Sunday, February 1, 2009

மாவீரன் முத்துக்குமாரின் தியாகம் - உணர்வாளர்களின் எழுச்சியும், துரோகிகளின் இகழ்ச்சியும்!...

”வாழ்க்கையில், எல்லா ஆசைகளும், நம்பிக்கைகளும் உடையவன் தான் நானும். ஆனால், தேவையான நேரத்தில், அவைகளை என்னால் உதறிவிட முடியும்; அதுதான் உண்மையான தியாகமாகும். மனிதனின் வாழ்க்கைப் பாதையில் அந்த விஷயங்களெல்லாம், ஒரு நாளும் குறுக்கே நிற்க முடியாது - அவன் நிஜமாகவே மனிதனாக இருக்கும் பட்சத்தில்....” - இது 1929’ஏப்ரலில், டெல்லி சட்டசபையில் குண்டுவீசிக் கைதாகி தூக்குத்தண்டனை கிடைத்தாலும் துணிவோடு சந்திக்கவேண்டும் என்கிற முடிவெடுத்த பிறகு மாவீரன் பகத்சிங் சொன்னது.

தேசத்திற்காக உயிரைக்கொடுப்பதை அரிய வாய்ப்பாகக் கருதி பெருமிதத்தோடு ஏற்று நிற்கிற பக்குவம், வெறும் 23வயதான பகத்சிங்க்கு எப்படி வந்தது? தான் தூக்கிலிடப்படப்போகிறோம் என்பதனை அறிந்தும், அன்றைய பார்ப்பன-சனாதான-போலி அகிம்சைகளின் இருளில் சொக்கிக்கிடந்த இந்திய மக்களின் ‘கேளாத செவிகள் கேட்கட்டும்’ என்று முழக்கமிட்டு (யாரையும் கொல்லாத வெற்று குண்டை வீசி) அனைவரது கவனத்தையும் ஈர்த்து, கைதாகி தூக்குக் கயிறைத் தொட்டுத்தழுவினான் அந்த வீரன்.

நம்முடைய சமகாலத்தில், சிங்களப் பேரினவாதத்தாலும் இந்திய மேலாதிக்கத்தாலும் மிகக் கொடூரமாக ஈழத்தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டுவரும் இன அழிப்பு நடவடிக்கைகள் பற்றி சொல்லிமாளாத நிலை. 1983 ஜூலைப் படுகொலைகளுக்குப் பிறகு வீறு கொண்டெழுந்த தமிழ் விடுதலை இயக்கங்களை,போராளிக்குழுவாக இருந்த விடுதலைப் புலிகளை வெறும் கூலிப்படைகளாகச் சீரழித்தது பாசிச இந்திரா - எம்.ஜி.ஆர். கூட்டணி. அதிலிருந்து இன்று வரை, ஈழத் தமிழ்க் குழந்தைகள் முதல் பெண்கள், முதியவர்கள், வாலிபர்கள் என பல்வேறு அப்பாவித் தமிழர்கள் கொன்று வீசப்படுவதும். குண்டடிபட்டு செத்து விழுந்த பிறகும் அந்த பெண்ணுடல்களைப் புணரும் சிங்கள ராணுவத்தின் வக்கிற வெறியினையும் சிறிதும் பொருட்படுத்தாமல், கிரிக்கெட்டிலும், சினிமாவிலும், இன்னபிற கேளிக்கைகளிலும் மூழ்கிக் கிடக்கும் மக்கள் கூட்டத்தின் கேளாத செவிகளைக் கேட்கச் செய்வதற்காகவே தனது உயிரைத் தீக்கிரையாக்கிக் கொள்ளத் திட்டமிட்டான் ஒரு சாதாரண தமிழ் இளைஞன் முத்துக்குமார்.

