Showing posts with label பா.ஜ.க.. Show all posts
Showing posts with label பா.ஜ.க.. Show all posts

Saturday, June 14, 2008

இந்துமதத்திலிருந்து ஒருவர் வேற்று மதத்திற்கு மாறினாலும் நமது எதிரிகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடியிருக்கிறது என்றுதான் அர்த்தம் - எல. கணேசன் பேச்சு!!!!

"இந்து மதத்திற்கெதிராக ஒரேயொருவர் வேற்று மதத்திற்கு மாறினாலும்; நமது எதிரிகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடுவதாகவே அர்த்தமாகிறது" என்றான் ஒரு ஆர்.எஸ்.எஸ்., பார்ப்பன பயங்கரவாதி எல. கணேசன்.

இன்று (14/06/2008) மதியம் தமிழன் தொலைக்காட்சியில் தான் மேற்கண்ட நேர்கானல் ஒளிபரப்பப்பட்டது.

மேற்கண்ட இவ்வரிகள் வேறொருவர் சொன்ன புகழ்மிக்க வாசகத்தினை அப்படியே ஒத்திருப்பது இதனைப் படிக்கின்ற அனைவருக்குமே தெரிந்துவிடும். இருப்பினும் நான் சொல்கிறேன்....

"நீ எங்களுக்கு ஆதரவாக இல்லையென்றால் எதிரிகளுக்கு ஆதரவாக இருப்பதாகத்தான் அர்த்தம்" என்கிற இந்த வாசகம் நமது அமெரிக்க பாசிச பயங்கரவாதி ஜார்ஜ்.W. புஷ்ஷினுடையது.

தனது ஆசானாக ஹிட்லரையும் தனது சின்னமாக ஹிட்லரின் 'ஸ்வஸ்திக்' சின்னத்தையும் பயன்படுத்தும் ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பு, ஒரு மக்கள் விரோத பயங்கரவாத அமைப்பு என்பதற்கு இதுவே முழுமையான உதாரணமாக இருக்கிறது. எல. கணேசனின் மேற்கண்ட பேச்சிலிருந்து நமக்குத் தெரிவது என்னவென்றால், கடந்தகால ஹிட்லரைவிட மிகமிகப் பயங்கரமான நிகழ்கால சர்வதேச, விரோதி ஜார்ஜ் புஷ் ஐ தமது குருவாக அவர்கள் வரித்திருக்கிறார்கள் என்பதுதான்.

இந்த நேர்காணலினூடாக மேலும் பல்வேறு சமூக விரோத பேச்சுக்களையும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவுக் கருத்துக்களையும் அள்ளிவிடத் தவறவில்லை அந்தப் பார்ப்பன பயங்கரவாதி.

"ஆர்.எஸ்.எஸ். என்றால் கலவரக்காரர்கள் என்று சித்தரிக்கப்படுகிறது. ஆனால் சமூகத்தில் நடக்கும் ஒழுக்கங்கெட்ட செயல்களைத் தட்டிக் கேட்க ஆர்.எஸ்.எஸ்.ஐத்தவிர வேறொருவரும் இல்லை. அப்படிப்பட்ட ஒரு அமைப்பு வரும்போது தொடக்கத்தில் சற்று வன்முறையினையும் கையிலெடுக்கத்தான் வேண்டியுள்ளது. ஆனால் அதன் பிறகு ஒரு நிரந்தரமான அமைதியினை அது அப்பகுதிக்குத் தருகிறது என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.சின் தனிச்சிறப்பு" என்று சிலாகித்தார்.

அவருக்கு எதிரில் ஒரு எருமைச் சாணியைப் போன்று ஒருத்தன் உட்கார்ந்து கொண்டு பேந்த பேந்த விழித்துக் கொண்டு இந்நேர்கானலை நடத்திக் கொண்டிருந்தான். எதிர்கேள்விக்கான பல்வேறு விசயங்களை எல. கணேசனே அடியெடுத்துக் கொடுத்தபோதும், எந்த சொரனையுமற்று 'நம்ம கோமாளி சந்திப்பு' போன்று உட்கார்ந்திருந்தது அந்த எருமைச்சாணி.

