Saturday, June 28, 2008

சி.பி.எம். கட்சியின் 'தாரக மந்திரம்'...........

சிபிஎம் கட்சியைச் சார்ந்த ஒரு முதிய தோழரிடம் தற்செயலாக அக்கட்சியின் போலி அரசியல் குறித்து நாம் பேச நேரிட்டது. நந்திகிராமத்து அயோக்கியத்தனங்கள் முதலாக விழுப்புரம், காரப்பட்டு சம்பவம் வரை மற்றும் மத்திய காங்கிரசு கொள்ளைக் கும்பலுடன் சேர்ந்து அக்கட்சி செய்துவரும் மோசடிகளையும் அத்தனை கேவலங்களையும் கடுமையாக நாம் சாடியபோது, மறுபேச்சில்லாமல் ஆமோதித்தார். இடையிடையே "என்ன செய்வது தோழர்" என்றும் நொந்து கொண்டார்.

"இத்தனை கேவலங்களையும் சகித்துக் கொண்டு நீங்கள் ஏன் தோழரே அக்கட்சியில் உறுப்பினராகத் தொடருகிறீர்கள்?" என்று கேட்டோம். அதற்கு அவர் சாதாரணமாகச் சொன்ன பதில்தான் அக்கட்சியின் தாரக மந்திரமாக உள்ளதாக அவரே சொன்னார். அது......

"முட்டாள் தனமா வந்துட்டோம்!
புத்திசாலித்தனமா பொழைச்சிக்குவோம்!!" என்பதுதான்.

இதன்படி பார்த்தால் அக்கட்சியின் மாநிலத் தலைவர்கள் 'பெரிய புத்திசாலிகள்'தான்; அவர்களைவிட அப்போலிக் கும்பலின் 'பொலிட்பீரோ' என்ற அரசியல் தலைமைக் குழு தலைவர்களோ மாபெரும் புத்திசாலிகள்தான் போலும். இவர்களெல்லாம் கட்சிக்குள் வரும்போது முட்டாள்தனமாக வந்தவர்கள் போல் தெரியவில்லை, அவர்கள் புத்திசாலித்தனமாகவே வந்து புத்திசாலிகளாகவே பிழைத்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

இதைத்தான் 'அவங்க' பாரதி "நாயும் பிழைக்கும் இப்பிழைப்பு" என்று பாடினாரோ???!!!!

8 comments:

Anonymous said...

ரொம்ப புத்திசாலியா உன்ணை நீயே நெனைச்சிக்கிட்டு புண்னாக்குமாதிரி எதையாவது எழுதி ரொம்ப வருத்தப்பட கூடிய ஆள்தானே நீ.

அதான் நான் கேக்கிறன் சமூகத்தில் நடக்கிற எந்த அநிதியையும் நேரடியாக சந்தித்து பிரச்சனைகளுக்கு எந்த தீர்வையும் சொல்லாமல் புரட்சி வரும் அதை நாங்கள்தான் கொண்டுவருவோம் .
இந்தியாவிற்கா என்றால் இல்லை .தமிழ்நாட்டுக்கா தெரியவில்லை .தேசிய புரட்சியா .தமிழ்தேசிய புரட்சியா ? ஆயூதபுரட்சியா ஆம் இல்லை .என்னபாதை .மாவோயிசமா? நக்சலா? தெரியாது .ஏண்டா புளுகு மூட்டை புலம்பல் எதையாவது தெளிவா சொல்லி தொலைங்க.உணக்குதான்

said...

////ஏண்டா புளுகு மூட்டை புலம்பல் எதையாவது தெளிவா சொல்லி தொலைங்க.உணக்குதான்////

அண்ணாத்தே! என்ன இருந்தாலும் நீ எழுதுற அளவுக்கு தெளிவா என்னால எழுதமுடியாது அண்ணாத்த! என்னாத் தெளிவு!!!!