“என் உடலை காவல்துறை அடக்கம் செய்துவிட முயலும். விடாதீர்கள். என் பிணத்தைக் கைப்பற்றி, அதை புதைக்காமல் ஒரு துருப்புச் சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப்படுத்துங்கள்...” என்பதாக தனது மரண சாசனத்தில் சொல்லியிருக்கிறார் முத்துக்குமார். தனது மரணத்தின் மூலம் அற்ப அனுதாபத்தையோ வெற்றுக் கதறல்களையோ, சித்தாந்த வியாக்கியானங்களையோ மறுத்து நம்மிடமிருந்து போராட்டத்தை வேண்டுகிறார் முத்துக்குமார்.

பகத்சிங்கின் கடிதங்களையும், மருது சகோதரர்களின் திருச்சி பிரகடனத்தையும் ஏடுகளில் மட்டும் நாம் படித்திருக்கிறோம். அவர்களின் போராட்டங்களை, தியாகங்களை நேரில் பார்த்திருக்கும் வாய்ப்புகள் நமக்குக் கிடைக்கவில்லை. ஆனால், இதோ நம் சமகாலத்தில், அகிம்சையும் அடிமைத்தனமும் பன்பாடாகத் திணிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் இக்காலத்தில், அதன் விளைவாக போராட்டங்களும் ஆயுதங்களும் செயலற்றிருப்பதை உணர்ந்த காரணத்தால் தனது உடலை ”உயிராயுதமாய்.....” ஏந்துங்கள் என்று சொல்லிச் சென்ற அந்த சாதாரண இளைஞனின் தியாகம் மகத்தானது. அது சாதாரண நிகழ்வு அல்ல.

அறிவாயுதம் ஏந்திப் போராடுபவர்களுக்கு மத்தியில் தன்னால் முடிந்த உயிராயுதம் ஏந்தியிருப்பதாக முத்துக்குமார் குற்ப்பிட்டுள்ளது, அவரது முடிவினை விமர்சிப்பவர்களுக்கு அவர் முன்னறிந்து சொல்லிச் சென்ற பதிலாக இருக்கிறது. சாகும் தருவாயில் அவர் இச்சமூகத்துக்கு கொடுத்துச் சென்ற உயில் மட்டுமல்ல அது; சாதாரண ‘தற்கொலை’யாக அவரது முடிவை எடுத்துக்கொள்ள முடியாமல் இலட்சக்கணக்கான மக்களைக் கதறியழச் செய்த அற்புதப் படைப்பு அது. கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன், அங்கு திரண்டிருந்த மக்கள் வெள்ளத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய சொற்ப எண்ணிக்கையிலான நபர்களே அவரை முன்னறிந்தவர்களாக இருந்திருப்பார்கள், இது உறுதி. மற்ற யாவரையும் அங்கே இழுத்துவந்தது அவரது அந்த இறுதிக் கடிதம் மட்டும்தான்.

கேளிக்கையில் மூழ்கிக் கிடக்கும் மக்கள் கூட்டத்தைத் தட்டி எழுப்புவதற்காக தனது உயிரையே கொடுக்கவேண்டியுள்ளதே என்று தனது கோபத்தை ஒட்டுமொத்தமாக மக்கள் மீது காட்டாமல், அவர்களுக்காக அனுதாபப்படுவதோடு, போலிப் பிரச்சினைகளோடு பிரிந்திருக்கும் எதிரிகளான இந்திய-தமிழக ஓட்டுப் பொறுக்கிகள் ஈழமக்களின் இன அழிப்பு நடவடிக்கையில் இணைந்திருப்பதை ஆழமாகச் சுட்டிக்காடி மக்களிடமிருந்து தனிமைப்படுத்திச் சாடியிருக்கிறார்; அவர்.