உங்க ஆர்.எஸ்.எஸ். தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக என்னத்தைக் கிழித்தது என்று கேட்டிருக்கலாம்.

அல்லது

ஆர்.எஸ்.எஸ். அந்த பகுதிக்கு நிரந்தரமான அமைதியினை வழங்குவதாக அவன் குறிப்பிட்டதற்கு, "நிரந்தர அமைதியென்றால் குஜராத்தைப் போன்றதொரு அமைதியா" என்றுகூட கேட்டிருக்கலாம்.

இப்படி அவனைக் கேள்விமேல் கேள்வியெழுப்பி வேட்டியைக் கிழித்து அனுப்பியிருக்கலாம். அவன் நம் கையில் சிக்கியிருந்தால். ம்... என்ன செய்வது.

Tuesday, June 3, 2008

ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யின் புதிய கொள்கை பர்ர்ர்ரப்ப்ப்புச் செயலாளர் - ஞாநி






ராமன் கோயில் முதல் ராமர் பாலம் வரை தனது எல்லா அஸ்திரங்களும் தேர்தல் களத்தில் புஸ்வானமாகிப் போனதால், அந்தந்த மாநிலங்களுக்குள் இருக்கும் ஏதோ ஒரு பிரச்சினையை கையிலெடுத்துக் கொண்டு கூப்பாடு போடுவதன் மூலமாகமட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை பாஜக மதவெறிக்கும்பல் ஒரு திட்டமாக வகுத்து, அதனை செயலாற்றி, வெற்றியும் பெற்று வருகிறது. அதன் சமீபத்திய உதாரணம் கர்நாடகத் தேர்தல் முடிவுகள்.


இராஜஸ்தானில் தமது கட்சி வெற்றி பெற்றால் குஜ்ஜார்களுக்கு பழங்குடியினர் பட்டியலில் இடமளிப்போம் என்று வாக்குறுதியளித்து, அவர்களின் பெருவாரியான வாக்குகளைப் பொறுக்கி வாயில் போட்டுக் கொண்டு ராஜஸ்தானில் ஆட்சியைப் பிடித்தது இக்கும்பல். குஜராத்தில் தனது அடிப்படையான இந்துத்துவ வெறியின் மூலம் வெற்றி பெற்றது. இப்போது கர்நாடம்.

கர்நாடகத் தேர்தல் முடிவுகள் தண்ணீர்களின் அரசியலால் விளைந்த விளைவே என்பது அனைவருக்கும் தெரியும். "அது என்ன தண்ணீர்கள்!" என்று யாரும் ஆச்சர்யப்படவேண்டாம். இத்தேர்தல் வெற்றிக்கு உதவியது இருவேறு மாதிரியான தண்ணீர் என்பதால் தான் இவ்வாறு குறிப்பிடுகிறேன்.

ஒன்று தேர்தல் அறிவிப்பு தொடங்குவதற்கு சற்று முன்பு பயன்பட்ட ஒகேனேக்கல் 'குடிநீர்', மற்றொன்று தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு சற்று முன் பயன்படுத்தப்பட்ட 'குடி(யைக் கெடுக்கும்) நீர்'. முதல் நீரின் பலன் தேர்தலில் வாக்குகளாகக் குவிந்தது, மற்றொன்று அவ்வாக்குகளை அள்ளித்தந்துவிட்டு பிணங்களாகச் சரிந்தது.


