Showing posts with label யெச்சூரி. Show all posts
Showing posts with label யெச்சூரி. Show all posts

Sunday, July 20, 2008

"காங்கிரசை வரவிருக்கும் தேர்தலுக்குப் பிறகும் ஆதரிப்போம்" சிபிஎம் கட்சியின் தலைமை 'தரகர்'குழுவைச் சார்ந்த யெச்சூரி அறிவிப்பு!!!!!!!!


"காங்கிரசை வரவிருக்கும் தேர்தலுக்குப் பிறகும் ஆதரிப்போம்" சிபிஎம் கட்சியின் தலைமை 'தரகர்'குழுவைச் சார்ந்த யெச்சூரி அறிவிப்பு!!!!!!!!

சிபிஎம் / சிபிஐ என்ற இரு போலி கம்யூனிசக் கட்சிகளின் சார்பில் சென்னை அமைந்தகரையில் சென்ற 16/07/08 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு நானும் சில தோழர்களும் சென்றிருந்தோம். மேடைக்கு பின்புறம் இருந்த ஒரு டீகடையில் நின்றிருந்த சில மூத்த தோழர்களிடம் பேச்சு கொடுத்தோம்.

கடந்த நாற்பது வருடங்களாக சிபிஎம் கட்சியில் தாங்கள் இருப்பதாகச் சொன்னார்கள். சென்னையை அடுத்த பெரியபாளையம் (திருவள்ளூர் மாவட்டம்) பகுதியிலிருந்து மேற்கண்ட கூட்டத்திற்காக வந்திருப்பதாகச் சொன்னார்கள்.

நாம் கேட்ட பல கேள்விகளுக்கும் அப்பாவித்தனமாக பல்வேறு பதில்களைச் சொன்னார்கள். அதில் "வரவிருக்கும் தேர்தலுக்குப் பிறகு காங்கிரசை ஆதரிக்க வேண்டிய நிலை வந்தால் தயங்காமல் ஆதரிப்போம்" என்று உங்கள் கட்சியின் தலைவர் சீத்தாராம் யெச்சூரி சொல்லியிருக்கிறாரே அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்று கேட்டோம்.

"இல்லை. அவர் அப்படியெல்லாம் சொல்லியிருக்கவே மாட்டார்" என்று உணர்ச்சிவசப்பட்டு பதிலளித்தனர். "அனைத்துப் பத்திரிக்கையிலும் செய்தியாக வந்திருக்கிறதே, தோழர் நீங்கள் பார்க்கவில்லையா?" என்று நமது தோழர்களும் திருப்பிக் கேட்டனர். உடனே அவர்கள், "இதுபோன்று 'தீக்கதிர்' பத்திரிக்கையில் வந்திருக்கிறதா?" என்றதோடு "எந்த செய்தியாக இருந்தாலும் தீக்கதிரில் வந்தால்தான் நாங்கள் நம்புவோம்" என்றும் அப்பாவித்தனமாகப் பதிலளித்தனர்.
இது ஒருபுறம் இருக்க, கட்சியின் கீழ்மட்ட ஊழியர்கள் மலைபோல் நம்பியிருக்கும் அந்த 'தீக்கதிர்' நாளேட்டின் யோக்கியதையைக் காட்டும் வகையில், அதன் முக்கியப் பொருப்பாளரான குமரேசன் என்பவர் மக்கள் தொலைக்காட்சியின் நேர்காணலின் போது மேற்கண்ட யெச்சூரி சம்பந்தப்பட்ட கேள்விக்கு எப்படி பதில் சொல்லியிருக்கிறார் பாருங்கள்.
கேள்வி மேற்கண்ட சீத்தாராம் யெச்சூரியின் அறிக்கை பற்றியதுதான். "தில்லி அரசியலில் நிலவும் நெருக்கடிகளின் காரணமாக, சும்மா போகிற போக்கில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான கருத்துக்களைச் சொல்லுவார்கள், அதையெல்லாம் பெரிதுபடுத்த் வேண்டியதில்லை. சீத்தாராம் யெச்சூரியின் கருத்து கட்சியின் கருத்து அல்ல" என்று தெளிவாகச் சொன்னார்.

'சும்மா போகிற போக்கில்' கருத்து தெரிவிப்பதற்கு சீத்தாராம் யெச்சூரி ஒன்றும் கட்சியோட கடைமட்ட ஊழியன் இல்லை. அவர்தான் அப்போலி கம்யுனிச கட்சியின் மூளையாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர். சிபிஎம் கட்சியின் அரசியல் 'தரகு'ப் பாரம்பர்யத்தை கண்ணும் கருத்துமாகப் போற்றிப் பாதுகாத்துக் கொண்டிருப்பவரும் அவரே. இப்படியிருக்கையில் யெச்சூரியின் கருத்தை கட்சியின் கருத்தாகக் கருதவேண்டியதில்லை என்று குமரேசன் சொல்வது போலி கம்யூனிஸ்டுகளுக்கே உரிய பித்தலாட்டப் போக்கு.

