Saturday, June 14, 2008

இந்துமதத்திலிருந்து ஒருவர் வேற்று மதத்திற்கு மாறினாலும் நமது எதிரிகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடியிருக்கிறது என்றுதான் அர்த்தம் - எல. கணேசன் பேச்சு!!!!

"இந்து மதத்திற்கெதிராக ஒரேயொருவர் வேற்று மதத்திற்கு மாறினாலும்; நமது எதிரிகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடுவதாகவே அர்த்தமாகிறது" என்றான் ஒரு ஆர்.எஸ்.எஸ்., பார்ப்பன பயங்கரவாதி எல. கணேசன்.

இன்று (14/06/2008) மதியம் தமிழன் தொலைக்காட்சியில் தான் மேற்கண்ட நேர்கானல் ஒளிபரப்பப்பட்டது.

மேற்கண்ட இவ்வரிகள் வேறொருவர் சொன்ன புகழ்மிக்க வாசகத்தினை அப்படியே ஒத்திருப்பது இதனைப் படிக்கின்ற அனைவருக்குமே தெரிந்துவிடும். இருப்பினும் நான் சொல்கிறேன்....

"நீ எங்களுக்கு ஆதரவாக இல்லையென்றால் எதிரிகளுக்கு ஆதரவாக இருப்பதாகத்தான் அர்த்தம்" என்கிற இந்த வாசகம் நமது அமெரிக்க பாசிச பயங்கரவாதி ஜார்ஜ்.W. புஷ்ஷினுடையது.

தனது ஆசானாக ஹிட்லரையும் தனது சின்னமாக ஹிட்லரின் 'ஸ்வஸ்திக்' சின்னத்தையும் பயன்படுத்தும் ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பு, ஒரு மக்கள் விரோத பயங்கரவாத அமைப்பு என்பதற்கு இதுவே முழுமையான உதாரணமாக இருக்கிறது. எல. கணேசனின் மேற்கண்ட பேச்சிலிருந்து நமக்குத் தெரிவது என்னவென்றால், கடந்தகால ஹிட்லரைவிட மிகமிகப் பயங்கரமான நிகழ்கால சர்வதேச, விரோதி ஜார்ஜ் புஷ் ஐ தமது குருவாக அவர்கள் வரித்திருக்கிறார்கள் என்பதுதான்.

இந்த நேர்காணலினூடாக மேலும் பல்வேறு சமூக விரோத பேச்சுக்களையும் ஆர்.எஸ்.எஸ். ஆதரவுக் கருத்துக்களையும் அள்ளிவிடத் தவறவில்லை அந்தப் பார்ப்பன பயங்கரவாதி.

"ஆர்.எஸ்.எஸ். என்றால் கலவரக்காரர்கள் என்று சித்தரிக்கப்படுகிறது. ஆனால் சமூகத்தில் நடக்கும் ஒழுக்கங்கெட்ட செயல்களைத் தட்டிக் கேட்க ஆர்.எஸ்.எஸ்.ஐத்தவிர வேறொருவரும் இல்லை. அப்படிப்பட்ட ஒரு அமைப்பு வரும்போது தொடக்கத்தில் சற்று வன்முறையினையும் கையிலெடுக்கத்தான் வேண்டியுள்ளது. ஆனால் அதன் பிறகு ஒரு நிரந்தரமான அமைதியினை அது அப்பகுதிக்குத் தருகிறது என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.சின் தனிச்சிறப்பு" என்று சிலாகித்தார்.

அவருக்கு எதிரில் ஒரு எருமைச் சாணியைப் போன்று ஒருத்தன் உட்கார்ந்து கொண்டு பேந்த பேந்த விழித்துக் கொண்டு இந்நேர்கானலை நடத்திக் கொண்டிருந்தான். எதிர்கேள்விக்கான பல்வேறு விசயங்களை எல. கணேசனே அடியெடுத்துக் கொடுத்தபோதும், எந்த சொரனையுமற்று 'நம்ம கோமாளி சந்திப்பு' போன்று உட்கார்ந்திருந்தது அந்த எருமைச்சாணி.

