Friday, October 3, 2008

போலிகளை விமர்சிப்பவர்கள் அறிவுஜீவியாவதற்கு ஆசைப்படுபவர்கள் - சிபிஎம் புரட்டு கும்பலின் புதிய கண்டுபிடிப்பு(!)


“சி.பி.எம். போன்ற ‘வளர்ந்த’ கட்சியை விமர்சிப்பதால் தனக்கு ‘அறிவுஜீவி’ அந்தஸ்து கிடைக்கும் என்கிற ஆசையில்தான் எல்லோரும் எங்கள் கட்சியை கடுமையாக விமர்சிக்கிறார்கள். ஆனால் பேராசிரியர் அ.மார்க்ஸ்க்கு அந்தத் தேவையில்லை. ஏனென்றால் அவர் ஏற்கெனவே அந்த ‘அறிவுஜீவி’ என்கிற ‘அந்தஸ்த்தை’ப் பெற்றுவிட்டவர்.” இது சிபிஎம் என்கிற போலிகம்யூனிச கட்சியின் தீக்கதிர் நாளேட்டின் ‘பொறுப்’பாசிரியரான சு.பொ.அகத்தியலிங்கத்தின் பொறுப்பற்ற பதில்.

அ.மார்க்ஸ் எழுதிய வரலாறு-மக்கள்-மாவோயிஸ்டுகள்-நேபாளம் என்கிற நூலின் வெளியீட்டுவிழா நேறு (02/10/2008) மாலை சென்னை தி.நகரில் நடைபெற்றது. நேபாள மாவோயிஸ்டுகளின் அரசியல், இராணுவ செயல்கள் குறித்தான பல்வேறு விமர்சனங்களைக் கொண்டிருக்கும் இந்திய புரட்சிகர அமைப்புகளையும், நேபாள தோழர்கள் மன்னனுக்கு எதிராக களத்தில் நின்றபோது, அந்த மன்னனுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த துரோக/போலிகம்யூனிச கும்பலான சிபிஐ/சிபிஎம் கட்சிகளின் பிரதிநிதிகளையும் ஒரே மேடையில் விவாதிக்க அழைத்திருந்தார்கள். அந்த மேடையில் தமது கட்சிக்கு எதிராக பதியப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் சொல்ல திராணியற்ற சிபிஎம் கட்சியின் பிரதிநிதியாகக் கலந்து கொண்ட அகத்தியலிங்கத்தின் பதில்தான் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது.

“சிவப்புக் கொடியையும், கட்சியின் பெயரில் மட்டும் கம்யூனிசத்தையும் வைத்துக்கொண்டு புரட்சி செய்யமாட்டோம் என்று சொல்லித்திரிவதோடு புரட்சிக்கு எதிராக வேலை செய்துவரும் போலி கம்யூனிஸ்டுகளை அம்பலப்படுத்தி ஒழிக்க வேண்டும்” என்ற, அகில இந்திய நேபாளி மக்கள் உரிமை கூட்டமைப்பின் சார்பாக கலந்து கொண்ட தோழர் சந்திர பகதூர் முதல், நேபாள மாவொயிஸ்டுகளை பாசிச இந்துவெறியன் அத்துவானியின் வார்த்தைகளில் விமர்சித்த சிபிஐ கட்சியின் தலைமைத் தரகன் ஏ.பி.பரதனை அம்பலப்படுத்திப் பேசிய தமிழ் தேசிய முன்னணியின் தோழர் தியாகு வரை போலிக் கும்பலுக்கு எதிராக தமது கருத்துக்களை நயமாகவும், உறுதியாகவும் பதிந்து சென்றவர்கள் பலர். அதேபோல ‘பின்நவீனத்துவம்’ என்ற ஏதோ ஒன்றை வைத்துக்கொண்டு சரடுவிட்டுத் திரியும் அ.மார்க்ஸ் மீதும் அந்த புத்தகத்தில் அவர் தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளையும் கடுமையாக தோழர்கள் விமர்சித்துப் பேசினர்.

