Thursday, June 19, 2008

நம்ம 'நீதி'நிறுவனமும் 'ஜனநாயக'மும்????????

அடித்துத் துவைத்து, பிய்ந்து போன வெளக்குமாறு போல ஆகிவிட்ட நம்ம போலி ஜனநாயகத்தை, சற்றே துலக்கி, அதற்கு 'ஜனநாயகம்' என்ற பட்டுக் குஞ்சலங்களை அணிவித்து மக்களை ஏமாற்றி வளையவருகிறது, காங்கிரஸ் முதல் நம்ம 'காமரேடு'கம்பெனிவரை.

அப்பேர்ப்பட்ட 'ஜனநாயக'த்த போற்றிப் பாதுகாக்கிற நிறுவனங்களில் தலையாய நிறுவனம்தான் நம்ம நீதித்துறை. இது யாருக்கான ஜனநாயகம் என்பதும், இந்த உச்சநீதிமன்றத்தின் தலைமையில் உள்ள நீதிநிறுவனம் யாருடைய பிரதிநிதி என்பதையும் நாம் புதிதாக எதுவும் விளக்கிச் சொல்லத் தேவையில்லை.

இப்படி ஆளும் வர்க்க சுரண்டல் வாதிகளுக்கு அடியாள் வேலைகளை மட்டும் செவ்வனே செய்துவரும் இந்நிறுவனத்தால் கவனிக்கப் படாமல் நிலுவையில் கிடக்கும் வழக்குகள் மட்டும் சுமார் மூன்று கோடிகளுக்கும் மேலான வழக்குகளாம்! சரி இதனை என்ன செய்வது, எவ்வளவு விரைவாக இவ்வழக்குகளை முடிவுக்குக் கொண்டுவருவது என்பது குறித்து அறிய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஜெகந்நாத்ராவ் தலைமையிலான ஒரு குழு அமைக்கப்பட்டது.

அக்குழு அனைத்து நீதிமன்றங்களுக்கும் நேரில் சென்று ஆராய்ந்து ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்திருக்கிறதாம். அவ்வறிக்கையில், புதிதாக அமைக்கப் படவேண்டிய நீதிமன்றங்கள் குறித்து அரசுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றனவாம். அதேபோல நீதிபதிகளைத் தேர்தெடுத்து நிரப்பும் பொறுப்பை அரசு செய்வதைவிட இப்போது இருக்கிற உயர்/உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கே கொடுக்க வேண்டும். அரசின் தலையீடு அதில் இருக்கக் கூடாது என்று பரிந்துரைத்திருக்கிறதாம்.

அதாவது திருடனின் கையிலேயே சாவியையும் கொடுத்துவைக்கச் சொல்லி அரசையும் அதன் மூலமாக மக்களையும் நிர்பந்திக்கிறது ஜெகந்நாதராவ் கமிட்டி.

வெறும் நாற்பதாயிரம் ரூபாயை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு, யாருக்கு வாரண்ட் கையெழுத்திடுகிறோம் என்ற சுயநினைவே இல்லாமல், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமுக்கே வாரண்ட் கொடுத்தார், அஹமதாபாத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவர். இச்செய்தி அப்போது அனைத்து பத்திரிக்கைகளிலும் வந்து சந்தி சிரித்திருக்கிறது. ஏற்கெனவே 'நீதி'யரசர்கள், 'நிதி'யரசர்களின் கைப்பாவையாக அம்பலப்பட்டு விசாரனைகள் ஏதுமின்றி கவுரவமாக சுற்றி வருகிறார்கள்.

போதாக் குறைக்கு இப்போது நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரம் வேறு இவர்களுக்கு வேண்டுமாம். என்ன செய்யப் போகிறார்கள் நமது மதிப்பிற்குரிய ஓட்டுப் பொறுக்கிகள் என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

சென்ற மாதம் மத்திய அரசின் நீதித்துறை அமைச்சகம் ஒரு பெருமை மிக்க!! தகவல் ஒன்றை வெளியிட்டது. அது என்ன வென்றால், 'தகவல் அறியும் உரிமைச் சட்டம்' (Right to Information Act) மூலமாக சென்ற ஆண்டு சுமார் ஐம்பதாயிரம் வழக்குகளுக்குப் பதிலளிக்கப்பட்டிருக்கிறதாம். அதுதான் அப்பெருமை மிக்க அறிவிப்பு.

