Tuesday, June 3, 2008

ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யின் புதிய கொள்கை பர்ர்ர்ரப்ப்ப்புச் செயலாளர் - ஞாநி


ராமன் கோயில் முதல் ராமர் பாலம் வரை தனது எல்லா அஸ்திரங்களும் தேர்தல் களத்தில் புஸ்வானமாகிப் போனதால், அந்தந்த மாநிலங்களுக்குள் இருக்கும் ஏதோ ஒரு பிரச்சினையை கையிலெடுத்துக் கொண்டு கூப்பாடு போடுவதன் மூலமாகமட்டுமே வெற்றி பெற முடியும் என்பதை பாஜக மதவெறிக்கும்பல் ஒரு திட்டமாக வகுத்து, அதனை செயலாற்றி, வெற்றியும் பெற்று வருகிறது. அதன் சமீபத்திய உதாரணம் கர்நாடகத் தேர்தல் முடிவுகள்.


இராஜஸ்தானில் தமது கட்சி வெற்றி பெற்றால் குஜ்ஜார்களுக்கு பழங்குடியினர் பட்டியலில் இடமளிப்போம் என்று வாக்குறுதியளித்து, அவர்களின் பெருவாரியான வாக்குகளைப் பொறுக்கி வாயில் போட்டுக் கொண்டு ராஜஸ்தானில் ஆட்சியைப் பிடித்தது இக்கும்பல். குஜராத்தில் தனது அடிப்படையான இந்துத்துவ வெறியின் மூலம் வெற்றி பெற்றது. இப்போது கர்நாடம்.

கர்நாடகத் தேர்தல் முடிவுகள் தண்ணீர்களின் அரசியலால் விளைந்த விளைவே என்பது அனைவருக்கும் தெரியும். "அது என்ன தண்ணீர்கள்!" என்று யாரும் ஆச்சர்யப்படவேண்டாம். இத்தேர்தல் வெற்றிக்கு உதவியது இருவேறு மாதிரியான தண்ணீர் என்பதால் தான் இவ்வாறு குறிப்பிடுகிறேன்.

ஒன்று தேர்தல் அறிவிப்பு தொடங்குவதற்கு சற்று முன்பு பயன்பட்ட ஒகேனேக்கல் 'குடிநீர்', மற்றொன்று தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு சற்று முன் பயன்படுத்தப்பட்ட 'குடி(யைக் கெடுக்கும்) நீர்'. முதல் நீரின் பலன் தேர்தலில் வாக்குகளாகக் குவிந்தது, மற்றொன்று அவ்வாக்குகளை அள்ளித்தந்துவிட்டு பிணங்களாகச் சரிந்தது.


தேர்தல் நடந்த மறுநாள், "எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியாகத் தேர்தல் முடிந்தது" என்று அறிவித்தார் அம்மாநிலத் தேர்தல் ஆணையர். ஆனாலும் 200 உடல்கள் சவங்களாக ஆக்கப்பட்ட அக்கிரமம் எவ்வாறு நிகழ்ந்தது?! அதை நிகழ்த்தியது ஆயுதங்களோ கலவரங்களோ அல்ல, மேற்சொன்ன குடி(யைக் கெடுக்கும்) நீர் தான்.

ஓட்டுக்காக வாங்கி ஊற்றப்பட்ட சாராயம் மிச்சமின்றித் தீர்ந்து போனதால், விஷச்சாராயத்தை விற்று காசாக்கியது கள்ளச் சாராயக் கும்பல், அதையும் ஓட்டாக்கியது மேற்கண்ட பதவி வெறிபிடித்த கும்பல்.

முடிவு தமிழகக் கர்நாடகத்தைச் சார்ந்த இருநூறு பேர் ஒரே இரவில் பிணமானார்கள். மேலும் பலநூறு பேர் கண் பார்வை இழந்துவிட்டார்கள். இதுதான் இந்த வெற்றியின் இரகசியம்.

ஓட்டுப் பொறுக்க, தமிழ்மக்கள் தங்கள் (ஒகேனேக்கல்) சொந்த மண்ணிலிருந்து எடுத்துக் கொள்ளவிருந்த குடிநீரைக் கூட பறிக்க நினைக்கும் இக்கும்பல், கர்நாடக வெற்றியைத் தங்களது 'தென்னிந்தியாவுக்கான நுழைவுவாயில்' என்று சொல்லிப் புளகாங்கிதமடைகின்றன. ஒருவேளை இவர்களது தென்னிந்தியாவில் தமிழகம் இருக்கிறதா, இல்லையா தெரியவில்லை. தமிழகமும் இருக்குமானால் இந்த பயங்கரவாதக் கும்பல், தமிழகத்தில் ஓட்டுப் பொறுக்க வேறெந்த சதிவேலையில் ஈடுபடுமோ தெரியவில்லை."ஒகேனேக்கல் திட்டம் நிறைவேறக் கூடாது என்பது எமது கர்நாடக பாஜகவின் நிலைப்பாடு, அதேபோல், இப்பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையினை விட்டுக் கொடுக்கக்கூடாது என்பது தமிழக பாஜகவின் நிலைப்பாடு" என்று குடிபோதையில் உளறிவிட்டுப் போயிருக்கிறார் நம்ம 'வெங்காய'நாயுடு.

கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிக்கத் தமிழ் மக்களுக்கு குடிநீரைக் கூட மறுக்கும் இக்கும்பல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுடைய மென்னியைப் பிடிக்கும் இந்த கேடுகெட்ட கூட்டம், நாங்கள் தென்னிந்தியாவில் நுழைந்துவிட்டோம் என்று மார்தட்டிக் கொள்கிறது என்றால், இது தென்னிந்தியாவின் ஒரு அங்கமான தமிழக மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்.

இதே கருத்தைத்தான் இங்குள்ள 'எச்ச'ராஜா முதல் 'எல'கணேசன் வரை, இன்னும் 'சோ'மாறி போன்றவர்களும் இங்கே தொடர்ந்து வாந்தியெடுக்க இருக்கின்றார்கள்.


இவர்களின் கூப்பாடெல்லாம் ஒருபுறமிருக்க, புதியதாக ஒரு கொ.ப.சே. கிளம்பியிருக்கிறார். அவர்தான் நம்ம 'தீம்தரிகிட'ஞாநி.


"கருனாநிதிக்கு வயசாகிவிட்டது அவருக்கு ஏன் இந்த வீன் வேலை" என்ற தனது ராமர்பால ஆதரவுக் கருத்தின் மூலமாக, நீண்ட நாட்களாக தமது முற்போக்கு முகமூடிக்குள் மறைத்து வைத்திருந்த பூநூலை சற்று வெளிக்காட்டியவர்தான் இந்த ஞாநி. அதற்கு எதிர்விணையாகப் போகிற வருகிற இடங்களிலெல்லாம் எமது மகஇக தோழர்களிடம் செருப்படியும் பட்டார்.


இப்படித்தான் சென்ற ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் தென்பட்ட ஞாநியை வளைத்துக் கொண்ட எமது தோழர்கள் மூன்று பேர் கேட்ட கேள்வியில் மூத்திரம் முட்ட விலகி ஓடினார். "கருனாநிதியைப் பற்றியெல்லாம் எழுத முடிகிற உன்னால், குஜாராத்தில் இந்துவெறிக் கும்பல் நடத்திய அக்கிரமங்களைப் பற்றி ஏன் எழுதமுடியவில்லை" என்று கேள்வி கேட்டனர் எமது அந்த தோழர்கள். கருனாநிதியைப் பற்றிய எமது விமர்சனங்களெல்லாம் ஒருபுறம் இருக்க, இந்து வெறியை தனது முற்போக்குத் திரைக்குள் மூடிமறைத்து வைத்துக் கொண்டு திரியும் இவனுக்கு கருனாநிதியை விமர்சிக்க என்ன யோக்கியதை இருக்கிறது என்பதுதான் எமது எதிர்விணைக்குக் காரணம்.