அவரது, அந்த சாடல்களை மெய்ப்பிக்கும் வகையில்தான் ஓட்டுப் பொறுக்கிகள் அனைவரும் நடந்து கொண்டனர். புலியாதரவு வேடம் போடும் வைக்கோ, திருமா, ராமதாசு போன்றோரும், புலியாதரவோடு பார்ப்பன பாசிசத்தைக் கலந்து ’போராடும்’ நெடுமாறன், (சசிகலா)நடராசன் போன்றோரும், எதற்காக இந்திய தேசியத்தை ஏற்றுக் கொண்டுள்ளோம் என்பதையும் எதற்காக முத்துக்குமாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்கிறோம் என்பதையும் அறிந்திருக்காத சிபிஐ போலிகம்யூனிச தலைவர்களும் அங்கே ஆஜராகி, ‘எப்படியாவது இன்றைக்குள் முத்துக்குமாரை அடக்கம் செய்துவிட வேண்டும்...’ என்கிற ஆர்வத்தோடு தமது கைக்கூலித்தனத்தை வெளிக்காட்டி, அங்கு திரண்டிருந்த உணர்வாளர்களிடம் முறையாக வாங்கிக்கட்டிக் கொண்டார்கள்.

அங்கு வராமல், ஏது நடக்குமோ என்கிற உளைச்சலில் வயிற்றைப் பிசைந்து கொண்டு கிடந்த சத்தியமூர்த்தி பவனில் உள்ள பன்றிகளைப்பற்றி நாம் எதுவும் பேசத்தேவையில்லை. அவன் தெரிந்த எதிரி. தெரியாத துரோகிகளை என் செய்வது? “முத்துக்குமாரின் தியாகத்தை அரசியல் ஆக்காதீர்கள். அது நமது பன்பாடு அல்ல” என்று புலம்பிய கருணாநிதியைத்தான் தனது மரணசாசனத்தில் குற்றவாளிக் கூண்டில் முதன்மையானவராக நிறுத்திச் சென்றிருக்கிறான் முத்துக்குமார்.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க, மற்றொரு போலி கம்யூனிச கூடாரமான சி.பி.எம். இவ்விடயத்தை எப்படிப் பார்த்தது என்பதை நாம் சொல்லியே ஆகவேண்டும். எங்கோ ஒரு சாலையோரத்தில் வாகனங்களில் அடிபட்டு செத்துக்கிடக்கும் சொறிநாயின் அளவுக்குக் கூட முக்கியத்துவம் கொடுக்கமுடியாத நாகேஷின் மரணத்தை பிரதானப்படுத்தி, இரண்டாவது நாளாக இன்றைக்கும் (01.02.09) படத்துடன் செய்திகள் வெளியிட்டு வரும் தீக்கதிர் நாளேடு மேற்படி போலிகள் நடத்துகின்ற ‘மக்கள்’ பத்திரிக்கை.

முத்துக்குமார் தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்ட மறுநாள் இந்த போலிக்கயவர் கூட்டம் தி.நகரில் நாடகவிழா நடத்திக் கொண்டிருந்தது. இரண்டு மாதத்திற்கு முன் திட்டமிடப்பட்ட அந்த நாடகவிழா மழையின் காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டதாம். சாதாரண மழைக்கு ஒத்திவைக்கப்பட்ட அந்த கேலிக்கூத்தை, முத்துக்குமார் தமிழக மக்களிடத்தில் எற்படுத்திய உணர்ச்சிகரமான சூழலைப் பொருட்படுத்தாமல் நடத்திக் கொண்டிருந்தது. தமது அன்றாட அரசியல் பிழைப்புவாதத்தையே நாடகமாக நடத்திக்கொண்டுள்ளதால் மக்களால் காறி உமிழப்பட்டுக் கிடக்கும் இந்த கயவர்கள் கூட்டம் தனியாக நாடகவிழா நடத்திக் கொண்டிருந்தது வெறும் கேலிக்கூத்தன்றி வேறென்ன?

அந்நிகழ்வில் கலந்து கொண்டு ‘வாழ்த்துக்களை’ வழங்கிச் சென்ற யோக்கியர்கள் பட்டியலில் முதலிடம் யாருக்குத் தெரியுமா? ஈழ மக்களின் போராட்டங்களையும் படுகொலைகளையும் கேலி செய்து செய்தி வெளியிடும் பார்பன-இந்துவெறியன் ‘ஹிந்து’ என்.ராம்.