ஒவ்வொருவரும் பேசிக் கொண்டிருக்கும்போதே பின்னால் அமர்ந்திருந்த அ.மார்க்ஸ் தன்மீதான விமர்சனங்களைப் பொறுப்போடு குறிப்பிடுத்துக்கொண்டாலும் இறுதியில் ஏற்புரையின் போது மழுப்பலாகவும் மொன்னைத்தனமாகவுமே பதிலளித்து அமர்ந்தார். போலிக்கும்பலின் பிரதிநிதியான அகத்தியலிங்கத்தின் நிலையோ அ.மார்க்ஸைவிடப் பரிதாபகரமாயிற்று. தமது அரசியலின் மீதான மிகச் சாதாரண விமர்சனங்களைக் கூட எதிர்கொள்ளக் கையாலாகாத நிலையிலையை அவரது பேச்சு அம்பலப்படுத்தியது. பாவம் அகத்தியலிங்கம் என்ன செய்வார். நம்பூதிரிபாடு முதல் யெச்சூரிவரை ஒருத்தனும் பதிலளிக்காத கேள்விகளுக்கு அகத்தியலிங்கத்தால் மட்டும் எப்படி பதில் சொல்லிவிடமுடியும்? உமாநாத், பி.ராமமூர்த்தி போன்ற கம்யூனிசதுரோகிகளின் ‘வாழ்க்கை’யை கதையாக எழுதித்தரும் வேலையை மட்டும் பார்த்துவந்த அகத்தியலிங்கத்துக்கு, அதனாலேயே சில பல பொறுப்புகளையும் ‘கவுரவங்களை’யும் பெற்றுக் கொண்டு பிழைப்புநடத்திவரும் அவருக்கு சித்தாந்த ரீதியிலான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் துனிவும் தேவையும் எப்படி வரும்?

ஊழல் கொள்ளைக்காரி, பார்ப்பன பயங்கரவாத கும்பலின் பங்காளியுமான ஜெயலலிதாவின் காலடியிலேயே பாட்டாளி வர்க்க சின்னமான அறிவாள் சுத்தியலை வைத்து ஓட்டுப்பொறுக்கிப் பிழைப்பு நடத்தும் கும்பலிடம் ஏதாவது சித்தாந்தமோ, கொள்கையோ மிச்சமிருக்க முடியுமா? இதுபோன்ற பிழைப்புவாத கும்பலிடமிருந்து விமர்சனங்களுக்கான பதில்களை நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்? இருப்பினும், புரட்சியை எட்டிய சமீபத்திய வெற்றியாளர்களான நேபாள மக்களின் பிரதிநிதியாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர் சந்திரபகதூர் மேலே வலியுறுத்தி சொன்னதைப் போல, இந்த போலி / கபட வேடதாரிகளைத் திரைகிழித்து அவர்களது கட்சியின் கீழ்மட்ட அணிகளுக்கு அம்பலப்படுத்தாமல், கம்யூனிசத்தின் பெயரால் ஏகாதிபத்திய சேவையாற்றும் இந்தக் கயவர் கூட்டத்தை இச்சமூகத்திலிருந்து அப்புறப்படுத்தாமல்; சமுகமாற்றத்துக்கான களத்தில் நாம் வேறெதைச் சாதிக்க முடியும்?

நேபாள மாவோயிசக் கட்சி கடந்த 1996 முதல் சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒரு நீண்டகால மக்கள் யுத்தத்தை நடத்திக் கொண்டிருந்த வேளைகளில், நேபாள மன்னனுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த இந்திய அரசின் அடியொட்டியே கிடந்த இந்த சிபிஎம் போலிக் கும்பலும் அதன் தலைவனும் இப்போது நேபாள மாவோயிஸ்டுகளுக்காக தாங்கள் தோள்கொடுத்ததாகச் சொல்லுவது பித்தலாட்டமன்றி வேறென்ன?

நேபாள மாவோயிசக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான தோழர் சி.பி.கஜுரேல் அவர்கள் சென்னையில் கைத்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ‘கஜுரேல் உயிர் பாதுகாப்புக் குழு’ என்கிற ஒரு அமைப்பாக இங்குள்ள பல்வேறு அமைப்புகள் ஒருங்கிணைந்து களத்தில் நின்ற போது சி.பி.எம். கொண்டிருந்த நிலைப்பாடு என்ன என்பது நாம் அனைவருக்கும் தெரியும். மூன்றுமாதத்தில் அவருக்கு பிணையானை பெற்று விடுவிக்கப் போகும் நேரத்தில் போலிகளின் மேற்குவங்க அரசின் சார்பில் ‘ஜல்பைகுறி’ நீதிமன்றத்திலிருந்து ஒரு பிடியாணையைக் கொண்டுவந்து தோழர் கஜுரேல் அவர்களின் பிணையை முடக்கி தொடர்ந்து மூன்றாண்டுகள் அவரைச் சிறைக் கொட்டடியில் அடைத்து வைத்து துரோகமிழைத்த கும்பல்தான் இந்த போலிகள். இந்நிலையில் நேபாள புரட்சியையும் மாவோயிசப் பாதையையும் பெருமை பொங்கக் கூறுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தமன்றி வேறென்ன?

