Monday, April 21, 2008

சி.பி.எம். என்ற ‘சல்லடைப் படகு’ கரையேறுமா??????????


சி.பி.எம். என்ற ‘சல்லடைப் படகு’ கரையேறுமா??????????


“இருபதாம் நூற்றாண்டின் இனையற்ற சிந்தனையாளன் கார்ல் மார்க்ஸ்” என்றது பி.பி.சி.யின் ஆய்வு முடிவுகள். “அப்படியெல்லாம் கிடையாது நாங்கள் தான் அனைவரையும் விஞ்சும் சிந்தனையாளர்கள்” என்கிறார்கள் மார்க்சை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் மார்க்சிய துரோகிகளான சி.பி.எம். கட்சியினர். இந்துத்துவத்தை மிதவாதமாகவும், கம்யூனிசத்தை சமரசவாதமாகவும் கொண்டு ஒருங்கே சேர்த்துப் பிசைந்து வடித்த கலவைதான் இவர்கள்.

முதலாளித்துவத்தின் சிறப்பு கண்காணிப்போடு, “பகையாளிக் குடும்பத்தை உறவாடிக் கெடுக்கும்” பேடித்தனமான யுக்தியோடு, கம்யூனிச வேடம் பூண்டு பாசிச வெறியாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் அரசியல் அமைப்புதான் இந்திய சி.பி.ஐ/எம் ஆகிய கட்சிகள். இந்த உலகில் ஆன்மீகத்துக்கு அடுத்தபடியாக தன்மீதான விமர்சனத்தை மறுக்கும் ஒரு கூட்டம் உண்டென்றால் அது மேற்கண்ட இப் போலிக் கயவர் கூட்டம்தான். விமர்சனங்களையும் சுய பரிசீலனைகளையும் அடியோடு மறுப்பது அறிவியலுக்கு எதிரானது மட்டுமல்ல, அறிவியலையும் ஒருகூறாக தனக்குள் கொண்டுள்ள மார்க்சியத்துக்கும் புறம்பானதாகும்.

சி.பி.ஐ/எம் கட்சிகளின் மீது நாம் வைத்த விமர்சனங்கள், அவர்களின் சுயபரிசீலனைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருந்தன. தன்னன ஒரு கம்யூனிச அமைப்பாக அவர்கள் சொல்லிக் கொள்வதினால் மட்டுமே அவர்களின் செயல்கள் நம்மால் விமர்சிக்கப்பட்டன. அவ்விமர்சனங்கள் அனைத்துமே அவர்களால் அடியோடு அலட்சியப் படுத்தவும்பட்டன.

கம்யூனிஸ்டு கட்சி என்ற பெயருடன் இங்கே களத்தில் நின்றாலும், பெரியாரின் பெயரை, கொள்கைகளை, விற்றுப் பிழைக்கும், அவருடைய வாரிசுகளான அனைத்து திராவிடக் கட்சிகளின் பண்புகளுக்கும் சற்றும் குறையாத கொள்கைகளோடு செயல்படும் இந்த போலிக் கம்யூனிஸ்டு கட்சியின் மீது (மற்ற சாதாரண ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளை அனுகும் முறைக்கு மாற்றாக) துவக்கத்தில் விமர்சனங்களைப் பதித்து வந்தன புரட்சிகர அமைப்புகள். ஆனால், கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையைப்போல், இந்த போலிக் கூட்டம் கம்யூனிசத்திலிருந்து பாசிசமாக சீரழிந்துத்தான் போயிற்று. எனவே, தொடக்கத்தில் அனுகிய அதே முறையில் இன்றும் இவர்களை (கம்யூனிஸ்ட் கட்சிதானேயென்று) விமர்சிக்க முடியாது அல்லவா. அதனால் தான் எம்முடைய இன்றைய விமர்சனங்கள், அவர்களின் மீதான சுயபரிசீலனையை முன்னிறுத்துவதைத் தவிர்த்து, மக்கள் முன் அம்பலப்படுத்தலாக வெளிப்படுகின்றன.

இந்தியாவில், 1957லேயே கேரளாவில் ஆட்சியைப் பிடித்த அக்கட்சி, பின்னர் மே.வங்கத்திலும், தொடர்ந்து திரிபுராவிலும் ஆளும் கட்சியாக பரினமித்திருக்கின்றபோதிலும், மக்கள் மத்தியில் தம்முடைய இருத்தலை நிலைநிறுத்திக் கொள்ளவே இன்றும் படாதபாடு படுகின்றன. காரணம், ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சியாக உழைக்கும் மக்களோடு நிற்கவேண்டிய, தமது அடிப்படையான பணியை மறுதலித்து, முதலாளிவர்க்க விசுவாசிகளாக மாறிப்போனதினால்தான்.

அறுபதுகளின் முடிவில் மே.வங்கத்தில் முதன் முதலாக ஆட்சியைப் பிடித்த சி.பி.எம்., அரியனையேறியதும் தம்முடைய வாலை நிலவுடைமையாளர்களுக்கு ஆதரவாக அசைத்தது. அதே காலகட்டத்தில் தமிழகத்தில் கீழத்தஞ்சையில் விவசாயிகளுக்கு ஆதரவாக நிலவுடைமையாளர்களுக்கு எதிராக களத்தில் நின்ற அக்கட்சி, தாம் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள மே.வங்கத்தில், நக்சல்பரி என்ற கிராமத்தில், அங்குள்ள நிலவுடைமையாளர்களுக்கு எதிராக விவசாயத் தொழிலாளர்களுக்குத் தலைமையேற்று போராடிய தமது கட்சியின் அணிகளளயே சுட்டுக் கொல்லும் அளவுக்கு போனது.
கீழத்தஞ்சையின் கீழ்வெண்மனியில் குடிசைக்குள் வைத்து கொலைசெய்யப்பட்ட 44 தலித் சமூகத்தைச் சார்ந்த விவசாயக் கூலிகளுக்காக நீலிக் கண்ணீர் வடித்த அக்கட்சியின் தலைமை, அதே சமயம் மே.வங்கத்தில் நடைபெற்ற கொலைபாதகத்தை தானே முன்னின்று அரங்கேற்றியது. இதுதான் இவர்களது வர்க்கப்பார்வை. நல்லவேளையாக தமிழகத்தில் அப்போது அக்கட்சி ஆட்சிப் பொறுப்பில் இல்லை. இருந்திருந்தால் மே.வ ஜோத்திதார்களுக்கு ஆதரவளித்தது போல கோபாலகிருஷ்ண நாயுடுவின் பாக்கெட்டில் அமர்ந்து சேவையாற்றியிருப்பார்கள்.
சி.பி.ஐ.யிலிருந்து விலகி, சற்று தீரமான புரட்சிகரவாதிகளாக காட்டிக் கொண்ட சி.பி.எம். கட்சி, ஆட்சிப் படிக்கட்டில் ஏறுவது என்ற தமது இலக்கை அடைந்தவுடன், புரட்சியையும் கம்யூனிசத்தையும் ஆழக்குழிதோண்டி, தம்மால் சுடப்பட்டு இறந்த அத்தோழர்களின் உடல்களோடு இட்டுப் புதைத்தும் விட்டது.

அதன் நீட்சியாக இதோ இன்றுவரை முதலாளித்துவ கைக்கூலியாக, தமது சேவைகளை அனைத்து ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளுடனும் இணைந்து செவ்வனே செய்து வருகிறது. மார்க்சியம் வலியுறுத்தும் சமூகமாற்றத்திற்கான புரட்சித்தீயை மக்களிடம் உருவாக்கி, அதையே ஒரு பவுதீக சக்தியாக மாற்றி வழிநடத்த வேண்டிய பொறுப்பை மறுதலித்து, தமது கட்சியின் அணிகளுக்குள்ளே வேர்விட்டிருந்த புரட்சிக் கனலை அழிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.

