Thursday, May 15, 2008

நண்பர் அத்வானியும், காம்ரேடு சுஸ்மா சுவராஜும்!!!
நந்திகிராம் பிரச்சினையை ஒட்டி கல்கத்தா வந்து சென்றார் அத்வானி. வந்தவர் கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாமல் தனது நண்பர் CPM(டாடாயிஸ்ட்) முதலமைச்சர் புத்ததேவுவை பார்க்காமல் சென்று விட்டார். ஆயிரம் பிரச்சினை என்றாலும் ஒரு அடிப்படை நாகரிகம் வேண்டாம்? ஒரு நண்பரை அவ்வளவு தூரம் வந்துவிட்டு பார்க்காமல் சென்று விடுவதா?

மனம் வெதும்பி பத்திரிகைகளில் புலம்பினார் புத்ததேவு. ‘நண்பர் அத்துவானி இம்புட்டு தூரம் வந்துபிட்டு என்ன பாக்காம போயிட்டாரு… ரொம்ப காண்டாக்கீது” என்று. உடனே அத்துவானிக்கு ரொம்ப பொச்சரிப்பா.. ஸாரி புல்லரிப்பாப் போச்சி. அவர் சொன்னார் “நண்பர் புத்ததேவு சந்திக்காம போனது வருத்தந்தான். நான் அவர சந்திக்கிறத எங்க கட்சி தொண்டர்கள் சரியா புரிஞ்சிக்க மாட்டாய்ங்க” அப்படின்னு.

இந்த ரெண்டு பேரோட நட்பு செண்டிமெண்டு மேற்கு வங்க கூரையை பிச்சிக்கிட்டு கொஞ்ச நாள் ஓடுச்சு. அந்த செண்டிமெண்டு எபெக்ட் ஆறாருதுக்கு முன்னெயே நாடாளுமன்றத்துல காம்ரேடு பிருந்தாகரத்தும், சுஸ்மாசுவராஜ் அப்படியே கட்டிப் பிடிச்சி உச்சி முகர்ந்து முத்தம் கொடுக்காத குறையாக தமது நட்பை, பாசத்தை வெளிப்படுத்திக் கொண்டனர். படம் பத்திரிகைகளில் வெளிவந்து மூன்று காட்சிகளும் ஹவுஸ் புல்லாக நூறு நாள்கள் ஓடும் அளவு பிரபலமாகியது. படத்த என்னால கண் கொட்டு பாக்க முடியல.. கண்ணு முழியெல்லாம் ஒரே கண்ணீரு…. (போட்டோ வுல கூட பின்னாடி ஒருத்தர் இந்த பாசப்பினப்ப பாத்து பீலிங்ஸ் ஆகி நிக்கிறாரு).

தூ… வெக்கங்கெட்ட நாயிகளா…. பார்ப்பன பயங்கரவாத படு கொலைகாரர்களுடன், மனித குல விரோதிகளுடன் வெட்கமின்றி பொது இடங்களில் ஒட்டி உறவாடும் இவர்கள் கம்யுனிஸ்டு என்று தமது கட்சிக்கு பெயர் வைத்து கம்யுனிசத்தின் மீதும் ஒணுக்கு அடிக்கின்றனர். விட்டால் பாஜகவை இடதுசாரி கட்சிகள் லிஸ்டில் சேர்த்து விடுவார்கள் போல தெரிகிறது. அங்கீகரிக்கப்பட்ட இடதுசாரிகள் லிஸ்டில் பாஜக இருந்தால் என்ன CPM இருந்தால் என்ன எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய பாசிச மட்டைகள்தான்.

- செய்தி ரசம்.

3 comments:

said...

///அடிப்படைவாத பயங்கரவாதத்திற்கு எதிராக போராடும் தருணத்தில் அதனை அடிப்படை கொள்கையாக வைத்திருக்கும் இந்துத்துவ பயங்கரவாதத்தையும் எதிர்த்து போராடுகின்றனர். நீங்கள் இதனை பார்ப்பன பயங்கரவாதம் என்று திசை திருப்புவது யாரை ஏமாற்ற?///

இந்த கேனைத்தனமான பதிலுக்காகத்தான் பெரியாரிடம் செருப்படி பட்டீர்கள். பார்ப்பனீயத்தையும் இந்துத்துவத்தையும் பிரித்துப்பார்க்கும் உமது மொன்னைத்தனத்தை என்னவென்பது.
இதேபானியில்தான் காங்கிரசும் மதவெறி பயங்கரவாதத்தை எதிர்கிறான். பார்ப்பன இந்துத்துவ பயங்கரவாதத்தை காங்கிரசின் பானியில் எதிர்ப்பதுவும், மறுகாலணியாக்கம் எனும் உலகமயமாக்கலை பாஜக வின் வார்த்தைகளில் பொழிப்பதுவும் உமது வழக்கத்திலும் வழக்கமான நடைமுறை.

உமது போலித்தனத்தை பச்சையாக வெளிக்காடும் விதமாக, மதவெறிக்கெதிரான உமது கருத்துக்களும், வர்க்க முரன்பாடுகளும் பார்ப்பனீயத்திடம் எப்போதுமே மண்டியிட்டுக் கிடக்கின்றன. இந்த லட்சனத்துல மகஇகவின் பார்ப்பனத் தலைமை என்கிற தேய்ய்ய்ய்ய்ய்ந்துபோன ரெக்கார்டுவேற.

said...

1. ///ஏன்னா உங்க தலைமையே (எஸ்.ஓ.சி.) இன்னும் தங்களை கம்யூனிஸ்ட் என்று வெளிப்படையாக கூறத் தயங்கும் போது ////

2. ///உங்களுடைய எஸ்.ஓ.சி. மறைமுக பார்ப்பனீத் தலைமையைப் பார்த்து? ///

3. ///ஏன் நாம இவ்வளவு நாளா மறைவாக - ஒளிந்துக் கொண்டிருக்கிறோம் என்று.///

4. ///ஊரே சிரிக்கிறது! எத்தனை தெருக்களில் நீங்கள் இருக்கீறீர்கள்?///

5. ///அதைத்தானே அத்வானியை நீங்கள் நந்திகிராமில் செங்கொடி ஏந்தி வரவேற்றதை பார்த்தார்கள் மேற்குவங்க மக்கள்.///

6. ////மொத்தத்தில் ம.க.இ.க.-பு.மா.இ.க.-பு.தொ.மு.-பு.தொ.வி.மு என எல்லாம் சேர்ந்து சென்னையில் கும்பமேளா நடத்தினால் கூட 500 பேர் தேற மாட்டேங்குது.///

மெற்கண்டவையெல்லாம் நமது சந்திப்பு, இதோ இன்னைக்கிக் காலையில புத்தம்புதுசா நம்மைப் பற்றி கண்டுபிடித்து எழுதியுள்ள புலனாய்வு முடிவுகள்!

ஏற்கெனவே அரைத்தரைத்து, நைந்துபோன, புளித்துப் புழுத்துப் போன மாவை, புதுப்பானையில் எடுத்துவந்து அவரது வாசகர்களுக்கு!!! பரிமாறுகிறார்.

நமக்கோ எல்லாவற்றுக்கும் பதில் சொல்லி, அவையனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காக ஆகிவிட்டதே என்று களைத்துப் போகிற நிலைமை. இதைத்தான் தோழர் அசுரன், சந்திப்பின் அரசியல் பின்புலம் அவரது தோலைத் தடிப்பாக்கி சொரனையற்றதாக்கிவிட்டதாகக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.

நம்முடைய மறைமுக அரசியல் என்பதைத் திரைகிழித்து தோழர் தியாகு போன்றவர்கள், சந்திப்புக்கு பதில் சொல்லியதோடு நிற்காமல் தத்தமது தளங்களில் தனிப் பதிவுகளையும் எழுதியிருக்கிறார்கள். எமது அலுவலக முகவரி, தொடர்பு கொள்ள வேண்டிய நபரின் கைபேசி எண் என அனைத்தையும் எமது பத்திரிக்கைகள் முதல் துண்டு பிரசுரங்கள் வரை தெளிவாகக் குறிப்பிட்டே வந்திருக்கிறோம்/வருகிறோம். இருப்பினும் சந்திப்பின் பழைய பல்லவி தொடருவது ஏன் என்பதை அவர்தான் சொல்லவேண்டும்.

*************************************

அடுத்து, பார்ப்பனத் தலைமை என்கிற வறட்டு வாதம். "உங்களோடு நாங்களும் இணைந்து போராடவேண்டுமென்றால், நீங்கள் பிராமணர்களை பார்ப்பனர்கள் என்று 'இழிவு'படுத்துவதை தவிர்க்க வேண்டும்" என்று கேட்டு எமது தோழர்கள் கடுமையாக மறுத்ததால், சிதம்பரம் போராட்டத்திலிருந்து முதலாகவும் கடைசியாகவும் 'ஜகா' வாங்கிய மானங்கெட்ட அமைப்பு சி.பி.எம். பார்ப்பனீயத்தைத் தனது ஒவ்வொரு படைப்பிலும், ஒவ்வொரு பேச்சிலும் குலைநடுங்கவைக்கும் எமது தலைமையைப் பற்றி இவ்வளவு தரக்குறைவான விமர்சணத்தை தொடர்வது ஏன்?

***************************************

அடுத்து நம்மை பயங்கரவாதிகள் என்றும் தலைமறைவானவர்கள் என்பது, மக்களோடு தொடர்பற்றவர்கள் என்பது போன்ற இவர்களது புரளிகளுக்கு தோழர் அருள் எழிலன் எழுதிய கட்டுரையில் சுட்டி இது (http://yekalaivan.blogspot.com/2008/05/blog-post_1952.html) முடிந்தால் சந்திப்பு இக்கட்டுரைக்கு பதில் சொல்லட்டும் பார்ப்போம்.

**************************************

நந்திகிராமில் இவர்களின் கட்சியினைச் சார்ந்த குண்டர்கள், குஜராத்துக்கு நிகராக, சாதாரண உழைக்கும் பெண்கள் மீது ஏவிவிட்ட பாலியல் வக்கிரங்களும், பச்சைப் படுகொலைகளையும் பற்றி, அந்த சம்பவங்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட 'மக்கள் தீர்ப்பாய'த்தின் அறிக்கை தெளிவாகச் சொல்லுகிறது.
(அந்த முழுமையான விசாரணை அறிக்கை தமிழாக்கம் செய்யப்பட்டு
'விடியல்' பதிப்பகத்தின் மூலமாக ஒரு தனிநூலாக விற்பனைக்கு வந்திருக்கிறது. அந்நூல் கீழைக்காற்று புத்தகக் கடையில் விற்பனைக்கும் உள்ளது.)

தமிழ்நாட்டைத்தவிற வேறெங்கும் எமது அமைப்பு விரிவடையவில்லை என்று பேச்சுக்குப் பேச்சு சொல்லும் சந்திப்பு, அத்வானி விசயத்தில் மட்டும் நம்மை மே.வ. வரை வளர்ப்பார்!

அத்வனியை புத்ததேவு கொல்லைப்புறமாக அழைத்தும் வரமறுத்துப் போன அத்வானியை நினைத்து கண்ணீர்விட்டதுவும் ஊர் சிறித்த பிறகும் சிறிதும் சொரனையற்று பேசிவரும் சந்திப்பை என்னவென்பது??!!

****************************************

அடுத்து, அவர் வழக்கமாகச் சொல்லும் கும்பமேளா வசனம்: எமது பொதுக்கூடங்களும், தஞ்சையில் நடைபெறும் இசைவிழாவும் எப்படி நடக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். இதுவரை சிபிஎம் அலுவலகத்தின் வாயிலைத்தாண்டி வெளியில் வராத கிணற்றுத் தவளையான இந்தக் கேனை அதை கும்பமேளா என்று விமர்சிப்பது பற்றி எமக்கொன்றும் ஆச்சர்யமில்லை.


ஏகலைவன்.

said...

ஏலே... உங்கள திருத்தவே முடியாதாலே.... அது என்ன எழவுலே த. நா.மா.லெ.க.... அத சொல்லித்தான் தொலையேன்.... ஆமாலே உங்களுக்கு ம.க.,.க.ன்னாத்தான் தெரியுமாக்கும்...... அந்த த. நா.மா.லெ.க இந்த பேரை எந்த போஸ்டர்லையும் காணலேயே.... தமிழ்நாட்டுலே எங்களே இருக்கீக....

அடேய்... உடனே கேன... வெண்ண... தொண்ண.... இன்னு திட்டிப்புடாதலே ரமேஷ் முகத்தை காட்டச் சொன்னீயே.... முதல்ல உன்னோட பேரை ஒழுங்க இணையத்துலே எழுதுல.... உங்களாங்க... எல்லாம் அனானிதானலே...

நிஜத்துலக்கூட ஒருத்தனுக்கு மூனு பேரை வெச்சிக்கிட்டு சுத்துறீங்கள்... தமிழ்நாடு முழுக்க எல்லாம் ஒண்ணா சேந்து கும்பமேளா நடத்துறதுதானே உங்க பொழப்பு....

அது சரிலே... உங்களாங்க சிதம்பரத்துல கைதானப்ப... முதல்வர் முதல் எல்லா கட்சிக்கும் விடுதலை பண்ணச் சொல்லி கடிதம் போட்டீங்களே அது எப்படிலே.... அதெல்லாம் உங்க பார்ப்பனத் தலைமை வெளியே சொல்லாதுலே....

பாவம்... ம.க.,.க. சரணம்............... இப்படியே கூவிக்குனு இருங்க!