இதனைப் பார்த்துக் கொண்டிருந்த நம்மைப் போன்ற யாரோ ஒருவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக நீதிபதிகள் சிலரின் சொத்துக்கள் பற்றி தகவல் கோரினாராம். த.அ.உ.சட்டம் குறித்து புளகாங்கிதமடைந்திருந்த நீதி அமைச்சகத்துக்கு இது சோதனையையும் வேதனையையும் அளித்தது போலும். உடனே, "நீதிபதிகள் சட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பில் இருப்பவர்கள், எனவே, யாரொருவர் 'இந்திய அரசியல் சாசன சட்டத்தினை நிறைவேற்றும் பொறுப்பில்' இருக்கிறார்களோ அவர்களைப் பற்றி எந்தத் தகவலும் மேற்கண்ட சட்டத்தின் மூலமாகப் பெறமுடியாது" என்று கூறி தள்ளுபடி செய்யப்பட்டதாம்.

எப்படியிருக்குது நம்ம 'நீதிநிறுவன'மும் 'ஜனநாயக'மும்????????


தோழமையுடன்,
ஏகலைவன்.

6 comments:

said...

சிறுபத்திரிக்கைகளில் எழுதுவதற்கு இத்தனை கூப்பாடு போடும் நீங்கள், சில மாதங்களுக்கு முன்பு பாடகர் கோவணன் அவர்களை பற்றியும் தஞ்சையில் நடந்த நிகழ்வை பற்றி வெகுஜன பத்திரிகையான "ஆனந்த விகடனில்" வந்ததே. எப்படிங்க? ஆனந்த விகடன் புரட்சிகர பத்திரிக்கையாக எப்போது ஆனது உங்கள் அகராதியில்.? தனக்கென்றால் ஒரு நீதி! சிபிஎம் தமுஎச என்றால் இன்னொரு நீதி. போங்கப்பா நீங்களும் உங்க நியாயமும்

said...

////சிறுபத்திரிக்கைகளில் எழுதுவதற்கு இத்தனை கூப்பாடு போடும் நீங்கள், சில மாதங்களுக்கு முன்பு பாடகர் கோவணன் அவர்களை பற்றியும் தஞ்சையில் நடந்த நிகழ்வை பற்றி வெகுஜன பத்திரிகையான "ஆனந்த விகடனில்" வந்ததே. எப்படிங்க? ஆனந்த விகடன் புரட்சிகர பத்திரிக்கையாக எப்போது ஆனது உங்கள் அகராதியில்.? தனக்கென்றால் ஒரு நீதி! சிபிஎம் தமுஎச என்றால் இன்னொரு நீதி. போங்கப்பா நீங்களும் உங்க நியாயமும்/////

பொதுவாக உமது இதுபோன்ற மொன்னைத்தனமான பதில்களில் உங்களது இயலாமையும் ஆற்றாமையும், தனது இருத்தலை எப்படியாவது வெளிக்காட்டிக் கொள்ளவேண்டும் என்கிற கயமைத்தனமுமே மேலோங்கி நிற்கின்றன.

கவின்மலர் அவர்களே! கோவனைப் பற்றிய ஒரு துண்டு செய்திதான் ஆனந்த விகடனில் வெளிவந்தது. அது தோழர் கோவன் தானே எழுதிய கட்டுரை அல்ல.

உயிர்மையில், காலச்சுவட்டில் எல்லாம் நீங்கள் சென்று உங்களது கருத்துக்களை பரப்போ பரப்பென்று பரப்பியதெல்லாம் கெடக்கட்டும். அதே பத்திரிக்கையில் உங்கள் எழுத்தாளர்கள் எழுதுகின்ற சில பக்கங்களுக்கு முன்போ, பின்போ, சாரு நிவேதிதா, யமுனாராசேந்திரன், எஸ்.ராமகிருஷ்ணர் போன்ற எழுத்தாளர்கள் எழுதுகிறார்களே. அவர்கள் என்ன எழுதுகிறார்கள் என்றாவது நீங்கள் திருப்பிப் பார்த்ததுண்டா?!

