Friday, October 17, 2008

'மான்கராத்தே' கட்சியாக மேல்நிலையாக்கமடைந்தது 'மார்க்சிஸ்ட்'கட்சி: தற்போதைய உபயதாரர் - திருவாளர் டி.கே.ரெங்கராசன்!

குறிப்பு: மேலே படத்திற்கு போஸ் கொடுத்துக் கொண்டிருப்பவர் சிபிஎம் கட்சியின் எம்.பி.யும் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான திருவாளர் டி.கே.ரெங்கராசன் தான்.

தமது அரசியல் நிலைப்பாடுகள் மீது பதியப்படும் நியாயமான விவாதங்களைத் தவிர்ப்பதும், விமர்சனங்களைக் கண்டு பம்முவதும், எதிர்வரும் கேள்விகளை இருட்டடிப்பு செய்து 'தப்பித்து'க் கொள்வதுவும் ஏதோ நம்ம சந்திப்பு போன்றவர்களின் வழக்கமாகத்தான் நாம் பார்த்து வந்துள்ளோம். ஆனால், அக்கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் ஒருவர்கூட இதுவரை தமது கட்சியின் அரசியல் செயல்பாடுகள் மீதான எந்த விமர்சனத்துக்கும் நேர்மையாக பதிலளித்தது கிடையாது என்று அறியவருகிறோம்.

பார்ப்பன சேவகியாகவே வாழ்ந்து கழித்த கே.பி.சுந்தராம்பாளுக்கும், பார்ப்பனீயத்தின் வேரினில் தனது முற்போக்குக் கலைகளின் மூலம் அமிலம் பாய்ச்சியழித்த நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களுக்கும் ஒரே நேரத்தில் நூற்றாண்டு விழா எடுக்கப் போவதாக அறிவித்து, அதற்காக பல்வேறு கூட்டங்களை நடத்திவருகிறது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் (சிபிஎம் கட்சியினைச் சார்ந்த அமைப்பு).

"இது சரியா?" என்பது நண்பர் கலைவேந்தன் என்பவருடைய கேள்வி. அதற்கான நேர்மையான பதிலைப் பதிவு செய்வதில் அக்கட்சியின் தலைவர் எப்படி பொறுப்பற்று நடந்து கொள்கிறார் என்பதனைச் சுட்டிக்காட்டி,
தோழர் மதிமாறன் தனது வலைதளத்தில் பதிவிட்டிருந்த கீழ்கண்ட பதிவினை இங்கே மீள்பதிவிடுவது அவசியம் என்று கருதுகிறேன்.

தோழமையுடன்,
ஏகலைவன்.
-------------------------------------------------------------------------------------------------

கே.பி.சுந்தராம்பாள், தமுஎசவிற்காக-சிபிஎம் டி.கே.ரங்கராஜனும்-எம்.ஆர்.ராதாவிற்காக கலைவேந்தனும்"


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கே.பி.சுந்தராம்பாளுக்கு விழா எடுப்பதைப் பற்றி திரு.கலைவேந்தன் என்பவர் நமக்கு ஒரு கேள்வி அனுப்பியிருந்தார்.அதற்கான பதிலை நாம் எம்.ஆர். ராதாவும் - கே.பி. சுந்தராம்பாளும் - தமுஎசவும் என்ற தலைப்பில் வெளியிட்டு இருந்தோம்.( http://mathimaran.wordpress.com/)

அந்தப் பதிலை மார்க்சிஸட் கம்யூனிஸ்ட்டு கட்சியின் தலைவர்களில் ஒருவரான திரு. டி.கே. ரங்கராஜனுக்கு திரு.கலைவேந்தன் அனுப்பி வைத்திருக்கிறார். அதற்கு திரு. ரங்கராஜன் அளித்த பதிலும், பதிலுக்கு திரு.கலைவேந்தன் அளித்த பதிலும்.

திரு.கலைவேந்தன் இதை நமக்கு அனுப்பியிருந்தார். அதை உங்கள் பார்வைக்காக வெளியிட்டிருக்கிறேன்.

அன்பும், பாசமும் உள்ள கலைவேந்தன் அவர்களுக்கு,

எவரையும் விமர்சிக்கும் உரிமை உங்களுக்கு உண்டு. உங்கள் கடமையை நீங்கள்செய்திருக்கிறீர்கள். நடிகவேள் எம்.ஆர். இராதாவைப் பற்றிக்கூட இறுதிக்காலத்தில் அவருடைய நடைமுறை பழக்க வழக்கங்களில் பெரிய மாறுதல் வந்ததாகவும்திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்கள் கூறுகிறார்கள். அது எந்த அளவுக்குஉண்மை என்பது எனக்குத் தெரியாது.


எப்படியிருப்பினும் நடிகவேள் சுயமரியாதைகருத்துக்கு செய்த பணி என்றும் அனைவராலும் பாராட்டப்படும். அதேபோல்,கே.பி. சுந்தராம்பாளுடைய தனி வாழ்க்கை எப்படியிருந்தாலும் அதைப் பற்றிவிவாதிக்க என்னைப் போன்றவர்கள் தயாரில்லை.

ஆனால், சுதந்திரப் போராட்டக்காலத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதில் அவர் தன் பணியைச்செய்திருக்கிறார் என்பதை தங்களுடைய மடலில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.அன்றையத் தேவை அதுதான். அதை அவர் சரியாக செய்திருக்கிறார். மதனைப் பற்றிநான் எதுவும் கூறவிரும்பவில்லை.

