Saturday, June 21, 2008

நந்திகிராமத்திலிருந்து விழுப்புரம் வரை சிபிஎம் ரவுடிக் கும்பலின் கொலைவெறித் தாண்டவம்...."இந்தியாவுக்கான புரட்சிப் பாதை ஆயுதம் தாங்கியதாக ஒருபோதும் இருக்க முடியாது. சுதந்திர இந்தியாவில், மக்களுக்கான ஜனநாயகம் தழைத்தோங்குகின்ற நமது தேசத்தில் சமாதான முறையிலேயே அரசியலை வழிநடத்தி புரட்சியை வென்றெடுக்க முடியும்" என்று அடிப்படையான மார்க்சிய லெனினியத்துக்கே கொள்ளிவைத்தனர் சிபிஐ/சிபிஎம் போலி கம்யூனிஸ்டுகள்.

ஆயுதமேந்திய புரட்சியை வலியுறுத்துவதாலேயே நக்சல்பாரிகளை இழிவுபடுத்திப் பேசுவதோடு; அவ்வப்போது நக்சல்பாரிகளுக்கு எதிராக ஆளும்வர்க்கத்துக்கு அன்னிய/இந்திய முதலாளிகளுக்கு கைக்கூலிகளாகவும் செயல்பட்டு வருகின்றனர். சட்டீஸ்கர் மாநில அரசால் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக திட்டமிட்டே உருவாக்கப் பட்டுள்ள 'சல்வாஜூடும்' போன்ற கூலிப்படை அமைப்புகளுக்கு ஆதரவாகவும் இப்போலிகள் நடந்து வருகின்றனர்.

இவற்றையெல்லாம் நாம் கேள்வி கேட்டால், "ஆயுத கலாச்சாரம்" இருவருக்குமே ஆபத்தானது" என்கிற உபதேசம் வேறு. இப்படிப்பட்ட 'சைவ பூணைகள்' இப்போது ஆயுதமில்லாமல் அரசியலே நடத்துவது கிடையாது. இதுபற்றிகூட நாம் விரிவாக எதையும் எழுதவேண்டிய அவசியமில்லை என்றே தோன்றுகிறது. அனைத்துமே உலக அளவில் சந்தி சிரித்த விசயம்தான் ஏற்கெனவே.

மேற்குவங்கத்தில் இவர்களது அரசும் கட்சியும், தரகு முதலாளியான டாடாவுக்கும், இந்தோநேசியாவில் சுமார் பதினைந்து இலட்சம் கம்யூனிஸ்டு தோழர்களை நரவேட்டையாடிய சுகர்தோ வுடைய 'சலீம் குழும'த்துக்கும் அடியாளாக மாறி சேவை செய்துவருவது அனைவருக்கும் தெரிந்த விசயம்தான். இப்படிப்பட்ட ஒரு குண்டர் அமைப்பு முதலாளிகளுக்கு எதிராக சாதாரண உழைக்கும் மக்கள் மீது ஏவிய அக்கிரமங்களை இந்த ஒரு பதிவுக்குள் பட்டியலிட்டுவிட முடியாது. குறிப்பாக நந்திகிராம போராட்டங்களின் போது இக்கட்சியைச் சார்ந்த குண்டர்களால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்கள் ஏராளம். இக்குண்டர்படை செய்த அட்டூழியங்களில் காணாமல்போன குழைந்தைகள் முதியவர்கள் நூற்றுக் கணக்கான பேர்.

இப்படி சாதாரண உழைக்கும் மக்களுக்கு எதிராக, குழந்தைகள், பெண்கள் என்று அனைவரின் மீதும் தனது வக்கிரங்களைக் கட்டவிழ்த்துள்ள அக்கட்சி கையில் உயர்த்திப் பிடித்திருப்பது ஆயுதங்களைத்தான், வேறெதையுமில்லை.

சமூக மாற்றத்திற்கான போராட்டங்களில் ஆயுதமேந்திய போராட்டத்தை மறுதளிக்கும் இப்போலிக் கூட்டம்; முதலாளிகளிடம் பெறும் சில தனிப்பட்ட ஆதாயங்களுக்காக கூலிப்படையாக மாறி ஆயுதங்களோடு கொக்கரிக்கிறது. இவ்வாறு இவர்கள் ஆளுகின்ற மாநிலங்களிலெல்லாம் ஆயுதங்களோடு பொறுக்கித்தனம் செய்து வரும் இக்கும்பல், நமது தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை.

மகஇக, மற்றும் அதன் தோழமை அமைப்புகள் எதுவும் ஆயுதங்களோடு களத்தில் இல்லை. நாங்களும் மக்கள் மத்தியில்தான் இயங்கிவருகிறோம் என்பதை பல்லாயிரம் முறை தெளிவாக நாம் சொல்லியாகிவிட்டது. ஆனால், இன்று வரை நமது தோழமை அமைப்புகளை 'ஆயுதமேந்திய நக்சல் பயங்கரவாதிகள்' என்று அவதூறு செய்வதை அவர்கள் நிறுத்தியதாகத் தெரியவில்லை. இணையத்திலும் இதற்கெதிரான விவாதங்களை நமது தோழர்கள் விரிவாக நடத்தியிருக்கின்றனர். ஒரே பொய்யைத் திரும்பத்திரும்ப அழுத்திச் சொல்வதனால் அது உண்மையாக மாறிவிடாதா என்று முயன்று கொண்டிருக்கின்றார்கள் போலிகள்.

இப்போது தமிழகத்திலும் இவர்கள் ஆயுதமேந்திச் சுற்றத் தொடங்கிவிட்டனர். இவர்கள் இங்கே உயர்த்திப் பிடித்திருக்கும் ஆயுதம் யாருக்கு எதிராக என்றால்; நமக்கு எதிராகத்தான். விழுப்புரம் அருகில் உள்ள காரப்பட்டு கிராமத்தில் ஏற்பட்ட அரசியல் மோதலில் எமது தோழர்களை சித்தாந்த ரீதியில் எதிர்கொள்ளத் திராணியற்ற சிபிஎம் ரவுடிக் கும்பல், சென்றவாரம் ஒரு பொதுக்கூட்டத்திலேயே எமது தோழர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு "வெட்டி வீசுவோம்" என்று கொக்கரித்திருக்கிறார்கள் அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள்.

எமது தோழர்களோ, இதனைக் கண்டுகொள்ளவில்லை. பொதுவாக சிபிஎம் கட்சியின் இதுபோன்ற வெற்று சவடால்கள் விடுவது ஒன்றும் புதிதல்ல. எனவே, எமது தோழர்களும் சற்று கவனக் குறைவாக தத்தமது பணிகளில் இருந்துவிட்டனர். இதனையறிந்து கொண்ட இந்த போலிகம்யூனிச பாசிசக் கும்பல், முறையாகத் திட்டமிட்டு, நேற்று இரவு எமது தோழர்களின் மீது கொலைவெறி ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியிருக்கிறது.

அதில் தோழர் இராசேந்திரன் என்ற எமது தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னனி (வி.வி.மு) ஆதரவாளர் கொடூரமான தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளார். மேலும் மூன்று தோழர்கள் கடுமையான காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமணையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.

பாஜக பயங்கரவாதிகள் தமது தில்லி தலைமை அலுவலகத்தைத் தாக்கியதை எதிர்த்து அதற்கு பதிலாக, சிபிஐ, சிபிஎம் கட்சிகளின் மாநில அலுவலகங்கலால் சூழப்பட்டிருக்கின்ற, பாஜக வின் சென்னை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒரு அடையாள ஆர்ப்பாட்டம் கூட நடத்த முடியாத அந்த சொரனையற்ற சிபிஎம் தொடைநடுங்கிக் கும்பல், நிராயுதபானிகளாகக் களத்தில் பணியாற்றும் எமது பாட்டாளி வர்க்கத் தோழர்களை தனது வர்க்க எதிரியாகக் கொண்டு இப்படிப்பட்ட பேடித்தனமான தாக்குதல்களை நடத்தியிருக்கிறார்கள்.