///அதான் நான் கேக்கிறன் சமூகத்தில் நடக்கிற எந்த அநிதியையும் நேரடியாக சந்தித்து பிரச்சனைகளுக்கு எந்த தீர்வையும் சொல்லாமல் /////

அதுசரி நீங்கதான் என்ன தீர்வு சொல்றீங்க அண்ணே!, சமூகத்தில் நடக்கிற அநீதிய தீக்குறேன்னுதான் ஆர்.எஸ்.எஸ். காரன் கூட சொல்றான். நீ சொல்றதும் அதேவசனமாத்தான் இருக்குது. என்னா மாப்ள இது?????!!! இந்த விசயத்துல அவனுகளோட உமக்கு கூட்டனியா??

////புரட்சி வரும் அதை நாங்கள்தான் கொண்டுவருவோம் /////

"புரட்சிய நாங்கள்தான் கொண்டுவருவோமு"ன்னு உன்னமாதிரி எவனாவது கூமுட்டதான் சொல்வாண்ணே!

புரட்சிய மக்கள்தான் செய்வார்கள், உண்மையான கம்யூனிஸ்டுகள் அத்தகைய மக்களுக்குத் தலைமை தாங்குவார்கள்.

டாடாவுக்கும் அம்பானிக்கும் சலீமுக்கும் பாதம் தாங்கும் உங்களுக்கு, பாட்டாளி மக்களுக்கு தலைமை தாங்குவது பற்றித் தெரிந்திருக்க நியாயமில்லை.

ஏகலைவன்.

Anonymous said...

அருமை நண்பர் ஏகலைவன் அவர்களே, "அவங்க" பாரதி என்று நீங்கள் குறிப்பிட்டாலும், பாரதி எழுதிய வாக்கியமே (" நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு") உங்களுக்கு " பன்ச் டயலாக்" ஆக உதவி உள்ளது. "பார்ப்பான் எதற்க்கு எடுத்தாலும் ஆசமனம் செய்வது போல" (இதுவும் பாரதியின் வாக்கியம் தான்),
உங்களுக்கும் நாள் முழுவதும் எதற்க்கு எடுத்தாலும் பாரதியை நினைக்காமல் இருக்க முடியவில்லை. நீங்கள் மதி மாறனின் வலைப் பதிவில் பாரதி பற்றிய குற்றச்சாட்டுக்கு, நேரடியாக பதில் சொல்லாமல் பம்முவதாக எழுதியிருந்தீர்கள். அதற்க்கு பின்னூட்டம் எழுதி (மதி மாறனின் வலைப் பதிவில் )
பல நாள் ஆகியும், இன்னும் "புறம்போக்கு (14:45:57) : உங்கள் கருத்து மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது." என்ற அளவிலேயே உள்ளது, எனவே இப்போது பம்முவது யார் என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும். இதுகுறித்து நான் உங்களுக்கு ஒருமுறை மின் அஞ்சல்
அனுப்பினேன். அதற்க்கு நீங்கள் ஒரு பதில்
மின் அஞ்சலும் அனுப்பினீர்கள்.ஆனால் என் கருத்துக்கு பதில் இல்லை. எனவே இப்போது என் பதிலை மீண்டும் உங்கள் தளத்திற்கு அனுப்பியுள்ளேன். நீங்களும் "புறம்போக்கு (14:45:57) : உங்கள் கருத்து மட்டுறுத்தலுக்காகக் காத்திருக்கிறது." என்ற நிலை
யில் வைக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்!

Ref: முற்போக்கு மற்றும் அறிவு ஜீவிகளின் சுப்ரீம் கோர்ட்டான ‘படுபச்சைத் தமிழன்’ மகாகவி பாரதி சொல்கிறார்.