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் முதல் வால்மார்ட், ரிலையன்ஸ் வரை அமெரிக்க அடிமையாகிவிட்ட இந்திய அரசின் அத்தனை நாசகார பொருளாதாரக் கொள்கையையும் தமது கட்சி ஆட்சி செய்யும் மே.வங்கம், கேரளா, திரிபுரா மாநிலங்களில் அட்டியின்றி ஏற்றுச் செயல்படும் இக்கூட்டம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காத நேபாள மாவோயிஸ்டுகளின் அரசியல் பாதையை நினைத்து புளகாங்கிதமடைவது எதற்காக? புரட்சியின் ஈர்ப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் தமது கட்சியின் ஒரு சில கடைகோடி ஊழியர்கள் மாவோயிசப் பாதையை நோக்கித் திரும்பிவிடாமல் தடுத்து தக்க வைத்துக் கொள்வதற்காக மட்டும்தான். ‘புரட்சி வரவே வராது’ என்று சொல்லாமல் சொல்லிக்கொண்டு புரட்டு வேலைகளைச் செய்துவரும் தமது சிபிஎம் கட்சியின் தலைமையை, புரட்சியை நடத்திட ஏங்கும் அணிகள் கேள்வி எதுவும் கேட்டுவிடாமல் இருப்பதற்காகத்தான் இந்த சந்தர்ப்பவாத நடைமுறையைக் கையாள்கிறார்கள்.

இந்திய மாவோயிஸ்டுகளுக்கு இவர்கள் புத்தி சொல்வதற்குப் பதிலாக, நேபாள மாவோயிஸ்டுகளுக்கு இவர்கள் துரோகமிழைத்ததற்கான யோக்கியமான மன்னிப்பைப் பதிவு செய்திருக்க வேண்டுமா இல்லையா? இதுவரை செய்யவில்லை. ஜெயலலிதாவோடு இணைவதற்கு இவர்கள் சொல்லும் காரணத்தைப் போன்றதுதான் நேபாள மாவோயிஸ்டுகளை இவர்கள் ஏற்பதற்காகச் சொல்லும் காரணமும்.

இப்படிப்பட்ட விவாதிக்கவேண்டிய, நேர்மையான விமர்சனங்களுக்கு நேரடியாக பதில் சொல்லத் திராணியற்ற நிலையில் நேற்றைய கூட்டத்தில் அசடு வழிந்த சிபிஎம் கட்சி, தனக்குத் துணையாக அந்த அரங்கில் ஒருவர் கூட இல்லாதநிலையில் அ.மார்க்ஸ் என்கிற பிழைப்புவாதியை ‘அறிவுஜீவி’ என்று அடையாளப்படுத்தி தனக்கு அணிசேர்த்துக் கொண்டது. நேபாள மாவோயிஸ்டுகளோடு தோளோடு தோள்நிற்பதாக சொல்லிக்கொண்டிருந்த அகத்தியலிங்கத்தை பார்வையாளர் மட்டத்திலிருந்து எமது தோழர் ஒருவர் இடைமறித்து “தோழர் கஜுரேலைக் கைது செய்து துரோகமிழைத்ததற்கு பதில் சொல்லுங்கள்” என்று கேட்டபோது ‘அறிவுஜீவி’ அ.மார்க்ஸ் எமது தோழரை இடைமறித்து பேசவிடாமல் செய்து அகத்தியலிங்கத்துக்கு தனது நன்றியைக் காட்டினார். ஆனால், கடைசிவரை தமது கட்சியின் பித்தலாட்ட அரசியலின் மீது பதியப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் சொல்லாமல் மேடையிலிருந்து ‘தப்பித்த’ அகத்தியலிங்கத்தின் கால்களின் பாய்ச்சல்களுக்கு இடையில் துள்ளாட்டம் போட்டுக்கொண்டிருந்தது தோழர்களின் கேள்விகளும் போலிகளின் தோல்வியும்.