இத்தாக்குதலுக்கு தக்க எதிர்விணையாற்றுவதோ பதிலடி கொடுப்பதோ நமக்கொன்றும் கடினமான காரியம் இல்லை. ஆனால், இந்த நிமிடம் வரை சிபிஎம் என்ற கடைந்தெடுத்த போலிக்கும்பலை கம்யூனிஸ்டுகளாகப் பார்க்கிற அக்கட்சியின் உண்மையான தோழர்கள், இப்படிப்பட்ட ஒரு இழிவான செயல் அம்பலமான பிறகும் அக்கட்சியை ஒரு கம்யூனிஸ்டு கட்சி என்று நம்புவார்களா? ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகளாக எம்மைத் தொடர்ந்து சித்தரித்துவரும் சிபிஎம் தலைமையின் கோரமான கொலைமுகத்தை இனியேனும் அறிவார்களா??


(குறிப்பு: இக்கொலை சம்பவம் தொடர்பாக சிபிஎம் குண்டர்களில் சிலர் கைது செய்யப் பட்டிருப்பதாக அறிகிறோம். முழுமையான தகவல் கிடைக்கப் பெற்றதும் இப்பதிவின் தொடர்ச்சியினை வெளியிடுவோம்.)14 comments:

said...

//
அதில் தோழர் இராசேந்திரன் என்ற எமது அமைப்பின் ஆதரவாளர் கொடூரமான தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளார். மேலும் மூன்று தோழர்கள் கடுமையான காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமணையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.பாஜக பயங்கரவாதிகள் தமது தில்லி தலைமை அலுவலகத்தைத் தாக்கியதை எதிர்த்து அதற்கு பதிலாக, சிபிஐ, சிபிஎம் கட்சிகளின் மாநில அலுவலகங்கலால் சூழப்பட்டிருக்கின்ற, பாஜக வின் சென்னை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒரு அடையாள ஆர்ப்பாட்டம் கூட நடத்த முடியாத அந்த சொரனையற்ற சிபிஎம் தொடைநடுங்கிக் கும்பல், நிராயுதபானிகளாகக் களத்தில் பணியாற்றும் எமது பாட்டாளி வர்க்கத் தோழர்களை தனது வர்க்க எதிரியாகக் கொண்டு இப்படிப்பட்ட தாக்குதல்களை நடத்துகிறார்கள்.இத்தாக்குதலுக்கு தக்க எதிர்விணையாற்றுவதோ பதிலடி கொடுப்பதோ நமக்கொன்றும் கடினமான காரியம் இல்லை. ஆனால், இந்த நிமிடம் வரை சிபிஎம் என்ற கடைந்தெடுத்த போலிக்கும்பலை கம்யூனிஸ்டுகளாகப் பார்க்கிற அக்கட்சியின் உண்மையான தோழர்கள், இப்படிப்பட்ட ஒரு இழிவான செயல் அம்பலமான பிறகும் அக்கட்சியை ஒரு கம்யூனிஸ்டு கட்சி என்று நம்புவார்களா? ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகளாக எம்மைத் தொடர்ந்து சித்தரித்துவரும் சிபிஎம் தலைமையின் கோரமான கொலைமுகத்தை இனியேனும் அறிவார்களா??

//

அசுரன்

Anonymous said...

அய்யா! தோழர்களே நீங்கள் அவர்களை குறை கூறுங்கள்,அவர்கள் உங்களை குறை கூறுவர்கள்.இப்படியே செல்லுங்கள் வெகுவிரைவில் கம்யுனிசம் இந்தியாவை விட்டே ஓடிவிடும்.கம்யுனிசத்தை படித்து,புரிந்து,சிந்தித்து, செயல்படுத்துவர்களுக்கே இந்த கருத்து வேறுபாடு என்றால் பாமரனுக்கு இதல்லாம் சுத்தமாக புரியாது.கம்யுனிசம்,மாக்சியம் என்றே சண்டை போடுங்கள்.
ஒற்றுமையான கருத்துகள் என்று வருகிறதே அன்று தான் கம்யுனிசம் வெல்லும்.அதுவரை அது விழ்ந்து தான் கிடக்கும்.வரட்டு பேச்சுகள் எல்லாம் வீண்தான்.கம்யுனிசத்தை சரியா புரிந்துக்கொள்ளுங்கள் அய்யா.
அது ஒன்றும் பைபிள் இல்லை.மனிதனால் எழுதப்பட்டதுதான்.மனிதன் சுத்தம் செய்து போட்ட ஒரு நல்ல பாதை தான்.பாதைக்கு எப்போதும் முடிவு உண்டு.இங்கு முடிவு என்று சொல்வது பாதையில் பயணம் செய்யும்போது அந்த பாதையின் எல்லையின் முடிவை. முடிவுவரையில் சென்று திரும்பிவருபவனை கம்யுனிஸ்டாக ஏற்க முடியாது.அந்த பாதையின் முடிவில் இருந்து மேலும் பாதையை வளர்ப்பவனே,சுத்தம்செய்து பலபாதைகளை ஏற்படுத்துபவனே கம்யுனிஸ்ட்.அதை விடுத்து மார்க்ஸ் சொன்னார்,ஏங்கல்ஸ் சொன்னார் தவறு இதுதான் சரி என்று சொன்னால் அந்த காரல் மார்க்ஸ்ஸே மன்னிக்க மாட்டார்.ஒன்றை வைத்துக்கொண்டு இதுதான் உணமை என்று சொன்னால் ஆன்மிகத்திற்கும்,கம்யுனிசத்திற்கும் வேறுபாடே இல்லை.கம்யுனிசம் என்பது திருத்தபட வேண்டியது அல்ல,வளர்க்க வேண்டியது.இந்த காலத்திற்கு தகுந்தாற்போல வளர்க்கும்போது மிகவும் கவனமாக சிந்தித்து செயல்படவேண்டும்.உங்களுக்கே தெரியும் நமது இந்தியா பல பிளவுகள் உள்ளநாடு இங்கு கம்யுனிசம் ஆட்சி ஏற்படவேண்டும் என்றால் மிகவும் கடினம்.அதற்கு பகுத்தறிவு பிரச்சாரம்,மத ஒழிப்பு ஜாதி ஒழிப்பு இவற்றை தந்திரத்துடன் செய்தால் தான் கனவு நிறைவேறும்
அதை விடுத்து திவிரவாதம் தான், மிதவாதம் தான் என்று சண்டைபோட்டுக்கொண்டால் விழ்ச்சிதான்.என்னை பொறுத்தவரையில் கம்யுனிஸ்டுகள் எல்லோரும் ஒன்றாக இருந்து சரியான தந்திரத்துடன் அது தீவிரமோ,மக்கள் ஓட்டு மூலமோ,இவ்விரண்டு சேர்த்தோ, செயல்புரியுங்கள்.என்னை போன்ற இளைனர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

Anonymous said...

அய்யா! தோழர்களே நீங்கள் அவர்களை குறை கூறுங்கள்,அவர்கள் உங்களை குறை கூறுவர்கள்.இப்படியே செல்லுங்கள் வெகுவிரைவில் கம்யுனிசம் இந்தியாவை விட்டே ஓடிவிடும்.கம்யுனிசத்தை படித்து,புரிந்து,சிந்தித்து, செயல்படுத்துவர்களுக்கே இந்த கருத்து வேறுபாடு என்றால் பாமரனுக்கு இதல்லாம் சுத்தமாக புரியாது.கம்யுனிசம்,மாக்சியம் என்றே சண்டை போடுங்கள்.
ஒற்றுமையான கருத்துகள் என்று வருகிறதே அன்று தான் கம்யுனிசம் வெல்லும்.அதுவரை அது விழ்ந்து தான் கிடக்கும்.வரட்டு பேச்சுகள் எல்லாம் வீண்தான்.கம்யுனிசத்தை சரியா புரிந்துக்கொள்ளுங்கள் அய்யா.
அது ஒன்றும் பைபிள் இல்லை.மனிதனால் எழுதப்பட்டதுதான்.மனிதன் சுத்தம் செய்து போட்ட ஒரு நல்ல பாதை தான்.பாதைக்கு எப்போதும் முடிவு உண்டு.இங்கு முடிவு என்று சொல்வது பாதையில் பயணம் செய்யும்போது அந்த பாதையின் எல்லையின் முடிவை. முடிவுவரையில் சென்று திரும்பிவருபவனை கம்யுனிஸ்டாக ஏற்க முடியாது.அந்த பாதையின் முடிவில் இருந்து மேலும் பாதையை வளர்ப்பவனே,சுத்தம்செய்து பலபாதைகளை ஏற்படுத்துபவனே கம்யுனிஸ்ட்.அதை விடுத்து மார்க்ஸ் சொன்னார்,ஏங்கல்ஸ் சொன்னார் தவறு இதுதான் சரி என்று சொன்னால் அந்த காரல் மார்க்ஸ்ஸே மன்னிக்க மாட்டார்.ஒன்றை வைத்துக்கொண்டு இதுதான் உணமை என்று சொன்னால் ஆன்மிகத்திற்கும்,கம்யுனிசத்திற்கும் வேறுபாடே இல்லை.கம்யுனிசம் என்பது திருத்தபட வேண்டியது அல்ல,வளர்க்க வேண்டியது.இந்த காலத்திற்கு தகுந்தாற்போல வளர்க்கும்போது மிகவும் கவனமாக சிந்தித்து செயல்படவேண்டும்.உங்களுக்கே தெரியும் நமது இந்தியா பல பிளவுகள் உள்ளநாடு இங்கு கம்யுனிசம் ஆட்சி ஏற்படவேண்டும் என்றால் மிகவும் கடினம்.அதற்கு பகுத்தறிவு பிரச்சாரம்,மத ஒழிப்பு ஜாதி ஒழிப்பு இவற்றை தந்திரத்துடன் செய்தால் தான் கனவு நிறைவேறும்
அதை விடுத்து திவிரவாதம் தான், மிதவாதம் தான் என்று சண்டைபோட்டுக்கொண்டால் விழ்ச்சிதான்.என்னை பொறுத்தவரையில் கம்யுனிஸ்டுகள் எல்லோரும் ஒன்றாக இருந்து சரியான தந்திரத்துடன் அது தீவிரமோ,மக்கள் ஓட்டு மூலமோ,இவ்விரண்டு சேர்த்தோ, செயல்புரியுங்கள்.என்னை போன்ற இளைனர்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

