அன்பார்ந்த தோழர்களே!
சென்ற 22/03/2008 சனிக்கிழமையன்று நடப்பதாக இருந்த, 'சிதம்பரத்தில் நடந்துவரும் தீண்டாமைக்கெதிரான போராட்டங்களில் பங்கெடுத்து போலீசின் கடுமையான தாக்குதலுக்குள்ளான, மற்றும் சிறை சென்ற போராளிகளுக்கு பாராட்டுவிழா'ப் பொதுக்கூட்டம், தொடர்ச்சியான மழையால் வரும் 29/03/2008க்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
இந்தப் பொதுக்கூட்டம் இதுவரை நடந்த இடைவிடாத போராட்டதை மக்கள்முன் தெளிவாக எடுத்துவைப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீட்சிதபார்ப்பனர்கள் தமிழுக்கு எதிரியே அல்ல என்றும் கடவுள் நம்பிக்கையே இல்லாத நாத்திககம்யூனிஸ்டுகள் தான் (கம்யூனிஸ்டு என்றாலே நாத்திகத்தையும் உள்ளடக்கியதுதானே, இதுல என்ன 'நாத்திககம்யூனிஸ்டு'ன்னு! என்று யாரும் குழம்பவேண்டாம், இது போலிகளை மனதில் வைத்து ஏற்படுத்தப்பட்ட சொல்லாடல்) இந்த விஷயத்தை பெரிதுபடுத்தி 'ஏதோ பிராமணர்கள் எல்லோரும் தமிழுக்கு எதிரிகள்' என்று தவறாக சித்தரிக்க முயலுகிறார்கள். இப்படிக் கூப்பாடு போடுகின்ற பார்ப்பனக்கும்பலின் முகத்திரையை கிழிக்கும் வகையிலும் இந்தக் கூட்டம் அமையப்போகிறது. எனவே, கம்யூனிச/நாத்திக ஆதரவாளர்களைவிட அக்கிரகாரத்து அம்பிகளையும், அம்பிகளின் எடுப்பு,தொடுப்புகளையும், இந்தக்கூட்டத்தில் பங்குபெற அழைக்கிறேன்.
இந்தப் போராட்டத்தை எமது தோழ்ர்கள் அரும்பாடுபட்டு வெற்றியின் முகட்டிற்கு தரதரவென இழுத்துவந்திருக்கிறார்கள். மனித உரிமை பாதுகாப்பு மையத்தை (HRPC) சார்ந்த வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களிலும், மக்கள் கலை இலக்கியக்கழகம், விவசாயிகள் விடுதலை முன்னனி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னனி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னனி போன்ற அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் சிதம்பரம் வீதிகளிலும் தொடர்ச்சியாக போராடியிருக்கின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அரசானை வந்தபிறகும் நடைபெற்ற போராட்டங்களில், சிவனடியாரைத் தவிர கைது செய்யப்பட்ட அனைவருமே மேற்கண்ட அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள்தான்.
எமது இயக்கங்களின் பெருமை பேசுவதற்காக நான் இதையெல்லாம் இங்கே பட்டியலிடவில்லை. மாறாக, இதுநாள்வரை தீட்சிதபார்ப்பனர்களின் செருப்புகளுக்கு காவல்காத்துக்கிடந்த மானங்கெட்ட கும்பல் ஒன்று இப்போது தமிழகமெங்கும் சென்று இதனைச்சாதித்தது நாங்கள்தான் என்று சந்தடிச்சாக்கில் சிறிதும் கூச்சமின்றி பிதற்றிவருகிறது. இது மேற்கண்ட பார்ப்பனக்கும்பலின் ஓலத்தைவிட சிறிது சுருதி குறைந்து இரகசியமாக (திருட்டுத்தனமாக நம் காதுகளிலிருந்து தப்பிக்கும் நோக்கில்) ஒலித்தாலும், அது பார்பனஓலத்தைவிஞ்சும் கேவலமானதொரு தோற்றத்தைத் தழுவி அம்மனமாக நிற்பது அம்பலமாகிறது.
சிதம்பரம் நகரத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு இணையான செல்வாக்குடன் (பொறுக்கித்திண்பதில்) திகழும் போலிகம்யூனிஸ்டு என்று மக்களால் அழைக்கப்படுகிற சி.பி.எம். கட்சிதான் அது. கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட சிதம்பரம் தொகுதி சி.பி.எம். கட்சிக்கே ஒதுக்கப்பட்கது. தி.மு.க. கூட்டனி வேட்பாளராக பாலகிருஷ்ணன் என்பவர் நிறுத்தப்பட்டு மண்ணைக்கவ்வினார் என்பது வேறுவிஷயம். இப்போது விஷயத்திற்கு வருவோம்.