புரட்சிகர வணக்கங்களுடன்,
ஏகலைவன்.

8 comments:

said...

கீழ்கண்ட பிண்ணூட்டம் சிபிஎம் கோமாளி சந்திப்பு தளத்தில் நான் பதிந்தது.
------------------------------------------

//////// pasi said...
Sir
vanakkam.

Vijayakanthudam koottani vaikka poguthaamey ungal katchi.
athu paththti oru katturai ezuthungal. Please!!!

ungal DYFI thozhar "AM.Kamaraj" DMDK vil sernthathu paththiyum oru katturai please./////////

அது ஒன்றுமில்லை நண்பர் பசி அவர்களே!

"விஜய்காந்த அவர்களது அரசியல் நிலைப்பாடு எமது அரசியலோடு பெரிதும் பொருந்துவதால் கூட்டனி குறித்து பேசுவதில் தவறேதுமில்லை" என்று தோலர் என்.வராதராஜன் சொன்னார். இதை மிகச் சரியாகப் புரிந்து கொண்ட 'கட்டைப்பஞ்சாயத்து புகழ்' கே.கே.நகர் காமராஜ் இரண்டு அரசியல் நிலைப்பாட்டையும் பொருத்திப்பார்த்து இந்த முடிவுக்கு வந்திருப்பார் என்று நினைக்கிறேன்.

எப்படியிருந்தாலும் தமது 'கட்டைப்பஞ்சாயத்து' தொழிலும் 'ஊர்தாலிகளை அறுத்து' தின்கிற பிழைப்பும் தடங்கலில்லாமல் எப்போதும் போலவே நடக்கவேண்டும் என்கிற 'கொள்கை'யில் தோலர் காமராஜ் இந்த 'மாபெரும்' முடிவை எடுத்திருப்பார் என்றும் கருதலாம்.

Anonymous said...

அருமையான பதிவு தோழர் ஏகலைவன்,

ஒரு கேள்விக்கு பதில் சொல்ல முடியாதவர்களா நம்மை வழி நடத்துவது என்று அந்தக் கட்சித்தொண்டர்கள்(!) யோசிக்கவேண்டும்.

தோழமையுடன்,
செங்கொடி

said...

அமெரிக்காவின் பொருளாதார சூதாட்டம்: இலாபம் யாருக்கு?

என்ற தலைப்பிலான மேற்கண்ட கட்டுரை சம்பந்தமாக தோழர் பசி அவர்கள் எதையும் கூறாமல். அந்தப் பதிவுக்கு சம்பந்தமில்லாத கீழ்க்கண்ட கேள்வியை பதிந்துள்ளார். முதலில் இது எந்தவிதமான நாகரீகம் என்று தோழர் ஏகலைவனும். பசியும் தெரிவிக்க வேண்டும்.

pasi said...
Sir
vanakkam.

Vijayakanthudam koottani vaikka poguthaamey ungal katchi.
athu paththti oru katturai ezuthungal. Please!!!

ungal DYFI thozhar "AM.Kamaraj" DMDK vil sernthathu paththiyum oru katturai please.

இது குறித்த லிங்கை கீழே பார்க்கவும்.

http://santhipu.blogspot.com/2008/10/blog-post_03.html

ஒரு குறிப்பிட்ட பொருளில் விவாதம் நடந்தால் அது ஆரோக்கியமானது, ஆனால். இன்று நாடும் / உலகமும் சந்தித்துக் கொண்டிருக்கும் நிதி மற்றும் முதலாளித்துவ நெருக்கடி குறித்து கள்ள மௌனம் சாதிக்கும் உங்களை எப்படி அழைக்லாம்?

said...

அமெரிக்காவின் பொருளாதார சூதாட்டம்: இலாபம் யாருக்கு?

என்ற தலைப்பிலான மேற்கண்ட கட்டுரை சம்பந்தமாக தோழர் பசி அவர்கள் எதையும் கூறாமல். அந்தப் பதிவுக்கு சம்பந்தமில்லாத கீழ்க்கண்ட கேள்வியை பதிந்துள்ளார். முதலில் இது எந்தவிதமான நாகரீகம் என்று தோழர் ஏகலைவனும். பசியும் தெரிவிக்க வேண்டும்.

pasi said...
Sir
vanakkam.