‘‘நமது முன்னோர்களும் அவர்களைப் பின்பற்றி நாமுங்கூடப் புண்ணிய பாஷையாகக் கொண்டாடி வரும் ஸம்ஸ்கிருத பாஷை மிகவும் அற்புதமானது. அதைத் தெய்வ பாஷை என்று சொல்வது விளையாட்டன்று. மற்ற ஸாதாரண பாஷைகளையெல்லாம் மனித பாஷையென்று சொல்வோமானால், இவை அனைத்திலும் சிறப்புடைய பாஷைக்குத் தனிப்பெயர் ஒன்று வேண்டுமல்லவா? அதன் பொருட்டே அதைத் தெய்வ பாஷையென்கிறோம்.’’
பாரதியின் கூற்றுப்படி பார்த்தால், பச்சைத் தமிழன் ஜெயேந்திர சரஸ்வதி சமஸ்கிருதத்திற்கு சிறப்பு செய்தது சரிதானே! சரிதானா?

பம்மாமல் எழுதும் பதில்:

அன்பு நண்பர் ஏகலைவனுக்கு, உங்கள் நண்பன் புறம்போக்கு எழுதுவது! ! அலுவல் காரணமாக உங்களுக்கு உடனே பதில் அளிக்க இயலவில்லை. நீங்கள் எழுதியபடி ”புறம்போக்கு’ அவர்களின் புலம்பலைப்பற்றி என்ன சொல்வது!!!!!
ஒருவேளை அவர் முற்போக்கு முகாமின் பிரதிநிதியாக இருப்பாரோ!! “-மிகவும் சிரமப்பட்டு எனக்கு நாள், நட்சத்திரம், குலம், கோத்திரம் பார்க்க வேண்டாம்! உங்களுக்கு மிகவும் அவசியம் என்றால், எனக்கு எழுதுங்கள்! நானே தெரிவிக்கிறேன்! “பாரதி குறித்த விமர்சனங்களுக்கு முறையாக பதிலேதும் இதுவரை சொல்லாமல், விவாதிக்கச்சொல்லி பலமுறை வெளிப்படையாக அழைத்தும் பசப்பி ஓடிய ‘முற்போக்கு’ வேடதாரிகள் சிலர் இருக்கின்றனர்! -ஓடவில்லை. ஓடி விளையாட, கூடி விளையாட வந்து விட்டேன்! “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப்பொருள் மெய்ப் காண்பதறிவு- இது வள்ளுவர் பச்சை, மஞ்சள், சிவப்பு என்ற எல்லா தமிழருக்கும் சொன்னதுதான். அதனால்தான் பாரதி வட மொழி இலக்கியத்தில் தமிழருக்கு பயன் தரும் உண்மைகள் இருப்பதால் அதைப் படிக்கச் சொன்னார்! “எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்” என்று எல்லாம் அவர்கள் கூறியது, சிந்தனையாளர்களின் அறிவு முழுமை அடைய வேண்டும் என்பதற்க்காக! “நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்” என்று கூருபவற்க்கு அல்ல. எனவே உண்மையைத் தேட, அறிய விரும்புவோர், அது எங்கே கூறப் பட்டிருக்கிறது என்று தேடீச் செல்ல வேண்டுமே தவிர, உண்மை நாம் வீட்டுக்கதவைத் தட்டும்