தேர்தல் நடந்த மறுநாள், "எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாகத் தேர்தல் முடிந்தது" என்று அறிவித்தார் அம்மாநிலத் தேர்தல் ஆணையர். ஆனாலும் 200 உடல்கள் சவங்களாக ஆக்கப்பட்ட அக்கிரமம் எவ்வாறு நிகழ்ந்தது?! அதை நிகழ்த்தியது ஆயுதங்களோ கலவரங்களோ அல்ல, மேற்சொன்ன குடி(யைக் கெடுக்கும்) நீர் தான்.

ஓட்டுக்காக வாங்கி ஊற்றப்பட்ட சாராயம் மிச்சமின்றித் தீர்ந்து போனதால், விஷச்சாராயத்தை விற்று காசாக்கியது கள்ளச் சாராயக் கும்பல், அதையும் ஓட்டாக்கியது மேற்கண்ட பதவி வெறிபிடித்த கும்பல்.

முடிவு தமிழகக் கர்நாடகத்தைச் சார்ந்த இருநூறு பேர் ஒரே இரவில் பிணமானார்கள். மேலும் பலநூறு பேர் கண் பார்வை இழந்துவிட்டார்கள். இதுதான் இந்த வெற்றியின் இரகசியம்.

ஓட்டுப் பொறுக்க, தமிழ்மக்கள் தங்கள் (ஒகேனேக்கல்) சொந்த மண்ணிலிருந்து எடுத்துக் கொள்ளவிருந்த குடிநீரைக் கூட பறிக்க நினைக்கும் இக்கும்பல், கர்நாடக வெற்றியைத் தங்களது 'தென்னிந்தியாவுக்கான நுழைவுவாயில்' என்று சொல்லிப் புளகாங்கிதமடைகின்றன. ஒருவேளை இவர்களது தென்னிந்தியாவில் தமிழகம் இருக்கிறதா, இல்லையா தெரியவில்லை. தமிழகமும் இருக்குமானால் இந்த பயங்கரவாதக் கும்பல், தமிழகத்தில் ஓட்டுப் பொறுக்க வேறெந்த சதிவேலையில் ஈடுபடுமோ தெரியவில்லை.



"ஒகேனேக்கல் திட்டம் நிறைவேறக் கூடாது என்பது எமது கர்நாடக பாஜகவின் நிலைப்பாடு, அதேபோல், இப்பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையினை விட்டுக் கொடுக்கக்கூடாது என்பது தமிழக பாஜகவின் நிலைப்பாடு" என்று குடிபோதையில் உளறிவிட்டுப் போயிருக்கிறார் நம்ம 'வெங்காய'நாயுடு.

கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிக்கத் தமிழ் மக்களுக்கு குடிநீரைக் கூட மறுக்கும் இக்கும்பல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுடைய மென்னியைப் பிடிக்கும் இந்த கேடுகெட்ட கூட்டம், நாங்கள் தென்னிந்தியாவில் நுழைந்துவிட்டோம் என்று மார்தட்டிக் கொள்கிறது என்றால், இது தென்னிந்தியாவின் ஒரு அங்கமான தமிழக மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்.

இதே கருத்தைத்தான் இங்குள்ள 'எச்ச'ராஜா முதல் 'எல'கணேசன் வரை, இன்னும் 'சோ'மாறி போன்றவர்களும் இங்கே தொடர்ந்து வாந்தியெடுக்க இருக்கின்றார்கள்.


இவர்களின் கூப்பாடெல்லாம் ஒருபுறமிருக்க, புதியதாக ஒரு கொ.ப.சே. கிளம்பியிருக்கிறார். அவர்தான் நம்ம 'தீம்தரிகிட'ஞாநி.


"கருனாநிதிக்கு வயசாகிவிட்டது அவருக்கு ஏன் இந்த வீன் வேலை" என்ற தனது ராமர்பால ஆதரவுக் கருத்தின் மூலமாக, நீண்ட நாட்களாக தமது முற்போக்கு முகமூடிக்குள் மறைத்து வைத்திருந்த பூநூலை சற்று வெளிக்காட்டியவர்தான் இந்த ஞாநி. அதற்கு எதிர்விணையாகப் போகிற வருகிற இடங்களிலெல்லாம் எமது மகஇக தோழர்களிடம் செருப்படியும் பட்டார்.