Vijayakanthudam koottani vaikka poguthaamey ungal katchi.
athu paththti oru katturai ezuthungal. Please!!!

ungal DYFI thozhar "AM.Kamaraj" DMDK vil sernthathu paththiyum oru katturai please.

இது குறித்த லிங்கை கீழே பார்க்கவும்.

http://santhipu.blogspot.com/2008/10/blog-post_03.html

ஒரு குறிப்பிட்ட பொருளில் விவாதம் நடந்தால் அது ஆரோக்கியமானது, ஆனால். இன்று நாடும் / உலகமும் சந்தித்துக் கொண்டிருக்கும் நிதி மற்றும் முதலாளித்துவ நெருக்கடி குறித்து கள்ள மௌனம் சாதிக்கும் உங்களை எப்படி அழைக்லாம்?

Anonymous said...

தோழர் ஏகலைவன்:

உங்கள் விமர்சனங்ககளில் உள்ள கோப தாபங்களையும், பெரிய இடது சாரி கட்சிகளின் இயலாமை குறித்த கவலைகளும் புரிகிறது. ஆனால் நீங்கள் பிரயோகிக்கும் வார்த்தைகளில் உமிழும் நெருப்பு பொருளற்றும் கருத்தாழம் இன்றியும் உள்ளது. எத்தனை காலத்திற்குதான் எல்லாரையும் "போலி கம்யுனிஸ்டுகள்" என்றும், "ரிவிசினிஸ்டுகள்" என்றும் திட்டிக்கொண்டே இருப்பது. "உழைக்கும் வர்க்கத்தின் ஏகாதிபத்தியம்" என்பதெல்லாம் எப்படி சாத்தியம், உழைக்கும் வர்க்கமே இல்லாமல் போய், இயந்திரத்தை ஆளும் அறிவு வர்க்கம் ஆகிவிட்ட நாடுகளில், அப்படிபட்ட மார்க்சிய தியரியெல்லாம் எடுபடாது. ஆனால், சமத்துவம் சார்ந்த பொருளாதாரத்திற்கும், நிறுவன அமைப்புகளுக்கும், அரசியல் மற்றும் அதிகார அமைப்புகள் என்றென்ரைக்கும் தேவையாகவும் கோலோச்சகூடியவைகளாகவும் அமையும். எல்லாவறையும் "contextualize" செய்துதான் ஆக வேண்டும். ஜனனாயகத்தின் மூலமே உழைகும் வர்க்கதிற்கான வாழ்னிலையும், வேளான்மையிலும் பெருமளவிற்கு நல்ல மாற்றங்களை கொண்டு வந்து விட்டார்கள் பல ஐரோப்பிய நாடுகளில். அடிப்படை வசதி கட்டுமான அமைப்புகளில் சமத்துவத்தை பெருமளவிற்கு சாதித்துவிட்டார்கள். இந்த வளர்ச்சி முதலாளிதுவத்தினால் அல்ல; ஜன நாயக அமைப்புகளினால் என்பதுதான் உண்மை. இன்னும் சாதிக்க வேண்டியது, பொருளாதாரா நிற்வனங்களில் அதிகாரப் பங்கும், வருமான சமத்துவமும்தான். அதை நோக்கிதான் எல்லா முற்போக்கு இயக்கங்களும் ஒற்றுமையில் பயணித்தல் அவசியம்.

SKMS

said...

//////////சந்திப்பு said...
அமெரிக்காவின் பொருளாதார சூதாட்டம்: இலாபம் யாருக்கு?

என்ற தலைப்பிலான மேற்கண்ட கட்டுரை சம்பந்தமாக தோழர் பசி அவர்கள் எதையும் கூறாமல். அந்தப் பதிவுக்கு சம்பந்தமில்லாத கீழ்க்கண்ட கேள்வியை பதிந்துள்ளார். முதலில் இது எந்தவிதமான நாகரீகம் என்று தோழர் ஏகலைவனும். பசியும் தெரிவிக்க வேண்டும். ////////////


உமது அரசியலை நோக்கி வைக்கப்படுகின்ற எமது எண்ணற்ற விமர்சனங்கள் உங்களால் யோக்கியமாக பதிலளிக்கப்படாவிட்டாலும் கூட பரவாயில்லை, நேர்மையாக பதிப்பிக்கப் படுவதும்கூட கிடையாது. விவாதங்கள், அதற்கான பதிலளிப்புகள் இவை எவற்றிலும் உமது ஒழுக்க நெறியை அனைவரும் அறிவர். உங்களுக்கு எமது பின்னூட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பும் அருகதையில்லை.

