Tuesday, May 13, 2008

செய்திகளுக்கிடையே............

ஆயுதங்களைப்பற்றி
அதிகம் கவலைப்படுகிறார்கள்
அதன் தயாரிப்பாளர்கள்!

மயிற்பீலி விசிறிகளுக்கிடையே
மல்லாந்தும்
இமை செருக முடியாமல்
விழிபிதுங்கும் கெட்டகனவுகளால்
விரட்டப்படுகிறார்கள்.

அந்தப்புரத்தில் ஆசையாய் வளர்க்கும்
பூச்செடிகளின்
மொட்டு வெடிக்கும் ஓசையையும்
ரசிக்க முடியாத சந்தேகம்
விண்மீன்களோ
பழிவாங்கத் துடிக்கும் விழிகளால்
துன்புறுத்துகின்றன.

நிலவிலும் ரத்தக்கறை பீதி
கட்டுக்கு அடங்காமல் கைமாறி
ஆயுதங்கள் திரும்பும்போது
அவர்கள் கையிலெடுக்கும் ஆயுதம்...
"அகிம்சை... மனிதாபிமானம்....
நீதிபோதனை..."

பறிக்கும் கைகள்
பாடம் சொல்கின்றன
"ரோஜாக்களே முட்களை
போட்டுவிடுங்கள்"

தேனடை திருடவந்தவர்கள்
பேசிக் கொள்கிறார்கள்
"தேனீக்கள் விஷமப் பிரச்சாரம் செய்கின்றன"

மிதிக்கும் கால்கள்
கடிக்கும் எறும்புகளை கண்டிக்கின்றன
"இது பண்பாடல்ல"

பதுங்கியிருந்த பூனைகள்
பசியாறியவுடன் வெளியேற்றும்
கவுச்சி வெறுத்த வார்த்தைகள்
"எதையும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம்"

புரிகிறது வரலாறு
ஆயுதங்களின் சத்தத்தை விடவும்
அகிம்சாவாதிகளின் அலறலே
'பொது அமைதிக்கு' பங்கம்.

உறைந்த இரத்தத்தில்
உருவப்பட்ட சேலைகளில்
மதக்குறி தேடிய நிர்வாணத்தில்
இன்னும் புரியவில்லையா
இந்த ஜனநாயகத்தின் பொருள்?

காரணமறிந்தும் கருத்துத் தளம் தேடும்
கைக்கூலிகளே

முதலில் நிராயுதபாணிகளிடம்
நீதிபோதனை செய்வதை நிறுத்துங்கள்

ஆயுதபாணிகளிடம்....
அவர்கள் "ஜோதியில்"
நீங்கள் வெளிச்சம் தேடுங்கள்

நெருப்பு மூட்டும் வேலை
நிறைய இருக்கிறது எங்களுக்கு.

-துரை. சண்முகம்.

புதிய கலாச்சாரம் அக்'93 இதழிலிருந்து....

4 comments:

said...

நம் தேசத்தை அச்சுறுத்தும் இருபெரும் அபாயங்களான மறுகாலணியாதிக் கத்தையும் பார்ப்பன பயங்கரவாதத்தையும் எந்தவிதமான சமரசமுமின்றி எதிர்த்து களத்தில் நிற்பது எமது அமைப்புதான்.

குறிப்பாக இந்துவெறி பாசிச நடவடிக்கைகள், எமது அமைப்பின் தோழர்களால் தொடர்ந்து மக்கள் மத்தியில் திரைகிழிக்கப்பட்டு, தமிழகத்தில் சங்கபரிவார வளர்ச்சிக்குப் பெருந்தடையாக நிற்கிறது.

இவ்வாறான எமது நடவடிக்கைகளை களத்தில் எதிர்கொள்ளத் திராணியற்ற இந்துவெறி பாசிஸ்டுகளும், ஏகாதிபத்திய அடிவருடிகளும் நம்மை இழிவுபடுத்தும் நோக்கில், கம்யூனிசத்தை அவதூறு செய்து வருகின்றனர்.