சித்தாந்தத் தெளிவின்மையினால், கட்சியை முறையாக விமர்சித்து வளர்த்தெடுக்கவோ அல்லது வெளியேறவோ முடியாமல் பரிதவித்து நிற்கின்றன, அக்கட்சியின் நேர்மையான அணிகள். அதையும் தாண்டி, சுயமான உந்துதலில் தமது கட்சியின் தலைமையை எதிர்த்து கேள்விகேட்கும் எந்தவொரு தோழரையும் “இவன் ஒரு நக்சலைட்” என்று ஒரு முத்திரை குத்தி கட்சியை விட்டு தூக்கியெறிந்து விடுகிறது. அதற்கும் மேலாக வெளியேற்றப்பட்ட அத்தோழர் அடங்கிப் போகவில்லையெனில், அவருக்கு அருகாமையிலுள்ள போலீஸ் நிலையத்திற்கு தானே வலிய சென்று, போலீசிடம் “மேற்படி தோழர் நக்சல் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததால் எங்கள் கட்சியிலிருந்து விலக்கிவிட்டோம், நீங்கள் சற்று கூர்ந்து கண்காணிக்கவும்” என்று வலியுறுத்தவும் தயங்குவதில்லை.
இத்தகைய கீழ்த்தரமான செயல்பாடுகளினால் பாதிக்கப்பட்ட தோழர்கள் ஏராளம். திரிபுராவின் முன்னாள் முதல்வராக இருந்த தோழர்.நிரூபன் சக்கரவர்த்தி போன்றவர்கள் கூட கட்சியிலிருந்து அவமானப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட காட்சிகள் ஏராளம். இறுதியில் அவர் ஒரு மனநோயாளி, பைத்தியக்காரன் என்று வெறுப்பேற்றப்பட்டு, சாகடிக்கவும்பட்டார் என்ற வேதனை மிகுந்த செய்தியும் உண்டு. இந்த லட்சனத்தில், பொறுமையிழந்து கட்சியைவிட்டு வெளியேற முயலும் ஊழியர்களை, “இதையெல்லாம் உட்கட்சிப் போராட்டத்தில் தான் சாதிக்கமுடியுமென்று” அறிவுறுத்துகிற சப்பைக்கட்க்கள் வேறு.

இப்படி தம்முடைய பிழைப்புவாதப் போக்கை விமர்சிக்க கட்சியின் உறுப்பினர்களையே அனுமதிக்காத அக்கட்சி, “நம்முடைய விமர்சனங்களை ஏறெடுத்துப் பார்க்கும் என்று நம்பிக்காத்திருப்பது மடமைத்தனம். மாறாக இவர்களின் இத்தகைய கொடுஞ்செயல்களை வெகுவேகமாக அம்பலப்படுத்தி வேலைசெய்யவேண்டிய கடமையும் நம்முன் இருக்கிறது”, என்பதுதான் அக்கட்சியிலிருந்து வெளியேறிய எனது படிப்பினை.

சாதாரண ஓட்டுக்கட்சிகளைப் புறக்கனித்து, சி.பி.எம்., கட்சியில் வந்து தன்னை இணைத்துக் கொண்டு செயபட விரும்பும், ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்ற உந்துதல் எப்படிப்பட்டது? எதனால் ஏற்படுகிறது?. அது சமூக அவலங்களை எதிர்க்கும் ஒரு தனிமனிதனின் நேர்மையான வெளிப்பாடாகத்தான் இருக்கமுடியும். இத்தகைய எண்ணங்களுடன் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ளும் ஒருவரை மேன்மேலும் வளர்த்தெடுப்பதற்கு மாற்றாக, மழுங்கடிக்கும் வேலைகளை மேற்கொள்ளும் அக்கட்சி, உறுப்பினர்களின் நேர்மையை அலட்சியப்படுத்தும் / அவமதிக்கும் இவ்வமைப்பு எப்படி ஒரு கம்யூனிச அமைப்பாக இருக்கமுடியும்?

தம்முடைய செயல்களை விமர்சன ரீதியாக எதிர்ப்பவன், தனது கட்சிக்காரனாக இருந்தாலும் ம.க.இ.க. வைச் சார்ந்த தோழர்களாக இருந்தாலும், வேறு எவராக இருந்தாலும் அனைவரையும் ‘தீவிரவாதிகள் / பயங்கரவாதிகள் / நக்சலைட்டுகள்’ என்று தூற்றுவது இந்த பாசிஸ்டுகளின் வழக்கமான முறை.

இந்துத்துவ பயங்கரவாதிகளான ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. பரிவாரங்கள் கூட எம்முடைய நடவடிக்கைகளை களத்தில் எதிர்கொள்ள முடியாமல், மேற்கண்ட சி.பி.எம்., பானியிலேயே நமக்கு ‘பயங்கரவாதிகள்’ பட்டம் சூட்டுகின்றன. மூவாயிரம் அப்பாவி மக்களை கொன்று புதைத்த இந்துவெறிக் கொலைகாரன் நரேந்திரமோடி முதல் அத்வானி வரை எவனும், சி.பி.எம்.மின் பொலிட்பீரோ உறுப்பினர் அல்ல, ஆனால் அவர்களது குரல், நமக்கெதிராக வெளிப்படும்போது மட்டும் பொலிட்பீரோவின் குரலையொத்து வெளிப்படுவது எவ்வாறு?

இவர்கள் நமக்கு இத்தகைய பட்டங்களை வாரிவழங்குவது எதற்காக, நம்மை தேசதுரோகிகளாக இவர்கள் சித்தரிக்க முனைவது எதற்காக, மக்களிடமிருந்து நம்மைத் தனிமைப்படுத்துவதற்காக மட்டுமே. உண்மையான பாட்டாளி வர்க்க அமைப்பாக நம்முடைய வளர்ச்சி, இவர்களை அச்சுறுத்துவத்தால்தான் அவர்கள் அனைவரும் இவ்வாறு நடந்துகொள்கின்றனர். "எங்கே இவர்களால் தாம் அம்பலப்படுத்தப்பட்டு விடுவோமோ" என்ற இழிநிலைதான் இவர்களை துரோகிகளாக வெளிக்காட்டுகிறது.

தோழர். பகத்சிங் கூட தமது இறுதிக் காலகட்டங்களில் “நாங்கள் தீவிரவாதிகளோ / பயங்கரவாதிகளோ அல்ல” என்றும் “எங்களைவிட இந்நாட்டு மக்களை அதிகம் நேசிப்பவர் வேறு யாரும் இருக்கமுடியாது” என்றும் அதிகமாக வலியுறுத்திப் பேசவேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளப்பட்டார். அவருடைய போராட்டத்தின் பெரும்பகுதி, மக்களிடமிருந்து தாம் தனிமைப்படுத்தப்படுவதை தவிர்ப்பதாகத்தான் இருக்கவேண்டியதாயிற்று. காந்தி என்ற போலிஅகிம்சாவாதியின் பிம்பம்தான் தியாகி பகத்சிங்கை இந்திலைக்கு ஆளாக்கியது.. அவர் அனைவருக்கும் எதிரியாக சித்தரிக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தது, அவருடைய சமரசமற்ற பாட்டாளி வர்க்க சித்தாந்த ரீதியிலான செயல்பாடுகள்தான்.