அப்பாவி ஊழியர்கள் மலைபோல நம்பிக் கொண்டிருக்கும், அக்கட்சியின் அதிகாரப் பூர்வ பத்திரிக்கையான தீக்கதிர், சீத்தாராம் யெச்சூரியின் அறிக்கைகளை மாற்றித் திரித்துக் கூறுவது புதியவிசயமல்ல. ஏற்கெனவே, காஞ்சிக் கிரிமினல் ஜெயேந்திரன் கைது செய்யப் பட்டபோது, அக்கைது நடவடிக்கையைக் கண்டித்து ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு நேர்காணல் அளித்தார் இதே யெச்சூரி பகவான். அது தினமணி, இந்து உள்ளிட்ட அனைத்து பத்திரிக்கைகளிலும் செய்தியாக வந்தது. ஆனால், இவர்களுடைய தீக்கதிர் நாளேடு சிறிதும் கூசாமல் யெச்சூரி அவ்வாறு சொல்லவேயில்லை என்று அப்போதும் எழுதியது அனைவருக்கும் நினைவிருக்கலாம். இதில் கொடுமை என்னவென்றால் மேற்கண்ட தினமணி, இந்து நாளேடுகள் சிபிஎம் கட்சியின் ஆதரவுப் பத்திரிக்கைகள். அப்பத்திரிக்கையின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் அக்கட்சியிலும் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

நந்திகிரமம் உள்ளிட்ட போராட்டங்களில் அம்பலப்பட்டபோது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு முறையாக பதிலளிக்கத் திராணியற்ற போலிகள், அவற்றை "ஊடகங்களின் சதி" என்று கூசாமல் சொல்லிக் கொண்டனர். வெற்று அவதூறுகளும் போலிப்புலம்பல்களும் மட்டும் கொண்டிருக்கும் இவர்களது ஏடுகளுக்கும் மற்ற பத்திரிக்கைகளுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

Thursday, July 17, 2008

காங்கிரசு கட்சியின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாரம்பர்யம் என்னாயிற்று???? CPI என்கிற போலிகம்யூனிச கட்சியின் தேசியச் செயலாளர் டி,ராஜா கேள்வி!!!!!!


'காங்கிரசு கட்சியின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாரம்பர்யம்' என்னாயிற்று???? CPI என்கிற போலிகம்யூனிச கட்சியின் தேசியச் செயலாளர் டி,ராஜா கேள்வி!!!!!!

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் ஆரம்பிக்கப்பட்ட காங்கிரசு கட்சியை, வெளையர்கள் உறுப்பினராக இருந்த அக்கட்சியை ‘ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாரம்பர்யம்’ மிக்க கட்சி என்று போலிகள் சொல்வது ஏன்? அதுவும் காங்கிரசை எதிர்த்து நடந்த பொதுக்கூட்டத்திலேயே இப்படிப்பட்ட காங்கிரசு ஆதரவுக் கருத்துக்களைப் பேசுவதற்குக் காரணம் என்ன?

வெள்ளை ஏகாதிபத்தியத்துக்கு எதிராக நடைபெற்ற தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்காக, அவர்களுக்கு ஒரு போலியான தலைமையை காங்கிரசு கட்சி எனும் பெயரில் தனது கைக்கூலிகளைக் கொண்டு உருவாக்கியது பிரிட்டிஷ் காலணிய அரசு. காங்கிரசும் போராடுகின்ற மக்களுக்குத் தலைமைதாங்குவதாகச் சொல்லிக் கொண்டு அப்போராட்டங்களைச் செயலிழக்கச் செய்தது. இது அக்கட்சிக்காரனுக்கே தெரிந்த விசயம். அப்படியிருக்கையில் இவர்கள் இவ்வாறு திரித்துப் பேசவேண்டிய அவசியம் என்ன வந்தது?

ஏகாதிபத்திய எதிர்ப்புச் சிங்கம் தியாகத் தோழன் பகத்சிங் தூக்கிலிடப்படுவதற்குத் துணைநின்ற துரோகி காந்தியும் அவர் தலைமையிலான காங்கிரசையும், ஏகாதிபத்திய எதிர்ப்பளர்களாகச் சித்தரிக்க வேண்டிய நிர்பந்தம் இவர்களுக்கு வரக் காரணம் என்ன?

