'ஒரு பொய்யை மறைக்க முயன்று ஒன்பதாயிரம் பொய்சொன்னானாம்....' என்பது நமது முன்னோர்கள் உண்மையாக இருக்க வலியுறுத்தி நமக்கு சொல்லுகிற முதுமொழியாகும்.
இந்து மதம் என்கிற 'பொய்களின் வார்ப்பை' காப்பாற்றுகிறேன் பேர்வழி என்று கிளம்பி வருகிற, இந்த பார்ப்பன பயங்கரவாதிகள் அனைவருமே சிறிதும் கூச்சமில்லாமல் பகிரங்கமாக உரக்கச் சொல்லிவருகிற பொய்கள் ஏராளம். "ராம ஜென்ம பூமி, ராமர் பாலம், தென்காசி ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பு" என்பது முதல் தற்போதைய சிதம்பரம் போராட்டம் வரை இதன் புரட்டுக்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன.
இவர்களின் இத்தகைய பிதற்றல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பிக்கும் மாபெரும் பொறுப்பை ஏற்று செயல்படும் பத்திரிக்கை பட்டியலும் மிகவும் நீளமானது 'தினமலர்,தினமணி,இந்து(ஆங்கிலம்) முதற்கொண்டு, பார்ப்பன பயங்கரவாதத்தின் தமிழகத் தலைவர் 'சோ' நடத்தும் துக்ளக், இன்னும் இதன் நீட்சி தொடர்கிறது. மேலும் பார்ப்பன சங்கத்தின் மாநில பொறுபாளர்களும், 'பிரமிட்'நடராசன் என்கிற ஆர்.எஸ்.எஸ்.ன் புரவலரும், பங்குதாரராகவும் நிர்வாகிகளாகவும் இருந்து பார்ப்பனிய புரட்டுக்களை சினிமாமூலம் பரப்புவதற்கு 'பிரமிட் சாய்மிரா' என்ற பகாசூர சினிமா நிறுவனத்தையும் நடத்திவருகிறார்கள். அதேபோல 'ஜெயா மாமி'யின் ஜெயா டி.வி. உள்பட, பெருவாரியான எழுத்து மற்றும் காட்சி ஊடகங்கள் தமது கையிலிருப்பதானால் எதையும் செய்யலாம், சொல்லலாம் என்று அன்றாடம் பார்ப்பன பயங்கரவாதிகள் கொக்கரிப்பது ஒன்றும் ஆச்சர்யமான விசயமல்ல.
ஆனால் இவற்றிலிருந்தெல்லாம் நமது தமிழ் மக்களை மீட்டெடுக்கும் வகையில் ம.க.இ.க., மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் பிரச்சாரங்கள் மக்களை சென்றடைகிறது என்றால் அது மிகவும் அசாத்தியமானது. தோழர்களின் கடும் உழைப்பால் அது சாத்தியப்பட்டிருக்கிறது.
அதேவரிசையில் தற்போதைய, சிதம்பரதில் பார்பனியத்திற்கெதிரான நமது போராட்டம், ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக மாறியிருக்கிறது. மேற்கண்ட, நம்முடைய தமிழகத்தின் சாபக்கேடாக நீடித்துவருகிற பார்ப்பனக் கூட்டம் இந்நிகழ்வை பொறுக்க முடியாமல் 'குய்யோ முறையோ'வென கூப்பாடு போட்டு வருகின்றன. ஊடக வெளியில் எங்கு நோக்கிலும் அவர்களுடைய ஓலம் தான் எதிரொலித்த வண்ணமிருக்கின்றன.