said...

நண்பர் ரூபகாந்தன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

இப்பதிவு சிபிஎம் என்ற ஆளும் வர்க்க கைக்கூலிக் கும்பலின் கூலிப்படையின் செயல்களைக் கண்டித்தும் அம்பலப்படுத்தியும் போடப்பட்ட பதிவு இது.

இப்பதிவில் அம்பலப்படுத்தப்பட்ட தகவல்களில் இருந்து நீங்கள் கிரகித்தது இதுதானா? எதிரியைவிட துரோகி எவ்வளவு பயங்கரமானவன் என்பது உங்களுக்குத் தெரியாதா? ஆளும் வர்க்கக் கைக்கூலிக் கும்பல், தவறிக்கூட பாட்டாளி வர்க்கத்தின் பின்னால் வரத்தயங்குகிற கூட்டம்தான் இப்போலிக் கயவர் கூட்டம்.

சிவப்புக் கொடியும் பெயரில் கம்யூனிசத்தைக் கொண்டிருப்பதையும் மட்டும் கணக்கில் கொண்டு, "கம்யூனிஸ்டுகள் இவ்வாறு மோதிக்கொள்வது நியாயமா?" என்று நீங்கள் கேட்கிறீர்கள். அவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று நீங்கள் உறுதியாகச் சொன்னீர்களானால், அவர்களே அதனை மறுப்பார்கள்.

தயவு செய்து மார்க்சியத்தைக் கொச்சைப் படுத்த வேண்டாம். உங்கள் பார்வைக்கு அவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று தோன்றினால், அதை எனக்கும் தெரியப்படுத்துங்கள். இன்னன்ன வகையில் இவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று கொஞ்சம் விவரித்தீர்களானால்; தொடர்ந்து நாம் விவாதிக்கலாம்.

Anonymous said...

தோழரே ஏகலைவன்.இங்கு நான் நந்திகிராமத்தில் மார்க்சிஸ் கட்சி செய்தது சரி என்று நான் கூற வில்லை.அது கம்யுனிசத்திற்கே எதிரானது தான். நான் ஒத்துக்கொள்கிரேன்.அவர்கள் இந்த கேவலமான செயல்கள் புரிந்ததற்கு பல காரணங்கள் உள்ளன.கம்யுனிசம் இந்தியா சுதந்திரம்(அதாவது வெளிநாட்டு முதலாளி சென்று உள்நாட்டு முதலாளி செங்கோலை பிடித்ததை) அடைவதற்கு முன் இருந்து இன்று வரை இவர்கள் எடுத்த தந்திர முடிவுகள் எல்லாம் சரியாக இருந்தாலும் மக்களுக்கு புரியாத கேட்டவுடனே எதிரானதாக தோற்றம் அளிப்பதாகவே இருந்தது(அதாவது தீவிர கம்யுனிஸ்ட் இந்திய கம்யுனிஸ்ட் ஒன்றாக இருந்த நேரத்தில்)அதலால்தான் காங்கிரஸ் வளர்வதை போன்று மட்டும் பல சிறிய கட்சி வளர்வதை போன்று கம்யுனிஸ்ட் கட்சி வளரவில்லை.
என்று இந்திய கம்யுனிஸ்ட் கட்சி பிளவுப்பட்டு சிதறி போனதோ(மார்க்ஸிஸ்ட் கட்சி, தீவிர கம்யுனிஸ்ட்,மாவோ,நக்சல்பாரிகள்)
அன்று இருந்து இன்று வரை போலி கம்யுனிஸ்ட் என்று செல்கிறிர்களே அவர்களை செல்கிரேன்,தந்திரம் என்ற பெயரில் கொள்கைகளை விட்டுகொடுக்கதொடங்கிவிட்டனர்.அதன் விளைவுதான் இது எல்லாம்.மேலும் இன்றைய இந்தியா அதன் மக்கள் எப்படி என்றால் போலிஅரசியல்வாதிகள் எப்படியோ அப்படியே மக்களும் இருக்கிரார்கள்.இதற்கு காரணம் காங்கரஸ்,பிஜேபி மற்றும் பல கட்சிகள்.இந்த சூழ்நிலையில் பொதுவுடமை,முதலாளிடம் இருந்து சொத்துகளை பிடுங்கி தொழிலாளி இடம் கொடுப்பேன் என்று ஆயுதம் ஏந்தி போரட்டம் இப்படி நடத்தினால் தோல்விதான் கிடைக்கும்.கம்யுனிசம் முடியாட்சியை தான் ஆயுதம் ஏந்தி வீழ்த்தியுள்ளது.போலி மக்களாட்சியை அல்ல.நல்ல எடுத்துக்காட்டு நேபாளம். இறுதியாக ஒரு கருத்து மட்டும் கூறுகிரேன் ஆயுதம் ஏந்தி தனியாக (அதாவது மக்கள் ஒட்டை பெறகூடிய கம்யுனிஸ்ட் கட்சி ஆதரவுல்லாமல் ) போராடுபவர்கள் ஒரு காலமும் கம்யுனிஸ்ட் ஆட்சியை நிறுவமுடியாது.என்னை பொறுத்தவரையில் கம்யுனிசத்தை புரிந்தவரையில் இந்தியாவில் நான் ஒரு கம்யுனிஸ்ட் கட்சியை சேர்தவன் அறிவிக்கும் ஒருவன் அதாவது நிங்கள் சொல்லும் போலி கம்யுனிஸ்ட்டையும் சேர்த்தே சொல்கிரேன் அவர்களுடன் கலந்து பேசினால் கண்டிப்பாக ஒரு நல்ல முடிவு ஏற்படும். ஒன்றாக கூடிபேசுங்கள்.ஒரு சரியான முடிவை எடுங்கள்.அதற்காக எந்த தந்திரத்தையும் செய்ய தயாராகுங்கள்.மக்கள் ஆட்சிக்கொண்டே ஆட்சியை பிடித்து,அதன் பிறகு கம்யுனிச ஆட்சியை பிரகடன்படுத்துவோம்.
(அவர்கள் இந்திய கம்யுனிஸ்ட்,மார்க்சிஸ்ட்,கம்யுனிசத்தை புரிந்தவர்கள் தான் இன்றைய சூழ்நிலையி தவறான முடிவால் இப்படி செய்துவிட்டார்கள்.அவர்கள் நிங்கள் விமர்சிக்காதிற்கள் ஏன்னென்றால் இந்த கம்யுனிஸ்ட்டே இப்படிதானோ என்று நினைப்பார்கள்.இதை தெரியபடுத்துவதே ஒரு உண்மையான கம்யுனிஸ்டுதான் என்பதை மறந்து விடுவார்கள்.முன்னொர்கள் செய்த தவறை திருப்பி செய்யாதிற்கள்.மேலும் இது மதவாதிகளுக்கும் தான் பெரிய லாபம்,அவர்கள் தான் வளர்வார்கள்.
நான் கம்யுனிஸ்ட்களிடம் கேட்பது ஒன்று தான் ஒன்றுபடுங்கள் ! வளமான இந்தியாவை உருவாக்குவோம், நாம் வீட்டிலே இருக்கும் நச்சுபுச்சிகளை நாம் ஆட்சிக்கு வந்தபின் நசுக்கி விடலாம்.
கம்யுனிசமே மனிததன்மை, மாக்சியமே பகுத்தறிவு,இயக்கவியல் பொருள் முதல்வாதமே விஞ்ஞானம்,மாக்சியம் இல்லாத நாத்திகம் முட்டாள்தனமே!