ஒருவேளை ஜவஹர்லால் நேரு, மவுண்ட்பேட்டன் பிரபுவின் மனைவியோடு அந்தரங்க உறவு கொண்டிந்தாரே அதைத்தான் போலிகம்யுனிசதலைவர் டி.ராஜா ஏகாதிபத்திய எதிர்ப்பு என்று சொல்லியிருப்பாரோ?!

ஏகாதிபத்திய கைக்கூலித்தனம் என்பதில் ‘மகாத்மா’காந்திக்கும் சோனியாகாந்திக்கும் உள்ள வேற்றுமைதான் என்ன?

காங்கிரசையும் காந்தியையும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களாக வருணித்து இவர்கள் ஏன் இவ்வாறு போலிச்சித்திரம் தீட்டவேண்டும்? காரணம் இருக்கின்றது.

அப்படிப் பேசினால்தானே விடுதலைப் போராட்ட காலத்தில் காங்கிரசின் காலடியில் இவர்கள் புரட்சி செய்ததன் நியாயம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளும்படியான தோற்றத்தை உருவாக்க முடியும். துரோகி காந்தியை இன்றுவரை இவர்கள் ஆதரிப்பதற்கான காரணமும் புனிதப்படும். அதற்காகத்தான் காங்கிரசு கட்சியை இவர்கள் இவ்வாறு புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

அனுசக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பதாக உதார் விட்டுக் கொண்டு இதுநாள் வரை காங்கிரசை மிரட்டி வந்த இவர்கள், காங்கிரசு கட்சி மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொள்வதற்கான கால அவகாசத்தை அள்ளி வழங்கியது ஏன்? மாற்று ஏற்பாடுகளுடன் ஆட்சி தொடர்வதற்கான ஏற்பாடுகளையும் அனு ஒப்பந்தம் நிறைவேறும் வகையிலுமான ஒரு சூழலைத் திட்ட மிட்டே உருவாக்கிவிட்டு, காங்கிரசு ஆட்சிக்கு ஆதரவு வாபஸ் என்று முழங்குவது போன்ற போலிகம்யூனிஸ்டுகளின் கீழ்த்தரமான அரசியலை என்னவென்பது?!

‘மழை விட்டாலும் தூவானம் விடாது என்பார்கள்’. அதுபோலத்தான் அனுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து ஆட்சியைக் கலைத்தபோதிலும் “வரவிருக்கும் தேர்தல் முடிவுகளுக்கு ஏற்ப காங்கிரசுக்கு ஆதரவளிக்கும் நிலை வந்தால் நிச்சயம் ஆதரிப்போம்” என்கிறார் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சீத்தாராம் யெச்சூரி.

இதுபற்றிய சில ருசிகர தகவல்களை தொடர்ந்து அடுத்த பதிவில் பார்ப்போம்.

தோழமையுள்ள,
ஏகலைவன்.

Saturday, June 28, 2008

சி.பி.எம். கட்சியின் 'தாரக மந்திரம்'...........





சிபிஎம் கட்சியைச் சார்ந்த ஒரு முதிய தோழரிடம் தற்செயலாக அக்கட்சியின் போலி அரசியல் குறித்து நாம் பேச நேரிட்டது. நந்திகிராமத்து அயோக்கியத்தனங்கள் முதலாக விழுப்புரம், காரப்பட்டு சம்பவம் வரை மற்றும் மத்திய காங்கிரசு கொள்ளைக் கும்பலுடன் சேர்ந்து அக்கட்சி செய்துவரும் மோசடிகளையும் அத்தனை கேவலங்களையும் கடுமையாக நாம் சாடியபோது, மறுபேச்சில்லாமல் ஆமோதித்தார். இடையிடையே "என்ன செய்வது தோழர்" என்றும் நொந்து கொண்டார்.

"இத்தனை கேவலங்களையும் சகித்துக் கொண்டு நீங்கள் ஏன் தோழரே அக்கட்சியில் உறுப்பினராகத் தொடருகிறீர்கள்?" என்று கேட்டோம். அதற்கு அவர் சாதாரணமாகச் சொன்ன பதில்தான் அக்கட்சியின் தாரக மந்திரமாக உள்ளதாக அவரே சொன்னார். அது......

"முட்டாள் தனமா வந்துட்டோம்!
புத்திசாலித்தனமா பொழைச்சிக்குவோம்!!" என்பதுதான்.

இதன்படி பார்த்தால் அக்கட்சியின் மாநிலத் தலைவர்கள் 'பெரிய புத்திசாலிகள்'தான்; அவர்களைவிட அப்போலிக் கும்பலின் 'பொலிட்பீரோ' என்ற அரசியல் தலைமைக் குழு தலைவர்களோ மாபெரும் புத்திசாலிகள்தான் போலும். இவர்களெல்லாம் கட்சிக்குள் வரும்போது முட்டாள்தனமாக வந்தவர்கள் போல் தெரியவில்லை, அவர்கள் புத்திசாலித்தனமாகவே வந்து புத்திசாலிகளாகவே பிழைத்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

இதைத்தான் 'அவங்க' பாரதி "நாயும் பிழைக்கும் இப்பிழைப்பு" என்று பாடினாரோ???!!!!