வாழ்த்துக்கள்
நன்றி
வணக்கம்.
டி.கே. ரெங்கராஜன்




நண்பர் டி. கே. ரங்கராஜன் அவர்களுக்கு, ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் இதுபோன்ற எளியோரின் மின்னஞ்சல்களை கவனத்தில் கொண்டு பதிலளித்ததற்கு நன்றி! பாராட்டுக்கள்! நான் மிகத்தாமதமாக பதிலளிக்க நேர்ந்ததற்கு மன்னிக்கவும்.உங்களுடைய பதில் தெளிவில்லாமலும் பொறுப்பற்றதாகவுமே இருக்கிறது.

************கே.பி. சுந்தராம்பாளுடைய தனி வாழ்க்கை எப்படியிருந்தாலும் அதைப் பற்றிவிவாதிக்க என்னைப் போன்றவர்கள் தயாரில்லை. ஆனால், சுதந்திரப் போராட்டக்காலத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதில் அவர் தன் பணியைச்செய்திருக்கிறார் என்பதை தங்களுடைய மடலில் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.அன்றையத் தேவை அதுதான். அதை அவர் சரியாக செய்திருக்கிறார். ****************

ஏகாதிபத்திய எதிர்ப்பில் சுந்தராம்பாள் ஈடுபட்டதாக நான் குறிப்பிட்டுள்ளதாகச் சொல்லியுள்ளீர்கள். நான் அவ்வாறு எங்கேயும் குறிப்பிடவில்லை, அது உங்களது கற்பனையில் மட்டுமே உதித்தது என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

உங்களுடைய பார்ப்பன சேவகத்தை நான் விமர்சிக்கவில்லை. அது உங்களது உரிமை. ஆனால், எம்.ஆர்.ராதாவை விட்டுவிடுங்கள் என்பதுதான் எமது கோரிக்கையும் தோழர் மதிமாறனுடைய கோரிக்கையுமாகும்.

பாரதி குறித்த விமர்சனங்களுக்கே இன்னும் மழுப்பல்களையும் கள்ள மவுனத்தையுமே பதிலாகத்தரும் உங்களது கட்சியினர் சுந்தராம்பாள் விடயத்தில் எத்தகைய கருத்தாக்கத்தில் இருப்பார்கள் என்பதில் எனக்கேதும் சந்தேகம் இல்லை. நான் தெளிவு படுத்த விரும்புவது மற்றவர்களுக்குத்தான்.

நல்லவேளையாக “விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தவர்களுக்கெல்லாம் விழா எடுப்போம்” என்று வீர சவர்க்கருக்கோ அல்லது நாற்பது பேரைக் காட்டிக்கொடுத்த வாஜ்பாயிக்கோ விழா எடுக்காமலிருந்தால் சரி.

என்னைப்பொருத்தவரை பாரதிக்கு, விழா எடுப்பதற்கும் சவர்க்கருக்கு விழா எடுப்பதற்கும் வேறுபாடு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.தங்களது மேலான பதிலை நாடி நிற்கும்,
- கலைவேந்தன்.

இந்தப் பதிலுக்கு எந்த பதிலும் திரு. ரங்கராஜன் அளிக்கவில்லை.

3 comments:

said...

வணக்கம் தோழர். வலையுலகிறகு புதிதாக வந்துள்ளேன். இணைப்பு கொடுக்கவும்.

நன்றி
http://porattamtn.wordpress.com

said...

வணக்கம்.

நான் ஈழத்தலிருந்து.
அதிகாரத்தின் நகங்கள் முகங்களை கீறுவதை கண்டேன்.,
உங்கள் வலையில்...

Anonymous said...

தோழரே டி.கே.ரங்கராஜன் அவர்கள் பதில் அளிக்காதது எனக்கு வியப்பளிக்கவில்லை.இந்த இரண்டு கம்யுனிஸ்ட் கட்சிகாரர்களும், சமசரம்,அரசியல் தந்திரம் என்று ஓட்டுக்காக நாங்கள் யாருக்கும் எதிரிகள் கிடையாது.எல்லா மதத்தையும் ஆதரிக்கிறோம் என்று இதுபோல பல விசியங்களில் சொல்லாமல் எடுத்துக்காட்டுகிறார்கள்.இது தவறு என்று நான் சொல்லவில்லை.ஆனால் கொள்கைபிடிப்பு எந்த அளவிற்கு நமக்கும், நம் கட்சி தோழர்களுக்கும் இருக்கிறது.எந்த அளவில் நாம் அதை தற்காத்துக்கொண்டுள்ளோம்.சரியான விமர்சனங்களுக்கு பதில் அளிக்கிறோமா? என்று இவர்கள் சிந்திக்க வேண்டும்.கம்யுனிசத்தைப்புரிந்தவர்களுக்கே இவர்கள் பதில் அளிக்காதப்போது,வேறு யாருக்கு நீங்கள் பதில் சொல்லப்போகிறார்களோ.
ஆனால் ஒன்று எந்த ஒரு கொள்கையுடனும் போராடும்போது,தந்திரங்களுடன் எதைவேண்டுமானாலும் விட்டுக்கொடுத்து சமரசம் செய்துக்கொள்ளலாம்.ஆனால் அதன் அடிப்படைக்கொள்கையை விட்டுவிட்டு சமரசம் செய்வது அதன் அழிவுக்கு தான் வழிவகுக்கும்.
ஒரு மதக்கட்சிக்கு அதாவது பிஜேபிக்கு தெரிந்த தந்திரம்க்கூட இவர்களுக்கு தெரியவில்லை இவர்கள் எப்படிதான் கம்யுனிஸ்டுக்களோ.