//////////வள்ளுவப் பெருமகனார் பாடிய குறள். வெளிவரும் செய்திகளையும், கேட்கிற, படிக்கிற செய்தி களையும், ஆழமாகத் தெரிந்து அதற்குத் தீர்வு காணும் பாதையில் பயணிக்க வேண்டும். இளைஞர்களுக்கு அத்தகைய அறிவுத் தெளிவைக் கொடுப்பது சமூகத்தின் கடமை. சமூகம் தனது கடமையில் இருந்து தவறியமைக்கு உதாரணம் முத்துக்குமார். 28 வயது இளைஞன், பத்திரிகையாளன். ஆனால் சாஸ்திரி பவனுக்கு முன்னாள், ஆயிரக்கணக்கான மக்கள் நட மாட்டம் கொண்ட சென்னை மாநகரின் பொதுச்சாலையில் நெருப்புத் தனலுக்கு இரையாக்கிக் கொண்டது கொடுமை.////////////
அன்பார்ந்த தோழர்களே,
மேலே குறிப்பிடப்பட்டுள்ள வரிகள் போலிகம்யூனிச சி.பி.எம். கட்சியின் அல்லக்கை அமைப்பான DYFI நடத்துகின்ற ஒரு பத்திரிக்கையின் தலையங்கத்தின் தொடக்க வரிகள். அந்த இதழின், கிட்டத்தட்ட அனைத்து பக்கங்களிலும் முத்துக்குமாரின் வீரமரணத்தை விமர்சிக்கும் வரிகளை நாம் பார்க்க முடியும். முத்துக்குமார் ஏதோ தீக்குளிக்கும் கலாச்சாரத்தை இளைஞர்கள் மனதில் ஏற்படுத்திவிட்டதாகக் கதறுகிறது இக்கூட்டம்.
‘ஹிந்து’ராமின் கழிவுகளை ‘தேவாமிருதமாக’ உட்கொள்ளும் இக்கும்பலிடம் இருந்து வரும் கழிவுகள் எப்படி இருக்கும் என்பதற்கு இவர்களின் எழுத்துக்கள் ஒரு பேருண்மையாக இருக்கிறது.
கீற்று இணையதளத்தில் வெளியாகியுள்ள இந்த போலிகம்யூனிச பத்திரிக்கையின் தலையங்கத்தை எதிர்த்து அப்பக்கத்திலேயே கருத்து பதிந்துள்ள வசந்தி என்பவரது எதிர்விணையை நான் இங்கே தோழர்களின் பார்வைக்கு வைக்கிறேன். இந்த எதிர்வினை பதிவாகி இரண்டு நாட்களாகியும் நேர்மையான எந்த பதிலும் அதில் பதியப்படவில்லை. விமர்சனங்களை இருட்டடிப்பு செய்யும் போலிகளின் கலாச்சாரம் கீற்று தளத்தில் எடுபடாமல் போயிருக்கிறது.
தோழமையுடன்,
ஏகலைவன்.
---------------------------------------------------------------------------------------
முட்டாள்தனமான தலையங்கம் இது. வேலையில்லை சுகாதர வசதியில்லை என்பதற்காக நடப்பதல்ல ஈழ மக்களின் போராட்டம். உங்களுக்கு ஆயுத்ம்தான் பிரச்சினை என்றால் அதனை நேரடியாக சொல்லலாமே..ஏன் ஒளிவு மறைவு..
தேசிய இனங்கள் எந்த சூழலில் பிரிந்து செல்லலாம் என தோழர் லெனின் சொன்னது இது. ''எந்த ஒரு தேசத்துக்கோ அல்லது மொழிக்கோ சிறப்பு சலுகை எதுவும் கிடையாது; ஒரு தேசிய சிறுபான்மையினரைப் பொறுத்தவரை மிகச் சிறு அளவுகூட ஒடுக்குமுறையோ அநீதியோ இருக்கக்கூடாது. இவைதாம் உழைக்கும் வர்க்க ஜனநாயகத்தின் கோட்பாடுகள் ஆகும். (லெ.தொ.நூ. 19.91, ஒப்: 243).
வரப்போகிற உலகப் புரட்சியின் தீர்மானமான போர்களில் தேசிய விடுதலை என்பதை முதல் குறிக்கோளாகக் கொண்டுள்ள உலக மக்களில் பெரும்பான்மையோரது இயக்கம், முதலாளியத்துக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் எதிரானதாகத் திரும்பும் என்பதும், நாம் எதிர்பார்ப்பதைக் காட்டிலும் மிகக் கூடுதலான புரட்சிகரப் பங்கை வகிக்கக் கூடும் என்பதும் தெளிவாகிவிட்டது. (லெ.தொ.நூ. 32. 482).