ஏகாதிபத்திய எதிர்ப்புச் சிங்கம் தோழர். பகத்சிங்கின் வாரிசுகளாக இன்றும் களத்தில் நிற்பது நாம்தான். அவர் சந்தித்த அதே துரோக அரசியலை நாமும் இப்போது சந்தித்தே தீரவேண்டும் என்பதுகூட இயங்கியல் ரீதியானதுதான். துரோகத்தை எதிர்கொண்டு வெற்றிகரமாக முறியடிப்போம். போலிக் கூட்டத்தை மூடி மறைத்திருக்கும் சிவப்புக் கொடியைத் அடித்து வெளுத்து இதுவும் ஒரு காவிக்கும்பல்தான் என்பதை மக்களுக்குக் காட்டுவோம்.

தோழமையுடன்,
ஏகலைவன்.

12 comments:

Anonymous said...

தோழர்,

நான் ஜெயக்குமார். தோழர் சந்திப்பின் தளத்தில் உங்கள் விவாத அழைப்பு சுட்டியை கொடுத்து அவரை விவாதம் செய்யுமாறு கோரியவன். நீங்கள் பேசுவதில் ஓரளவு நியாயம் இருப்பினும் உங்கள் எழுத்து / பேச்சு நடையில் தொனிக்கும் ஆங்காரமும் ஆத்திரமும் மாற்றுக் கருத்துக் கொண்டிருப்போரின் ஈகோவை குத்தி விட்டு உங்களை எதிரியாக பாவிக்க வைக்கும் தன்மை இருப்பதாகப் படுகிறது. இன்றைக்கும் நாட்டில் ஜனநாயக சக்திகள் ஒருங்கினைந்து போராட வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது. ஏன் சி.பி.எம் கூட ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களின் தாக்குதல்களை சந்தித்து வருகிறது. இப்படி இருக்கும் சூழலில் நாம் பொதுத்தளத்தில் இனைந்து போராடுவது தானே முறை? நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளையும் சிந்தாந்த முரண்பாடுகளையும் நமக்குள் தானே பேசி கலைந்து கொள்ள வேண்டும்? இப்படி பொதுத்தளத்தில் குழாயடி சண்டை பாணியில் இரு தரப்புமே ( உங்கள் பங்கு தான் இதில் அதிகம் ) வரிந்து கட்டிக் கொண்டு இறங்கி விட்டால் அது எதிரிகளுக்கு சாதகமாகி விடாதா?
தோழர் சந்திப்பின் தளத்தில் தமிழ்மணி என்னும் வர்க்க விரோதி அவருக்கு ஆதரவளித்து கருத்து தெரிவித்திருப்பதை கவனியுங்கள் - இச்சூழலில் ஒருவேளை தோழர் சந்திப்பு தனது வாதத்தில் பின்வாங்கும் சூழலோ தோற்கும் சூழலோ ஏற்படின் அவர் இயல்பாகவே நமது வர்க்க விரோதிகளின் பால் சாயும் நிலை ஏற்பட்டுவிடுமே? மேலும் அவர் பதிப்பித்திருக்கும் பதிவுகளில் உங்கள் கட்சித் திட்டத்தின் மேல் வைத்து இருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு இது வரையில் நீங்கள் நேரடியான விளக்கமோ மறுப்போ தெரிவிக்காமல் அவர் மேல் சாடுகிறீர்களே இது நியாயமா?

ஒன்று மட்டும் நிச்சயம் - நடக்கும் இந்த சண்டையால் சந்தோஷமடைவது நமது விரோதிகள் தான் என்பதை இருதரப்பும் தயவு செய்து புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

நீங்கள் இப்படி பாய்ந்து பிடுங்காமல் அவரது குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாறும் - உங்களது எதிர் வாதத்தை வைக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

எனது கருத்தில் தவறு இருந்தால் தயவுசெய்து மன்னிக்கவும்

said...

அருமையான பதிவு தோழர்

சுயவிமர்சனம் இல்லாத கட்சி எப்படி கம்யூனிஸ்டு கட்சியாக இருக்க முடியும்

சி பி எம் வெறும் ஓட்டு கட்சிதான் என்பதை அவர்கள் ஏற்று கொள்ளாமல் போனால் கம்யூனிசத்துக்கு நீங்கள் சொன்னதுபோல் துரோகம் செய்கிறார்கள்

said...

தோழர் ஜெயக்குமார் அவர்களுக்கு எனது புரட்சிகர வணக்கங்கள்!
தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
நீங்கள் என்மீது வைத்திருக்கின்ற விமர்சனம் கூட ஒரளவுக்கு உண்மைதான். இருப்பினும் நான் அவ்வாறு கடுமையாக எழுத வேண்டிய நிலையைப் பற்றியும் எனது பின்னூட்டத்தில் நான் சொல்லியிருந்தேன். சந்திப்புக்கு பதில் சொல்வது என்பதே கடைந்தெடுத்த வெட்டிவேலை. ஏனெனில், நம்முடைய பல பதில்கள் அவரால் பதிவிடப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. இதுதான் அவர் கடைபிடிக்கும் விவாதக் கொள்கை. இவ்வாறு பொத்தாம்பொதுவாக, போகிறபோக்கில் எதையாவது சொல்லிவிட்டுப் போவது அவருக்கு கைவந்த கலை. அதனால்தான் இதற்காக பிரத்தியோகமாக விவாதிக்கத் தயாரா? என்று கேட்டு எனது முந்தையப் பதிவைப் போட்டிருந்தேன்.
அதைத்தான் நீங்களும் சுட்டிக்காட்டியிருந்தீர்கள். ஆனால் இதுகுறித்து அவருடைய பதில் என்ன என்பதை நீங்கள் அவருடனேயே கேட்கவேண்டும். எம்முடைய கட்சித்திட்டத்தைப் பற்றி விவாதிக்க நான் என்றுமே தயார். ஆனால் அந்த விவாதத்தை சந்திப்பின் வலைதளத்தில் தொடர்வது வீன் வேலையே. ஏனெனில் நம்முடைய பதில்களைப் பரிசீலித்து விவாதத்தைத் தொடருகின்ற பழக்கம் அவருக்கு என்றுமே இருந்ததில்லை.
தொடர்ந்து எம்முடைய பதிவுகளையும் முந்தைய சில பதிவுகளையும் நீங்கள் பார்க்கவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
/////ஏன் சி.பி.எம் கூட ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களின் தாக்குதல்களை சந்தித்து வருகிறது.////
சி.பி.எம். கூட ஆர்.எஸ்.எஸ். குண்டர்களை (என்று திருத்திக்கொள்ள வேண்டுகிறேன்) எதிர்த்து வருவது உண்மைதான். அது அக்கட்சியின் கீழ்மட்ட தோழர்களின் பிரச்சினை, மேல்மட்ட தலைவர்களோ அத்வானியை விருந்துக்கு அழைத்து உபசரிப்பதும், காஞ்சிக் கிரிமினல் சங்கராச்சாரியை தமது அரசு சகல மரியாதையோடு நடத்துவதும் மிகவும் அருவருப்பானதாகவே தொடர்கிறது. அதவானிக்கும், ஜெயேந்திரனுக்கும் ஆர்.எஸ்.எஸ்., பாஜக கும்பலுக்கும் நேரடித் தொடர்பிருப்பது உங்களுடைய தலைமைக்குத் தெரியாதா?
எனவே, சி.பி.எம்.முக்கும் பா.ஜ.க.வுக்கும் நடக்கும் மோதல் என்பது உங்கள் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களைப் பொருத்தவரை, இரு அரசியல் கட்சிக்கிடையிலான தகராறுதானேயொழிய வேறொன்றும் இல்லை. எல்லாம் தேர்தல் தகராறுதான்.
////அது எதிரிகளுக்கு சாதகமாகி விடாதா?
தோழர் சந்திப்பின் தளத்தில் தமிழ்மணி என்னும் வர்க்க விரோதி அவருக்கு ஆதரவளித்து கருத்து தெரிவித்திருப்பதை கவனியுங்கள் - இச்சூழலில் ஒருவேளை தோழர் சந்திப்பு தனது வாதத்தில் பின்வாங்கும் சூழலோ தோற்கும் சூழலோ ஏற்படின் அவர் இயல்பாகவே நமது வர்க்க விரோதிகளின் பால் சாயும் நிலை ஏற்பட்டுவிடுமே? ////
சந்திப்பு மட்டும் அல்ல அவர் சார்ந்திருக்கிற கட்சியும்கூட வர்க்கவிரோதிகளின் கூட்டாளிகள்தான். ஏற்கெனவே நம்ம சந்திப்பு ஆர்.எஸ்.எஸ். கருங்காலி அரவிந்தன் நீலகண்டன் என்பவனுடன் கூட்டு சேர்ந்தவர்தான். அதைக் கடுமையாக கண்டித்து தோழர் அசுரன் போன்றவர்கள் எழுதியுமிருக்கிறார்கள். நம்மிடம் விவாதிப்பதைத் தவிர்த்து எதிராளியிடம் கூட்டுவைத்துக் கொள்ளும் அரசியலை அவருக்கு வழங்கியது எது என்பதை அவரிடம்தான் நீங்கள் கேட்கவேண்டும்.
எனவே எதிரியையும் துரோகியையும் ஒரே பானியில் எதிர்கொள்ள முடியாது.
தொடர்ந்து தங்களது கருத்துக்களை தயங்காமல் இங்கே நீங்கள் எழுதலாம். பதிலலிக்க காத்திருக்கிறேன். என்னிடம் ஏதும் தவறிருந்தாலும் திருத்திக் கொள்ளத் தயாராகவே இருக்கிறேன். நன்றி!