அவர்கள் கம்யூனிச அவதூறுகளைத்தான் அந்த கழிசடைப் பத்திரிக்கையில் எழுதிவருகிறார்கள். அவர்களுக்கு குறைந்த பட்சம் பதிலடி கொடுக்கும் அளவுக்குக் கூட உங்களது கட்டுரை இல்லாமல், அறிவொளி பற்றிய வெற்று ஜம்பங்களையே உங்கள் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் எழுதிவருகிறார்.

உயிர்மை சென்ற ஜனவர்'08 இதழில் மட்டும் சாரு நிவேதிதாவுக்கு ஒரேயொரு எதிர்வினை எழுதியிருந்தார் அவர். அதை எதிர்வினை என்று சொன்னால், அதைப் படித்தவர் வாயால் சிரிக்க மாட்டார்கள். "நீங்களுமா சாரு" என்கிற கெஞ்சல் தொனியில் மண்டியிட்டு மன்றாடி ஒரு எதிர்வினையை!!! எழுதியுள்ளார் உங்கள் தமிழ்ச்செல்வன்.

அது என்ன "நீங்களுமா சாரு!" சாரு நிவேதிதா என்கிற குடிகாரன் போதையில் வாந்தியெடுப்பதை வைத்து அவனையெல்லாம் ஒரு எழுத்தாளனாக்கி விட்டார்கள். அவன் கம்யூனிச போராளிகளை மிகவும் கேவலமாகச் சித்தரித்து எழுதிய 'ஜீரோ டிகிரி' என்ற நாவலை நீங்கள் படித்தது கிடையாதா? அப்படி படித்திருந்தீர்களானால் அது பற்றி தமிழ்ச்செல்வன் அவர்களுக்கும் எதையாவது எடுத்துச் சொல்லுங்கள்.

கம்யூனிஸ்டுகளை அவதூறாக எழுதவேண்டிய அவசியமும் அவசரமும், மதவெறி பார்ப்பனீய பாசிஸ்டுகளுக்கே இருக்கிறது. அந்த வகையில் உயிர்மையும் காலச்சுவடு, தீராநதி, போன்ற இன்னபிற குப்பைகளும் அந்த வேலையையே செவ்வனே செய்து வருகின்றன. அதில் போயித்தான் உங்களது கருத்துக்களைப் பரப்புறீங்களாக்கும்.

said...

////அட! இவங்களுக்கான அஜெண்டாவாம் பார்ப்பன, ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு! யாரும் கூட வரக்கூடாது இவங்களோட! பார்ப்போம். தனியா நின்று எப்படி விரட்டுராங்கன்னு! தனிமரம் தோப்பாகாது தோழரே! பெரியாரிஸ்டுகளும், இடதுசாரிகளும், அம்பெத்காரிஸட்டுகளும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டிய ஒரு விஷயத்தை இவங்க தனியா பார்த்துப்பாங்களாம்!////

மொதல்ல உங்கட்சிக்குள்ள இருக்குற ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகளை மொதல்ல வெளியேற்றுங்கள் பார்க்கலாம். நம்ம கட்சிக்குள்ள யார்ரா அவன் என்று திகைக்க வேண்டாம். ஏற்கெனவே அனைத்து விவரங்களையும் உங்க இணையக் கோமாளி சந்திப்பு அவர்களுக்கு அனுப்பி விவாதிச்சாச்சு. அவரக் கேளுங்க, அவரு தரலையின்னா என்னிடம் சொல்லுங்க நான் ஒரு தனிப் பதிவாகவே எழுதி வெளியிடுறேன்.

சிதம்பரத்தில் தீட்சிதப் பார்ப்பன ரவுடிகளுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொள்ள அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் தொடக்கத்தில் உங்க சிபிஎம் கட்சியும் இருந்தது. அது ஏன் வெளியேறியது என்று யாரையாவது கேட்டுப் பாருங்க சொல்வாங்க.

"நீங்கள் தீட்சிதர்களைப் பார்ப்பனர்கள் என்று பேசுகிறீர்கள். அதனை எங்களால் ஏற்க முடியவில்லை" என்று சொல்லிவிட்டுத்தான் உங்க தோலர்கள் வெளியேறிச் சென்றுவிட்டனர். பிறகு அங்கு உங்க கட்சியோடு திமுக, அதிமுக, பாஜக,காங்கிரஸ் கட்சிகள் இல்லாத மற்ற கட்சிகள்; அதாவது விடுதலைச் சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி, தி.க., கடலூர் தமிழ்ச்சங்கம் போன்ற வேற்றுக் கட்சிகளோடுதான் அப்போராட்டம் நடந்து வெற்றி பெற்றது.