தேசிய ஒடுக்குமுறையைத் துடைத்தெறிய, தன்னாட்சிப்பகுதிகளை உருவாக்குவது மிகவும் முக்கியம், அவை எவ்வளவு சிறியதாகவும் இருக்கலாம். இவை முற்றிலும் ஓரின மக்கள் தொகையினரைக் கொண்டவையாக இருக்க வேண்டும். நாடு முழுவதிலும் - ஏன் - உலகம் முழுவதிலுமே சிதறிக் கிடக்கின்ற அந்தந்த தேசிய இன மக்களை ஈர்க்கக்கூடிய பகுதிகளாக இருக்க வேண்டும். அவர்கள் எல்லாவகை உறவுகளையும் சுதந்திரமான இணைப்புகளையும் ஏற்படுத்தி கொள்ளக்கூடிய தன்னாட்சிப் பகுதிகளாக இருக்க வேண்டும். (லெ.தொ.நூ. 20.50).
ஐடியலான முரணற்ற முழுமையான ஜனநாயக குடியரசு பற்றிய லெனின் (லெ.தொ.நூ. 19.427) சொன்னது '' இவ் அடிப்படை சட்டம், எல்லா தேசங்களுக்கும் மொழிகளுக்கும் முழுச் சமத்துவத்தை உத்திரவாதம் செய்ய வேண்டும்; எந்த ஒரு கட்டாய ஆட்சி மொழியையும் ஏற்காததாக இருக்க வேண்டும். சொந்த மொழிகள் அனைத்திலும் கல்விபுகட்டுகிற பள்ளிகளை மக்களுக்கு வழங்குகிற ஒன்றாக இருக்க வேண்டும். எந்த ஒரு தேசத்துகக்கும் தனிச்சலுகை வழங்குவதையும், தேசிய சிறுபான்மையினரின் உரிமைக்ள் மீது கை வைப்பதையும் தடை செய்கின்ற சட்டமாக இருக்க வேண்டும்.''
So லெனின் முட்டாள்தனமாக பேசி உள்ளாரா ? அல்லது நீங்களா ? என்பதை தெளிவு படுத்துங்கள்.
தொன்மை சமூகம் நாடாள வேண்டும என்ற ஆவலில் தோன்றியதா ஈழமக்களின் போராட்டம்? வரலாறு பாமர மக்களுக்கு தெரிந்த அளவு கூடவா தங்களை மார்க்சியவாதிகள் என்ச் சொல்லிக் கொள்பவர்களுக்கு தெரியாது. அதிகாரத்தின் மீதான பற்று என நீங்கள் சொல்லியிருப்பது சுதந்திரத்திற்கான தாகத்தை. மேலே கண்ட லெனின் வாசகங்களை மீண்டும் படியுங்கள். நீங்கள் ஈழத்தை கேவலப்படுத்தவில்லை. மாறாக லெனினைக் கேவலப்படுத்தி உள்ளீர்கள்.
/“இதற்கும் மேலே சென்று’’ இந்திய அரசு இலங்கையை வலியுறுத்துவது என்ற எதிர்பார்ப்பு ஒரு வித மேலாதிக்க உணர்வை வெளிப்படுத்துகிறது” என்பதை நாம் புரிந்து கொள்ள மறுக்கிறோம்./
இது உண்மையான கூற்று நீங்கள் எதனையும் புரிந்து கொள்ள மறுப்பது என்ற ஜனநாயப்பண்பை எப்போதே பெற்று உள்ளீர்கள். பிராந்திய வல்லரசாக, அமெரிக்காவின் தெற்காசியப் பேட்டை ரவுடியாக இந்தியா உள்ளது என அறிவுஜீவிகள் விமர்சித்தால் பாஜக வைவிட உங்களுக்குதான் கோபம் வரும்போல தெரிகின்றது. என்ன செய்ய உங்களது கொள்கையை விட சொம்நாத் சட்டர்ஜி காட்டிய நாடாளுமன்ற விசுவாசம் அதற்கு வவாய்ப்பு கிடைக்காத தங்களைப் போன்றோருக்கு தேசாபிமானமாக வெளிப்படுகின்றது, தேச ஆளும் வர்க்கம் ஒரு பேட்டை ரவுடியாக இருந்தால் கூட.
