்பு செய்து பிழைத்துவரும் இவரை விமர்சிக்காமல் இருக்க முடியவில்லை தோழர்களே.

மகஇக நடத்திவருகின்ற தமிழ் மக்கள் இசைவிழாவை, கும்பமேளா என்றும் பஜனைக் கச்சேரி என்றும் வசைபாடிவரும் இந்த கோயபல்ஸுக்கு உரைக்கும் விதமாக தோழர் அருள் எழிலன் பதிவு ஒன்றை நான் இங்கே பதிகிறேன். இது ஆனந்த விகடன் பத்திரிக்கையில் அவர் எழுதியது. தோழர் கோபா அவர்களின் கரும்பலகை வலைதளத்திலிருந்து.....

ம.க.இ.க கலைக்குழு நடத்திய புரட்சிகர கலைநிகழ்ச்சி

விடுதலைப் பாட்டு...

இது விடியல் பாட்டு !

"காளையார் கோயிலு காட்டுக்குள்ளே
ரெண்டு கன்னி கழியாத மாமரங்க
அது பூக்கவுமில்லே காய்க்கவுமில்லே
மருதிருவர் இன்னும் சாகவில்ல..."
- காட்டுச் சுனையாக, புரட்சிக் கனலாகப் பொங்கிப் பரவுகிறது.
அந்தக் கலகக்காரன் குரல் !

Related article:
1) தமிழ் மக்கள் இசை விழா - பதினான்காம் ஆண்டு

Friday, January 9, 2009

முதலாளித்துவம் மறுக்கும் அரசியல் அறிவை தொழிலாளி வர்க்கத்திற்காய் படைக்கும் கீழைக்காற்று....

மூடிக்கிடக்கும் அறிவுச் சாளரங்களை
தேடித் திறக்கும் கீழைக்காற்று.....


அன்பார்ந்த தோழர்களே!

நேற்றைய தினம் வழக்கம் போலவே சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்கிவிட்டது. கீழைக்காற்று விற்பனை மையத்தின் புகைப்படங்களை இங்கே தோழர்களின் பார்வைக்குத் தருகிறேன். ஏற்கெனவே இது குறித்த தகவல்களை நமது வினவு தளம் வரைபடத்தோடு, வாசகர்கள் எளிதில் கீழைக்காற்றைச் சென்றடைய வசதியான செய்திகளைப் பதிப்பித்திருக்கிறது.

இனி படங்கள்....

தொடர்புடைய பதிவுகள்:

வினவு நூல்கள் பற்றிய செய்திகள்:

நூல் - 1. சட்டக்கல்லூரி சம்பவம் : சாதியம் ஒழிப்போம்! தமிழகம் காப்போம்!!
நூல் - 2. மும்பை 26/11 : விளக்கமும் விவாதமும்
நூல் - 3. கடவுள் கைது! பக்தன் விடுதலை!!
நூல் - 4. ஜீன்ஸ் பேண்ட்டும் பாலியல் வன்முறையும்
நூல் - 5. ஜெயமோகன், சாருநிவேதிதா, காலச்சுவடு, சுகுமாரன், உயிரோசை, சோல்சனிட்சின் - இலக்கிய மொக்கைகள்!
நூல் - 6. ஐ.டி.துறை நண்பா......

புத்தகக் கண்காட்சியில் வினவு நூல்கள் கிடைக்குமிடம் - வரைபடம்

கண்காட்சியில் முற்போக்கு நூல்களுக்கு ஒரு முகவரி : கீழைக்காற்று