நான் சொல்லவந்ததை சரியாக விளக்கவில்லை என்ற நினைப்பிலே முடிக்கிரேன்

said...

///இந்தியா சுதந்திரம்(அதாவது வெளிநாட்டு முதலாளி சென்று உள்நாட்டு முதலாளி செங்கோலை பிடித்ததை)////

தோழர் ரூபகாந்தன்,

ஆகஸ்டு 15ல் நள்ளிரவில் நடைபெற்ற நாடகத்திற்குப் பிறகு எந்த வெளிநாட்டு முதலாளியும் இந்தியாவை விட்டுச் செல்லவில்லை. வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் சொந்தமான ஏராளமான சொத்துக்கள், நிறுவனங்கள் இன்னும் இந்தியாவில் இருந்துகொண்டுதான் இருக்கின்றன. அவை நாட்டுடமையாக்கப் படவில்லை.

ஆட்சியிலிருந்து தான் கீழே இறங்கிக் கொண்டு தனது ஏஜெண்டுகளை அப்பதவியில் பத்திரமாக அமரவைத்து தொடர்ந்து இன்றுவரை தமது சுரண்டலை இடைவிடாது செய்துவருகிறது ஏகாதிபத்திய முதலாளியம்.

சுதந்திரமடைந்த சுயசார்ப்பான நாடு என்று சொல்லப்படும் நம் நாட்டு முதலாளிகளின் தொழில், இன்று வரை அந்நிய ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு இங்கே விரிந்த களம் அமைத்துக் கொடுக்கும் தரகு வேலைதான். சுருக்கமாகச் சொன்னால் ஏகாதிபத்திய முதலாளிகளுக்கு மாமா வேலை பார்ப்பதுதான் நமது 'பெரு முதலாளி'கள் என்று சொல்லப்படூம் அம்பானி, டாடாவின் குடும்பத்தொழிலாக இருக்கிறது.

வெளையனின் கையில் நம் நாடு இருந்தபோதே, தனது நிலங்களில் கஞ்சா பயிரிட்டு வெளையர்களுக்கு வழங்கியவந்தான் டாடா. இத்தொழில் அவர்களின் மரபுத் தொழில். அதனால்தான் இவர்களை தரகு முதலாளிகள் என்று எமது அமைப்புகள் வரையறுத்துள்ளன.

////அடைவதற்கு முன் இருந்து இன்று வரை இவர்கள் எடுத்த தந்திர முடிவுகள் எல்லாம் சரியாக இருந்தாலும் மக்களுக்கு புரியாத கேட்டவுடனே எதிரானதாக தோற்றம் அளிப்பதாகவே இருந்தது(அதாவது தீவிர கம்யுனிஸ்ட் இந்திய கம்யுனிஸ்ட் ஒன்றாக இருந்த நேரத்தில்)அதலால்தான் காங்கிரஸ் வளர்வதை போன்று மட்டும் பல சிறிய கட்சி வளர்வதை போன்று கம்யுனிஸ்ட் கட்சி வளரவில்லை.////

இது மட்டும் எனக்குப் புரியவில்லை தோழர். குறிப்பாக 'இவர்கள் எடுத்த தந்திர முடிவுகள்' என்று எதையோ குறிப்பிட்டுள்ளீர்கள். அதுபற்றி கொஞ்சம் விரிவாகச் சொன்னால் நல்லது. இவர்களின் தந்திரம் காங்கிரசின் காலடியில் அமர்ந்து கொண்டு, காங்கிரசின் நிழலாகத்தான் செயல்பட்டது. காங்கிரசுக்கு மாற்றாக அல்ல.

ரஷ்ய புரட்சிக்குப் பிறகு, உலகம் முழுக்க கம்யூனிச அலை பீறீட்டுக் கிளம்பிய நேரத்தில், அதனை எதிர்கொள்ள முடியாத முதலாளியம், தனது கைக்கூலிகளை கம்யூனிச போர்வையிலேயே உருவாக்க வேண்டியிருந்தது. அதுதான் இந்திய போலி கம்யூனிஸ்ட் கட்சியின் பிறப்பிடமானது.

விடுதலைப் போராட்டங்களில் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய பகத்சிங் போன்ற தோழர்கள் முன்னெடுத்த அளவுக்குக் கூட, அப்போதே சற்று வலுவாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியால் எந்த போராட்டத்தையும் முன்னெடுத்து நடத்த முடியாமல் போனது ஏன்? அப்போதும் வெள்ளைக் கைக்கூலி காந்தியின் வாலைப்பிடித்துக் கொண்டுதான் பயணித்தது இந்த போலிக் கயவர் கூட்டம்.

அடிப்படையாக, ஒரு பாட்டாளி வர்க்க கட்சியாக அக்கட்சி செய்த சாதனைகளை விட, இந்த பேனருடன் முதலாளிகளுக்கு கையாள் வேலை செய்ததுதான் அதிகம். இதோ இப்போதைய நந்திகிராம் வரை.

///இந்த சூழ்நிலையில் பொதுவுடமை,முதலாளிடம் இருந்து சொத்துகளை பிடுங்கி தொழிலாளி இடம் கொடுப்பேன் என்று ஆயுதம் ஏந்தி போரட்டம் இப்படி நடத்தினால் தோல்விதான் கிடைக்கும்.////

இதில்தான் நாங்களும் நமது மாவோயிசத் தோழர்களின் பாதையிலிருந்து வேறுபடுகிறோம்.

புரட்சி மட்டும் தான் இறுதித் தீர்வு. அப்புரட்சியினை நோக்கி மக்களை அணிதிரட்டுவது மட்டும்தான் நமது தலையாய கடமையாக இருக்க முடியும் வேறெதையும் விட. புரட்சிக்காக மக்களை அணிதிரட்டுவதற்கு மாற்றாக, தாமே ஆயுதம் தரித்துக் கொண்டு தனிமனித சாகசவாதிகளாக, சினிமா கதாநாயகனைப் போன்று கற்பனையில் களத்தில் போராடுவது முட்டாள்தனமானது. இதனை இடது தீவிரவாதம் என்கிறோம்.

புரட்சிக்காக மக்களைத் திரட்டுவதை அடியோடு மறுதலிப்பதோடு, புரட்சியே நமது சமூகத்துக்குத் தேவையற்றது. ஏனெனில் இது சுதந்திரமான ஜனநாயக நாடு. என்றெல்லாம் முதலாளிவர்க்கக் கட்சிகளைப் போன்று சொல்லிக் கொண்டு, இப்படிப்பட்ட ஜனநாயக சமூகத்தில் ஆட்சியதிகாரத்தைக் கொண்டே மக்களுக்குத் தேவையானதை செய்து விடமுடியும் என்று முடிவெடுத்துச் சீரழிந்துபோனதுதான் நீங்கள் குறிப்பிட்டுள்ள சிபிஐ/சிபிஎம் என்ற போலிகளின் நிலை. நாம் இவர்களை வலது சந்தர்ப்பவாதிகள் என்கிறோம்.

சீர்திருத்தங்களின் மூலமாக மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகச் சொல்லி களம் கண்ட இவர்களால் இன்னும் அவர்கள் ஆளும் மாநிலங்களில் கூட எதையும் சாதிக்க முடியவில்லை. இன்றும் இந்திய வறுமையில் மே.வங்கம் பெரும் பங்கு வகிக்கிறது. இவர்களை தேர்தல் களத்தில் எதிர்த்து நிற்கும் பிற ஓட்டுக் கட்சிகளும் தத்தமது பங்குக்கு சீர்திருத்தங்களை, சலுகைகளை மக்களின் மீது வாரியிறைத்துக் கொண்டுதான் இருக்கின்றது. அதனால்தான் இப் போலிகளின் சலுகைச் சவடால்கள் தேர்தல் களத்தில் புஸ்வானமாகின்றன. மக்களுக்கான நிரந்தர விடிவு என்பது இப்படிப்பட்ட சீர்திருத்தங்களினாலோ அல்லது சலுகை அறிவிப்புகளினாலோ ஒருபோதும் தீர்ந்துவிடப் போவதில்லை.