தோழமையுடன்,
ஏகலைவன்.

said...

தோழர் தியாகு அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழமையுடன்,
ஏகலைவன்.

said...

//நான் ஜெயக்குமார். தோழர் சந்திப்பின் தளத்தில் உங்கள் விவாத அழைப்பு சுட்டியை கொடுத்து அவரை விவாதம் செய்யுமாறு கோரியவன். நீங்கள்//


சந்திப்பை விவாதிக்க கோரி அவ்வாறே அழைத்து வந்த தோழர் விஜயகுமாருக்கு நன்றி.சந்திப்பை ஒரு ஜனநாயகவாதியாக கருதி அவருடைய தளத்தில் நான் போட்ட பின்னூட்டங்கள் வெளியிடப்படவில்லை,எனவே அவரது தளத்தில் சென்று விவாதிப்பது தோழர் ஏகலைவன் கூறுவதைப் போல வெட்டி வேலை என்பது தான் உண்மை. எனக்கும் தோழருக்கும் மற்ற அனைத்து தோழகளுக்கும் பல வேலைகள் உள்ளது அதற்கு இடைப்ப்பட்டு இவருக்கு நேரம் ஒதுக்கி பதில் கூறினால் இந்த ஆண்டை அதை வெளிடுவதில்லை, அதன் பிறகு அவ்வாறு அய்யோக்கியத்தனமாக செய்த இருட்டடிப்பிற்கு சந்திப்பு தரும் தத்துவ விளக்கத்தை வேறு நாம் கேட்டுத்தொலைக்க வேண்டியிருக்கும், எனவே இவற்றையெல்லாம் தவிர்க்க தோழர் விஜயகுமார் சந்திப்பை எமது தளத்திற்கு அழைத்து வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், தோழர் விஜயகுமார் தான் அவரை அழைத்து வர வேண்டும் என்பதில்லை உனர்ச்சிகளில் இருக்க வேண்டிய அணைத்தும் இருந்தால் சந்திப்பு என்னுடைய பிளாக்கிற்கு வரட்டும் நான் அவரோடு விவாதிக்க தயாராக இருக்கிறேன்.

said...

//இன்றைக்கும் நாட்டில் ஜனநாயக சக்திகள் ஒருங்கினைந்து போராட வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.//

ஜெயக்குமார்,

உங்களது இந்த் கருத்து சரியானதே. ஜனநாயக சக்திகள் யார்? பெரியார் திராவிட கழகம் போன்ற திராவிட அரசியலுக்கு நேர்மையான அமைப்புகள், புரட்சிகர நிலைப்பாடுடைய தலித் அமைப்புகள், வேறு சில குறிப்பிட்ட மக்கள் பிரிவினரை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகள், பெரியார்தாசன், ஆனந்த தெல்தும்பெடே போன்ற அறிவுஜீவிகளான ஜனநாயக சக்திகள் இவர்கள்தான் ஜனநாயக சக்திகள். இவர்களுடன் ம க இக எதுவும் பகைப் புலமாக அனுகுவதாக எனக்கு தெரியவில்லை.

மாறாக, பாசிஸ்டு CPMயை எப்படி நாம் ஜனநாயக சக்தியாக கருத இயலும்? அதுவும் சந்திப்பு போன்ற ஒட்டு மொத்தமாக சீரழிந்த பொய்யர்களை பித்தலாட்டக்காரர்களை நேர்மையற்றவர்களை எபப்டி ஜனநாயக சக்தியாக கருத முடியும்?

ஆளும் வர்க்கத்தின் அங்கீகாரத்தையே பெரிய சர்டிபிகேட்டாக தூக்க்ப்ப் பிடிக்கும் இவர்களுக்கு தமிழ்மணியின் முந்தைய ஒரிஜினல் அவதாரமான டாலர் செல்வன் ஆதரவளித்துள்ளான்(அதுவும் மார்க்ஸ் என்று பெயரிட்டு சந்திப்பின் தளத்தை தனது தளத்தில் வைத்துள்ளான்).

டால்ர் செல்வன் என்ற ஏகாதிபத்திய பார்ப்ப்னிய அடிவருடி சந்திப்பு சார்ந்த கட்சியை, கருத்தை மார்க்ஸியம் என்று முன்னிறுத்துவது கூட அவரது கருத்து யாருக்கு சேவை செய்கிறது என்பதை புரிந்து கொள்ள உதவும்.

இப்போதும் கூட ஒரு நேர்மையான பொதுவுடமைவாதி என்று முன்னிறுத்த விரும்புகிறவர் தமிழ்மணியை கண்டிக்க வேண்டுமே? அதை செய்யும் நேர்மையை எப்பொழுதுமே வெளிப்படுத்தியதில்லை இந்த சந்திப்பு(அவருடன் ஒரு இரண்டு வருடமாக விவாதித்து வருகிறோம்)

RSS யை பொதுத்தளத்தில் இணைந்து போராடித்தான் வீழ்த்த முடியும். இதனாலதான் பெரியார் சிலை உடைப்பில் விடுதலை சிறுத்தைகள், ததேபொக, பெரியார் திராவிட கழகம் உள்ளிட்ட அமைப்புகளின் தொண்டர்களின் இயல்பான போராட்டத்தை அவர்களின் தலைமை அங்கீகரிக்காத பொது கூட ம க இக அங்கீகரித்து பாராட்டு விழா நடத்தியதுடன் தமிழகம் எங்கும் போராடியது.

சேது பால பிரச்சினையில் தமிழகம் எங்கும் பிரச்சாரம், தொடர் பொதுக்கூட்டம் நடத்திய ம க இக.