மக்கள் பிரச்சினையைப் பேசுவதைவிட கட்டப்பஞ்சாயத்து பேசி காசுபார்ப்பதற்காகவே கட்சியின் முக்கிய பொறுப்பிலிருக்கும் பொறுக்கிகள் நிரம்பிய சிதம்பரம் நகர சி.பி.எம். கட்சியின் 'முக்கிய' பிரமுகர்தான் சிதம்பரம் நகரசெயலாளராக இருக்கும் 'மூசா' என்பவர்.தீட்சிதபார்ப்பனர்கள் கோவிலுக்குள்ளேயே செய்த கொலைகளுக்காக போலீசுக்கு முதலில் புகார் கொடுத்தவரும் இவரே. இவ்வளவு போர்க்குணம் நிரம்பிய(!) மாபெரும் தலைவர்(!!) பிறகு இந்த புகார் குறித்து என்ன செய்தார் என்று தெரிந்துகொள்ள அவலாயிருக்கிறீர்கள் தானே? இந்த செய்தியைக் கேள்விபட்டதும், முஸ்லீம் குடும்பத்தைச் சார்ந்த 'மூசா'வை கோயிலுக்குள் அழைத்துச் சென்று பட்டுத்துண்டு போர்த்தி மாலைபோட்டு, கொஞ்சம் விபூதியை அவர் வாயில் (அதான் நெற்றியில் பூசமாட்டாரே, கம்யூனிஸ்ட்ல்ல!!) திணித்து அனுப்பிவிட்டனர் தீட்சிதர்கள். இன்று வரை அதை விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தன்து பேச்சையே நிறுத்திவிட்டார். இதுதான் இவர்கள் பங்குபெற்ற சிதம்பரம் போராட்டத்தின் வீரகாதை!.
இதற்கிடையில் இந்தப் போலிக்கம்யூனிஸ்ட் கட்சிக்குட்பட்ட அல்லக்கை அமைப்புகளான தமிழ்நாடு முற்போக்கு(!) எழுத்தாளர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போன்ற அமைப்புகள் சிதம்பரம் போராட்டத்தை நடத்தியது நாங்கள் தான் என்று கூவிவருகின்றனர்.
ஆறுமுகசாமிக்கும் தமிழுக்கும் எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளை மற்ற பத்திரிக்கைகள் வெளியிட்ட அளவிற்குக்கூட அல்லாமல் துண்டுசெய்தியாகக் கூட வெளியிடாத இவர்களது பத்திரிக்கை, அரசாணை வந்தபிறகு ஆறுமுகசாமி சென்று பாடியபிறகு, "இந்தப்போராட்டத்தின் வெற்றிக்குக் காரணமான இ.ஜ.வா.சங்கத்திற்கு பாராட்டுக்களை"த் தெரிவித்து ஈனத்தனமாக செய்தி வெளியிட்டது.வேறுவழியில்லாமல், எமது அமைப்பின் பெயர்களைக்கூட வெளியிட்டுவிடாமல் மிகுந்த கவனத்தோடு எம்மையும் பாராட்டியது.
இதன் தொடர்ச்சியாக சென்ற 21/03/2008 அன்று திருச்சியில் த.மு.எ.ச.சார்பில்,'சிதம்பரம் கோயில் - சில உண்மைகள்' என்று நூல் வெளியிட்டு அதன்மூலம் ஆறுமுகசாமியின் வெற்றிக்கு வழிவகுத்ததாகச்(?!) சொல்லி தம்முடைய கட்சியைச் சார்ந்த ச. செந்தில்நாதன் என்பவரை அல்பத்தனமாகப் பாராட்டிக்கொண்டது.ஆறுமுகசாமிக்கு ஆதரவாக ஒரு பிட் நோட்டீசைக்கூட போடமுடியாத இந்த மானங்கெட்ட கூட்டம் சிறிதும் வெட்கமின்றி இந்நிகழ்ச்சிக்காக திருச்சி நகர சுவர்களை தனது போஸ்டர்களால் நிரப்பியது.
இப்போது பதிவர் பகத்(bagathh.blogspot.com) அவர்களுடைய வலைதளத்தில் இந்தக்கூட்டத்தைச் சார்ந்த ரமேஷ் என்ற அல்பை கீழ்கண்டவாறு சொல்லியுள்ளது கூடுதலாக இங்கே உங்களது பார்வைக்கு வைக்கப்படுகிறது.
///// NATPUTAN RAMESH said... "புத்தக புரட்சியாளர்களிண் கூடாரம்" த நா.மா.லெ.க யோக்கியர்களே! சிதம்பரம் கோயில் பிரச்சினையில் 2000 பேருடன் இந்திய ஜனனாயக வாலிபர் சங்க தோழர்கள் போராடியதை, 500 பேர் கைது செய்யப்பட்டதை மூடி மறைப்பது தான் உங்கள் யோகிதையா. ஒரு போராட்டத்தில் யார் இணைந்தாலும் மறைப்பதுதான் உங்கள் கேவலமாண புத்தி என்பதை மீண்டும் மீண்டும் நிருபணம் செய்கின்றீர்.