/ தமிழகத்தில் நீண்ட காலமாக இருக்கிற சமூகக் கொடுமைகளில் ஒன்றாக தீக்குளிப்பும் நீடிக்கிறது. போராடி வெல்வது, வெல்வதற்காகப் போராடுவது, தமிழ் இலக்கிய சான்றாக இருக்கிறபோது, தன்னைத் தானே அழித்துக் கொல்வதும், அதை அரசியலாக்க முயற்சிப்பதும், இரைஞ்சுவதற்கு ஒப்பாகும்/
தீக்குளிப்பது சமூகக் கொடுமைதான் அது சதி என்ற வடிவில் வந்தால். சக மனிதர்கள் மீது இன ஒழிப்பு நடக்கும்போது வாளாவிருக்கும் உங்களைப் போன்ற இளைஞர் இயக்கங்கள் இருக்கும் தேசத்தில் தீக்குளித்துதான் ஒரு இளைஞன் உங்களது கள்ள மவுனத்தை உடைக்க முடிகின்றதென்றால் அதற்காக முத்துக்குமரன் வெட்கப்பட வேண்டிய அவசியமே இல்லை. முத்துக்குமரன் இந்திய அரசுட்ன போராடவில்லை, கள்ள மவுனம் இன்றளவும் சாதிக்கும் போலி ஜனநாயக, கம்யூனிச வாதிகளின் மன்ச்சாட்சிக்கு எதிராகத்தான் போராடி உள்ளான். வரலாறு தெரிந்தால் வியத்நாம் புத்தபிக்குகள் அமெரிக்க ஏகாதிபத்திய போர்வெறிக்கு எதிராக அறுபதுகளில் நிகழ்த்திய தீக்குளிப்பு வடிவத்தை என்னவென்று சொல்வீர்கள்.
அதெல்லாம் இருக்கட்டும். தமிழக இளைஞர்களை வாயைக் கட்டி போராட்டம், நாமம் போட்டு போராடுவது, கழுதையிடம் மனுக் கொடுத்து அதிகார வர்க்கத்தை எதிர்த்து போராடுவது, திருவோடு எடுத்து போராடுவது, கோவணம் கட்டிப் போராடுவது, ....இப்படி இரைஞ்சுகினற் வடிவங்களையெல்லாம் போராட்டம் என அழைத்துக் கொண்ட ஒரு இயக்கத்தை சேர்ந்தவர்கள்தான் தாங்கள் என்பது மறந்துவிட்டதா?
/ “தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழிப்போம்” என்றான் பாரதி. இதற்கு முரணாக ஒருவன் அழிந்து தமிழனை காக்கலாம் என்பது, பகுத்தறிவு அற்றது./
சுய அறிவில்லாமல் அல்லது லாஜிக் இல்லாமல் எழுதப்பட்ட ஒரு வாக்கியம் பகுத்தறிவு பற்றிப் பேசுவது முரண்நகை. கடைசியாக பேச்சுவார்த்தை அதாங்க அரசியல் தீர்வுன்னு நீங்க சொல்ற கட்டப்பஞ்சாயத்துதான் வேண்டும் என்கிறீர்கள். நீங்கள் சமத்துவவாதிகள். இப்போரை ராஜபக்ஷ நிறுத்தவும் கோருவீர்கள் எனக் கருதுகிறேன். அது சரி... அதுக்கு யாரிடம் வலியுறுத்து போராடுவீர்கள். இந்தியாவிடமா? ஒரு நிமிசம். இந்தியாவும் டாங்கிகள், ரேடார்களோடு தனது ராணுவத்தையும் அனுப்பியுள்ளது. என்ன சொல்லி தப்பிக்க போறீங்க.
------------------------------------------------------------------------------------
Saturday, February 14, 2009
’ஹிந்து’ராமின் கழிவுகளைப் பரிமாறும் சி.பி.எம்.மின் பத்திரிக்கைகள்...
Labels:
DYFI,
ஈழம்,
முத்துக்குமார்,
ஹிந்துராம்
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
சி.பி.எம். என்கிற பிழைப்புவாத போலிகம்யூனிச முகாமின் வாலான dyfi சார்பில் வெளியிடப்படும் பத்திரிக்கையில் இதைவிட வேறெதை எதிர்பார்க்க முடியும்? இதற்குமேல் வேறொரு வார்த்தைகளை அவர்கள் இணைக்க விரும்பினாலும் ‘ஹிந்து’ராம் போன்ற அதி’முற்போக்கு’வாதிகளிடம் அனுமதி பெறாமல் முடியுமா?