இணையத்தில் வெகுவாக ஆக்கிரமித்திருந்த இந்துவெறிக் கும்பலின் மிச்ச சொச்சங்களான, அரவிந்தன் நீலகண்டன், அதியமான், ஜடாயு போன்ற அம்பிகளும், அமெரிக்க பூட்ஸ் நக்கி 'டாலர்'செல்வனும் கூட்டாக இணைந்து தமிழ்மணி என்ற பெயருக்குள் ஒளிந்துகொண்டு இங்கே கம்யூனிச அவதூறுகளைப் பரப்பிவருகின்றனர்.

கம்யூனிஸ்டுகளையும் திராவிட இயக்கத்தோழர்களையும் மோதவிடும் நோக்கில் பலமுறை இவர்கள் எழுதிவந்தனர். இவர்களின் இத்தகைய சதிவேலைகளை சம்பூகன் என்ற தோழர், அவர்களின் வார்த்தைகளிலிருந்தே ஆதாரங்களை எடுத்து, இது மேற்கண்ட பார்ப்பனக் கும்பலின் சதிவேலைதான் என்று தெளிவாக அம்பலப்படுத்திவிட்டார்.

அதற்கு பதில் சொல்லப் பயந்து, பதுங்கி இணையத்தின் பக்கமே தலைகாட்டாமல் இருந்த இந்த அம்பிகள், நேபாள மக்கள் எழுச்சியின் விளைவாக நடைபெற்ற தேர்தலில் மாவோயிஸ்டுகள் பெரும்பான்மைபெற்று, அங்கிருந்த இந்துராச்சியத்தை அடித்து வீழ்த்தியதன் விளைவை பொறுக்கமாட்டாமல், தமது அவதூறு கருத்துக்களை மீண்டும் அள்ளித் தெளிக்க இங்கே ப்ரசன்னமாகியிருக்கின்றனர்.

அவர்கள் தம்மை பொதுவாக கம்யூனிச எதிரி என்று அறிவித்துக் கொண்டு செயல்பட்டாலும், அவர்களுடைய நிரந்தர இலக்கு நாம் தான் என்பது அவர்களுடைய தொடர் நடவடிக்கைகளில் தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில், முதலில் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக திராவிட இயக்கங்களை ஆதரித்த இவர்கள், இப்போது போலிகம்யூனிஸ்டு முகாமைச் சேர்ந்த சந்திப்புடன் கரம் கோர்த்திருக்கிறார்கள்.

மார்க்ஸ் முதல் மாவோ வரை அனைத்து கம்யூனிச ஆசான்களையும் வசைமாறி பொழிந்து இழிவுபடுத்தியதுமில்லாமல், நமது தோழர்களையும் அமைப்பையும் வெளிப்படையாக கொச்சைப்படுத்திவந்த இவர்களுக்கு, சி.பி.எம். என்ற போலி கம்யூனிஸ்டு கட்சி மிகவும் உகந்ததாம். அக்கட்சியின் செயல்பாடுகள் இவர்களை வெகுவாகக் கவருகின்றனவாம்.

இதிலிருந்தே இவர்கள் எந்த அடிப்படையிலானவர்கள் என்பது தெளிவாக விளங்கும். போலிகளின் அடையாளத்தை இதைவிட யாரும் தெளிவாக அம்பலப்படுத்திவிட முடியாது.

இவர்கள் கரம் கோர்த்து செயல்படுவதுதான், நாமும் நம்முடைய பாதையும் சரியானது என்பதை உரக்கச் சொல்லும் சான்றுகள்.