என்று எதிர்பார்த்து உட்கார்ந்து இருக்க முடியாது! அட, அது என்னது தமிழில் இல்லாத உண்மை இந்த சமஸ்கிருதத்தில் உள்ளது என்று கூறுகின்றனர்? என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா? தமிழில் எல்லா உண்மைகளும் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளன.இன்னும் சொல்லப் போனால், சமஸ்கிருதத்தையும் மிஞ்சிய உண்மைகள், தமிழிலும், பிற திராவிட மொழியிலும் உண்டு! “மனிதன் உயிர், உடல் மரணம் அடையும் போது, உயிர் மரணம் அடைகிறதா- இல்லை உயிர் தொடர்ந்து வாழ்கிறதா?”- இந்தக் கேள்விக்கு விடை காணும் பொருட்டு, ஆராய்ச்சி செய்யும் உரிமை இந்த உலகத்தில் எல்லோருக்கும் உண்டு! பெரியார் சொன்னது போல கடவுளை மறந்து விட்டு, மனிதனை மட்டும் நினைப்போம். மனிதனை மட்டும் நினைக்கும் போதும், சில முக்கியமான கேள்விகள் வருகின்றன. மனிதனுக்கு இன்னல் வருவது எதனால்? புத்தர் கண்ட மூன்று முக்கிய இன்னல்கள்-நோய், மூப்பு, மரணம்- இது அல்லாது இன்னும் எத்தனையோ இன்னல்கள் மனிதன் அனுபவிக்கிறான். ஒழியட்டும்! இன்னல்கள் எல்லாம், மரணத்தோடு முடிந்து விடுகிறதா, என்பது முக்கியமான கேள்வி- அதாவது மனிதன் உயிர், உடல் மரணம் அடையும் போது, உயிர் மரணம் அடைகிறதா- இல்லை உயிர் தொடர்ந்து வாழ்கிறதா? இந்தக் கேள்விக்கு விடை காணும் பொருட்டு, ஆராய்ச்சி செய்யும் உரிமை இந்த உலகத்தில் எல்லோருக்கும் உண்டு! மனித உயிர் தொடர்ந்து வாழ்கிறதா,இல்லை அழிகிறதா என்ன்னும் ஆராய்ச்சி ஆதி கால முனிவனுடனோ, சித்தருடனோ, புத்தருடனோ, ஏசு கிரிஸ்துவுடனோ, முகமது நபியடனோ, ஆதி சங்கரருடனோ, விவேகானந்தருடனோ, பெரியாருடனோ முடிந்து விடவில்லை! மனித உயிர் பற்றிய ஆராய்ச்சி தொடர்ந்து நடை பெரும். அதை எந்தக் கொம்பன் ஆளும் தடுக்க முடியாது! மனித உயிர் அறிவியல் முடியும் இடம் தான் கடவுளாக (அப்படி ஒருவர் இருந்தால்) இருக்க முடியும்! எனவே வெறுமனே உண்டு விட்டு, உறங்கி விட்டு, காலையில் எழுந்து ‘கடவுள் எங்கே? காட்டு!’ என்று கேட்பது, நுனிப்புல் மேயும் முறையாகும்! மெரீனா கடல் கரையில் நின்று கொண்டு “எங்கே இருக்கிறது ஆப்பிரிக்க கண்டம்? எனக்கு காட்டு பார்க்கலாம்!” என்று கேட்பது போல் உள்ளது! நான் (புறம் போக்கு)கடவுளைப் பார்த்தது இல்லை. எனவே கடவுள் இருக்கிறார் என்று சாட்சி குடுக்க நான் (புறம் போக்கு) தயார் இல்லை. ஆனால் அதே நேரத்தில் கடவுள் இல்லை என்பது, Farday மின்னியக்க விதியைப் போல தெளிவாக நிரூபிக்கப் பட்டால் அதை யேற்றூக் கொள்ள நான் (புறம் போக்கு) தயார். எனவே உண்மை - அதை எந்த மொழியில் சொன்னாலும் அது (உண்மை) ஒன்றாகத்தான் இருக்க முடியும்! உலகம் உருண்டையானாதது என்று சொன்னாலும், EARTH IS ROUND என்று சொன்னாலும், பொருள் ஒன்றுதான்! எனவே மனித உயிர் பற்றீய ஆராய்ச்சியில் கிருட்டிணர், ” கதாசூன், அகதா சூன், ந அனுசியதோ பண்டித” - ‘இங்கே இருப்பவர்களைப் பற்றீயோ, இறந்தவர்களைப் பற்றீயோ சான்றோர் அழுவதில்லை’ என்று பொருள்! அதையே பட்டினத்தார் ” செத்த பிணத் தருகே இனிச் சாம்பிணம் கத்துதையோ ” என்று பாடியுள்ளார்! “காம்பிணங்கும் பணைத்தோளார்க்கும் பொன்னுக்குங் காசினிக்கும்
தாம்பிணங்கும் பலஆசையும் விட்டுத்தணித்துச் செத்துப்
போம்பிணம் தன்னைத் திரளாகக்கூடிப் புரண்டினிமேற்
சாம்பிணம் கத்துதையோ ? என்செய்வேன் தில்லைச்சங்ககரனே”.
மேலும் கிருட்டிணர், “நத்வெ வாஹம், ஜாது நாசம், ந த்வம் னேமே ஜனாதிபா” என்று கூறியுள்ளதையே, பட்டினத்தார் “அன்னை எத்தனை எத்தனை அன்னையோ?
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ?
பின்னை எத்தனை எத்தனை பெண்டீரோ?
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ?
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ?
மூடனாயடி யேனும றிந்திலேன்,
இன்ன மெத்தனை யெத்தனை சன்மமோ?
என்செய் வேன்? கச்சியேகம்ப நாதனே? ” எனவே எந்த மொழியில் சொன்னாலும் உண்மை சொன்னாலும், உண்மை ஒன்றுதான். எந்த மொழியில் சொன்னாலும் உண்மை ஒன்றுதானே, பின்ன என்ன துக்கு சம்ஸ்கிருதம் படிக்க வேண்டும்? சில விஷயங்கள் ஒவ்வொரு மொழியில் தெளிவாக சொல்லப் பட்டு உள்ளான! உதாரணமாக, ” எழுமின், விழிமின் குறி சேரும் வரை நில்லாது செல்மீன்” என்ற வாக்கியம் சம்ஸ்கிருத வாக்கியமான, “உத்திஸ்டத, ஜாக்ரத, ப்ராப்பியாவரான் நீபோதிதா” என்ற வட மொழி வாக்கியத்தின் மொழி பெயர்ப்பு. இதில் குறிப்பிடப்பட்டுள்ள, ” ஜாக்கிரத” என்ற வார்த்தையை தமிழில் “விழிமின்” என்று எழுதியுள்ளனர். ஆனால், இந்த வார்த்தை “ஜாக்கிரத” மிக முக்கியமானது. ” ஜாக்கிரதை”யை கைவிட்டு விட்டதால் தான், இன்றைக்கு தமிழ்நாட்டில் மக்கள், ஆன்மீக விஷயத்தில் ஏமாந்து நிற்கின்றனர்! எனவே பொருளின் சாரத்தை சரியாக அறிந்து கொள்ள, மூல மொழியில் சிறிது புலமை பெறுவது நல்லது தான். நான் வட மொழியையோ, இந்தி மொழியையோ கற்றவன் அல்லன். நான் மேற்கூறியீட்ட வட மொழி வசனங்கள் அப்படியே தமிழில் எழுதப்பட்ட நூல்களில் இருந்து
பயின்றவை!
தோழமையுடன்,
புறம்போக்கு!