இவையனைத்தையும் தொகுத்து இத்தருணத்தில் நாம் பார்க்கவேண்டியது அவசியமாவதால்தான் இத்தனை விரிவாக இந்த கேவலங்களை நான் இங்கே பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறேன்.

போதாக்குறைக்கு, இணையத்தில் அவதூறூகளை எழுதுவதற்காகவே தீணிபோட்டு போலிகளால் வளக்கப்படும் கே. செல்வப்பெருமாள் என்கிற சந்திப்பு, தோழர் முத்துக்குமாரின்
தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக, “அது உணர்ச்சிவயப்பட்ட முடிவு....” என்றும் “இது ஒரு மூடப்பழக்கத்தின் ஒரு வடிவம்...” என்றும் தனது இழிவான கருத்துக்களை வலைதளத்தில் வெளியிட்டு வருகிறான்.

//////இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக தனது உயிரை மாய்த்துக் கொண்ட முத்துக்குரனின் செயல் கடும் வருத்தத்தை உண்டாக்கக்கூடிய ஒன்றே. எனினும், தனிநபரின் இத்தகைய உணர்ச்சிவயப்பட்ட முடிவு... மேலும் சில உணர்வுகளை கிளறிவிடப் பயன்படலாம்! முற்போக்கு விதை தூவப்பட்ட மண் என்று பெருமையடித்துக் கொள்ளும் தமிழகத்தில் இவ்வாறான அரசியல் தற்கொலைகளும் மூடப்பழக்கத்தின் ஒரு வடிவமாகவே கருதுகிறேன். அரசியல் ரீதியாக - தனது கருத்துக்கு ஆதரவாக மக்கள் எழாதபோது ஏற்படும் விரக்தி கலந்த - உணர்ச்சி இதனை நோக்கி தள்ளியதோ என்றே சிந்திக்கத் தோன்றுகிறது. கொள்கை ரீதியாகவும் - அரசியல் ரீதியாகவும் - தத்துவார்த்த ரீதியாகவும் விவாதங்கள் இல்லாதபோது வெறும் இனவாத உணர்ச்சி மட்டுமே மேலிடும். இத்துடன் தனிநபர் வழிபாடும் மேலோங்கியிருப்பதைதான் அவ்வப்போது நடைபெறும் இதுபோன்ற நிகழ்வுகள் காட்டுகின்றது./////

மேலும் ஈழப் பிரச்சினையில் இந்திய அரசின் துரோகத்தை விமர்சிப்பது இலங்கைச் சுதந்திரத்தைக் கொச்சைப்படுத்தும் செயல் என்றும் எழுதியிருக்கிறான். அதனை அவனுடைய வார்த்தைகளிலேயே படியுங்கள்...

///இந்திய அரசு வல்லாதிக்க மனப்பான்மையுடன் செயல்படுவதாக குற்றம் சுமத்துவது இலங்கையின் சுதந்திரத்தையும் - மக்களையும்
கொச்சைப்படுத்துவதாகவே முடியும்.///