இப்படித்தான் சென்ற ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் தென்பட்ட ஞாநியை வளைத்துக் கொண்ட எமது தோழர்கள் மூன்று பேர் கேட்ட கேள்வியில் மூத்திரம் முட்ட விலகி ஓடினார். "கருனாநிதியைப் பற்றியெல்லாம் எழுத முடிகிற உன்னால், குஜாராத்தில் இந்துவெறிக் கும்பல் நடத்திய அக்கிரமங்களைப் பற்றி ஏன் எழுதமுடியவில்லை" என்று கேள்வி கேட்டனர் எமது அந்த தோழர்கள். கருனாநிதியைப் பற்றிய எமது விமர்சனங்களெல்லாம் ஒருபுறம் இருக்க, இந்து வெறியை தனது முற்போக்குத் திரைக்குள் மூடிமறைத்து வைத்துக் கொண்டு திரியும் இவனுக்கு கருனாநிதியை விமர்சிக்க என்ன யோக்கியதை இருக்கிறது என்பதுதான் எமது எதிர்விணைக்குக் காரணம்.

தான் எதை எழுதினாலும் அதை அப்படியே ஒரு எழுத்து மாறாமல் பிரசுரிக்க குமுதம், ஆனந்தவிகடன் போன்ற கழிசடைப் பத்திரிக்கைகள் இருப்பதால் எதையும் எழுதலாம், யாரும் நம்மை நெருங்கிக் கேள்வி கேட்க முடியாது என்கிற மிதப்பில் இருந்த இந்த பேடிக்கு எமது தோழர்களின் கேள்விகளும் கண்டனங்களும் புதுவிதமான அதிர்ச்சியைத்தான் தோற்றுவித்தன.


இது ஒருபுறம் இருக்கட்டும். சென்ற ஞாயிறு அன்று (01/06/08) இரவு 09:30 மணியளவில் ஜெயா டிவியில் (ஜெயாவின் பிய்ந்துபோன செருப்புகளுக்கு பூமாலை போட்டு ஆராதிக்கும் பூசாரி) ரபி பெர்னாட் உடன் நேர்கானல் நிகழ்ச்சியில் உட்கார்ந்திருந்தார் நம்ம ஞாநி. சரி என்னதான் பேசுகிறார் பார்ப்போமே என்று கவனிக்கத் தொடங்கினேன்.


"கருநாடகத் தேர்தல் முடிவு குறித்து உங்களது கருத்து என்ன?" என்பதுதான் கேள்வி.

"கருநாடக மக்கள், குஜராத் மக்களைப் போல் புத்திக் கூர்மையுள்ளவர்கள் என்பதை இத்தேர்தல் முடிவுகளின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள். தமிழகத்தில் சென்ற சட்ட மன்ற தேர்தலில் வலுவான அ.இ.அ.தி.மு.க.வைத் தோற்கடிக்க கருனாநிதி அறிவித்த கலர் டி.வி., ரூபாய்க்கு 2கிலோ அரிசி போன்ற கவர்ச்சிகர சலுகை அறிவிப்புக்கள், சமீபத்தில் நடைபெற்ற குஜராத், கர்நாடக சட்டமன்றத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியால் முன் வைக்கப்பட்டது. ஆனால், இந்த இரு மாநில மக்களும் இச்சலுகை அறிவிப்புகளைப் புறக்கணித்து பாஜகவுக்கு பெருவாரியான வெற்றியினை வழங்கியிருக்கிறார்கள். இது நிச்சயமாகப் பாராட்டத்தக்கது."

"மேலும் கர்நாடகாவில் போட்டியிட்ட சினிமா நடிகர்கள் அனைவரும் தோல்வியுற்றுள்ளனர். எனவே, கர்நாடக மக்கள் சினிமாக் கவர்ச்சி அரசிலையும் புறக்கனித்துள்ளார்கள் என்பதுவும் கூட கூடுதலான சிறப்புதான்."