நேபாள மாவொயிஸ்டுகளுக்கு எதிரான சதிகளை முறியடிக்க இந்திய மக்களிடம் பிரச்சாரம் செய்யும் முகமாக சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பல்வேறு மார்க்ஸிஸ்டு, ஜனநாயக கட்சிகளை இணைத்து நடத்திய ம க இக. (இந்த கூட்டத்தில் ம க இகவுடன் கடுமையாக கருத்து மோதலில் ஈடுபடும் த தேபோகவின் தோழர் பே மணியரசனும் கலந்து கொண்டு பேசினார். தோழர் தியாகு இதற்கு முன்பு நேபாள் மாவொயிஸ்டு தோழர் கஜுரேல் பாதுகாப்பு கூட்டமைப்பில் ம க இக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து போராடியவர். இந்த கூட்டத்திலும் கலந்து கொண்டார்)

சிதம்பரம் கோயில் பிரச்சினையில் சிதம்பரம் தமிழ் சங்கம், அந்த பகுதி விடுதலை சிறுத்தைகள், பாமக உள்ளிட்ட கட்சிகளீன் பல்வேறு கட்சி தலைவர்களை இணைத்துக் கொண்டே போராடியது ம க இக.

இவையெல்லாம் ம க இக தனது நடவடிக்கையில் ஜனநாயக சக்திகளுடன் எந்தவொரு சிக்கலும் இன்றி இணைவதையே காட்டுகிறது.

விசயம் இப்படியிருக்க சந்தர்ப்ப்வாதகாம மக்களின் அடிமைத்தனத்தின் மீது வோட்டு பொறுக்கி அரசியல் செய்ய ஏதுவாக அதிமுகவுடன் கூட கூட்டணி சேரும் CPMதான் உண்மையில் ஜனநாயக நடைமுறைகளை கைகழுவி சுத்தமான ஒரு பாசிஸ்டு அமைப்பாக இன்று பரிணமித்து நிற்கிறது.

மறுகாலனிய சூழலில் இது தவிர்க்க முடியாது. ஒன்று நீ சுத்தமான புரட்சிகாரனாக இரு அல்லது பாசிசத்தின் பாத தாங்கியா இரு என்பதே மறுகாலனிய சூழல் நம்முன் வைக்கும் தேர்வுகள். இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கும் நிர்பந்தத்தில் CPM போன்ற கட்சிகள் பாசிசத்தை சென்று சேருகின்றன அங்குள்ள நேர்மையான அணிகளோ தற்கொலை செய்து கொள்கின்றன(ஆன்மீக தற்கொலையைச் சொல்கிறேன்).

அசுரன்

said...

சந்திப்பு என்ன குற்றாச்சாட்டு வைத்துள்ளார் சொல்லுங்கள் ஜெயக்குமார்?

மறுகாலனியம் என்றால என்ன? போலிஜனநாயகம் என்றால் என்ன? அரைக்காலனியம் என்றால் என்ன? இது போன்ற அடிப்படை புதிய ஜனநாயக அரசியல் நிலைப்பாடுகளையும், இன்றைய மறுகாலனிய சூழல் குறித்தும் இங்கு திராவிட இயக்க தோழர்கள் கூட ஒத்துக் கொள்ளும் அளவு நாம் எழுதியுள்ளோம்.


ஏன் இதே சந்திப்புடனான ஆரம்ப கால விவாதங்களின் ஜனநாயகம் குறித்தும், தேர்தல் அரசியல் குறித்தும் அவரது நிலைப்பாடுகளை உடைத்து சிதைத்தும் எமது அரசியலை முன்னிறுத்தியும் வைத்த் வாதங்களுக்கு(அதை பலமுறை நாம் ஞாபகப்படுத்தியும் கூட) இன்று வரை மறுப்பு எழுதாத சந்திப்பு ஒரே விதமான புரளிகளை ஏதோ புதிதாக கேட்ப்பது போல திரும்ப திரும்ப கேட்டு வருகிறார். சந்திப்பின் தளத்திலேயே கொஞ்சம் பின்னால் போயு வாசியுங்கள். குறைந்தது ஒரு ஆறு மாதத்திற்க்கு ஒரு முறை அல்லது மூன்று மாதத்திற்க்கு ஒரு முறை அவர் இப்படி பழைய மாவை கிளறுவதும் நாம் பதிலடி கொடுப்பதும் நடந்தே வருகிறது. ஒவ்வொடு முறையும் பதில் சொல்லாமல் மான் காராத்தே போட்டு ஓடுவது அவராகவே உள்ளது.


ம க இகவின் ரகசிய கட்சி குறித்து புரளி பேசுவது ஒன்று மட்டும்தான் சந்திப்பால கடைசில் செய்ய முடிந்த ஒரே வேலை.

அதுவும் அதனது ரகசிய அமைப்பு முறை குறித்துதானே ஒழிய அதனது கொள்கைகள் குறித்து எதுவும் உருப்படியான விமர்சனம் இல்லை, புரளீகளை தவிர்த்து.

ரகசிய அமைப்பு முறையின் தேவை குறித்து லெனினை நான் பரிந்துரைக்கிறேன்.

வேறு கொள்கை விசய்ங்களில் நாம் பதில் சொல்ல தவறியதாக ஏதேனும் விசயம் இருந்தால் சொல்லுங்கள் பரிசீலீக்கலாம்.

அசுரன்

said...

இந்த நன்னூல்கள் எந்தளவுக்கு பொய்யர்கள் என்பது தினமும் அம்பலமாகி நாறுகிறது. ஒரு எ-காவிற்கு போன வாரம் சம்பவங்களை பாருங்கள்

ஒரு பக்கம் ஆதவன் தீட்சன்யாவின் 'நான் ஒரு மனு விரோதன்' என்ற புத்தக வெளியிட்டு விழாவில் CPM இந்த புத்தகத்தை ஆதரிப்பதுடன் ஆதவன் திட்சன்யாவையும் கட்சியை விட்டு நீக்கவில்லை என்பதே CPMன் பார்ப்ப்னிய எதிர்பிற்கு சான்று என்று பேசினார்கள்(இதே மேடையில்தான் பகத்சிங்கை அவமானப்படுத்தினார்கள் என்பது வேறு விசயம்).

இதற்க்கு ஓரிரு நாளில் மதுரையில் காவ்யா பதிப்பதகம் முத்துராமிலங்க தேவனை நுற்றுண்டு நினைவாக கூட்டம் நடத்தியது. அதில் கலந்து கொண்டவர்கள் இதே தமுஎச(CPM இளக்கிய கும்பல் அமைப்பு)வின் மேலான்மை பொன்னுசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அதுவும் இந்த கூட்டத்திற்க்கு யார் தலைமை? நம்ம பாஜகவின் திருநாவுக்கரசுதான் தலைமை.

இவர்களின் வோட்டு பொறூக்கித்தனத்தின் பரிணாமம இப்படித்தான் முதுகெலும்பற்ற பிழைப்புவாதமாக மாறியுள்ளது.

said...

http://santhipu.blogspot.com/2008/04/blog-post_23.html

சந்திப்பு அல்லது அவரது தளத்தில் எழுதும் CPM நபர் முதல் முறையாக ஒரு சின்ன முயற்சி செய்துள்ளனர் பாராட்டுக்கள். அதற்கான நமது எதிர்வினை.