எனவே, புரட்சியை நோக்கி மக்களை அணிதிரட்டுவதில் எந்த விதமான சமரசமும் இன்றி களம் கண்டாக வேண்டும். செயல் தந்திரத்தில் மட்டும் நம்மோடு வேறுபட்டிருக்கும் மாவோயிசத் தோழர்களைக்கூட நாம் கணக்கில் கொண்டு பரிசீலிக்க முடியும். ஆனால், எதிரிகளின் கைக்கூலிக் கும்பலாக சீரழிந்து போன சிபிஎம்//சிபிஐ தலைமைகளோடு ஒருங்கிணைந்து செயல்படுவது என்பது தற்கொலைக்கு ஒப்பானது.

அதே நேரத்தில் அக்கட்சிகளை உண்மையான கம்யூனிஸ்டுகள் என்று நம்பிக் கொண்டு களத்தில் கணவுகளோடு நிற்கும் கீழ்மட்ட ஊழியர்களோடு நாம் ஆங்காங்கே விவாதித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவர்களில் பலர், நான் உள்பட, அக்கட்சியின் உண்மை நிலையினை உணர்ந்து வெளியேறி மகஇகவின் நிலைப்பாடுகளோடு செயல்களோடு இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

நீங்கள் சொன்ன மார்க்சியம் என்பது மக்களை அநீதிகளுக்கு எதிராக சுரண்டலுக்கு எதிராக அணிதிரட்டக் கூடிய ஆயுதம். மாறாக அது சுரண்டல்வாதிகளாலும் அவர்களின் கைக்கூலிகளாலும் உச்சரிக்கப் படுவதனால், உயர்த்திப் பிடிக்கப் படுவதனால், அவர்களை இன்று மக்கள் முன் அம்பலப் படுத்தியாக வேண்டிய நிர்பந்தமும் நமக்கு இருக்கிறது.

இறுதியாக! போலிகள் பேசுகின்ற மார்க்சியம் என்பது, இல.கணேச்னும் ராமகோபாலனும் பேசுகின்ற 'மத நல்லிணக்கம்' போன்றது. ஜெயலலிதா பேசுகின்ற 'ஊழல் எதிர்ப்பை'ப் போன்றது. இதில் கவனமாக இருக்க வேண்டியது நாமும் மக்களும்தான்.

தோழமையுடன்,
ஏகலைவன்.

(எதிர்கருத்துக்கள் இருப்பின் நீங்கள் தொடர்ந்து விவாதிக்கலாம். என்னுடைய கருத்துக்கள்தான் உலகிலேயே சிறந்தது என்ற தோரனையில் நான் இதனைச் சொல்லவில்லை. உமது விமர்சனங்களைப் பரிசீலிக்க நான் தயாராகவே இருக்கிறேன் தோழர்.)

said...

//
அதில் தோழர் இராசேந்திரன் என்ற எமது அமைப்பின் ஆதரவாளர் கொடூரமான தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளார். மேலும் மூன்று தோழர்கள் கடுமையான காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமணையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.

தேமுதிக வை சேர்ந்தவரோடு எப்போது உங்கள் புரட்சிகர போலி நக்சல் கட்சி கூட்டணி வைத்தது?

//இத்தாக்குதலுக்கு தக்க எதிர்விணையாற்றுவதோ பதிலடி கொடுப்பதோ நமக்கொன்றும் கடினமான காரியம் இல்லை.//

அப்படியா ?

இப்பதிவில் அம்பலப்படுத்தப்பட்ட தகவல்களில் இருந்து நீங்கள் கிரகித்தது இதுதானா? எதிரியைவிட துரோகி எவ்வளவு பயங்கரமானவன் என்பது உங்களுக்குத் தெரியாதா?

கம்யூனிஸ்ட்களுக்கு எதிரி உங்களை போன்ற கொள்கை தெளிவில்லாத புரட்சிகர போலிகள் sos நீங்கள்தான் .என்பதை லெனின் கருத்துகளை மீண்டும் படிப்பதன்மூலம் யார் தூரோகி என்பது தெளிவாகும் .

//அவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று நீங்கள் உறுதியாகச் சொன்னீர்களானால், அவர்களே அதனை மறுப்பார்கள். //

போங்க.. தமாஷ் பன்னிக்கிட்டு எனக்கு சிப்பு வருது

//இதில்தான் நாங்களும் நமது மாவோயிசத் தோழர்களின் பாதையிலிருந்து வேறுபடுகிறோம்.//

அவங்கள இதைவிட அசிங்க படத்த கூடிய வார்த்தை எதுவும்.

//புரட்சிக்காக மக்களை அணிதிரட்டுவதற்கு மாற்றாக, தாமே ஆயுதம் தரித்துக் கொண்டு தனிமனித சாகசவாதிகளாக, சினிமா கதாநாயகனைப் போன்று கற்பனையில் களத்தில் போராடுவது முட்டாள்தனமானது. இதனை இடது தீவிரவாதம் என்கிறோம்.//

இதை மொதல்ல நல்லா தெளிவா புரிஞ்சிக்கிட்டு நீங்க செய்யற கம்யூனிச தூரோகத்திற்கு முடிகட்ட தவறான கருத்தியலை புகுத்திற திரிக்கிற வேலை நிறுத்தினா சரிதான்.

//அவர்களில் பலர், நான் உள்பட, அக்கட்சியின் உண்மை நிலையினை உணர்ந்து வெளியேறி மகஇகவின் நிலைப்பாடுகளோடு செயல்களோடு இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.//

நல்லவேல தப்பித்தது சிபிஎம் அங்க இருத்து குழப்பாம வெளியே வந்தது..

said...

//
அதில் தோழர் இராசேந்திரன் என்ற எமது அமைப்பின் ஆதரவாளர் கொடூரமான தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளார். மேலும் மூன்று தோழர்கள் கடுமையான காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமணையில் சேர்க்கப் பட்டுள்ளனர்.

தேமுதிக வை சேர்ந்தவரோடு எப்போது உங்கள் புரட்சிகர போலி நக்சல் கட்சி கூட்டணி வைத்தது?

//இத்தாக்குதலுக்கு தக்க எதிர்விணையாற்றுவதோ பதிலடி கொடுப்பதோ நமக்கொன்றும் கடினமான காரியம் இல்லை.//

அப்படியா ?

இப்பதிவில் அம்பலப்படுத்தப்பட்ட தகவல்களில் இருந்து நீங்கள் கிரகித்தது இதுதானா? எதிரியைவிட துரோகி எவ்வளவு பயங்கரமானவன் என்பது உங்களுக்குத் தெரியாதா?

கம்யூனிஸ்ட்களுக்கு எதிரி உங்களை போன்ற கொள்கை தெளிவில்லாத புரட்சிகர போலிகள் sos நீங்கள்தான் .என்பதை லெனின் கருத்துகளை மீண்டும் படிப்பதன்மூலம் யார் தூரோகி என்பது தெளிவாகும் .

//அவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று நீங்கள் உறுதியாகச் சொன்னீர்களானால், அவர்களே அதனை மறுப்பார்கள். //

போங்க.. தமாஷ் பன்னிக்கிட்டு எனக்கு சிப்பு வருது

//இதில்தான் நாங்களும் நமது மாவோயிசத் தோழர்களின் பாதையிலிருந்து வேறுபடுகிறோம்.//

அவங்கள இதைவிட அசிங்க படத்த கூடிய வார்த்தை எதுவும்.

//புரட்சிக்காக மக்களை அணிதிரட்டுவதற்கு மாற்றாக, தாமே ஆயுதம் தரித்துக் கொண்டு தனிமனித சாகசவாதிகளாக, சினிமா கதாநாயகனைப் போன்று கற்பனையில் களத்தில் போராடுவது முட்டாள்தனமானது. இதனை இடது தீவிரவாதம் என்கிறோம்.//

இதை மொதல்ல நல்லா தெளிவா புரிஞ்சிக்கிட்டு நீங்க செய்யற கம்யூனிச தூரோகத்திற்கு முடிகட்ட தவறான கருத்தியலை புகுத்திற திரிக்கிற வேலை நிறுத்தினா சரிதான்.

//அவர்களில் பலர், நான் உள்பட, அக்கட்சியின் உண்மை நிலையினை உணர்ந்து வெளியேறி மகஇகவின் நிலைப்பாடுகளோடு செயல்களோடு இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.//

நல்லவேல தப்பித்தது சிபிஎம் அங்க இருத்து குழப்பாம வெளியே வந்தது..

said...

////தேமுதிக வை சேர்ந்தவரோடு எப்போது உங்கள் புரட்சிகர போலி நக்சல் கட்சி கூட்டணி வைத்தது?////

வாப்பா விஜி,

அவர் தேமுதிக கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் எமது அமைப்பின் ஆதரவாளராக தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டவர்தான். 'ஆதரவாளர்'ன்னு அதுக்குத்தான் குறிப்பிடுறோம். ஆதரவாளரானாலும் எமது அமைப்புத் தோழர்கள் உங்களது பாசிச குண்டர் படையினால் தாக்கப் படும்போது பார்த்துக் கொண்டிராமல், தானும் களத்தில் இறந்து உயிர் துறந்திருப்பதனால் அவரும் எமது தோழர்தான்.

கம்யூனிச போர்வையில் இருக்கும் கூலிக் குண்டர் கும்பலான உங்களைத்தான் தோழர் என்று அழைப்பதற்கும் இதற்கும் வேறுபாடு அதிகம்.

///கம்யூனிஸ்ட்களுக்கு எதிரி உங்களை போன்ற கொள்கை தெளிவில்லாத புரட்சிகர போலிகள் sos நீங்கள்தான் .என்பதை லெனின் கருத்துகளை மீண்டும் படிப்பதன்மூலம் யார் தூரோகி என்பது தெளிவாகும்.///

இவ்வளவு தெளிவா லெனின் கொள்கையினைப் புரிந்து வைத்திருக்கும் நீங்கள், உங்கள் கட்சியின் இணைய கோமாளி சந்திப்புக்குப் பதிலாக ஏன் விவாதங்களில் பங்கெடுக்கக் கூடாது? விவாதமுன்னா தலைதெறிக்க ஓடுற கூட்டத்துலயிருந்து கொண்டு இவ்வளவு வீரவசனமெல்லாம் எதுக்குப்பா???!!

/////இதை மொதல்ல நல்லா தெளிவா புரிஞ்சிக்கிட்டு நீங்க செய்யற கம்யூனிச தூரோகத்திற்கு முடிகட்ட தவறான கருத்தியலை புகுத்திற திரிக்கிற வேலை நிறுத்தினா சரிதான்./////

ஓட்டுப் பொறுக்கும் துரோகத்தனத்த செஞ்சிக்கிட்டு, அத்தகைய அற்ப பிழைப்புக்கு பாதிப்பு வந்துவிடாமல் இருப்பதற்காக கூலிப்படைகளாக மாறி, பாட்டளி வர்க்கத்தின் மீது பாய்வது நீங்கள் ஆளும் மே.வங்கம் முதல் விழுப்புரம் வரை கண்ணுக்குத் தெரிந்த உண்மை. இதுக்கு பதிலச் சொல்லுங்கடான்னா ஒருத்தனும் வரமாட்டேங்குறீங்க.

உங்க கட்சியச் சார்ந்த குண்டர்களால் பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்தப் பட்ட பெண்கள், 'நந்திகிராம மக்கள் தீர்ப்பாய'த்தின் முன்னால் வந்து காறி உமிழ்ந்து சென்றிருக்கின்றனர். அதற்கான ஆதாரங்கள் விடியல் பதிப்பகத்தால் தமிழாக்கம் செய்யப்பட்டு புத்தகமாக விற்றுத் தீர்ந்திருக்கிறது. இது ஒரு கம்யூனிஸ்டு செய்யிற வேலையாடா விஜி? இந்த கம்யூனிசத்தத்தான் நாங்க சரியா புரிஞ்சிக்கிட்டதோட இல்லாமல் மக்கள் முன் அம்பலப்படுத்திக்கிட்டும் இருக்கிறோமே, போதாதா?


சும்மா உதார் விடுறதை நிறுத்திப்புட்டு, உன்னுடைய தளத்தில நீண்ட நாளைக்கு முன் நான் பதிந்த பின்னூட்டத்த கீழே பதிப்பிச்சிருக்கிறேன் முடிஞ்சா விவாதத்த தொடங்குடா அம்பி. உங்க கூட்டமே இப்படித்தான் விவாதத்த இருட்டடிப்பு செஞ்சி, முழுங்கி ஏப்பம் விட்டுறீங்க. கோமாளி சந்திப்புக்குப் பதிலா இப்போ கவின்மலர்ன்னு ஒரு தோலர். அவருடைய தளத்துல நான் பதிவிட்ட பல பின்னூட்டங்கள இங்கேயும் சில பதிவுகளில் பின்னூட்டமாக வைத்திருக்கிறேன். முடிந்தால் விவாதத்திற்கு வா, பார்க்கலாம்.

ஏகலைவன்.
***********************************

////ஏகலைவன் said...
///சந்திப்பு அவர்களே நீங்கள் அரசுரன் ஏகலைவன் வகையாராக்கலை நக்சல்பாரிகள் புரட்சியாளர்கள் என்று நினைத்துக்கொண்டு அவர்களை அப்படி அழைப்பதே தவறு அவர்களை வேண்டுமானால் வார்த்தை பொறுக்கிகள் அக்மார்க் போலி கம்யூனிஸ்ட்கள் என்று அழைப்தே சரியானது.///

மான்புமிகு!!!(த்த்தூதூ) மானங்கெட்ட விஜி அவர்களே!

மேற்கண்ட வரிகளில் உள்ள வார்த்தைகளை நீங்கள் என்கிருந்து பொறுக்கி வந்திருக்கிறீர்கள். போடுகிற பின்னூட்டங்களை இருட்டடிப்பு செய்துவரும் தொடைநடுங்கி சந்திப்பு, இது போன்ற கேனைத்தனமான பதில்களை மட்டும் முந்திக் கொண்டு வெளியிட்டு பல்லிளிப்பது கேவலமாக இருக்கிறது.

தைரியமிருந்தால் விவாதத்தை உன்னுடைய தளத்தில் வெளியிட்டு நடத்து. சந்திப்பு இருட்டடிப்பு செய்த எனது பின்னூட்டங்களுடன் வருகிறேன் முடிந்தால் பதில் சொல்லுடா கேனை. அதவிட்டுப் புட்டு ஏதேதோ ஒளறிக்கிட்டு கெடக்காத.

ஏகலைவன்.

June 13, 2008 4:12 AM


வெளிச்சம் said...
ஏங்க இப்படி பீபீ ஏறின மாதிரி என்னொன்னமோ உளறுறீங்க. தோழர்கள் கேட்கிற கேள்விகளுக்கு சந்திப்பு தான் பதில் சொல்ல பயப்படுகிறார் நீங்களாவது சொல்லுங்க. உங்க பற்றி பல பதிவுகள் போடப்பட்டுள்ளது அதற்கெல்லாம் பதில் சொல்லாமல் இப்படி கத்துவது எதற்கு? வாங்க வந்து நேர்மையாக விவாதிங்க அதை விட்டுவிட்டு அவதூறாக ஏதாவது ஒன்றை பிரச்சாரம் செய்து விவாதிப்பதிலிருந்து விலக நினைகாதீர்கள். எதைப்பற்றியும் உங்களுக்கும் எங்களுக்கும் ஒரு கருத்து இருக்கும் அதை முன் வைத்து விவாதிப்பதன் மூலம் தான் நாம் தெளிவடைய முடியும் ஆனால் நீங்கள் அதற்கு மாறாக இவ்வாறு நடந்து கொள்வது முறையல்ல.எனவே நீங்கள் முறையாக விவாதிக்க வருவீர்கள் என்று நம்புகிறேன்.//////

Anonymous said...

Hei Rupakanthan
In October revolution polzhvicks defeated state of Pourgues (ie capitalists menzwicks). Now in nepal revolution have not end yet.

without a proper way and plan what is the use of a united communist party. In russia tha massive set of Iskra group like Marthov had complained on lenin that thefollower of separationist. Lenin came out from iskra and start from origin (around 1903). While second world war russian social democratic party (polzwick) had only oppossed the war. so second international had shuffled.

kootam serthu vittu kolkai ai vakukka mudiaathu. kolkai sariaaga irrunthaal valzhimuraium sariaagavae irukkum; elithaaga irukkaathu. pilavu paduvathil namakku viruppamilai thaan. aanaal athanai nipanthanaiaaga vaithu katchikalukku idaiyil kattapanchaayathu panninal pala varudam kalithu naam sera vendiya idathirku pathil veru engo poiyiruppom.

If u accept this system like makkalaatchi moolam like words it is like below:

pannaiyaarukku adiyaala irunthukiddae pannaiyaara azhithozhikka pesuvathu pola( pannayaar=usa, adiyaal=cpm, cpi)

said...

ஏலே... உங்கள திருத்தவே முடியாதாலே.... அது என்ன எழவுலே த. நா.மா.லெ.க.... அத சொல்லித்தான் தொலையேன்.... ஆமாலே உங்களுக்கு ம.க.,.க.ன்னாத்தான் தெரியுமாக்கும்...... அந்த த. நா.மா.லெ.க இந்த பேரை எந்த போஸ்டர்லையும் காணலேயே.... தமிழ்நாட்டுலே எங்களே இருக்கீக....

அடேய்... உடனே கேன... வெண்ண... தொண்ண.... இன்னு திட்டிப்புடாதலே ரமேஷ் முகத்தை காட்டச் சொன்னீயே.... முதல்ல உன்னோட பேரை ஒழுங்க இணையத்துலே எழுதுல.... உங்களாங்க... எல்லாம் அனானிதானலே...

நிஜத்துலக்கூட ஒருத்தனுக்கு மூனு பேரை வெச்சிக்கிட்டு சுத்துறீங்கள்... தமிழ்நாடு முழுக்க எல்லாம் ஒண்ணா சேந்து கும்பமேளா நடத்துறதுதானே உங்க பொழப்பு....

அது சரிலே... உங்களாங்க சிதம்பரத்துல கைதானப்ப... முதல்வர் முதல் எல்லா கட்சிக்கும் விடுதலை பண்ணச் சொல்லி கடிதம் போட்டீங்களே அது எப்படிலே.... அதெல்லாம் உங்க பார்ப்பனத் தலைமை வெளியே சொல்லாதுலே....

பாவம்... ம.க.,.க. சரணம்............... இப்படியே கூவிக்குனு இருங்க!

said...

/////விடுதலை said...
ஏலே... உங்கள திருத்தவே முடியாதாலே.... அது என்ன எழவுலே த. நா.மா.லெ.க.... அத சொல்லித்தான் தொலையேன்.... ஆமாலே உங்களுக்கு ம.க.,.க.ன்னாத்தான் தெரியுமாக்கும்...... அந்த த. நா.மா.லெ.க இந்த பேரை எந்த போஸ்டர்லையும் காணலேயே.... தமிழ்நாட்டுலே எங்களே இருக்கீக..../////

ஏம்பா விஜி த‌.நா.மா.லெ.க‌.ன்னு நீயும் ஒங்க‌ த‌லிவ‌ன் 'புஸ்வான‌ம்' ர‌மேசுபாபுவும் பொல‌ம்பிக்கிட்டே இருக்கீங்க‌ளே!, அப்ப‌டீன்னா என்னாங்க‌ தோல‌ர். ஒருவேளை நீங்க‌ளே அந்த‌ பெய‌ரிலே ஏதாவ‌து க‌ட்சி ஆர‌ம்பிக்க‌ப் போறீக‌ளா? சும்மா வெள‌ம்ப‌ர‌த்துக்காக‌ அந்த‌ பெய‌ரைத் திரும்ப‌த்திரும்ப‌ நீங்க‌ளே சொல்லிக்கிறீங்க‌ளா? என்ன‌ எழ‌வுன்னே புரிய‌ல்ல‌. இதெல்லாம் ஒரு பொழ‌ப்பா தோல‌ர்.

நான் சார்ந்திருக்கின்ற‌ அமைப்பின் பெய‌ர் 'ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ம் (ம‌.க‌.இ.க‌.)' முடிஞ்சா நினைவில் வைத்துக் கொள்ள‌வும். சும்மா இந்த த‌.நா.மா.லெ.க‌.ன்னு ஒரே ரெக்கார்டையே எத்த‌ன‌ நாளைக்குத்தான் ஓட்டிக்கிட்டு இருப்பீங்க‌.


/////அடேய்... உடனே கேன... வெண்ண... தொண்ண.... இன்னு திட்டிப்புடாதலே ரமேஷ் முகத்தை காட்டச் சொன்னீயே.... முதல்ல உன்னோட பேரை ஒழுங்க இணையத்துலே எழுதுல.... உங்களாங்க... எல்லாம் அனானிதானலே.../////

நீங்க‌ எங்க‌ள‌ப்ப‌த்தி அவ‌தூறு எழுதினா, அதுக்கு நாங்க‌ள் வ‌ந்து ம‌றுமொழியிட்டா முறையா ப‌திப்பிக்காம‌ இருட்ட‌டிப்பு செய்வ‌து; நான் ப‌திவெழுதி விவாதிக்க‌ அழைச்சாக்கா இந்த‌ ப‌க்க‌மே த‌லைவைத்துக்கூட‌ ப‌டுப்ப‌தில்லை. இதுதான் உங்க‌ள‌து விவாத‌ ல‌ட்ச‌ன‌ம். மாறாக‌ மேற்க‌ண்ட‌ உம‌து ப‌தில்க‌ளைப் போன்ற‌ 'த‌த்துவ‌ச் செறிவுள்ள!!!', 'ஆழ்ந்த‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளை!!!!' எடுத்துக் கொண்டு வ‌ந்துவிடுகிறீர்க‌ள்.

கேள்விக‌ளுக்கு முறையா ப‌தில் சொல்லாம‌ த‌லைதெறிக்க‌ ஓடுற‌ கேவ‌ல‌த்துல‌ இருந்து முத‌ல்ல வெளிய‌ வ‌ந்து ஏதாவ‌து ப‌தில‌ச் சொல்லுங்க‌, சும்மா 'முக‌த்தைக் காட்டுங்க‌'ன்னு அப்ளிக்கேஷ‌ன் போடுற‌த‌ விட்டுட்டு. உங்க‌ளுக்குத்தான் முக‌த்தைக் காட்டிக் கொண்டு அற்ப‌ விள‌ம்ப‌ர‌ம் தேட‌வேண்டிய‌ தேவை இருக்கின்ற‌து. என‌க்கு அத்த‌கைய‌ தேவை எதுவும் இல்லை.

/////அது சரிலே... உங்களாங்க சிதம்பரத்துல கைதானப்ப... முதல்வர் முதல் எல்லா கட்சிக்கும் விடுதலை பண்ணச் சொல்லி கடிதம் போட்டீங்களே அது எப்படிலே.... அதெல்லாம் உங்க பார்ப்பனத் தலைமை வெளியே சொல்லாதுலே....//////

இப்ப‌டியான‌ அவ‌தூறெல்லாம் கெட‌க்க‌ட்டும், தில்லைப் போராட்ட‌த்தைப் ப‌ற்றிப் பேசுவ‌த‌ற்கு உங்க‌ளுக்கு ஏதாவ‌து த‌குதி இருக்குதா முத‌லில்? தேழ‌ர்க‌ள் கைதான‌ பிற‌கு என‌க்கு வெளியில் ஆத‌ர‌வாக‌ யாருமில்லை என்று சிவ‌ன‌டியார் ஆறுமுக‌சாமி த‌ன்னையும் கைது செய்ய‌ச்சொல்லி காவ‌ல்நிலைய‌த்தின் முன் ம‌றிய‌ல் செய்தாரே, அப்போது 'மாபெரும்' க‌ட்சியான‌ உங்க‌ள் கூட்ட‌த்திலிருந்து ஒருவ‌ர்கூட‌ அவ‌ருக்கு ஆத‌ர‌வாக‌ வ‌ர‌வில்லையே ஏன்?

க‌டுமையாக‌த் தாக்க‌ப்ப‌ட்டு கைதான‌ எம‌து தோழ‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்கு பினைவேண்டும் என்று கோரவில்லை முதலில். "'பிணை தாக்க‌ல்'செய்ய‌மாட்டோம், எங்க‌ள் குற்ற‌த்தை நிரூபிக்க‌ முடிந்தால் ந‌ட‌வ‌டிக்கையைத் தொட‌ருங்க‌ள்" என்று வெளிப்ப‌டையாக‌ அறிவித்தார்கள்.