said...

அய்யா புற்ம்போக்கு அவர்களே!

உங்கள் எழுத்துக்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நீங்கள் எந்த வாதத்தை வைக்கிறீர்கள் / மறுக்கிறீர்கள் என்றே தெரியவில்லை. தெளிவில்லாமல் எழுதியிருப்பதாகத் தோன்றுகிறது. கொஞ்சம் பரிசீலிக்கவும்.

'சிந்தையில் தெளிவிருந்தால்தான் வார்த்தையில் தெளிவிருக்கும்' என்று உங்கள் பாரதிகூட சொல்லியிருக்கிறார். உங்களுடைய பிரச்சினை அனேகமாக இதையொத்து இருப்பதாகத் தோன்றுகிறது.

ஏகலைவன்.

Anonymous said...

*****மத்திய மன்மோகன் அரசு மக்கள் தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டிருக்கிறது. *****

அதாவது நீங்கள் முட்டுக் கொடுத்து தாங்கிப்பிடித்திருக்கும் மத்திய அரசு. சரிதானே நண்பர் சந்திப்பு?

****இதனை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை இடதுசாரிகள் நடத்தி வருகின்றனர்.****

அப்படியா? இதுபற்றிக் கொஞ்சம் விரிவாக சில வார்த்தைகள் சொல்லலாமே நண்பரே. சமீபத்தில் இரயில் மறியல் நடத்தினீர்களே சென்னையில் அதுவும் அந்த 'பல்வேறு போராட்டங்களில்' அடங்குமா? அரசின் செலவில் மதிய உணவை ஏதாவது ஒரு மண்டபத்தில் கும்பலாக உட்கார்ந்து தின்றுவிட்டு வருவதற்குப் பெயர்தான் போராட்டமா?

பக்கத்து நாற்காலியில் அமர்ந்திருக்கும் பிரணாப் முகர்ஜி "தேர்தலைச் சந்திக்க நாங்கள் தயார் உங்களின் ஆதரவோ தயவோ தேவையில்லை" என்று முகத்திலறைந்தாற்போல் சொல்கிறாரே, உங்கள் போராட்ட குணத்தை அங்கே கொஞ்சம் காட்டலாமே நண்பரே.

****இருப்பினும் இதர ஜனநாயக சக்திகள் இதுபோன்ற விசயங்களில் மவுனம் சாதிக்கின்றன***

இந்த லட்சனத்துல இப்படிப்பட்ட வியாக்கியானங்கள் வேற!

****ஒரு மக்கள் எழுச்சியை நோக்கி இந்திய சமூகம் சென்றுக் கொண்டிருக்கிறது.******

கோவாவிலிருந்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அடித்து விரட்டி அம்மாநில அரசைப் பணியவைத்த மக்களின் தன்னெழுச்சியைப் போன்று நாடு முழுவதும் மக்கள் ஆங்காங்கே போராட்டக்களத்தில் நின்றூகொண்டிருக்கின்றனர். அவ்வாறு போராடுகின்ற மக்கள் சிங்கூர், நந்திகிராம மக்களைப் போன்று துயரங்களையும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

மக்கள் எழுச்சியை ஒடுக்குவதும் தடுப்பதும்தானே உங்களது கம்யூனிசக் கொள்கை, இதுல மக்கள் எழுச்சியை நோக்கி நம் சமூகம் சென்று கொண்டிருப்பதாக நீங்கள் சொல்வதுதான் வேடிக்கையாக இருக்கிறது நண்பரே.

நேர்மையான களப்போராட்டத்திற்கு உங்களது கட்சியையே அனுமதிக்காத நீங்கள் மக்களையா அனுமதிக்கப் போகிறீர்கள்?

மக்கள் நலம் விரும்பி.
(சந்திப்புக்கான எனது பதில் இது. வாய்ப்பிருந்தால் பதிப்பிக்கவும்.)

said...

வாழ்த்துக்கள் ஏகலைவன்,

தொடர்ந்து சிறப்பான விவாதத்துக்குரிய பதிவுகளை இடுகிறேர்கள்.

புறம்போக்கிற்க்கு சில வரிகள்
//மனித பாஷையென்று சொல்வோமானால், இவை அனைத்திலும் சிறப்புடைய பாஷைக்குத் தனிப்பெயர் ஒன்று வேண்டுமல்லவா? அதன் பொருட்டே அதைத் தெய்வ பாஷையென்கிறோம்.//

மேலேயுள்ளது பாரதி சொன்னது. பாரதி மற்ற பாஷைகள் மானிட பாசையென்றும், சம்ஸ்கிருதம் தெய்வ பாடையென்றும்(நன்றி விடாது கருப்பு) உயர்த்திச் சொல்லியுள்ளான். புறம்போக்கோ பாரதி சம்ஸ்கிருதத்தை உயர்வாக சொல்லவில்லை அதையும் கற்றுக் கொள்ளுங்கள் என்றுதான் சொன்னார் என்று பாரதிக்கும் சேர்த்து சிந்தித்து எழுதுகிறார். ஒருவேளை கடவுள் என்று ஒன்றை கற்பனை செய்தது போல இதையும் கற்பனையாக பாரதியின் சார்பில் சிந்தித்துள்ளார் போல.