இந்த அசிங்கங்களைக் கண்டிக்கலாம் என்று அவனது வலைதளத்தில் பதியப்படும் மறுமொழிகளை அவன் யோக்கியமாக பதிப்பிப்பதில்லை. கூலிக்கு மாரடிக்கும் இந்த நாய் எழுதுவதை வானுயரப் புகழ்ந்து தள்ளும் ஒரு சில மண்டைவீங்கிகள், முத்துக்குமாரின் மரண சாசனத்தை ஏளனம் செய்கின்றது. மரணத்தினை முன்கூட்டியே முடிவு செய்துகொண்டு இப்படிப்பட்ட அற்புதமான இலக்கியத்தை எழுத சாதாரண ஒருவனால் முடியுமா? என்பதைக் கூட கொஞ்சமும் சிந்திக்க இந்தப் பிழைப்புக்காக எழுதும் ‘யோக்கியர்களுக்கு’த் தெரியவில்லை. இதனை நாம் கண்டும் காணாமல் விட்டுவிட முடியாது. முத்துக்குமார் குறிப்பிட்டுக் காட்டியுள்ள பாசிசக் கும்பலின் பிரதிநிதிகள்தான் இவர்கள். செங்கொடிக்குள் தனது பாசிசத்தை மறைத்துக் கொண்டு பிழைத்துவரும் ஈனர்கள்தான் இவர்கள். இந்த போலிக் கும்பலை மேன்மேலும் அம்பலப்படுத்தித் திரைகிழிப்போம்.

முத்துக்குமாரின் தியாகத்தைக் கூறுபோட்டு ஓட்டுப் பொறுக்க நினைக்கும் அனைத்து அரசியல் வியாபாரிகளையும் முறியடிப்போம்.

தோழமையுடன்,
ஏகலைவன்.

1 comments:

siruthai said...

தோழர்! ஏகலைவனுக்கு வணக்கம்!

தங்கள் கருத்துக்கள் அருமை! நான் ஒன்றினை கேட்கிறேன்! இணையத்தில் தீட்டும் அட்டை கத்தி வீரர்கள் இசம்,ரசம் ,சாம்பார் என்று புலம்பியதை தவிர வேறு என்ன செய்தீர்கள் ..அது சரி மக்கள் போராட்டம்.. மக்கள் கிளர்ந்து எழவேண்டுமாம்.. என்ன உண்ணாவிரதமா?ஊர்வலமா?பொது கூட்டமா? எல்லாவற்றிலும் நான் கலந்து கொண்டு இருக்கிறேன் ஆனால் எவனும் ஒரு மயிறையும் இந்த இந்தி யாவில் புடுங்கவில்லையே!எப்போது தமிழன் சாவான் என்று விழி மேல் அல்லவா காத்து கொண்டு இருக்கிறார்கள்..நீர் சொல்லிய சாதிபிரச்சனையை விட்டுதொலையுங்கள்..நான் பின் தங்கிய சாதிக்காரன் தான் ..ஆனால் என்னால் இன்று ஈழத்தமிழர்கள் சுட்டு கொல்லப்படும் காணோளியை காண முடியவில்லையே! என் வயிறு எரிகிறதே! அவன் என்ன அங்கு தலித்தா?அல்லது வெள்ளாரா? என்பதை என்னால் இனம் காணமுடியவில்லையே! உண்ணாவிரதம் பொதுகூட்டம் தான் தங்கள் புரட்சி என்றால் எவன் இங்கு கண்ணேடுத்து பார்கிறான்.நானும் உண்ணாவிரதம் இருக்கிறேன் நீங்களும் இருங்கள் ..மொத்தமாய் எல்லாரும் செத்து போவோம்.. யாருக்கு என்ன லாபம்? நான் தீர்மானித்து விட்டேன் நீங்கள் சொல்லும் அந்த பொது உடைமையோ அல்லது வேறு ஏதொ நான் ஆயுதமேந்த தயாறாகி விட்டேன் நீங்கள் தயாரா? உங்கள் எண்ணபடியெ ஆட்சி அங்கு நடக்கட்டும் தய்வுசெய்து உங்கள் உங்கள் தோழர்களை ஓன்றிணைய சொல்லுங்கள் நாம் ஆயுதம் ஏந்தி சேகுவரா போல் போராடுவோம்!ஆயுத பயிற்சியை சீனா கொடுக்கட்டும் கூயுபா கொடுக்கட்டும் ம்ம்ம் கிளம்புவோம் நாம் இது ஈழதிற்கு மட்டும் அல்ல நம் தாய் தமிழகதிற்கும் தான்..