//சோசலிசத்திற்கான பாதைiயாக சமாதான நாடாளுமன்றப் பாதையைக் காட்டுகிறார்கள். அவர்களது துரோகத்தனத்தை சோசலிசத்திற்கான இந்தியப் பாதை என்று வர்ணிக்கிறார்கள். வர்க்கமற்ற அரசியல், வர்க்கமற்ற சோசலிசம் என்று வழிகாட்டுதல் நமது நாட்டின் பரந்துபட்ட மக்களை புரட்சிகர ஆயுதப் போராட்டப் பாதையிலிருந்து திசை திருப்பும் முதலாளியத் தந்திரமாகும்....//

//சி.பி.எம். தனது கட்சித் திட்டத்திலோ அல்லது கொள்கை அறிக்கையிலே இவ்வாறு எதையும் கூறவில்லை.//

மேலேயுள்ள ம க இகவின் கருத்திற்கு மறுப்பு எழுதியுள்ள CPM நபர் இவை CPMன் கட்சித்திட்டத்தில் இல்லையென்கிறார். நல்லது, CPMண் கட்சித்திட்டத்தில் நந்திகிராம்கள், சிங்கூர்கள் எல்லாம் உள்ளதா என்று பார்த்துச் சொல்லிவிட்டால் நமது வேலை மிச்சம். ஏனேனில் தோழர்கள் CPM கட்சியின் நடைமுறையைவிட அதன் கட்சித்திட்டத்தையே CPMஆக கருதுகிறார்கள் என்று தெரிகீறது. எப்படி பெயரில் மட்டும் மார்க்ஸிஸ்டு உள்ளதோ அதே போல கட்சிதிட்டத்திலும் மார்க்ஸியத்தை தழுவி ஏதாவது இருப்பதே இவர்களுக்கு போதுமானது. CPM போன்ற கட்சிகள் சமாதான நாடாளுமன்ற பாதையை காட்டுவதாகத்தான் கூறியுள்ளனர்.


//இவர்களது வாதப்படியே யார் வர்க்கமற்ற அரசியல் என்று சொல்கிறார்கள்? சமாதானமான நாடாளுமன்றப் பாதை மட்டுமே புரட்சிகரப் பாதை என்று வர்ணித்துள்ளார்கள்? என்று நமக்குத் தெரியவில்லை!//

CPMன் பாதையில் சங்கராச்சாரியார் CPMன் நட்பு நந்திகிராம், சிங்கூர் மக்கள் எதிரி. எனில் மார்க்ஸியம் பேசிக் கொண்டு சந்த்ரப்பவாத நடைமுறை கொண்ட இவர்கள்தான் வர்க்கமற்ற அரசியல் செய்கிறார்கள். ஏனேனில் இவர்களின் நடவடிக்கையை தீர்மானிப்பது சந்தர்ப்பவாதம் மட்டுமே. சந்தர்ப்பவாதம் என்பது வர்க்க அரசியல் அல்ல. நாடாளுமன்ற பாதையின் புனிதம் காக்கும் சோம்நாத் சாட்டார்ஜியே இவர்களின் நாடாளுமன்ற பாதைக்கு சாட்சி.


//முதலாளித்துவப் பாராளுமன்றங்களையும், இதர வகையான பிற்போக்கு நிறுவனங்கள் அனைத்தையும் அகற்றிலும் பலம் உங்களிடம் இல்லாத வரை, அவற்றில் நீங்கள் வேலை செய்த ஆகவேண்டும்

//

மேலேயுள்ள லெனினின் கூற்றை யாரும் மறுக்கவில்லை. இதுதான் நேபாள மாவொயிஸ்டுகளின் நிலைப்பாட்டை நாம் ஆதரிக்க உதவுகிறது. சரி இந்தியாவுக்கு இது பொருந்துமா என்பது குறித்து அந்த சந்திப்பு தளத்தின் CPM நபர் விளக்குவாரா? இந்தியா ஒரு முதலாளித்துவ பாராளுமன்றத்தை கொண்டுள்ளதா?

உலக வங்கி, பன்னாட்டு நிறுவனங்களின் கட்டளைகளை நிறைவேற்றும் ஒரு அரட்டை மடம் என்பதை தாண்டி அதில் ஜனநாயகம் என்ற அம்சத்தில் எதுவுமே இல்லை என்கிற போது அதனை எந்த அர்த்தத்தில் முதலாளித்துவ பாராளுமன்றத்துடன் ஒப்பிடுகிறார்கள்? குறைந்த பட்சம் இந்த நேர்மை சீலர்கள் இந்திய ஜனநாயகம் ஒரு போலி என்பதை அம்பலப்படுத்தி அசுரன் உள்ளிட்ட தளங்களில் வந்துள்ள கட்டுரைகளின் ஏதேனும் ஒன்றே ஒன்றை மறுத்து வாதம் செய்தால் கூட இவர்களின் நேர்மை குறித்து நாம் பரிசீலிக்க ஏதுவாகும் அப்படி எதுவுமே செய்யாமல் ஆளும் வர்க்கத்தின் பிரச்சாரமாகிய இந்திய ஜனநாயகம் என்ற பொய்யை தமது வாதத்திற்கு அடிப்படையாக நம்பியிருப்பதே இந்த போலிகளை புரிந்து கொள்ள உதவும்.

//பாதிரிமார்களால் ஏமாற்றப்பட்டும், கிராம வாழ்க்கை முறையின் பிற்பட்ட நிலைமைகளால் முடக்கப்பட்டும் வரும் தொழிலாளர்களை இவற்றில்தான் இன்னமும் நீங்கள் காண்பீர்கள். //

தோழிலாளர்களை என்று லெனின் சும்மா பொத்தாம் பொதுவாக குறிப்பிடுவதாக சந்திப்பு போன்ற CPM பித்தலாட்டக்காரகள் நம்ப விரும்புகிறார்கள். இந்தியாவில் தொழிலாளர்கள் எத்தனை பேர் என்ற கணக்கையும் இவர்கள் கொடுத்துவிட்டால் ரொம்ப புன்னியமாகப் போகும். இந்திய ஒரு பின் தங்கிய விவசாய நாடு என்பதை சுத்தமாக மறைத்துவிட்டு அப்படியே ரஸ்யாவுடன் பொருத்தும் மொள்ளமாறித்தனமதான் சிறுபிள்ளைத்தனமதான் இங்கு வெளிப்படுகிறது.

மீண்டும் இங்கு ஒரு முதலாளித்துவ சமூகத்தின் இயல்புகளுக்கான நடைமுறைகளை இந்தியா போன்ற அரை நிலபிரபுத்துவ சமூகத்திற்க்கு பொருத்தும் பித்தலாட்டத்தை செய்கிறது இந்த் கும்பல்.

//ஆயுதப் புரட்சி என்று பேசுவது தொழிலாளி வர்க்கத்தின் குரலை வெளிப்படுத்துவதாக அமையாமல் தங்களின் உள்ளுனர்வு அடிப்படையில் இயங்கும் கற்பனாவாத தத்துவத்தைதான் ம.க.இ.க.வினரிடம் காண முடிகிறது. இது குறித்து தோழர் லெனின் கூறுவதை நோக்குங்கள்.
//

லெனின் குறிப்பிட்டுள்ளதோ மக்களை திரட்டி போராடுவதை மட்டுமே மாறாக ஆயுத போராட்டம் குறித்த பிரச்சாரத்தை நிராகரித்து அவர் எங்கும் எதுவும் கூறியதில்லை. ஆயினும் பித்தலாட்டாக்கார CPM கும்பல் லெனினை திரித்து புரட்டி தமது சந்தரப்ப்வாத கருத்துக்களை நியாயப்படுத்துகீறார்கள். இவர்களை குறித்து லெனின் என்ன சொல்கிறார் என்று கிழே பார்க்கலாம்:

"பலாத்கார புரட்சி பற்றிய திட்டவட்டமான இதே கருத்தோட்டத்தை முறையாய் வெகுஜனங்களின் மனதில் ஆழப் பதியச் செய்வது அவசியமென்பது மார்க்ஸ், ஏங்கெல்ஸின் போதனை அனைத்தின் ஆணி வேர் போன்றதாகும். இவர்களுடைய போதனைக்குத் தற்போது நடப்பிலுள்ள சமூக-தேசியவெறிப் போக்கும் காவுத்ஸ்கிவாதப் போக்கும் இழைத்துவரும் துரோகமானது, இந்த போக்குகள் இத்தகைய பிரச்சாரத்தையும் கிளர்ச்சியையும் கைவிட்டுவிட்டதில் மிகவும் எடுப்பாய் வெளிப்படுகிறது".-லெனின் (அரசும் புரட்சியும், அத்தியாயம் 1, 4. அரசு உலர்ந்து உதிர்வது...)"