தான் எதை எழுதினாலும் அதை அப்படியே ஒரு எழுத்து மாறாமல் பிரசுரிக்க குமுதம், ஆனந்தவிகடன் போன்ற கழிசடைப் பத்திரிக்கைகள் இருப்பதால் எதையும் எழுதலாம், யாரும் நம்மை நெருங்கிக் கேள்வி கேட்க முடியாது என்கிற மிதப்பில் இருந்த இந்த பேடிக்கு எமது தோழர்களின் கேள்விகளும் கண்டனங்களும் புதுவிதமான அதிர்ச்சியைத்தான் தோற்றுவித்தன.


இது ஒருபுறம் இருக்கட்டும். சென்ற ஞாயிறு அன்று (01/06/08) இரவு 09:30 மணியளவில் ஜெயா டிவியில் (ஜெயாவின் பிய்ந்துபோன செருப்புகளுக்கு பூமாலை போட்டு ஆராதிக்கும் பூசாரி) ரபி பெர்னாட் உடன் நேர்கானல் நிகழ்ச்சியில் உட்கார்ந்திருந்தார் நம்ம ஞாநி. சரி என்னதான் பேசுகிறார் பார்ப்போமே என்று கவனிக்கத் தொடங்கினேன்.


"கருநாடகத் தேர்தல் முடிவு குறித்து உங்களது கருத்து என்ன?" என்பதுதான் கேள்வி.

"கருநாடக மக்கள், குஜராத் மக்களைப் போல் புத்திக் கூர்மையுள்ளவர்கள் என்பதை இத்தேர்தல் முடிவுகளின் மூலம் நிரூபித்திருக்கிறார்கள். தமிழகத்தில் சென்ற சட்ட மன்ற தேர்தலில் வலுவான அ.இ.அ.தி.மு.க.வைத் தோற்கடிக்க கருனாநிதி அறிவித்த கலர் டி.வி., ரூபாய்க்கு 2கிலோ அரிசி போன்ற கவர்ச்சிகர சலுகை அறிவிப்புக்கள், சமீபத்தில் நடைபெற்ற குஜராத், கர்நாடக சட்டமன்றத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியால் முன் வைக்கப்பட்டது. ஆனால், இந்த இரு மாநில மக்களும் இச்சலுகை அறிவிப்புகளைப் புறக்கணித்து பாஜகவுக்கு பெருவாரியான வெற்றியினை வழங்கியிருக்கிறார்கள். இது நிச்சயமாகப் பாராட்டத்தக்கது."

"மேலும் கர்நாடகாவில் போட்டியிட்ட சினிமா நடிகர்கள் அனைவரும் தோல்வியுற்றுள்ளனர். எனவே, கர்நாடக மக்கள் சினிமாக் கவர்ச்சி அரசிலையும் புறக்கனித்துள்ளார்கள் என்பதுவும் கூட கூடுதலான சிறப்புதான்."

"இவை எல்லாவற்றையும் விட சிறப்பான விசயம் என்ன வென்றால், கன்னட வெறிபிடித்த வாட்டாள் நாகராஜை டெபாசிட் கூட வாங்கமுடியாமல் மக்கள் புறக்கனித்ததற்குக் காரணம், பாஜகவின் மொழிவெறி எதிர்ப்பு அரசியலுக்குக் கிடைத்த வெற்றிதான் இத் தேர்தல் முடிவுகள்". "இந்த வெற்றியின் எதிரொலி வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலும் நிச்சயமாக பாஜகவுக்கு ஆதரவாக இருக்கும். இதில் சந்தேகமே இல்லை". என்று புகழாரம் செய்தார்.