March 22, 2008 2:35 AM //////
களத்தில் போராடியவர்கள் யார் என்பது சிதம்பரம் மக்களுக்குத் தெரியும். மறைக்கப்பட்டவர் யார் என்பதும் அவர்களுக்குத் தெரியும். ஆனால் இது அந்த மடையனுக்குத் தெரியாது. இந்த வெற்றியின் இரகசியம் அவன் சார்ந்திருக்கிற கட்சிக்கும் தெரியாது.
வெறும் பிழைப்புவாத அரசியல் நடத்தி, சாதாரண உழைக்கும் மக்களிடம் பொறுக்கித்தின்பதற்காக மாநாடு, பேரணி என்று அடையாள நிகழ்ச்சிகளை மட்டும் நடத்தும் இந்தக் கோழைகள் கொல்லைபுறமாக வந்து, எதிரனியின் பக்கம் நின்றுகொண்டு லாவனிபாடுவது இவர்களுடைய போலித்தனத்தை இன்னும் கூடுதலாகத்தான் காட்டுகிறது.
இது உங்களுக்கு வியப்பையும் கேலியையும் உண்டாக்கலாம். இது உங்களைப் பொறுத்தவரை ஒரு செய்தி. ஆனால் இது தான் அவர்களின் வரலாறு. பா.ஜ.க.கும்பலின் காவித்துணி அதன் கொலைமுகத்தை மூடியிருப்பதைப்போல், சி.பி.எம். கட்சியின் சிவப்புத்துணி இத்தகைய கேவலங்களை முற்றிலும் மூடியிருக்கிறது. இந்த போலி முகத்திரை தொடர்ச்சியான எமது களப்போராட்டங்களில் கிழியும் அல்லது கிழிக்கப்படும்.
ஆயிரமாண்டுகளுக்கும் மேலாக தீண்டாமையை இந்த மண்ணில் நிலைநாட்டி வரும் பார்ப்பனியம், இந்த சிறு சறுக்கலைக்கூட பொறுக்கமுடியாமல் அரற்றுகிறது. இத்தனைக்காலம் அதன் காலடியில் பம்மிக்கிடந்த இந்தப் போலிக்கயவர் கூட்டம் வெற்றுக் கூச்சலிடுகிறது. கிணறு தோண்டப்போய் பூதம் கிடைத்தது. நாம் பூதத்தின் பல்லைப்பிடுங்கியாகிவிட்டது, பார்ப்பன பூதம் செயலிழந்துகொண்டிருக்கிறது. இப்போது அதன் புழுக்கைகளின் ஓலம் மட்டும் கேட்கிறது வேறுவிதமாக.......
நன்றி!
தொடர்ந்து பேசுவோம்!
தோழமையுடன்,
ஏகலைவன்.
4 comments:
//இந்தப் போராட்டத்தை எமது தோழ்ர்கள் அரும்பாடுபட்டு வெற்றியின் முகட்டிற்கு தரதரவென இழுத்துவந்திருக்கிறார்கள். மக்கள் கலை இலக்கியக்கழகம் விவசாயிகள் விடுதலை முன்னனி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னனி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னனி.//மக்கள் போர்குழுவால் அமெரிக்க ஏஜன்ட் என்று பெயர் ஏடுத்த இந்திய புரட்சியின் குத்தகைதாரர்களே.தில்லை சிற்றம்பலமேடையில் தமிழ்பாட நாளுபேர்வுடன் த நா ம லெ க கட்சியின் பின்னால் மக்கள் கலை இலக்கியக்கழகம்இ விவசாயிகள் விடுதலை முன்னனிஇ புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னனிஇ புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னனி என பல பேர் வைத்து கொண்டு பத்து நபர்களுடன் இரவு 1மணிக்கு யாறுக்கும் தெரியா நேரத்தில் போஸ்டர் ஒட்டி பகலில் கடைகளில் வசூலித்து (நிங்க என்ன புதுசா இருக்கிங்க சி பி எம் கட்சிதோழர் வரலயா என கேட்டால் நாங்க தாங்க உண்மையான பொறுக்கிகள் என்றும் நாங்கள் மக்கள் பிரச்சினையைப் பேசுவதைவிட சி பி எம் கட்சியை நக்கி பிழைப்பு நடத்த வந்த கற்பனை புரட்சியாளர்கள் என்று பெறுமை பட்டுகொள்வதில் மகிழ்சியே உங்கள் புரட்சி ஓங்குக
இதுபோன்ற பேடித்தனமாக பதிலலிப்பதெல்லாம் ஒங்கட்சியோட வழக்கத்திலும் வழக்கமான செயல்தான்.