அப்போராட்டம் வெற்றி பெறும்வரை மோட்டுவளையை வெறித்துப் பார்த்துக்கொண்டு விரல் சூப்பிக் கொண்டிருந்த உங்களுடைய தோலர்கள்; பிறகு வந்து "DYFIன் போராட்டத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி" என்று அற்பத்தனமாக போஸ்டர் ஒட்டிக் கொண்டனர். இது ஒருபுறமிருக்கட்டும்.

ஆர்.எஸ்.எஸ்.ஐ எதிர்ப்பதாக நீங்கள் சொல்லிக் கொள்கிறீர்களே. பார்ப்பனன் என்கிற ஒரு வார்த்தை உங்களை போராட்டத்தில் எதிராளியின் கைக்கூலியாக மாற்றுகிறது என்றால் உங்களோடு சேர்ந்து கடைசிவரை அந்த பயங்கரவாத கூட்டத்தை எதிர்கொள்ள எந்த மடையன் முன்வருவான்.

பார்ப்பன பயங்கரவாதத்தை எதிர்ப்பதாக நீங்கள் நடத்தும் கபட நாடகங்களை உங்கள் கட்சியிலுள்ள கீழ்மட்டத் தோழர்களே தலைமையைப் பார்த்து காறி உமிழத் தொடங்கிவிட்டார்கள். இதுல வெளக்குமாத்துக்கு பட்டுக் குஞ்சலம் வேற!

said...

///எழுதியதை பற்றி பேசுவதை விட்டுவிட்டு அதை ஏன் எழுதவில்லை இதை ஏன் எழுதவில்லை என்று கேள்வி கேட்பதை என்னவென்று சொல்ல?////

கவின்மலர் அவர்களே! சந்திரமோகன் பிரச்சினையைப் பற்றி எங்களது பத்திரிக்கையான புதிய ஜனநாயகத்தில் அப்போதே எழுதப்பட்டிருக்கிறது. அது குறித்த விரிவான பிரச்சாரங்களையும் எமது தோழர்கள் பேருந்துகளிலும் இரயில்களிலும் பயனிகள் முன்னிலையில் எடுத்துப் பேசியிருக்கின்றனர்.

சந்திரமோகனுக்கு ஏற்பட்ட அவமானம் ஒரு படைப்பாளிக்கு நேர்ந்த அவமானம். அது கண்டிக்கப் படவேண்டியதுதான். ஆனால் ஒரு கர்பினிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து குழந்தையை சூலாயுதத்தால் குத்திக் கொன்ற கொலைபாதகத்தை நிகழ்த்திய இந்துத்துவ வெறிபிடித்த கொலையாளிகளின் நேரடி வாக்குமூலங்களை துணிவோடு வெளிக்கொண்டுவந்த தெகல்காவின் புலனாய்வுச் செய்தியோடு சந்திரமோகனை ஒப்பிடுவது ஈனத்தனமானது.அது 'ஜெயல்லிதா'வின்அரசியலை ஒத்த தரத்திலான கேடுகெட்ட அரசியல். அதுதான் உங்களது அரசியல் என்பது உங்களது மேற்கண்ட பதிலின் மூலமாக வெளிப்படையாகத் தெரிகிறது.


நாங்கள் ஓட்டுக்களைப் பொறுக்கி எம்.பி.க்களாக நாடாளுமன்றம் எனும் பண்றிக்குட்டையில் விழுந்து புரளுகிறோம். எங்கள் சாதனையைப் பார்த்தீர்களாவென்று சிறிதும் வெட்கமோ கூச்சமோ சொரனையோ ஏதுமின்றி பேசிவருகிறீர்களே; தெகல்கா பற்றி உங்கள் எம்.பி.க்களில் ஒருத்தன் கூட இதுபற்றி நாடாளுமன்றத்தில் வாய்திறக்காதது ஏன்?

said...