ஏகலைவன் சொன்னது போல "'சிந்தையில் தெளிவிருந்தால்தான் வார்த்தையில் தெளிவிருக்கும்' "


CPM கும்பலின் மொள்ளமாறித்தனத்தை அம்பலப்படுத்தியுள்ள மக்கள் நலவிரும்பிக்கு வாழ்த்துக்கள். குறிப்பாக இந்த வரிகள்:

""
மக்கள் எழுச்சியை ஒடுக்குவதும் தடுப்பதும்தானே உங்களது கம்யூனிசக் கொள்கை, இதுல மக்கள் எழுச்சியை நோக்கி நம் சமூகம் சென்று கொண்டிருப்பதாக நீங்கள் சொல்வதுதான் வேடிக்கையாக இருக்கிறது நண்பரே.

நேர்மையான களப்போராட்டத்திற்கு உங்களது கட்சியையே அனுமதிக்காத நீங்கள் மக்களையா அனுமதிக்கப் போகிறீர்கள்?
"""

said...

விழுப்புரம் காரப்ட்டில் நடந்தது என்ன?

மகஇக புரட்சிகர அமைப்புகள் அந்த கிராமத்தில் கள்ளச்சாரய மாபியா கும்பலுடன் கூட்டனி. கோயில் திருவிழா என்று சொல்லி ஊழல் பெருச்சாளிகளாக தின்னு கொழிப்பது .

மறைமுக கட்சி என்ற பெயரில் அப்பாவி தொழிலாளிகளை சுரண்டியும்.மதஇ சாதி வெறியர்கள் உள்ளிட்ட அனைத்து பிற்போக்கு அமைப்புகளோடு உறவு வைத்துக் கொண்டு அந்த கிராமத்திற்கு காவல்துறை வரக்கூடாது.மக்கள் இந்த போலி மகஇக காரர்களை மீரி எதும் செய்யமுடியாத சூழ்நிலையில் மக்கள் தவித்துகொண் இருந்த நிலையில் அங்கு புதியதாக சிபிஎம் கட்சி தொங்கி அவர்களின் அராஜகத்திற்கு முற்று புள்ளி வைக்கும் நோக்கோடு செயல்பட்டு வந்த . சிபிஎம் தோழர்களை தீர்த்துக் கட்டும் (அவர்களின் புரட்சிகர புரட்சி )வேலை தொடங்கி
சிபிஎம் தோழர்களை தாக்கி அவர்களின் வீடுகலை கொலுத்தியும் வன்முறையில் ஈடுபடும்போது தங்களை தற்காத்து கொள்ள முயற்சிக்கும்போது நடந்த கொலைதான் அது.

இதன் பிறகு அந்த கிராமமக்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறார்கள் இனி முன்புபோல அந்த அராஜக கும்பலின் அடக்குமுறைகள் இருக்காது என்று.

மகஇக எந்த வகையிலும் ஒரு மிகபெரிய வார்த்தை பொறுக்கி கட்சிக்குரிய அடிப்படை ஜனநாயக பண்புகள் கூட இல்லாத சுத்தமான பாசிச அமைப்பாக உருவெடுத்திருப்பதையும். இதை தனி ஒரு சம்பவமாக கருதி இந்த கருத்துக்களை சொல்லவில்லை.

வுNழுஊ(மகஇக)ன் தலைமையில் திரிபுவாத மாமாக்கள் உட்கர்ந்து கொண்டு வாய் கூசாமல் பொய்களை பேசி கம்யூனிஸ்ட்களை தவறானவர்கள்என்றும் மக்கள் விரோதிகள் என்றும் காட்டிக் கொடுப்பதில் முன்னணியில் உள்ளனர்.