இது ஒரு தலையங்கம்! இது ஒரு பத்திரிக்கை!! என்ன இருக்கிறது இதில், ஏனைய பிற்போக்கு, முதலாளித்துவ ஏடுகளில் இல்லாத எதுவும் இதில் இருக்கிறதா? சோ வின் எழுத்தும், ஜெயாமாமியின் வியாக்கியானங்களும், இந்துவெறி பாசிஸ்டுகளின் மொழியைத் தவிர இதற்குள் வேறு என்ன இருக்கிறது?
முத்துக்குமாரின் மரணத்தைப் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பதற்கு இது தருணம் அல்ல. முத்துக்குமாரின் முடிவை இங்கு யாருமே ஆதரிக்கவில்லை. ஆனால், தன்னுடைய அந்த முடிவின் மூலமாக அவர் சொல்லியிருக்கும் செய்தியினைத்தான் அனைவருமே உயர்த்திப்பிடிக்கின்றனர். அப்படி அவருடைய தீக்குளிப்பை மட்டுமே, அவரது ஆதரவாளர்கள் பற்றிக்கொண்டிருந்தால் அதன் தொடர்ச்சியாக அவர்களும் தீக்குளிக்கச் சென்றிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் இந்திய - இலங்கை அரசுகளுக்கு எதிரான போராட்டக் களத்தில் நின்று கொண்டிருக்கிறார்கள். முத்துக்குமார் மூட்டிய தீயை உயர்த்திப்பிடித்து எழுச்சியோடு நிற்கின்றனர் அவர்கள்.
ஈழப் போராட்டம் புலிகளுக்கு எதிராக மட்டுமே நடத்தப்படுவதாகவும், அப்பாவித் தமிழர்களுக்கொன்றும் பாதிப்பில்லையென்றும் எழுதிக்கொண்டு, அங்கு நடைபெற்ற கிரிக்கெட் சூதாட்டத்தை முதல் பக்கத்தில் வெளியிட்டு மகிழும் தீக்கதிர் என்கிற நாளேடு, மேற்படி போலி கம்யூனிச சி.பி.எம். கும்பலுடையது. முத்துக்குமார் வீரமரணத்தைத் தழுவிய மறுநாள், சமூகத்தில் எந்த விதமான முக்கியத்துவமும் பெறாத சினிமாக் கோமாளி நாகேஷுக்கு படத்துடன் செய்திவெளியிட்ட இந்த தீக்கதிர், முத்துக்குமாரின் செய்தியை வெறும் ‘வாலிபர் தற்கொலை’ என்கிற பெட்டி செய்தியோடு முடித்துக்கொண்டது, அனைவருக்கும் தெரிந்திருக்கலாம்.
இவர்களின் சிந்தை கிரிக்கெட் சூதாட்டத்திற்கும், சினிமாக் கழிசடைக்கும் சோரம் போயிருக்கும் நிலையில் இவர்களிடமிருந்து வெளிவரும் எழுத்துக்களில் நாம் வேறு எதையும் எதிர்பாக்க முடியாது.
முத்துக்குமாரின் முடிவு பகுத்தறிவற்றது என்று எழுதும் இந்தப் போலிகள்தான் இந்துவெறிக்காலிகளுடன் கைகோர்த்து ஆயுதபூசை நடத்தி வருகிறார்கள். பகுத்தறிவைப் பற்றி யார் பேசுவது? போகட்டும், முத்துக்குமாரின் முடிவைக் குறித்து நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள். இன்னும் சற்று சுதி கூட்டி வேண்டுமானாலும் வசைபாடிக்கொள்ளுங்கள், ஆனால், அவர் இறுதியாக இச்சமூகத்துக்கு விட்டுச் சென்றுள்ள மரண சாசனத்தைப் பற்றி இதுவரை எங்காவது வாய்திறந்திருக்கிறீர்களா? ஒற்றை வார்த்தையையாவது எழுதியிருக்கிறீர்களா? ஏன் செய்யவில்லை?! மக்களைப் போராட்டத்திற்கு திரட்டுகின்ற மொழியை பாசிஸ்டுகளால் எப்படி ரசிக்க முடியும்? அதுதான் இதற்கான காரணமாக இருக்கிறது.
அய்யா, பிழைப்புவாத கனவான்களே! உங்களுடைய பிழைப்பை எப்படி வேண்டுமானாலும் நடத்திக்கொள்ளுங்கள்; முற்போக்கு முகமூடியையும் கம்யூனிச வேடத்தையும் தயவுசெய்து கழற்றி விடுங்கள்; அத்துவானிகள், மோடிகள், சுப்பிரமணியசாமிகள் உங்களை அள்ளித்தழுவக் காத்திருக்கின்றனர்.