"இவை எல்லாவற்றையும் விட சிறப்பான விசயம் என்ன வென்றால், கன்னட வெறிபிடித்த வாட்டாள் நாகராஜை டெபாசிட் கூட வாங்கமுடியாமல் மக்கள் புறக்கனித்ததற்குக் காரணம், பாஜகவின் மொழிவெறி எதிர்ப்பு அரசியலுக்குக் கிடைத்த வெற்றிதான் இத் தேர்தல் முடிவுகள்". "இந்த வெற்றியின் எதிரொலி வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் நிச்சயமாக பாஜகவுக்கு ஆதரவாக இருக்கும். இதில் சந்தேகமே இல்லை". என்று புகழாரம் செய்தார்.

உன்மையில் நிகழ்ந்தது என்னவென்று அனைவருக்கும் தெரியும். இந்த முறை வாட்டாள் நாகராஜின் வழக்கமான வேலையை எடியூரப்பாதான் செய்தான். வாட்டாள் நாகராஜ் தேர்தலில் தோற்கடிக்கப் படுவதற்கு முன்பே, கன்னட வெறியினைத் தூண்டுகிற அரசியலில் எடியூரப்பாவினால் தோற்கடிக்கப்பட்டான்.

காலம் காலமாக மதவெறி அரசியல் நடத்திவரும் பாஜக பயங்கரவாதிகளின் அன்றாட அரசியலே இத்தகைய மலிவான வெறிதூண்டும் நடவடிக்கைகள்தான். வாட்டாள் நாகராஜோ தேர்தலுக்காக வெறியினைப் பரப்புபவன். அதனால்தான் தொழில்முறைப் பயங்கரவாதிகளிடம் அவன் தோல்வியுற்றான்.



ஒகேனேக்கல் பிரச்சினையில் வாட்டாள் நாகராஜை முந்திக் கொண்டு தமிழக எல்லையில் அத்துமீறி நுழைந்தவந்தான் எடியூரப்பா. அந்த அக்கிரமத்தில் சம்பாதித்ததுதான் இப்போதைய முதல்வர் பதவி என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் ஞாநியால் மட்டும் எப்படி வெட்கமின்றி இவ்வாறு பேச முடிகிறது? எல்லாம் பூநூல் பாசம்ந்தான், வேறென்ன!


அப்ப இந்த 'முற்போக்கு' வேசம்?!, அதவிட முடியுமா? அதுதானே இவனுங்களோட பரம்பரைக் கவசம். பாரதி முதல் ஞாநிவரை எல்லாப்பயலும் இப்படித்தான் பிழைக்கிறான்.


'நண்டு கொழுத்தால் வலைக்குள்ள தங்காது' என்பது பழமொழி. குஜராத், கர்நாடகத் தேர்தல் வெற்றியில் கொழுப்பேறிய இந்த பார்ப்பன நண்டு இப்பத்தான் முற்போக்கு வலைக் குள்ளயிருந்து வெறியே தலைகாட்டத் தொடங்கியிருக்கிறது.


'எல'கணேசனைவிட 'சோ'வைவிட கொடிய நச்சுப் பாம்பு இது. அதனை உடனே நாம் நசுக்கியாக வேண்டும். ஏனென்றால் இது பதுங்கியிருப்பது நமக்கு வெகு அருகாமையில் உள்ள முற்போக்கு முகாமில்.



தோழமையுடன்,

ஏகலைவன்.






Saturday, April 12, 2008

வீஈஈஈஈஈஈஈஈரத்துறவி நாமகட்டி கோபாலன்ஜி வழங்கும் அருள்மிகு.'நமீதா'ம்பிகை!!!!!......