லெனின் சொல்லாததை சொன்னதாக சொல்வது, லெனின் வார்த்தைகளை பிய்த்து போட்டு தவறான பொருளில் இயந்திரகதியில் வசதிப்படி பொருத்தி பொருள் காண்பது இவை இவர்களின் ரத்தத்தில் ஊறிய்து.

சரி உண்மையில் மக்களை புறக்கணிப்பது யார்? உலகமய அரசியலையும் சரி, மார்க்ஸிய அரசியலையும் சரி மக்களிடம் கொண்டு செல்லாமல் புறக்கணிப்பது யார்? மக்களின அடிமைத்தனத்தை மட்டுமே நம்பி அரசியல் செய்யும் வோட்டு பொறுக்கிகள் யார்? அது வேறு யாருமல்ல சந்திப்பு சார்ந்த CPM பாசிஸ்டு கட்சிதான் அது.

ம க இக நக்சில கும்பல் சாதித்ததில் ஒரு மசிரளவு கூட CPM சாதித்ததில்லை என்பது விந்தையான ஒரு உண்மை.

லெனின் புரட்சிகர புறநிலையிலலாதது பற்றி பேசுகிறாரே அன்றி புரட்சிகர் நடைமுறையை கைகழுவி சந்தர்ப்பவாத நடைமுறைக்கு போகச் சொல்லி எதுவும் சொல்லவில்லை ஆயினும் CPM பாசிஸ்டுகள் அப்படி லெனின் சொன்னதாக பின் குறிப்பாக தமது சொந்த நிலைப்பாட்டை சேர்த்துக் கொள்கிறார்கள்.

மீண்டும் ஜனநாயகமான விவாதச் சூழலும், மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முதலாளித்துவ பாராளுமன்றம் குறித்தே பேசுகீறார் லெனின். ஆயினும் இந்தியா ஒரு முதலாளித்துவ பாராளுமன்றம் இல்லை என்பதை நாம் எத்தனையோ முறைகள் ஆதாரப் பூர்வமாக பலரிடமும் விவாதம் செய்து நிறுவியுள்ளோம். காமரேடுகளோ அப்படி ஒரு நிருப்பிக்கப்பட்ட உண்மையின் கீழ் விவாதம் செய்ய அஞ்சி அது போன்ற் முயற்சிகள் எதிலும் ஈடுபடுவதில்லை. இதுதான் லெனின் குறிப்பிடும் சிறுபிள்ளைத்தனம்.

இதே CPM கும்பல் நேபாளத்தின் மன்னராட்சிக்கு உட்பட்ட போலி ஜனநாயக அரசையும் கூட முதலாளித்துவ பாராளுமன்றம் என்றே தூக்கி வைத்து ஆடினர். ஏனேனில் அங்கு அதனை எதிர்த்து உண்மையான ஜனாநாயக வழிப்பட்ட முதலாளித்துவ அரசை கொண்டு வர போராடிக் கொண்டிருந்தது நேபாள் மாவொயிஸ்டுகள் என்ற கும்பல்லல்லவா? அது CPM மாதிரியோ அல்லது நேபாள காங்கிரஸ் மாதிரியோ அல்லது நேபாள UML மாதிரியோ பெரிய கட்சியில்லையல்லவா?

வேண்டுமானால் இந்தியா ஒரு முதலாளித்துவ ஜனநாயகம் என்று நிரூபிக்கட்டும் காமரேடுகள். பிறகு உள்ளதெல்லாம் சரி காமெடியாக CPM பித்தலாட்டங்கள்.

முதலாளித்துவ பாராளுமன்றம் என்று சொல்லும் CPM நபர் கட்டுரையின் கடைசி பகுதியில் இப்படி குறிப்பிடுகிறார்:

//பெரு முதலாளிகள் தலைமையிலான முதலாளித்தவ - நிலப்பிரபுத்துவ சமூகத்தை தூக்கியெறிந்து //

அதென்ன பெரு முதலாளிகள்? இது வெறுமே அளவை மட்டுமே குறிக்கிறது இவர்களின் கணக்கில் அப்படியென்றால் இதே பெரு முதலாளிதான் அமெரிக்காவிலும் ஆட்சி செய்கிறான்.

BJP என்ன பெரு முதலாளி கட்சியா?

அதெப்படி நிலபிரபுத்துவ சமூகத்தை முதலாளித்துவம் பேணி பாதுகாக்கும் விந்தை? ஒரு வேளை மார்க்ஸியமே தவறோ?

//மக்கள் ஜனநாயக புரட்சியின் மூலம் பாட்டாளி வர்க்க அரசை ஆட்சியில் அமர்த்துவது என்ற உயரிய நோக்கத்தோடு செயலாற்றுகிறது.//

மக்கள் ஜனநாயக புரட்சி என்றால் என்னவென்பது ஒரு தனி கேலி கூத்து குறைந்தது அந்த செயல் தந்திரத்தில் காமரேடுகள் முன்னேறியுள்ளனரா என்றால் அதுவும் இல்லை., கட்சி திட்டத்தை மட்டும் ரீ பிரிண்டு போட்டுக் கொண்டு நடைமுறையில் மக்கள் ஜனநாயக புரட்சி என்பதற்க்கு எதிர்திசையில் சென்று கொண்டுள்ளனர் சுய முரன்பாட்டு முத்தண்ணாக்கள். இவர்களின் தற்போதைய கூட்டாளிகள் யார் என்று பார்த்தால் இது தெரிய வரும்:

#1) இந்தோனேசிய சலிம் கும்பல், டாடா, அம்பானி.
#2) அமெரிக்க அதிகார வர்க்கம், அரசியல் தலைமைகள்
#3) சங்கராச்சாரி, பில்லி சூனிய கும்பல்
#4) பார்ப்ப்னியமே எமக்கு முதல் என்ற வெளிப்படையாக அறிவித்து விட்டே அமைச்சராக தொடர்வது.

நல்ல நடைமுறை தந்திரம்.

//மேலும் முதலாளித்துவ நாடாளுமன்றத்தில் பங்கெடுப்பதன் மூலம் முதலாளித்துவ ஆட்சியாளர்களின் மக்கள் விரோத கொள்கைகளை அவர்களது கூடாரத்திற்குள்ளே நின்று வெகுவாக அம்பலப்படுத்த முடியும் என்பதோடு//

இந்த அம்சத்தில் முற்றிலும் அம்பலப்பட்டு போய் இன்று கம்யுனிஸத்திற்கு கரும்புள்ளீ குத்தும் நடைமுறை தந்திரமாக் இருப்பது CPM னுடையதுதான்.


//இரண்டு முறை பிரதமர் பதவி உட்பட மத்திய மந்திரிப் பதவிகள் தேடி வந்த போது அதை வேண்டாம் என்று உதறித் தள்ளிய கட்சி சி.பி.எம்.! //

கடைசியில் மிஞ்சியது இதுதான். இந்த வரையறைப்படி சோனியா காந்தி கூட நல்ல கம்யுனிஸ்டுதான்.