அவர்களின் அணிகளோ (விவிமு)அந்த கிராமத்தில் தண்ணீர் குழாய் கனெக்சனிலிருந்துஇ மின்சார கனெக்சன் வரை மாமா வேலை பார்த்து பொறுக்கி தின்பதும்இ கட்சி விட்டு கட்சி மாறி(தேமுதிகஇதிமுகஇஅதிமுக) நக்கிப் பிழைப்பதும். எல்லா போர்ஜெரிஇ 420வேலைகளையும்இ சாதிய ஆதிக்க நடவடிக்கைகளையும் செய்வதற்ககான ஒரு அரசியல் அங்கீகாரமாகவே மகஇகல் உள்ளனர். நான் சொன்ன உண்மை செய்திகளை தெரிந்துகொள்ளவேண்டுமானால் அந்த கிராமத்திற்கு சென்று தெரிந்து கொள்ளாம்.

said...

ஏகலைவன் said...
தோழர்களுக்கு ஒரு சின்ன செய்தி!!

இங்கே விடுதலை எனும் பெயரில் பின்னூட்டமிட்டுச் சென்றுள்ள சிபிஎம் கட்சியைச் சார்ந்த விஜி எனும் நபர் பாண்டிச்சேரியில் இருக்கிறார். இவர் அக்கட்சியின் அல்லக்கை அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைமை அல்லக்கையான எஸ்.ஜி.ரமேஷ்பாபு என்பவனுக்கு அல்லக்கையாக இருந்து செயல்படுகிறார்.

ரமேஷ்பாபு எனும் நபர் இந்த விஜி மூலமாகவோ அல்லது அவர் பெயரில் தாமே சில அவதூறுகளைத் தொடர்ந்து எழுதிவருகிறார்.

இங்கு பதியப்பட்டிருக்கின்ற விமர்சனங்கள் உள்பட நமது எந்த ஒரு விமர்சனத்திற்கும் பதில் சொல்லத் திராணியற்ற நிலையில் இவர்கள் கைக்கொண்டிருக்கும் ஆயுதம்தான் இத்தகைய அவதூறுகள்.

இதன் உச்சத்தில் எமது அமைப்பின் பெயரிலேயே முறைகேடாக ஒரு வலைதளத்தை உருவாக்கி அதில் தமது அவதூறுகளைத் தொடர்ந்து எழுதிவருகிறார்கள். வழக்கம்போல நமது எதிர்விணைகளையும் அங்கே நேர்மையாக பதிப்பிப்பதில்லை.

தமது அரசியல் எதிரி என்று போலித்தனமாகச் சொல்லிக் கொண்டு பாஜக, ஆர்.எஸ்.எஸ். மதவெறிக் கும்பலுட்டன் கூடிக் குலாவிக் கொண்டு இவர்கள் கட்சியின் கீழ்மட்டத் தோழர்களை அடியாளாகப் பயன் படுத்தி அவர்களுடன் போலியாக மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.

தமது தலைமை அலுவலகத்திற்குள்ளேயே புகுந்து இந்தூவெறி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு வெள்ளைக் கொடி காட்டிக் கொண்டு பேடித்தனமாக அரசியல் செய்துவரும் இவர்கள், அதைக் கண்டித்து ஒரு வரி கூட இங்கே இணையத்தில் பதியாத இவர்கள், நமக்கு எதிராக ஒரு வலைதளத்தையே தொடங்கி அவதூறு எழுதும் நிலைக்கு சென்றிருக்கிறார்கள் என்றால் இவர்களின் அரசியல் யோக்கியதை எப்படிப்பட்டது என்று நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

இதற்கு தோழர்கள் கடுமையான எதிர்விணையாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

தோழமையுள்ள,

ஏகலைவன்.