இந்த, விவாதிக்க இயலாத கயமைத்தனம் உனக்குள் இருப்பது நீ சார்ந்திருக்கின்ற பிழைப்புவாதக் கட்சியின் வெளிப்பாடுதான். இதில் எனக்கொன்றும் ஆச்சர்யமோ கோபமோ இல்லை. மாறாக உன்மீது பரிதாபம்தான் வருகிறது.
ஒங்கட்சியினுடைய டெல்லி தலைமை அலுவலகத்தைச் சூரையாடிய ஒம்பங்காளி பா.ஜ.க.மேல வராத கோவம் எம்மேல வருதுன்னா தெரிஞ்சுக்கோ ஒங்களோட மொள்ளமாறித்தனத்தப் பத்தி. பாப்பான் ஒங்கள அடிச்சாலே சொரனைவரமாட்டேங்கிது, இதுல சிதம்பரம் தீட்சிதப்பாப்பனால தாக்கப்பட்ட சிவனடியாருக்காக ஒன்னால எப்படி போராடமுடியும். இதெல்லாம் ஆள் எண்ணிக்கையின் அடிப்படையிலிருந்து முடிவு செய்யமுடியாது சொரனையின் அடிப்படையில் தான் முடிவு செய்யமுடியும்.
சூடு, சொரனை, வெக்கம், மானம்,ரோஷம் இதுல ஏதாவது ஒன்னு ஒனக்கிருந்தால், நான் என்னுடைய இந்தப்பதிவுல போட்டிருக்கிற தகவலின் அடிப்படையில வந்து வாதாடு.
இல்லன்னா பொத்திக்கிட்டு வேடிக்கை மட்டும் பாரு.
/////மக்கள் போர்குழுவால் அமெரிக்க ஏஜன்ட் என்று பெயர் ஏடுத்த இந்திய புரட்சியின் குத்தகைதாரர்களே.தில்லை சிற்றம்பலமேடையில் தமிழ்பாட நாளுபேர்வுடன் த நா ம லெ க கட்சியின் பின்னால் மக்கள் கலை இலக்கியக்கழகம்இ விவசாயிகள் விடுதலை முன்னனிஇ புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னனிஇ புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னனி என பல பேர் வைத்து கொண்டு பத்து நபர்களுடன் இரவு 1மணிக்கு யாறுக்கும் தெரியா நேரத்தில் போஸ்டர் ஒட்டி /////
நாங்கள் நாலுபேரோ பத்துபேரோ அல்லது ஆயிரம் பேரோ, எங்களத்தான் மனுசனா மதிச்சி சிவனடியார் ஆறுமுகசாமி நம்பிவந்தார். அவர் சிதம்பரதிலேயே இருக்கிற ஒங்கட்சிக்காரனத் தேடி போகவில்லை. ஏன்னா, ஒங்களோட மொள்ளமாறித்தனமெல்லாம் அவரு தெளிவாத் தெரிஞ்சு வெச்சிருந்தாரு.
வேனுமின்னா அவரப்போயி கேளு, தன் கால்ல கெடக்குற பிஞ்சசெருப்பாலேயே ஒன்னத் தொரத்திதொரத்தி அடிப்பாரு.
/////மக்கள் போர்குழுவால் அமெரிக்க ஏஜன்ட் என்று பெயர் ஏடுத்த இந்திய புரட்சியின் குத்தகைதாரர்களே.தில்லை சிற்றம்பலமேடையில் தமிழ்பாட நாளுபேர்வுடன் த நா ம லெ க கட்சியின் பின்னால் மக்கள் கலை இலக்கியக்கழகம்இ விவசாயிகள் விடுதலை முன்னனிஇ புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னனிஇ புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னனி என பல பேர் வைத்து கொண்டு பத்து நபர்களுடன் இரவு 1மணிக்கு யாறுக்கும் தெரியா நேரத்தில் போஸ்டர் ஒட்டி /////
நாங்கள் நாலுபேரோ பத்துபேரோ அல்லது ஆயிரம் பேரோ, எங்களத்தான் மனுசனா மதிச்சி சிவனடியார் ஆறுமுகசாமி நம்பிவந்தார். அவர் சிதம்பரதிலேயே இருக்கிற ஒங்கட்சிக்காரனத் தேடி போகவில்லை. ஏன்னா, ஒங்களோட மொள்ளமாறித்தனமெல்லாம் அவரு தெளிவாத் தெரிஞ்சு வெச்சிருந்தாரு.
வேனுமின்னா அவரப்போயி கேளு, தன் கால்ல கெடக்குற பிஞ்சசெருப்பாலேயே ஒன்னத் தொரத்திதொரத்தி அடிப்பாரு.
Post a Comment