வீஈஈஈஈஈஈஈஈரத்துறவி நாமகட்டி கோபாலன்ஜி வழங்கும் அருள்மிகு.'நமீதா'ம்பிகை!!!!!......

இந்துவெறிப் பஜனை எதிர்பார்த்த அளவுக்கு எடுபடாமல் போனதால், கருநாடகக் காவிக்கும்பலுக்கு இப்போது கன்னட இனவெறி கொஞ்சம் உதவி செய்திருக்கிறது. மதவெறி பாசிச பா.ஜ.க.வின் எடியூரப்பாவை முதல்வராக்க நம்முடைய தருமபுரி, கிருட்டிணகிரி மாவட்ட மக்கள் தொண்டை வறண்டு சாகவேண்டுமென்று அக்கட்சி அறிவித்திருக்கிறது.



இதனால் நம்ம தமிழக பா.ஜ.க. இப்போது தமிழக மக்களிடையே அம்மனமாக நிற்கிறது. இதை எப்படியாவது மறைத்துவிட எண்ணி, எல கணேசன் என்கிற பார்ப்பன பொறுக்கிமுதல், தமிழகத்தை குஜராத்தாக மாற்றத் துடிக்கும் பார்ப்பன சகுனி 'சோ'வரை எல்லோருமே ஒருசேரக் கூவி வருகின்றனர்.


முல்லைப் பெரியாறு பிரச்சினையை உருவாக்கிய போலிகம்யுனிஸ்டுகளையும், கிருஷ்ணா, பாலாறு போன்ற நதிப்பிரச்சினைகளைக் கொண்டிருக்கும் ஆந்திரக் காங்கிரசையும்விட தாங்கள் நேர்மையானவர்கள் என்பதை நிரூபித்தாகவேண்டிய நெருக்கடியிலும், தமிழகத்தில் தங்கள் கட்சியின் இருத்தலை தக்கவைத்துக் கொள்கிற நிர்பந்தத்திலும்தான் தமிழகக் காவிக்கும்பல் இன்று நின்றுகொண்டிருக்கிறது.


அதனால் இப்பிரச்சினையின் துவக்கத்திலேயே எல கணேசன் ஒரு அறிக்கைவிட்டான். "கருநாடக மாநிலப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டே இத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருப்பதால், மற்ற அரசியல் வாதிகளின் தூண்டுதலின் பேரில்தான் எடியூரப்பாவும் இதுபோன்ற பிராந்திய'க் கட்சியைப் போன்று செயல்பட நேர்ந்துவிட்டது" என்று, எடியூரப்பாவின் அறிவுக்கே எட்டியிருக்க முடியாத இந்தத் தகவலை எல கணேசன் வெளியிட்டான். இதுதான் பச்சையான பார்ப்பன பசப்புத்தனம் என்பது. எடியூரப்பாவக் கண்டிச்சித் திட்டுடான்னா, அவன எவனோ தூண்டிவிட்டான்னு திசைத்திருப்பி, 'தூண்டிவிட்டவனை'த்திட்டுகிற பேடித்தனம் பார்ப்பானுக்கே உரியது. நம்ம இணைய 'நாமகட்டிகள்' அதற்கும் மேலாகச் சென்று "நீங்கள் காங்கிரசை ஏன் திட்டுவதில்லை" என்று எழுதிவருகின்றன.