இவ்வளவு சொல்லியும், "அப்படியெல்லாம் கிடையாது, எமது சந்திப்பு அவர்களும், அவர் சார்ந்த இயக்கமும்! சொக்கத் தங்கம்" என்று வாதிடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படியானால் உம்முடைய சொக்கத் தங்கம் இன்றுவரை தமிழ்மணியின் தொடர்ச்சியான கம்யூனிச அவதூறுகளுக்கு ஒரு எழுத்தில் கூட பதில் சொல்லாதது ஏன்?

சி.பி.எம்.மை ஆதரித்து இரண்டு வார்த்தை சொல்லிவிட்டு, கம்யூனிச ஆசான்களை இரண்டு பக்கத்துக்கு வசைபாடினால் நம்ம சந்திப்புக்கும் அவருடைய கட்சிக்கும் எதுவுமே உரைக்காதா?

இதுவரை எமது பல கேள்விகளுக்கு பதில் சொல்லாத சந்திப்புக்கு இன்னுமொரு கேள்வியை இதன் வாயிலாக வைக்கலாமென்று நினைக்கிறேன்.

"நன்றாக உபசரித்து விதம்விதமான பலகாரங்களுடன் விருந்து பரிமாறிவிட்டு இலையின் ஓரத்தில் ஒருதுளி பீயை வெச்சா சாப்புடுவியா?" என்று கிராமத்தில் சொரனையை வலியுறுத்துகின்ற ஒரு சொல்லாடல் உண்டு. நான் அதுபோல சந்திப்பைக் கேட்கமாட்டேன். இந்த தமிழ்மணி கும்பல் நம்ம சந்திப்புக்கு விருந்து உபசரிக்கும் முறை இதற்கு நேரெதிரானது அல்லவா?

அதனால், "இலை முழுவதும் பீயையும் எருமைச் சாணியையும் வைத்துவிட்டு அவற்றுக் கிடையில் ஒரு துண்டு (சி.பி.எம். பாராட்டு என்ற) திருநெல்வேலி அல்வாவை வைத்தால், அதை ஏற்றுக்கொள்வீரா???"

சந்திப்பு அவர்களே, இந்தக் கேள்விக்கு நீங்கள் பதில் சொல்வீர்கள் என்றுகூட நான் எதிர்பார்க்கவில்லை. மாறாக தமிழ்மணி என்கிற பார்ப்பனமணிக்கு நீர் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் என்பதை மட்டும் பொறுத்திருந்து பார்க்கிறோம்.

இதற்கு மேலும் உமது சொரனையற்ற தன்மை தொடருமேயானால் என்ன செய்வது என்பதை வாசகரின் முடிவிற்கே விட்டுவிடுகிறேன்.


ஏகலைவன்.

said...

ம்கூம்.... உங்கள் பின்னூட்டம் புரியவில்லையே! பதிவுக்கும் பின்னூட்டத்திற்கும் என்ன சம்பந்தம்?

said...

தோழர் தமிழச்சி,

மன்னிக்கவேண்டும் தோழர். இந்தப் பதிவுக்கும் மேற்கண்ட எனது பின்னூட்டத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

என்ன செய்வது, இங்கே இணையத்தில் சந்திப்பு என்ற சி.பி.எம்.கட்சியைச் சார்ந்த கோமாளி இருக்கிறாரல்லவா, இது அவருக்கான பின்னூட்டம். வழக்கமாக எமது பின்னூட்டங்களை பதிப்பிக்காமலேயே, நம்மை பதிலலிக்க வாய்ப்பளிக்காமலேயே நம்மைப் பொத்தாம்பொதுவாக வசைபாடுவது அவருடைய நோக்கம். எனவே, அவரை, நம்முடைய பின்னூட்டங்களை நேர்மையாக பதிப்பிக்க வலியுறுத்த இதைத்தவிர வேறுவழிதெரியவில்லை.