Sunday, June 15, 2008

எண்ணெய் விலை உயர்வுக்கு எதிராக ஓட்டுப் பொறுக்கிகள் நடத்தும் போராட்டம் அனைத்தும் நாடகமே - புரட்சிகர அமைப்புகள் நடத்தும் தெருமுனைக் கூட்டங்கள்

எண்ணெய் விலை உயர்வுக்கு எதிராக ஓட்டுப் பொறுக்கிகள் நடத்தும் போராட்டம் அனைத்தும் நாடகமே - புரட்சிகர அமைப்புகள் நடத்தும் தெருமுனைக் கூட்டங்கள்
























'கெடக்கெறதெல்லாம் கெடக்கட்டும் கெழவனைத் தூக்கி மடியில வச்சிக்க'ன்னு ஒரு பேச்சு உண்டு நம்மூர்களில.

இப்ப பெட்ரோலியப் பொருட்கள் முதல் உணவுதானியங்கள் வரை விலையேற்றம். ஒரு வேளை மட்டுமே சாப்பிட்டுக் கொண்டிருந்த பல கோடி மக்களை, அந்த ஒருவேளைச் சோற்றையும் மறுத்து நெறிக்கிறது இந்த உலகமயமும் அதன் பழைய ப்ராடக்ட்டான விலைவாசி உயர்வும். சாதாரண உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்க்கை இப்படி சீரழிந்து நிற்கிறது.

ஆனால், பாஜக, போலி கம்யூனிஸ்டுகள் முதலான அத்தனை ஓட்டுப் பொறுக்கிகளும் "நாங்க வந்தாத் திருந்திடும்"ன்னு தெருவுக்குத் தெரு கொடியப் புடிச்சிக்கிட்டு கூவிக்கிட்டு நிற்கிறார்கள்.

விலை வாசி உயர்வு பற்றி மற்ற கட்சிக்காரன் பேசுவதெல்லாம் கெடக்கட்டும். நம்ம காமரேடு கம்பெனி இருக்குதே, அதான் நம்ம சிபிஎம் இருக்குதே அவியளக் கேட்டா என்ன சொல்றாங்க தெரியுமா? "இடது சாரிகளின் அறிவுரைகளை மன்மோகன்சிங்கும் சிதம்பரமும் காதில் போட்டுக் கொள்ள வில்லை. அதனால் தான் இவ்வளவு பிரச்சினையும்" என்று அலுத்துக் கொள்கிறார்கள்.

ம்க்ம், இவனுகளப் பத்தி எழுதினா பதில் சொல்ல ஒருத்தனும் வரப் போவதில்ல. இவனுக நம்மளப்பத்தி எழுதினா, நம்மள பதில் சொல்ல அனுமதிக்கறதில்ல. இப்படிப்பட்ட 'ஜனநாயக'த்த தனக்குள் கொண்டிருக்கும் இவர்களைப் பற்றி எழுதிக் கிழித்தது போதும் என்றுதான் இருந்தேன். ஆனா திரும்புற பக்கமெல்லாம் இவனுக ஓலம் தான் பெரும் ஓலமா இருக்குது. தொலைக்காட்சியைத் தொறந்தா டி.ராஜாவும் யெச்சூரி அய்யாவும் கொந்தளிக்கிறாங்க.

விலைவாசி உயர்வப் பத்தி இவங்க என்ன சொல்றாங்கன்னு கவனிச்சாத்தான் தெரியுது மேற்சொன்ன காம்ரேடுகளின் வசனத்த அப்படியே ஆங்கிலத்தில் சொல்லிக்கிட்டு இருக்கிறாங்க இந்த மாபெரும்!!! கம்யூனிச!!!த் தலைவர்கள்.

இது என்னாடா இது ஐபிஎல் சூதாட்டத்த விட கேவலமா இருக்குதேன்னு தோனுச்சி. அந்தக் கோவத்துலேயே இணையத்துல வந்து அமர்ந்தேன். தோழர் ஸ்பார்ட்டகஸ் அவர்கள் சில அறிவிப்புகளை போஸ்டருடன் வெளியிட்டிருந்தார். அதுதான் மேற்கண்ட இரண்டு போஸ்டர்களும்.

இதனைக் குறித்துக் கொண்டு நண்பர்கள் அனைவரும் அவரவர் பகுதிக்கு அருகில் நடக்கவிருக்கும் தெருமுனைக் கூட்டங்களுக்குச் செல்லவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தோழமையுடன்,

ஏகலைவன்.