"தீட்சிதர்கள் எல்லோரும் தமிழர்களின் 'ஆன்மீக அடையாளங்கள்', அவர்கள் ஒருபோதும் தமிழுக்கு எதிரானவர்கள் அல்ல, இது பார்பனர்களை சமூகத்திலிருந்து பிரித்துவைக்கும் சூழ்ச்சி, இதனை ஆன்மீகவாதிகள் முறியடிக்கவேண்டும்" இது 'பார்ப்பன பொறுக்கி 'அர்ஜுன் சம்பத் என்கிற இந்து மக்கள் கட்சிக் காரன் தினமணியில் எழுதியது.
"புனிதமான சிதம்பரம் நடராசர் கோயில் 'சிவப்பு சட்டை'களால் கறைபடுத்தப்பட்டிருக்கிறது, தினந்தோறும் தமிழ் வழிபாடு நடந்துதான் வருகிறது அதனை நாத்திகவாதிகளான கம்யூனிஸ்டுகள் தான் தவறாக திரித்துக் கூறுகிறார்கள். அரசாங்கமும் கம்யூனிஸ்டுகளும் உடனடியாக கோயிலைவிட்டு வெளியேறாவிட்டால் எங்களுடைய பாரதிய ஜனதாகட்சி போராட்டத்தில் குதிக்கும்" இது 'எல கணேசன்', வின் தொலைக்காட்சியின் 'நீதியின் குரல்' நிகழ்ச்சிக்காக தொலைபேசிவாயிலாக அளித்த பேட்டி.
"அரசு தரப்பிலும் மற்ற பிற அரசியல் கட்சிகளும் கேட்பது 'தமிழில் பாடத் தடையா? தமிழ்நாட்டிலா?' என்பது தான். தீக்ஷிதர்கள் தேவாரம் பாடிவழிபடுகிறார்களே? அது தமிழ் இல்லையா? சொல்லப்போனால், போராட்டம் நடத்திய கோஷ்டியில் சிலர்தான் சரியாகத் தேவாரம் பாட முடியாமல், திணறியிருக்கிறார்கள். இந்தத் திணறல்தான், தமிழா?". "ஆட்சிமாறியதன் விளைவோ என்னவோ 2004ல் அனுமதி மறுத்த அதே அறநிலையத் துறை, இந்தமுறை ஆறுமுகசாமிக்கு ஆதரவாக ஆணைவழங்கியிருக்கிறது. அரசியல்வாதிகளும் சரி, மீடியாவும் சரி, ஏதோ தீக்ஷிதர்கள் எல்லாம் த்மிழுக்கு எதிராக இருப்பவர்கள் போன்ற ஒரு தோற்றத்தை திட்டமிட்டோ அல்லது விவரம் தெரியாமலோ பரப்பிவருகிறார்கள்" இது பார்பன சகுனி 'சோ' துக்ளக்கில் வாந்தியெடுத்திருப்பது.
இப்படியாக இவர்களது கூப்பாடு அன்றாடம் தொடர்கிறது.
தீட்சிதர்களோ, நாங்களோ தமிழுக்கு எதிரியல்ல, மேலும் நாங்களும் கூட தமிழர்கள் தான் என்று கூறும் இந்த பூணூல் அம்பிகள் ஆறுமுகசாமிக்கு ஆதரவாக (அதாவது தமிழுக்கு ஆதரவாக) தீர்ப்பு சொன்ன அறநிலையத்துறையையும் அரசையும் கடுமையாக விமர்சிக்கிறார்கள். இவர்கள் தமிழுக்கு எதிரியல்ல என்றால் அதை ஆதரித்து சொல்லப்பட்ட தீர்ப்பைக்கண்டு குமுறுவது ஏன்?
போலீசு அதிகாரிகள் இந்த தீட்சித ரவுடிகளிடம் அடியும் உதையும் வாங்கி கடந்த 2 ஆம் தேதி ஆறுமுகசாமியை மேடையேற்றியதும், 'கடவுளுக்கு தம்முடைய நாராசமான ஊளைச்சத்தம் கேட்டாலும் கேட்கலாம் தமிழ் கேட்டுவிடக்கூடாது' என்ற கேவலத்தை, இந்த உலகத்திலுள்ள (இந்துமத) ஆன்மீகவாதிகளுக்கெல்லாம் செய்து காட்டினார்களே அது ஏன்? இதற்கு அந்த 'சோ' பதில் சொல்வானா?