இதற்கிடையில் கடந்த ஏப்ரல்'4ஆம் தேதி சென்னையில் நடிகர்கள் சார்பில் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சத்தியராஜ் மட்டும் கொஞ்சம் தமிழுனர்வோடு பேசினார். சகநடிகனான கன்னட வெறியன் ரஜினியை (மேடை நாகரிகம் கருதி) மறைமுகமாகச் சாடிப் பேசினார். தமிழர்களின் மீது எப்போதும் வன்முறைகளை ஏவிவரும், வாட்டாள்.நாகராஜ், மகாராஷ்டிர இந்துவெறிக்காலிகளின் தலைவன் பால்தாக்கரே போன்றவர்களையும், கடலுக்கடியில் கிடக்கும் மணல் திட்டை ராமர் பாலம் என்று திரித்துக் கூறி, சேதுக்கால்வாய்த் திட்டத்தை வைத்து அரசியல் நடத்தும் இந்துவெறி பாசிசக்கும்பலையும் கடுமையாகச் சாடினார். "இதற்கெல்லாம் காரணம் தமிழனின் இளிச்சவாய்த் தனம்தான்" என்றும் சுட்டிக்காட்டிய சத்தியராஜ், "தமிழர்கள் இனி சாமி கும்பிடுவதானாலும்கூட, தமிழ் தெய்வங்களான முருகன், சுடலைமாடன், முனியய்யா பொன்ற சாமிகளைத்தான் கும்பிடவேண்டும்" என்றும், "தமிழர்களுக்கு வடநாட்டு ராமன் தேவையில்லை, புள்ளயார் தேவையில்லை இவையெல்லாம் கலவர சாமிகள்" என்றும் அறிவுறுத்திப் பேசினார்.


இதுபோதாதா நம்ம பார்ப்பன கோஷ்டிகளுக்கு?! இதற்காக நடிகர் சத்தியராஜ் மீது சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. பிள்ளையார் மூலம் மதக்கலவரம் செய்யும் தொழில் நுட்பத்தை வடநாட்டிலிருந்து தமிழகத்துக்குக் கூட்டிவந்த வீரத்(??!!!)துறவி நாமகட்டி கோபாலன் என்கிற கூமுட்ட கோபாலன், மேற்கண்ட சத்தியராஜின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் நோக்கில் "வடநாட்டு தெய்வங்களை மறுக்கச்சொல்லும் நடிகர் சத்தியராஜ், வடநாடு நடிகைகளோடுமட்டும் நடிக்கலாமா?" என்று தனது கூஜாக்களின் பலத்த கைத்தட்டலுக்கு இடையில் இதனைத் தெரிவித்துப் பேசியிருக்கிறார். இங்கே 'இந்துக்களின் புனிதமான' (
என்று இவர்களால் கொண்டாடப்படும்) தெய்வங்களை 'நமீதா' ரேஞ்சுக்கு ஒப்பிட்டுப் பார்த்து இழிவுபடுத்தியிருப்பதுதான் இவர் சொல்லும் தெய்வபக்திபோலும்.


இந்த அளவிற்கு எந்த நாத்திகர்களும் தெய்வங்களை இழிவுபடுத்தியது கிடையாது. தங்களுடைய மதவெறி அரசியலுக்காக, இவர்களால் பயன்படுத்தப்படும் கடவுள்களின் நிலைமையே இவ்வளவு கேவலமாக இருக்கிறதென்றால், மேற்கண்ட மதவெறிக் கலவரங்களுக்காக பயன்படுத்தப்படும் நமது தாழ்த்தப்பட்ட உழைப்பாளி மக்களின் நிலைமை???


ஆனால் இப்போது நம்முடைய உழைக்கும், சாதாரண மக்களிடம் இவர்களது கலவர பஜனை தோல்வியடைந்து வருவது ஒரு ஆரோக்கியமான முன்னேற்றமாகும். கோவை அருகில் ஒரு தாழ்த்தப்பட்ட பகுதியிலுள்ள கோயிலுக்குச் சென்ற, மதவெறி நாரதன் நாமகட்டி கோபாலனை, அப்பகுதி மக்கள் காறி உமிழ்ந்து விரட்டியடித்ததை சென்ற 'புது விசை' இதழ் எழுதியிருந்தது. இந்த நெருப்பு தமிழகமெங்கும் பரவி மதவெறித் துரோகிகளை வேறோடு பிடுங்கியெறியும்வரைத் தொடரவேண்டும். தொடரும்.

நன்றி!

தோழமையுடன்,
ஏகலைவன்.