// ஆமாம்! நீங்கள் வோட்டு பொறுக்கிகளாக இல்லாமல் இருப்பதால் தான் அணு ஆயுத ஒப்பந்தத்தை எதிர்த்து உங்களால் போஸ்டர் ஒட்ட மட்டும், வாய் கிழிய பேச மட்டும், பக்கம் பக்கமாக திட்டி எழுதவும், ஆர்ப்பாட்டம் பண்ணவும் மட்டும் முடிந்தது. நாங்கள் வோட்டு பொறுக்கிகளாக இருப்பதால் தான் எங்கள் எம்.பி க்களை வைத்து கொண்டு ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க முடிந்தது. //

இதுக்கு பதில் சொல்லனுமாம் தோலர் கவின்மலர் மன்றாடுறாங்க. இதுக்கான பதில மேற்கண்ட எனது பின்னூட்டங்களிலேயே சொல்லிவிட்டதனால் வேண்டாம் என்று நினைத்தேன். கவின்மலர் அவர்களே இந்த பின்வரும் பதிலைப் பாருங்கள்; போதவில்லை என்றால் சொல்லுங்கள் உங்கள ஆசையை நிறைவேற்றும் வகையில் தனிப்பதிவாகவே எழுதிவிடுகிறேன்.

'கீழே விழுந்து புரண்டாலும், சாக்கடையில் உழன்றாலும் என் மீசையில் மட்டும் மண் ஒட்டவில்லையே" என்று சொல்லிக் கொள்ளும் நிலையில் நீங்கள் இருப்பது மேலே மேற்கோள் காட்டப்பட்டுள்ள உமது வரிகளில் இருக்கிறது.

போலி கம்யூனிஸ்டுகளான உங்கள் கூட்டத்தின் ஆதரவுதான் காங்கிரஸ் அரசாங்கத்தின் நாலு கால்களில் ஒரு கால். அது அமல் படுத்துகின்ற நாசகார பொருளாதாரக் கொள்கைகளுக்கு அடிக்கொல்லியே நீங்கள் சமரசமின்றி கொடுத்துவரும் ஆதரவுதான். ஒருவேளை உணவுகூட இல்லாத கோடிக்கணக்கான மக்கள் ஒருபுறம், இந்த நான்காண்டு ஆட்சியில் மட்டும் தற்கொலைக்குள்ளான விவசாயிகள் மட்டும் சுமார் நாற்பதாயிரத்துக்கும் மேல். ஒவ்வொரு நாளும் மக்களின் துண்பங்கள் கடுமையடைந்து வரும்போது; இவையனைத்தையும் இங்கே உருவாக்கிய 'காட்'ஒப்பந்த்தை எந்த எதிர்ப்பும் காட்டாது நிறைவேற்றி விட்டுவிட்டு, இப்போது அணு ஒப்பந்தத்தைப் பார்த்தீர்களா? என்று மார்தட்டிக் கொள்வது கேவலமானது.

அணு ஒப்பந்தத்தில் உங்களது இரட்டைத் தன்மையை பலமுறை அம்பலப்படுத்தி எழுதியாகிவிட்டது. அவை எதற்கும் உங்களது இணையக் கோமாளி சந்திப்பு இதுவரை பதில் சொன்னது கிடையாது. நீங்களாவது விவாதிக்கத் தயாரா என்று சொல்லுங்கள் அவற்றையெல்லாம் மீள்பதிவு செய்து விவாதத்தைத் தொடங்குவோம்.

மதவெறி பயங்கரவாதத்தை காங்கிரசின் பாணியில் எதிர்ப்பது (அதாவது மறைமுகமாக மதவெறியை ஆதரிப்பது), உலகமய சூரையாடல் பொருளாதாரக் கொள்கை என்று வந்துவிட்டால் பாஜகவின் வார்த்தைகளில் அவற்றை விமர்சிப்பது (உதாரணம் சமீபத்திய பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றம். இதில் உங்களது அறிக்கைகளையும் பாஜகவின் அறிக்கைகளுக்கும் உள்ள வித்தியாசம் ஏதாவது உருப்படியாக இருக்கிறதா?). இதுதான் உங்களது ஒலகத்தரம் வாய்ந்த!!! கீழ்த்தரமான அரசியல். இதைத்தான்,

"செய்யிறது தரகுப் பணி
ஒனக்கெதுக்கு சிகப்புத் துணி!!"

என்று செருப்பால் அறைகிறது எமது பாடல்வரிகள்.

said...

/////விடுதலை said...
ஏலே... உங்கள திருத்தவே முடியாதாலே.... அது என்ன எழவுலே த. நா.மா.லெ.க.... அத சொல்லித்தான் தொலையேன்.... ஆமாலே உங்களுக்கு ம.க.,.க.ன்னாத்தான் தெரியுமாக்கும்...... அந்த த. நா.மா.லெ.க இந்த பேரை எந்த போஸ்டர்லையும் காணலேயே.... தமிழ்நாட்டுலே எங்களே இருக்கீக..../////

ஏம்பா விஜி த‌.நா.மா.லெ.க‌.ன்னு நீயும் ஒங்க‌ த‌லிவ‌ன் 'புஸ்வான‌ம்' ர‌மேசுபாபுவும் பொல‌ம்பிக்கிட்டே இருக்கீங்க‌ளே!, அப்ப‌டீன்னா என்னாங்க‌ தோல‌ர். ஒருவேளை நீங்க‌ளே அந்த‌ பெய‌ரிலே ஏதாவ‌து க‌ட்சி ஆர‌ம்பிக்க‌ப் போறீக‌ளா? சும்மா வெள‌ம்ப‌ர‌த்துக்காக‌ அந்த‌ பெய‌ரைத் திரும்ப‌த்திரும்ப‌ நீங்க‌ளே சொல்லிக்கிறீங்க‌ளா? என்ன‌ எழ‌வுன்னே புரிய‌ல்ல‌. இதெல்லாம் ஒரு பொழ‌ப்பா தோல‌ர்.

நான் சார்ந்திருக்கின்ற‌ அமைப்பின் பெய‌ர் 'ம‌க்க‌ள் க‌லை இல‌க்கிய‌க் க‌ழ‌க‌ம் (ம‌.க‌.இ.க‌.)' முடிஞ்சா நினைவில் வைத்துக் கொள்ள‌வும். சும்மா இந்த த‌.நா.மா.லெ.க‌.ன்னு ஒரே ரெக்கார்டையே எத்த‌ன‌ நாளைக்குத்தான் ஓட்டிக்கிட்டு இருப்பீங்க‌.


/////அடேய்... உடனே கேன... வெண்ண... தொண்ண.... இன்னு திட்டிப்புடாதலே ரமேஷ் முகத்தை காட்டச் சொன்னீயே.... முதல்ல உன்னோட பேரை ஒழுங்க இணையத்துலே எழுதுல.... உங்களாங்க... எல்லாம் அனானிதானலே.../////

நீங்க‌ எங்க‌ள‌ப்ப‌த்தி அவ‌தூறு எழுதினா, அதுக்கு நாங்க‌ள் வ‌ந்து ம‌றுமொழியிட்டா முறையா ப‌திப்பிக்காம‌ இருட்ட‌டிப்பு செய்வ‌து; நான் ப‌திவெழுதி விவாதிக்க‌ அழைச்சாக்கா இந்த‌ ப‌க்க‌மே த‌லைவைத்துக்கூட‌ ப‌டுப்ப‌தில்லை. இதுதான் உங்க‌ள‌து விவாத‌ ல‌ட்ச‌ன‌ம். மாறாக‌ மேற்க‌ண்ட‌ உம‌து ப‌தில்க‌ளைப் போன்ற‌ 'த‌த்துவ‌ச் செறிவுள்ள!!!', 'ஆழ்ந்த‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளை!!!!' எடுத்துக் கொண்டு வ‌ந்துவிடுகிறீர்க‌ள்.

கேள்விக‌ளுக்கு முறையா ப‌தில் சொல்லாம‌ த‌லைதெறிக்க‌ ஓடுற‌ கேவ‌ல‌த்துல‌ இருந்து முத‌ல்ல வெளிய‌ வ‌ந்து ஏதாவ‌து ப‌தில‌ச் சொல்லுங்க‌, சும்மா 'முக‌த்தைக் காட்டுங்க‌'ன்னு அப்ளிக்கேஷ‌ன் போடுற‌த‌ விட்டுட்டு. உங்க‌ளுக்குத்தான் முக‌த்தைக் காட்டிக் கொண்டு அற்ப‌ விள‌ம்ப‌ர‌ம் தேட‌வேண்டிய‌ தேவை இருக்கின்ற‌து. என‌க்கு அத்த‌கைய‌ தேவை எதுவும் இல்லை.

/////அது சரிலே... உங்களாங்க சிதம்பரத்துல கைதானப்ப... முதல்வர் முதல் எல்லா கட்சிக்கும் விடுதலை பண்ணச் சொல்லி கடிதம் போட்டீங்களே அது எப்படிலே.... அதெல்லாம் உங்க பார்ப்பனத் தலைமை வெளியே சொல்லாதுலே....//////

இப்ப‌டியான‌ அவ‌தூறெல்லாம் கெட‌க்க‌ட்டும், தில்லைப் போராட்ட‌த்தைப் ப‌ற்றிப் பேசுவ‌த‌ற்கு உங்க‌ளுக்கு ஏதாவ‌து த‌குதி இருக்குதா முத‌லில்? தேழ‌ர்க‌ள் கைதான‌ பிற‌கு என‌க்கு வெளியில் ஆத‌ர‌வாக‌ யாருமில்லை என்று சிவ‌ன‌டியார் ஆறுமுக‌சாமி த‌ன்னையும் கைது செய்ய‌ச்சொல்லி காவ‌ல்நிலைய‌த்தின் முன் ம‌றிய‌ல் செய்தாரே, அப்போது 'மாபெரும்' க‌ட்சியான‌ உங்க‌ள் கூட்ட‌த்திலிருந்து ஒருவ‌ர்கூட‌ அவ‌ருக்கு ஆத‌ர‌வாக‌ வ‌ர‌வில்லையே ஏன்?

க‌டுமையாக‌த் தாக்க‌ப்ப‌ட்டு கைதான‌ எம‌து தோழ‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்கு பினைவேண்டும் என்று கோரவில்லை முதலில். "'பிணை தாக்க‌ல்'செய்ய‌மாட்டோம், எங்க‌ள் குற்ற‌த்தை நிரூபிக்க‌ முடிந்தால் ந‌ட‌வ‌டிக்கையைத் தொட‌ருங்க‌ள்" என்று வெளிப்ப‌டையாக‌ அறிவித்தார்கள்.

இவ்வ‌ள‌வு போராட்ட‌ க‌ளேப‌ர‌ங்க‌ளும் முடிந்த‌ பிற‌கு, போராட்ட‌த்தில் சிறித‌ள‌வும் ப‌ங்கேற்காமல், "நீங்க‌ள் தீட்சித‌ர்க‌ளை 'பார்ப்ப‌ன‌ர்க‌ள்' என்று விம‌ர்சிப்பீர்க‌ள், அது எங்க‌ளுக்கு ஒத்துவ‌ராது" என்று தொட‌க்க‌த்திலேயே போராட்ட‌க் குழுவிலிருந்து வெளியேறிய‌ கூட்ட‌ம்தான் உங்க‌ள‌து போலிபாசிச‌ கும்ப‌ல். இப்ப‌டி இருக்கையில் "DYFI போராட்ட‌த்துக்குக் கிடைத்த‌ வெற்றி!" என்று சிறிதும் வெட்க‌மில்லாம‌ல் போஸ்ட‌ர் ஒட்டி சித‌ம்ப‌ர‌ம் ம‌க்க‌ளால் காறி உமிழ‌ப்ப‌ட்டீர்க‌ள் தோல‌ர்க‌ளே நினைவிலில்லையா?

இதுப‌ற்றி ஒரு த‌னிப்ப‌திவே நான் ப‌திப்பித்திருக்கிறேன். அதில் விவாதிக்க‌ அழைத்து ச‌ந்திப்புக்கும் ர‌மேசுபாபுவுக்கும் த‌னிப்ப‌ட்ட‌ முறையில் அவ‌ர‌வ‌ர் த‌ள‌ங்க‌ளில் சென்று அழைப்பு விடுத்திருந்தேன். நீங்க‌ள் அங்கேயே வ‌ந்து விவாதித்திருக்க‌லாமே தோல‌ரே! உங்க‌ளைத்த‌டுத்த‌து யார்?


ஏக‌லைவ‌ன்.