உன்மையில் நிகழ்ந்தது என்னவென்று அனைவருக்கும் தெரியும். இந்த முறை வாட்டாள் நாகராஜின் வழக்கமான வேலையை எடியூரப்பாதான் செய்தான். வாட்டாள் நாகராஜ் தேர்தலில் தோற்கடிக்கப் படுவதற்கு முன்பே, கன்னட வெறியினைத் தூண்டுகிற அரசியலில் எடியூரப்பாவினால் தோற்கடிக்கப்பட்டான்.

காலம் காலமாக மதவெறி அரசியல் நடத்திவரும் பாஜக பயங்கரவாதிகளின் அன்றாட அரசியலே இத்தகைய மலிவான வெறிதூண்டும் நடவடிக்கைகள்தான். வாட்டாள் நாகராஜோ தேர்தலுக்காக வெறியினைப் பரப்புபவன். அதனால்தான் தொழில்முறைப் பயங்கரவாதிகளிடம் அவன் தோல்வியுற்றான்.ஒகேனேக்கல் பிரச்சினையில் வாட்டாள் நாகராஜை முந்திக் கொண்டு தமிழக எல்லையில் அத்துமீறி நுழைந்தவந்தான் எடியூரப்பா. அந்த அக்கிரமத்தில் சம்பாதித்ததுதான் இப்போதைய முதல்வர் பதவி என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் ஞாநியால் மட்டும் எப்படி வெட்கமின்றி இவ்வாறு பேச முடிகிறது? எல்லாம் பூநூல் பாசம்ந்தான், வேறென்ன!


அப்ப இந்த 'முற்போக்கு' வேசம்?!, அதவிட முடியுமா? அதுதானே இவனுங்களோட பரம்பரைக் கவசம். பாரதி முதல் ஞாநிவரை எல்லாப்பயலும் இப்படித்தான் பிழைக்கிறான்.


'நண்டு கொழுத்தால் வலைக்குள்ள தங்காது' என்பது பழமொழி. குஜராத், கர்நாடகத் தேர்தல் வெற்றியில் கொழுப்பேறிய இந்த பார்ப்பன நண்டு இப்பத்தான் முற்போக்கு வலைக் குள்ளயிருந்து வெறியே தலைகாட்டத் தொடங்கியிருக்கிறது.


'எல'கணேசனைவிட 'சோ'வைவிட கொடிய நச்சுப் பாம்பு இது. அதனை உடனே நாம் நசுக்கியாக வேண்டும். ஏனென்றால் இது பதுங்கியிருப்பது நமக்கு வெகு அருகாமையில் உள்ள முற்போக்கு முகாமில்.தோழமையுடன்,

ஏகலைவன்.


5 comments:

said...

vanakkam

puthiya blog aramithu ullom..\\

parkavum

nanri

http://puratchipadal.blogspot.com/

said...

////vanakkam

puthiya blog aramithu ullom..\\

parkavum

nanri

http://puratchipadal.blogspot.com////

தோழருக்கு வணக்கம். புதிய வலைதளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. வலைதளம் மிகவும் அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

புரட்சிகீதங்கள் இதோ எழுத்து வடிவிலும் இணையத்தில் இருக்கிறது என்பதை நினைக்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது தோழர். இதனை அறிமுகப்படுத்தி நான் ஒரு பதிவு போடலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.

தோழமையுடன்,
ஏகலைவன்.

said...

நல்ல கட்டுரை வாழ்த்துக்கள். கோவை ஞாநி என்று ஒருத்தர் இருக்காரு... அவரு கொஞ்சம் வருசம் முன்ன தன்னோட முற்போக்கு கோமனத்த கழட்டி பார்ப்பன நறுமணத்த பரப்பினாரு... இப்போ தீம்தரிகிட ஞாநி... தலித் முரசுவுக்கும் இந்த ஞாநிக்கும் நடந்த சண்டைகள் நினைவுக்கு வருகின்றன....

இது போன்ற பார்ப்பன ந்ண்டுகளை விரிவாக அம்பலப்பத்துவது மிக அவசியமானது...

அசுரன்

said...

u are waste to our society.
plz commit suicide.plz

said...

your are the poisonous snake.u should be only killed.