உங்க ஆர்.எஸ்.எஸ். தீண்டாமைக் கொடுமைக்கு எதிராக என்னத்தைக் கிழித்தது என்று கேட்டிருக்கலாம்.

அல்லது

ஆர்.எஸ்.எஸ். அந்த பகுதிக்கு நிரந்தரமான அமைதியினை வழங்குவதாக அவன் குறிப்பிட்டதற்கு, "நிரந்தர அமைதியென்றால் குஜராத்தைப் போன்றதொரு அமைதியா" என்றுகூட கேட்டிருக்கலாம்.

இப்படி அவனைக் கேள்விமேல் கேள்வியெழுப்பி வேட்டியைக் கிழித்து அனுப்பியிருக்கலாம். அவன் நம் கையில் சிக்கியிருந்தால். ம்... என்ன செய்வது.

4 comments:

said...

http://nagarjunan.blogspot.com/2008/04/blog-post_09.html


///இதற்காக சலபதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!////

நீங்கள் மட்டுமா நாகார்ஜூனன், நாங்கள் கூட உங்கள் 'சலபதி'யை பாராட்டியே தீரவேண்டும். காரணம், மதிமாறனுடைய பாரதி குறித்த ஆய்வுகளுக்கும்கூட உங்கள் 'சலபதி'யின் நூல்களும் உதவியிருப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன்.

முக்கியமாக, பாரதி பார்ப்பன சங்க மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய செய்திகள் பற்றிய தரவுகள் 'சலபதி' அவர்களின் ஆய்வில்தான் இருக்கின்றன.

இதனாலேயே எஸ்.வி.ராஜதுரை போன்ற அறிவுஜீவி!!!! மேதாவிகள், உங்கள் 'சலபதி'யை இழிவாக விமர்சித்திருக்கிறார்கள்.

அடுத்து வேதநாயகம்பிள்ளை குறித்து,

வேதநாயகம் பிள்ளை, அவருடைய 'பிரதாப முதலியார் சரித்திரம்' தமிழின் முதல் நாவல் எனும் பெருமையைத் தங்கியிருந்ததே அதில், தன்னுடைய சாதிக்காகவோ அல்லது தான்சார்ந்த கிறித்தவ மதத்திற்காகவென்றோ தனிப்பட்டு எழுதியிருக்கிறாரா, நாகார்ஜூனன்??

அப்படி கிறித்துவம் சார்ந்து அவர் எழுதியிருந்தாலும் தவறேயில்லை. ஏனெனில் இந்துத்துவ கோரப் பற்களில் அனைத்து சாதியினரும் சிக்குண்டிருந்த காலம் அது. இந்து என்கிற ஒரு பாசிச மதத்தைத் தவிர வேறெந்த மதமும் சாதாரண உழைக்கும் மக்களை சாதியைச் சொல்லி ஒடுக்கியது கிடையாது.

எனவே, அத்தகைய பாசிச இந்து மதத்தை உயர்த்தி எழுதுவதைவிட வேற்று மதங்களைப் பற்றி உயர்வாக எழுதுபவர்கள் எவரேனும் நம்முடைய சமூகத்தில் இருந்திருப்பார்களேயானால் அவர்களை பாரதி அளவுக்குக் கீழானவர்களாக கருதமுடியாது.

பிரெஞ்சுப் புரட்சியையும் செர்பிய விடுதலையையும் சிலாகித்து எழுதிய பாரதிக்கு தோழர்கள் வைக்கும் கேள்வி மிகமிகச் சாதாரணமானது.

இப்படி எல்லாவற்றையும் பாடிய பாரதி, அவனுடைய சொந்த மண்ணைச் சார்ந்த வீரன் கட்டபொம்மனைப் பற்றி ஏன் பாடவில்லை என்பதுதான் அக்கேள்வி. அப்படி கட்டபொம்மனைப் புறக்கனித்த பாரதி, துரோகி எட்டப்பனின் வரலாற்றை எழுதித்தருவதாக சீட்டுக்கவி எழுதியனுப்பி, அந்த அரன்மணை வாயிலில் காத்துக் கிடந்தாரே, அதன் அர்த்தம் என்ன, நாகார்ஜூனன்??? அதுதான் பாரதி சொன்ன தேசபக்தியோ???????