CPMன் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஊழல்களுக்கு, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வசூல் வேட்டைகளுக்கு ஆதாரங்களை அளவிட முடியாத அளவு இருப்பினும் இவையெதையும் சட்டை செய்யாம வாய் சவாடால் அடிக்கிறார் இந்த CPM நபர். ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் தந்திரம்தான் இது. நாம் ஆதாரங்களை வைத்தால் கள்ள மௌனம் சாதித்து ஓடிவிடுவதும் இதற்க்கு முன்பும் நடந்துள்ளது.

தொழிலாளி வர்க்கம் என்று தனது வாதத்தை நடைமுறையை சுருக்கிக் கொள்ளும் CPM இந்தியாவில் பெரும்பான்மை வர்க்கம் எது என்ற ரகசியத்தை கொஞ்சம் சொன்னால் சிறப்பாக இருக்கும்.

அசுரன்
Related Articles:

"பாஸிஸ்டு CPMமும், லெனின் சொல்லும் ஜனநாயக புரட்சியும்!!!!"
==>http://poar-parai.blogspot.com/2008/02/cpm.html


மானங்கெட்ட சிபிஎம்மும், விடுதலையின் விடிவெள்ளி பகத...
http://poar-parai.blogspot.com/2008/03/blog-post_24.html

சி.பி.எம். - இன் மதச்சார்பின்மை : நரியின் சாயம் வெளுத்தது
http://tamilcircle.net/unicode/puthiyajananayagam/2008/march/PJ_2008_3_11.html

போதையில் நடந்த மாநாடு :
மார்க்சிஸ்டுகளின் கலாச்சாரப் புரட்சி

http://tamilcircle.net/unicode/puthiyajananayagam/2008/march/PJ_2008_3_08.html


காவிமயமாகும் சி.பி.எம்.
http://tamilcircle.net/unicode/puthiyajananayagam/2008/feb/PJ_2008_2_03.html


ஜனநாயகம் என்றால் என்ன? http://tamilcircle.net/unicode/general_unicode/104_general_unicode.html

Anonymous said...

From: http://kaargipages.wordpress.com

அட.. தோ பார்ரா! ஸ்ரீலஸ்ரீ யெச்சூரியேந்திர ஸ்வாமிகள் அருள்வாக்கு!

அருள்வாக்கு நெம்பர் 1 - ஆதம் மணல் திட்டுக்கள் பற்றி மைய்ய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த அறிவியல் கழகத்தின் கருத்துக்கள் கொண்ட மனுவை வாபஸ் வாங்கியது மிகச் சரியே!

அருள்வாக்கு நெம்பர் 2 - அணு ஒப்பந்தத்தை அடுத்த அமெரிக்க அரசு அமையும் வரை மட்டும் எப்படியாவது மத்திய அரசாங்கம் தள்ளி வைக்க வேண்டும்!

சின்னானின் கமெண்ட் - அதாவது கழுதை விட்டையில் பின்விட்டை நல்லா மணமும் சுவையும் நிறைந்ததாக இருக்கும் என்று நாட்டு மக்களுக்கு அருளியிருக்கிறார் சிபிஎம் மடத்தின் பீடாதிபதிகளில் ஒருவரான சீதாராமயெச்சூரியேந்திர ஸ்வாமிகள்!

- The Hindu ( 22 october 2007)

said...

பின்னூட்டங்களை மிகச் சிறந்த முறையில் தத்துவார்த்த நடைமுறையில் தொடர்ந்துவரும் தோழர்கள், ஜெயக்குமார், சூரியன், தியாகு, அசுரன், கார்க்கி அனைவருக்கும் எனது பாராட்டுக்களும் நன்றிகளும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழர் அசுரன், ஸ்டாலின் போன்ற தோழ்ர்கள் தங்களது வேலை பளுவின் காரணமாகத் தங்களது இணைய செயல்பாடுகளைக் குறைத்துக் கொண்டிருக்கின்றனர் என்று நினைக்கிறேன். அவர்களை தொடர்ந்து எழுத வேண்டுமென்று அனைவரின் சார்பிலும் கேட்டுக்கொள்கிறேன்.

தோழமையுடன்,
ஏகலைவன்.

said...

///இதற்க்கு ஓரிரு நாளில் மதுரையில் காவ்யா பதிப்பதகம் முத்துராமிலங்க தேவனை நுற்றுண்டு நினைவாக கூட்டம் நடத்தியது. அதில் கலந்து கொண்டவர்கள் இதே தமுஎச(CPM இளக்கிய கும்பல் அமைப்பு)வின் மேலான்மை பொன்னுசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அதுவும் இந்த கூட்டத்திற்க்கு யார் தலைமை? நம்ம பாஜகவின் திருநாவுக்கரசுதான் தலைமை.

இவர்களின் வோட்டு பொறூக்கித்தனத்தின் பரிணாமம இப்படித்தான் முதுகெலும்பற்ற பிழைப்புவாதமாக மாறியுள்ளது.//


மேலே குறிப்பிட்டுள்ள வரிகள் தோழர்.அசுரன் அவர்களின் பின்னூட்டத்திலிருந்தது.

மேலாண்மை பொண்ணுசாமி என்ற சாதி வெறியனைப் பற்றி நான் முன்னமேயே பலமுறை சந்திப்புக்கு விவாதத்தின் போது குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன். ஆனால் அவர்தான் வழக்கம்போல பதிப்பிக்காமல் இருந்துவிட்டார்.

பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்களம் போன்ற ஊராட்சிகளில் தேர்தல் நடத்தவே முடியாமல், ஆதிக்க சாதிவெறியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தபோது, உண்மை கண்டறியும் குழு ஒன்று அனுப்பிவைக்கப்பட்டது. அதில் முக்கிய பொறுப்பேற்றுச் சென்று வந்தவர் மேற்கண்ட எழுத்தாளர் மேலாண்மைப் பொண்ணுசாமி தான்.

சரி அவர் கண்டறிந்து வந்து நமக்கறிவித்த உண்மைதான் என்ன தெரியுமா தோழர்களே?

"மேற்கண்ட ஊர்களில் தலித் மக்கள் என்னதான் ஒடுக்கப்படுகிறார்கள் என்பது உண்மைதான் என்றபோதிலும், மேல் சாதி(அதாவது ஆதிக்க சாதிவெறியர்களை) மக்களின் நியாயமான உணர்வுகளையும் நாம் மதித்தே தீரவேண்டும்" என்று அறிவித்தவந்தான் இந்த மேலாண்மை.

இவர்தான் த.மு.எ.ச.வின் மாநிலத் தலைவர்களில் ஒருவர். அவ்வமைப்பின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர். இதே த.மு.எ.ச.வின் மாநிலத் தலைவர்களில் ஒருவரான ஆதவன் தீட்சன்யாவோ, தன்னை ஒரு தலித் மக்களின் இரட்சகன் என்று பீற்றிக் கொள்கிறார்.

ஆனால் இருவரும் சி.பி.எம்.கட்சியின் மிக முக்கிய தலைவர்களாவர். அதாவது ஆதிக்க சாதிவெறியர்களின் வாக்குகளை தக்கவைத்துக் கொள்வதற்காக மேலாண்மை பொண்ணுசாமியையும், அதைப் பார்த்து தலித் மக்கள் காறித் துப்பிவிடாமல் இருப்பதற்காகவும், தலித் வாக்குகளைக் குறிவைத்தும் உருவாக்கப்பட்டிருப்பவர் ஆதவன் தீட்சன்யா.

இதுதான் இவர்கள் கடைபிடிக்கும் வர்க்க அரசியல் போலும்.