கேள்விகளுக்கு பதில் சொல்லத் திராணியற்ற இழிநிலையில் இருந்து கொண்டு "என்னை ஏன் கேள்வி கேட்கிறீர்கள்?" என்று புலம்புவது உமது அரசியல் ஓட்டாண்டித்தனத்துக்கு இன்னுமொரு சாட்சியமாக அமைகிறது.

முடிந்தால் விமர்சனங்களுக்கு யோக்கியமாக பதிலளித்து, இருட்டடிப்பு கேவலத்திலிருந்து மீண்டு வரப்பாருங்கள். பிறகு பேசலாம் சந்திப்பு என்கிற செல்வப்பெருமாள்.

ஏகலைவன்.

குறிப்பு: 'பசி' என்பவரது பதிவு குறித்து நீங்கள் அவரிடத்தில்தான் கேட்க வேண்டும்.

said...

///////கம்யூனிஸ்டுகளைக் காயடிப்போர் சங்கம் said...
உங்களை மாதிரி மொள்ளைமாரிகளுக்கெல்லாம் ஜெயமோகனைப் பிடிக்காமல் போன காரணம், அவர் மார்க்ஸீயத்தையும், ஸ்டாலினிசத்தையும் ஒரு மனித விரோதக் கொள்கையாக பாவிப்பது தான். அவர் உண்மையை நறுக்கென்று சொல்லுவது உங்களைப்போன்ற மார்க்சீய உடோபியாவில் உட்கார்ந்து கொண்டு யோசிக்கும் வெட்டிப்பசங்களுக்கு பிடிக்காது தான்.
அதற்காக ஜெ மோ வை உடனே காவி கலர் பூசுவது உங்களுக்கே ஆபத்தாக வந்து முடியும்.

இதுவரை காவிப்படை சிப்பந்திகள் ஜெ. மோ வை பகிரங்கமாக ஆதரித்ததும் இல்லை எதிர்த்ததும் இல்லை. இனி கொஞ்சம் கொஞ்சம் ஆதரிக்கவே செய்வர். வீ.எஸ். நோய்ப்பால் போல் ஜெயமோகனும் கம்யூனிஸ்டுகளையும் இஸ்லாமிய தீவிரவாதிகளையும் எதிர்த்தே பெரிய ஆளாக வரக்கூடும்./////////

டேய் டுபுக்கு அம்பிகளா!

ஜெயமோகனுடைய 'இலக்கிய'க் கோவனத்த அவுத்து, அவனை அம்மனமாக்கிய பதிவு ஒன்றின் சுட்டியை கீழே பதிவிடுகிறேன். அதைப்படித்தாலே புரிந்துவிடும், அவனுடைய கொள்கை என்பது முதலாளிகளின் காலணிகளுக்கு பூசை செய்வதுதான் என்கிற உண்மை.

ஒரு கிலோ 'நவ்வாப்பழ'த்துக்காக அவனுடைய கம்யூனிச விரோத அவதூறுக் கொள்கை சந்திசிரித்ததை நாறாய்க் கிழிக்கப்பட்ட பதிவு இது. நீ யோக்கியனாக இருந்தால் என்னுடன் நேரடியாக விவாதத்துக்கு வாடா அம்பி.

http://vinavu.wordpress.com/2008/07/26/%e0%ae%a8%e0%ae%b5%e0%af%8d%e0%ae%b5%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9c%e0%af%86%e0%ae%af%e0%ae%ae%e0%af%8b%e0%ae%95%e0%ae%a9%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9/

Anonymous said...

Given the serious of scandals, massive nation wide corruption at all levels, violence and disorder incited by political and corrupt forces, Some of my friends active in the media circuit are planning to start a program of active pursuit of corrupt politicians, bureaucrats, judges, corrupt administrative and police officials, business executives and their shady contacts, suurogates, proxys families with telecommunication/TV audio and video technologies.

Along these lines, surely the left in India (all type) and other democratic forces in India should think about starting television channels and mass media programs solely to expose financial, illegal, and black market activities to educate the people. That is the only way the left can gain the attention and audience of the common man and pull them toward educated informed democracy, and also force the offcials to act on the corruption. Spread this news and even you should think about doing something like these, of course without directly offending the rights of poor/innocent women.

SKMS