பெண்ணியம் குறித்து ஆவேசமாக எழுதிய பாரதி, தன்னுடைய சமகாலத்தில் சாதித்த டாக்டர் முத்துலெட்சுமி அம்மையாரைப் பற்றி ஒரு வரியில்கூட வேண்டாம், ஒரு வார்த்தையில்கூட, ஒரு எழுத்தில்கூட குறிப்பிடவில்லையே அது ஏன்?

நீங்கள் மதிமாறனுடைய ஒட்டுமொத்த விவாதங்களுக்குக் கூட பதில் சொல்ல வேண்டாம், அவர் தன்னுடைய கட்டுரைகளில் சிலவற்றை இப்போதும் அவருடைய வலைதளத்தில் சிறு சிறு பதிவுகளாக பதிப்பித்து வருகிறார். அவற்றில் கூட நீங்கள் சென்று விவாதிக்கலாம் நாகார்ஜுனன்.


தோழமையுடன்,
ஏகலைவன்.

(குறிப்பு: இது மேலே இக்கமெண்ட்டின் துவக்கத்தில் நான் கொடுத்துள்ள சுட்டியிலுள்ள நாகார்ஜூனனின் கட்டுரைக்கு எனது எதிர்விணை)

said...

அய்யா நாகார்ஜூனன் அவர்களே!

எதிர்கருத்துக்களை எவ்விதத் தயக்கமுமின்றி பதிப்பிப்பதும், முறையாக பதில் சொல்வதுவும் இதுவரை பாரதி பக்தர்கள் யாருக்கும் இல்லாத ஒரு பழக்கம். எஸ்.வி.ராஜதுரை போன்றவர்களே இதுவரை எந்தப் பதிலும் சொன்னது கிடையாது. உங்களுடைய பதில்களில் எனக்கு மாற்றுக்கருத்து இருப்பினும், பதில் சொல்லவேண்டும் என்கிற உமது நேர்மையை நான் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை. அந்த வகையில் உங்களைப் பாராட்ட வேண்டும்.

///பாரதி அன்றைய காலகட்டத்தில் அரசுப்பதவிகளில் பார்ப்பன ஆதிக்கத்தைச் சமன்செய்ய முற்பட்ட
இட ஒதுக்கீட்டுக் கோரிக்கைககு எதிராக உரையாற்றியதை சலபதி வெளிக்கொணர்ந்த ஆய்வுமூலம் ஏற்கனவே வாசித்திருக்கிறேன். அதேபோல "என் பிறப்புக்கேறற வகையில் கடலூர் சிறையில் தொடர்ந்து இருக்கமுடியாது" என பாரதி சென்னை ஆங்கிலேய அரசுக்கு எழுதிய மன்னிப்புக்கடிதத்தையும்.///

'சலபதி' அவர்கள் வெளிக்கொண்டுவந்த இக்கருத்துக்களை நீங்கள் நன்கு அறிவீர்கள். இருப்பினும் பாரதி சாதி சார்பற்றவன்' என்றும்
'தான் சார்ந்த பார்ப்பன சாதிக்கு எதிராகவே வாழ்ந்தவன்' என்றும் தொடர்ந்து பேசுவீர்கள் சரிதானே?!
சரி போகட்டும்....


///பாரதியின் தந்தை எட்டயபுர சமஸ்தான உதவிபெற்றவர், சீட்டுக்கவி விஷயம் ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான். பாரதி மீதான ஆசிரிய மிகைப்புனைவு சிதறி, அவரை வரலாற்று மனிதராகப் பார்க்க
இந்தப் புதிய விபரங்கள் உதவுவது உண்மையே. ///

உதவி செய்தவன் எவ்வளவு இழிவான துரோகியாக இருந்தாலும் அவனை உயர்த்திப் பேச முனைந்த பிழைப்புவாத அற்பத்தனத்தைத்தான் நீங்கள், 'பாரதி மீதான ஆசிரிய மிகைப்புனைவு' என்று குறிப்பிடுகிறீர்களா? அப்பேர்ப்பட்ட 'ஆசிரிய மிகைப்புனைவு' சிதறுண்டுதான் அவரை உங்களுக்கு வரலாற்று மனிதராகக் காட்டுவதாகச் சொல்லுகிறீர்கள். அது சிதறுண்ட ரகசியத்தை மட்டும் எனக்குச் சொல்லுங்களேன்.