நேர்மையான சி.பி.எம். ஆதரவாளர்கள், இங்கு பதியப்படும் எதிர்வினைகளுக்கு முறையான பதில்களைத் தருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.
நட்புடன்,
ஏகலைவன்.
இந்த மோசடியான தலையங்கத்தையும் பத்திரிக்கையினையும் கண்டித்து இங்கு கருத்து பதிந்துள்ள வசந்தி போன்ற தோழர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
////////தனி நாடு தீர்வு என்றால், நரேந்திர மோடி ஆட்சியில் கொல்லப்பட்ட மக்கள் தனி நாடு கேட்கலாமா? ஒரிசாவில் கந்தமால் மாவட்டத்தில் கிறித்தவர்கள் அதிகம், எனவே, தனி நாடு என்று யோசிக்கலாமா? உத்தபுரத்தில் சுவரை இடிக்க மறுத்தால், தலித் பகுதிக்குத் தனி நாடு என கோரலாமா? எல்லா இடத்திலும் மேலாதிக்கம் பெரும்பான்மை, சிறுபான்மை என்ற முறையில் இருக்கிறது. ‘ஜனாநயகம்’ என்ற முழக்கமே ‘அதிகாரப் பரவல்’ என்கிற நடைமுறையே பிரச்சனையைத் தீர்க்கும். அந்த வகையில் இலங்கைத் தமிழரின் வாழ்வுக்காக ஜனநாயக முறையில் குரல் கொடுப்போம்./////////////
முதலில், ஒரு அமைப்பின் மாநிலச் செயலாளர் இத்தகைய பிதற்றல்களைப் பதியலாமா? ஈழ மக்களின் கோரிக்கையினை நீங்கள் வடிவமைத்துக் கொடுக்கலாமா? தனி ஈழம் வேண்டுமா, அல்லது ஐக்கியப்பட்ட இலங்கைத் தேசியம் வேண்டுமா என்பதை முடிவெடுக்க வேண்டியவர்கள் ஈழ மக்கள் மட்டும்தான். இங்கிருந்து கொண்டு கிரிக்கெட் சூதாட்டத்தை ரசித்து எழுதிக்கொண்டிருக்கும் உங்களுக்கு, இங்கிருந்து ஈழப் போராட்டத்திற்கு தீர்ப்பு சொல்லும் தகுதியிருக்கிறதா? என்று தயவு செய்து யோசித்துப் பாருங்கள் ஐயா!
ஈழப் போரை நரேந்திர மோடியுடன் ஒப்பிட்டு தனிநாடு கோரிக்கையைப் பரிசீலிக்கின்றீர்கள். நாட்டின் இராணுவமும் அரசு அதிகாரமும், அண்டைநாடுகளின் பாசிசக் கழுகுக் கரங்களும் ஒரு சிறு கோழிக்குஞ்சைப் போல் இருக்கும் மக்களை அழுந்தக் கவ்விப்பிடித்திருக்கும் நேரத்தில், அவர்களிடம் போய் தேச ஒற்றுமை பேசிக்கொண்டிருக்க முடியாது. “இரண்டாம்தரக் குடிகளாகத்தான் தமிழர்களை வைப்போம்..” என்று கொக்கரிக்கிறான் சிங்கள பேரினவாத வெறி இராணுவத்தின் தளபதி பொன்சேகோ சென்ற மாதம் அறிவித்ததை நீங்கள் அறிந்திருக்கவில்லையா?
இதனை நரேந்திரமோடியுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதைவிட, நம் தமிழகத்து நதிநீர்ப் பிரச்சினைகளில் ஒப்பிட்டுப் பார்த்தாலே தெளிவாகப் புரியும். பாட்டாளிவர்க்க சர்வதேசியம் பேசுகின்ற (பெயரளவுக்காவது) உங்களது கட்சியே முல்லைப் பெரியாறுவிடயத்தில் இந்திய தேசியத்தை அப்பட்டமாகப் பிரதிபலித்தது. ஈழப் போராட்டம் குறித்து நீங்கள் பேசுவதானால், இந்திய அரசின் மோசடியான தலையீட்டைக் கண்டித்துப் பேசாமல், தனி ஈழம் சாத்தியமா அல்லது ஒன்றுபட்ட இலங்கையா என்பதான ஆருடங்களை வழங்கிவருவது கேவலமாக இருக்கிறது.
Post a Comment