இவ்வ‌ள‌வு போராட்ட‌ க‌ளேப‌ர‌ங்க‌ளும் முடிந்த‌ பிற‌கு, போராட்ட‌த்தில் சிறித‌ள‌வும் ப‌ங்கேற்காமல், "நீங்க‌ள் தீட்சித‌ர்க‌ளை 'பார்ப்ப‌ன‌ர்க‌ள்' என்று விம‌ர்சிப்பீர்க‌ள், அது எங்க‌ளுக்கு ஒத்துவ‌ராது" என்று தொட‌க்க‌த்திலேயே போராட்ட‌க் குழுவிலிருந்து வெளியேறிய‌ கூட்ட‌ம்தான் உங்க‌ள‌து போலிபாசிச‌ கும்ப‌ல். இப்ப‌டி இருக்கையில் "DYFI போராட்ட‌த்துக்குக் கிடைத்த‌ வெற்றி!" என்று சிறிதும் வெட்க‌மில்லாம‌ல் போஸ்ட‌ர் ஒட்டி சித‌ம்ப‌ர‌ம் ம‌க்க‌ளால் காறி உமிழ‌ப்ப‌ட்டீர்க‌ள் தோல‌ர்க‌ளே நினைவிலில்லையா?

இதுப‌ற்றி ஒரு த‌னிப்ப‌திவே நான் ப‌திப்பித்திருக்கிறேன். அதில் விவாதிக்க‌ அழைத்து ச‌ந்திப்புக்கும் ர‌மேசுபாபுவுக்கும் த‌னிப்ப‌ட்ட‌ முறையில் அவ‌ர‌வ‌ர் த‌ள‌ங்க‌ளில் சென்று அழைப்பு விடுத்திருந்தேன். நீங்க‌ள் அங்கேயே வ‌ந்து விவாதித்திருக்க‌லாமே தோல‌ரே! உங்க‌ளைத்த‌டுத்த‌து யார்?


ஏக‌லைவ‌ன்.

said...

மகஇக புரட்சிகர அமைப்புகள் அந்த கிராமத்தில் கள்ளச்சாரய மாபியா கும்பலுடன் கூட்டனி. கோயில் திருவிழா என்று சொல்லி ஊழல் பெருச்சாளிகளாக தின்னு கொழிப்பது .

மறைமுக கட்சி என்ற பெயரில் அப்பாவி தொழிலாளிகளை சுரண்டியும்.மத, சாதி வெறியர்கள் உள்ளிட்ட அனைத்து பிற்போக்கு அமைப்புகளோடு உறவு வைத்துக் கொண்டு அந்த கிராமத்திற்கு காவல்துறை வரக்கூடாது.மக்கள் இந்த போலி மகஇக காரர்களை மீரி எதும் செய்யமுடியாத சூழ்நிலையில் மக்கள் தவித்துகொண் இருந்த நிலையில் அங்கு புதியதாக சிபிஎம் கட்சி தொங்கி அவர்களின் அராஜகத்திற்கு முற்று புள்ளி வைக்கும் நோக்கோடு செயல்பட்டு வந்த . சிபிஎம் தோழர்களை தீர்த்துக் கட்டும் (அவர்களின் புரட்சிகர புரட்சி )வேலை தொடங்கி
சிபிஎம் தோழர்களை தாக்கி அவர்களின் வீடுகலை கொலுத்தியும் வன்முறையில் ஈடுபடும்போது தங்களை தற்காத்து கொள்ள முயற்சிக்கும்போது நடந்த கொலைதான் அது.

இதன் பிறகு அந்த கிராமமக்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறார்கள் இனி முன்புபோல அந்த அராஜக கும்பலின் அடக்குமுறைகள் இருக்காது என்று.

மகஇக எந்த வகையிலும் ஒரு மிகபெரிய வார்த்தை பொறுக்கி கட்சிக்குரிய அடிப்படை ஜனநாயக பண்புகள் கூட இல்லாத சுத்தமான பாசிச அமைப்பாக உருவெடுத்திருப்பதையும். இதை தனி ஒரு சம்பவமாக கருதி இந்த கருத்துக்களை சொல்லவில்லை.

TNOC(மகஇக)ன் தலைமையில் திரிபுவாத மாமாக்கள் உட்கர்ந்து கொண்டு வாய் கூசாமல் பொய்களை பேசி கம்யூனிஸ்ட்களை தவறானவர்கள்என்றும் மக்கள் விரோதிகள் என்றும் காட்டிக் கொடுப்பதில் முன்னணியில் உள்ளனர்.

அவர்களின் அணிகளோ (விவிமு)அந்த கிராமத்தில் தண்ணீர் குழாய் கனெக்சனிலிருந்து, மின்சார கனெக்சன் வரை மாமா வேலை பார்த்து பொறுக்கி தின்பதும், கட்சி விட்டு கட்சி மாறி(தேமுதிக,திமுக,அதிமுக) நக்கிப் பிழைப்பதும். எல்லா போர்ஜெரி, 420வேலைகளையும், சாதிய ஆதிக்க நடவடிக்கைகளையும் செய்வதற்ககான ஒரு அரசியல் அங்கீகாரமாகவே மகஇகல் உள்ளனர். நான் சொன்ன உண்மை செய்திகளை தெரிந்துகொள்ளவேண்டுமானால் அந்த கிராமத்திற்கு சென்று தெரிந்து கொள்ளாம்.

said...

ஏகலைவன் said...
தோழர்களுக்கு ஒரு சின்ன செய்தி!!

இங்கே விடுதலை எனும் பெயரில் பின்னூட்டமிட்டுச் சென்றுள்ள சிபிஎம் கட்சியைச் சார்ந்த விஜி எனும் நபர் பாண்டிச்சேரியில் இருக்கிறார். இவர் அக்கட்சியின் அல்லக்கை அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைமை அல்லக்கையான எஸ்.ஜி.ரமேஷ்பாபு என்பவனுக்கு அல்லக்கையாக இருந்து செயல்படுகிறார்.

ரமேஷ்பாபு எனும் நபர் இந்த விஜி மூலமாகவோ அல்லது அவர் பெயரில் தாமே சில அவதூறுகளைத் தொடர்ந்து எழுதிவருகிறார்.

இங்கு பதியப்பட்டிருக்கின்ற விமர்சனங்கள் உள்பட நமது எந்த ஒரு விமர்சனத்திற்கும் பதில் சொல்லத் திராணியற்ற நிலையில் இவர்கள் கைக்கொண்டிருக்கும் ஆயுதம்தான் இத்தகைய அவதூறுகள்.

இதன் உச்சத்தில் எமது அமைப்பின் பெயரிலேயே முறைகேடாக ஒரு வலைதளத்தை உருவாக்கி அதில் தமது அவதூறுகளைத் தொடர்ந்து எழுதிவருகிறார்கள். வழக்கம்போல நமது எதிர்விணைகளையும் அங்கே நேர்மையாக பதிப்பிப்பதில்லை.

தமது அரசியல் எதிரி என்று போலித்தனமாகச் சொல்லிக் கொண்டு பாஜக, ஆர்.எஸ்.எஸ். மதவெறிக் கும்பலுட்டன் கூடிக் குலாவிக் கொண்டு இவர்கள் கட்சியின் கீழ்மட்டத் தோழர்களை அடியாளாகப் பயன் படுத்தி அவர்களுடன் போலியாக மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.

தமது தலைமை அலுவலகத்திற்குள்ளேயே புகுந்து இந்தூவெறி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு வெள்ளைக் கொடி காட்டிக் கொண்டு பேடித்தனமாக அரசியல் செய்துவரும் இவர்கள், அதைக் கண்டித்து ஒரு வரி கூட இங்கே இணையத்தில் பதியாத இவர்கள், நமக்கு எதிராக ஒரு வலைதளத்தையே தொடங்கி அவதூறு எழுதும் நிலைக்கு சென்றிருக்கிறார்கள் என்றால் இவர்களின் அரசியல் யோக்கியதை எப்படிப்பட்டது என்று நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

இதற்கு தோழர்கள் கடுமையான எதிர்விணையாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

தோழமையுள்ள,

ஏகலைவன்.