///இதேபோல மதிமாறன் கேட்கும் வரலாற்றுக் கேள்விகளுக்கும் பதில் ஒருநாள் கிட்டலாம்.///

இது ஆதிசங்கரனின் அத்வைதத்தோடு ஒத்துப் போகிறது நண்பர் நாகார்ஜூனன் அவர்களே!

காலம் விரைவில் கனியலாம் என்ற ஆருடமோ ஜோசியமோ எனக்குத் தேவையில்லை. ஜோசியம் பார்த்துச் சொல்லத்தான் நம்ம 'ஞாநி' இருக்கிறாரே போதாதா!

///ஆனால் கிடைத்ததை வைத்து பாரதி முற்றிலும் சரி அல்லது தவறு என வாதாடுபவனல்லன் நான். மதிமாறன் அந்தப்பாணி.///

அது எப்படி உங்களை என்ன கேள்வி கேட்கவேண்டும் என்று எதிரிக்கு நீங்களே அடியெடுத்துக் கொடுக்கிறீர்கள்?

பாரதியை விமர்சித்து எழுதிய மதிமாறன் கிடைத்ததை வைத்துக் கொண்டு எழுதுகிறார் என்றால், பாரதியைப் வானுயரப் புகழ்ந்து பூரிப்பவரெல்லாம் ஆழ்ந்து ஆய்ந்து எழுதுகிறார்களோ?

பாரதியைப்பற்றிய அவ்வளவு ஆழமான படிப்பினை உங்களுக்கு இருக்குமானால் மதிமாறனுடைய எளிய கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டாமென்று உங்களைப் பிடித்து தடுப்பவர் யார்?

///என் பதிவு பாரதியின் இலக்கியம், கவிதையாக்கம், குறிப்பாக வசன கவிதையாக்கம் அதற்கான ப்ரெஞ்சு மொழிப்புலமை பற்றி நோக்கும் ஒன்றுய உங்களைப் போன்ற விஜய் என்பவரின் கேள்விக்கான என் பதிலும் அது பற்றியதே./////

அய்யா, நான் கேட்பது என்னவென்றால், மேலே நீங்கள் பட்டியலிட்டுள்ள, இலக்கியம், கவிதையாக்கம், பிரெஞ்சு மொழிப்புலமை இவற்றை மட்டும் வைத்துக் கொண்டு தான் வாழும் சமூகத்துக்கு எதிராக இயங்குபவனை எப்படி பாராட்ட முடியும்?

தங்கக் கத்தியைக் கொண்டு கண்ணைத் துளைத்துக் கொள்ள முடியுமா நண்பரே?

இந்த தொல்லைக்காகத்தான் எஸ்.வி.ராஜதுரை, அ.மார்க்ஸ் போன்ற அறிவு ஜீவிகள் எந்த பதிலும் சொல்லாமல் கமுக்கமாக இருந்து விடுகிறார்கள் போலும். உங்களுடைய இத்தகைய பதிலைவிட ராஜதுரையின் பானியே பரவாயில்லையோ என்றே தோன்றுகிறது.

மன்னிக்கவும்.

தோழமையுடன்,
ஏகலைவன்.

said...

நாகார்ஜூனன் என்பவர் ஒரு 'So called intelectual' என்று அறியப்பட்டவர். அவரா இப்படி எழுதியிருக்கிறார்?! என்று ஆச்சர்த்தோடு ஒரு முதிய தோழர் இப்போதுதான் கேட்டுச் சென்றார்.

முன்னாள் கவர்ச்சி நடிகை ஜெ.ஜெயலலிதா அவர்களின் நடிப்பியல் அழகினைக் கொண்டு அவரை வரலாற்றுப் பெண்மணியாகச் சித்தரிக்கத் துவங்கினார்கள், அவருடைய அரசியலின் துவக்க காலத்தில்.

ஜெயலலிதா வேறெவரையும் விட வானளாவ உயரமுடிந்தது இப்படியான பிரச்சாரங்களினால்தான். இப்போது நாம் என்ன செய்யவேண்டுமென்றால் அவருடைய சினிமாவை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தாலே போதுமானது. அதையும் மீறி அவருடைய அரசியல் நடவடிக்கைகள் குறித்து விமர்சிக்கக் கூடாது. அப்படியே விமர்சித்தாலும் அவற்றில் புகழ்ந்து இட்டுக்கட்டிக் கூறுமளவுக்கு ஏதேனும் கிடைத்தால் புகழலாம். இல்லாவிட்டால் அல்லது அவருக்கு எதிர்விணையான எதையும் நாம் வெளியே பேசுவது தவறு.

அவருடைய அரசியல் களியாட்டத்தில் நானோ அல்லது என் மக்களோ பாதிக்கப் பட்டிருந்தால் கூட அவருடைய அழகியலை மட்டும் கருத்தில் கொண்டு விட்டுவிடவேண்டும்.

அவ்வாறு மீறி ஏதேனும் பேச எண்ணினால், அவரைப் பற்றிய அனைத்துத் தரவுகளையும் என்னுடைய ஒட்டுமொத்த வாழ்நாளையும் செலவழித்து தேடியலைந்து, குப்பைமேடுகளைக் களைந்து தேடி எடுத்து வைத்துக் கொண்டுதான் பேச வேண்டும். அதுதான் நீங்கள் பாரதி விசயத்தில் சொல்ல வரும் நியாயம் போலும்!

என்னை நேரடியாக பாதிக்கும் விசயத்தை நோக்கி நான் கேள்வி கேட்டால், அட என்னுடைய சாதிக்காரனை 'ஈனபறையன்' என்று எழுதிவைத்துச் சென்றவனை நான் கேள்விகேட்டு அம்பலப்படுத்துவதற்கு, எனக்கு வேறு எந்தத் தரவுகள் வேண்டும், நாகார்ஜூனன்?

உங்கள் பதிவுக்கு சம்பந்தமுள்ள விசயத்தைப் பற்றி மட்டும்தான் அனைவரும் விசாரிக்க வேண்டுமா? அப்படியானால், உமது பதிவு முழுதும் நிறைந்துள்ள பாரதியைப் பற்றி நான் பேசுவது தவறு என்று எனக்குத் தோன்றவில்லை.

பாரதி என்கிற 'அபினை, கஞ்சாவை, அல்லது மதிமாறன் பானியில் சொல்வதானால் லாகிரிவஸ்து'வை வரலாற்று மனிதர் என்று சோடனை செய்து கூவிக்கூவி விற்பவர்களிடம், அதனை அம்பலப்படுத்தி கேள்வி கேட்காமல் "எனக்கும் ஒரு பாக்கெட் கொடுங்க" என்று கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டுமா?


தோழமையுடன்,
ஏகலைவன்.

said...

////ஏகலைவன்

உங்கள் பதிலில் அய்யா-வைத் தவிர்க்கலாம். என் நேர்மையைப் பாராட்டுவதாகக் கூறி, எஸ். வி. ராஜதுரை, அ. மார்க்ஸ், ஞாநி ஆகியோர் குறித்தெல்லாம் எழுதியிருக்கிறீர்கள். அவை பற்றிய முழுவிபரங்கள் எனக்குத்தெரியாது. தெரிந்துகொள்ள இயலவில்லை.///

நண்பரே, வயதில் பெரியவர் என்பதனால் மரியாதையின் நிமித்தமாகத்தான் நான் அவ்வாறு அழைத்தேன். நான், நாகார்ஜூனன் அய்யர் என்று குறிப்பிட்டிருந்தால் தான் தவறு. நாகார்ஜூனன் அய்யா என்றுதானே குறிப்பிட்டிருந்தேன்!!!

இதுக்கெல்லாமா விவாதிக்க முடியும்? என்னங்க நீங்க.

ஏகலைவன்.