இவரின் பின்னூட்ட இருட்டடிப்புகளை அம்பலப்படுத்தவே வேறொரு தோழர், ஒரு தனி வலைதளத்தையே(http://santhippiniruttadippu.blogspot.com/) தொடங்கியிருக்கிறார் என்றால் பாருங்கள், சந்திப்பின் விவாத யோக்கியதையை!

இது மேற்கண்ட பின்னூட்டம் ஏன் சம்பந்தமில்லாமல் இந்தப் பதிவினூடாக பதிப்பிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான எனது பதில் தோழர். அடுத்து பின்னூட்டதில் உள்ள விசயத்தைப் பற்றியது.....

இணையத்தில் தமிழ்மணி என்கிற பார்ப்பனமணி கம்யூனிச அவதூறுகளை வாந்தியெடுப்பதற்கென்றே ஒரு வலைதளத்தைத் தொடங்கி அரவிந்தன் நீலகண்டன், அதியமான், டாலர்செல்வன் போன்ற RSS கும்பல் கூட்டாக செயல்படுகின்றனர். இது அவர்களுடைய வலைதளத்திற்கான லிங்க்(http://thamizmani.blogspot.com).

நீங்கள் சம்பூகன் வலைதளத்தை ஏற்கெனவே பார்வையிட்டுள்ளதால் உங்களுக்கு இவர்களைப்பற்றி எதுவும் புதிதாகச் சொல்லவேண்டியதில்லை என்று நினைக்கிறேன் தோழர்.

அந்த பார்ப்பனமணி, இந்த வலைதளத்தைத் தொடங்கியது முதல் இன்றுவரை வெறும் கம்யூனிச அவதூறுகளை மட்டுமே திட்டமிட்டு பதிப்பித்துவருகிறான். அதில் நம்முடைய தோழர்கள் பலர் விவாதங்களை நடத்தியும் இருக்கின்றனர். அவர்களின் எந்தக் கேள்விக்கும் இதுவரை பதில் சொல்லாத தமிழ்மணி, சம்பூகனின் பதிவுகளுக்குப் பிறகு தான் யார் என்று இங்கே அம்பலப்பட்டு போனான்.

"கம்யூனிச ஆசான்களைத்தானே அவதூறு செய்கிறார், நம்ம காரத்தையோ அல்லது யெச்சூரியையோ பேசினால் பதில் சொல்லிக் கொள்ளலாம்" என்று நம்ம சவடால் சந்திப்பு, இவர்களின் பால் மவுனத்தைக் கடைபிடிக்கிறார். இதுவரை தமிழ்மணியின் அவதூறுகளுக்கு ஒரு எழுத்தில் கூட சந்திப்பு என்கிற அந்த செல்வப் பெருமாள் பதில் சொல்லவில்லை, என்பதைக் கண்டித்துதான் மேற்கண்ட பின்னூட்டத்தை இங்கு பதிப்பித்திருக்கிறேன் தோழர்.

தோழமையுடன்,
ஏகலைவன்.

said...

விளக்கத்திற்கு நன்றி தோழர்.
நீங்கள் சொல்லித்தான் இவ்வளவு கூத்துக்களும் நடைப்பெற்றுக் கொண்டிருப்பது தெரிகின்றது. தந்தை பெரியாரின் சொற்பொழிவுகள், அவர் குறித்த நிகழ்வுகள் அனைத்தையும் இணையத்தில் பதிவேற்றும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதால் எனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்கள் முழுவதையும் தட்டச்சு செய்வதிலேயே ஆர்வம் காட்டுவதால் வாசிப்பு நேரம் மிக்க குறைந்துவிட்டது தோழர்.

அடுத்து நீங்கள் குறிப்பிட்டபடி ஆணாதிக்கத்தின் அமிலக்காதல் குறித்து எழுத சொன்ன பதிவை படிக்கவில்லையா? அதுகுறித்து எந்த விமர்சனமும் சொல்லாமல் இருக்கின்றீர்களே?

காண்க : http://thamizachi.blogspot.com/2008/05/blog-post_2554.html