இந்த 'தமிழர்களின் ஆன்மீக அடையாளமாக' விளங்கும் தீட்சிதப் பொறுக்கிகள் அந்த தள்ளாத பெரியவரைத் தாக்கி கண்ணாடியையும் உடைத்தார்களே இது தான் அவர்களின் நிஜ அடையாளமா? மேற்படி களேபரங்களின் முடிவில், எல்லோரும் கலைந்து சென்றதும் ஆகமமுறைப்படி தீட்டுகழிக்கப்பட்டதே அது ஏன்? இது 'நாத்திகவாதிகளின் பார்பனர்களை தமிழர்களிடம் பிரித்தாளும் சூழ்ச்சி'யின் வெளிப்பாடா? அல்லது தமிழர்களைத் தீண்டக்கூடாதவர்களாகக் காட்டும் பார்ப்பன கொழுப்பா? இதற்கு அந்த பார்பன அடிமை அர்ஜுன் சம்பத் பதில் சொல்வானா?
ஒருபோதும் நமக்கு பதிலலிக்கமாட்டார்கள். நமகென்ன அவர்களைப்போல ஊடகபலமா இருக்கிறது.
இப்போது அவர்களுடைய இலக்கெல்லாம் தங்களுடைய இருத்தலை இந்த ஏமாளி ஆன்மீகவாதிகளிடம் தக்கவைத்துக் கொள்வதுதான். அதன் மூலம் இந்து மதம் என்ற போர்வைக்குள்ளே அவர்களை அடைத்து வைப்பது தான். அவர்களது பார்ப்பனக் குடுமி அதனடியிலேதான் மறைத்துவைக்கப் பட்டிருக்கிறது, அதையும்தான் நமது தோழர்கள் இழுத்துவந்து முச்சந்தியில் நிறுத்திவிட்டார்கள். அது தீட்சிதக்குடுமியாக மட்டுமிருந்தால் கூட விட்டிருப்பார்கள், ஆர்.எஸ்.எஸ்., பா.ச.க.,கும்பலின் குடுமியும் அது தான் என்பதால் தான் இவ்வளவு கூப்பாடும். அது மக்கள் எழுச்சியில் மங்கிப் போகும்.
பெரியாருடைய காலம் இன்று நக்சல்பாரிகளால் மீட்டெடுக்கப் பட்டிருக்கிறது. பார்ப்பனிய அடையாளம் இங்கே மண்ணோடு மண்ணாக புதைக்கப்படும் வரை, தீண்டாமையின் சுவடு அழிக்கப்படும் வரை, இது தொடரும்.
இந்துத்துவ ஒழிப்புக்கான சோதனைச் சாலை இது! புரட்சி ஓங்கட்டும்!!.
ஏகலைவன்.
(ஆறுமுகசாமி சிற்றம்பல மேடையில் பாடியதைக் கண்டித்தும் எமது தோழர்கள் அவருக்கு பாதுகாப்பாக சென்றதைக் கண்டித்தும் 'அர்ஜுன் சம்பத்'(தலைவர். இந்து மக்கள் கட்சி) என்ற இந்து வெறி பாசிஸ்ட் தினமணி நாளேட்டில் எழுதிய 'ஆன்மீகத்துக்கு எதிரான சவால்' என்ற கட்டுரைக்கும் அதனைத் தொடர்ந்து பல பார்ப்பன பத்திரிக்கைகளின் அவதூறுகளுக்கும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் எனது சிறு முயற்சி.)
Sunday, March 16, 2008
ஆன்மீகத்துக்கு எதிரான சவால் இல்லடா, தீண்டாமைக்கு எதிரான சவால்:
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment